Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,DOORDARSHAN

படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா
18 அக்டோபர் 2024, 13:23 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’, என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட பிரசார் பாரதி

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து பிரசார் பாரதி இது குறித்து ஒரு விளக்கக் குறிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'தவறுக்கு மன்னிப்பு கோருவதாக' அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பித்த, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில், ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார்’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழையோ, அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவரிடம் இல்லை. வேண்டும் என இதனை யாரும் செய்யவில்லை,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இனவாதக் கருத்து’ - ஆளுநரின் பதில்

இந்தச் சர்ச்சை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டாலினின் குற்றச்சாட்டு ‘பொய்யானது’ என்றும், ‘இனவாதம்’ என்றும் கூறியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் அவரது பதிவில், “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச் சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் [மு.க.ஸ்டாலினுக்கு] நன்றாகத் தெரியும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,” என்று கூறியிருக்கிறார்.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘இனவாதக் கருத்துக்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் தான் இருப்பதாக’ ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரலாறு

இந்நிலையில், 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? என்பதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கலாம்.

இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891-இல் வெளியான தமது 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா.

1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

அன்றே நீக்கப்பட்ட வரிகள்

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்

உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்"

என்பவையே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்
படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்...

மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், இந்தப் பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.

மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89

படக்குறிப்பு, 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது

பாரதிதாசன் பாடல் பரிசீலனை

பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானது

இதற்கு முந்தைய சர்ச்சை

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைச் சுற்றி அரசியல் சர்ச்சை உருவாவது இது முதல்முறை அல்ல.

2018-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றிவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து அப்போது பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். "மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்" என்று கூறிய அவர் "இது எங்கள் சம்பிரதாயம்" என்றும் தெரிவித்தார்.

தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்" என்று கூறிய அந்த நிர்வாகி, "தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து 2021-ஆம் ஆண்டு, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

(இந்தக் கட்டுரையில் 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானபோது பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து தகவல்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.)

  • கருத்துக்கள உறவுகள்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
இப்பாடலில் இரண்டாம் பத்தியில்....
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே"
என தனித்தே வருகின்றது.
இவ்வரிகளை சேர்த்துப் பாடினால் முன்னுள்ள திராவிட திருத்தம் தெரிந்துவிடும் அபாயம் தவிர்க்கவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
"தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்" என்பதை.
"திராவிடநல் திருநாடும்" என மாற்றி பாடபட்டிருக்கிறது.
அறத்தோடு சிந்தியுங்கள்
அடையாளம் மறைக்கும் சூழ்ச்சி யாரால் இயற்றப்பட்டது என்பதை அறிந்துத் தெளிக தமிழினமே.?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடம் எனும் சொல் தமிழ்நாட்டிற்கு ஏன்?
தேவையில்லாத ஆணிய புடுங்குவதே சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது? டிடி தமிழ் சொல்வது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம்,DD TAMIL

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 18 அக்டோபர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

"தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை," என டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக அந்த விழாவில் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

'தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்' என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின் .

டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழாவில் என்ன நடந்தது? ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தி.மு.க கொதிப்பது ஏன்?

என்ன நடந்தது?

சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதைப் பாடியவர்கள், 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடினர். டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

'தேசிய கீதத்தில் திராவிடம்' - ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்' எனப் பதிவிட்டுள்ளார்.

'சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்' என ஆளுநர் ஆர்.என்.ரவியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின், 'இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் ஆளுநர் இழிவுபடுத்துகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

'திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?' என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம்,X/MKSTALIN

டிடி தமிழ் அளித்த விளக்கம்

இதுகுறித்து, டிடி தமிழ் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. " ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்' என்று சக ஊழியர்கள் வந்து கூறினர்.

அவர்கள் பாடும்போது மேடையின் பின்பக்கம் ஏதோ இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்த வார்த்தை தவிர்க்கப்பட்டுவிட்டது" என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடர்ந்து, டிடி தமிழ் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

'தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச் சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டுவிட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளது.

மேலும், 'தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இதுதொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம்,X/DDTAMILOFFICIAL

ஆர்.என்.ரவி பேசியது என்ன?

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, "தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு உள்ளது என நினைத்தேன். இங்கு பரவலாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சென்று பேசும்போது, அவர்கள் இந்தி மொழியை ஆர்வத்துடன் கற்று வருவது தெரிந்தது.

"அனைத்து மொழிகளும் பாரத நாட்டின் மொழிகள் தான். காலனி ஆதிக்க காலத்தில் இந்திய மொழிகளைச் சிறுமைப்படுத்தும் வேலைகளை ஆங்கிலேயர்கள் செய்தனர். ஆங்கிலத்தை மட்டும் மொழியாக பார்த்தனர்.

