Jump to content

அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

கிருபன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, theeya said:

15 வருடமாய் யாழ் காலத்தில் வேட்பாளராய் இருக்கிற என்னைத் தங்கச்சியோ தம்பியோ எண்டு தெரியேல்லை, இதுக்குள்ள உலக நடப்பு வேற 🤪

ஒரு வீட்டில பொம்புளைப்பிள்ளையள் இல்லாட்டி  பொடியனுக்கு சாறிகட்டி பொட்டு வைச்சு வடிவு பாக்கிறதில்லையோ. அது மாதிரி இதையும் நினையுங்கோ 😄
கோவிக்காதையுங்கோ :cool:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பின்னால் இருப்பது ஈரானா, உக்ரேனா, ரஷ்யாவா அல்லது ஜனநாயகக் கட்சியா என்று பல கோணங்களில் இதை ஆராயத்தான் போகின்றார்கள், ஆனால் இங்கு ஒருவர் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு இப்படியான எந்தப் பின்னணியும் தேவையில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தாங்கள் ஒரு தலைவர் என்ற எண்ணம் இருக்கின்றது. பிறப்பு, பாடசாலை, இங்குள்ள புத்தகங்கள், Independence Day வகை சினிமாக்கள் என்று பல காரணிகளால் அந்த எண்ணம் நன்றாக வளர்க்கப்படுகின்றது. அவர்களாகவே ஒரு கருதுகோளை முன்வைத்து, அவர்களாகவே ஒரு தீர்ப்பை வழங்கி, அதை அவர்களாகவே நடைமுறைப்படுத்துவது பல சூட்டுச் சம்பவங்களின் பின்னணியாக இங்கு உள்ளது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

இந்த பிரச்சினை ஒரு தொற்று வியாதி😁, அது அவர்கள் வாழும் நாட்டிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளார்கள் (Rule based world order), ஒரு சர்வதேச சட்டம் என்று ஒன்று இருக்கு அதனை மதித்தால்தானே, மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி😁 (தனக்கு தேவைப்படும் போது மட்டும் தொட்டுக்கொள்வதற்கு சர்வதேச சட்டம் என்ன ஊறுகாயா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vasee said:

இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இரஸ்சியா இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்! ட்ரம்ப் அனுமானிக்க முடியாதவர், அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

அமெரிக்கா உலகம் முழுக்க பொலிஸ் வேலை பார்க்க.......
அமெரிக்க மண்ணிலேயே மாற்றான் புகுந்து கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவான். 😎
சீனாக்காரன் பலூன் விட்டு சேக்கஸ் காட்டின மாதிரி.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

இந்த பிரச்சினை ஒரு தொற்று வியாதி😁, அது அவர்கள் வாழும் நாட்டிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளார்கள் (Rule based world order), ஒரு சர்வதேச சட்டம் என்று ஒன்று இருக்கு அதனை மதித்தால்தானே, மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி😁 (தனக்கு தேவைப்படும் போது மட்டும் தொட்டுக்கொள்வதற்கு சர்வதேச சட்டம் என்ன ஊறுகாயா?)

தேசத்திலிருந்து சர்வதேசத்திற்கு...........🤣. மக்கள் வழியே மன்னனின் வழி.......

இன்றைய கடுமையான பொருள்முதல்வாத உலகில் பிரமாண்டமான ஒரு வல்லரசாக ஒரு ஒற்றைத் தேசம் இருந்தால், அது எந்த நாடாக இருந்தாலும், நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். சீனாவால் சில இடங்களில், சில துறைகளில் மட்டுமே சமனாக போட்டியிட்டு நிகராக நிற்கமுடியும். மற்றைய இடங்களில் நானே ராஜா, நானே மந்திரி என்பது தான் தற்போதைய நிலை........ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கிருபன் பகிடிக்குச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்😎.

