Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விசுகு said:

தலைப்பை மீண்டும் படிக்கவும். புலிகள் காய்ச்சல் அதிகமானால் அதற்கான திரிகளில் பேசவும். 

கொண்டையை அதிக காலத்திற்கு மறைப்பது கடினமானது தான். 

அதில் என்ன புலிக்காய்சல், கொண்டையை மறைப்பது என்று கீறு விழுந்த பழைய ரெக்கோட் போல எழுதுவது.  அரசியலில் காய்தல் உவத்தல் இல்லாமல் வெளிப்படையாக எந்த அரசியல  கட்சிக்கோ இயக்கத்துக்கோவிசுவாசம் இல்லாமல் உரையாட வேண்டும் என்பதையே நான் எப்போதும் கூறிவருகிறேன். அது உங்களால் முடியாது.  உங்கள் தவறுகளை மூடி  மறைக்கும் எவருக்கும் அடுத்தவர் தவறுகளை கூறும் அருகதை இல்லை. 

இங்கு ஒளித்து மறைத்து  பேசுபவர் நீங்கள் தான்.  அரசியலை நேர்மையற்று பேசுபவர் நீங்கள் தான். நானல்ல. 

  • Replies 237
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

Kavi arunasalam

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

ஈழப்பிரியன்

ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, island said:

அதில் என்ன புலிக்காய்சல், கொண்டையை மறைப்பது என்று கீறு விழுந்த பழைய ரெக்கோட் போல எழுதுவது.  அரசியலில் காய்தல் உவத்தல் இல்லாமல் வெளிப்படையாக எந்த அரசியல  கட்சிக்கோ இயக்கத்துக்கோவிசுவாசம் இல்லாமல் உரையாட வேண்டும் என்பதையே நான் எப்போதும் கூறிவருகிறேன். அது உங்களால் முடியாது.  உங்கள் தவறுகளை மூடி  மறைக்கும் எவருக்கும் அடுத்தவர் தவறுகளை கூறும் அருகதை இல்லை. 

இங்கு ஒளித்து மறைத்து  பேசுபவர் நீங்கள் தான்.  அரசியலை நேர்மையற்று பேசுபவர் நீங்கள் தான். நானல்ல. 

அநுரா பற்றி கதைத்தால் புலிகள் பற்றி பேசுவேண்டும் என்பது புலிக்காய்ச்சல்.  இந்த காய்ச்சலை கன நாளைக்கு மறைக்க முடியாது அல்லவா?

இந்த திரியை பூட்ட வைக்க நீங்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியை நான் முடித்து வைக்க மாட்டேன். டொட். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

அநுரா பற்றி கதைத்தால் புலிகள் பற்றி பேசுவேண்டும் என்பது புலிக்காய்ச்சல்.  இந்த காய்ச்சலை கன நாளைக்கு மறைக்க முடியாது அல்லவா?

இதிலே என்ன புலிக்காய்சல். தமிழர் அரசியலில்  செய்தவர் விட்ட அரசியல் பிழைகளை பற்றி கதைத்தால் உங்களுக்கு புலிக்காய்சல்  வருவதேன்? 

பேச்சுவார்தையை அனுரா அல்ல அன்றைய ஜேவிபி குழப்பியது என்று தமிழ் நெற் கூறினால் அதை குழப்பியடித்த மற்றவர்களை பற்றி பேசலாம் தானே.  இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்படி எழுதிய ஆய்வாளர்கள் இன்று எத்தனை பேர் உயிரோடு உள்ளார்கள்?

எந்தச் சிந்தாந்தமாயினும் கட்சியரசியல் என்பது சாக்கடை போன்றது. வளரும் நாடுகளில் மிகமிக மோசமானது. சிறிலங்கா சனாதிபதியின் அதிகாரமானது, கட்டற்ற அதிகாரத்துவம் மிக்கது. அதற்குக் கொலைகள் கைவந்தகலை. அதற்காகத் தனித் படைப்பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டது. பிரேமதாச காலத்தில் முழுவீச்சில் செயற்பட்டு பெருவாரியான சிங்கள இளையோரையும் பலயெடுத்த வரலாற்றைக் கொண்டது. இதில் ஊடக ஆய்வுகளை மேற்கொள்வோர் மற்றும் உண்மையை வெளிக்கொணர்வோருக்கு ஒன்றும் பட்டயம் வழங்கிப் பாராட்டும் நாடல்ல படுகொலை செய்து அழித்துவிடும் நாடு எமது நாடெனபது செய்திகளை உற்றுநோக்குவோர் அறிந்தது. சிங்களவராக இருந்தும் 51வயதிலே படகோலை செய்யப்பட்ட  லசந்த விக்கிரமதுங்கவே சாட்சியாக இருக்கிறார். உண்மைகளைக் கூறுவோரை விட்டுவைக்காத அரசக் கலாசாரம் மிக்க நாட்டிலே தற்போது யாருமில்லை என்றே நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, nochchi said:

