Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானியா (UK) வழங்கியுள்ள ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

பிரித்தானியா வழங்கியுள்ள ஆயுதங்கள் 

இதற்கான காரணம், பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வழங்கியுள்ள ஆயுதங்களைக் காட்டிலும் , பிரித்தானியா சிறிய அளவிலான ஆயுதங்களை தான் கொடுத்துள்ளது.

உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா | British Positions Will Be Attacked Russia Threate

எனினும் பிரித்தானியா கொடுத்துள்ள ஆயுதங்கள் என்பது, பல மடங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை என்பது ஒரு புறம் இருக்க, அவை மிக மிக நவீன ரக ஆயுதங்கள் ஆகும். இதனால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைன் படைகள் பிரித்தானியா வழங்கிய சலெஞ்சர் 2 கவச வாகனங்களைப் பயன்படுத்தியே ரஷ்யாவுக்குள் ஊடுருவி நிலைகொண்டுள்ளதுடன், பிரித்தானியா மேலும் பல நவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது.

ரஷ்யாவில் கைதான பிரித்தானிய நபர்

ரஷ்யாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு பிரித்தானிய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அந்நாட்டில் உளவு பார்த்தார் என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா | British Positions Will Be Attacked Russia Threate

பிரித்தானிய உளவுத் துறையைச் சேர்ந்த குறித்த நபரை தாம் கைதுசெய்துள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளதுடன் கடும் ஆத்திரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமை மோசம் ஆனால் ரஷ்யா, உக்ரைன் மற்றும் வேறு நாடுகளில் உள்ள பிரித்தானிய தளங்களை ஏவுகணை கொண்டு தாக்கக் கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அவ்வாறு நடந்தால் பிரித்தானியா இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய சூழ் நிலை உருவாகுவதுடன் இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/british-positions-will-be-attacked-russia-threate-1724387307

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டுத் தான் பார்க்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தொட்டுத் தான் பார்க்கலாமே?

IBC Tamil மற்றும் விசுகர் தவிர்ந்த வேறெங்கும் இப்படிசெய்தியை காணக் கிடைக்கவில்லை. 

@விசுகு  உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் எல்லவற்றையும் கவிட்டுக் கொட்டினீர்கள் 😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

IBC Tamil மற்றும் விசுகர் தவிர்ந்த வேறெங்கும் இப்படிசெய்தியை காணக் கிடைக்கவில்லை. 

@விசுகு  உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் எல்லவற்றையும் கவிட்டுக் கொட்டினீர்கள் 😏

அவசரம்🤣

குலைக்கிற நாய் கடிக்காது அதற்கு குட்டி போடும் நாயும் கடிக்காது என்பது அனுபவ பாடம் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

குலைக்கிற நாய் கடிக்காது அதற்கு குட்டி போடும் நாயும் கடிக்காது என்பது அனுபவ பாடம் 

புரியவில்லையே,........🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

புரியவில்லையே,........🤣

கொஞ்சம் பொறுங்க 

எரியட்டும்...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கொஞ்சம் பொறுங்க 

எரியட்டும்...😁

🤣

பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது என்பது முதுமொழி. 

இது 🥷பனங்காட்டுப் புலியாக்கும். ....🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

🤣

பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது என்பது முதுமொழி. 

இது 🥷பனங்காட்டுப் புலியாக்கும். ....🤣

நீங்கள் இப்படித் தான் தொப்பியை தலையில் போட்டு கொண்டு அலைகிறீர்கள்

பாவம் யார் பெத்த புள்ளையோ? 

😷

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா

 ரஷ்யா ஒரு செத்த கிளி!  அதை சீவிச் சிங்காரித்து வைத்திருக்கு. சும்மா வாய்ச் சவடல் விடலாமே தவிர ஒன்றும் வேலைக்ககாது.

மோடிஜி உக்ரேனுக்கு மேற்கொண்டுள்ள பயணம் சொல்லும் பல செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பனிப்போர் என்று சொன்னார்கள், இன்று மூன்றாம் உலகப் போர், நாளை அணு ஆயுதப் போர் என்பார்கள்............... அப்படியே ரிப்பீட்.........

ஆதவன் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும், ஐபிசி தமிழ் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும் ஒரே ஆளா................ (இங்கே பிரகாஷ்ராஜ் வரவேண்டும்........😀)

'செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு..........' என்பது என்றும் சாகாத ஒரு சொலவடை.........🤣

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSuGrI4vCTAULed0cARU9v

  • கருத்துக்கள உறவுகள்

கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேன் தொடர்ந்தும்  தாக்குதல் நடத்துகிறது (ஆனால் ஆச்சரிய தாக்குதல் பலன் முடிவடைந்தமையால் மிகவும் மந்தமான முன்னேற்றம்) அதன் தொடர் முன்னேற்றத்தினை தடுக்க இரஸ்சியா பாதுகாப்பு அகழிகளை உருவாக்கு ஒப்பீட்டளவில் குறைந்த படையினரை வைத்து நிலமையினை சமாளிக்கிறது, மேலும் நகர முடியாமையால் உக்கிரேனையும் மேற்கையும் தூண்டி இன்னொரு களமுனையினை  திறந்து அதிலும் மேலும் துருப்புகலையும் ஆயுத தளபாடங்களயும் ஈடுபடுத்தி அதனை சிதறடிப்பதற்காக இரஸ்சியா இப்படி பொறியில் மாட்டி விடுகிறது போல இருக்கிறது, இவர்களும் புரியாமல் இன்னொரு களத்தை திறந்து இன்னுமொரு ஆப்பினை இழுத்துவிட்டு முழிக்கப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, vasee said:

அதாவது ரசியா வெற்றி நோக்கி சரியான காய் நகர்த்தல்களை செய்கிறது???

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

அதாவது ரசியா வெற்றி நோக்கி சரியான காய் நகர்த்தல்களை செய்கிறது???

போரில் ஈடுபடுவர்களுக்கு போர் தொடர்பான பார்வைக்கும் அந்த போரினை வெளியிலிருந்து பார்ப்பவர்களாகிய நாங்கள் ஒரு விளையாட்டின் வெற்றி தோல்வி போல போரினை வரையறுத்து போரினை பார்க்கும் பார்வைக்குமிடையான வித்தியாசம் அது.

இந்த போரே ஒரு தேவையற்ற போர், இதற்கான விலையினை எல்லோரும் ஏற்கனவே கொடுக்க தொடங்கியாகிவிட்டது, இங்கு வெற்றி தோல்வி இருப்பதில்லை முடிவுதான் உண்டு; இதிலீடுபடுவர்களுக்கு என்ன நன்மை?
இந்த கேர்க்ஸ் போர் கூட ஒரு அமெரிக்க தேர்தலுக்கான போராக நான் கருதுகிறேன் (எனது கருத்து).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.