Jump to content

அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.

கேரள அரசிடம் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

அந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 10-15 பேர் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது. இவர்கள் திரையுலகின் பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடிகைகள் மட்டுமின்றி தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் பெண்களும் பாலியல் சமரசங்கள் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சமரசம் செய்ய மறுக்கும் பெண்களுக்கு திரைத் துறையில் அறிவிக்கப்படாத தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ‘ஹேமா குழு’ அறிக்கை, மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கையை வெளியிடாமல் 5 ஆண்டுகள் காலம் தாழ்த்தி குற்றவாளிகளைப் பாதுகாத்ததாக ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழு ஆதரவு தெரிவிப்பதாக கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் கூறினார். மேலும், குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுடனும், பெண் சமூகத்துடனும் அரசு என்றும் துணை நிற்கும். அறிக்கையின் எந்தப் பகுதி வெளியிடப்பட வேண்டும் என்பதை உயர்நீதிமன்றமும் தகவல் ஆணையமுமே முடிவெடுத்தது. இந்த அறிக்கையில் எந்த தனிநபர் குறித்தும் குற்றஞ்சாட்டப்படவில்லை’ என்றார் சாஜி செரியன்.

அமைச்சர் செரியனின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ‘திரையுலகைச் சேர்ந்த பெண்கள் ஹேமா குழுவிடம் மட்டுமே சென்று புகாரளித்ததாகவும், அரசிடம் புகாரளிக்கப்பட்டிருந்தால் முறையான விசாரணையை நடத்தியிருப்போம் எனவும் கலாசார விவகாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

குழுவை அரசுதானே நியமித்தது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அறிக்கை தொடர்பாக சுமார் 5 ஆண்டுகளுக்கு மௌனம் காத்த அரசின் செயல் வெட்கக்கேடானது.

200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆரம்பக்கல்வியை உறுதிப்படுத்திய மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களைக் காக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் வலியுறுத்தினார்.

விரிவான திரைத்துறைச் சட்டத்தை உருவாக்குவது, திரைத் துறை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண தீர்ப்பாயம் அமைப்பது உள்பட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ‘குழு பரிந்துரைத்த ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கும் அரசு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

https://thinakkural.lk/article/308170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி சினிமாவையும் கட்டுப்படுத்துவது (ஒப்பீட்டளவில்) சிறு குழு.

 அதில் சல்மான்ஹான்   முக்கிய புள்ளி என்பது  பரவலாக தெரிந்த, அனால் ஏற்றுக்கொள்ளப்படாத இரகசியம்.

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 10-15 பேர் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது.

தமிழ் நாட்டிலும் இப்படியான விசாரணைக் குழு அமைத்து 

கருணாநிதி குடும்பத்தாரிடம் இருந்து தமிழ்த்திலை உலகைக் காப்பாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Kadancha said:

ஹிந்தி சினிமாவையும் கட்டுப்படுத்துவது (ஒப்பீட்டளவில்) சிறு குழு.

 அதில் சல்மான்ஹான்   முக்கிய புள்ளி என்பது  பரவலாக தெரிந்த, அனால் ஏற்றுக்கொள்ளப்படாத இரகசியம்.

 
 

தாவூத் இப்ராகிமே பாலிவுட் சினிமாவை கட்டுப்படுத்துகின்றார் என்ற செய்தி பல வருடங்களின் முன்னர் வந்திருந்தது. பல படங்களுக்கு அவரே அன்று மறைமுகமாக கடன் கொடுத்திருந்தார். முழு பாலிவுட்டும் அவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகச் சொன்னார்கள்.

தமிழிலும் அன்புச்செழியன் (கோபுரம் ஃபிலிம்ஸ்) படத் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கி, அதன் வழியே எப்படி கட்டுப்படுத்தினார் என்று ஒரு தற்கொலையின் பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் அன்புச்செழியன் ஓடி ஒளிந்தார். ஆனாலும் அவர் திரும்பவும் வந்துவிட்டார். இது ஒரு சின்ன உதாரணமே, இவரைப் போன்று பலர் தமிழ் சினிமாத் துறையில் இருக்கின்றனர். 

தெலுங்கு சினிமாவில் ஐந்து குடும்பங்களே மொத்தத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒரு செய்தி வந்திருந்தது.

கன்னட சினிமாவை சுத்தமாக கவனிக்காதபடியால், அவர்களின் செய்தி எதுவும் இல்லை. ஆனாலும் அங்கேயும் புதிதாக எதுவும் இருக்கப் போவதில்லை. ஒரு சிறு கூட்டம், அதன் ஆட்டம் என்றே எல்லா இடங்களிலும். ஹாலிவுட்டில் கூட...........

Edited by ரசோதரன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நடிகைகள் - ஹேமா அறிக்கை கூறுவது என்ன?

கேரளா: அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா அறிக்கை - மலையாள சினிமா பற்றிக் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மலையாள சினிமாவில் "தாங்கள் நினைத்ததைவிட இந்தப் பிரச்னை மோசமாக உள்ளதாக" கூறுகிறார் பீனா பால். கட்டுரை தகவல்
  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம், மலையாள திரையுலகில் “பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியில் பெண்கள் பயன்படுத்தப்படுவதை (காஸ்டிங் கவுச்)” உறுதி செய்துள்ளது மற்றும் அதன் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது.

“சமரசம்” மற்றும் “ஒத்துப்போகுதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம்.

திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன.

நீதிபதி கே.ஹேமா தலைமையிலான ஆணையம் இது தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கையை நான்கரை ஆண்டுகள் கழித்து கேரள அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை 290 பக்கங்களைக் கொண்டது. இருப்பினும், தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அல்லது சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதால், அதுதொடர்பான 54 பக்கங்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை.

 

அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக்கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,” இவ்விவகாரத்தின் அலட்சியப் போக்கை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம்.

அந்த அறிக்கையில், “அச்சம்பவம் பயங்கரமானதாக இருந்தது. படப்பிடிப்பின்போது அப்பெண்ணுக்கு என்ன செய்தார்கள் என்பது, அதனால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் அவருடைய முகத்தில் பிரதிபலித்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சினிமா துறைக்கு வரும் பெண்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்கள், அவர்கள் எதற்கு வேண்டுமானாலும் இணங்குவார்கள் என்ற பொதுவான அனுமானம் இருக்கிறது. ஆனால், கலை மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தாலேயே பெண்கள் நடிக்க வருகின்றனர் என்பதை சினிமா துறையில் உள்ள ஆண்களால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. ஆனால், பெண்கள் புகழுக்காகவும் பணத்துக்காகவுமே இத்துறைக்கு வருகிறார்கள், எனவே பட வாய்ப்புக்காக அவர்கள் எந்தவொரு ஆணுடனும் படுக்கையைப் பகிர்ந்துகொள்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது.

புகழ்பெற்ற நடிகை ஒருவர் சில ஆண்களால் தன்னுடைய காரில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திரையுலகில் பணிச்சூழல்கள் குறித்து ஆய்வு செய்யக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பான வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) அமைப்பினர் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மூத்த நடிகை டி.சாரதா, ஓய்வுபெற்ற கேரள முதன்மைச் செயலாளர் கே.பி. வல்சலாகுமாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

கேரளா: அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா அறிக்கை - மலையாள சினிமா பற்றிக் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நடிகைகளுக்கு அற்ப ஊதியம் வழங்கப்படுவதும் மலையாள திரையுலகில் நடந்து வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட வுமென் இன் சினிமா கலெக்டிவ், சினிமா துறையில் ஆதரவு மற்றும் கொள்கை மாற்றம் வாயிலாகப் பெண்களுக்கான பாலின சமத்துவத்தை நோக்கிப் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த அமைப்பில் மலையாள சினிமாவை சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தங்களுடைய கவலைகள் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

“இந்தத் துறையில் அமைப்பு ரீதியான பிரச்னை இருப்பதாக, நாங்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பாலியல் துன்புறுத்தல் அத்தகைய பிரச்னைகளுள் ஒன்றுதான். இந்தப் பிரச்னைகளை எழுப்பும்போதெல்லாம் எங்களை பிரச்னைகளை உருவாக்குபவர்கள் என்றனர்."

