Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

உங்களது பிரம்டன் நகர கவுன்சில் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகச் சந்தித்ததையும், இலங்கையில் சுமார் 30 வருடகாலமாக நீடித்த யுத்தம் தொடர்பில் நாம் கலந்துரையாடியதையும் இப்போது நினைவுகூருகிறேன். 

அதன்படி கனேடியவாழ் இலங்கையர் குழுவொன்று உங்களது நிர்வாகத்தின்கீழ் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி எனக்கூறப்படும் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும், அதற்கு பிரம்டன் நகர கவுன்சில் அனுமதி அளித்திருப்பதாகவும் பல்வேறு கனேடிய இலங்கையர் அமைப்புக்கள் எமது அவதானத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. 

அதிலும் குறிப்பாக எவ்வித இன, மதபேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் இத்தகைய நினைவுத்தூபியை நிர்மாணிப்பது பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவ்வமைப்புக்கள் கரிசனை வெளியிட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது கனேடிய இலங்கையர் சமூகத்தினிடையேயான இனநல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிலும், இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையிலும் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தும். 

அதேவேளை இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களினாலும் வெளியிடப்படவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப்பொருட்களும், அரச கட்டமைப்புக்கள் இடையூறின்றி இயங்குவதற்கு அவசியமான நிதியும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமை தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ஏனைய அரச மற்றும் தனியார் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளடங்கலாக சகலராலும் சமத்துவமான முறையில் அனுபவிக்கப்படுகின்றன.  

சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்த போதிலும், யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைந்து, அதன் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்திருக்கின்றது. 

எனவே தமிழர்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும், கனேடியவாழ் இலங்கையர்களுக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு தமிழினப்படுகொலை நினைவுத்தூபி நிர்மாணம் போன்ற பிரிவினைகளை ஏற்படுத்தவல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பதிலாக, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உதவுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்!

14 Aug, 2024 | 11:41 PM
image
 
(நா.தனுஜா)

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், இத்தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்டைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் வலியுறுத்தி பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 

இக்கடிதத்தின் உள்ளடக்கத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மேயர் பற்ரிக் பிரவுன், 'எமது உள்ளக விவகாரங்களில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார். 

'தமிழினப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கும் வரை உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது. இருப்பினும் இப்போர்க்குற்றவாளிகளை அவர்கள் இழைத்த மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறச்செய்வதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்துவருகின்றது' எனவும் மேயர் பற்ரக் பிரவுன் விசனம் வெளியிட்டுள்ளார். 

அதேபோன்று இலங்கையில் தமிழ் மக்கள் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், கனடாவில் அவர்களால் (இலங்கை அரசாங்கத்தினால்) அதனைச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு 'அவர்கள் கனடாவில் நினைவுகூரல் நிகழ்வைத் தடுப்பதற்கு முயன்றால் அது வெளிநாட்டுத் தலையீடாகவே அமையும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் அண்மையகாலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளியக தலையீடு தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவான நிலைப்பாடொன்றை எடுக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகவும், 
ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளாவும்… ஶ்ரீலங்கா அரசு,
தமிழர்களுக்கு என்ன நல்லிணக்கத்தை கட்டி எழுப்பி இருக்கின்றார்கள்.

மாறாக தமிழர் பகுதியை அபகரிக்கும் செயலை மட்டும் விரைவாக செய்வதை தவிர வேறு எதுவும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் கால அவகாசங்கள் எல்லாம்… தமிழரை விழுங்கி, ஏப்பம் விட்டு விடும் என்பதை மேற்குலகு கவனத்தில் எடுத்து, ஶ்ரீலங்காவுடன் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிழம்பு said:

இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்!

14 Aug, 2024 | 11:41 PM
image
 
(நா.தனுஜா)

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், இத்தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்டைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் வலியுறுத்தி பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 

இக்கடிதத்தின் உள்ளடக்கத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மேயர் பற்ரிக் பிரவுன், 'எமது உள்ளக விவகாரங்களில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார். 

'தமிழினப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கும் வரை உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது. இருப்பினும் இப்போர்க்குற்றவாளிகளை அவர்கள் இழைத்த மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறச்செய்வதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்துவருகின்றது' எனவும் மேயர் பற்ரக் பிரவுன் விசனம் வெளியிட்டுள்ளார். 