சிவப்புக் கட்சியின் பழமை வாதக் கொள்கைகளுக்காக அந்தக் கட்சியை ஆதரிப்பது வேறு (அப்படியொரு "பழமை வாத சிவப்புக் கட்சி" இப்போது இல்லை என்பது வேறு கதை!). 

"ட்ரம்பை 2020 இற்குப் பின்னர் ஆதரித்து வாக்குப் போடுவது" என்பது சீரியசான பிரச்சினையிருக்கும் ஆட்களால் தான் முடியுமான காரியம். அதுவும், குடியேறிகளாக வந்தவர்கள் இப்போது ட்ரம்பிற்கு வாக்களித்து ஆதரிப்பது, குந்தியிருக்கிற மரத்தின் கிளையை வெட்டுவது போன்ற செயல்.

ஒஹையோவில் சட்ட பூர்வ குடியேறிகளாக வசிக்கும் ஹெயிற்றி மக்களைப் பற்றிய ட்ரம்ப் கூட்டத்தின் வெறுப்புப் பேச்சின் பின்னரும், ஏனைய நாட்டுக் குடியேறிகள் சிலர் ட்ரம்பை விரும்புகிறார்கள் - மிகவும் ஆச்சரியமான விடயம்!

 கிருபன் நகைசுவையாத்தான் எழுதினார் என்று தெரியும். ஆம் பழைய சிவப்பு கட்சி இப்போது செத்துவிட்டது. இவருக்கு முன் அந்த கட்சியில் சிறந்தவர்களும் இருந்தார்கள், சட்டத்தை மதிப்பவர்களாகவும், எதிர்குரல் கொடுப்பவர்கள் என்று ஒரு ஒழுங்கு முறையுடன் இருந்தது. தற்பொழுது இவருக்கு எதிராக அந்த கட்சியில் இருந்து ஒருவருமே பேசமுடியாது. இந்த நாட்டில் இப்பிடியும் நடக்குமா என்ற அளவுக்கு, கிட்டத்தட்ட கோத்தபயா, மோடி கட்சி நடத்துவதுபோல் கொண்டுவந்துவிட்டார். இவர் திரும்ப பதவிக்கு வந்தால் அநேகமாக பாலஸ்தீனத்துக்கு அடி இன்னும் மோசமாக இருக்கும். கடுமையான இனவாதி, இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள், புள்ளி விபரங்களுடன் வார்த்தைகளை அளந்துதான் பேசுவார்கள், இப்படி நாயை, பூனையை சாப்பிடுகிறார்கள் என்று பொதுவெளியில் பேசி கேட்டதே இல்லை, வெட்கமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

 .இவர் திரும்ப பதவிக்கு வந்தால் அநேகமாக பாலஸ்தீனத்துக்கு அடி இன்னும் மோசமாக இருக்கும். கடுமையான இனவாதி, இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள், புள்ளி விபரங்களுடன் வார்த்தைகளை அளந்துதான் பேசுவார்கள், இப்படி நாயை, பூனையை சாப்பிடுகிறார்கள் என்று பொதுவெளியில் பேசி கேட்டதே இல்லை, வெட்கமாக உள்ளது

பாலஸ்தீனத்தின் முக்காவாசி இப்போதே சாம்பலாகி விட்டது. இது பைடன் ஆட்சியில் இருக்கும் நேரத்தில்....அவரால் ஏன் காசா போரை நிறுத்த முடியவில்லை?

உங்கள் 43வது ஜனாதிபதி எழுந்தமானத்தில்  ஏனைய நாடுகள் மீது போர் தொடுத்து மக்களை சிதறிடித்து உலகெங்கும் அகதிகளாக அலைய விட்ட பெருமை அண்ணலையே சாரும்.

கறுப்பின ஒபாமா சொல்லி வேலையில்லை. உலகில் அதிக அகதிகள் உருவாக காரணமானவர்.

