Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இஸ்ரேல் ராணுவத்தினரால் சோதனை மையத்தில் நிறுத்திவைக்கப்பட்டவர்கள் மத்தியில் ஜூலியா
  • எழுதியவர் ,ஃபெர்கல் கியானே
  • பதவி,சிறப்புச் செய்தியாளர்

அந்த குழந்தையை ஆண்கள் அதிகமாக நிரம்பியிருக்கும் கூட்டத்தில் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் சின்னஞ்சிறிய பெண் குழந்தை, அந்த கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தார்.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கே இருந்த ஆண்களின் உடைகளையெல்லாம் பரிசோதனைக்காக நீக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர். வயதானவர்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. கேமராக்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பின. இந்த புகைப்படத்தை இஸ்ரேல் ராணுவ வீரரைத் தவிர வேறு யார் எடுத்திருக்கக் கூடும் .

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் டெலிகிராம் பக்கத்தில் தான் முதன் முதலாக இந்த புகைப்படம் பதியப்பட்டது.

ஆண்கள் அனைவரும் வருத்தத்தில் சோர்ந்திருந்தனர். அதில் சின்னஞ்சிறியப் பெண் குழந்தை அந்த கூட்டத்தில் இருந்து தன்னுடைய பார்வையை விலக்கி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தார் ஒரு பிபிசி செய்தியாளர்.

கேமராவைத் தாண்டி ஏதோ ஒன்று அந்த குழந்தையின் கவனத்தை ஈர்த்திருருக்கலாம். இல்லையென்றால் அந்த குழந்தை இஸ்ரேல் ராணுவத்தினர் வைத்திருந்த துப்பாக்கிகளையோ, இஸ்ரேல் ராணுவத்தினரையோ பார்க்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

 

வெவ்வேறு பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கே நிறுத்தியிருந்தனர். தாக்குதலில் நாசமடைந்த கட்டங்களுக்கு முன்பே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். ராணுவத்தினர், அந்த இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆண்களை பரிசோதனை செய்தனர்.

அவர்களின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. ஹமாஸிற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் வகையில் ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும், ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா என்றும் பரிசோதனை செய்தனர்.

போரின் கோரத்தால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை தனி மனிதர்களின் வாழ்வில் மிக நுட்பமாக காண முடியும். அந்த கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கும் அந்த குழந்தை, எங்கோ திரும்பியிருக்கும் அவர் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சி இந்த போர் குறித்த நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை யார்? அவருக்கு என்ன ஆனது?

ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். நிறைய நபர்கள் காயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். தொடர் வான்வழி தாக்குதல் காரணமாக குழந்தைகள் இடர்பாடுகளில் சிக்கி இறந்திருக்கின்றனர்.

மருத்துவ வசதி, மருத்துவர்கள் பற்றாக்குறைக் காரணமாக குழந்தைகள் இறந்திருக்கின்றனர். இந்த சூழலில்தான் மனதை வருத்திக் கொண்டிருந்தது இந்த குழந்தையின் புகைப்படம்.

 
இஸ்ரேல் காஸா குழந்தைகள் இறப்பு
படக்குறிப்பு, தொடர் வான்வழி தாக்குதல் மட்டுமின்றி, மருத்துவ வசதி, மருத்துவர்கள் பற்றாக்குறைக் காரணமாக குழந்தைகள் இறந்திருக்கின்றனர்.

குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்ட பிபிசி

காஸா டுடேவுடன் இணைந்து எங்களின் பிபிசி அரபிக் சேவை, இந்த குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டது. பிபிசியையோ அல்லது இதர சர்வதேச ஊடகத்தினரையோ இஸ்ரேல் ராணுவம் காஸாவில் செய்தி சேகரிப்பதை அனுமதிப்பதில்லை. இந்த காரணத்தால் பிபிசி நம்பத்தகுந்த 'ஃப்ரீலேன்ஸ்' ஊடகவியலாளர்களின் குழுக்களை அதிகமாக சார்ந்திருக்கிறது.

எங்களுடன் இணைந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் குழு வடக்கில் உதவிப் பணிகளை மேற்கோண்டு வரும் நபர்களை தொடர்பு கொண்டு, அந்த புகைப்படத்தை மக்கள் புலம் பெயர்ந்த இடங்களில் காட்டி அந்த குழந்தையை தேடத் துவங்கினார்கள்.

இரண்டு நாள் வரை எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. 48 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஒரு குறுஞ்செய்தி எங்களின் அலைபேசிக்கு வர, மனம் நிம்மதி அடைந்தது. அந்த செய்தி, "நாங்கள் அந்தக் குழந்தையை கண்டுபிடித்துவிட்டோம்."

