Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இப்படிக் "கெட்டப் போல் கதையை" உங்களுக்குச் சொன்ன  மேற்குலக ஊடகங்களை நான் பார்ப்பதில்லை - அவை நுணாவின் விருப்ப ஊடகங்கள்! பிபிசி கூட இந்த முறை அதிக ஈரானிய ஏவுகணைகள் உள்ளே விழுந்ததாகச் சொல்லியிருக்கிறது.

இந்த கல், கெட்டப் போல், நீங்கள் David's Sling என்ற இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்ரத்தின் பெயரைப் பார்த்துக் குழம்பியதால் வந்ததோ எனவும் யோசிக்கிறேன்😎! உங்கள் புரிதல் பல இடங்களில் அப்படி!

நீங்க‌ள் பார்க்கு ஊட‌க‌ங்க‌ளை இஸ்ரேலில் என்ன‌ ந‌ட‌ந்த‌தை என்ப‌தை ஒளிவும‌றைவு இல்லாம‌ நேர்மையா செய்திய‌ வெளியிட‌ட்டும் பாப்போம்..................என‌து கைபேசியில் 7காணொளிக்கு கிட்ட‌ இருக்கு நேற்று ந‌ட‌ந்த‌ உண்மையான‌ தாக்குத‌ல்..................அது நீங்க‌ள் பார்க்கும் ஊட‌க‌த்தில் வ‌ராது

இப்ப‌ நான் அந்த‌ காணொளிய‌ யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்தால் உட‌ன‌ அதை நீக்குவின‌ம்

உண்மை உல‌கிற்க்கு தெரிய‌ கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருக்கின‌ம் நீங்க‌ள் பார்க்கும் ஊட‌க‌த்தின‌ர்

த‌மிழ் நாட்டில் திவுக்காவுக்கு சிங்சாங் போட‌ ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் இருக்கே அதே போல் தான் நீங்க‌ள் பார்க்கும் ஊட‌க‌ங்க‌ளும்😁.............................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

பையன், இப்ப என்ன சொல்லி விட்டேன் என்று பதற்றம்😂? நீங்கள் யூ ரியூபில் வரும் "எல்லாவற்றையும்" நம்பும் ஒருவர், நான் அப்படியல்ல. அதற்காக இஸ்ரேலுக்குள் ஒன்றுமே விழவில்லை என்று நம்பும் அளவுக்கு பற்றி அறியாத மடந்தையும் அல்ல! அது தான் பிபிசியில் வந்திருக்கிறது என்கிறேன். நீங்கள் மறைக்கிறார்கள் என்கிறீர்கள். எப்படி மறைப்பது இந்த ரிக் ரொக், இன்ஸ்ரா என்று எல்லோரும் திரிகிற காலத்தில்?

3 hours ago, nunavilan said:

தங்களின் விருப்ப ஊடகங்களை யாழ் கள உறவுகளுக்கு தெரிவிக்கலாமே? 

ஏன்? "பார்க்கும் ஊடகத்தைப் பிரகடனப் படுத்தினால் தான் யாழில் எழுதலாம்" என விதி இருக்கிறதா?😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பையன், இப்ப என்ன சொல்லி விட்டேன் என்று பதற்றம்😂? நீங்கள் யூ ரியூபில் வரும் "எல்லாவற்றையும்" நம்பும் ஒருவர், நான் அப்படியல்ல. அதற்காக இஸ்ரேலுக்குள் ஒன்றுமே விழவில்லை என்று நம்பும் அளவுக்கு பற்றி அறியாத மடந்தையும் அல்ல! அது தான் பிபிசியில் வந்திருக்கிறது என்கிறேன். நீங்கள் மறைக்கிறார்கள் என்கிறீர்கள். எப்படி மறைப்பது இந்த ரிக் ரொக், இன்ஸ்ரா என்று எல்லோரும் திரிகிற காலத்தில்?

ஏன்? "பார்க்கும் ஊடகத்தைப் பிரகடனப் படுத்தினால் தான் யாழில் எழுதலாம்" என விதி இருக்கிறதா?😂

என்னிட‌ம் ரிக்ரொக் இல்லை அண்ணா

நான் பார்த்த‌ காணொளிக‌ள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டில் இருந்து ம‌ற்றும் அன்டை நாட்டில் இருந்தும் எடுத்த‌ காணொளிக‌ள்........................