உங்களை போன்றவர்களுக்கு அமெரிக்கா சொர்க்கம். ஏனைய நாடுகளுக்கு ஐரோப்பா உட்பட.....அமெரிக்கா ந----.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இரஸ்சியா இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்! ட்ரம்ப் அனுமானிக்க முடியாதவர், அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

தங்கள் வாயில்  வசம்பை அள்ளித் தேய்க்க,.......🤣
Suspected Gunman Said He Was Willing to Fight and Die in Ukraine

Ryan Wesley Routh, 58, told The New York Times in 2023 that he had traveled to Ukraine and wanted to recruit Afghan soldiers to fight there.

Ryan Wesley Routh, the 58-year-old man who was arrested on Sunday in connection with what the F.B.I. described as an attempted assassination on former President Donald J. Trump, had expressed the desire to fight and die in Ukraine.

Mr. Routh’s posts on the social media site X revealed a penchant for violent rhetoric in the weeks after Russia’s invasion of Ukraine in 2022. “I AM WILLING TO FLY TO KRAKOW AND GO TO THE BORDER OF UKRAINE TO VOLUNTEER AND FIGHT AND DIE,” he wrote.

On the messaging application Signal, Mr. Routh wrote that “Civilians must change this war and prevent future wars” as part of his profile bio. On WhatsApp, his bio read, “Each one of us must do our part daily in the smallest steps help support human rights, freedom and democracy; we each must help the chinese.”

Mr. Routh, a former roofing contractor from Greensboro, N.C., was interviewed by The New York Times in 2023 for an article about Americans volunteering to aid the war effort in Ukraine. Mr. Routh, who had no military experience, said he had traveled to the country after Russia’s invasion and wanted to recruit Afghan soldiers to fight there.

https://www.nytimes.com/2024/09/15/us/politics/trump-shooting-suspect-routh.html

1 hour ago, ரசோதரன் said:

இதற்கு பின்னால் இருப்பது ஈரானா, உக்ரேனா, ரஷ்யாவா அல்லது ஜனநாயகக் கட்சியா என்று பல கோணங்களில் இதை ஆராயத்தான் போகின்றார்கள், ஆனால் இங்கு ஒருவர் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு இப்படியான எந்தப் பின்னணியும் தேவையில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தாங்கள் ஒரு தலைவர் என்ற எண்ணம் இருக்கின்றது. பிறப்பு, பாடசாலை, இங்குள்ள புத்தகங்கள், Independence Day வகை சினிமாக்கள் என்று பல காரணிகளால் அந்த எண்ணம் நன்றாக வளர்க்கப்படுகின்றது. அவர்களாகவே ஒரு கருதுகோளை முன்வைத்து, அவர்களாகவே ஒரு தீர்ப்பை வழங்கி, அதை அவர்களாகவே நடைமுறைப்படுத்துவது பல சூட்டுச் சம்பவங்களின் பின்னணியாக இங்கு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.

சிஸ்ரர் கமலா! பிரசிண்டாய் வந்தால் அமெரிக்காவை எருமை மாடு கூட மதிக்காது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

Each one of us must do our part daily in the smallest steps help support human rights, freedom and democracy; we each must help the chinese.

உக்ரேனுக்காக ரஷ்யாவை எதிர்த்து போரிடுவது, சீன மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவது, உலக ஜனநாயகத்திற்காக போராடுவது, மனித உரிமைகளுக்காக போராடுவது, உலக மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவது.................. ஒரு தனிமனிதன் இவ்வளவையும் செய்ய நினைத்திருக்கின்றார், செயலிலும் இறங்கியிருக்கின்றார்............

நாங்கள் என்றால் இதையெல்லாம் சேர்த்து ஒரு கவிதை எழுதிவிட்டு, வழமை போல எங்களின் வேலையைப் பார்த்திருப்போம்........🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

நாங்கள் எல்லாம் யார்? 