மூன்று வயதான ஜூலியா அபு வர்தா உயிருடன் இருக்கிறார். ஜபாலியாவில் இருந்து தப்பித்து வந்து தஞ்சம் புகுந்திருக்கும் காஸா நகரில் ஜூலியாவின் வீட்டைக் கண்டுபிடித்தார் எங்கள் பத்திரிகையாளர். ஜூலியா தன்னுடைய அம்மா, அப்பா, மற்றும் தாத்தாவுடன் அவருடைய வீட்டில் இருந்தார்.

இஸ்ரேல் ராணுவத்தினரின் ஆளில்லா விமானங்கள் தலைக்கு மேலே எப்போதும் இரைச்சலுடன் பறந்து கொண்டிருக்க, ஜூலியா பாட்டுப்பாடும் கோழிகளின் கார்ட்டூன் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபர் தன் மீது கவனம் செலுத்துவதை உணர்ந்த ஜூலியா ஆச்சரியம் அடைந்தார்.

அவருடைய அப்பா, அந்த குழந்தையிடம், "யாரு நீங்கன்னு சொல்லுங்க," என்று விளையாட்டாக கேட்டார்.

அவரோ, "ஜ்ஜூலிய்ய்யா" என்று தன்னுடைய பெயரை அழுத்தமாக மழலை மொழியில் பதில் கூறினார்.

ஜூலியாவுக்கு எந்த காயமும் இல்லை. ஜம்பரும் ஜீன்ஸ் கால்சட்டையும் அணிந்திருந்தார். இரட்டை ஜடையில் அழகான பூ வேலைப்பாடு கொண்டிருந்த 'பேண்டை' அணிந்திருந்தார். குழந்தைகளுக்கே உரித்தான குறும்புத்தனம் அங்கே இல்லை. அவர் மிகுந்த எச்சரிக்கையுடம் இருந்தார்.

அவருடைய அப்பா முகமது, இந்த புகைப்படத்தின் கதையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

 
இஸ்ரேல் காஸா குழந்தைகள் இறப்பு
படக்குறிப்பு, தன் தந்தை முகமதுவுடன் ஜூலியா

21 நாட்களில் ஐந்து முறை இடம் பெயர்ந்த ஜூலியாவின் குடும்பம்

கடந்த 21 நாட்களில் ஐந்து முறை இடம் பெயர்ந்திருக்கிறது அவருடைய குடும்பம். துப்பாக்கிச் சூடுகளுக்கும், வான்வழி தாக்குதல்களுக்கும் இடையே அவர்கள் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர்.

நான்காவது முறையாக இடம் பெயர்ந்து தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்த நாளில் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹமாஸுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகின்ற அல் கலுஃபா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது.

முகமதுவின் குடும்பம் கொஞ்சம் துணிகளையும், டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளையும், சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு செல்ல தயாரானார்கள்.

ஜூலியாவின் அம்மா அமல், அப்பா முகமது, ஜூலியாவின் 15 மாத தம்பி ஹம்ஸா, தாத்தா, இரண்டு மாமாக்கள் மற்றும் அவரின் ஒரு உறவினர் அனைவரும் அல் கலுஃபா மாவட்டத்தில் இருந்து வெளியேறும் போது ஒன்றாகத்தான் இருந்தனர்.

பதற்றம் மற்றும் குழப்பத்தில் ஜூலியாவும் அவருடைய அப்பாவும் அவர்களின் குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்டனர்.

"கூட்டம் மற்றும் நாங்கள் எடுத்து வந்த பொருட்களின் காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம். என்னுடைய மனைவியால் இங்கிருந்து வெளியேறிவிட முடிந்தது. ஆனால் நான் இங்கேயே தங்கிவிட்டேன்," என்கிறார் முகமது.

அங்கிருந்து வெளியேறும் மக்களுடன் அப்பாவும் மகளும் நடக்கத் துவங்கினார்கள். வீதிகள் எங்கும் மரணம். "இறந்தவர்களின் உடல்களையும் கட்டங்களின் சேதங்களையும் நாங்கள் பார்க்க நேரிட்டது," என்கிறார் முகமது. அந்த கோரக் காட்சிகளை ஜூலியா பார்த்துவிடாமல் தடுக்க ஒரு வழியும் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், குழந்தைகள் வன்முறையில் இறந்து போனவர்களை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.

அப்பாவும் மகளும் அவர்களுடன் சேர்ந்து வந்த குழுவும் இஸ்ரேலின் சோதனை மையத்தை அடைந்தனர்.