"ஆனால், நாங்கள் நினைத்ததைவிட இந்தப் பிரச்னை மோசமாக உள்ளது என்பதை இந்த அறிக்கை நிரூபித்துள்ளது” என விருது பெற்ற மலையாள படத் தொகுப்பாளரும் WCC உறுப்பினருமான பீனா பால் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

 

‘மாஃபியா'வாக செயல்படும் குழு

கேரளா: அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா அறிக்கை - மலையாள சினிமா பற்றிக் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நான்கரை ஆண்டுகள் கழித்து கேரள அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பன்மொழி கொண்ட இந்திய திரைத்துறையில், இதுவே பெண்களின் பணிச்சூழல் குறித்து வெளிவரும் முதல் அறிக்கை.

“இதன்முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின்படி”, பாலியல் துன்புறுத்தல் இத்துறையில் அதிர்ச்சிகரமான விதத்தில் பரவலாக உள்ளது. மேலும், “அவை கண்காணிக்கப்படவோ கட்டுப்படுத்தப்படவோ இல்லை” என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

“ஆண்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை நிரூபிக்கப் பலரும் வீடியோ, ஆடியோ பதிவுகள், ஸ்க்ரீன்ஷாட்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.”

மலையாள திரையுலகில் வலுவான கூட்டம் ஒன்று “மாஃபியா” போலச் செயல்பட்டு வருவதாகவும், முக்கியமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் மீது அக்குழு தடை விதிக்கும் என்றும் அந்த ஆணையத்திடம் “முக்கிய நடிகர்” ஒருவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், “அப்படி தடை செய்வது சட்ட விரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது.”

வாய்வழி மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அந்த ஆணையம், “சில ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது இயக்குநர்கள் பெரும் புகழ் மற்றும் பணத்தைச் சம்பாதித்து, மலையாள திரையுலகைத் தற்போது தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்."

"இத்துறையில் உள்ள பல ஆண்கள் தங்கள் ஆணையம் முன்பு, பிரபலமான நடிகர்கள் உட்படத் தனிப்பட்ட நபர்கள் பலர் சினிமாவில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக அழுத்தமாகத் தெரிவித்தனர். அவர்களின் பெயர்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டிலுள்ள பல மொழி திரைத்துறையில் மலையாள திரையுலகம் சிறிய திரைத்துறைகளுள் ஒன்றாக உள்ளது. ஆனால், இழிவான பெயரெடுத்த துறையாகவும் இது உள்ளது. பெண்கள் மற்றும் மக்களுக்கு எதிரான பெரிய மாஃபியா இத்துறையில் உள்ளது,” என சினிமா வரலாற்று எழுத்தாளர் ஓ.கே.ஜானி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

 
கேரளா: அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா அறிக்கை - மலையாள சினிமா பற்றிக் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திருவனந்தபுரத்தின் சாலையோரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் மலையாள திரைப்பட போஸ்டர்கள்

நடிகைகளுக்கு அற்ப ஊதியம் வழங்கப்படுவது மற்றும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகாத காரணத்தால், அதை யாரும் கேள்வி கேட்க முடியாதது அல்லது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாததை ஆணையம் மேற்கொண்ட பல வழக்குகளின் ஆய்வுகள் மூலம் ஜானியின் கருத்து ஆதாரபூர்வமாகியுள்ளது.

சில இயக்குநர்கள், நடிகைகளிடம் நிர்வாண காட்சிகள் அல்லது உடலை வெளிப்படுத்தி நடிக்கும் காட்சிகள் குறித்து முன்பே சொல்லாமல் அவர்களைப் புறக்கணித்ததாக அந்த ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பெண்கள் படங்களில் இருந்து வெளியேறிய பின்னர், மூன்று மாதங்கள் வரை நடித்திருந்தாலும் எந்த ஊதியமும் வழங்கப்படாமல் இருந்துள்ளது. படப்பிடிப்பின்போது ஹோட்டல்களில் தங்குவதும் பாதுகாப்பற்றது எனப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

“(மதுபோதையில் உள்ள ஆண்கள்) கதவை பல நேரங்களில் வலுவாகத் தட்டுவார்கள். அப்போது அந்த கதவை உடைத்துவிட்டு, அவர்கள் அறைக்குள் வந்துவிடுவார்கள் என்பது போலத் தோன்றும்,” என நடிகைகள் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

அடிமைகளாகப் பயன்படுத்தப்படும் துணை நடிகர்கள்

ஹேமா அறிக்கைப்படி, துணை நடிகர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்ககளின் நிலைமை இன்னும் மோசமானது.

“துணை நடிகர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.” படப்பிடிப்புத் தளங்களில் அவர்களுக்கு கழிவறை வசதிகூடச் செய்து தரப்படுவதில்லை. காலை 9 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2 மணிவரைகூட அவர்கள் பணிபுரிய வைக்கப்படுவதாக ஹேமா அறிக்கை கூறுகிறது.

சில விதிவிலக்குகள் இருந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக் கலைஞர்களின் சங்கங்கள் பணிச்சூழல் மற்றும் ஊதியம் தொடர்பான சட்டங்களை மீறியுள்ளதால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் கேள்வி கேட்கிறோம் என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்பாததால், அவற்றைப் புறக்கணிக்க நினைக்கின்றனர். எனவே, சில உறுப்பினர்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளனர்,” என்று பீனா பால் தெரிவித்தார்.

திரைத்துறையை நிர்வகிப்பதற்கென சட்டம் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் ஆகியவற்றை அமைக்க வேண்டுமென அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அரசாங்கத்தைச் சாடும் எதிர்க்கட்சிகள்

இந்த அறிக்கை வெளியான உடனேயே, இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை, இந்த அறிக்கையை வெளியிடுவதைத் தாமதித்ததாகவும் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

 
கேரளா: அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா அறிக்கை - மலையாள சினிமா பற்றிக் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதலமைச்சர் பினராயி விஜயன்

முதலமைச்சர் பினராயி விஜயன், அந்த ஆணையத்தின் சில பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

எந்தப் பெண்ணும் காவல் துறையில் புகார் அளித்தால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

மலையாளம் திரைப்பட நடிகைர்கள் சங்கமான ‘அம்மா’, இந்த அறிக்கையில் உள்ளவை குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. பதில் தெரிவிப்பதற்கு முன்பாக அந்த அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டுமென அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் நிகழ்ந்தது எப்படி?

திரைப்படங்களுக்காக விமர்சகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெறும் கேரளாவில் இது எப்படி நடந்தது என பிபிசி கேட்டது.

புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் மலையாள சினிமா துறை குறித்து விரிவாகச் செய்தி சேகரித்து வருபவருமான ஆனா எம்.எம். வெட்டிகாட் இதுகுறித்து விளக்கினார்.

“தீவிரமான முற்போக்கு தன்மை மற்றும் தீவிரமான ஆணாதிக்கம் இரண்டுமே உள்ள கேரள மாநிலத்தின் நுண் உலகமாக மலையாள சினிமா திகழ்கிறது. இது மலையாளம் சினிமாவிலும் பிரதிபலித்துள்ளது. ஆணாதிக்கத்தை ஆய்வு செய்யும் சிறந்த இந்திய திரைப்படங்கள் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதே மலையாள சினிமாவில் பிற்போக்கான படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அப்படியான சூழலில், படைப்புத் துறையில் பெண் வெறுப்பாளர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பெண்களைச் சுரண்டுவது ஆச்சர்யம் அளிக்கவில்லை. அதேநேரம், இதே துறையில் சமத்துவத்திற்காகப் பெரியளவிலான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மாற்றம் நிகழுமா?

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபி பிபிசி இந்தியிடம் கூறுகையில், “சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், பாலினம் காரணமாக அவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அதைத் தீர்ப்பதற்கான சரியான நேரம் இது. அதற்கு திரைத்துறை ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

“ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறானது” என்பதில் உறுதியாக இருக்கிறார் பீனா பால்.

“மனோபாவத்தில் முதலில் மாற்றம் வரவேண்டும், அது மெதுவாகத்தான் நிகழும். ஆனால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், மற்றவர்களை இந்தத் தொழிலில் நுழைய ஊக்குவிக்கவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தலாம்’’ என்றார்.

 
கேரளா: அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹேமா அறிக்கை - மலையாள சினிமா பற்றிக் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'ஹேமா ஆணையத்தின் அறிக்கை நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும்' என ஆனா எம்.எம். வெட்டிகாட் கூறுகிறார்.

