Jump to content

தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை

இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் பந்தை விளாசுகிறார்.
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி.

டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் 4வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்தது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு புறம் சீனியர் வீரர்கள் அடங்கிய இந்திய அணி டெஸ்ட் போட்டியில் உள்நாட்டில் நியூசிலாந்து அணியிடம் ஒயிட்வாஷ் ஆகி, மோசமான வரலாற்று தோல்வியைப் பதிவு செய்த நிலையில், இளம் இந்திய அணி அதிரடி வெற்றியைப் பெற்றுள்ளது.

சாம்ஸின் பேட்டில் பறந்த சிக்ஸர்கள், பவுண்டரிகள்

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்டர் என பெயரெடுத்த சஞ்சு சாம்ஸன்(107) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பின், தொடர்ச்சியாக சாம்ஸன் அடித்த 2வது டி20 சதமாகும். சாம்ஸன் தொடர்ச்சியாக அடித்த 2வது சதமாகும்.

27 பந்துகளில் அரைசதத்தை எட்டிய சாம்ஸன், 47 பந்துகளில் சதத்தை அடைந்தார். சாம்ஸன் கணக்கில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். பவுண்டரி, சிக்ஸர் வகையில் மட்டுமே சாம்ஸன் 88 ரன்களை சாம்ஸன் சேர்த்தார்.

 
இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன்

இந்திய அணி 202 ரன்களைச் சேர்த்ததில் பெரும்பாலும் சிக்ஸர், பவுண்டரிகள் முக்கியக் காரணம். இந்திய அணித் தரப்பில் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 13 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் 10 சிக்ஸர்களை சாம்ஸன் மட்டும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களான மார்க்ரம், கேசவ் மகராஜ், பீட்டர் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சாம்ஸன் 27 பந்துகளில் 58 ரன்களைச் சேர்த்தார். அது மட்டுமல்லாமல் கேப்டன் சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 37 பந்துகளில் 66 ரன்கள், திலக் வர்மாவுடன் இணைந்து 34 பந்துகளில் 77 ரன்கள் என முக்கிய பார்ட்னர்ஷிப்பை சாம்ஸன் அமைத்துக் கொடுத்து, ரன் சேர்ப்புக்கு உதவினார்.

ஒட்டுமொத்தத்தில் சாம்ஸனின் அபாரமான ஆட்டம், இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இதுவரை பெரிய அளவில் எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை.

இந்திய அணியில் சாம்ஸன் தவிர்த்து கேப்டன் சூர்யகுமார்(21), திலக் வர்மா(33) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். திலக் வர்மா களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்றார். அதிரடியாகவே பேட் செய்த திலக் வர்மா 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி 183 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேப்டன் சூர்யகுமார்

கடைசியில் சொதப்பிய பேட்டர்கள்

உண்மையில் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும். சாம்ஸன் ஆட்டமிழந்தபோது 16-வது ஓவரில் இந்திய 175 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால், 250 ரன்களை இந்திய அணி எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்த 28 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும். ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர்படேல், ரவி பிஸ்னோய் விரைவாக ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்துவிட்டது. கடைசி 20 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

 
இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவி பிஸ்னோய்

வருண், பிஸ்னோய் கலக்கல்

பேட்டிங்கிற்கு சாதகமான கிங்ஸ்மெட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் பதிலடி கொடுப்பார்கள், வலுவான நடுவரிசை பேட்டிங் இருக்கிறது என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் சொந்த மண்ணிலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன் சொதப்பலாக பேட் செய்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய் இருவரும் 8 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ரம் அதிரடியாக அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி மிரட்டிய நிலையில் அடுத்த பந்தை ஸ்விங் செய்து மார்க்ரமை வெளியேற்றி நம்பிக்கையளித்தார்.

அதன்பின், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(11), விக்கெட்டை ஆவேஷ்கான் வீழ்த்தி வழி ஏற்படுத்திக்கொடுத்தார். அதன்பின் வருண் சக்ரவர்த்தி, பிஸ்னோய், அக்ஸர் படேல் ஆகியோர் சேர்ந்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களை பிழிந்து எடுத்தனர்.

குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே ஆபத்தான பேட்டர் ரெக்கெல்டான்(21) விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் முதுகெலும்பை உடைத்தார். அதன்பின் ஆபத்தான பேட்டர்கள் கிளாசன்(25) டேவிட் மில்லர்(18) விக்கெட்டையும் வருண் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் சுவாசத்தை பாதியாகக் குறைத்தார்.

கடைசி வரிசை பேட்டர்களான குர்கர்(1), யான்சென்(12), சமிலேன்(6) ஆகியோரின் விக்கெட்டுகளை பிஸ்னோய் வீழ்த்தவே தென் ஆப்பிரிக்கா தோல்வியில் விழுந்தது. கடைசி நேரத்தில் கோட்ஸி அதிரடியாக 3 சிக்ஸர்களை அடித்து 23 ரன்கள் சேர்த்தார்,.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்

பவர்பளேயில் 3 விக்கெட்

பவர்ப்ளே ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என தள்ளப்பட்டது.

தென் ஆப்பிரிக்க அணியில் எந்த பேட்டரும் 30 ரன்களைக் கூட எட்டவில்லை. கிளாசன் சேர்த்த 25 ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான நடுவரிசை, டாப்ஆர்டர் பேட்டர்ள் வைத்திருந்தும் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது வியப்பாக இருந்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த தவறுகளைக் கூட தங்களுக்கு சாதகமாக மாற்றி ரன் சேர்க்ககூட தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் முயலாதது வேதனைக்குரியதாகும். ஆவேஷ்கான் வீசிய பல பந்துகள் ஓவர் பிட்சில் வந்தபோதும் அதை சிக்ஸர்களாக மாற்ற முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் வீணடித்தனர்.

 
இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மார்க்ரம் அவுட்டாகி வெளியேறுவதை இந்திய வீரர்கள் கொண்டாடுகின்றனர்

தொடரும் மார்க்ரம் மோசமான ஃபார்ம்

தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் மார்க்ரமின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 25 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 7-வது முறையாக மார்க்ரம் தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரிய சுமையாக இருந்து வருகிறது. அர்ஷ்தீப் பந்துவீச்சில் அதிரடியாக 2 பவுண்டரிகளுடன் தொடங்கிய மார்க்ரம், அடுத்த பந்தில் மோசமான ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.

தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரெக்கெல்டான், ஸ்டெப்ஸ் ஆகியோரும் பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஐபிஎல் டி20 தொடரில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் நடுவரிசை, கீழ்வரிசையில் இறங்கி ஃபினிஷர் ரோலில் பேட் செய்யக்கூடியவர். ஆனால், இந்த ஆட்டத்தில் அவரை 3வது வீரராகக் களமிறக்கி, தென் ஆப்பிரிக்கா பரிசோதித்தது தோல்வியில் முடிந்தது. டி20 போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும் கிளாசன், மில்லரும் விரைவாக விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்காவை தோல்வியை உறுதி செய்தது.

தென் ஆப்ரிக்காவின் பலவீனமான பந்துவீச்சு

தென் ஆப்பிரிக்க அணி என்றாலே வலுவான பந்துவீச்சு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். ஆனால், அது நேற்றைய ஆட்டத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 7 பந்துவீச்சாளர்களை கேப்டன் மார்க்ரம் பயன்படுத்தியும் இந்திய ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வந்த கோட்ஸி 3 விக்கெட்டுகளை சாய்த்தாலும், ஓவருக்கு 9 ரன்களை வாரி வழங்கினார். யான்சென் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசினார். மற்ற வகையில் சுழற்பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சும் பலவீனமாகவே காட்சி அளித்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சாம்ஸன்

ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு எடுப்பதால் கிடைத்த தொடக்க வீரர் இடத்தை சஞ்சு சாம்ஸன் நன்றாக பயன்படுத்தி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் சதம் அடித்த சாம்ஸன், தொடர்ந்து அந்நிய மண்ணிலும் சதம் அடித்தார். இலங்கைக்கு எதிரான தொடரிலும் 2 போட்டிகளில் சொதப்பினாலும், 3வது ஆட்டத்திலும் சாம்ஸன் அற்புதமாக பேட் செய்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சாம்ஸன் கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார்.