யூடுப்பில் இஸ்ரேல் பிர‌ச்ச‌னை ப‌ற்றி பேசினால் காசு கிடைக்காதாம்.....................அப்ப‌டி இருந்தும் ம‌க்க‌ளுக்கு உண்மைய‌ சொல்ல‌னும் என்று ஒருசில‌ ஊட‌க‌ங்க‌ள் உண்மையா செய‌ல் ப‌டுகின‌ம்🙏🥰.............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இப்படிக் "கெட்டப் போல் கதையை" உங்களுக்குச் சொன்ன  மேற்குலக ஊடகங்களை நான் பார்ப்பதில்லை - அவை நுணாவின் விருப்ப ஊடகங்கள்! பிபிசி கூட இந்த முறை அதிக ஈரானிய ஏவுகணைகள் உள்ளே விழுந்ததாகச் சொல்லியிருக்கிறது.

இந்த கல், கெட்டப் போல், நீங்கள் David's Sling என்ற இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்ரத்தின் பெயரைப் பார்த்துக் குழம்பியதால் வந்ததோ எனவும் யோசிக்கிறேன்😎! உங்கள் புரிதல் பல இடங்களில் அப்படி!

நான் இரண்டு பகுதிகளின் ஊடகங்களையும் அவதானிக்கின்றேன். மத்திய கிழக்கில் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மை எமக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். விமான பயணங்கள் தொடக்கம், எரிபொருட்கள் விலையேற்றம், வேலை வாய்ப்புக்கள் என பல ரூபங்களில் எமது வாழ்வாதாரங்களை பலவீனப்படுத்தலாம்.

உளவியல் போர், ஊடக/பிரச்சாரப்போர் பெரும் எடுப்பில் நடக்கின்றது. எமக்கு இலங்கை உள்நாட்டு போர் காரணமாக நீண்ட வாழ்வியல் (அவல) அனுபவம் உள்ளமையால் நடப்பு மத்திய கிழக்கு பிரச்சனைகளில்; பல விடயங்களை பொது சராசரியை விட அதிகளவில் கிரகிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. இவ்வாறே போரில் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் மீதும் கரிசனை உள்ளது.

திரிவுபடுத்தப்படும் செய்திகள், பிரச்சார உத்திகள், இதர விகாரங்கள் கண்டுகொள்ளப்பட கடினமானவை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நியாயம் said:

இரண்டு பகுதியையும் அவதானிக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு உவப்பாகத் தெரிவதை உண்மையென்று நம்புகிறீர்கள்😂. இது தான் நான் கவனித்தது. ட்ரம்பின் 34 குற்றச்சாட்டுகளின் ஆதாரங்கள் கோர்ட் தளத்திலேயே இருந்த போதும், நீங்கள் ஒரு வலதுசாரி செய்தியைப் பார்த்து விட்டு, அமெரிக்க நீதித் துறையை குறைவாக மதிப்பிட்டதைக் கவனித்தேன்.

நான் உவப்பானவற்றுக்கு சில சமயங்களில் ஆதரவு அளிக்கின்றேன். ஆனால், உவப்பானவை எல்லாம் உண்மை என நம்புவது இல்லை. உண்மைகள் பல கசக்கவே செய்யும். 

நீங்கள் ஈரான் ஏவிய ஏவுகணைகள் போயிங்க் விமானத்தை விட வேகம் குறைவானது என எப்படி கணித்தீர்கள் என அறியத்தாருங்கள். அதன் உண்மை தன்மையை பார்ப்போம். உங்களுக்கு உவப்பாக இருக்கவேணும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக நீங்கள் வேகத்தை குறைத்து மதிப்பிட்டீர்களா என பார்ப்போம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிற்கு எதிரான தாக்குதல் - "குறைந்தபட்ச தண்டனை" - ஈரானின் ஆன்மீக தலைவர் கமேனி

04 OCT, 2024 | 03:15 PM
image

இஸ்ரேலிற்கு எதிராக ஈரான் மேற்கொண்ட தாக்குதலை ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி குறைந்தபட்ச தண்டனை என வர்ணித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை சட்டபூர்வமானது என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலின் ஆச்சரியமளிக்கும் குற்றங்களிற்காகவே இந்த தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டது என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை காட்டேரி ஆட்சி எனவும் அமெரிக்காவை பிராந்தியத்தில் வெறிபிடிதத நாய் எனவும் வர்ணித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஈரான் இஸ்ரேலிற்கு எதிரான தனது கடமைகளை வலிமையுடன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் என வரும்போது ஈரான் ஒருபோதிலும் தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195479

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக பொது வெளியில் தோன்றிய இரான் தலைவர் - முஸ்லிம் நாடுகளிடம் என்ன சொன்னார்?

