Jump to content

Recommended Posts

Posted

 

2h 
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரப் பீரங்கிகளுக்கு:
நேற்று எமது வேட்பு மனுக்கள் நான்கு தேர்தல் மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாவது, இன்று கையளிக்கப்படும்.
எமது கட்சி 75 வருடங்களுக்கு முன்பு மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கம். அன்றிலிருந்து இன்று வரை அந்த நேரிய பாதையில் உறுதியாகப் பயணித்து வருகிறோம். தனி மனித சலுகைகளுக்கு விலை போகாமலும் கண்ணியத்தில் தவறாமலும் வாழ்ந்து காட்டியிருக்கிறோம்.
ஒரு தடவை, “இங்கு ஒரு எருமை இருக்கிறது; அதை மேய்க்க யாழ்ப்பணத்திலிருந்து ஒரு இடையன் வருகிறான்” என்று கல்குடாவில் மாற்றுக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டதற்கு பதில் சொல்லும் முகமாக, எமது மேடைப் பேச்சாளர் ஒருவர் தந்தை செல்வா பிரசன்னமாகியிருந்த கூட்டத்தில் அவர்களை விமர்சிக்கத் தொடங்கியபோது, தந்தை எழுந்து சென்று “அப்படிப் பேசக் கூடாது” என்று தடுத்தார். “ஐயா, அவர்கள் உங்களை தரக் குறைவாகப் பேசுகிறார்களே” என்று சொன்ன போது தந்தை செல்வா கூறியது: “அவையள் பேசுவினம்; ஆனால் நாங்கள் அப்படிப் பேசக் கூடாது”!
இப்படியான பாரம்பரியத்தில் வளர்ந்த எமது கட்சியை பிரதிநிதிப்படுத்துகிற நாம், ஒருபோதும் தரக் குறைவாக பேசவோ, எழுதவோ கூடாது. எவ்வளவுக்கு மற்றவர்கள் எம்மைத் தூண்டினாலும், நமது தராதரத்தை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது. கேடான அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்; கட்சித் தாவல்களை மக்கள் வெறுக்கிறார்கள்; சேறு பூசுதலை அறவே வெறுக்கிறார்கள்.
எமது கட்சியின் உன்னத விளுமியங்களை நாம் கடைப்பிடிப்போம். சுத்தமான அரசியல் கலாச்சாரத்துக்கான திசைகாட்டி எம்மிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.
“அவையள் பேசுவினம்; ஆனால் நாங்கள் அப்படிப் பேசக் கூடாது”
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nunavilan said:

திசைகாட்டி

 

7 minutes ago, nunavilan said:
கலாச்சாரத்துக்கான திசைகாட்டி எம்மிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.
“அவையள் பேசுவினம்; ஆனால் நாங்கள் அப்படிப் பேசக் கூடாது”

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது சரி   அந்த பொய்யுரைக்கிறதை  நீதிமன்றத்தில் மட்டும் வைத்து கொள்ளலாம்    தமிழரசு கட்சி  நீதிமன்றம் இல்லையே??   

தொழில் வேறு. சமூக சேவை வேறு என சொல்ல வருகின்றீர்கள்? 😎

27 minutes ago, Kandiah57 said:

வழக்குகளும் இல்லை  ஏன் பொய் சொல்ல வேண்டும் ??  

தமிழரசுகட்சியில்  இல்லாத பித்தலாட்டங்கள்?????   சிங்களவனே காறித்துப்பும் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Kandiah57 said:

இலங்கை வாழ். தமிழ் மக்கள் இவருக்கு தண்டனை வழங்குவர்கள். 🙏

சென்ற தேர்தலில் ரவிராஜ் மனைவி கண்கலங்கிய படி சென்றது நினைவிற்கு வருகின்றது...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

 

2h  · 
 
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரப் பீரங்கிகளுக்கு:
நேற்று எமது வேட்பு மனுக்கள் நான்கு தேர்தல் மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாவது, இன்று கையளிக்கப்படும்.
எமது கட்சி 75 வருடங்களுக்கு முன்பு மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கம். அன்றிலிருந்து இன்று வரை அந்த நேரிய பாதையில் உறுதியாகப் பயணித்து வருகிறோம். தனி மனித சலுகைகளுக்கு விலை போகாமலும் கண்ணியத்தில் தவறாமலும் வாழ்ந்து காட்டியிருக்கிறோம்.
ஒரு தடவை, “இங்கு ஒரு எருமை இருக்கிறது; அதை மேய்க்க யாழ்ப்பணத்திலிருந்து ஒரு இடையன் வருகிறான்” என்று கல்குடாவில் மாற்றுக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டதற்கு பதில் சொல்லும் முகமாக, எமது மேடைப் பேச்சாளர் ஒருவர் தந்தை செல்வா பிரசன்னமாகியிருந்த கூட்டத்தில் அவர்களை விமர்சிக்கத் தொடங்கியபோது, தந்தை எழுந்து சென்று “அப்படிப் பேசக் கூடாது” என்று தடுத்தார். “ஐயா, அவர்கள் உங்களை தரக் குறைவாகப் பேசுகிறார்களே” என்று சொன்ன போது தந்தை செல்வா கூறியது: “அவையள் பேசுவினம்; ஆனால் நாங்கள் அப்படிப் பேசக் கூடாது”!
இப்படியான பாரம்பரியத்தில் வளர்ந்த எமது கட்சியை பிரதிநிதிப்படுத்துகிற நாம், ஒருபோதும் தரக் குறைவாக பேசவோ, எழுதவோ கூடாது. எவ்வளவுக்கு மற்றவர்கள் எம்மைத் தூண்டினாலும், நமது தராதரத்தை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது. கேடான அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்; கட்சித் தாவல்களை மக்கள் வெறுக்கிறார்கள்; சேறு பூசுதலை அறவே வெறுக்கிறார்கள்.
எமது கட்சியின் உன்னத விளுமியங்களை நாம் கடைப்பிடிப்போம். சுத்தமான அரசியல் கலாச்சாரத்துக்கான திசைகாட்டி எம்மிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.
“அவையள் பேசுவினம்; ஆனால் நாங்கள் அப்படிப் பேசக் கூடாது”

நீங்கள் வீட்டில் இருக்க வேண்டியவர்கள்   வீட்டுக்கு வெளியில் அதிரடிப்படையினரின்.  பாதுகாப்பு இல்லாமல்   திரியக்கூடாது    இந்த முறை உங்களுக்கு வாக்குகள்.  போட முடியாது    ஏனெனில் தமிழரசு கட்சி தலைவர் இல்லாத கட்சி   நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு  யார் தலைவர் என்று வந்த பின்.  வாக்கு போடுகிறோம் 🙏



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
    • Chesswithlokesh  ·  Suivre 16 h  ·  Anand passing it to Gukesh ! 2 world champions
    • இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை  ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன்.  பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”
    • இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும். சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.