அணியில் சாம்ஸனுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், ஷாட்களை தேர்ந்தெடுத்த ஆடுவதில் கட்டுபாடின்மை, விருப்பமான இடத்தில் பேட் செய்வது போன்றவை சாம்ஸனின் ஆட்டத்தை மெருகூட்டியுள்ளன.

 
இந்தியா - தென் ஆப்ரிக்கா, சாம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன்ஷிப் இவ்வளவு எளிமையா?

வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் “ நாங்கள் எப்போதுமே ஒரே மாதிரியாகவே விளையாடுகிறோம், எங்களின் பிராண்ட் கிரிக்கெட்டை மாற்றவில்லை. சாம்ஸனின் ஆட்டம் மகிழ்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. சாம்ஸன் எப்போதுமே தன்னுடைய சொந்த ஸ்கோரைவிட, அணியை முன்னிலைப்படுத்தி அணிக்காக விளையாடக்கூடியவர். அவர் 90 ரன்களில் இருந்தாலும் சாம்ஸன் வாய்ப்புக் கிடைத்தால் சிக்ஸர் அடிப்பாரே தவிர சதம் அடிக்க முயலமாட்டார். மற்றவர்களிடம்இருந்து தனித்து சாம்ஸன் தெரிய இதுவே காரணம்.

முக்கிய கட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்புமுனை. வரும், பிஸ்னோய் பந்துவீச்சு அற்புதம். கேப்டன்சி செய்வதை என் அணியினர் எளிமையாக்கி வருகிறார்கள். அச்சமில்லாத மனநிலை, ஒருங்கிணைந்த ஆட்டம், ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியுடன் களத்திலும், வெளியிலும் இருப்பது என் பணியை மேலும் சுலபமாக்குகிறது. நாங்கள் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் கவலையில்லை, அச்சமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். இது டி20 கிரிக்கெட். விக்கெட்டை இழந்தாலும் 17 ஓவர்களுக்குள் 200 ரன்களை எட்டலாம்” எனத் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் குவித்து வராலாறு ஏடுகளில் இடம்பிடித்த சஞ்சு சம்சன்

image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தொடர்ச்சியான சதங்களைக் குவித்து அபூர்வமான மைல்கல் சாதனையை இந்திய ஆரம்ப வீரர் சஞ்சு செம்சன் நிலைநாட்டியுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிராக ஹைதராபாத்தில் கடந்த மாதம் 111 ஓட்டங்களைக் குவித்த சஞ்சு செம்சன், டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் 107 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

இதில் 88 ஓட்டங்கள் பவுண்டறிகளில் (7 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள்) வந்தவையாகும்.

இதன் மூலம் அடுத்தடுத்த சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சதங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் நான்காவது வீரராக இடம்பிடித்தார். இந்திய வீரர்களில் அடுத்தடுத்த சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையை சஞ்சு செம்சன் பெற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்கியொன் (109 எதிர் சுவிட்சர்லாந்து, 101 எதிர் நோர்வே), தென் ஆபிரிக்க வீரர் ரைலி ரூசோவ் (100 ஆ.இ. எதிர் இந்தியா, 109 எதிர் பங்களாதேஷ்), இங்கிலாந்து வீரர் பில் சோல்ட் (109 ஆ.இ., எதிர் மேற்கிந்தியத் தீவுகள், 110 எதிர் மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் அடுத்தடுத்த ரி20 போட்டிகளில் சதம் குவித்த மற்றைய மூவர் ஆவர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிங்ஸ்மீடில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. இதன் பிரகாரம் 61 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.

