Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   04 OCT, 2024 | 10:24 AM

image

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இந்நிலையில், அவரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்டெம்பர் மாதம்  21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் ஆவார். 

https://www.virakesari.lk/article/195440

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் செய்த தவறையே இவரும் செய்ய வாய்ப்புள்ளது. போறதுதான் போறார், முதல், ஒரு ராசியான நாட்டிற்கு போகக்கூடாதா? கொள்ளிக்கண் நாட்டிற்கா போக வேண்டும்?  

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கர் வந்து காலில் விழுந்திருப்பாரோ? நீங்கள் முதலில் எங்கன்ட நாட்டுக்கு வாங்கோ..இது எங்கன்ட மானப்பிரச்சனை தயவு செய்து சீனாவுக்கு சென்று எங்களிடம் உள்ள கொஞ்ச மான்த்தை கெடுத்து போடாதையுங்கோ என்று கேட்டிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எல்லோரும் செய்த தவறையே இவரும் செய்ய வாய்ப்புள்ளது. போறதுதான் போறார், முதல், ஒரு ராசியான நாட்டிற்கு போகக்கூடாதா? கொள்ளிக்கண் நாட்டிற்கா போக வேண்டும்?  

செய்தியின் உண்மைத் தன்மை தெரியவில்லை.ஊகத்திலேயே எழுதுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்தியின் உண்மைத் தன்மை தெரியவில்லை.ஊகத்திலேயே எழுதுகிறார்கள்.

இல்லை, நாட்டிலே ஒரு மாற்றம் வந்ததோ வரேல்லையோ இவர்கள் வந்துவிடுவார்கள், உறவு கொண்டாடி,  அழைப்பு விடுத்து கட்டுப்படுத்த.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை முன்னேறுவதற்கு இந்தியா விடாது. இந்தியா இலங்கைக்கு ஒரு சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஜெய்சங்கர் வந்து காலில் விழுந்திருப்பாரோ? நீங்கள் முதலில் எங்கன்ட நாட்டுக்கு வாங்கோ..இது எங்கன்ட மானப்பிரச்சனை தயவு செய்து சீனாவுக்கு சென்று எங்களிடம் உள்ள கொஞ்ச மான்த்தை கெடுத்து போடாதையுங்கோ என்று கேட்டிருப்பார்

அதே அதே,......🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு

04 OCT, 2024 | 08:28 PM
image

இலங்கை ஜனாதிபதியை இருதரப்பிற்கும் பொருத்தமான திகதியில்  இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195514

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஒரேயடியாக காலில் விழுந்துவிட்டானய்யா,....🤣

11 hours ago, putthan said:

ஜெய்சங்கர் வந்து காலில் விழுந்திருப்பாரோ? நீங்கள் முதலில் எங்கன்ட நாட்டுக்கு வாங்கோ..இது எங்கன்ட மானப்பிரச்சனை தயவு செய்து சீனாவுக்கு சென்று எங்களிடம் உள்ள கொஞ்ச மான்த்தை கெடுத்து போடாதையுங்கோ என்று கேட்டிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒரேயடியாக காலில் விழுந்துவிட்டானய்யா,....🤣

அனுமான்+ராமன் = அனுரா 
பாரத்தின் எல்லை காவலன் நீங்கள் ....இராவண வம்சத்தை லங்காபுரியிலிருந்து அழித்த அழிக்க துணை போகும் உங்களுக்கு எனது பாத நமஸ்காரம் என காலில் விழுந்து இருப்பார்....அனுமானும் ராமரும் சேர்ந்த கலவை நீங்கள் ...அனுரா பகவானுக்கு ஜெ...லங்கா மாதாவுக்கு ஜெ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடியும் இலங்கை வர வேண்டும்; ஜனாதிபதி அநுர ஜெய்சங்கரிடம் தெரிவிப்பு

வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கை வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் இந்நாட்டுக்கு வருகைத்தர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய – இலங்கை உறவுகளைப் பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக்கொள்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்திய வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்ப்புகளைத் தொடர்ந்தும் பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார். – என்றுள்ளது.

https://thinakkural.lk/article/310307

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார். – என்றுள்ளது.

இதனை பார்க்கும் போது தெரிகிறது அனுராவோ, ரணிலோ, சயித்தோ இந்தியாவினை பொறுத்தவரை வெவ்வேறு பெயர்கள் ஆனால் இந்திய நலனுக்கு வெளியே இலங்கை ஜனாதிபதி யாராக இருந்தாலும் சிந்திக்க முடியாது என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விடயம் அல்ல. இதுவே உலக ஜதார்த்தம்

தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார்.  

ஆரம்பத்தில் இந்தியாவை ஆக்ரோஷமாக  எதிர்த்த புலிகள் கூட  உலக அரசியல் சற்றே புரிய தொடங்கிய பின்னர் தமது தவறை உணர்ந்து இந்தியாவுடன் அனுசரித்து போக பல தடவைகள் முயன்றனர். துன்பியல் சம்பவம், அன்ரன்  பாலசிங்கத்தின் இந்திய ஊடகத்திற்கான பேட்டி   2002 பேச்சுவவர்த்தையை முழுமையாக   இந்தியாவில் நடத்த புலிகளின் முன்மொழிவு என்று பல தடவை இந்தியாவை அனுசரித்து போகவே விரும்பினர்.  ஆனால் புலிகளில் கடும் போபமுற்றிருந்த இந்தியாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து  போவதை தவிர்கக முடியாது.  ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார்.  