சொந்த ஊரில்  குண்டு விழும்போது  ஓடுவந்துவிட்டு, அங்குள்ள மக்களை அடியடா வெட்டடா என்று உசுப்பேத்துற பேர்வழிகளெல்லோ,...🤣

Edited by Kapithan
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

தங்கள் வாயில்  வசம்பை அள்ளித் தேய்க்க,.......🤣

சும்மா ஒரு வாதத்திற்காக கூறியது, இரஸ்சியர்கள் ட்ரம்பையோ அல்லது கமலாவையோ கண்டு கொள்வதாக தெரியவில்லை.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

சும்மா ஒரு வாதத்திற்காக கூறியது, இரஸ்சியர்கள் ட்ரம்பையோ அல்லது கமலாவையோ கண்டு கொள்வதாக தெரியவில்லை.😁

இப்போது பிரச்சனை மூன்றாம் உலக மகா யுத்தத்தை உடனே தொடங்குவதா அல்லது கொஞ்சம் பின்னே விட்டுத் தொடங்குவதா  என்பதுதான்,..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இன்றைய கடுமையான பொருள்முதல்வாத உலகில் பிரமாண்டமான ஒரு வல்லரசாக ஒரு ஒற்றைத் தேசம் இருந்தால், அது எந்த நாடாக இருந்தாலும், நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். சீனாவால் சில இடங்களில், சில துறைகளில் மட்டுமே சமனாக போட்டியிட்டு நிகராக நிற்கமுடியும். மற்றைய இடங்களில் நானே ராஜா, நானே மந்திரி என்பது தான் தற்போதைய நிலை........ 

என்ன சண்டியராக இருந்தாலும் வீட்டில வேறமாதிரித்தான் இருக்கவேண்டும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

எனக்கு ஒரேயொரு கவலை, வாழ்க்கையில் எனக்கு முதன் முதலில் கிடைத்த ஓட்டளிக்கும் உரிமையை பாவித்து 2016இல் இந்த நபருக்கு வாக்களித்து விட்டேன். இதற்கு முதல் இலங்கையில் கூட வாக்களித்ததில்லை.

நானும் 2016 இல் இருந்து அமெரிக்க தேர்த்தலில் ஜனநாயகக் கடசிக்கு வாக்களித்து வருகின்றேன். தாயகத்தில் ஒருமுறைகூட வாக்களிக்கவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இப்போது பிரச்சனை மூன்றாம் உலக மகா யுத்தத்தை உடனே தொடங்குவதா அல்லது கொஞ்சம் பின்னே விட்டுத் தொடங்குவதா  என்பதுதான்,..🤣

நேட்டோ நாடுகளில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகள் முதல் 10 அதிக இராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இல்லை என நினைக்கிறேன், நேட்டோவின் ஆயுதங்கள் தரமான ஆயுதங்கள் எனும் மாயை இரஸ்சிய உக்கிரேன் மோதலினால் உடைந்து போய்விட்டது, தற்போது நேட்டோவின் பலம் தொடர்பான நாடி பிடித்து பார்க்கும் படலமாகவே இந்த நீண்ட தூர ஏவுகணைகளை உக்கிரேனுக்கு வழங்குவது எனும் முடிவாக தெரிகிறது, அதே வேளை உண்மையில் நேட்டோவும் பெரிய பலமான  நிலையில் தற்போது இல்லை, அடிப்படையில் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் இரஸ்சிய உக்கிரேன் போரில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை.

உக்கிரேன் உளபிரிவுத்தளபதி புடனோவ் அண்மையில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார், இரஸ்சியா காற்றில் மிதந்து செல்லும் குண்டுகளை நவீன மயப்படுத்தி (மிக துல்லியமாக நீண்ட தூரம் பறந்து சென்று தாக்கவல்ல) அதன் உற்பத்தியினை துரிதப்படுத்துகிறார்கள் என, அவை ஸ்கந்தர் ஏவுகணையினை விட அதிக சேதத்தினை உக்கிரேன் துருப்புக்களுக்கு ஏற்படுத்தும் என. மேற்கின் இந்த ஏவுகணைகளை விட மலிவான அதிக எண்ணிக்கையிலான நீண்டதூர மிதக்கும் குண்டுகள் போரில் ஏற்படுத்தும் பாதிப்பில் சிறு பகுதியினைத்தான் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் ஏற்படுத்தக்கூடும்.

