Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்.அய்னா

பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம் நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் நிலையில், அதில் இது­வரை 4 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணையில் பிர­தான நபர் ஒரு­வரை கைது செய்ய‌ பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வு பிரிவு மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக விசா­ரணை தக­வல்கள் தெரி­வித்­தன. குறித்த நபர் போதைப் பொருள் கடத்­த­லோடு தொடர்­பு­பட்­டவர் என கூறப்­படும் நிலையில், உரிய சாட்­சி­யங்­க­ளோடு அவரைக் கைது செய்ய மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. அதன் தொட­ராக கொழும்பு நீதிவான் நீதி­மன்றில், தற்­போதும் சிறையில் பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிலரை விசா­ரிக்க விசா­ர­ணை­யா­ளர்கள் அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

குறிப்­பாக, கொழும்பு , தெஹி­வளை, கவு­டான வீதியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து கைது செய்­யப்­பட்ட பிலால் எனும் பெயரால் அறி­யப்­ப‌டும் 30 வய­தான மாலை தீவு தொடர்­பினை கொண்ட இலங்­கை­ய­ருக்கு, இவ்­வா­றான தாக்­குதல் ஒன்­றினை நடாத்த ஒப்­பந்தம் கொடுத்­த­தாக கூறப்­ப‌டும், அவரை சந்­தித்த மூன்றாம் நபரை கைது செய்ய‌ இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் அறி­வியல் தட­யங்­களை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரி­வினர் பகுப்­பாய்வு செய்து வரு­கின்­றனர். குறிப்­பாக இந்த தாக்­குதல் ஒப்­பந்தம் ஒரு இலட்சம் அம­ரிக்க டொலர்கள் என கூறப்­படும் நிலையில் அதனை உறுதி செய்ய விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

இத­னை­விட, கொழும்பு, இரத்­ம­லானை பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்ட யாழ். சுன்­னாகம் பகு­தியை சேர்ந்த ஸ்டார் எனும் பெயரால் அறி­ய­ப்படும் யோக­ராஜா நிரோஜன் எனும் சந்­தேக நபர், 2006 ஆம் ஆண்டு இலங்­கைக்­கான பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னி­க­ராக கட­மை­யாற்­றிய பசீர் வலி மொக­மடை கொலை செய்ய சதித்­திட்டம் தீட்டி , அதற்­காக 2006 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி குண்டுத் தாக்­குதல் நடாத்தி 7 இரா­ணுவ வீரர்­க­ளுக்கு மர­ணத்­தையும், மேலும் பத்து பொது­மக்­க­ளுக்கு கடும் காயத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறி சட்ட மா அதி­பரால் தொடுக்­கப்­பட்ட வழக்கில் விளக்­க­ம­றி­யலில் இருந்து பின்னர் நீதி­மன்றால் நிர­ப­ராதி என விடு­விக்­கப்­பட்­டவர் ஆவார். இது தொடர்­பிலும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவ­தானம் செலுத்தி விசா­ரித்து வரு­கின்­றனர்.

இவ்­விரு சந்­தேக நபர்­களும் சிறைச்­சா­லைக்குள் வைத்தே அறி­முகம் ஆகி­யுள்­ள­தாக கூறப்­ப‌டும் தக­வலின் உண்மைத் தன்மை தொடர்­பிலும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

இத­னை­விட, கைது செய்­யப்­பட்ட மூன்­றா­வது நபர், தெஹி­வ­ளையில் உள்ள இஸ்­ரே­லிய கன்­சி­யூலர் அலு­வ­லகம் அருகே சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் நட­மா­டி­யவர் எனவும், 21 வய­தான குறித்த இளைஞன் மாவ­னெல்லை, கிரிந்­தெ­னிய பகு­தியை சேர்ந்­தவர் எனவும் பொலிஸ் தக­வல்கள் கூறினர். அவ­ரது தொலை­பேசி மற்றும் டிஜிட்டல் உப­க­ரண பதிவுத் தக­வல்­களை வைத்து அவ­ரி­டமும் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. நான்­கா­வது நபர் மாலை­தீவு பிரஜை என கூற­ப்படும் நிலையில் அவரும் தெஹி­வளை பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­ற‌து.