"அங்கே ராணுவத்தினர் இருந்தனர். எங்களை நோக்கி வந்த அவர்கள் எங்களின் தலைக்கு மேலே துப்பாக்கியால் சுடத் துவங்கினார்கள். துப்பாக்கிச்சூட்டின் போது ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நகர்ந்தோம்."

உள்ளாடைகளுடன் நிற்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிட்டனர். தற்கொலைப்படையினர், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை கண்டறிய இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தும் சோதனை தான் இது.

அந்த சோதனை மையத்தில் 7 மணி நேரம் வரை தாங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் முகமது. அந்த புகைப்படத்தில் ஜூலியா அமைதியாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு நேரிட்டதை விவரிக்கிறார் அவருடைய அப்பா.

"திடீரென கத்த ஆரம்பித்துவிட்டாள். அம்மாவிடம் போக வேண்டும் என்று என்னிடம் கூறினாள்." என்றார் அவர்.

தற்போது அந்த குடும்பம் மீண்டும் இணைந்துவிட்டது. குடிபெயர்ந்தவர்கள் குழுக்களாக ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் இணக்கம் இங்கே இறுக்கமானது. ஜபாலியாவில் இருந்து தூரத்து சொந்தங்கள் வரும் செய்தி உடனுக்குடன் காஸா நகரம் முழுவதும் வேகமாக பரவுகிறது.

ஜூலியாவின் மீது அக்கறை கொண்ட அவரது உறவினர்கள் ஜூலியாவுக்கு ஆறுதலாக இருந்தனர். இனிப்புகளும், உருளைக்கிழங்கு சிப்ஸ்களும் அவருக்காக அங்கே எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் காஸா குழந்தைகள் இறப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுனிசெஃப் அறிக்கையின் படி இந்த போரில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

14 ஆயிரம் குழந்தைகள் இறப்பு

ஜபாலியாவில் இருந்து காஸா நகரத்திற்கு அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பு நடந்த நிகழ்வு ஜூலியாவின் மன நிம்மதியை எவ்வாறு பாதித்தது என்று எங்களுடன் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் முகமது கூறினார். ஜூலியாவின் நெருங்கிய உறவினர் தான் யாஹ்யா. அவருக்கு வயது 7.

ஜூலியாவின் விளையாட்டுக் கூட்டாளி யாஹ்யா. தெருக்களில் விளையாடச் சென்றால் இவர்கள் இருவரும் தான் செல்வார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலின் போது யாஹ்யா தெருவில் நின்று கொண்டிருந்தார். இஸ்ரேலின் அந்த தாக்குதலில் யாஹ்யா கொல்லப்பட்டார்.

"வாழ்க்கை மிகவும் இயல்பாக இருந்தது. ஜூலியா ஓடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தாள். ஆனால் இன்று, வான்வழி தாக்குதல் நடக்கும் போதெல்லாம் அதனைச் சுட்டிக்காட்டி அது விமானம் என்கிறாள். இடர்பாடுகளில் சிக்கிக் கொண்ட போது எங்களின் தலைக்கு மேலே பறக்கும் ஆளில்லா விமானங்களை அவள் சுட்டிக்காட்டுகிறாள்," என்று கூறுகிறார் முகமது.

யுனிசெஃப் அறிக்கையின் படி இந்த போரில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

"குழந்தைகளால் ஆரம்பிக்கப்படாத இந்த போருக்கான விலையை தினம் தினம் அவர்கள் தான் கொடுக்க வேண்டியதாய் உள்ளது," என்று யுனிசெஃப் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கிரிக்ஸ்.

"நான் பார்த்த பெரும்பாலான குழந்தைகள் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களை இத்தகைய சூழலில் இழந்திருக்கின்றனர்," என்றும் அவர் கூறினார்.

காஸா பகுதியில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும், கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு மன நல உதவிகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அனுமானிக்கிறது.

அவள் இழந்தது என்ன? அவள் பார்த்தது என்ன? அவள் எங்கெல்லாம் சிக்கியிருந்தாள் என்று யோசிக்கும் போது ஜூலியா போன்ற குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கூற இயலாது. வருங்காலங்களில் அவர்களின் கனவுகளில் என்ன வரும் என்றும், அவர்களின் நினைவில் என்ன பதிவாகி இருக்கும் என்று யாருக்குத்தான் தெரியும். ஆனால் வாழ்க்கை மிகவும் சோகத்துடன் முடிவடையக்கூடும் என்று தற்போது ஜூலியாவுக்குத் தெரியும்.

வான்வழி தாக்குதலின் போது, துப்பாக்கிச்சூட்டின் போது, பசி மற்றும் நோய் காலங்களில் ஜூலியாவை எப்படியும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய குடும்பம் ஒன்று அவருக்கு இருக்கிறது என்பது மட்டும் தான் ஆறுதல்.