சஞ்சு செம்சனின் அபூர்வ சாதனையை அடுத்து அவர் மற்றொரு ரோஹித் ஷர்மாவாக மிளிர்வதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் நிரந்தர ஆரம்ப வீரராக 2013இல் ரொஹித் ஷர்மா எவ்வாறு அசத்தினாரோ அதேபோன்று இப்போது சஞ்சு செம்சன் தனது பங்கை ஆற்றிவருகிறார்.

மத்திய வரிசை வீரராக தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த விக்கெட் காப்பாளர் சஞ்சு சென்சன், கடந்த காலங்களில் முதலாம் இலக்கத்திலிருந்து 7ஆம் இலக்கம் வரை பல நிலைகளில் துடுப்பெடுத்தாடி வந்துள்ளார்.

ஆரம்ப வீரராகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் துடுப்பாட்டத்தில் சஞ்சு செம்சன் வெகுவாக முன்னேறியிருப்பதை அவர் குவித்த அடுத்தடுத்த சதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

https://www.virakesari.lk/article/198285

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நேற்று தென் ஆபிரிக்காவுக்கு ந‌ல்ல‌ அடி

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் விளையாடியும் ப‌டு தோல்வி😁😛..........................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா நேற்று தென் ஆபிரிக்காவுக்கு ந‌ல்ல‌ அடி

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் விளையாடியும் ப‌டு தோல்வி😁😛..........................

 

 

இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.

தெரியுது Bro👍🫡........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, vasee said:

இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.

ச‌ஞ்சு ச‌ம்சொன் 

அடிச்ச‌ செஞ்சேரி தான் வெற்றிக்கு பெரிதும் உத‌விய‌து அண்ணா.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சு பலகாலம் ஓரம் கட்டப்பட்டவர்.இப்போது கிடைத்த வாய்ப்புகளை பயன் படுத்தி எதிர் காலத்தை தனதாக்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சு சாம்சனுக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கு . .......டீமுக்குள் அரசியல் விளையாடாமல் இருந்தால் அவர் இன்னும் நல்லா விளையாடுவார் . .........!  

நன்றி ஏராளன் ..........! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'நீ செல்லும் வழியில் இனி பள்ளம் இல்லை' - சஞ்சு சாம்சனை கிரிக்கெட் வீரராக்க தந்தை நடத்திய போராட்டம்

சஞ்சு சாம்சன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்

"டெல்லியில் நடந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் நான் என் விக்கெட்டை இழந்தவுடன், என் நண்பனிடமிருந்து மெசேஜ் ஒன்று வந்திருந்தது. அதில் அவன், 'என் மொபைலின் டேட்டா தீர்ந்துவிட்டது, நீ ஆடுவதைப் பார்க்க நான் ரீசார்ஜ் செய்தேன். போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்த போது நீ அவுட்டாகிவிட்டாய். நண்பா சஞ்சு, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எதனால் இப்படி செய்து கொண்டிருக்கிறாய்?' என கோபமாக அவன் மெசேஜ் செய்திருந்தான்."

"முதலில் அதைப் பார்த்தவுடன் எனக்கு அவன் ஏன் எனக்கு கிரிக்கெட் ஆட செல்லித் தருகிறான் என கோபம் வந்தது. ஆனால் இப்போது, இவர்கள் அனைவரும் நான் நன்றாக ஆட வேண்டுமென விரும்புகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்."

இந்த நிகழ்வு பற்றி சஞ்சு சாம்சன் சில தினங்களுக்கு முன் என்னிடம் கூறினார். ஒரு வீரர் நன்றாக செயல்பட வேண்டுமென எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், டிவியில் பல கோடி நபர்கள் மற்றும் இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி நம்மை நேசிப்பவர்கள் என பலர் இருக்கிறார்கள்.

 

டர்பனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தொடக்க வீரராக சதமடித்திருக்கிறார். இந்த சதத்தை கொண்டாடியவர்களில் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரும் அடங்குவர்.

