Jump to content

தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை புலிகள் ஆதரிக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் இந்திய இராணுவத்துடன் புலிகள் மோதுவதற்கு காரணம் அவர்களை அவ்வாறு இந்தியா நிர்ப்பந்தித்தது (அதன் தலைவரை கொல்ல முயற்சித்தல், பிற ஆயுத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி நிராயுதபாணிகளான (ஆயுத ஒப்படைப்பின் பின்னர்) புலிகளை கொலை செய்தமையால்).

புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு தமிழ்கட்சியும் ஆதரிக்கவில்லை.சம்பந்தர் தொடவே மாட்டேன் என்றார்.

வரதராஜப்பெருமாள் ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக இருந்து அவரும் இது சரிவராது என்று ஓடிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வாதவூரான்

மிஸ்ரர் ஐலான்ட்,  இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு ப

Sasi_varnam

1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தி

vasee

விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறின

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

ஒரு பேச்சுக்கு 13 இற்கு அப்பால் சென்று மேலும் பல அதிகாரங்களையும் உரிமைகளையும் இலங்கை அரசு கொடுக்க முன்வந்தாலும், முன்னுக்கு நின்று மறிச்சு அதை கொடுக்க இந்தியா விடாது. பா.ஜ.க விற்கும் காங்கிரசுக்கும் இதில் வித்தியாசம் இல்லை. 

அப்படியானால் எம்மிடம் எதுவும் இல்லை. எல்லாம் அவன் செயல்????

அப்புறம் செத்த மாட்டை தமிழ் தலைவர்கள் கொன்றார்கள் புலிகள் தான் கொன்றார்கள் என்ற புலம்பல் இங்கே தொடர்வதேன்???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு தமிழ்கட்சியும் ஆதரிக்கவில்லை.சம்பந்தர் தொடவே மாட்டேன் என்றார்.

வரதராஜப்பெருமாள் ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக இருந்து அவரும் இது சரிவராது என்று ஓடிவிட்டார்.

விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறினார்கள், அதற்கு அவர் பால் எப்படி இருக்கும் என வினவினார் ( இது ஒரு கதைக்காக மட்டும்), அதற்கு உறவினர்கள் கொக்கு போல் வெள்ளையாக இருக்கும் என்றார்கள், அதற்கு அவர் கொக்கு எப்படி இருக்கும் என்றார், இவர்கள் தமது கையினை வளைத்து கொக்கு போல் செய்து காட்டினார்கள் அதனை தடவி பார்த்துவிட்டு இப்படிப்பட்ட முரட்டுப்பாலை குடித்தால்குழந்தை  எப்படி இறக்காது என கேட்டார்.

இலங்கையர்களின் பிரச்சினை இனவாதம், மதவாதம், சாதியம் என பல பிடிவாதங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கு மேல் குற்றம் சாட்டி தமது தவறுகளை தொடர்தல், தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது.

இதனாலேயே போர் முடிந்த பின்னரும் மொத்த நாடே வங்குரோத்தானது, இது ஒரு தொடர்கதை ஆக தொடரும், இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றவர்கள் தற்போது அதே சுதந்திரத்தினை இந்தியாவிடம் அடகு வைத்துள்ளார்கள். 

இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.

இவர்களுக்கு இது கடைசி வரை புரியப்போவதில்லை, இலங்கையில் உள்ள பிரச்சினைக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை புரியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்?

இலங்கை, வல்லரசுகளின் போட்டிக்கு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட முட்டாள் ஆடு.

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.