‘இலங்கை மீது நடத்­தப்­ப­டலாம் என கூறப்­பட்ட‌ தாக்­கு­தலின் தன்­மை­யின்­படி, அது பயங்­க­ர­வாதச் செய­லாக இது­வரை எம்மால் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் நிலவும் யுத்த நிலைமை கார­ண­மாக, இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு இலங்­கையில் மட்­டு­மல்­லாது உலகில் எங்கும் ஆபத்­துக்கள் ஏற்­ப­டலாம். அத­னால்தான் இது அவர்­களை இலக்கு வைத்த தாக்­குதல் என்று தகவல் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அது தவிர, இங்கு சுற்­றுலா பய­ணிக­ளாக இருக்கும் வேறு வெளி­நாட்­ட­வரை குறி­வைத்தோ அல்­லது இலங்­கை­யர்­களை குறி­வைத்தோ ஒரு நாச­கார சம்­பவம் இதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.’ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்­றுக்­கான முகாந்­திரம் வெளிப்­ப‌­டுத்­தப்­ப­ட­வில்லை என விசா­ரணை நிறு­வ­னத்தின் உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இவ்­வா­றான தக­வல்கள் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டுள்ள சூழலில், மிக முக்­கி­ய­மான பல அதிர்ச்சிகர தக­வல்­களும் வெளிப்­பட்­டுள்­ளன.

அடுத்து வரும் 4 மாதங்­களில்
அதிக சுற்­றுலா பய­ணிகள் :
எதிர்­வரும் சுற்­றுலாப் பரு­வத்தில் அதி­க­ள­வான வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ளனர். குறிப்­பாக நவம்பர் முதல் அறு­கம்பே பகு­திக்கு அதி­க­ள­வான சுற்­றுலா பய­ணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்­க­ப்படும் நிலையில் அதில் அதி­க­மானோர் இஸ்­ரே­லி­யர்­க­ளாவர்.
இலங்கை சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­யக‌ தர­வு­க­ளின்­படி, இந்த வரு­டத்தின் முதல் 9 மாதங்­களில் இந்­தியா, சீனா, ரஷ்யா, ஜேர்­மனி, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடு­களில் இருந்தே அதிக சுற்­றுலா பய­ணிகள் நாட்­டுக்குள் வந்­துள்­ளனர்.

அந்த தர­வு­க­ளின்­படி, இந்த வரு­டத்தின் கடந்த 9 மாதங்­களில் இஸ்­ரேலில் இருந்து 20,515 சுற்­றுலாப் பய­ணி­களும் 43,678 அமெ­ரிக்­கர்­களும் 136,464 பிரித்­தா­னிய பிர­ஜை­களும் இலங்­கைக்கு சுற்­றுலா வந்­துள்­ளனர்.

2a12a7b6-ee35-46eb-abd7-30fe2bfc162e-102

ஆனால், சுற்­றுலா நட­வ­டிக்கை எனும் பேரில் இஸ்­ரேலும், அதன் உளவு அமைப்­பான மொசாட்டும் இலங்­கைக்குள் குறிப்­பாக கிழக்கில் முஸ்­லிம்­க­ளி­டையே குழப்­பத்தை அல்­லது வன்­மு­றையை தூண்ட முயன்­றார்­களா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தின் பொத்­துவில், அறு­கம்பை பகு­தி­க­ளிலும் திரு­கோணமலை மாவட்­டத்­திலும், தெற்கின் வெலி­கம, அஹங்­கம பகு­தி­க­ளிலும் இஸ்­ரே­லி­யர்­களின் நட­வ­டிக்­கைகள் இதனை பறை­சாற்று­வ­தாக உள்­ளன.

குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையில் காஸா­வுக்கு எதி­ரான சுவ­ரோ­வி­யங்கள் இஸ்­ரே­லி­யர்­களால் வரை­யப்­பட்­டுள்­ள­துடன், முஸ்லிம் பள்­ளி­வா­சலை மிக அண்­மித்து ஹீப்ரு மொழி­யி­லான இஸ்­ரே­லிய இரா­ணுவ வீரர்­க­ளுக்­கான சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

வெலி­கம பகு­தியில் தொடர்ச்­சி­யாக ஒரு மத­ரஸா பாட­சாலை தீ பர­வ­லுக்கு உள்­ளான நிலையில், அதன் அருகே இருந்த கட்­டி­டத்தில் இஸ்­ரே­லி­யர்கள் தங்­கி­யி­ருந்­தமை அச்­சம்­பவம் தொடர்­பிலும் சந்­தே­கத்­தையே தோற்­று­வித்­துள்­ளது.