பிபிசி ஹிந்தியிடம் ஆனா எம்.எம். வெட்டிகாட் கூறுகையில், “மலையாளத் திரையுலகில் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துபவர்கள், பெண்கள் உரிமை இயக்கத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கடுமையாக முயன்றனர். ஆனால் WCC நம்ப முடியாத எதிர்ப்பைக் காட்டியதோடு கணிசமான மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது. அதனால்தான் ஹேமா ஆணையத்தின் அறிக்கை நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை நம்புவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார்.

அவர் கூறுகையில், “சமூக மற்றும் நிறுவன முன்னேற்றம் ஒருபோதும் ஒரே இரவில் நடக்காது, அதற்கான பாதை இன்னும் நீண்டது. ஆனால் இத்துறையைச் சேர்ந்த சிலரின் பதில்களில் உள்ள தற்காப்புத்தன்மை மற்றும் இந்த வாரம் பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்ட பிறரின் எதிர்வினைகள் அவர்கள் மாற்றத்தை உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அவர்களின் அசௌகரியம் ஒரு நேர்மறையான அறிகுறி” என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள திரையுலகை ஓர் அறிக்கை உலுக்கியது எப்படி? தொடர்ந்து புகார் கூறும் நடிகைகள்

2017ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2017ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது கட்டுரை தகவல்
  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஓர் அறிக்கை மலையாள சினிமா துறையை உலுக்கியுள்ளது. அதற்கு காரணம், மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது.

பாலியல் இன்னல்களுக்கு ஆளான பெண்கள் திரையுலகில் இருந்து வெளியேறிய நிகழ்வும் இங்கே அரங்கேறியுள்ளது.

தற்போது பெண் நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக புகார்களை முன்வைத்துள்ளனர். இதனையே நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையும் உறுதி செய்திருந்தது.

அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களும், அவர்கள் குற்றம் சுமத்திய ஆண்களின் பெயர்களும் அடங்கிய பகுதிகள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

'பல தீவிரமான புகார்கள் எழலாம்'

கடந்த 48 மணி நேரத்தில், மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரும் 2009ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் அதில் ஈடுபட்ட ஆண்கள் பெயர்களையும் பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே காவல்துறையினரிடம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ளார்.

கேரள அரசு சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நான்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள், பெண் கலைஞர்களிடம் இருந்து புகார்களை பெறுவார்கள். ஆனால் அவர்களால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இயலாது.

பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அதே நேரத்தில் கேரளா ஃபிலிம் அகாடமியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அந்த நடிகை கொச்சின் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறையாக புகார் அளித்தார். பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய நடிகை மாலா பார்வதி, "முன் வந்து புகார் அளித்த நபர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான பிரச்னைகள் நிச்சயமாக வெளிவரும். இப்போது பொது வெளியில் பேசியவர்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணையின் போது ஆஜராகவில்லை," என்று தெரிவித்தார்.

கேரள அரசு உத்தரவின் பெயரில் நீதிபதி ஹேமா கமிட்டி 2017ம் ஆண்டு உருவாக்கபப்ட்டது. 'வுமென் இன் சினிமா கலெக்டிவ்' என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.

பிரபலமான நடிகை ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின.

இந்த விவகாரத்தில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான நடிகர் திலீப் தற்போது பிணையில் வெளியே உள்ளார்.

நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது கேரளா அரசு. அனைத்து புகார்களும் முறையாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை அரசு தானாக விசாரிக்காது என்று கூறிய நிலையில், இரண்டு புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட பிறகு மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய அதிர்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

புகாரில் இடம் பெற்றிருப்பது என்ன?

சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிட்டியில் இடம் பெற்றுள்ளது.

தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்கள், தொடர்ச்சியாக அவர்கள் எவ்வாறு 'சமரசம்' செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று மேற்கோள்காட்டியிருந்தனர்.

அதற்கு கைமாறாக, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு நடிகை பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கழிவறையில் இருந்து வெளியே வந்த என்னை பிரபல நடிகர் ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் இது நடந்தது," என்று குற்றம் சாட்டினார்.

"அவரை தள்ளிவிட்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். திருவனந்தபுரத்தில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு பிரபல நடிகர் ஒருவர், நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் என்னை காண அங்கே வருவார் என்றும் கூறிக் கொண்டிருந்தார்," என கூறினார்.

"நிச்சயமாக அது முடியவே முடியாது என்று நான் தெளிவாக கூறினேன். ஆனால் அவர், உங்களுக்காக நான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன் அதனால் இதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் படபிடிப்பின் போது தேவையில்லாமல் என்னிடம் கத்திக் கொண்டிருந்தார். இதே போன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கலை பிடிக்கும் என்பதால்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் நான் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ளவில்லை," என்று கூறினார்.

'''அம்மா' அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் உறுப்பினராகவே நான் 'சமரசம்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.'' என அவர் கூறினார்.

தயாரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் காரில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 2013ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆனால் யார் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அந்த நடிகை தெரிவித்தார்.

மலையாள நடிகைகள் புகார்களை முன்வைக்க துவங்கியதில் இருந்து நடிகர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள், நடிகர்கள் தங்களின்  பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன?

அந்த அறிக்கையில் இடம் பெற்ற நடிகர்கள், இயக்குநர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றினால், இந்த செய்தித் தொகுப்பில் சேர்க்கப்படும்.

அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை நடைபெற்றது.

கீதா விஜயன், ஶ்ரீதேவிகா போன்ற நடிகைகள் பிரபல இயக்குநர் ஒருவர் நள்ளிரவில் அவர்களின் அறைக் கதைவை தட்டியதாக புகார் அளித்துள்ளனர்.

ஶ்ரீதேவிகா நான்கு நாட்கள் இந்த தொந்தரவை எதிர்கொள்ள நேரிட்டது. கீதா விஜயன் இது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளார்.

அந்த இயக்குநர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விதமான பதிலும் இதுவரை வழங்கவில்லை. அவர் இது தொடர்பாக பேசினால் இந்த செய்தி தொகுப்பில் பின்னர் இணைக்கப்படும்.

பெண் கதை ஆசிரியர் ஒருவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2022ம் ஆண்டு கொல்லத்தில் ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைக்காக சென்ற போது இயக்குநர் - நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் அளித்தார்.

அந்த இயக்குநர் - நடிகர் மன்னிப்பு கேட்டார் எனவும் மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதற்காக உதவியாளர் மூலம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க முயன்றார் எனவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் பின், அந்த கதை ஆசிரியர் திரைப்படத் துறையை விட்டே வெளியேறினார்.

ஒரு நடிகை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளார் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார்.

காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ள சித்திக், அந்த நடிகை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார்.

2016ம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதை சித்திக் மறுத்துள்ளார்

"அந்த நடிகை பெற்றோர்களுடன்தான் என்னை சந்தித்தார். எட்டறை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை," என்று சித்திக் குறிப்பிட்டார்.

நடிகர் சங்கம் மற்றும் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று சித்திக் கூறினார். ஆரம்பத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரணாக தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் சித்திக்.

நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

2017ம் ஆண்டு தங்களுக்கான WCC என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள் மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புக்காட்சி

சட்டம் கூறுவது என்ன?

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர். அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்ட காரணத்திற்காக மக்களும் ஆளும் கட்சியை விமர்சிக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

வேறு விதமாக கூற வேண்டும் என்றால், மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளாது.

"பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்றால், அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஒரு குற்றம் நடந்திருக்கும் பட்சத்தில் அரசு தாமாக நடவடிக்கை எடுக்க இயலுமா? இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்," என்று கேரளாவை சேர்ந்த, பெயர் கூற விரும்பாத, அமைச்சர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

நீதிபதி ஹேமா கமிட்டியிடம் குற்றம் சாட்டியுள்ள நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தங்களின் வாதத்தை முன்வைக்கின்றனர்.

கமிட்டிக்கு முன்பு ஆஜராகும் போது இதே பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மாலா பார்வதி கூறியுள்ளார்.

கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜூ, பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "ஒரு குற்றம் நடைபெறும் போது, இது அரசுக்கு எதிரான குற்றமாக இருக்கிறது. விசாரணை முகமைகள் தாமாக முன்வந்து விசாரித்து நீதிமன்ற வழக்கு தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களே வந்து குற்றம் சுமத்தினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை," என்று குறிப்பிட்டார்.