எந்தச் சிந்தாந்தமாயினும் கட்சியரசியல் என்பது சாக்கடை போன்றது. வளரும் நாடுகளில் மிகமிக மோசமானது. சிறிலங்கா சனாதிபதியின் அதிகாரமானது, கட்டற்ற அதிகாரத்துவம் மிக்கது. அதற்குக் கொலைகள் கைவந்தகலை. அதற்காகத் தனித் படைப்பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டது. பிரேமதாச காலத்தில் முழுவீச்சில் செயற்பட்டு பெருவாரியான சிங்கள இளையோரையும் பலயெடுத்த வரலாற்றைக் கொண்டது. இதில் ஊடக ஆய்வுகளை மேற்கொள்வோர் மற்றும் உண்மையை வெளிக்கொணர்வோருக்கு ஒன்றும் பட்டயம் வழங்கிப் பாராட்டும் நாடல்ல படுகொலை செய்து அழித்துவிடும் நாடு எமது நாடெனபது செய்திகளை உற்றுநோக்குவோர் அறிந்தது. சிங்களவராக இருந்தும் 51வயதிலே படகோலை செய்யப்பட்ட  லசந்த விக்கிரமதுங்கவே சாட்சியாக இருக்கிறார். உண்மைகளைக் கூறுவோரை விட்டுவைக்காத அரசக் கலாசாரம் மிக்க நாட்டிலே தற்போது யாருமில்லை என்றே நினைக்கின்றேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

கொலைகளை செய்ததில் தமிழ் அரசியலில் ஈடுபட்டவர்கள்  ஶ்ரீலங்கா அரசபீடத்தில் இருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதையே வரலாறு கூறுகிறது. எதிர் காலத்திலாவது இரு தரப்பும் திருந்த வேண்டும்.  

பழைய தவறான அரசியல் பாரம்பரியத்தில் இருந்து விடுபட்டு  இலங்கையில் புதிய வார்ப்புகளாக தமிழ்  இளையோர் அரசியல்  மிளிர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, island said:

கொலைகளை செய்ததில் தமிழ் அரசியலில் ஈடுபட்டவர்கள்  ஶ்ரீலங்கா அரசபீடத்தில் இருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதையே வரலாறு கூறுகிறது.

டக்கியோடும், மண்டையனோடும், சித்தார்த்தனோடும் இருந்தவர்களுக்கே வெளிசசம். எனக்குத் தெரியாது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, nochchi said:

டக்கியோடும், மண்டையனோடும், சித்தார்த்தனோடும் இருந்தவர்களுக்கே வெளிசசம். எனக்குத் தெரியாது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நான் உங்களை பற்றி பேசவில்லை.  தமிழர் அரசியலை பற்றி  மட்டுமே பேசுகிறேன்.  டக்கியை பற்றியும் மண்டையனைப் பற்றியும் கூட என்னால் பேச முடியும்.  நேர்மையான அரசியலை பேசும் நேர்மையற்று  உடனடியாகவே அவதூறை கையில் எடுத்த போதே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது தெரிகிறது. கண்ணை இறுக மூடிக்கொண்டு பாலை குடியுங்கள். 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி பதிவுசெய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் சம்மதம்

05 பங்குனி 2002

anti_peace_demo_1_230402.jpg

தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்று கூறி தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை விசாரிக்க அந்நீதிமன்றம் முடிவுசெய்திருக்கிறது. 

இந்த முறையீட்டில் நடைமுறையில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை உடனடியாகச் செல்லுபடியற்றதாக தடைவிதிக்கும் உத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியிருந்தது.

தனது முறையீட்டில் தலைவர் பிரபாகரன், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டவாளர் நாயகம் ஆகியோரைப் பிரதிவாதிகளாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டிருந்தது.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றிற்குள் நாட்டின் பிரதமர் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதனால் அவர் நாட்டின் அரசியலமைப்பினை மீறிச் செயற்பட்டிருக்கிறார் என்பத‌னை அடிப்படையாக வைத்தே இவ்வழக்குத் தக்கால்செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் இனவாத மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து பேச்சுக்களை குழப்பும் நோக்கில் இயங்கிவரும் இன்னொரு சிங்கள இனவாதக் கட்சியான சிகல உறுமய பதிவுசெய்த முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதிவாதிகளுக்கான அறிவித்தல்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுப்பிவைத்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6752

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தை பின்னாலிருந்து இயக்கி அரசை ஆட்டங்காண வைக்க முயலும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி

14 பங்குனி 2002

graduates-protest_1403032.jpg

நாட்டில் இருக்கும் 30,000 வேலையற்ற பட்டதாரிகள் நெடுங்காலமாக தமக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறு அரசுகளைக் கேட்டுக்கொண்டே வருகின்றனர். இவர்களின் உண்மையான கோரிக்கைகளை செவிமடுத்துத் தீர்த்துவைக்க அரசுகள் இன்னும் தவறியிருக்கின்றன.