சஞ்சு சாம்சனின் அடுத்தடுத்த இரண்டாவது சதத்தை கண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்த தனது சாதனையை ஒரு வீரர் சமன் செய்திருப்பதை ரோகித் சர்மா மிகவும் விரும்புவார்.

ரோகித் வழியில் ஒருநாள், டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பாரா?

சஞ்சு சாம்சன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் ( வலதுபுறம்) மற்றும் அவரது தந்தையுடன் ( நடுவில்) சகோதரர்

சொல்லப்போனால், சஞ்சு சாம்சனில் தன்னுடைய தொடக்க கால சாரம் இருப்பதை ரோகித் சர்மா உணர்கிறார். இந்த உலகமே அவரது திறமையை கண்டு வியக்கும் போது, அதற்கு ஏற்ப ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் ஆடியதில்லை, இதுவே அவரை அப்படி உணர வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 5 ஆண்டு தடுமாற்றத்திற்கு பிறகே ஒருநாள் நாள் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். அதன் பின், அவரது கிரிக்கெட் வாழ்க்கையே மாறியது. அவர் டெஸ்ட் போட்டியிலும் கூட அதிரடியான பேட்ஸ்மேனாக பரிணமித்தார்.

சஞ்சு சாம்சனும் ரோகித் சர்மாவின் வழியை பின்பற்றுவாரா? ஏனெனில் ரோகித் சர்மா டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியிலும் அவர் சில காலம் விளையாடாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

கிங்ஸ்மேட் மைதானத்தில் பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சுவின் அதிரடி ஆட்டம் இந்தியா வெற்றி பெற அடித்தளம் அமைத்தது. இந்திய அணி மொத்தமாக 17 பௌண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்திருந்தது, அதில் சஞ்சு சாம்சன் மட்டுமே 7 பௌண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

29 வயதான தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் அடித்த 107 ரன்களில், 88 ரன்கள் பௌண்டரி, சிக்ஸர்களாலே அடிக்கப்பட்டவை.

 
சஞ்சு சாம்சன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,INSTAGRAM

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் அவர் அப்பாவுடன் இருக்கும் பழைய புகைப்படம்

"நீ செல்லும் வழியில் பள்ளமே இல்லை"

தென் ஆப்ரிக்கா செல்லும் முன் சஞ்சு சாம்சன் கொடுத்த ஒரு பிரத்யேக நேர்காணலில் அவரது தந்தையின் வித்தியாசமான பங்களிப்பை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

"சென்ற மாதம், நான் டெல்லியில் உள்ள ஃபெரோஸ் கோட்லா மைதானத்திற்கு பயிற்சிக்கு செல்லுமுன், தந்தையிடமிருந்து என் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதற்கு முன் நடந்த போட்டியில் நான் குறைந்த ரன்களில் என் விக்கெட்டை பறிகொடுத்திருந்தேன். இரண்டாம் போட்டி துவங்குவதற்கு முன், 'மகனே, என்னை ஒரு கதை சொல்ல விடு', என்றார். டெல்லி ஜிடிபி நகரின் கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் நாங்கள் தங்கியிருந்த காலத்தின் கதையை தந்தை கூறினார், மற்றவர்கள் போல நானும் அந்த சமயத்தில் தெருவொர கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தேன். ஒரு கால்பந்து வீரராக இருந்த போதிலும், தந்தை எனக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்தார். எங்கள் வீட்டின்முன் இருந்த சாலையிலே கிரிக்கெட் ஆடுவோம். ஒரு நாள் நான் அவுட் ஆனேன், அதுவும் கிளீன் போல்ட்."

'அப்பா, அந்த சாலையில் ஒரு பள்ளம் உள்ளது, பந்து அந்த பள்ளத்தில் விழுந்ததாலேயே நான் போல்டானேன்,' என கூறினேன்.

"அடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையில் அப்பா எதோ வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் கூர்ந்து கவனித்தபோது, சாலையில் பள்ளம் இருந்த இடத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பா அவர் கையால் சிமெண்ட் கலவையை பூசி கொண்டிருந்தார். பிறகு அப்பா சொன்னார், மகனே, "இப்போது எந்த பள்ளமும் இல்லை!" என்று சஞ்சு சாம்சன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

 
சஞ்சு சாம்சன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,FACEBOOK/SANJU SAMSON

அவர் தந்தை அன்று சாலையில் இருந்த அந்த தடையை மட்டும் அகற்றவில்லை. வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தடைகளை எதிர்கொள்ள அவரது குடும்பம் அவரை ஊக்குவித்ததை சாம்சனின் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன.

"என் தந்தையின் பல நண்பர்கள் இதை கூறியுள்ளனர், 'ஏய், உன் குழந்தைக்காக நீ மிகவும் கடினமாக உழைக்கிறாய். இது எல்லாம் சாத்தியமில்லை. நீ காணும் கனவு நிறைவேறப் போவதில்லை. உன் மகனை நீ எப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டு செல்வாய்? இது சாத்தியமில்லை.' என்று கூறி தந்தையின் நண்பர்கள் அவரிடம் அனைத்தையும் விட்டுவிட சொல்வார்கள்.

"அது என் கைகளில் இல்லை. ஆனால், நான் அதனை சில வருடங்களுக்கு பிறகு பார்ப்பேன்," என அவர்களுக்கு அப்பா பதிலளித்தார்.

சஞ்சுவின் கனவு

சஞ்சு சாம்சன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நான் ஃபெரோஸ் ஷா கோட்லா ( தற்போது அருண் ஜெட்லீ மைதானம் ) மைதானத்தை அடைந்த போது, அப்பா சொன்னார், 'மகனே, நான் நினைத்த அந்த நாள் இது, இன்று அந்த கனவு நிறைவேறிய நாள். இந்த கதையுடன், அவர் எனக்கு கிரிக்கெட்டின் முக்கியதுவம் என்ன என்பதையும் மற்றும் கனவு நனவாக எவ்வளவு கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் கூறினார்", என்றார் சஞ்சு சாம்சன்.

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சனால் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாத போதிலும், அவர் ஹைதராபாத் மற்றும் டர்பன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்த சதம் அடித்தார். இதன் மூலம், டி20 ஆட்டங்களில் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தனது முன் மாதிரியாக கருதும் ரோகித் சர்மாவைப் போலவே இவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் திறமையை நிரூபிப்பார் என அவரது தந்தை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் நம்பிக்கையில் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே அவரது கனவு என சஞ்சு சாம்சனும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் தென் ஆபிரிக்கா வென்று ஆக‌னும்

தோத்தா சொந்த‌ ம‌ண்ணில் இந்தியாவிட‌ம் தோத்து விட்டின‌ம் என்ர‌ விம‌ர்ச‌ன‌ம் எழும்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2024 at 18:04, vasee said:

இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.

இந்தியா ம‌ண்ண‌ க‌வ்விட்டு இர‌ண்டாவ‌து போட்டியில்😁.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றே ஓவரில் மாறிய ஆட்டம் - வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியும் வெற்றியை தவற விட்ட இந்தியா

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வருண் சக்ரவர்த்தி
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணி 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியிடம் வெற்றியை தாரை வார்த்தது. இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் மூன்றே ஓவர்களில் மாறிப் போனது.

செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது தென் ஆப்ரிக்க அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

மிரட்டிய தென் ஆப்ரிக்கா, தடுமாறிய இந்தியா

இந்திய அணியின் டாப் ஆர்டரை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டம் காண வைத்தனர். முதல் போட்டியில் சதம் அடித்த சாம்ஸன், திலக் வர்மா, சூர்யகுமார், அபிஷக் சர்மா ஆகியோர் இந்தப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