சீன ஊடுருவலை தடுப்பதற்கு பாக்கிஸ்தானால் வருகின்ற ஆபத்தை தடுப்பதற்கு இந்தியாவின் பாதுகாப்பு அரணாக தமிழீழம் நாடு நிற்க்கும் என்று நாடு உருவாக முன்பே உறுதிமொழி வழங்கிவிட்டனராம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து  போவதை தவிர்கக முடியாது.  ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது.

ஆனால் இவற்றுடன் சுயநலனும் உண்டு, அது சில வேளைகளில் நாட்டின் நலனை பின் தள்ளிவிட்டு விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, island said:

இது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விடயம் அல்ல. இதுவே உலக ஜதார்த்தம்

தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார்.  

ஆரம்பத்தில் இந்தியாவை ஆக்ரோஷமாக  எதிர்த்த புலிகள் கூட  உலக அரசியல் சற்றே புரிய தொடங்கிய பின்னர் தமது தவறை உணர்ந்து இந்தியாவுடன் அனுசரித்து போக பல தடவைகள் முயன்றனர். துன்பியல் சம்பவம், அன்ரன்  பாலசிங்கத்தின் இந்திய ஊடகத்திற்கான பேட்டி   2002 பேச்சுவவர்த்தையை முழுமையாக   இந்தியாவில் நடத்த புலிகளின் முன்மொழிவு என்று பல தடவை இந்தியாவை அனுசரித்து போகவே விரும்பினர்.  ஆனால் புலிகளில் கடும் போபமுற்றிருந்த இந்தியாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து  போவதை தவிர்கக முடியாது.  ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது. 

நீங்கள் நல்ல மனோதிடம் உள்ள நபராக இருப்பீர்கள் என கருதுகிறேன், நான் இதனை முன்னமே எதிர்பார்த்திருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகிவிட்டது எல்லோரையும் போல இவரும் போய்க்காலில் விழுந்துவிட்டாரே என, ஆனால் நீங்கள் புலிகளே அனுசரித்து போனார்கள் என்று இலகுவாக கடந்து சென்றுவிட்டீர்கள்.

ஆனால் நான் இவரிடம்  இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன்😁.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முன்னர் டெல்லி செல்ல ஜனாதிபதி அநுர அவதானம் : சீன உயர்மட்ட குழு விரைவில் கொழும்பு வரும்

06 OCT, 2024 | 11:56 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்) 

இலங்கைக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளை கையளித்திருந்தார். இதன்போது டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் டெல்லிக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவதானம் செலுத்தியுள்ளார். எனினும், இறுதி திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய விஜயம் குறித்து அறிவிக்கப்படவுள்ள நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்துறையின் விசேட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்த அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இரு தரப்புகளுமே விஜயம் குறித்து எவ்விதமான தகவல்களையும் இன்றளவில் வெளிப்படுத்தவில்லை.  

இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான சன் ஹையான் முன்னெடுத்திருந்தார். 

மேலும், பெய்ஜிங்கில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையில் தாம்  ஆட்சியைக் கைப்பற்றினால் நெருக்கடியின்றி நாட்டை நிர்வகிப்பதற்கு சீனாவிடமிருந்து என்ன வகையான உதவிகளை வழங்க முடியும் என சீன அதிகாரிகளிடம் அநுரகுமார திசாநாயக்க கேட்டிருந்தார். 

இந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த துணை அமைச்சர் சன் ஹையான் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்துக்கு சென்று, அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.  

இதன்போது, சீனாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய விசேட முன்மொழிவுகளையும் உறுதிமொழிகளையும் கையளித்திருந்தார். உள்நாட்டு பொருளாதார ஊக்குவிப்பின் முதல் கட்டமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாத வகையில் சீனா இலங்கைக்கு உதவ முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

இரு வருடங்களுக்குள் சீனாவில் இருந்து ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடியும் என துணை அமைச்சர் சன் ஹையான் அந்த சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்றாலும், இலங்கையில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக ஒரு கோடி வரை அதிகரிக்க முடியும். எனவே தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களது வேண்டுகோளுக்கிணங்க சீரான பொருளாதார முன்னேற்றம் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை சீனா வழங்கும் என்ற உறுதிப்பாட்டை சீன துணை அமைச்சர் வழங்கியிருந்தார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் சீன தூதுவரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயங்கள் மற்றும் புதிய பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். இதற்கு அமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் சுற்றுலாப் பருவத்தில் 30 இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்த சுற்றுலா பருவத்தில் அந்த தொகையை 60 இலட்சமாக உயர்த்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது. 

மேலும் அடுத்தகட்ட ஒத்துழைப்புகளுக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரவின் சீன நட்பு குறித்து மேற்குலகம் உள்ளிட்ட பிற நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சீனா, இந்தியா, மேற்கு நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தும் மிகவும் கவனமான பயணத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துள்ளமை வெளிப்படுகின்றது. அதேபோல் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஏனைய ஜனாதிபதிகள் போல் அநுரகுமார திசாநாயக்க மிக விரைவில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195601

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.