இந்த பின்னணியில், அரசாங்கம் புலிகளுடன் செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அதன் மூலமான யுத்த நிறுத்தம் ஆகியவற்றை எப்படியாவது கலைத்தே தீருவது என்று கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையினை அரசைக் கவிழ்க்கும் தமது நடவடிக்கையின் ஒரு அங்கமாகப் பாவிக்க எத்தனித்திருக்கிறார்கள்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான அலரி மாளிகையின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணியினரால் முடுக்கிவிடப்பட்ட சில வேலையற்ற பட்டதாரிகளும் அவர்களின் பெற்றோரும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிக்கப்போவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். குறுகிய அரசியல் இலாபத்திற்காக நாட்டு மக்களை உசுப்பேற்றிவிடும் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வேலையற்ற பட்டதாரிகள் பின்னால் ஒளிந்துநின்று தமது அரசியல் நலன்களை இதன்மூலம் அடைய எத்தனிக்கிறார்கள் என்று அரசு கண்டித்திருக்கிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6769

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீவிர சிங்கள இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அணி பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கொழும்பில் இன்னொரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது

18 பங்குனி 2002

jvp_demo_2_180302.jpg

தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணியின் பெளத்த பிக்குகள் அணியும் இன்னும் சில பிரிவுகளும் இணைந்து புலிகளுக்கும் அரசிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்டைருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரியும், பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன. பேச்சுக்களை நிறுத்தவும், யுத்தநிறுத்தத்தினை நிறுத்தவும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாடு முழுதும் சிங்கள மக்களை அணிதிரட்டி நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாகவே கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

jvp_demo_1_180302.jpg

தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வையும், சமஷ்ட்டி அடிப்படையிலான ஆட்சிமுறையினையும், வடக்குக் கிழக்கு இணைப்பையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் இந்த இனவாதக் கட்சி நடைமுறையில் இருக்கும் அரசாங்கத்தைப் பலவீனமாக்கி பேச்சுக்களைத் தடம்புரளச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி சந்திரிக்காவுடனும், ஏனைய தீவிர சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் இணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6779

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்பும்வரை உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திப்போட்ட அரசு, ‍ எதிர்த்து வழக்குத் தக்கல் செய்ய விழையும் மக்கள் விடுதலை முன்னணி

5 சித்திரை 2002

நாட்டில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை அனைத்து மாகாணங்களிலும் ஒரேநேரத்தில் நடத்துவதாக முன்னர் அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளிற்கு அமைவாக, நடமைமுறையில் இருக்கும் சமாதான முயற்சிகளைப் பாவித்து வடக்குக் கிழக்கில் பல வருடங்களாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், அகதிமுகாம்களிலும் இன்றும் வசித்துவரும் தமிழர்கள் தமது நிரந்தர வாழிடங்களுக்குத் திரும்பும்வரை அப்பகுதிகளில் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை பிந்திய நாளொன்றிற்கு நகர்த்த அரசாங்கம் இணங்கியிருந்தது.

தமிழர்களின் வேண்டுகோளிற்குச் செவிசாய்த்து ரணில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போட்டிருப்பதாகக் கூறி, இந்த முடிவினை எதிர்த்துவரும் தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வடக்குக் கிழக்கில் தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்யும் வேலைகளின் இறங்கியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட ஆலோசகர் சுனில் யட்டவள கூறியிருக்கிறார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6826

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் அவர்களே வணக்கம்,

நீங்கள் தேடியெடுத்துப் பதிவிடும் இந்தத் தொடர் ஊடகத் தரவுகளை சேமித்து வைப்பீர்கள் என நம்புகிறேன். இவை தமிழர்கள் அறியவேண்டிய விடயங்கள். திரிக்குத் தடையேதும் ஏற்பட்டாலும் உங்களிடம் இருந்தால் சிங்கள இனவாதக்கட்சிகளின் சுய முகம் என்று ஒரு தொகுப்பாகவேணும் வைத்திருப்பது பிற்காலத்திலும் தேவையானது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமாதானப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பில் மற்றுமொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையும் ஊர்வலத்தையும் நடத்திய தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி

23 சித்திரை 2002

anti_peace_demo_1_230402.jpg

அதி தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கம் புலிகளுடன் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலம் ஒன்றினையும் நடத்தியிருக்கிறது. சுமார் 5,000 தீவிரவாத சிங்களவர்களை ஒன்றுசேர்த்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். லிப்ட்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம் கொழும்பு ஹயிட் பார்க் இல் முடிவிற்கு வந்தது.

anti_peace_demo_2_230402.jpg

சமாதான முயற்சிகளை எப்படியாவது தடம்புரளச் செய்வதன் மூலம் தமிழர்க்கு கொடுக்கவிருப்பதாகக் கூறப்படும் அதிகாரப் பகிர்வினை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னண்னியினர் இன்னொரு அணியினர் மேற்கு மாகாண சபையில் சமாதானப் பேச்சுக்களை நிறுத்தக் கோரும் விவாதம் ஒன்றினை இருநாட்களாக நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அமைப்பான கிழக்கு மாகாண மக்கள் அமைப்பு எனும் அதி தீவிர சிங்கள இனவாதிகளின் உறுப்பினர்கள் சித்திரை 24 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தவிருப்பதாக பொலீஸார் அறிவித்திருக்கின்றனர். 

