Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

07 Oct, 2024 | 03:50 PM

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்   என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.  

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.  

அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம். 

தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.அந்த அழை தற்போது எங்களிடம் பரவியுள்ளது. 

ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.  

அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.  

அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம்,கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற  கேள்வி இருக்கிறது என்றார்.   

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை ; ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்! | Virakesari.lk

Posted

நிச்சயமாக தமிழ்க்கட்சிகள் தமிழர் பிர்ச்சனைகளை தீர்க்காது. 
ஜே வி பியோ சிங்கள கட்சிகளோ தமிழர் பிரச்சனைகளை தீர்க்காது.
தமிழ் மக்கள் வாக்களித்து மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்க்காது என்பது உண்மைதான்.  ஜேவிபி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஒற்றையாட்சிக்குள்தான் அவர்களது தீர்வு இருக்கும்.  தமிழர் அரசியல் சாணக்கியம் 2009 இற்கு பின்னர் தோற்றது என்றால் அதற்கு முன்னர் கிடைத்த சில வாய்ப்புக்களை நந்தவனத்து ஆண்டியாக போட்டுடைத்ததே கசப்பான வரலாறு!

ஆனால் ஏதேனும் மாற்றம் நடந்து தப்பித் தவறியேனும் தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்த்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுண்ணிகளும் பட்டாசு கோஷ்டிகளும் ஆய்வாளர்களும் முனைப்பாக இருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கடந்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள்.

 

Edited by வாலி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாலி said:

 தமிழர் அரசியல் சாணக்கியம் 2009 இற்கு பின்னர் தோற்றது என்றால் அதற்கு முன்னர் கிடைத்த சில வாய்ப்புக்களை நந்தவனத்து ஆண்டியாக போட்டுடைத்ததே கசப்பான வரலாறு!

 

 

மீண்டும் பழையபடி ஆரம்பத்திலிருந்தா .....ஐயோ சாமி ஆளைவிடுங்கோ.....
 

3 hours ago, வாலி said:

 

ஆனால் ஏதேனும் மாற்றம் நடந்து தப்பித் தவறியேனும் தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்த்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுண்ணிகளும் பட்டாசு கோஷ்டிகளும் ஆய்வாளர்களும் முனைப்பாக இருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கடந்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள்.

 

தப்பி தவறி நடக்கவிடாமல் தடுக்க சிங்களவர்களில் அதிகபேர் இருக்கினம் ..சிங்கள் ஒட்டுண்ணிகளும்,ஆய்வாளர்களும் ,பட்டாசுகோஸ்டிகளும்,வெசாக் வெளிச்சவீட்டு கோஸ்டிகளும் தாராளமாக இருக்கினம்.....ஆகவே என்னை போன்ற தமிழ் கோஸ்டிகளின் காட்டில மழை தான் 
😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாலி said:

தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்க்காது என்பது உண்மைதான்.  ஜேவிபி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஒற்றையாட்சிக்குள்தான் அவர்களது தீர்வு இருக்கும்

தமிழர்கள் அதுவும் இலங்கையில் வாழும் தமிழர்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள் என்பதை விட  சிங்கள மக்கள் இப்படிச் செய்வார்கள் என்பதே வரலாறு.

தமிழ் மக்கள் எத்தனை வீதம் தேசிய மக்கள் சக்தியை
ஆதரிப்பார்கள் என்ற கேள்வி தான் இப்போது மேலோங்கி நிற்கின்றது

சுமந்திரனின் அட்டகாசம் மக்களை தேசிய மக்கள் சக்தியை நோக்கியே அழைத்துச் செல்லும் 

6 hours ago, பிழம்பு said:

ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.