Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Simrith   / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 07:21 - 0      - 38facebook sharing button

whatsapp sharing button

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கிறது, குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக SLPP நாட்டை அல்லது கட்சியை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்று ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே கூறினார். 

Tamilmirror Online || வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தோல்வி உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவோ முழுக்கவே நனைந்து விட்டார்கள், இனி எதற்கு முக்காடு என்று துணிந்து விட்டார்கள் நாமல் மற்றும் அவரின் தந்தையார். அம்பாந்தோட்டையிலாவது இவர்கள் முதலாவதாக வந்தால் பேசிய இந்தப் பேச்சு வீண் போகவில்லை என்று நினைக்கலாம். அங்கேயும் வராவிட்டால், அடுத்த தேர்தலுக்கு எதை வைத்து அரசியல் செய்யப் போகின்றார்களோ........... 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

தோல்வி உறுதி.

ஆமாம் உறுதி தான்   மற்றுக்கருத்துகள் இல்லை  ஆனால் நாமல் 

சொன்னது கூட  யார் ஆட்சிக்கு வந்தாலும் உறுதி 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

large.IMG_6945.jpeg.5eecdfdf60a5eb427c3b

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

எப்பவோ முழுக்கவே நனைந்து விட்டார்கள், இனி எதற்கு முக்காடு என்று துணிந்து விட்டார்கள் நாமல் மற்றும் அவரின் தந்தையார். அம்பாந்தோட்டையிலாவது இவர்கள் முதலாவதாக வந்தால் பேசிய இந்தப் பேச்சு வீண் போகவில்லை என்று நினைக்கலாம். அங்கேயும் வராவிட்டால், அடுத்த தேர்தலுக்கு எதை வைத்து அரசியல் செய்யப் போகின்றார்களோ........... 

சஜித்தும் அங்கு தான் கடந்த தேர்தலில் வென்றிருந்தார்.

5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6945.jpeg.5eecdfdf60a5eb427c3b

பண்டாரநாயக்க, ஜே ஆர் சொன்னதை விட  எதுவும் புதிதாக நாமலோ மகிந்தவோ சொல்லவில்லை. இனவாதம் சிங்கள அரசியல்வாதிகளின் தாரக மந்திரம். இனவாதம் இல்லாவிட்டால் ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் ஆட்சி அமைக்க முடியாது.
தமிழர்களின் தலையாய கடமை சிங்கள ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து வாக்களிப்பதே.🙂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

எப்பவோ முழுக்கவே நனைந்து விட்டார்கள், இனி எதற்கு முக்காடு என்று துணிந்து விட்டார்கள் நாமல் மற்றும் அவரின் தந்தையார். அம்பாந்தோட்டையிலாவது இவர்கள் முதலாவதாக வந்தால் பேசிய இந்தப் பேச்சு வீண் போகவில்லை என்று நினைக்கலாம். அங்கேயும் வராவிட்டால், அடுத்த தேர்தலுக்கு எதை வைத்து அரசியல் செய்யப் போகின்றார்களோ........... 

ரசோதரன்.... நீங்கள் சொல்லி வாய்மூடவில்லை ,

நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கல்லெறி விழுந்திருக்கு😂 🤣

மஹிந்தவின் கோட்டையில் நாமல் கூட்டத்தில் கல்லெறி; அச்சத்தில் ராஜபக்க்ஷ குடும்பம் | Mahinda S Fort Stoned At Namal Crowd Hambantota

மஹிந்தவின் கோட்டையில் நாமல் கூட்டத்தில் கல்லெறி; அச்சத்தில் ராஜபக்க்ஷ குடும்பம்

இலங்கை  ஜனாதிபதி தேர்தல்  வரும்  21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,  ஜனாதிபதி வேட்பாளர்  நாமல் ராஜபக்க்ஷ கலந்துள்ளவிருந்த கூட்டத்தில்  கல்லஎறியப்பட்ட  சம்பவம்  பரப்ரப்பை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தாக்குதலால் அச்சமடைதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கூட்டத்தல் ஜனாதிபதி வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்த போதிலும், சம்பவத்தின் பின்னர் அவர்கள் பங்கேற்கவில்லை.

https://jvpnews.com/article/mahinda-s-fort-stoned-at-namal-crowd-hambantota-1726128961?itm_source=article

#################   #################    #############

image_870x_66e2e5428afe6.jpg

நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கூட்டத்தில் கல்லெறி சம்பவத்தால் பரபரப்பு!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,  ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில்  கல் எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தாக்குதலால் அச்சமடைதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கூட்டத்தால் ஜனாதிபதி வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்த போதிலும், சம்பவத்தின் பின்னர் அவர்கள் பங்கேற்கவில்லை.