புலிகள் மேல் நடைமுறையில் இருக்கும் தடையினை நீக்குவதற்கெதிராகவும், வட கிழக்கு மாகாண‌ங்களின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் ஒப்படைப்பதற்கு எதிராகவும் இந்த பேரணியை மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அணி நடத்துகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6874

14 minutes ago, nochchi said:

ரஞ்சித் அவர்களே வணக்கம்,

நீங்கள் தேடியெடுத்துப் பதிவிடும் இந்தத் தொடர் ஊடகத் தரவுகளை சேமித்து வைப்பீர்கள் என நம்புகிறேன். இவை தமிழர்கள் அறியவேண்டிய விடயங்கள். திரிக்குத் தடையேதும் ஏற்பட்டாலும் உங்களிடம் இருந்தால் சிங்கள இனவாதக்கட்சிகளின் சுய முகம் என்று ஒரு தொகுப்பாகவேணும் வைத்திருப்பது பிற்காலத்திலும் தேவையானது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் நொச்சி,

இந்தத் தொடரின் ஆங்கில மூலம் தமிழ்நெட் மற்றும் தமிழ் கார்டியன் இணையங்களில் இருக்கிறது.

நான் இவற்றைச் சேமித்து வைப்பது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல செய்வது நலம்தான். ஏனென்றால் ஒருமுறை நான் எழுதி, சேமித்துவைக்காத பகுதியொன்று யாழில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக அழிந்துபோனது நினைவில் இருக்கிறது.

நட்புடன்

ரஞ்சித்

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே ரஞ்சித் எழுதிய விடயங்கள் அனைத்தும் உண்மை   எதிர்கருத்துக்கள். இல்லை  

எனது கேள்விகள் 

இலங்கையை எப்போதும் சிங்களவர்கள். தான் ஆட்சி புரிவர்கள். 

அனைவரும் தமிழருக்கு எதிராக  தீர்வுக்கு எதிராக செயல்பட்டவர்கள். தான் ஆனாலும் இவர்கள் தான் தீர்வை தரும் வல்லமையுள்ளவர்கள் 

தமிழரசு கட்சி தீர்வு தரும் அற்றல். அற்றவர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு இதுவரை எந்தப் பிரயோஜனம் இல்லை.  நாங்கள் எப்படியும் ஆட்சியில் உள்ளவர்களுடன். தான் பேச வேண்டும்  தமுழர்கள். 1970. ஆம் ஆண்டில் இருந்த பலத்துடன் இல்லை  

மக்கள் தொகை குறைவு 

பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு   

வடமாகாணத்தில்.  படிப்படியாக சிங்களவர். தொகை கூடிச் செல்கிறது 

ஆகவே   ஜேவிபி இல்  இணைந்த வேட்பாளர்களுக்கு வாக்கு போட்டு   பாராளுமன்றம் அனுப்பி    வைப்போம்  

சுயாட்சி  கிடைக்கலாம்   இது ஒரு முயற்சி தான்   தோல்வியும் வரலாம்”  

வெற்றியும் வரலாம்”   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/10/2024 at 21:41, Justin said:

"அனுரவை  தமிழ் மக்கள் நல்ல ஒளியில் பார்த்து விடக் கூடாது" என்கிற நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் - எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் மூலங்கள் தமிழ்நெற்றும், சங்கம் தளமும் - இவை இரண்டினதும் வடிகட்டியெடுத்து செய்தி/ஆய்வுகள் போடும் "நடுநிலை" 😎எல்லோரும் அறிந்ததே!

நீங்கள் நல்ல வேடிக்கையாளராக இருக்கிறீர்கள்😁,

நகரத்திலிருந்து படித்து விட்டு வந்த ஒரு தொடர்பற்ற சிறிய செவ்விந்திய இனக்குழுமத்தின் தலைவனாக பதவியேற்ற இளைஞனிடம் அந்த குழுமத்தினர் இந்த குளிர்காலம் அதிக குளிராக இருக்குமா என கேட்டனர், முன்னனுபவமில்லா அந்த இளைஞன் எதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த முறை வழமையாக சேகரிக்கும் விறகுகளை விட கொஞ்சம் அதிகமாக சேகரிக்க கூறினான்.

நகர்த்திற்கு சென்று வானிலை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்த முறை குளிர்காலம் எப்படி என கேட்டான் அதற்Kஉ இந்த முறை குளிர்காலம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என கூறினார்கள், உடனே தனது கிராமத்திற்கு விரைந்த இளைஞன் மேலும் கொஞ்சம் விறகுகளை சேகரிக்க கூறினான்.

மறுவாரம் நகரத்திற்கு சென்றாந்த இளைஞன் மீண்டும் அதே கேள்வியினை வானிலை ஆராய்ச்சி மையத்திடம் கெட்டான், அதற்கு அவர்கள் இந்த முறை குளிர் மிக மோசமாக இருக்கும் எனகூறினார்கள், அதற்கு அவன் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என கேட்டான் அதற்கு அவர்கள் செவ்விந்தியர்கள் விறகுகளை கண்மூடித்தனமாக சேகரிக்கிறார்கள் என கூறினர்.