எனவே இது இலங்­கையை பொறுத்­த­வரை சுற்­றுலா பய­னிகள் எனும் போர்­வையில் நாட்­டுக்குள் வரும் இஸ்­ரே­லிய இரா­ணுவ சிப்பாய்கள் மற்றும் மொசாட் முக­வர்­களின் திட்­ட­மிட்ட வன்­முறை தூண்டல் நட­வ­டிக்­கை­க­ளாக பார்க்க வேண்டி இருக்­கின்­றது.

இது தொடர்பில் மக்கள் போராட்ட அமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்­பாளர் புபுது ஜய­கொட இவ்­வாறு கூறு­கின்றார்.

‘சுற்­றுலா விசாவில் நாட்­டுக்கு வந்­தி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்கள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஒரு சில இடங்­களில் முஸ்லிம் மக்­களை கோப­மூட்டும் வகையில் காஸாவில் இடம்­பெற்­று­வரும் இன அழிப்பு தொடர்­பான சித்­தி­ரங்­களை மதில்­களில் வரைந்­நி­ருக்­கின்­றனர். அதே­போன்று யுத்­தத்தில் கொல்லப்­பட்ட இஸ்ரேல் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ருக்கு அஞ்­சலி செலுத்தும் வகையில் அவரின் படம் பொறிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டி­களும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சில இடங்­களில் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

குறிப்­பாக முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை­யான தூரத்தில் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விட­யங்­களை யார் செய்­கி­றார்கள் என்­பதை அர­சாங்கம் தேடிப்­பார்க்க வேண்டும். காஸாவில் இடம்­பெறும் இஸ்ரேல் இரா­ணு­வத்தின் இன அழிப்­புக்கு எதி­ராக இலங்­கையில் ஆட்­சியில் இருந்த அனைத்து அர­சாங்­கங்­களும் பலஸ்­தீ­னுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு தெரி­வித்து வந்­தி­ருக்­கின்­றன.

சுற்­றுலா விசாவில் வரு­ப­வர்கள் எவ்­வாறு மதில்­களில் சித்­திரம் வரை­யவும் சுவ­ரொட்­டி­களை ஒட்­டவும் முடியும்?. எமக்கு கிடைத்த தக­வலின் பிர­காரம் அந்த பிர­தே­சத்தில் தங்கி இருக்கும் இஸ்ரேல் இன­வாத பிரி­வி­னரே இதனை செய்­துள்­ளனர். அத்­துடன் இஸ்­ரே­லி­யர்கள் நாட்­டுக்குள் வியா­பார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு கட்­டி­டங்கள் இருக்­கின்­றன. பொலிஸ் பேச்­சா­ளரும் இதனை தெரி­வித்­தி­ருந்தார். சுற்­றுலா விசாவில் வந்து எவ்­வாறு வியா­பாரம் செய்ய முடியும்.

வியா­பாரம் செய்­வ­தாக இருந்தால் அதற்கு அர­சாங்­கத்தின் பூரண அனு­மதி பெற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும். அதே­போன்று மத வழி­பாட்டு தலங்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். தெஹி­வளை அல்விஸ் பிர­தே­சத்தில் யூத மத வழி­பாட்டு இட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. எவ்­வாறு இதற்கு இட­ம­ளிக்க முடியும்?

யூத வழி­பாட்டு நிலையம் தெஹி­வளை, வெலி­கம, அறு­கம்பே போன்ற இடங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. அந்த வழி­பாட்டு நிலை­யங்­க­ளுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இதனால் முஸ்லிம் பகு­தி­களில் பதற்­ற­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது. இஸ்­ரே­லி­யர்­களை இலக்­கு­வைத்து தாக்­குதல் இடம்­பெ­றப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­படும் தகவல் தொடர்­பிலும் சந்­தேகம் எழு­கி­றது. நாட்டுக்குள் இஸ்­ரே­லி­யர்­களின் இந்த நட­வ­டிக்கை சில கால­மாக இருந்து வரு­கி­றது.