ஆனால், பிரிக்ஸ் அதனோடு இணைந்த பொருளாதார முன்னெடுப்பு இரஸ்சியாவிற்கும் ஏனைய பிர்க்ஸ் நாடுகளுக்கு முக்கியமாக உள்ளது அதே வேளை  உக்கிரேனின் தோல்வியின் பின்னரான நிலையினை எவ்வாறு நேட்டோ எதிர் கொள்ளப்போகிறது? அவர்களது  ஈகோவினை  பாதிக்ககூடாது என்பதற்கான முயற்சியாக தற்போதய நடவடிக்கையினை பார்க்கிறேன்.

3 ஆம் உலகப்போரல்லாம் வராது ஆனால் இதுவும் ஒரு மேற்கின் கேர்ஸ்க் ஊடுருவல் போல ஒரு ஊடக போராக இருக்கும் இதனையும் இரஸ்சியா பயன்படுத்துகிறதோ என தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சிஸ்ரர் கமலா! பிரசிண்டாய் வந்தால் அமெரிக்காவை எருமை மாடு கூட மதிக்காது. :cool:

இப்பவும் எருமை மாடுகள் அமெரிக்காவையோ, வேறு லிபரல் ஜனநாயக நாடுகளையோ மதிப்பதில்லைத் தானே? கடாபி, சதாம் ஹுசைன், இடி அமீன், லீ பென், புரின்  போன்ற பேர்வழிகளைத் தானே புகழ்ந்து கொண்டாடுகின்றன😎?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நீர்வேலியான் said:

 கடுமையான இனவாதி, இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள், புள்ளி விபரங்களுடன் வார்த்தைகளை அளந்துதான் பேசுவார்கள், இப்படி நாயை, பூனையை சாப்பிடுகிறார்கள் என்று பொதுவெளியில் பேசி கேட்டதே இல்லை, வெட்கமாக உள்ளது

உளறுவாயன் ஜே.டி. வான்ஸைக் கட்டுப் படுத்தாமல் பேச அனுமதித்தால், நீலக்கட்சிக்குத் தான் இலாபம்! எனவே, இவர்களைப் பேச விட வேண்டும் என நினைக்கிறேன்😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

நேட்டோ நாடுகளில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகள் முதல் 10 அதிக இராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இல்லை என நினைக்கிறேன், நேட்டோவின் ஆயுதங்கள் தரமான ஆயுதங்கள் எனும் மாயை இரஸ்சிய உக்கிரேன் மோதலினால் உடைந்து போய்விட்டது, தற்போது நேட்டோவின் பலம் தொடர்பான நாடி பிடித்து பார்க்கும் படலமாகவே இந்த நீண்ட தூர ஏவுகணைகளை உக்கிரேனுக்கு வழங்குவது எனும் முடிவாக தெரிகிறது, அதே வேளை உண்மையில் நேட்டோவும் பெரிய பலமான  நிலையில் தற்போது இல்லை, அடிப்படையில் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் இரஸ்சிய உக்கிரேன் போரில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை.

வசீ அமெரிக்காவை, நேட்டோவை செத்த கிளி என்று சொல்ல

வாலி ரஷ்யாவை செத்த கிளி என்று சொல்ல

குமாரசாமி அண்ணை அமெரிக்காவை எருமைமாடும் மதிக்காது என்று சொல்ல

ஜஸ்டின் எருமைமாடுகள் எப்ப மதித்தது என்று கேட்க..........

சிங்கம், புலி, சிறுத்தை, யானை, கிளி, எருமைமாடு,.......... என்று எங்களின் படிமங்கள் நீண்டு கொண்டு போகின்றது..........🤣.