கூடுதல் செய்திகளுக்காக ஹனீன் அப்தீன், ஆலிஸ் டோயார்டு, மூஸ் கேம்பெல் மற்றும் ருதாபா அப்பாஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

யுனிசெஃப் அறிக்கையின் படி இந்த போரில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

"குழந்தைகளால் ஆரம்பிக்கப்படாத இந்த போருக்கான விலையை தினம் தினம் அவர்கள் தான் கொடுக்க வேண்டியதாய் உள்ளது," என்று யுனிசெஃப் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கிரிக்ஸ்.

சிங்களக்காடைத்தன அரசு செய்த தமிழினப்படுகொலையையும், நாம் இழந்த எமது சிறுவர்களையும் நினைவூட்டுகிறது. ஆனால், பலஸ்தீனருக்காக ஐ.நாவரை களத்தில்.... ஈழத்தமிழராகி நாம் சாட்சிகளே இல்லாது அழிக்கப்பட்டு 15ஆண்டுகள்.. உலகம் நீதியின்பாலில்லை. ஆதிக்கத்திமேல் நிறுவப்பட்டள்ளதின் சாட்சியாகக் காஸா. 
நட்பார்ந்து நன்றியுடன்
நொச்சி
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கூட இருந்து அழிவுகளுக்கு  உதவிவிட்டு செய்திகளை வக்கணையாக பிரசுரிக்கும்  கேடு கெட்ட ஊடகங்கள். 😡

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

கூட இருந்து அழிவுகளுக்கு  உதவிவிட்டு செய்திகளை வக்கணையாக பிரசுரிக்கும்  கேடு கெட்ட ஊடகங்கள். 😡

இப்ப‌ கேடு கெட்ட‌ ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் இருக்கு தாத்தா பார்க்க‌ விரும்புவ‌தில்லை க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு....................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் பெரியவர்கள் ஆதரிப்பதனால் அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படுவதும் பாதிப்படைவதும் மிகுந்த கவலையளிக்கின்றது.  இதற்கு ஒரே வழி பாலஸ்தீனர் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்துவதேயாகும்!

அது சரி ஹமாஸ் பயங்கரவாதிகளினால் 2023 ஒக்டோபர் 7இல் கடத்தப்பட்ட 9 மாதக் குழந்தை கிபிர் மற்றும் 4 வயதுச் சிறுவன் அரியல் இருவருக்கும் என்னவானது என்று யாருக்கும் தெரியுமா? பயங்கரவாதி சின்வார் மனித கேடயங்களாக இவர்களை வைத்துக்கொண்டிருந்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/11/2024 at 17:44, ஏராளன் said:

வான்வழி தாக்குதலின் போது, துப்பாக்கிச்சூட்டின் போது, பசி மற்றும் நோய் காலங்களில் ஜூலியாவை எப்படியும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய குடும்பம் ஒன்று அவருக்கு இருக்கிறது என்பது மட்டும் தான் ஆறுதல்.