அதே­போன்று அண்­மையில் சுற்­றுலா பய­ணிகள் என இஸ்­ரே­லி­யர்கள் 20ஆயிரம் பேர்­வரை இலங்­கைக்கு வந்­தனர். அவர்­களில் இஸ்ரேல் இரா­ணு­வத்தைச் சேர்ந்­த­வர்­களும் வந்­தி­ருந்­தனர். ஏனெனில் காஸாவில் இஸ்ரேல் இரா­ணுவம் யுத்தம் நடத்­து­வ­தில்லை.

அங்கு இன அழிப்பே அவர்கள் மேற்­கொள்­கி­றார்கள். யுத்தம் இடம்­பெ­று­மாக இருந்தால் இரா­ணு­வத்­தி­னருக்­கி­டை­யி­லேயே மோதல் இடம்­பெ­ற­வேண்டும்.
ஆனால் காஸாவில் 10 நிமி­டங்­க­ளுக்கு ஒரு சிறுவன் கொலை செய்­யப்­ப­டு­கிறான். இவ்­வாறு இனப்­ப­டு­கொலை செய்யும் இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் மன அழுத்­தங்­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டாது என்­ப­தற்கே குறிப்­பிட்ட காலத்­துக்கு பின்னர் அவர்­களை இவ்­வாறு சுற்­றுலா அனுப்பி, அவர்­களின் மன அழுத்­தத்தை இல்­லா­ம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது.

எனவே இன அழிப்பை மேற்­கொண்­டு­வரும் இஸ்ரேல் இரா­ணுவ வீரர்கள் மன அழுத்­தத்தில் இருந்து மீள இலங்­கையின் வளங்­களை இஸ்ரேல் பயன்­ப­டுத்­து­கி­றதா என்­பது தொடர்­பா­கவும் இஸ்­ரே­லி­யர்­களால் நாட்­டுக்குள் நிர்­மா­ணிக்­கப்­படும் சட்­ட­வி­ராேத கட்­டி­டங்கள் மற்றும் அவர்­களின் மத வழி­பாட்டு தலங்­க­ளுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்­பிலும் தற்­போ­துள்ள பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் மற்றும் இதற்கு முன்னர் இருந்த பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஆகியோர் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

பொலிஸ்மா அதி­பரும் விளக்­க­ம­ளிக்க வேண்டும். இஸ்­ரே­லி­யர்­களின் இந்த நட­வ­டிக்­கையால் எமது சுற்­றுலா துறை பாதிக்­கப்­படும் ஆபத்து இருப்­ப­துடன் நாட்­டுக்குள் மதங்­க­ளுக்­கி­டையில் முரண்­பாடும் ஏற்­படும் அபாயம் இருக்­கி­றது. அதனால் அர­சாங்கம் இது தொடர்­பாக விரை­வாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்’ என புபுது ஜாகொட தெரி­வித்­துள்ளார்.

இவ்­வா­றான நிலையில் தான் இலங்­கைக்கு சுற்­றுலா வந்து வர்த்­தகம், மதம் சார் மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் அனைத்து வெளி­நாட்­ட­வர்­க­ளையும் கைது செய்­யு­மாறு பொலி­ஸா­ருக்கும் குடி­வ­ரவு குடியகல்வு திணைக்களத்துக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, இலங்கையின் சனத்தொகையில் பூச்சியமாக இருக்கும் யூதர்கள், 9 வீதமான முஸ்லிம்களை சீண்டுவதை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. தன் குடிமக்களை சுற்றுலாவின் பேரில் வரும் ஒரு கும்பல், அச்சுறுத்திவரும் சூழலில் அதற்கு எதிர் நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக எடுக்க வேண்டும்.

நாட்டில் சட்டவிரோதமாக யூதர்களால் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், சட்ட விரோத‌ ஜெப ஆலயங்கள் சட்ட ரீதியாக அகற்றப்படல் வேண்டும். இஸ்ரேல், மொசாட்டின் ஆதிக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் கூற்றுப்படி, தற்போது அறுகம்பேயில் இருந்து இஸ்ரேலியர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்களது கட்டிடங்கள், ஜெப ஆலயம் ஆகியன அவ்வாறே உள்ளது.