அதேபோன்று இலங்கையில் தமிழ் மக்கள் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், கனடாவில் அவர்களால் (இலங்கை அரசாங்கத்தினால்) அதனைச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு 'அவர்கள் கனடாவில் நினைவுகூரல் நிகழ்வைத் தடுப்பதற்கு முயன்றால் அது வெளிநாட்டுத் தலையீடாகவே அமையும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் அண்மையகாலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளியக தலையீடு தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவான நிலைப்பாடொன்றை எடுக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்! | Virakesari.lk

பிராம்டன் நகர பிதா பற்றிக் பிரவுண் அவர்களின் காத்திரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

பிராம்டன் நகர பிதா பற்றிக் பிரவுண் அவர்களின் காத்திரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள். 🙏

ஆம்   பிராம்டன் நகர பிதாவக்கு நன்றிகள் பல 🙏

  • கருத்துக்கள உறவுகள்

பிராம்டன் நகர பிதா பற்றிக் பிரவுண் அவர்களின் காத்திரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள். 🙏

அண்மையில் நட்சத்திர விழவிற்கு வந்த பிரபல் பாடகி மாய்ய இதுபற்றி மாநில அமைச்சர் விஜை தணிகாசலத்துடன் ஆராய்ந்ததும்..மேடையில் பேசியதும்  ரீல் ஆக முகப்புத்தகத்தில் வந்தது ...இது பற்றியும் யாருக்காவது  தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபி - கனடா தூதுவரை அழைத்து கடும் அதிருப்தியை வெளியிட்டார் அலிசப்ரி

16 AUG, 2024 | 04:13 PM
image
 
கனடாவின் பிரம்டனில்  தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபியை  அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு  இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர்  இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டானது, தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட புனையப்பட்ட மற்றும் தேசிய சர்வதேச அளவில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக பொருளதார நெருக்கடி நிலவிய போதிலும், மோதல் முடிவிற்கு வந்த பின்னர் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது என தெரிவித்துள்ள அலிசப்ரி  கனடா அரசாங்கம் தலையிட்டு குறிப்பிட்ட நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191237

  • கருத்துக்கள உறவுகள்+

இதெல்லாம் கட்டி முடிப்பார்கள் என்று நான் நம்பவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்+

எனக்கொரு சந்தேகம்...

கனடா தமிழர்கள் அந்த நாட்டிற்கு செய்த " contributions " ,என்னென்ன?

ஒரு 10 specific ஆக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபி - கனடா தூதுவரை அழைத்து கடும் அதிருப்தியை வெளியிட்டார் அலிசப்ரி

16 AUG, 2024 | 04:13 PM
image
 
கனடாவின் பிரம்டனில்  தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபியை  அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு  இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர்  இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டானது, தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட புனையப்பட்ட மற்றும் தேசிய சர்வதேச அளவில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக பொருளதார நெருக்கடி நிலவிய போதிலும், மோதல் முடிவிற்கு வந்த பின்னர் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது என தெரிவித்துள்ள அலிசப்ரி  கனடா அரசாங்கம் தலையிட்டு குறிப்பிட்ட நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191237

ச்ப்பிரி..வடக்கு கிழக்கில் விகாரை கட்டுவது..எந்த நல்லிணக்கம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் - ஹரி ஆனந்தசங்கரி

16 Aug, 2024 | 08:57 PM
image
 
(நா.தனுஜா)

இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு  வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது.   

இதுகுறித்து இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கிய பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.  

அப்பதிவில் தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்டோரை நினைவுகூரும் நோக்கில் இந்நினைவுத்தூபி நிர்மாண நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்காக கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

'இலங்கை அரசாங்கத்தினால் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணரப்பட்டனர். கிராமங்கள் பாரிய மனிதப்புதைகுழிகளாக மாற்றப்பட்டன. இனப்படுகொலை அரசாங்கத்தினால் காவு வாங்கப்பட்ட இந்த அப்பாவி உயிர்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்' எனவும் அவர் அப்பதிவில் தெரிவித்திருக்கிறார். 

'தமிழர்களின் கனடாவுக்கான பயணம் என்பது எமது தேசிய கதையின் ஓரங்கமாகும். இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டைவிட்டு வெளியேறிய தமிழர்களுக்கு ப்ரையன் மல்ரொனி தலைமையிலான அரசாங்கம் கனடாவின் கதவுகளைத் திறந்துவிட்டது.

அதேபோன்று ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசாங்கம் இலங்கை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டதுடன் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாயக்கூட்டத்தொடரைப் புறக்கணித்தது. ஒன்டாரியோவின் ஃபோர்ட் அரசாங்கம் தமிழினப்படுகொலையை பாடசாலை மாணவர்களின் பாடவிதானத்தில் உள்ளடக்கியது. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளை அங்கீகரித்து ஏற்றதுடன், இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பயண மற்றும் சொத்துத்தடைகளை விதித்தது' எனவும் மேயர் பற்ரிக் பிரவுன் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

மேலும் நீதியையும், நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருப்பினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதைப் புறந்தள்ளும் மிகமோசமான இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தில் கனடா எப்போதும் முன்நிற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். 

அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, 'எமது கூட்டிணைவு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றுக்கான வலுவான அடையாளமாகத் திகழக்கூடியவகையில் பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்த முதலாவது தேசிய பாராளுமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் கனடா உரித்தாக்கியிருக்கின்றது' எனத் தெரிவித்துள்ளார்.