*   உலகில் அதிக இராணுவம் உள்ள ஒரு நாடாக இருந்தாலும், அதனால் ஏதும் பெரிய பிரயோசனம் சில நாடுகளுக்கு கிடையாது என்று நினைக்கின்றேன். முக்கியமாக இந்தியா. ஒரு கணக்கில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய இராணுவம் ஆகவும், இன்னொரு கணக்கில் முதலாவது பெரிய இராணுவம் ஆகவும் வருகின்றது. ஆனாலும் இந்திய இராணுவம் உள்நாட்டு பேரிடர் தவிர்த்து வேறு எதற்கும் தயாராகவும், தகுதியாகவும் இருப்பது போல தெரியவில்லை.

** இலங்கை ஒரு கணக்கில் உலகில் 18வது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளது.............🤨.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சகல வளங்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.

வளைகுடா எமிறேற் நாடுகள் பல, குடிமக்களுக்கு சகலவற்றையும் இலவசமாக வழங்கும் அளவுக்கு செல்வம் மிகுந்தவை. ஆனால், மக்கள் அங்கேயிருந்து சில சமயங்களில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வந்து தங்கி விடுகிறார்கள். (சவூதி அரச குடும்பத்தினரே தங்கள் இராட்சத போயிங் விமானத்தில் பறந்து வந்து இங்கே தான் உடுப்பு வாங்குகிறார்கள்!).

ரஷ்யாவிடம் எரி சக்தி வளம், பாரிய நிலப் பரப்பு எல்லாம் இருந்தாலும், ஒருவரும் ரஷ்யாவின் எல்லையில் போய் "அசைலம்" கேட்டு வரிசையில் நிற்பதில்லை (இங்கே ரஷ்யாவை தலையில் தூக்கி வைத்திருப்போர் கூட ரஷ்யாவை அண்டவில்லை😂!).

எனவே, ஒரு பலன்ஸ் இருக்க வேண்டும் எந்த நாட்டிலும். ஒரு விடயத்தில் பலத்தை வளர்த்து, இன்னொரு முக்கியமான விடயத்தில் பூச்சியத்தில் நின்றால் ஒரு நாடு சம நிலையில் இருக்கிறதெனச் சொல்ல முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

எனவே, ஒரு பலன்ஸ் இருக்க வேண்டும் எந்த நாட்டிலும். ஒரு விடயத்தில் பலத்தை வளர்த்து, இன்னொரு முக்கியமான விடயத்தில் பூச்சியத்தில் நின்றால் ஒரு நாடு சம நிலையில் இருக்கிறதெனச் சொல்ல முடியாது!

👍........

நீங்கள் சொன்ன காரணத்துடன், பல்வேறு மக்களையும் உள்வாங்கும் இயல்பு, தனிநபர் சுதந்திரம், பொறுப்புக்கூறல், வலிமையான/சுதந்திரமான நான்கு  தூண்கள், குறுகிய மற்றும் நீண்டகால திட்டமிடல் என்று வேறு சில இயல்புகளும் இருக்கவேண்டும் போல.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் கொலை முயற்சி - 12 மணித்தியாலங்களாக காத்திருந்த சந்தேகநபர்

Published By: RAJEEBAN   17 SEP, 2024 | 10:40 AM

image
 
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் அந்த பகுதியில் காத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என  சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

சந்தேகநபர் முன்னாள் ஜனாதிபதி மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை, எனினும் ஆயுதமேந்திய நபர்களினால்  இரண்டு தடவைகள் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை நெருங்கிச் செல்ல முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்பின் கோல்ப் மைதானத்திற்கான விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒன்றில்லை என அமெரிக்க இரகசிய சேவைபிரிவின் இயக்குநர் ரொனால்ட் ரோவே தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அங்கு வருவாரா  என்பது  சந்தேகநபருக்கு  தெரிந்திருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரகசிய சேவைபிரிவின் முகவர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதிக்கு மிக அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து துப்பாக்கியொன்று தென்படுவதை பார்த்த பின்னர் இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தை கேட்டோம், நான்கைந்து சத்தங்கள் என டிரம்ப் சமூக ஊடக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இரகசிய சேவை பிரிவினருக்கு அது துப்பாக்கி சன்னங்கள் என்பது தெரியும் அவர்கள் உடனடியாக என்னை பிடித்து இழுத்தனர், அவர்கள் அற்புதமான விதத்தில் செயற்பட்டனர் என டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இதேவேளை தனது பாதுகாப்பிற்கு மேலும் பலர் தேவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் வாகனத்தில் தப்பியோடினார், என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. தயார் நிலையில் துப்பாக்கி, டிஜிட்டல் கமரா, போன்றவற்றை விசாரணையாளர்கள் மீட்டுள்ளனர்.