திரு­கோ­ண­ம­லையில் காஸா­வுக்கு எதி­ரான சுவ­ரோ­வி­யங்கள் இஸ்­ரே­லி­யர்­களால் வரை­யப்­பட்­டுள்­ள­துடன், முஸ்லிம் பள்­ளி­வா­சலை மிக அண்­மித்து ஹீப்ரு மொழி­யி­லான இஸ்­ரே­லிய இரா­ணுவ வீரர்­க­ளுக்­கான சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.
வெலி­கம பகு­தியில் தொடர்ச்­சி­யாக ஒரு மத­ரஸா பாட­சாலை தீ பர­வ­லுக்கு உள்­ளான நிலையில், அதன் அருகே இருந்த கட்­டி­டத்தில் இஸ்­ரே­லி­யர்கள் தங்­கி­யி­ருந்­தமை அச்­சம்­பவம் தொடர்­பிலும் சந்­தே­கத்­தையே தோற்­று­வித்­துள்­ளது.

 

சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் யார்?:
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, கிழக்கிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேறிவிட்டதாக கூறிய போதும் மூன்று இஸ்ரேலியர்கள் இன்னும் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கின்றனர். அவர்களில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் பல வருடங்களாக அறுகம்பேயில் நிரந்தரமாக வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை சந்திக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்று அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ள நிலையில் அவர்களிடம் பேச அந்த இஸ்ரேலியர் மறுத்துள்ளார். அத்துடன் இதன்போது அவர் தங்கியிருந்த வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், இரண்டு இராணுவத்தினர், பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவின் பல அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்ப‌டுகின்றது. சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் தொடர்பில் வினவிய போது, அது தொடர்பில் தேடிப் பார்த்து பதில் அளிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித்த ஹேரத்தும், பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவவும் நழுவிவிட்டனர்.

பதிவு செய்யப்படாத ஜெப ஆலயங்கள் :
அறு­கம்பே உள்­ளிட்ட பகு­தி­களில் நிறு­வப்­பட்­டுள்ள யூதர்­களின் ஜெப ஆல­யங்கள் எங்கும் பதிவு செய்­யப்­பட்­டவை அல்ல என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இந்த ஜெப ஆல­யங்­க­ளுக்கு இஸ்­ரேலில் இருந்து மத போத­கர்­களும் வந்து செல்­வது தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் மேல­திக செய­லாளர் எச்.என். குமாரி தெரி­விக்­கையில், “இது­வரை, யூதர்கள் தரப்பில் எந்த அமைப்­பையும், ஸ்தலத்­தையும் பதிவு செய்­ய­வில்லை. பெரும்­பா­லான கிறிஸ்­தவ அல்­லாத விவ­கா­ரங்கள் கிறிஸ்­தவ விவகாரங்களின் மத அம்சத்தில் கையாளப்படுகின்றன. நாங்கள் இப்போது கிறிஸ்தவ மதத்துடன் நேரடியாக தொடர்பில்லாதவற்றை பதிவு செய்ய வேலை செய்கிறோம். வெளி நாடுகளில் இருந்து வந்து பிரார்த்தனை மையங்களைப் போல ஒவ்வொன்றாகத் தொடங்குகிறார்கள். அவற்றைப் பதிவு செய்ய எந்த அமைப்பும் இல்லை. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எவரும் விரும்பிய மதத்தை பின்பற்றலாம், எனவே பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.’ என தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டின் நிலையான அமைதி மற்றும் குடிமக்களின் அச்ச நிலையை நீக்க, சுற்றுலா வருவோரை சுற்றுலா பயணிகளாக மட்டும் நடந்துகொள்ள அனுமதிக்கும் வகையிலான பொறிமுறைகள் அவசியமாகும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/18021

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக இலங்கைக்குள் இஸ்ரேலியர்களை அனுமதிக்ககூடாது என்பதை சுருக்கமாக சொல்கிறார்கள்.

எங்கோ இருக்குற காசாவுக்காக இலங்கையில் இவர்கள் போராடலாம் சுவரொட்டி ஒட்டலாம் ஊர்வலம் போகலாம்,பதாகைகள் தாங்கி நிற்கலாம்,  மதவழிபாட்டிடங்களில் சிறப்பு தொழுகை நடத்தலாம்ஆனால் பிறநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள், தமது இனம் மதம், மொழி,கவலைகளை  ஆகியவற்றை அடையாளபடுத்தகூடாது அப்படியா? 

அதாவது இலங்கை என்பது இஸ்லாமியர்கள் சொற்படிதான் கேட்கவேண்டுமா? 