ஒரு குற்ற வழக்கு வரும் போது, மாநில அரசு ஒரு முக்கியமான வாதியாக மாறுகிறது. இது போன்ற சூழலில் அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தியா கூறுகிறார்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கேரள உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 54 பக்கங்களையும் இணைத்து இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். திரைத்துறை மட்டுமின்றி, கட்டுமான துறை, கார்ப்பரேட் துறை, சட்டத்துறை உள்ளிட்ட இதர துறைகளிலும் இதன் தாக்கத்தை காண இயலும், என்று சந்தியா கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் தமிழ்நாட்டு திரைத்துறைக்கு வாங்க விரும்பியதை செய்யுங்க என்று சொல்வது.

கேட்டாத் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன்லால் ராஜினாமா: மலையாள சினிமாவை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை - என்ன நடக்கிறது?

மலையாள சினிமா, ஹேமா கமிட்டி, மோகன்லால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகியுள்ளார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • 27 ஆகஸ்ட் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த அறிக்கை எதிரொலியாக, ஆகஸ்ட் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் விலகியுள்ளார். அவர் மட்டுமின்றி, அந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண் கலைஞர்கள் வைத்திருப்பதால், சங்கத்தின் செயற்குழுவை கலைக்க வேண்டும் என்ற முடிவு அன்றைய தினம் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

2024ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமா, ஹேமா கமிட்டி, மோகன்லால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2017ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது

'பல தீவிரமான புகார்கள் எழலாம்'

கடந்த 48 மணி நேரத்தில், மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரும் 2009ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் அதில் ஈடுபட்ட ஆண்கள் பெயர்களையும் பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே காவல்துறையினரிடம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ளார்.

கேரள அரசு சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நான்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள், பெண் கலைஞர்களிடம் இருந்து புகார்களை பெறுவார்கள். ஆனால் அவர்களால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இயலாது.

பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அதே நேரத்தில் கேரளா ஃபிலிம் அகாடமியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அந்த நடிகை கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறையாக புகார் அளித்தார். பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய நடிகை மாலா பார்வதி, "முன் வந்து புகார் அளித்த நபர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான பிரச்னைகள் நிச்சயமாக வெளிவரும். இப்போது பொது வெளியில் பேசியவர்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணையின் போது ஆஜராகவில்லை," என்று தெரிவித்தார்.

கேரள அரசு உத்தரவின் பெயரில் நீதிபதி ஹேமா கமிட்டி 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 'வுமென் இன் சினிமா கலெக்டிவ்' என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.

பிரபலமான நடிகை ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின.

இந்த விவகாரத்தில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான நடிகர் திலீப் தற்போது பிணையில் வெளியே உள்ளார்.

நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது கேரளா அரசு. அனைத்து புகார்களும் முறையாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை அரசு தானாக விசாரிக்காது என்று கூறிய நிலையில், இரண்டு புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட பிறகு மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

மலையாள சினிமா, ஹேமா கமிட்டி, மோகன்லால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

புகாரில் இடம் பெற்றிருப்பது என்ன?

சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிட்டியில் இடம் பெற்றுள்ளது.

தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்கள், தொடர்ச்சியாக அவர்கள் எவ்வாறு 'சமரசம்' செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று மேற்கோள்காட்டியிருந்தனர்.

அதற்கு கைமாறாக, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு நடிகை பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கழிவறையில் இருந்து வெளியே வந்த என்னை பிரபல நடிகர் ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் இது நடந்தது," என்று குற்றம் சாட்டினார்.

"அவரை தள்ளிவிட்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். திருவனந்தபுரத்தில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு பிரபல நடிகர் ஒருவர், நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் என்னை காண அங்கே வருவார் என்றும் கூறிக் கொண்டிருந்தார்," என கூறினார்.

"நிச்சயமாக அது முடியவே முடியாது என்று நான் தெளிவாக கூறினேன். ஆனால் அவர், உங்களுக்காக நான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன் அதனால் இதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் படபிடிப்பின் போது தேவையில்லாமல் என்னிடம் கத்திக் கொண்டிருந்தார். இதே போன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கலை பிடிக்கும் என்பதால்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் நான் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ளவில்லை," என்று கூறினார்.

'''அம்மா' அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் உறுப்பினராகவே நான் 'சமரசம்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.'' என அவர் கூறினார்.

''தயாரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் காரில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 2013ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆனால் யார் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை'' என்றும் அந்த நடிகை தெரிவித்தார்.

மலையாள சினிமா, ஹேமா கமிட்டி, மோகன்லால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் புகைப்படம்

குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன?

புகார்களுக்கு உள்ளான சில நடிகர்கள், இயக்குநர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றினால், இந்த செய்தித் தொகுப்பில் சேர்க்கப்படும்.

அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை நடைபெற்றது.

கீதா விஜயன், ஶ்ரீதேவிகா போன்ற நடிகைகள் பிரபல இயக்குநர் ஒருவர் நள்ளிரவில் அவர்களின் அறைக் கதைவை தட்டியதாக புகார் அளித்துள்ளனர்.

ஶ்ரீதேவிகா நான்கு நாட்கள் இந்த தொந்தரவை எதிர்கொள்ள நேரிட்டது. கீதா விஜயன் இது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளார்.

அந்த இயக்குநர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விதமான பதிலும் இதுவரை வழங்கவில்லை. அவர் இது தொடர்பாக பேசினால் இந்த செய்தி தொகுப்பில் பின்னர் இணைக்கப்படும்.

பெண் கதை ஆசிரியர் ஒருவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2022ம் ஆண்டு கொல்லத்தில் ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைக்காக சென்ற போது இயக்குநர் - நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் அளித்தார்.

அந்த இயக்குநர் - நடிகர் மன்னிப்பு கேட்டார் எனவும் மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதற்காக உதவியாளர் மூலம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க முயன்றார் எனவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் பின், அந்த கதை ஆசிரியர் திரைப்படத் துறையை விட்டே வெளியேறினார்.

ஒரு நடிகை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார்.

காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ள சித்திக், அந்த நடிகை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார்.

2016ம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதை சித்திக் மறுத்துள்ளார்

"அந்த நடிகை பெற்றோர்களுடன்தான் என்னை சந்தித்தார். எட்டறை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை," என்று சித்திக் குறிப்பிட்டார்.

நடிகர் சங்கம் மற்றும் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று சித்திக் கூறினார். ஆரம்பத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரணாக தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் சித்திக்.

நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மலையாள சினிமா, ஹேமா கமிட்டி, மோகன்லால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் புகைப்படம்

சட்டம் கூறுவது என்ன?

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர். அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்ட காரணத்திற்காக மக்களும் ஆளும் கட்சியை விமர்சிக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

வேறு விதமாக கூற வேண்டும் என்றால், மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளாது.

"பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்றால், அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஒரு குற்றம் நடந்திருக்கும் பட்சத்தில் அரசு தாமாக நடவடிக்கை எடுக்க இயலுமா? இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்," என்று கேரளாவை சேர்ந்த, பெயர் கூற விரும்பாத, அமைச்சர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

நீதிபதி ஹேமா கமிட்டியிடம் குற்றம் சாட்டியுள்ள நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தங்களின் வாதத்தை முன்வைக்கின்றனர்.

கமிட்டிக்கு முன்பு ஆஜராகும் போது பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மாலா பார்வதி கூறியுள்ளார்.

கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜூ, பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "ஒரு குற்றம் நடைபெறும் போது, இது அரசுக்கு எதிரான குற்றமாக இருக்கிறது. விசாரணை முகமைகள் தாமாக முன்வந்து விசாரித்து நீதிமன்ற வழக்கு தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களே வந்து குற்றம் சுமத்தினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை," என்று குறிப்பிட்டார்.

ஒரு குற்ற வழக்கு வரும் போது, மாநில அரசு ஒரு முக்கியமான வாதியாக மாறுகிறது. இது போன்ற சூழலில் அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தியா கூறுகிறார்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கேரள உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 54 பக்கங்களையும் இணைத்து இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். திரைத்துறை மட்டுமின்றி, கட்டுமான துறை, கார்ப்பரேட் துறை, சட்டத்துறை உள்ளிட்ட இதர துறைகளிலும் இதன் தாக்கத்தை காண இயலும், என்று சந்தியா கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹேமா கமிட்டி அறிக்கை: முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன் லால், தெலுங்கு சினிமா பற்றிப் பேசிய சமந்தா

மலையாள நடிகர் மோகன் லால்

பட மூலாதாரம்,FACEBOOK/MOHANLAL

படக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன் லால்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சைக்கு மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான மோகன் லால் முதல்முறையாகப் பதிலளித்துள்ளார்.

