Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது

mps-house.jpg

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சுமார் 15 பேருக்கு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றம் பங்களாக்களை ஒப்படைப்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு அரசாங்கம் 50 கொழும்பு அரச பங்களாக்களை வழங்கியிருந்தது.

இந்நிலையில், மாதிவலை உத்தியோகபூர்வ இல்லங்கள் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் பயன்படுத்த நாடாளுமன்ற அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த தினத்தில் குறித்த உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள அனைத்து விதத்திலும் வழங்கப்பட்டுள்ள கொடுபப்னவுகள், முத்திரை கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
https://akkinikkunchu.com/?p=293074

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

2015 இல் எதிர்க கட்சித்  தலைவராக இருந்த சம்பந்தன் ஐயா பதவியை இழந்த பின்பும் கடைசிவரை 

எந்த வீட்டையும் வாகனத்தையும் கொடுக்கவே இல்லை

என்று சொன்னார்கள்.

இப்போது ஐயா இருந்திருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

2015 இல் எதிர்க கட்சித்  தலைவராக இருந்த சம்பந்தன் ஐயா பதவியை இழந்த பின்பும் கடைசிவரை 

எந்த வீட்டையும் வாகனத்தையும் கொடுக்கவே இல்லை

என்று சொன்னார்கள்.

இப்போது ஐயா இருந்திருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3May be an image of blueprint and text

சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1May be an image of ticket stub and text

சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2May be an image of text

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரா இருக்கும் வரை அரசியலில் லாபம் கிடையாது எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் மாலுகடையில் மீன் விக்க போக வேண்டியதுதான் .

இவ்வளவு உழைக்கலாம் என்று தெரிந்து இருந்தால் புதியவர்கள் எப்பவோ வந்து இருப்பார்கள் .😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பெருமாள் said:

அனுரா இருக்கும் வரை அரசியலில் லாபம் கிடையாது எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் மாலுகடையில் மீன் விக்க போக வேண்டியதுதான் .

இவ்வளவு உழைக்கலாம் என்று தெரிந்து இருந்தால் புதியவர்கள் எப்பவோ வந்து இருப்பார்கள் .😃

நாங்களும் புலம் பெயர்ந்திருக்க மாட்டமல்ல‌😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

நாங்களும் புலம் பெயர்ந்திருக்க மாட்டமல்ல‌😅

ஆமா நீங்கள் அரசியல்வாதியாய் இருப்பீங்க .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார் புகழும் பார் சிறிதரன் அய்யாவும் லிஸ்ட்ல இருக்காபில!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டை ஒப்படைப்பது மாத்திரமல்ல, மேலதிகமான காலத்திற்கு வாடகை ,மின்சார பாக்கி, ஏனைய பாக்கிகளெல்லாம் செலுத்தப்படவேண்டும். இப்படி அறவிட்டால் நாடு பெற்ற கடன் எல்லாவற்றையும் அடைத்து விடலாம். நாடு பெற்ற கடன் எல்லாம் அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்கைக்காகவே. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.