காசாவில் மக்கள் கொல்லபப்டுவது கவலையான விஷயம்தான் 

ஆனால் ஒரிஜினல் இஸ்லாமியநாடுகளான எகிப்தின் துறைமுகமூடாகத்தான் கப்பல் கப்பலாக வெடிமருந்துகள் ஆயுதங்கள் அமெரிக்க ஐரோப்பாவிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தப்படுகிறது அந்த இஸ்லாமியநாடுகளுக்கெதிராக பொங்கலாமே ஏன் தயங்குகிறார்கள்? 

மைத்திரி ஆட்சியில் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா , ரிஷாத், கிழக்கு முதலமைச்சர் நசீர் ,மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு மாகாணத்தில் முதலைமைச்சரும், ஆளுனரும் முஸ்லீம் என சிங்கள அரசின்  மறைமுக ஆசியுடன்  அதிவேகமாக காணிகள் அபகரிப்பு, வியாபாரம், மதமாற்றல்,மதராசா, பள்ளிவாசல் என்று தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயலில் இறங்கிய இவர்கள் சஹ்ரான் குண்டுவெடி தாக்குதலால் நிலமையே தலைகீழாகி சிங்களவர்களால் தூக்கியெறியப்பட்டு கொடுக்குகள் புடுங்கப்பட்டதால் இன்று அமைதிபோல் நடிக்கிறார்கள். 

ஐஎஸ் ஐஎஸ் , தலீபான், அல்கெய்டா கொடிகட்டி பறந்தபோது இங்கிருந்தபடி இன்ஷா அல்லாஹ் இன்னும் ஐஞ்சு வருஷத்தில் அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் இஸ்லாமியநாடுகள் ஆகபோகிறது இறைவன் பெரியவன் என்றெல்லாம் முழங்கிய இவர்கள், அடுத்தவன் நாடுகளை உங்கள் மதநாடுகளாக்க நீங்கள் துடிக்கலாம் அடுத்தநாட்டுக்காரன் வந்து உங்கள் ஊரில் அவன் மொழியில்கூட எதுவும் எழுதகூடாது அப்படியா?

இலங்கை எனும் நாட்டில் உள்ள காத்தான்குடியில் அனைத்தும் பச்சைமயமாக்கி அறிவிப்பு பலகைகள்கூட அரபி மொழியில் வைத்து இன்னொரு சவுதியின் மாதிரியை நீங்கள் உருவாக்கலாம், அடுத்தவன் வீடு எடுத்துகூட நீண்டகாலம் தங்ககூடாது அப்படியா?

ஒரு நாட்டிற்குள் உல்லாச பயணிகளாக வருகிறவர்கள் எது செய்யலாம் செய்யகூடாது என்று தீர்மானிக்கவேண்டியது அறிவுறுத்த வேண்டியது அந்நாட்டு அரசுகள்,  வன்முறைகளில் அவர்கள் ஈடுபடாதவரை அந்த விடயங்களில் அறிவுரை சொல்லவும் ஆட்சேபனை செய்யவும் அறிக்கைவிடவும் நீங்கள் யார்?

ஒருநாட்டில் பிறநாட்டுக்காரன் ஆக்கிரமிப்பு தவறுதான் ஆனால், நீங்கள் இங்கேயிருந்துகொண்டு சின்வாருக்காகவுய்ம், நசருல்லாவுக்காகவும் , இஸ்மாயில் ஹனியேவுக்காகவும் அழ முடியுமென்றால் அவனும் இங்குவந்து தனது போர் வீரர்களுக்காக அழலாம் அதில் எந்த தவறுமேயில்லை.

காசாவில் குழந்தைகள் பெண்கள் கொல்லப்படுவது வேதனையானது மறுப்பதற்கில்லை இதே கவலையை ஒக்ரோபரில் இஸ்ரேலில் நுழைந்து பெண்கள் குழந்தைகள் முதியவர்களை கமாஸ் கொன்று குவித்தபோது உங்கள் கவலைகள் இதேயளவில் இருந்ததா? குழந்தைகளுக்குகிடையில் ஏது இஸ்ரேல் காசா என்று வித்தியாசம்?