3__5_.jpg

கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் - ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

மோதல் முடிவிற்கு வந்த பின்னர் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது

தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளையும் விகாரங்களையும் கட்டுவதுதான் நல்லிணக்கம் என்று சிங்களவரும், சிங்களக் காடைத்தன அரசும் நினைக்கிறதுபோலும்.குறைந்தபட்சம்  முதலில் தமிழர் பகுதிகளில் உள்ள யுத்த வெற்றிச் சின்னங்களை அகற்றுவதோடு, மாவீரர் துயிலகங்களையும் விடுவித்துவிட்டுத் தமிழினத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுடிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பையும் நிறுத்திவிட்டுக் கனடாவுக்குக் கடிதம் எழுதமுன்வரலாமே.  

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ம் .....  பூனை  கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிட்டது என நினைப்பது பூனையின் கற்பனையே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சுகாதார வசதிகளை தடுத்தது, வலிந்து இடம்பெயரச்செய்தது, பாதுகாப்பு இடங்களையும் சுகாதார நிலையங்களையும் உணவு களஞ்சியங்களையும் தாக்கி அழித்தது, மக்களை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து கொன்றது, சரணடைந்த பாலகர் தொடங்கி பெரியவர் வரை கொன்றது, காணாமல் ஆக்கியது, பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் அடைத்து வைத்தது, மரணப்புதைகுழிகளை சர்வதேச நாடுகள் விசாரணை செய்ய மறுப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்வளவையும் செய்து விட்டு போலிக்கு ஒவ்வொரு காரியாலயம் திறந்தீர்களே இது ஆதாரமில்லையா? வெறித்தனமான வெற்றி விழா கொண்டாடினீர்களே அது ஆதாரமில்லையா? சர்வதேசத்துக்கு உறுதிமொழி கொடுத்து கால அவகாசம் என இழுத்தடிப்பது ஆதரமில்லையா? எங்களுக்கு பண உதவி  செய்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று உதவி வேண்டி விகாரைகளை கட்டியெழுப்பி பாதிப்பட்ட மக்களின் இருப்பிடத்தை இல்லாமல் செய்வது ஆதாரமில்லையா? தெருக்களில் நின்று பிக்குகளும் இனவாதிகளும் தங்கள் வீரவரலாறுகளை கூவி அந்த மக்களை அச்சுறுத்துவத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்களே அது  ஆதாரமில்லையா? சிறையில் அடைத்து வைத்து அப்பாவி இளைஞர்களை கொன்கிறீர்களே அது ஆதாரமல்லையா? வரலாற்று நிலையங்களை அழித்து வரலாற்றை திரிக்கிறீர்களே அது ஆதாரமில்லையா? பருவத்துக்கு பருவம் எதற்காக பொய் அறிக்கைகளை தூக்கிக்கண்டு ஐ. நா. வுக்கு காவடி எடுக்கிறீர்கள்? உங்களோடு உறவு வைப்பதால் கனடாவிற்கு என்ன லாபம்? நீங்கள் உறவு வைத்தாலென்ன,. முறித்தாலென்ன அவர்களுக்கு எதுவும் நிகழப்போவதில்லை. உங்கள் பாஷையிலே உங்களுக்கு விளங்கும்படியாக பதில் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சமாவது வெக்கம் இருந்தால்; அந்த நாட்டு இறையாண்மையில் தலையிடாமல் மூடிக்கொண்டு இருங்கள். இல்லையேல் உங்கள் வாய்  வீரர்களை அழைத்து உங்கள் தேர்தல் வாக்குகளை நிரப்புங்கள். தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி, பின் ஒரு செயல் செய்யும் உங்களது கலாச்சாரம்போல் மற்றவர்களை எடை போடாதீர்கள்.  இதற்கு மேலும் மல்லுக்கு நிண்டால்; கனடாவைத்தொடர்ந்து எல்லா நாடுகளும் உங்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம். சொந்த குடிமக்களை அகதிகளாக்கி இருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டு அந்த நாட்டில் போய் நின்று ஜனநாயகம், உறவு பற்றி வெட்கமில்லாமல் வகுப்பெடுக்கிறார்கள். இறுதியாக! கனடா தமிழ் மக்கள், அந்த நாட்டுக்கு உண்மை உள்ளவர்களாக வாழ முயற்சியுங்கள். தாய் நாடு என்று நம்பிய எம்மை, முதுகில் குத்தி அழகு பார்த்ததுமல்லாமல் நாம் எழுந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, எமது சுதந்திரத்தை அழித்து அதன்மேல் நின்று எம்மண்ணில்  தன் நாட்டு சுதந்திர தினத்தை  கொண்டாடி மகிழும் இந்தியாவுக்கு காவடி எடுத்து என்ன பயன் கண்டனர் நம்மவர்? ஆகவே உண்மையோடு நம் இழப்புகளை உணர்ந்து ஆதரவும் ஆறுதலும் தரும் அந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து மற்றைய நாடுகளும் இந்த முற்சியை எடுக்க அந்தந்த நாட்டிலுள்ளவர்களும் உழைக்க வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.