தமிழ் நெற், தமிழ் கார்டியன் என்பன சிங்கள, ஆங்கில ஊடகங்களிலிருந்து தென்னிலங்கை செய்திகளை பெறுகின்றன, இந்த சின்ன இலங்கை  செய்திகளை சி என் என் வெளியிடாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

இங்கே ரஞ்சித் எழுதிய விடயங்கள் அனைத்தும் உண்மை   எதிர்கருத்துக்கள். இல்லை  

எனது கேள்விகள் 

இலங்கையை எப்போதும் சிங்களவர்கள். தான் ஆட்சி புரிவர்கள். 

அனைவரும் தமிழருக்கு எதிராக  தீர்வுக்கு எதிராக செயல்பட்டவர்கள். தான் ஆனாலும் இவர்கள் தான் தீர்வை தரும் வல்லமையுள்ளவர்கள் 

தமிழரசு கட்சி தீர்வு தரும் அற்றல். அற்றவர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு இதுவரை எந்தப் பிரயோஜனம் இல்லை.  நாங்கள் எப்படியும் ஆட்சியில் உள்ளவர்களுடன். தான் பேச வேண்டும்  தமுழர்கள். 1970. ஆம் ஆண்டில் இருந்த பலத்துடன் இல்லை  

மக்கள் தொகை குறைவு 

பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு   

வடமாகாணத்தில்.  படிப்படியாக சிங்களவர். தொகை கூடிச் செல்கிறது 

ஆகவே   ஜேவிபி இல்  இணைந்த வேட்பாளர்களுக்கு வாக்கு போட்டு   பாராளுமன்றம் அனுப்பி    வைப்போம்  

சுயாட்சி  கிடைக்கலாம்   இது ஒரு முயற்சி தான்   தோல்வியும் வரலாம்”  

வெற்றியும் வரலாம்”   🙏

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளும் கட்சியினால் தீர்வினை வழங்கிட முடியும், அதனால் அதில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் பேரம் என்பன இருக்கும், அத்துடன் இங்கு அனுரவிற்கு வாக்கு போட வேண்டாம் என்பதற்காக இந்த கட்டுரையினை ரஞ்சித் எழுதவில்லை என கருதுகிறேன், சிறுபான்மையினருக்கு பிரச்சினையே இல்லை எனும் கட்சியினால் சிறுபான்மையினர் தமக்கு இருக்கும் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும், அத்துடன் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தடையாக உள்ள கட்சி அதே செயலை செய்யவிரும்புமா?

அனுரவும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளை போலவே இனவாதத்தினை கருவியாக பயன்படுத்தி ஆட்சி கட்டிலேறி உள்ளார், அவருக்கு அரசியல் இலாபமே முக்கியம் அதற்காக அவர் இனவாதம் பேசுபவர், இந்தியா அவரது ஆட்சிக்குநெருக்கடி கொடுத்தால் அந்த இனவாதத்தினையும் கைவிடும் சாதாரண சுயநல அரசியல்வாதிதான் ( இது எனது கருத்து).

அனுரவுக்கும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் சிறுபான்மையினருக்கு பிரச்சினை உள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வு பேச்சு என கூறி ஏமாற்றுவார்கள், அனுரா பிரச்சினை இல்லை, அப்படி இல்லாத பிரச்சினை என கூறும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தரமாட்டேன் (ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா, அவர்களே பிரச்சினை என்பதே இல்லை என்பார்கள் பின்னர் பிரச்சினை தீர்வு தரமாட்டேன் என்பார்கள்) என ஆரம்பத்திலேயே கூறிவிட்டார். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளும் கட்சியினால் தீர்வினை வழங்கிட முடியும், அதனால் அதில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் பேரம் என்பன இருக்கும், அத்துடன் இங்கு அனுரவிற்கு வாக்கு போட வேண்டாம் என்பதற்காக இந்த கட்டுரையினை ரஞ்சித் எழுதவில்லை என கருதுகிறேன், சிறுபான்மையினருக்கு பிரச்சினையே இல்லை எனும் கட்சியினால் சிறுபான்மையினர் தமக்கு இருக்கும் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும், அத்துடன் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தடையாக உள்ள கட்சி அதே செயலை செய்யவிரும்புமா?

அனுரவும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளை போலவே இனவாதத்தினை கருவியாக பயன்படுத்தி ஆட்சி கட்டிலேறி உள்ளார், அவருக்கு அரசியல் இலாபமே முக்கியம் அதற்காக அவர் இனவாதம் பேசுபவர், இந்தியா அவரது ஆட்சிக்குநெருக்கடி கொடுத்தால் அந்த இனவாதத்தினையும் கைவிடும் சாதாரண சுயநல அரசியல்வாதிதான் ( இது எனது கருத்து).