“மலையாள திரையுலகை அழித்து விடாதீர்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை மோகன் லால் வரவேற்றதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. பெண் கலைஞர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது.

 

"இதுபோன்ற சம்பவங்கள் முழு திரையுலகையும் அழித்துவிடும். 'அம்மா' சங்கத்தின் மீது மட்டும் குற்றம் சுமாத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மோகன் லால் கூறினார்.

“அம்மா சங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ‘அம்மா’ சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ‘அம்மா’ சங்கத்தின் பதவியிலிருந்து விலகியது தப்பிப்பதற்காக அல்ல. தயவு செய்து தேவையில்லாமல் ‘அம்மா’ சங்கத்தைக் குறை சொல்லாதீர்கள். நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறோம். அந்த அறிக்கையை வெளியிட்டது சரியான முடிவு,'' என்றார்.

மலையாள இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மோகன் லால் உள்ளிட்ட 'அம்மா' உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

'கடினமாக உழைக்கும் திரைத்துறை'

ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் எதிர்மறையாகச் சித்தரிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொண்டார் மோகன் லால். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை என்று அவர் கூறினார்.

 
நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மலையாள திரையுலகில் நடிகைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஹேமா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

"அம்மா சங்கத்தை மட்டுமே நோக்கிப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளை எல்லோரிடமும் கேட்க வேண்டும். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை.

நிறைய பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. யாருக்காகவும் சட்டத்தை மாற்ற முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மலையாள திரையுலகை அழிக்க வேண்டாம்,'' என்றார்.

"விசாரணை கண்டிப்பாக நடைபெறும். துணை நடிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் அனைவரின் பெயர்களும் வெளிவருகின்றன. நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். விசாரணை நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். பிரச்னைகளைச் சரி செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று மோகன் லால் தெரிவித்துள்ளார்

தெலுங்கு சினிமா குறித்து சமந்தா கருத்து

இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா அமைப்பான ‘பெண்களின் குரல்’ (The Voice of Women) என்ற அமைப்பு அரசாங்கத்திடம் அளித்த அறிக்கையை வெளியிடுமாறு, சமந்தா வெள்ளிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
நடிகை சமந்தா

பட மூலாதாரம்,FACEBOOK/SAMANTHA

படக்குறிப்பு, நடிகை சமந்தா

"தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கின்றனர். கேரளாவில் உள்ள நடிகைகள் கூட்டமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ இயக்கத்திற்கு வழிவகுத்தது.

அதனால் ஈர்க்கப்பட்டு, 'தி வாய்ஸ் ஆஃப் வுமன்' தெலுங்கு திரையுலகில் பெண்களை ஆதரிப்பதற்காக 2019இல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அக்குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” என்று சமந்தா அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் உருவான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ திரைப்படத் துறையில் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. பெண்களுக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்களுக்காகப் பணியாற்றி வருகிறது.

மலையாளத் திரையுலகில் பணிபுரியும் பெண்களைக் கொண்டு ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ உருவாக்கப்பட்டது.

நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையில் என்ன இருக்கிறது?

மலையாளத் திரையுலகின் நிலைமை குறித்து ஆய்வு செய்யக் கோரி 2017ஆம் ஆண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதையடுத்து, அதே ஆண்டில் நீதிபதி ஹேமா ஆணையத்தை மாநில அரசு அமைத்தது.

பிரபல கதாநாயகியை காரில் வைத்து சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததை அடுத்து, திரையுலகின் நிலைமையை ஆய்வு செய்ய வுமன் இன் சினிமா கலெக்டிவ் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

இந்தக் குழுவில் நடிகை டி.சாரதா, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் கே.பி.வல்சலா குமாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

 
மலையாள திரைப்பட போஸ்டர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வது (casting couch) ஆழமாக வேரூன்றியுள்ளதாக ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் கேரள அரசால் வெளியிடப்பட்டது.

“சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம்.

திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன.

44 பக்கங்கள் இல்லை

நீதிபதி கே.ஹேமா தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள அரசு அந்த அறிக்கையை வெளியிட்டது.

அறிக்கையின் 290 பக்கங்களில் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் பக்கங்களில், திரையுலகில் தங்களைத் துன்புறுத்தியவர்களின் பெயர்களைப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
பாலியல் துன்புறுத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை பெண்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு பக்கத்தில், பெண்கள் எப்படித் துன்புறுத்தப்பட்டனர், எவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம்.

இதுவொரு பயங்கரமான சம்பவம். படப்பிடிப்பின்போது அவர் சந்தித்த இந்தக் கசப்பான அனுபவம் அவருடைய முகத்தில் தெரிந்தது. இதனால், ஒரு ஷாட்டுக்கு அவர் 17 டேக்குகளை எடுத்தார். இயக்குநர் அந்தப் பெண்ணை மோசமாகத் திட்டினார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை வெளியானதும் கதாநாயகிகள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot%202024-09-04%20041553.png

கண்ணில் பட்ட மீம் ஒன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் குற்றச்சாட்டுகள்: சினிமா நடிகைகள் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்?

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'காஸ்டிங் கவுச்' மூலம் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது என்ற கருத்தை பல நடிகைகள் புறக்கணித்துள்ளனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி இந்திக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து தப்பிக்க சிலர் அவர்களை அறைந்தனர், சிலர் அலறினர், சிலர் உதவி கோரினர்.

சிலர் அவர்களின் கண்களை நேரடியாக பார்த்தனர். மற்றொருவரோ, கேமரா முன்பு தன் வசனத்தை மறக்கும் அளவுக்கு பயந்துபோனார்.

இதன்மூலம், பெண்கள் தங்களுடைய நம்பகத்தன்மை நிலைத்திருக்க, தங்களுக்கென ஒரு 'கோட்டை'யை உருவாக்கினர்.

“சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” ஆகிய இரண்டு வார்த்தைகளும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, மலையாளத் திரையுலகில் பெண்களின் பணிச்சூழலை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது.

 

திரையுலகில் நுழைவதற்கோ அல்லது அதில் முன்னேறுவதற்கோ அல்லது திரைத்துறை தொடர்பான சங்கங்களில் இணைவதற்கோ ‘காஸ்டிங் கவுச்’ (சினிமாவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக சமரம் செய்தல்) மூலம் மட்டும்தான் முடியும் என்ற கருத்தை சில நடிகைகள் புறக்கணித்துள்ளனர். அவ்வாறான நடிகை ஒருவர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.

 
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பார்வதியின் அனுபவம் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின்படி, திரையுலகில் சில காலம் தடையை எதிர்கொண்ட பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மலையாள திரையுலகில் உள்ள ‘அதிகாரமிக்க குழு’ அல்லது ‘மாஃபியா’ மூலம் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. சிலர் பிற மொழித் திரையுலகின் பக்கம் திரும்ப வேண்டியதாயிற்று.

ஆனால், சில பெண்கள் மீண்டும் திரும்பிவந்து படங்களில் நடித்துள்ளனர். பெண் இயக்குநர்கள் அல்லது பெண் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு வாய்ப்பளித்தனர். அல்லது ஆண் ஒருவர் அப்பெண்ணின் திறமையை கண்டுகொண்டபோது அவரால் மீண்டும் நடிக்க முடிந்தது.

படப்பிடிப்பிலேயே அத்துமீறல்

இதேபோன்ற ஒரு 'பயங்கரமான' அனுபவம் மற்றொரு நடிகைக்கும் ஏற்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு கேமரா முன்பு அச்சம்பவம் நடந்தது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அந்த நடிகரின் மூன்றாவது படம் அது.

"அந்த ஆண் நடிகர் என்னை கேமரா முன் பிடித்தபோது நான் பயந்தேன். நான் வலியில் முனகிக் கொண்டிருந்தேன். நான் திகைத்து விட்டேன்” என, மாலா பார்வதி பிபிசியிடம் கூறினார்.

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நடிகரின் மனைவியாக அத்திரைப்படத்தில் மாலா நடித்திருந்தார்.