யான்சென், கோட்ஸி, சிமிலேன் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து சாம்ஸன், அபிஷேக், சூர்யகுமார் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்திய அணி 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பவர்ப்ளேயில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆனால் தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் கேசவ் மகராஜ், பீட்டர், மார்க்ரம் ஆகியோர் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்களேத் தவிர விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. கடைசி நேரத்தில் பீட்டர், மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் கூட்டணி கடைசி நேரத்தில் 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். இந்திய பேட்டர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவுக்கு ரன்சேர்க்க முடியாததற்கு முக்கியக் காரணமாகும்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாம்ஸன் முதல் ஓவரின் 3வது பந்திலேயே ஸ்டெம்பை விட்டு விலகி அடிக்க முற்பட்டு யான்சென் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

இந்திய பேட்டர்கள் சாம்ஸன், அபிஷேக் சர்மா, திலக்வர்மா ஆகியோர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டவே முயன்று நேற்று ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக சாம்ஸன் முதல் ஓவரின் 3வது பந்திலேயே ஸ்டெம்பை விட்டு விலகி அடிக்க முற்பட்டு யான்சென் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பந்துவீச்சாளரின் பந்துவீச்சை கணிக்கக்கூட சிறிது நேரம் எடுக்காமல் பேட்டை சுழற்றினால் இப்படி விலை கொடுக்க நேரிடும்.

அதேபோல அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார் என்பதற்காக வாய்ப்புப் பெற்ற அபிஷேக் சர்மா இலங்கை தொடருக்குப்பின் பெரிதாக எந்த ஆட்டத்திலும் இன்னும் ரன்கள் சேர்க்கவில்லை.

அதேபோல ரிங்கு சிங் பெரிய ஃபினிஷராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை ரிங்கு சிங் சரிவர பயன்படுத்தவில்லை. ரிங்கு சிங் இந்த ஆட்டத்திலும் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் கூட்டணி கடைசி நேரத்தில் 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும்.

மானம் காத்த ஹர்திக் பாண்டியா

இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தபின் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை நிறுத்தி நிதானமாக பேட் செய்தார். ஹர்திக் தனது முதல் 29 பந்துகளில் 19 ரன்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். இந்திய அணியின் ரன்சேர்க்கும் வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர். நடுப்பகுதி 5 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்க்க முடிந்தது, 35 பந்துகளில் ஒரு பவுண்டரிகூட இந்திய அணி அடிக்கவில்லை. 18வது ஓவரில்தான் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்தார். அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸர் என பாண்டியா அடித்து 100 ரன்களைக் கடப்பதற்கு உதவினார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச அரங்கிலும் முதல்முறையாக டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார்.

வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்

தென் ஆப்ரிக்க அணி எளிதாக 124 ரன்களை சேஸ் செய்யும் நினைப்புடன்தான் களமிறங்கியது. ரெக்கல்டான், ஹென்ட்ரிக்ஸ் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து தொடங்கினர். ரெக்கல்டான்(13) விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியபின், ஆட்டம் சூடுபிடித்தது.

வருண் சக்ரவர்த்தி எனும் மாயஜாலப் பந்துவீச்சாளர் பந்துவீச வந்தபின், தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர், பந்து எந்தத் திசையில் வரும் என கணித்து ஆடவே படாதபாடுபட்டனர். இதனால் வருண் பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது, 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்திக் கொடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். சர்வதேச அரங்கிலும் முதல்முறையாக டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார்.

சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் எனத் தெரிந்தபின்னும் அக்ஸர் படேலுக்கு ஓவர்களை வழங்காமல், வேகப்பந்துவீச்சுக்கு வழங்கி, கிடைத்த வெற்றி வாய்ப்பை கேப்டன் சூர்யகுமார் தவறவிட்டார்.

 
இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க வெற்றிக்கு கடைசி வரை போராடி 47 ரன்கள் குவித்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேட்டராக ஜொலித்த கோட்ஸி

காயத்தால் நீண்ட ஓய்வுக்குப்பின் களத்துக்கு வந்த கோட்ஸி முதல் போட்டியிலும் 23 ரன்களை அதிரடியாகக் குவித்தார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் இருந்தது. வெற்றிக்கு 26 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அர்ஷ்தீப் வீசிய ஓவரில் சிக்ஸரும், ஆவேஷ் கான் ஓவரில் 2 பவுண்டரியும் அடித்து தென் ஆப்ரிக்காவின் தோல்வி அழுத்தத்தை பெருமளவுகுறைத்து, பேட்டராக ஜொலித்தார்.