அனுரவுக்கும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் சிறுபான்மையினருக்கு பிரச்சினை உள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வு பேச்சு என கூறி ஏமாற்றுவார்கள், அனுரா பிரச்சினை இல்லை, அப்படி இல்லாத பிரச்சினை என கூறும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தரமாட்டேன் (ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா, அவர்களே பிரச்சினை என்பதே இல்லை என்பார்கள் பின்னர் பிரச்சினை தீர்வு தரமாட்டேன் என்பார்கள்) என ஆரம்பத்திலேயே கூறிவிட்டார். 

இது தெரிந்த விடயம் தான்    

தீர்வை எப்படி பெறலாம் என்பதை சொல்லுங்கள்??   

அது தான் இன்றைய தேவை 

தமிழ் மக்கள் தங்களது வாக்கை   தமிழ் கட்சிகளுக்கு போடலாமே வழமை போல இதனால் எந்த பிரயோஜனம் இல்லை

இந்த முறை ஜேவிபி க்கு போடலாம??   இது புதிய முயற்சி   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, vasee said:

சிறுபான்மையினருக்கு பிரச்சினையே இல்லை எனும் கட்சியினால் சிறுபான்மையினர் தமக்கு இருக்கும் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும், அத்துடன் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தடையாக உள்ள கட்சி அதே செயலை செய்யவிரும்புமா?

இது ஒரு நல்ல கேள்வி
அதுவும் 21 ம் திகதி அவர் வெற்றி பெற்ற பின்பு எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது? சிங்கள மக்கள் தான் வழிகாட்டிகள்  தமிழர்கள் அவர்களை பின்பற்றுவார்களா
ஒரு தமிழ் வீடியோ வட்சப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஒரு தமிழர் சொல்கிறார் எங்களுக்கு ஐயர்மார்கள் வேண்டாம் அந்த ஆண்டவனே நேரடியாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக அந்த பிள்ளையை  ஆதரிப்போம் 😭

------------------------------------------
1982 ஜனாதிபதி தேர்தலிலேயே அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை ஆரம்பித்த அவர் தலைவர் போட்டியிட்டுள்ளார்
ஜே.ஆர்.ஜெயவர்தன -ஐக்கிய தேசிய கட்சி 52.91 வீதம்
ஹெக்டர் கொப்பேகடுவ - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 39.07 வீதம்
ரோஹன விஜேவீர - ஜேவிபி 4.19  வீதம்
https://en.wikipedia.org/wiki/1982_Sri_Lankan_presidential_election
 

Edited by விளங்க நினைப்பவன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாது, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கக் கூடாது என்று கோரி கொழும்பு நகரில் ஆயிரக்கணக்கான தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

19 ஆனி 2002

jvp_protest_1_190602.jpg

தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும், சிங்களப் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கொழும்பில் கூடி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையினை அரசாங்கம் நீக்கக் கூடாதென்றும், வடக்குக் கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் வழங்கக் கூடாதென்றும் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் இனவாதக் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், பெளத்த பிக்குகள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்திச் சென்றதுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வழங்கமுடியாது என்றும் கோஷமிட்டனர்.

அதன் பின்னர் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காச் செயற்பட்டுவரும் பிரதமர் ரணிலின் அலுவலகத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாதென்று ரணிலிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்க முயன்றபோது பொலீஸாரினால் தடுக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை நிராகரிக்குமாறு மக்களைத் தூண்டிய மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கிய எதிர்க்கட்சிகள்.

9 ஆடி 2002

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளும், பல சிங்கள இனவாத அமைப்புக்களும் இணைந்து கொழும்பில் பாரிய பேரணியொண்றினை நடத்தின. சுமார் 5,000 பேர் பங்குகொண்ட இந்தப் பேரணியில் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக நாட்டைப் பிளவுபடுத்தும் சதி நடப்பதனால் சிங்கள மக்கள் அனைவரும் திரண்டெழுந்து இதனை முறியடிக்க வேண்டும் என்று பேரணியில் பேசியோர் கேட்டுக்கொண்டனர். 

anti_ceasefire

யுத்த நிறுத்தத்திற்கெதிரான சிங்கள இனவாதக் குழு, அநுர பண்டாரநாயக்க, விமல் வீரவன்ச, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பேரணி மேடையில் 

எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி மாலை 4:30 மணிக்கு நுகேகொடையில் ஆரம்பமானது. பேரணியில் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டாரநாயக்கவின் புத்திரன் அநுர பண்டாரநாயக்க, சிங்கள இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் தேசிய பிக்கு முன்னணியின் தீவிரவாத பிக்கு ஒருவர் ஆகியோர் விசேட உரையாற்றினர். 
பேரணியில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர‌ ஆகியோரும் பங்குபற்றினர்.