“காட்சியின்படி கண்ணாமூச்சி விளையாடும் தன் மகளை அந்த நடிகர் பிடிக்க வேண்டும். அப்போது, தன்னுடைய இன்னொரு கையால் அவர் என்னைப் பிடித்தார். அப்படி செய்ய வேண்டாம் என இயக்குநர் அந்த நடிகரிடம் கூறினார்” என்கிறார் மாலா.

“அதன்பின் என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு ‘ஷாட்’டுக்கு 10-12 டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது. இயக்குநர் என்னை கடிந்துகொண்டார். அடுத்த நாள் படப்பிடிப்பில், நான் அந்த நடிகரை முறைத்துக் கொண்டே இருந்தேன். அவர் வசனம் பேசும்போது பல தவறுகளை செய்தார். அவரும் பல டேக்குகளை எடுக்க வேண்டியிருந்தது” என்கிறார் அவர்.

 
நீதிபதி ஹேமா கமிட்டி

பட மூலாதாரம்,GOVT. OF KERALA

படக்குறிப்பு, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தபோது (ஜனவரி 1, 2020)

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் பார்வதியின் உதாரணம் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஹேமா கேட்டுக் கொண்டதன் பேரில், அந்த அறிக்கையின் பெரும்பகுதி வெளியிடப்படவில்லை. 290 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் சுமார் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை.

பார்வதி கூறுகையில், “படப்பிடிப்பில் எனக்கு ஆறுதல் சொன்ன ஒரே நபர் படத்தொகுப்பாளர் தான். கவலைப்பட வேண்டாம் என அவர் கூறினார். அந்த நடிகர் எப்படி இதைச் செய்தார் என தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார். அச்சம்பவத்திற்கு பின் எனக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பின் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நண்பரின் வற்புறுத்தலுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினேன்” என்கிறார் மாலா.

பெண்கள் தைரியத்தை வெளிப்படுத்திய போது...

ஆனால், பார்வதி இதுதொடர்பாக தற்போது காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை.

“இப்போது அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. இத்தகைய அத்துமீறல்களை எதிர்கொள்ளும் நபர்களிடம் மற்றவர்கள் கூர் உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் கூறினார்.

நடிகை ஸ்வேதா மேனன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இது ஒரு அழகான தொழில். தொடக்கத்திலேயே உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவுபடுத்துவதே முக்கிய விஷயம். பின்னர் யாரும் உங்களிடம் தீய எண்ணம் கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார்.

பாலியல் அத்துமீறலுக்கு ஆளான எந்தவொரு நபரும் அதைப் பற்றி பேசுவது 'எளிதல்ல' என்று ஸ்வேதா கூறினார்.

"இது மிகவும் வேதனையானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். காவல்நிலையத்திற்கு சென்று புகார் செய்ய பெண்களுக்கு தைரியமும் பலமும் வேண்டும். இதைச் செய்ய முன்வந்தவர்களுக்குப் பாராட்டுகள். இதைச் செய்ததற்காக, அவர்களுடைய குணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும்” என்றார் ஸ்வேதா.

அத்துமீறலை அவர் எப்படி சமாளித்தார்?

இந்த கேள்விக்கு பதிலளித்தா அவர், "நான் எந்தவொரு விஷயத்திற்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவேன். சில நேரங்களில் நான் அவர்களை அறைந்திருக்கிறேன், சில சமயங்களில் காயப்படுத்தியிருக்கிறேன். நான் சலசலப்பை உருவாக்கவில்லை, நான் பலமாக எதிர்வினையாற்றுகிறேன். நிஜ வாழ்க்கையில் நான் மிரட்டல்கள் குறித்து கவலைப்படுவதில்லை. கேமரா முன்பு மூத்த நடிகர்கள் இருந்தால் இதுபோன்று நடக்கலாம்” என்றார்.

நடிகைகள் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்?

காவல்துறை அல்லது ஊடகங்களுக்கு வரும் இத்தகைய புகார்களின் நோக்கம் பழைய கதைகளை வெளியே கொண்டு வந்து 'ஆண்களை குறிவைப்பது' என்ற கருத்து, திரையுலகில் சிலரது மனதில் உள்ளது.

நடிகை கீதா விஜயன் பிபிசியிடம், “ஒரு நாள் இரவு ஹோட்டலில், திரைப்பட இயக்குநர் எனது அறையின் கதவைத் தட்டினார். ஆனால் மற்ற கலைஞர்களின் கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் என்னுடைய புகாரை பதிவு செய்யவில்லை” என்றார்.

ஆனால், அச்சமயத்தில் தனக்கு உடல் ரீதியான துன்புறுத்தல் ஏதும் நிகழவில்லை என தான் உறுதிப்படுத்தியிருப்பதால், தான் தொழில் வாய்ப்புகளை இழக்கவில்லை என்றார் கீதா விஜயன்.

 
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இதுகுறித்து கீதா விஜயன் கூறுகையில், “இந்த விவகாரத்துக்கு சட்ட வடிவம் கொடுக்க விரும்பவில்லை. இது 33 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் எனது வாக்குமூலத்தை அளித்துள்ளேன். அப்படிப்பட்டவர் மீது வேறு எந்த கலைஞரும் புகார் கொடுத்தால் 100 சதவீதம் அவருக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.

திரைப்பட தயாரிப்பாளர் ஆஷா ஏ. ஜோசப், திரைப்படத் துறையில் தனது சக ஊழியர்களின் கருத்துகளை ஆதரிப்பதோடு, 'பாலியல் சுரண்டலை எதிர்ப்பதும் தனிநபரைப் பொறுத்தது' என்றும் கூறுகிறார்.

"காஸ்டிங் கவுச்சைத் தவிர்க்க முடியவில்லை என்று, சில சலுகை பெற்ற பெண்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சில தீவிரமான புகார்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை” என்கிறார் அவர்.

திரைப்பட விமர்சகர் சௌமியா ராஜேந்திரன் இத்துறையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்று பெண்கள் நினைப்பதை அவர் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் நோக்கம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்களை சிறைக்கு அனுப்புவது அல்ல என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“இந்த அறிக்கையின் நோக்கம் திரைத்துறையில் பெண்களுக்கான பணிச்சூழலை முன்னிலைப்படுத்துவது, பாலியல் அத்துமீறல்கள் வெறும் கதைகள் அல்லது செவிவழிச் செய்திகள் அல்ல என்பதை நிரூபிப்பதாகும்” என்கிறார் அவர்.

"பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் திரைத்துறையில் பரவலாக இருப்பதை நாங்கள் இப்போது அறிவோம். இதன்மூலம், பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசும்போது, முன்பு போன்று அல்லாமல் அவர்கள் நம்பப்படுவார்கள், அவர்களின் கருத்துகள் நிராகரிக்கப்பட மாட்டாது” என்கிறார் அவர்.

மலையாள திரையுலகினர் கவலை

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், நடிகைகளின் பகிரங்க அறிக்கைகள், 58 ஆண்டுகளாக திரைத்துறையில் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றிய ஸ்ரீகுமரன் தம்பி போன்றவர்களைக் கூட கவலையடையச் செய்துள்ளது.

"60கள் மற்றும் 80களில் மிகக் குறைவான பிரச்னைகளே இருந்தன. அக்காலத்தில் பாலியல் சுரண்டல் பிரச்னை இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழ், தெலுங்கு திரையுலகில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. பல பெண் கலைஞர்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. அப்படி பிரச்னைகள் இருந்தால் கூட, திரையுலகில் அவை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்ளப்பட்டது” என்றார் அவர்.

 
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மலையாள திரையுலகின் பெரிய நடிகர்களும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்த கவலையில் உள்ளனர்

ஊதியத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்து பேசிய அவர், நடிகர், நடிகைகளின் சம்பள வித்தியாசம் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது என்றார்.

“கதாநாயகனின் சம்பளம் 5 கோடி முதல் 10 கோடி வரை என்றால், படத்தின் முன்னணி நாயகி சில லட்சங்களில் திருப்தி அடைய வேண்டியுள்ளது. 33 வருடங்களுக்கு முன் என்னுடைய முதல் படத்தை எடுத்த போது கதாநாயகனுக்கு கொடுத்த சம்பளத்தில் 75 சதவீதம் கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டது” என்றார்.

