Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.

 

  • Like 7
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஏராளன்,  இந்த வீடியோவில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

Edited by Kavi arunasalam
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

ஏராளன்,  இந்த வீடியோவில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

கவி ஐயா, 26ஆவது நிமிடத்தின் பின் கீழே தொப்பி அணிந்து சிவப்பு முச்சக்கர வாகனத்தில் இருப்பவர் தான்.

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கிராம சேவகர் நல்ல விடயங்களை  செய்கின்றார்...பாராட்ட பட வேண்டிய நபர்...வீடுகளில் மக்கள் மரங்களை நட ஊக்கப்படுத்த வேண்டும் ஆனால் இது ஒர் கடினமான விடயம்....

  • Like 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024

சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர்.

கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவையான நேரத்தில் செய்யும் உதவி மிகவும் பாராடட   படத்தக்கது .உதவி செய்ய பணம் அனுப்பி  உதவி செய்த்தவர்களுக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் மிக்க   நன்றி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க‌ட‌ நிறுவ‌ண‌த்துக்கு என‌து பாராட்டுக்க‌ள் ஏராள‌ன் அண்ணா...................மெல் மேலும் இப்ப‌டியான‌ உத‌விக‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போய் சேர‌னும்

உத‌விய‌ ந‌ல் உள்ள‌ங்க‌ளுக்கும் ந‌ன்றி.................................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலர் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2024 பகுதி 1

 

"சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள்" நிகழ்வை சிறப்பாகச் செயல்படுத்த உதவி செய்த அனைவருக்கும் எனது  இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரங்கத்தைப் பொருள் படுத்திய சிறப்பான பேச்சாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள், அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
முக்கியமாக, இன்று வருகை தந்த மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கும், அவர்களை ஆதரித்து வந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியை உரத்து சொல்கிறேன்.

இத்தகைய நாள் வழக்கமாக நினைவில் கொள்ளப்பட்டு, பலருக்கும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டு வரத் தகுந்த நிகழ்வாக அமைய வேண்டும்.

எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்து சிறப்புரையாற்றிய வட்டு இந்துக் கல்லூரி உப அதிபர் திரு கோகிலராஜன் அவர்களுக்கும்
NIST கல்வி நிறுவன நிர்வாகிகள் திரு சிவராஜா(பொறியியலாளர்), நல்ல பல கருத்துகளை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். திருமதி சி.சுகுணதேவி அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இயற்கைப் பண்ணையாளர் திரு ரவிசங்கர் அவர்களுக்கும்
தாதிய உத்தியோகத்தர் திரு கிருஸ்ணகுமரன்(கிரி) அவர்களுக்கும் உளமார நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவறூபன்(விசேட தேவைப் பிரிவு), சிறப்புரையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜீவானந்தம், சுழிபுரம் கிழக்கு கிராமசேவகர் திரு ராஜ்கண்ணா, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சிறப்புரையாற்றிய எமது புலர் அறக்கட்டளை நிர்வாகி கிராமசேவகர் திரு சிவறூபன், வரவேற்புரை நிகழ்த்திய தலைவர் கு.பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய உபசெயலாளர் திரு சிறிதரன் அவர்களுக்கும் எமது நிர்வாக உறுப்பினரும் யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கும் நிர்வாக உறுப்பினர் திருமதி அபிராமி அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய செயலாளர் திரு பரணீதரனுக்கு சிறப்பு நன்றிகள். 

வருகை தந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நான்காவது ஆண்டாகவும் இலவசமாக மண்டபம், ஒலிபெருக்கி மற்றும் தளபாடங்களைத் தந்துதவிய வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.
இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் தோள் கொடுத்த உறவுகள், நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நாள் சாத்தியமாகியிருக்காது.

பரிசுப் பொருட்கள் வாங்க  உதவிய திரு பரணீதரன் அவர்களுக்கும் உளமார நன்றி கூறிக்கொள்கிறோம். வீடியோ பதிவில் உதவிய செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், திருமதி வனஜா அவர்களுக்கும் மேலும் யாராவது தவறவிடப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் (பணிச்சுமை காரணமாக) தன்னுடைய மனப்பூர்வ ஆதரவை வழங்கிய வர்களான, 
வடமாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களுக்கும்,
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் Dr. R.சுரேந்திரகுமாரன் அவர்களுக்கும்,
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களுக்கும்,
வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு பாலறூபன் அவர்களுக்கும்,
பல்மேரா றிசோட் நிறுவனர் திரு சுகந்தன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வசிக்கும் 110 கருணை  உள்ளங் கொண்ட நன்கொடையாளர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய  நன்கொடைகள் மூலமாகவே எமது அமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. உங்கள் எல்லோரினதும் ஆதரவினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்(5kg அரிசி, 1kg பருப்பு, 1kg சீனி, 2சோயாமீற் அடங்கிய முப்பது பொதிகள்), போர்வைகள் மற்றும் சிற்றுண்டிகள், தேநீர் ஆகியவற்றை இன்று வழங்கியுள்ளோம்.

சிற்றுண்டி வழங்கல் தேநீர் வழங்கல் மற்றும் பொதிகள் வழங்கலில் ஈடுபட்ட திரு கோபிக்குமரன், திரு அறிவுக்குமரன், செல்வன் ரேனுஜன், செல்வன் பிவிசன் ஆகியோருக்கும் தேநீர் தயாரித்து வழங்கிய திரு கிருபா அண்ணா, திரு மோகன், திரு சீலன் ஆகியோருக்கும் பெயர் தெரியாது உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.

எஞ்சியிருந்த மரக்கன்றுகள் மேலும் சிலருக்கு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆதரவை வெளிப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

viber_image_2024-12-03_21-59-27-440.jpg

viber_image_2024-12-03_21-59-30-664.jpg

viber_image_2024-12-03_21-59-27-809.jpg

viber_image_2024-12-03_21-59-28-234.jpg

viber_image_2024-12-03_21-59-28-707.jpg

viber_image_2024-12-03_21-59-29-085.jpg

viber_image_2024-12-03_21-59-29-465.jpg

viber_image_2024-12-03_21-59-29-900.jpg

viber_image_2024-12-03_21-59-30-284.jpg

நிகழ்வின் சில படங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் சேவை தொடரட்டும் நன்றிகள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலர் அறக்கட்டளையால் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/24 பகுதி2

PULAR TRUST Contact +94777775448 (whatsapp, viber, telegram, signal)

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்வில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இருந்து பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

ஒளிப்பதிவு உதவி செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், சகோதரி வனஜா.

  • Like 1
  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.