"நமது மொழிகளை 'வெர்னாகுலர்' (vernacular) என அழைத்தனர். நமது மொழிகளை அடிமைகளின் மொழி என அழைத்தனர். அந்த வார்த்தையை தற்போதும் பயன்படுத்துகிறோம்," என்றார்.

அடுத்து, சமஸ்கிருதம் குறித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்த சமஸ்கிருத துறைகள் மூடப்பட்டுவிட்டன. சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த சமஸ்கிருத துறையையே அழித்துவிட்டனர்," என சாடினார்.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா எப்போதும் ஒன்றாக இருந்துள்ளது. பிரித்தாளும் கொள்கை இங்கு வெற்றி பெற்றதில்லை. நாட்டின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு தமிழ் குறித்துப் பேசுகிறவர்கள், இந்தியாவை விட்டு தமிழைக் கொண்டு செல்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்தனர்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ் இருக்கை, திருவள்ளூவர் இருக்கை ஆகியவற்றைப் பிற பல்கலைக்கழகங்களில் அமைப்பதற்கு மோதி அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தி.மு.க

பட மூலாதாரம்,RAJIVGANDHI

படக்குறிப்பு, தி.மு.க மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி

துணை முதல்வர் கருத்து

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், "டிடி தமிழ் தரப்பு மன்னிப்பு கேட்டுவிட்டனர் என்று செய்திகளில் கேட்டேன். இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி "ஒரு சில சமுதாயத்தினரை புண்படுத்தக் கூடாது என்பதற்காகச் சில வரிகளை நீக்கினார்" என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், "இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்ற வார்த்தையைத் தெரிந்தோ தெரியாமலோ நீக்கியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்றும் உதயநிதி தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தி.மு.க

பட மூலாதாரம்,UDAYSTALIN@X

படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

சீண்டுகிறாரா ஆளுநர்?

ஆளுநரின் பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, "இந்தியை எதிர்த்து தமிழ்நாடு நீண்டகாலமாகப் போராடி வருகிறது. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு இந்தி பொருந்தாது என விதிவிலக்கு பெறப்பட்டது.

"கடந்த பத்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியது. தமிழ் உள்பட சில மொழிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்," என்றார்.

"தமிழ்நாட்டில் இந்தி மாதம் கொண்டாடப்படும் என அறிவித்து நிகழ்ச்சிகளை நடத்துவது தமிழர்களைச் சீண்டிப் பார்க்கும் வேலை. இதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னின்று நடத்தி வருகிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்," என்கிறார் ராஜிவ்காந்தி.

சமஸ்கிருத மொழி சர்ச்சை

சமஸ்கிருதம் குறித்து ஆளுநர் பேசியதற்கு பதில் அளித்த ராஜிவ்காந்தி, "சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் பிறந்த மொழி அல்ல. இன்றும் தமிழகக் கோயில்களில் சமஸ்கிருதம் இருக்கிறது. அதை 'தேவபாஷை' எனக்கூறி ஒதுக்கி வைத்தது தான் சிதைவடையக் காரணம். அதற்கு நாங்கள் காரணம் அல்ல. கல்விரீதியாக சமஸ்கிருதத்தைச் சிதைக்கும் வேலையை தி.மு.க செய்ததில்லை," என்கிறார்.

"மக்களிடம் சென்று தங்கள் கொள்கைகளைக் கூறி வெற்றி பெற்ற பிறகு இவர்கள் இந்தியை உயர்த்திப் பேசட்டும். அதைவிடுத்து, ஆளுநர் மூலமாக இந்தியை உயர்த்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்க முடியாது," என்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், “சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி மாத நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, பா.ஜ.க

பட மூலாதாரம்,S R SEKHAR

படக்குறிப்பு, தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

'தோல்வியை மறைக்க நாடகம்'

"தி.மு.க., ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கு இந்தி எதிர்ப்பை மீண்டும் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்," எனக் கூறுகிறார் தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை மறைப்பதற்கு இந்தி விழாவில் ஆளுநர் பேசியதை பெரிதுபடுத்துகிறார்கள்," என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் - சீமான்

1729489082-Seeman-L-780x470.jpg

‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

நாமக்கல்லில் நேற்று (21) செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,

2016-இல் நான் அரசியலுக்கு வந்த போது புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன், தேவநேயப் பாவாணா் போன்ற தமிழறிஞா்களின் பாடலில் ஒன்றை வாழ்த்துப் பாடலாக மாற்றுவேன்.

புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. திராவிடம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே திருவள்ளுவா் உள்பட பல கவிஞா்களும் பாடல்களை உருவாக்கியுள்ளனா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பாடலை நீண்ட நாள் பாடியாயிற்று, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்பது அகற்றப்படும், புதிய தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும். தமிழா் கழகம் என பெரியாா் வைத்த பெயரை, திராவிடா் கழகம் என மாற்றியது யாா் என்பது இந்த உலகுக்கு தெரியும்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.

‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 10இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.

https://akkinikkunchu.com/?p=296186

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆட்சிக்கு வரமாட்டேன் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2024 at 22:25, புலவர் said:

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
இப்பாடலில் இரண்டாம் பத்தியில்....
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே"
என தனித்தே வருகின்றது.
இவ்வரிகளை சேர்த்துப் பாடினால் முன்னுள்ள திராவிட திருத்தம் தெரிந்துவிடும் அபாயம் தவிர்க்கவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
"தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்" என்பதை.
"திராவிடநல் திருநாடும்" என மாற்றி பாடபட்டிருக்கிறது.
அறத்தோடு சிந்தியுங்கள்
அடையாளம் மறைக்கும் சூழ்ச்சி யாரால் இயற்றப்பட்டது என்பதை அறிந்துத் தெளிக தமிழினமே.?

இப்பாடல் குறித்த உண்மை வரலாற்றை ஏற்கனவே வாசித்தது உண்மைகளை அறிந்ததாலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய அசல் பாடலிலேயே “திராவிடர் நல் திருநாடும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ள உண்மை  தெரிந்ததாலும் நீக்கப்பட்ட வரிகள் உத்தியோகபூர்வமாக காரணம் கூறப்பட்டு தமிழ் நாடு அரசிலால் நீக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்ததாலும்  புலவர் இங்கு பகிர்ந்த  யாரோ உண்மை தெரியாத  ஒருவரின் உளரல்   எழுத்தை  வாசித்தபோது எனக்கு 

“புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” என்ற ஆயிரம் பொய் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. 😂

தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம்நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம்எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.[1]

வரலாறு

பாடல் வரிகள்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

கவிதைக்கு பொய்யழகு என்பார். அதனால் புலவர்க்கும் பொய்யழகோ?  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

1891 இல் தென்னிந்தியாவைத் "திராவிட நல்நாடு" என்று தான் அழைத்திருப்பர், தமிழர் நல் நாடு என்று சொல்லக் கூடிய நிலை இப்போது இருந்தாலும்,அப்போது திராவிட மொழிகளின் நிலம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/10/2024 at 09:13, கிருபன் said:

ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் - சீமான்

தமிழ்நாட்டில்   நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் விமோசனமும் , பாதுகாப்பும் உண்டு.:cool:

எல்லா மாநிலத்தவர்களும் கும்மாளமடிக்கும் / கொள்ளையடிக்கும் சினிமா உலகை விரும்பினால் திராவிட சங்கம் என அழைக்கலாம்.😁

ஆனால் அந்த மண்ணையும் மக்களையும்  ஆளும் அருகதை தமிழருக்கே உரியது. 😎

வாழ்க தமிழ். 💪

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

ப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது திருத்தம் இல்லை .கருணாநிதி தன் தெலுங்குப் பாசத்தால் அந்த வரிகளைத்தவிர்த்தார். ஆரிய எதிர்ப்பே கொள்கையாக வகுத்த கருஒhநிதியியின் திராவிடக்கும்பல் இந்த வரிகளைச் சேர்த்திருக்க வேண்டும். பாடலின் பொருள் கண்ணடம் தெலுங்கு மலையாளம்>துளு போன்ற பல மொழிகளைப் பெற்றெடுத்த தாயான தமிழ்த்தாயே இவ்வளவு பிள்ளைகளைப் பெற்ற பின்பும் ஆரியம மொழியான சமஸ்கிருதம் அழந்தது பொலன்றி இன்னும் மிக இளமையதக இருக்கின்ற தன்மையை வியந்து வாழ்த்துகிறோமே என்பதாகும் . ஆரியத்தை தாழத்தி தமிழை உயர்த்திய அந்த வரிகளை கருணாநிதி ஏன் நீக்கினார் என்றால் தெலுங்கு தமிழில்இருந்து பிறந்தது என்று பாடலில் வருவதாலாகும்.திராவிட நாடு என்று எழுதியது கால்டுவல் என்ற வரலாற்சிரியர் பிழையாக எழுதிய திராவிட்தின் தாக்கத்தினாலாக இருக்கலாம். கருணாநிதிக்கு 4 வரிகளை நுpக்க உரிமை இருந்தால் சீமானுக்கு 2  சொற்களைத் திருத்துவதற்கும் உரிமை இருக்கிறது. 
சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில்
தமிழர்நல் திருநாடும்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

நாம் இங்கு பேசியது  உங்கள் கற்பனைகள், சீமான் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்கள் பற்றியதல்ல.  மனோன்மணியம் சுந்தரனார் தமிழர் திருநாடு  என்று எழுதியதாக நீங்கள் உண்மைக்கு புறம்பாக இங்கு கூறிய கூற்று தொடர்பானது மட்டுமே. 

