Jump to content

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

453503606_3732557863672711_7278465778258175705_n.jpg

காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 34 வருடங்களுக்கு முன், இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று 03-08-2024 நினைவு கூறப்பட்டுள்ளது.

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்ஆ பள்ளிவாசலில், இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள்.
 
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்.
 
அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

கிழக்கு முஸ்லிம்களின் இழப்புகளுக்கு நீதி வேண்டும்

காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷா தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு இன்­றுடன் சரி­யாக 33 வரு­டங்­க­ளா­கின்­றன. இன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக இன்று காத்­தான்­கு­டியில் பல நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும்,பல்­வேறு குணடுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது.

இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நலனும் கிடைத்­த­தாக இல்லை.

அண்­மைக்­கா­ல­மாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் எனத் தெரி­வித்து வரு­கிறார். அண்­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் குழு­வு­டனும் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இருப்­பினும் வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களின் கடந்த கால இழப்­புகள் தொடர்பில் எந்­த­வித கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்­சி­னை­யாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது.

எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/15564

  • Downvote 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும்.

கிழக்கிலை பிடிச்ச காணிகளையும்..கொன்ற தமிழர்களின் குடும்பத்துக்கு நஸ்ஈட்டையும் கொடுத்துவிட்டு...பினர் யாழ்ப்பாணத்துக்கு வரவும்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும்  நினைவு கூருகிறோம்.

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இது நடப்பதற்கு முன்னரான காலங்களில் தென் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம்களால் உயிருடன் எரிக்கப்பட்டும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர்.

இவற்றை முழுமையாக வாசிக்க இந்த ஆவணத்தை வாசிக்கவும்.

காத்தான்குடி நடப்பதற்கு முன்னர், முதல் நான்கு நாட்களில் மட்டும் பல தமிழர்கள் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் போரில் முஸ்லிம்களால் படுகொலையான அனைத்து தமிழ் தியாகிகளுக்கும் எமது அஞ்சலிகள்😭

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அட இந்த  காத்தான்குடி மேட்டரை வைத்தே..நாட்டை கபளீகரம் செய்திடுவாங்க போலைஇருக்கே...

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நன்னிச் சோழன் said:

இது நடப்பதற்கு முன்னரான காலங்களில் தென் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம்களால் உயிருடன் எரிக்கப்பட்டும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், 

அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார்  என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை.

ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள்.

1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே?

இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன.

ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி  சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை.

ஆனால் நம்மில் ஒரு சிலர்  முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை  அநீதிகள் என்றால் அதை  தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான்

ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது.

எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம்.

போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை,

முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை,

அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள்.

83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில்   வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள்.

மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன்

பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன்,

நன்னி,

எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும்  பணியும் அளப்பரியது.

இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.

  • Like 2
Link to comment
Share on other sites

அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி விட்டு அனுதாபத்தையும் தேட முயற்சிக்கிறார்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி பள்ளிவாசலில் உயிர்களை கபாலிகாரம் செய்தவர்கள் திரும்பி பத்திரமாய் போய் சேர்ந்த இடமும் பக்கத்தில் இருந்த சிங்களராணுவ முகாம் என்றும் பதிவுகள் உள்ளன. 
தவிர புலிகள் இல்லாத காலத்தில் அதுவும் 2019 இல் ஈஸ்டர் தாக்குதலை எப்படியெல்லாம் கட்டமைத்து அரசியல் ஆதாயம் தேடிய கூட்டம் என்பதையும் மறக்கலாகாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
On 7/8/2024 at 21:25, valavan said:

இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், 

அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார்  என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை.

ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள்.

1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே?

இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன.

ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி  சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை.

ஆனால் நம்மில் ஒரு சிலர்  முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை  அநீதிகள் என்றால் அதை  தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான்

ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது.

எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம்.

போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை,

முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை,

அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள்.

83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில்   வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள்.

மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன்

பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன்,

நன்னி,

எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும்  பணியும் அளப்பரியது.

இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இதே 1990ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் சிங்கள வான்படையின் வான்குண்டு வீச்சுக்களில் (aerial bombing) ஏராளமான முஸ்லிம்கள் (நான் முழுமையாக எண்ணவுமில்லை, அதில் நாட்டமுமில்லை. எனினும் செய்திகளை எடுத்து வைத்துள்ளேன்) கொல்லப்பட்டனர்.

புத்தளத்திலும் 70களில் முஸ்லிம்கள் சிலர் சிங்களக் காடையரால் பள்ளிவாசல் சாரான இடமொன்றில் வைத்துக் கொல்லப்பட்டனர். (விதப்பான இடம் வலம் ஞாபகமில்லை) . தமிழர் கண்டனம் தெரிவித்தனர்

அதன் பின்னர் இலங்கையில் மொசாட் மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் உள்ளதை எதிர்த்து 1984ம் ஆண்டு சூன் மாதம் 9,10ம் திகதிகளில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை முன்னணி காத்தான்குடியில் நடாத்திய கடையடைப்புப் போராட்டத்தின் போது 30 முஸ்லிம்கள் சிங்கள-இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலுக்கு புளட் அமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு "தமிழ் முஸ்லிம்களுக்கு" தோழமை தெரிவித்திருந்தது. 

எவ்வாறெனினும் இவற்றிற்கெல்லாம் பின்னாளில் ஒருக்காலும் முஸ்லிம்கள் கண்டனமோ நினைவோ கூர்ந்ததில்லை. ஏனெனில் செய்தவர்கள் சிங்களவர்களும் முஸ்லிம்களின் பரம வைரியும்!!! செய்தால் என்ன நடக்குமென்று புரிந்திருக்கிறது; நீங்கள் சொன்னது போன்றே அவர்களின் ஒட்டுண்ணி வாழ்க்கை கெட்டுவிடும்!

அளவாக ஆக்களுக்கு ஏற்ப தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும்.

On 7/8/2024 at 21:25, valavan said:

மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன்

பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன்,

நன்னி,

எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும்  பணியும் அளப்பரியது.

இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.

கண்டிப்பாக, என்னால் இயன்றளவு செய்கிறேன்.

விரும்பியவர்களும் எடுத்துச் சென்று செய்யலாம்.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.