காமனெயி

பட மூலாதாரம்,EPA

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில், இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இரானின் 'எதிரிகள்', இஸ்லாமிய உலகில் பிரிவினைக்கு வித்திடுவதாக குற்றம் சாட்டிய அவர் அதற்கு கண்டனம் தெரிவித்தார். கூடவே இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் அவர் நியாயப்படுத்தினார்.

அயத்துல்லா இந்த உரையை ஆற்றிய போது, மொசல்லா மசூதியில் அவரது பேச்சைக் கேட்பதற்காக பெரும் கூட்டம் கூடியிருந்தது.

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை நினைவு கூர்ந்து காமனெயி தனது உரையைத் தொடங்கினார்.

முன்னதாக 2020-ஆம் ஆண்டில் இரான் புரட்சிகர காவலர் படையின் (ஐஆர்ஜிசி) ஜெனரல் காசிம் சுலேமானியை அமெரிக்கா கொன்றபோது அயதுல்லா அலி காமனெயி வெள்ளிக்கிழமை தொழுகையில் உரையாற்றினார்.

அதற்கு முன் 2012-ஆம் ஆண்டிலும் காமனெயி இதே போல உரையாற்றியுள்ளார்.

நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பதிலடியாக இரான் செவ்வாய் இரவு இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இதையடுத்து, இரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாலத்தீன நிர்வாகம் மற்றும் லெபனான் உள்ளிட்ட பிற முஸ்லிம் நாடுகளின் எதிரிகள், இரானுக்கும் எதிரிகள் என்று காமனெயி தனது உரையில் கூறினார்.

காமனெயி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இரானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் காமனெயின் உரையை கேட்க மக்கள் திரண்டிருப்பதைக் காட்டுகிறது

தேவைப்பட்டால் முன்பு போலவே தாக்குதல் நடத்தப்படும்

''எங்கள் ராணுவத்தின் இந்த அற்புதமான பணி முற்றிலும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒன்று. அது நியாயமானதும் கூட," என்று காமனெயி தனது உரையில் குறிப்பிட்டார்.

”ஆக்கிரமிப்பு கொள்கையைப் பின்பற்றும் சியோனிச ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் குற்றங்களுக்கு நமது ஆயுதப் படைகள் அளித்தது குறைந்த பட்ச தண்டனைதான்,” என்றார் அவர்.

இந்த விஷயத்தில் இரான் தனது கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார். ”இந்தப் பணியை முழு பலத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிப்போம். இந்தப் பணியை முடிப்பதில் நாங்கள் தாமதிக்க மாட்டோம், அவசரமும் படமாட்டோம்,” என்றார் அவர்.

”தேவைப்பட்டால், அரசியல் மற்றும் ராணுவ விஷயங்களில் முடிவெடுப்பவர்களின் தீர்மானத்தின்படி முன்பு எடுக்கப்பட்ட அதே நியாயமான முடிவு எடுக்கப்படும்" என்றார் காமனெயி.

காமனெயி உரைக்கு முன்பாக நஸ்ரல்லாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்திய காமனெயி, "நஸ்ரல்லா எனது சகோதரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகவும், என்னுடைய பெருமையாகவும் இருந்தார். இஸ்லாமிய உலகிற்கு பிடித்த நபராக அவர் இருந்தார். அவர் லெபனானின் ஒளிரும் வைரமாக இருந்தார்,” என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய தாக்குதலில் நஸ்ரல்லா இறந்ததைத் தொடர்ந்து காமனெயி இரானில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில ஊடக செய்திகள் தெரிவித்தன.