"கெளரவமான சமாதானத்திற்கும், பிளவுபடாத நாட்டிற்குமான தேசிய இயக்கம்" எனும்பெயரிலேயே இந்தப் பேரணியினை எதிர்க்கட்சிகள் ஒழுங்குசெய்திருந்தன. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7171

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாதென்று கோரி கொழும்பில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி

3, புரட்டாதி 2002

JVP protest in Colombo
 ஆயிரக்கணக்கான தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் கொழும்பில் இன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். புலிகள் மீதான தடையினை நீக்குவதன் மூலம் பேச்சுவார்த்தைகளில் நம்பகத்தன்மையினை ஏற்படுத்த ரணில் அரசாங்கம் முயன்று வருகையில் அதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது பொலீஸாரினால் தடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி காலிமுகத்திடலை அடைந்தபோது நூற்றுக்கணக்கான பொலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

JVP preotest in Colombo
 
மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்னால் செல்லும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள்

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7431

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருகோணமலையில் ஹர்த்தாலினை அனுஸ்ட்டித்த தமிழர்கள் மீது தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் ‍ மூன்று தமிழர்கள் பலி, 36 பேர் காயம்

12 ஐப்பசி 2002

trinco_victims_121002.jpg

திருகோணமலையில் ஹர்த்தாலில் ஈடுபட்ட தமிழர்கள் மீது சிங்கள ஊர்காவல்ப்படையினைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 36 பேர் காயமடைந்தனர். மேலும் மட்டக்களப்பு காஞ்சிரங்குடா பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

Damaged ambulance.

பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் நோக்கில் வடக்குக் கிழக்கில் அமைதியின்மையினைத் தோற்றுவிக்கும் முகமாக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களும் அரச படைகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரும் முயன்றுவருவது இதன் மூலம் உறுதியாகிறது.

hartal_vavuniya_2_121002.jpg

கிழக்கில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து வடக்குக் கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தால் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது. அச்சுவேலி, கொடிகாமம் ஆகிய பகுதிகளில்  கடைகளை பலாத்காரமாக இராணுவத்தினர் திறக்க முனைந்த போதிலும், வர்த்தகர்கள் பிடிவாதமாக மறுத்து விட்டனர். வீதிகள், கடைகள், பொதுமக்கள் பாவிக்கும் இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், தொடர்ச்சியாக சோக கீதமும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. பலவிடங்களில் வீதிகளுக்குக் குறுக்காக டயர்கள் எரிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது, ஒரு சில தனியார் வாகனங்களைத் தவிர.

யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிற்குமான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், ஓமந்தைச் சோதனைச் சாவடிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7625

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, vasee said:

நீங்கள் நல்ல வேடிக்கையாளராக இருக்கிறீர்கள்😁,

நகரத்திலிருந்து படித்து விட்டு வந்த ஒரு தொடர்பற்ற சிறிய செவ்விந்திய இனக்குழுமத்தின் தலைவனாக பதவியேற்ற இளைஞனிடம் அந்த குழுமத்தினர் இந்த குளிர்காலம் அதிக குளிராக இருக்குமா என கேட்டனர், முன்னனுபவமில்லா அந்த இளைஞன் எதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த முறை வழமையாக சேகரிக்கும் விறகுகளை விட கொஞ்சம் அதிகமாக சேகரிக்க கூறினான்.

நகர்த்திற்கு சென்று வானிலை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்த முறை குளிர்காலம் எப்படி என கேட்டான் அதற்Kஉ இந்த முறை குளிர்காலம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என கூறினார்கள், உடனே தனது கிராமத்திற்கு விரைந்த இளைஞன் மேலும் கொஞ்சம் விறகுகளை சேகரிக்க கூறினான்.

மறுவாரம் நகரத்திற்கு சென்றாந்த இளைஞன் மீண்டும் அதே கேள்வியினை வானிலை ஆராய்ச்சி மையத்திடம் கெட்டான், அதற்கு அவர்கள் இந்த முறை குளிர் மிக மோசமாக இருக்கும் எனகூறினார்கள், அதற்கு அவன் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என கேட்டான் அதற்கு அவர்கள் செவ்விந்தியர்கள் விறகுகளை கண்மூடித்தனமாக சேகரிக்கிறார்கள் என கூறினர்.

தமிழ் நெற், தமிழ் கார்டியன் என்பன சிங்கள, ஆங்கில ஊடகங்களிலிருந்து தென்னிலங்கை செய்திகளை பெறுகின்றன, இந்த சின்ன இலங்கை  செய்திகளை சி என் என் வெளியிடாது.

சிங்கள, ஆங்கில, தென்னிலங்கை ஊடகங்களில் இருந்து பெற்று, வடிகட்டிய பின்னர் வெளியிடுகின்றன என்பதே சரியானது.

தமிழ்நெற்றில் வருபவை எல்லாம் "வரலாற்று உண்மைகள்" என்றால் "லங்கா புவத்தில்" சிங்கள தரப்பு சொல்வதும் உண்மைகள் என்று ஏற்றுக் கொண்டு "முள்ளிவாய்க்காலில் மக்களைக் காக்க சிறிலங்கா யுத்தம் செய்தது" என்பதும் வரலாற்று உண்மையாகி விடும்.