அதேவேளை கூட்டத்தில் இடம்பெற்ற , கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த குழந்தை ஒன்று  ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமலின் தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலைக்கு சென்று குழந்தையின் நலம் விசாரித்துள்ளார்.

அதேவேளை, முன்னொரு காலத்தில் மகிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையில், தற்போது ராஜபக்க்ஷ குடும்ப கூட்டத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம்  ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://tamilvisions.com/Namal-Rajapaksas-home-town-rocked-by-stone-pelting-incident

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கல்லெறி விழுந்திருக்கு😂 

இந்த கல்லெறி   கண்டிப்பாக  தமிழ் மக்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை   என்று யாழ்ப்பாணத்தில். கூறியதில் கோபமடைந்த சிங்கள மக்களால் செய்யப்பட்டுள்ளது அதாவது கல்லேறியபபட்டுள்ளது  எனவே 

நாமல்   காணி பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்று கூறுவாரா. ?? 😂🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

.
தமிழர்களின் தலையாய கடமை சிங்கள ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து வாக்களிப்பதே.🙂

தமிழர்கள் சிங்கள வேட்ப்பாளருக்கு வாக்களிப்பது அவர்கள் உரிமைகளை தருவார்கள் என்றல்ல.நாட்டில் ஏற்படும் ஆட்ச்சி மாற்றங்ள் தமிழ மக்களையும் பாதிக்கும்.அங்கு வாழ்பவகள் அதில் கவனம் செலுத்துவதில் தவறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

நாமல்   காணி பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்று கூறுவாரா. ?? 😂🤣🤪

  after-getting-scolding-from-our-team-lea  மாட்டு சாணியும் மனுச ஆயியும் சேந்து போட்டு ஒரு கலவையை இருக்கு #வடிவேலு  காமெடி HD Video - YouTube

அப்படி சொன்னால் நாமலுக்கு... மாட்டு சாணியும், மனுச சாணியும்  கலந்து அடிப்பார்கள்😂  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

தமிழர்கள் சிங்கள வேட்ப்பாளருக்கு வாக்களிப்பது அவர்கள் உரிமைகளை தருவார்கள் என்றல்ல.நாட்டில் ஏற்படும் ஆட்ச்சி மாற்றங்ள் தமிழ மக்களையும் பாதிக்கும்.அங்கு வாழ்பவகள் அதில் கவனம் செலுத்துவதில் தவறு இல்லை.

ஒரு பேச்சுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கா விட்டாலும் ஒரே விளைவு தான் கிடைக்கும். சிங்கள மக்களில் குறிப்பிட தக்க வீதத்தினர் வாக்களிப்பதில்லை. அவர்களுக்கு விளைவு தெரியும். ஆட்சியாளர்கள் எது செய்ய போகிறார்கள் என்றும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சஜித்தும் அங்கு தான் கடந்த தேர்தலில் வென்றிருந்தார்.

இல்லை நுணாவிலான், கடந்த தேர்தலில் சஜித் அங்கு வெல்லவில்லை. அம்பாந்தோட்டையில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோதபாய ராஜபக்ச 278,804 (66.17%) வாக்குகளையும், சஜித் பிரேமதாச 108,906 (25.85%) வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

சஜித் ஆகக் குறைந்த வாக்கு வீதத்தை அம்பாந்தோட்டையிலேயே பெற்றிருந்தார்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ரசோதரன்.... நீங்கள் சொல்லி வாய்மூடவில்லை ,

நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கல்லெறி விழுந்திருக்கு😂 🤣

🤣...........

அவர்களின் பாணிலும், பருப்பிலும் கைவைத்தால் சிங்கள மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் போல, சிறி அண்ணா..... இவர்களின் அதியுயர் ஆயுதமான இனவாதம், மதவாதம் கூட இரண்டாம் பட்சம் ஆகி விட்டது இவர்களின் குடும்பம் சிங்கள மக்களையும் தெருத் தெருவாக அலைய விட்ட அந்த நிகழ்வின் பின்.

பொதுவாகவே எல்லா மக்களுக்கும் மறதி அதிகம். அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு கல்லெறிய மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்............🤣.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.