இஸ்ரேலில் விழுந்த இரானிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் ஒரு பகுதி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலில் விழுந்த இரானிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் ஒரு பகுதி

நஸ்ரல்லாவின் கொலைக்குப் பிறகு சூளுரைத்த ஹிஸ்புல்லா-ஹமாஸ்

லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட பல ஹெஸ்பொலா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

சில மணிநேரங்களுக்கு பிறகு, நஸ்ரல்லா இறந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கை ஹெஸ்பொலாவிடமிருந்து வந்தது.

அதேசமயம் இஸ்ரேலுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்வது குறித்து ஹெஸ்பொலா பேசியது.

ஹெஸ்பொலாவின் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "எங்கள் போர் ஹெஸ்பொலாவுக்கு எதிரானது, லெபனான் மக்களுக்கு எதிரானது அல்ல,” என்று கூறினார்.

அவர் நஸ்ரல்லாவை 'இஸ்ரேலின் மிகப்பெரிய எதிரிகளில் ஒருவர்' என்று விவரித்தார்.

மறுபுறம் இரங்கல் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு, "நாங்கள் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுடன் நிற்கிறோம்" என்று கூறியது.

காமனெயி என்ன செய்தியை தெரிவிக்க முயன்றார்?

பிபிசி செய்தியாளர்கள் ஷாயென் சர்தாரிஸ்தே மற்றும் குன்ஷே ஹபிபியாசாத் ஆகியோரின் பகுப்பாய்வு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெனரல் காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு அயதுல்லா அலி காமனெயி ஆற்றிய உரையைப் போலவே தற்போதைய உரையும் கருதப்படுகிறது.

அமெரிக்கத் தாக்குதலில் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார்.

தெஹ்ரானின் மையத்தில் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் ஆற்றிய இந்த உரையின் மூலம் காமனெயி, இரானின் வலிமையை உலகிற்குக் காட்டியதுடன், தனது நாட்டு மக்களை சமாதானப்படுத்தவும் முயன்றார்.

உண்மையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா மற்றும் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து காமனெயி தனது உயிருக்கு பயப்படுவதாக வெளியான செய்திகளை மறுக்கும் முயற்சியாக அவர் ஒரு பொது மேடையில் தோன்றினார்.

ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சி என்றும் இதைக்கூறலாம். இந்த உரையின்போது இரானின் புதிய அதிபர் மசூத் பெஜேஷ்கியன் மற்றும் அரசின் முக்கிய தலைவர்களும் அங்கு இருந்தனர்.

இரானும் இஸ்ரேலும் தங்கள் பகையை ஏதோ ஒரு இடத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மசூத் பெஜேஷ்கியன் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த கருத்து காரணமாக அவர் அடிப்படைவாதிகளின் விமர்சனத்திற்கு ஆளானார்.

இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக பிராந்தியத்தில் இரானுக்கு இருக்கும் ஆதரவு பாதிக்கப்படும் என்ற அச்சத்தையும் காமனெயி நிராகரித்தார்.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அவர் மீண்டும் ஒருமுறை நியாயப்படுத்தினார்.

ஹனியா மற்றும் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகும் இரான் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்துப் போரிடும் என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

43 minutes ago, ஏராளன் said:

நுணலும் தன் வாயால் கெடும்

விரைவில் இந்த பழமொழி மீண்டும் நீரூபிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈராக்,லிபியாவை அடிச்ச நினைப்பில இப்பவும் கொஞ்சப்பேர் திரியினம்.... என்னத்த சொல்ல?
சிரியாவில நேட்டோவும் அதில தொங்கின கொஞ்ச நாடுகள் வாயை மூடிக்கொண்டு வெளிய வந்தது பிபிசி சிஎன்என் கொம்பனியள் தெரிஞ்சும் தெரியாமலும் இருப்பினம் 😄

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இரானிய தாக்குதலை "தோல்வியுற்றது மற்றும் பயனற்றது" என்று விவரித்தது. இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின.

F-35 போர் விமானங்களை வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய விமானப்படையின் `Nevatim’ தளத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடற்படை பகுப்பாய்வு மையத்தை சேர்ந்த டெக்கர் ஈவெலத் கூறுகையில், புகைப்படங்கள் 32 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை காட்டியது. F-35 போர் விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அருகில் சேதங்கள் இருந்தது. அவை தப்பித்தது அதிர்ஷ்டம் தான் " என்றார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.