தமிழ்நெற் தமிழர் பக்க ஊதுகுழல், லங்காபுவத் சிங்கள ஊதுகுழல். இந்த வேறுபாடு தெரியாமல் நீங்கள் சிறந்த நகைச்சுவையாளராக வலம் வருகிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

சிங்கள, ஆங்கில, தென்னிலங்கை ஊடகங்களில் இருந்து பெற்று, வடிகட்டிய பின்னர் வெளியிடுகின்றன என்பதே சரியானது.

தமிழ்நெற்றில் வருபவை எல்லாம் "வரலாற்று உண்மைகள்" என்றால் "லங்கா புவத்தில்" சிங்கள தரப்பு சொல்வதும் உண்மைகள் என்று ஏற்றுக் கொண்டு "முள்ளிவாய்க்காலில் மக்களைக் காக்க சிறிலங்கா யுத்தம் செய்தது" என்பதும் வரலாற்று உண்மையாகி விடும்.

தமிழ்நெற் தமிழர் பக்க ஊதுகுழல், லங்காபுவத் சிங்கள ஊதுகுழல். இந்த வேறுபாடு தெரியாமல் நீங்கள் சிறந்த நகைச்சுவையாளராக வலம் வருகிறீர்கள்!

2001, 2002 காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்கள் பெரும்பாலும் சமாதானத்தில் ஆர்வம் உடையவர்களாக இருந்தனர்.  சமாதானத்துக்கு  ஆதரவான பல  தென்னிலங்கை அமைப்புகள்  தமிழ் பிரதேசங்களுக்கு முக்கியமாக புலிகளின் பிரதேசங்களுக்கு வந்திருந்தனர். பெருமளவிலான சாமான்ய மக்கள் சமாதானத்துக்கு ஆதரவாக இருந்தனர். ரணில் வெற்றி பெறக்கூடிய அரசியல் சூழ்நிலை தென்னிலங்கையில் ஏற்பட்டதற்கு காரணம் அவர் சமாதான பேச்சுவார்ததைகளை சிறப்பாக கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பிலேயே.  புலிகள் மீதான தடை விலக்கப்பட்டதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை.  

இவ்வாறாக பல நேர்மறையான விடயங்கள் இருக்க அன்று சிங்கள மக்கள் மத்தியில் மிக குறைந்த  ஆதரவு இருந்த ஜேவிபி யின் செயற்பாடுகளை இவ்வாறு பூதாகரப்படுத்தி  எழுதியதில் இருந்து சமாதானத்துக்கு எதிரான தமிழ் நெற்றின் உண்மை முகம் தெரிகிறது. 

  ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜேவிபி எதிர்ததது,  என்று அன்று நீலிக்கணீர் வடித்த தமிழ் நெற், ரணிலை  தோற்கடித்து  அந்த ஒப்பந்தத்துக்கே வேட்டு வைத்த தமிழர் தரப்பின் செயல்களை  ஆதரித்தது.  சமாதான பேச்சுவார்ததைகள் யுத்த சூழலை நோக்கி மெல்ல மெல்ல இரண்டு தரப்பாலும் இழுத்து செல்லப்பட்டதை எதிர்தது ஒரு கட்டுரை கூட தமிழ் நெற் எழுதவில்லை. 

பொதுவாகவே சமாதான காலங்களில் நேர்மறையான விடயங்களை பெரிது  படுத்தாமல் அஒற்றை அமுக்கி விட்டு  சிங்கள தரப்பில் மக்கள் ஆதரவு அற்ற இனவாதிகளின் செயல்களை, பேச்சுக்களை  தமிழர் மத்தியில் பிரபலப்படுத்தி உசுப்பேற்றுவது    தீவிர தமிழ்தேசியர்களின் வழமையான செயல்கள். அந்த வகையிலேயே தமிழ்நெற்  தனது சமாதானத்துக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டு அஜன்டவை அன்று செய்தது. 

வருகின்ற ஜனாதிபதிகளை எல்லாம் விரோதிகளாக்கி அவர்களை தீவிர நிலைப்பாடு எடுக்கும் அரசியல் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு  உலக நாடுகளையும் பகைத்து அரசியல் செய்து தமிழ் மக்களை இன்றைய சூழ் நிலைக்கு தள்ளியதில்   இவ்வாறான  ஊடகங்களுக்கும் அதை பரப்பும் இனவாதிகளுக்கும்  பங்கு உள்ளது. 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
    • ஆம். எனக்குத் தெரிந்த ஒரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  குடும்பத்தை விபு க்களே இந்தியாவிற்கு தங்கள் படகில் கொண்டு சென்று இறக்கியிருந்தனர். சமாதான காலத்தில் அவர்கள் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்து வவுனியாவில் மீளக் குடியமர்ந்தனர். அவர்கள் தற்போது வட அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  அக் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாற்று இயக்கம் ஒன்றின் பெரிய பொறுப்பில் முன்னர் இருந்து பின்னர் பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.  இதே போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவைகளை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும்.  @விசுகுகுஎ ஏன்  -1 போட்டிருக்கிறீர்கள்? காரணத்தை அறியத்தர முடியுமா?   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.