 

எங்காவது இஸ்ரேலின் கை பெருமெடுப்பில் ஓங்கும்போது மட்டுமே தோல்வியை சகிக்க முடியாமல் பெண்கள் குழந்தைகள் பற்றி இவர்கள் கவலை இருக்கிறது, மற்றும்படி  அல்லாஹு அக்பர் என்று கூவியபடி. 3'H  எனப்படும் ஹமாஸ் ஹுத்தி, ஹிஸ்புல்லாவுக்கு கோஷம் போடுவது மட்டும்தான் 

பெரும்பாலான முஸ்லீம்களின் கவலையெல்லாம் காசா மக்களைபற்றிய கவலையைவிட கமாஸ் ஹிஸ்புல்லா ஹுத்தி ஈரான் எல்லாம் இஸ்ரேலுக்கு அடிக்கவேண்டும் அவன் படை பலத்தை அழிக்கவேண்டும், சும்மாவாச்சும் தினமும் இஸ்ரேலின் 500 படையினர் கொல்லப்பட்டனர்,   25 மெர்காவா டாங்குகள் அழிக்கப்பட்டன என்று சொல்லவேண்டும் என்பதிலேயே உள்ளது,

அதுதான் உண்மை செய்தி மற்ற ஊடகங்களெல்லாம் பொய் சொல்கின்றன என்று வேறு தூஷணத்தில் திட்டுவார்கள்..

நீங்கள் அவனை அழிக்க நினைத்தால் அவன் உங்களை அழிப்பான் அப்புறம் எதுக்கு இடைநடுவில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கவலைபடுகிறீர்கள் உங்கள் கவலையில் ஏதாவது நியாயம் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.... சரியான போட்டி.
சும்மா இருக்கும் தமிழர்களை... சொறிந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, 
இஸ்ரேல்காரன் தான் பொருத்தமான ஆள். இனி அவனுடன்... மல்லு கட்டுங்கோ. 

உங்களுக்கும்... பொழுது போக வேண்டும் எல்லோ.... இப்ப சரியான ஆள் கிடைத்திருக்கு.
இனி... உங்களுக்கு மூச்சு விடக்  கூட, நேரம் இருக்காது.  நடத்துங்கோ... உங்கள் நாடகத்தை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

அதே­போன்று யுத்­தத்தில் கொல்லப்­பட்ட இஸ்ரேல் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ருக்கு அஞ்­சலி செலுத்தும் வகையில் அவரின் படம் பொறிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டி­களும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சில இடங்­களில் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

 

15 hours ago, colomban said:

காஸாவில் இடம்­பெறும் இஸ்ரேல் இரா­ணு­வத்தின் இன அழிப்­புக்கு எதி­ராக இலங்­கையில் ஆட்­சியில் இருந்த அனைத்து அர­சாங்­கங்­களும் பலஸ்­தீ­னுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு தெரி­வித்து வந்­தி­ருக்­கின்­றன.

பூர்வீக குடிகளான தமிழனுக்கு நடந்தவையாவும் இன அழிப்பாக தெரியவில்லை ...அது பயங்கரவாதம்...எங்கயோ நடப்பவற்றிக்கு குரல் கொடுக்கினம் ...ஆண்டவன் இருக்கின்றான் குமாரு

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்தை மறுவளமாக வாசிக்கவும். 

 

கிழக்கில் இஸ்ரேலியர்களை வம்புக்கு இழுக்க‌ முனைகிறார்களா முஸ்லிம்கள்  ‍?

yes ...Yes,. I love this lovable idiot.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

சபாஷ்.... சரியான போட்டி.
சும்மா இருக்கும் தமிழர்களை... சொறிந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, 
இஸ்ரேல்காரன் தான் பொருத்தமான ஆள். இனி அவனுடன்... மல்லு கட்டுங்கோ. 

உங்களுக்கும்... பொழுது போக வேண்டும் எல்லோ.... இப்ப சரியான ஆள் கிடைத்திருக்கு.
இனி... உங்களுக்கு மூச்சு விடக்  கூட, நேரம் இருக்காது.  நடத்துங்கோ... உங்கள் நாடகத்தை.

இனி முஸ்லீம்கள் ஒருபக்கம் இருக்க கடவர்.
அதாவது சிங்களம் கதைத்துக்கொண்டு தமிழில் அலகு கேட்காமல் அடங்கட்டும். இல்லையேல் நாங்கள் தமிழர் எனும் அட்டவணைக்குள் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.