“70, 80களில் பிரேம் நசீர், சத்யம், மது போன்ற கதாநாயகர்கள் இருந்த போது, சூழல் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் மொத்த தயாரிப்பு செலவில் 10 சதவிகிதத்தை சம்பளமாக பெற்றனர். ஆனால் இன்று ‘சூப்பர் ஹீரோ’க்கள் தயாரிப்பு செலவில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் கட்டணமாக வசூலிக்கின்றனர்” என்றார்.

புதிய தலைமுறை கலைஞர்களிடம் நம்பிக்கை கொண்டிருக்கும் அவர், “எல்லாம் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்கள் மீதான பாரபட்சமான அணுகுமுறை குறைந்து, சினிமாவில் பெண்கள் வெற்றியாளர்களாக வருவார்கள்” என்றார்.

ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்த தம்பி, 1976-ல் பெண்கள் பிரச்னைகளை மையமாக வைத்து மோகினியாட்டம் என்ற படத்தை எடுத்தார்.

சௌமியா ராஜேந்திரன் கூறுகையில், “நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் புகார் அளிக்க முன்வந்த பெண்களின் வார்த்தைகளை புறக்கணிப்பது கடினம். ஆனால், நிலைமையை மாற்ற, திரைத்துறை தொடர்பான அமைப்புகளும், அரசாங்கமும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் முழு சகிப்பின்மையை கடைபிடிக்க வேண்டும். பெண்கள் கழிவறை வசதி, ஊதிய வேறுபாடு போன்ற திரையுலகில் உள்ள பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். அவை குறித்து விவாதம் நடத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பாலியல் வன்கொடுமை பிரச்னை பொது களத்திற்கு வந்தவுடன் அதற்கான முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. இதிலிருந்து முன்னேற வேண்டிய தேவை உள்ளது” என கூறினார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் தமிழ்நாட்டு சினிமாத்துறையில்  இருக்கும் பாலியல் அத்துமீறல்களையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை - அமிதாப் முதல் ரஜினி, விஜய் வரை நட்சத்திரங்கள் அமைதி காப்பது ஏன்?

சினிமா, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண் கலைஞர்கள் ஆதரவு அளித்து வரும் வேலையில் பிரபல ஆண் நடிகர்கள் பலரும் மௌனமாக இருந்து வருகின்றனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரளாவில் வெளியிடப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொழுதுபோக்கு துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கையில் மலையாள திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மற்ற பெண் கலைஞர்கள் அரவணைப்பையும் ஆதரவையும் வழங்க, இந்திய திரைத்துறையில் உள்ள சூப்பர்ஸ்டார்கள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருந்து வருகின்றனர்.

மலையாள திரைத்துறையில் பணியாற்றிய 51 பெண் கலைஞர்களின் அனுபவங்களுடன், பல ஆண்டு காலமாக பெண்கள் எதிர்கொண்டு வரும் பாலியல் சுரண்டலை வெளிச்சப்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை.

"கேட்கப்படும் நேரத்தில் பாலுறவுக்கு பெண்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வேலை வேண்டும் பட்சத்தில் தொடர் 'சமரசத்திற்கு' தயாராக இருக்க வேண்டும் என்றும் பெண் கலைஞர்களிடம் கூறப்பட்டது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

முன்வந்து பேசும் பாதிக்கப்பட்ட பெண்கள்

2017-ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

WCC-ன் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடையாளம் காணவும் அவர்களுக்கு நீதி வழங்கவும் இந்த குழு அமைக்கப்பட்டது.

பிரச்னைகள் குறித்து பேசிய பெண்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு 290 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று இந்த அறிக்கை வெளியான பிறகு, பல பெண்கள் தாங்கள் மலையாள சினிமாவில் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை தாமாக முன்வந்து பகிர்ந்து கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

வழக்குகளை விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது மட்டுமின்றி, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவகாரங்களையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மலையாள சினிமா மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட இந்திய சினிமாவில் உள்ள பெண்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வதாக தொடர்ச்சியாக புகார்களை முன்வைத்து வருகின்றனர். படங்களில் வாய்ப்பு கிடைக்க பாலியல் ரீதியான சமரசங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தங்கள் எழுவதை முக்கிய சவாலாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திரை விமர்சகரும் எழுத்தாளருமான சுப்ரா குப்தா பிபிசியிடம் பேசிய போது, "இந்த போக்கு இந்திய சினிமாவில் வேரூன்றி இருக்கிறது. இது போன்ற பிரச்னையை எதிர்கொள்ளாத ஒரு நடிகையும் இந்த துறையில் இல்லை," என்று கூறுகிறார்.

யாரேனும் புகார் அளிக்க நினைத்தால், அந்த விசாரணை பல ஆண்டுகளாக நீடிக்கும் என்று கூறினார்.

WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் பிபிசியிடம் பேசிய போது, "இந்த போக்கு தலைப்பு செய்திகள் ஆனது. தொலைக்காட்சியில் விவாத பொருளானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது," என்று கூறினார்.

இது போன்ற இன்னல்களை சந்தித்ததன் காரணத்தினால், எவ்வாறு சினிமா துறையில் இருந்து வெளியேறினோம் என்று தற்போது பல பெண்களும் முன்வந்து பேசுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. சமூக வலைதளங்களில் அவர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசப்பட்டாலும் கூட, அவர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

 
சினிமா, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள் வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார்கள்

அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அறிக்கை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியீடு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கும் திரைத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரைத்துறையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கானா அரசு தெலுங்கு திரையுலகில் நிலவும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பணிச்சூழல் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அறிவித்தது. அதன் அறிக்கையை அந்த குழு 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசிடம் சமர்பித்தது. அதனை தெலுங்கானா அரசு இதுவரை வெளியிடவில்லை.

2018ம் ஆண்டு, அறிமுக நடிகையான ஶ்ரீ ரெட்டி பெண்களுக்கு திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க பொது இடத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேற்கு வங்க அரசும் இதுபோன்று ஒரு குழுவை அமைத்துள்ளது என்று கூறுகிறார் நடிகை ரீதாபாரி சக்கரவர்த்தி. திரைத்துறையை மோசமான ஆண்களின் பிடியில் இருந்து இந்த குழு விடுவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
சினிமா, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2008ம் ஆண்டு நடிகை தனுஶ்ரீ தத்தா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்

வெளிச்சத்திற்கு வந்த மலையாள சினிமாவின் அவலம்

தமிழ், கன்னட திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரபல தமிழ் நடிகையான ராதிகா சரத்குமார் பிபிசியிடம் பேசிய போது, "ஹேமா கமிட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது ஆண்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தற்போது சினிமாத்துறையில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்," என்று குறிப்பிட்டார்.

WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் இது குறித்து பேசும் போது, சினிமாத்துறையில் உள்ள ஆண்களிடம் இருந்து எந்தவிதமான ஆதரவும் இதுவரை கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி இருவரும் இந்த அறிக்கையை வரவேற்று உள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கைகள் சினிமாத்துறைக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியதாக தெரியவருகிறது.

தீதி பிபிசியிடம் பேசும் போது, "இந்த நடிகர்களை நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றோம். ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக மாறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்," என்று கூறினார்.

தமிழ் நடிகர்களும் அரசியல் தலைவர்களுமான கமல் ஹாசன் மற்றும் விஜய் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆன பிறகு பேசிய போதும் கூட, "அதுகுறித்து எனக்கு தெரியாது" என்று கூறியது பெரும் விமர்சனத்திற்கு வழிவகை செய்தது.

ராதிகா மேற்கொண்டு பேசும் போது, "நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சீண்டல்களை எதிர்கொண்டு வருகிறோம். ஆண்கள் இதனை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் நடக்கின்ற நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்று ஒதுக்கிவிடுகிறார்களா? அனைத்து நேரங்களிலும் பெண்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இது மிகவும் மோசம்," என்று கூறினார்.

 
சினிமா, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மலையாள சூப்பர் ஸ்டார்கள் இந்த அறிக்கையை வரவேற்றாலும் இது கலைத்துறையை பாதிக்கும் என்று கருத்து கூறியுள்ளனர்

அமைதி காக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்

அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இது குறித்து அமைதியாக இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுப்ரா இது குறித்து பேசும் போது,"அமைதி காப்பது மிகவும் மோசமானது. ஆனால் இது தான் நடக்கும் என்று எதிர்பார்த்தது தான். அவர்கள் இந்த விவகாரத்தில் ஏதேனும் பேசியிருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். ஏன் என்றால் 2008ம் ஆண்டு நடிகை தனுஶ்ரீ தத்தா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார். பாலிவுட்டில் மீடூ இயக்கம் ஆரம்பித்த பிறகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் நடந்தது என்ன என்பது நமக்கு தெரியும்," என்றார்.

