Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
21 SEP, 2024 | 05:58 PM
image
 
அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க  எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என  எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194304

Posted
1 hour ago, ஏராளன் said:

அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

அவர் கையில் எதுவுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

அவர் கையில் எதுவுமில்லை. 

அண்ணை,

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Posted
3 minutes ago, ஏராளன் said:

அண்ணை,

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கு மேல் தான் கிளைமாக்ஸ்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுராவுக்கே அந்த பயம் இருக்கு. ஆனால் யாழ் களத்தில் அப்படி இல்லை என்கிறார்கள்???

Posted
1 hour ago, விசுகு said:

அநுராவுக்கே அந்த பயம் இருக்கு. ஆனால் யாழ் களத்தில் அப்படி இல்லை என்கிறார்கள்???

ரணிலுக்கு வேண்டும் என்றால் அனுர மேல் பயம் இருக்கும் .  ஆனால் அணுரவிற்கு இருக்காது .  

கோத்தா + மகிந்தவே  தேர்தல் முடிவுகளின் படி, மைத்திரிக்கு வழிவிட்டவர்கள்.

இலங்கையில் தேர்தல் முடிவுகளை புறம் தள்ளி ஆட்சி செய்யும் முறை ஒரு போதும் நிகழ்ந்தது இல்லை.
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

ரணிலுக்கு வேண்டும் என்றால் அனுர மேல் பயம் இருக்கும் .  ஆனால் அணுரவிற்கு இருக்காது .  

கோத்தா + மகிந்தவே  தேர்தல் முடிவுகளின் படி, மைத்திரிக்கு வழிவிட்டவர்கள்.

இலங்கையில் தேர்தல் முடிவுகளை புறம் தள்ளி ஆட்சி செய்யும் முறை ஒரு போதும் நிகழ்ந்தது இல்லை.
 
ஆனால் இந்த முறை ரணில் ஏதாவது நரித்தனம் செய்ய வாய்ப்பு உள்ளது என்கின்றனர். பார்க்கலாம். அப்படி செய்தால் ரணிலை சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

ஆனால் இந்த முறை ரணில் ஏதாவது நரித்தனம் செய்ய வாய்ப்பு உள்ளது என்கின்றனர். பார்க்கலாம். அப்படி செய்தால் ரணிலை சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். 

அண்ணேய் அங்கு உண்மையில் தேர்தலா நடக்குது ஒவ்வொரு நாடுகளின் பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் அவ்வளவே அநேகமா பாம்பு  சாப்பிடும் கூட்டமே வெல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/9/2024 at 20:39, நிழலி said:

கோத்தா + மகிந்தவே  தேர்தல் முடிவுகளின் படி, மைத்திரிக்கு வழிவிட்டவர்கள்.

இலங்கையில் தேர்தல் முடிவுகளை புறம் தள்ளி ஆட்சி செய்யும் முறை ஒரு போதும் நிகழ்ந்தது இல்லை.

நீங்கள் முதலே சரியாக கணிப்பிட்டு இருக்கிறீர்கள் இம் முறையும்அப்படியே நடந்திருக்கு.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.