மற்றப்படி இது தொடர்பான   உண்மை வரலாறு தெளிவாக தமிழ் நாடு அரச குறிப்புகளில் உத்தியோகபூர்வமாக உள்ளது. 

சமஸ்கிரதத்தில் இருந்து தமிழ் தோன்றியதாக பொய்யான வரலாற்றை தமிழருக்குள்    வட இந்தியாவில் இருந்து  திணித்ததை   தனது துல்லியமான ஆய்வுகள் மூலம் முறியடித்து  இந்திய வடபிரதேசங்களின் இந்தோ ஆரிய குடும்ப மொழிக்கும் தென்னிந்திய திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ஆதாரங்களுடன் நிறுவி திராவிட மொழிக்குடும்ப மொழிகளின் தனித்துவம் குறித்தும் அவை பிறந்தது தமிழ் மொழியில் இருந்து தான் என்பது  பற்றியும் தமிழ் சமஸ்கிரத்தில் இருந்து பிறந்த மொழி அல்ல என்பதையும் நிறுவிய கார்டுவேல் மீதான  கோபத்தில்  ஆர் எஸ் எஸ் சங்கிகளும் அவர்களின் கைக்கூலிகளும் மேற்கொள்ளும் பொய்பிரச்சாரங்களை நாமறிவோம். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

Anthropology யின் படி நாம் உறவுகளை கொண்டாடும் முறையில், உணவு உண்ணும் முறையில், திருமணம் சார் உறவுகள் அடிப்படையில் தமிழர், தெலுங்கர் சிங்களவர் எல்லோரும் ஒரே இனமே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

Anthropology யின் படி நாம் உறவுகளை கொண்டாடும் முறையில், உணவு உண்ணும் முறையில், திருமணம் சார் உறவுகள் அடிப்படையில் தமிழர், தெலுங்கர் சிங்களவர் எல்லோரும் ஒரே இனமே. 

 அறிவியல்ரீதியாக நிலத்தொடர்ச்சியுடன் இவ்வாறான மொழிக்குடும்பங்கள்  உலகம் முழுவதும் உள்ளது. ஐரோப்பிய மொழிகளில் லத்தீன் மொழிக்குடும்பமாக பிரெஞ்ச், இத்தாலி, ஸபானிஸ் , போத்துக்கல் ஆகிய மொழிகளும் ஜேர்மானிக் மொழிக்குடும்பத்தில் ஆங்கிலம், ஜேர்மன், சுவீடிஷ், நோர்வேஜியன் முதலிய மொழிகளும் ஸ்லாவிய மொழிகளாக ரஷ்யன், செக், ஸ்லவாக்கியன், குரோசியன், சேர்பியன், ஸ்லவேனியன் இன்னும் பல மொழிகள் உள்ளன.   

இந்தியாவில் இந்தோ ஆரியன் மொழிகளாக ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, உருது போன்ற மொழிகளையும் திராவிட மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துலு ஆகிய மொழிகளையும் கூறலாம். 

உலகின் எல்லாப் பல்கலை கழகத்தின் மொழியியல் துறையிலும்  தமிழ் திராவிட  மொழிக்குடும்பம் என்றே கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் அறிவியல் ரீதியில் அது திராவிட மொழிக்குடும்பம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

@பகிடி

இன்றைய தொழில்நுட்பத்தில் ஓருவர் தனது பூர்வீகம் பற்றிய DNA test செய்யும் வசதி உள்ளது. அதன்படி எச்சில் பரிசோதனை மூலம் தனது பூர்விகத்தை அறிய எச்சில் மாதிரியை மட்டும் அனுப்பிய ஐரோப்பாவில் பிறந்த ஈழத் தமிழ் பிள்ளைக்கு Result ஆக  ஆசிய கண்ட வரைபடத்தில் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட  மும்பாய் வரைக்குமான பிரதேசங்கள் நிறமிடப்பட்டு  அதுவே உங்கள் பூர்வீகம் என்று அனுப்பப்பட்டது. 

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.