எங்கள் குழந்தைகள் யுத்தத்தின் பின் குடும்பமே அறியாமல் அனாதைகளாயினர். அங்கு, போரில் ஈடுபடாத குழந்தைகள் தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், பள்ளிக்கூடத்தில் குண்டுகளை பொழிந்து மரணத்தை ஏற்படுத்தினர், அவயவங்களை துண்டித்தனர். தாய் இறந்து விட்டாள் என்பதை கூட உணர முடியாத மழலை தாயில் பாலைத் தேடியது. இவைகள் எல்லாம் மறக்கக்கூடியதா? எங்களால்  எதுவும் செய்ய முடியாத நிலையில், இந்த தாக்குதலில் இறந்த, காயமடைந்த, தவிக்கிற மக்களுக்கு எங்கள் கவலையை மட்டுந்தான் தெரிவிக்க முடியும். நீதியின் குரலை அடக்குபவர்கள் நடத்தும் தாக்குதல்கள், சொல்லும் காரணங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், பயிற்சி அளிக்கின்றனர், அப்பாவிகளையும் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிபர்களையும், பெலவீனமானவர்களையும் தாக்கி கொன்று பழி தீர்க்கின்றனர்.   இவர்கள் கோழைகள்! 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மொழிபெயர்ப்பு சரி என்றால். கோவிட் வைரஸ் ஆகக்குறைந்தது வேறு ஏதோ இடத்திலும் இருந்து இருக்கிறது. வூஹானை தவிர, வேறு எந்த உயிரியல் பரிசோதனை கூடங்களில் கோவிட் வைரஸ் இருக்கவில்லை என்பதை ஏன்  அமெரிக்கா விசாரணை உறுதிப்படுத்தமுடியவில்லை? அப்படி உறுதிப்படுத்தும் விசாணையே நடக்கவில்லை. அமெரிக்காவும் சேர்ந்தே இந்த ஆய்வில் ஈடுபட்டது, அந்த பக்கத்தை மறைகிறது போலும்.
    • சீமான் திரியில் எழுதி இருந்தேன். தமிழ் நாட்டில் பெரியாரை, வடகிழக்கில் தலைவரை மறுதலித்து தேர்தல் அரசியல் செய்யம்முடியாது என. இது சம்பந்தமாக சுமந்திரன் - தன் நாவடக்கத்தை கடைபிடித்திருக்க வேண்டும். சீமானை போல - எல்லா கேள்விக்கும் ஒரு பதிலை கூறியே தீர வேண்டும் என அவர் நினைத்தார்.  ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பார். அவரை ஒத்த ரோட்டு என சக குடும்பத்தவர் அழைப்பார்கள். அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையும் குறை கூறுவார். மூதைதகளை மதிக்க மறுப்பார். அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் - அவரின் குணைவியல்பால் சக குடும்பத்தினர் அவரை விலகி நடக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு திரியில் ஓணாண்டி சொன்னது போல் - சுமந்திரன் நேராக சொல்வதை சிறிதரன் மறைமுகமாக செய்வார். வெளிப்படையாக இருக்கிறேன் பேர்வழி என மனதில் பட்டதை எல்லாம் சாதாரண மனிதர்கள் நாம் கூறினாலே, வீடு, வேலையிடம் இரெண்டாகி விடும். ஒரு அரசியல்வாதி? யாகாவாயினும் நா காக்க.
    • இது நெசமா சார்...அனுரவைச் சந்திக்கமுன் பெர்ய குண்டொன்று ..இன்று வெடிக்கப் போகுதாமே   சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். வடக்கில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakityan) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை  அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.   இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • புலம்பெயர் மக்களில் ஒரு பகுதி சுமந்திரனை வச்சு செய்தது உண்மை. ஆனால் கடந்த இரெண்டு தேர்தல்களில் இப்படி வச்சு செய்தும் அவரினை தோற்கடிக்க இவர்களால் முடியவில்லை என்பதும் உண்மை. ஊரில் மக்கள் புலம்பெயர்ந்தவர் கதையை கேட்டு சுமந்திரனை தூக்கி அடிக்கும் நிலையில் இல்லை. அவர் இந்த முறை தோற்க காரணம் அவரே. தமிழரசு கட்சியில் சாணாக்கியனை தவிர மிகுதி எல்லோருடனும் சுமந்திரன் சண்டை. தலைவர் விடயத்தில் தோற்ற பின் அவர் செய்த கோக்குமாக்குகள் மக்களை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போயின. வேட்பாளர் தேர்வில் அவர் நடந்து கொண்ட விதம் முத்தாய்ப்பாய் இருந்தது. வழமையாக சொல்லும் பெட்டி வாங்கி விட்டார் கதைகளை அல்லது தீர்வை வாங்கி தரவில்லை கதைகளை நம்பி மக்கள் அவரை தோற்கடிக்கவில்லை. 2019-2024 அவர் நடந்து கொண்ட விதம், தமிழரசு கட்சியை, தமிழ் தேசிய அரசியலை அவர் சிறுக சிறுக சிதைக்கிறார் என்பதை மக்களுக்கு உணர்த்தியது. ஆகவே அவரை அப்புறபடுத்த தீர்மானித்தனர். சுமந்திரன் ஏன் இப்படி நடந்து கொண்டார் உண்மையில் இவர் தெற்கின் ஏஜெண்டா என்பதல்லாம் விடை காண முடியா கேள்விகள். அப்படி பட்ட ஏஜெண்ட் இல்லை அவர், ஆனால் அவர் இப்படி நடந்து கொள்வது அவரின் குணவியல்பு சம்பந்தமான விடயம் என்பது என் கருத்து.  
    • மிகத் தவறான கருத்து. ஒரு தேசியம் சார்ந்த விடயங்களை பேச இன்ன தகுதிகள் வேண்டும் என்ற இறுமாப்புடன் செயற்படமுடியாது. அவரவர் தத்தமது கடமைகளை செவ்வனே செய்தாலே போதும். தூய்மை வாதம் பேசி ஆட்களை தேட தொடங்கினால் நானும் இல்லை நீங்களும் இல்லை. எவரும் இல்லை. அப்படியானால் யார்?????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.