 
சினிமா, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

பட மூலாதாரம்,KERALA CHIEF MINISTER'S OFFICE

படக்குறிப்பு, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அறிவித்தது கேரள அரசு

"பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சிறிது காலம் கழித்து அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களும் எதுவுமே நடக்காதது போன்று திரைத்துறையில் மீண்டும் நடிக்க வந்துவிட்டனர். ஆனால் குற்றம் சாட்டிய நடிகைகளுக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை," என்று கூறினார்.

"இதுவரை பாலிவுட்டில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து எந்த ஒரு முன்னணி நடிகையும் பேசவில்லை. நடிகை தனுஶ்ரீ தத்தா இதுபோன்ற அறிக்கையால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தேவையற்றது என்றும் கூறினார்," என்றும் மேற்கோள் காட்டினார் சுப்ரா.

"இதைப் பற்றி பேசி கஷ்டப்படுவதை விட, இதில் விழுந்துவிடாமல் இருப்பது நல்லது என்று திரைத்துறையினர் நினைக்கின்றனர். இந்த துறையில் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் இருக்கலாம்," என்றும் குறிப்பிடுகிறார் சுப்ரா.

"சகிப்புத்தன்மை குறித்து பேசிய ஆமீர் கான், ஷாருக் கான் நிலை என்ன ஆனது என்று யோசியுங்கள். தீவிரமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது," என்றும் கூறினார் சுப்ரா.

அறிக்கையால் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் நம்பிக்கையுடன் இருக்கிறார். "இது நம்பிக்கை அளிக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் சினிமாத் துறையில் பாலின பாகுபாடு வேரூன்றி கிடக்கிறது. ஆனால் இனியும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை பணியிடங்களில் எதிர்கொள்வதை சகித்துக் கொள்ள இயலாது. இதனை மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறோம் என்றும்," கூறினார் தீதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை - அமிதாப் முதல் ரஜினி, விஜய் வரை நட்சத்திரங்கள் அமைதி காப்பது ஏன்?

அதியுச்ச பாலியல் கள்ளர்களே இவர்கள் தானே. பிறகு எப்படி வாய் திறப்பார்கள்?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣......... சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அங்கு இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே சண்டை என்றே பூட்டப்பட்டது. ஒரு பிரிவு ஜேவிபி, அடுத்த பிரிவு இன்னொரு சோஷலிஸ்ட் முன்னணி.........! பழைய சோஷலிஸ்டுகள் இப்பொழுது ஆட்சிக்கு வர, புதிதாக இன்னொரு முன்னணி உருவாகி, தேவையென்றால் இன்னொரு 'அரகலிய' ஆரம்பித்து, சிங்கள மக்களை காப்பாற்ற ஏற்கனவே தயாராகிவிட்டார்கள் போல........... சிங்கள மக்கள் வாழ்வோ, தாழ்வோ ஒரு அலையாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் நாலு பக்கங்களாக பிரிந்து, நண்டுகள் போல போய்க் கொண்டிருக்கின்றது எங்களின் தெரிவுகள். ஜேவிபியினர் ஜாதிக ஹெல உருமய, பூமி புத்ர, பொதுஜன பெரமுன போன்ற இனவாதிகள். இதை நான் மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றேன். உதய கம்மன்பில கூட இவர்களில் ஒருவர் தான். அநுர, ரில்வின், உதய, விமல்,..... என்று இந்த வரிசை இப்பொழுது பல கட்சிகளாகப் பிரிந்து இருக்கின்றார்கள். அரசியல் ரீதியாக ஒரு துரும்பைக் கூட தமிழர்களுக்காக இவர்கள் அசைக்கப் போவதில்லை. உண்மையில் எந்த பெரும்பான்மை அரசியல்வாதியும் அசைக்கப் போவதில்லை, சஜித், ரணில் உட்பட. ஒன்பது அல்ல, இன்னும் 90 இலங்கை ஜனாதிபதிகள் வந்தாலும் இதுவே தான் நிலைமை. சர்வதேசமும் எங்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை. எங்களை விட பாலஸ்தீனர்கள் இன்று பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கேட்போர் எவருமில்லை. இத்தனைக்கும் எங்களின் குரலை விட அவர்களின் குரல் கேட்க உலகில் நாடுகளும், மனிதர்களும் இருக்கின்றனர். ரணில் வெல்லாதது இல்லை, இவ்வளவு குறைவாக வாக்குகள் ஏன் எடுத்தார் என்பதே ஆச்சரியம். மகிந்த குடும்பத்தை காப்பாற்றினார் என்பது மட்டும் அதற்கான காரணம் இல்லை. இதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலிலும் அவருடைய கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ரணிலே அந்தப் பாராளுமன்ற தேர்தலில் தோற்றார். அதுவும் ஒரு படுதோல்வி. வெளியில் என்னதான் வெற்றிகரமான அரசியல்வாதி போன்ற தோற்றம் இவருக்கு இருந்தாலும், இவர் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி. இவர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பெரும்பானமை மக்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போல என்றும் நினைத்திருந்தேன். ஆனால் நாட்டு மக்கள் வேறு ஏதோ நினைத்து இருக்கின்றார்கள். இனிமேல் என்ன செய்ய.............. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..............🤣.   
    • இந்த வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில்தானா தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா எனக் கணிப்பீர்கள்?   
    • தமிழர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்றொரு மாயையும் தேவையும்   சிங்கள இனவாதிகள் வெளியே காட்ட எழுதப்படாத சட்டமாக வைத்திருப்பார்கள்.
    • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுர இனிமேல்தான் முக்கிய பிரச்சினைகளை கையாளப்போகின்றார், அது இலங்கை பிரச்சினை அல்ல உலக வல்லரசுகளின் போட்டியினை சாதுரியமாக சமாளித்தல். மற்ற நாடுகளில் உள்ள  வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்ற ஆட்சி முறைமையில் இலங்கையில் இல்லை (இங்கிலாந்து காலனித்துவ நாடுகளில் உள்ளதனை போன்ற), இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையாக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் அனுர கட்சி பெரும்பான்மையினை நிரூபிப்பது  அவசியமாகிறது. தற்போது இந்த இங்கிலாந்து பாணியிலான பாரளுமன்ற ஆட்சி முறைமை கொண்ட பல நாடுகளில் பல உதிரிக்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் அதனை பயன்படுத்தி உலக வல்லரசுகள் அந்தந்த நாடுகளில் தலையாட்டும் பொம்மை அரசுகளை உருவாக்கி விட்டுள்ளது, அவர்கள் தம் விருப்பப்படி நடக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்க ஆட்சி கவிழும் நிலை உருவாகும், இந்த நிலை உண்மையில் பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத உலக முடிவுகளில் எடுப்பதற்கு இந்த உதிரி கட்சிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன இந்த போக்கு உலக வல்லரசுக்களுக்கு வாய்ப்பாக உள்ளது. இலங்கை ஜனாதிபதி முறைமை அவ்வாறில்லை பாராளுமன்றத்தினை விட அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் எப்போதும் கத்தி ஜனாதிபதிக்கு மேலேயே தொங்கிக்கொண்டிருக்கும், அதனை சமாளிக்க முடியாதவர்கள் கோத்தபாய போல ஓட வேண்டியிருக்கும். ஜுலி சங்கிற்கு இப்போதுதான் வேலையே தொடங்கியுள்ளது. பலரை சந்திக்கவேண்டும் முதலாவது ஜனாதிபதி அடுத்து இராணுவத்தளபதி என பல பேரை சந்திக்கவேண்டியுள்ளது. இதற்குள் இந்தியாவையும் சமாளிக்க வேண்டும், பார்ப்போம் அனுர எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கிறார் என (புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்).
    • உலகத்திலேயே தன் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும்/ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இனவாத அரசியல் தலைவர்களை  குத்துவிளக்குடன் பூரண கும்பம் வைத்து வரவேற்று.....மாலையணிவித்து பாவையர் ஆலார்த்தி எடுத்து பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து வருக வருக என வீட்டில் விருந்துபசாரம் கொடுத்து....விருந்துபசாரம் பெற்றவர்களாலேயே அழிந்து போகும் இனம் எதுவென்றால்....அது தமிழினமாகத்தானிருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.