40 நிமிடங்களின் பின்னர் ரையன் ரூத் என்ற 58 வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் வேறு காரிலிருந்து திருடிய இலக்க தகட்டினை தனது காருக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மூலம் சம்பவம் இடம்பெறுவதற்கு 12 மணித்தியாலங்களிற்கு முன்னரே அவர்  கோல்ப் திடலில் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்துள்ளது.

https://www.virakesari.lk/article/193904

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

உளறுவாயன் ஜே.டி. வான்ஸைக் கட்டுப் படுத்தாமல் பேச அனுமதித்தால், நீலக்கட்சிக்குத் தான் இலாபம்! எனவே, இவர்களைப் பேச விட வேண்டும் என நினைக்கிறேன்😂!

இங்கு நடப்பதை,  முன்முடிவுகளுடன் அணுகுபர்களுடன் பேசி புரிய வைக்க முடியாது. நான் கமலா அக்காவுக்கு வாக்கு போடப்போவதது அவரின் திறமைக்காக அல்ல, டிரம்ப் எனும் மறைகழண்டவர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, வேறு தெரிவுகள் இல்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

வசீ அமெரிக்காவை, நேட்டோவை செத்த கிளி என்று சொல்ல

வாலி ரஷ்யாவை செத்த கிளி என்று சொல்ல

குமாரசாமி அண்ணை அமெரிக்காவை எருமைமாடும் மதிக்காது என்று சொல்ல

ஜஸ்டின் எருமைமாடுகள் எப்ப மதித்தது என்று கேட்க..........

சிங்கம், புலி, சிறுத்தை, யானை, கிளி, எருமைமாடு,.......... என்று எங்களின் படிமங்கள் நீண்டு கொண்டு போகின்றது..........🤣.

*   உலகில் அதிக இராணுவம் உள்ள ஒரு நாடாக இருந்தாலும், அதனால் ஏதும் பெரிய பிரயோசனம் சில நாடுகளுக்கு கிடையாது என்று நினைக்கின்றேன். முக்கியமாக இந்தியா. ஒரு கணக்கில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய இராணுவம் ஆகவும், இன்னொரு கணக்கில் முதலாவது பெரிய இராணுவம் ஆகவும் வருகின்றது. ஆனாலும் இந்திய இராணுவம் உள்நாட்டு பேரிடர் தவிர்த்து வேறு எதற்கும் தயாராகவும், தகுதியாகவும் இருப்பது போல தெரியவில்லை.

** இலங்கை ஒரு கணக்கில் உலகில் 18வது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளது.............🤨.

உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார்.

உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம்.

அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன்.

இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும்.

பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை  பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது.

நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன்.

👍...........

நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல.

என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார்.

ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை.

அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.     

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி சுமா. பூட்டினின் கதையை விழுந்தடித்து பார்த்தவர்கள் இந்தக் கதையை கேட்க தயாராக இல்லையோ?
    • ""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎 அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁"" 👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா  😁
    • North America வில் விற்கப்படும் electronic உபகரணங்கள் மட்டும்தான் இனிப் பாதுகாப்பானவையாக இருக்கும்.   
    • ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது. கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை. தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.         
    • இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏   இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்    2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை   ஒற்றை ஆட்சியை நடைமுறையில்  ஏற்றுக்கொண்டார்கள்   ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும்.  குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான்   ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.