தென் ஆப்ரிக்க அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியை வெற்றிக்கு அழைத்து வந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டெப்ஸ் ஆட்டம் அருமையானது.

டி20 உலகக் கோப்பை முடிந்தபின், இதுவரை 6 போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணிவிளையாடிய நிலையில் முதல் டி20 வெற்றியை நேற்றுதான் அந்த அணி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வருண் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

அதேநேரம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் உழைப்பு வீணானது. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருணின் மாயஜாலப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட கடும் சிரமப்பட்ட தென் ஆப்ரிக்காவின் 4 பேட்டர்கள் க்ளீன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தனர்.

தவறாகிப் போன சூர்யகுமாரின் முடிவு

16 ஓவர்கள் வரை ஆட்டம் இந்திய அணியின் பக்கம்தான் இருந்தது. 7 விக்கெட்டுகளை தென்ஆப்ரிக்கா இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. கடைசி 24 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 17, 18 மற்றும் 19 ஓவர்களை வீச வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் மற்றும் ஆவேஷ் கானை பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமாரின் முடிவு தவறாகிப் போய்விட்டது.

அர்ஷ்தீப் வீசிய 17-வது ஓவரில் கோட்ஸி ஒரு சிக்ஸரும், ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரியும் என12 ரன்கள் குவித்தனர். ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் கோட்ஸி 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் குவித்தார். அர்ஷ்தீப் வீசிய 19-வது ஓவரில் ஸ்டெப்ஸ் 4 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

வேகப்பந்துவீச்சை விளாசுகிறார்கள் எனத் தெரிந்தபின்னும் தொடர்ந்து ஆவேஷ்கான், அர்ஷ்தீப் இருவருக்கும் டெத் ஓவரில் சூர்யகுமார் வாய்ப்பளித்தது தவறு என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வர்ணனையின்போது தெரிவித்தார்.

 
இந்தியா - தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நான் பெருமைப்படுகிறேன்"

தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில் “டி20 போட்டியில் 120 ரன்கள் குறைவானதுதான். இருப்பினும் நாங்கள் பந்துவீசிய அணுகுமுறை பாராட்டுக்குரியது, பெருமைப்படுகிறேன். 125 ரன்களை டிபென்ட் செய்யும்போது ஒருபந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணமல்ல. இந்த வாய்ப்புக்குத்தான் வருண் நீண்ட காலமாக காத்திருந்தார். இரு ஆட்டங்கள் முடிந்துள்ளன, அடுத்த ஆட்டத்தில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் பல வேடிக்கைகள் காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா ம‌ண்ண‌ க‌வ்விட்டு இர‌ண்டாவ‌து போட்டியில்😁.............................

ரி 20 போட்டிகள் உயிர் இல்லாத ஆடுகளங்களில் வைக்காதது யார் தவறு? பராசக்தி சிவாஜிகணேசன் பாணியில் வாசிக்கவும்😁.

On 10/11/2024 at 04:04, vasee said:

இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.

தற்போது முந்தய ☝️ கருத்தினை வாசித்துப்பாருங்கள் புரியும் (நான் அந்த கருத்தில் கூட சிரிப்புக்குறி இட்டிருந்தேன் கவனிக்கவில்லையா?😁)

இந்திய அணி செத்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடுவார்கள் என்பதனைத்தான் கூறியிருந்தேன், ஆனால் அந்த ஆடுகளமும் கடினமான பந்து தரையில் பட்டு வேகம் குறைந்து வரும் (பசை போல் ஒட்டும்) ஆடுகளம் என இந்தியணி வீரர் அஸ்வின் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் (நான் அந்த போட்டியினை பார்க்கவில்லை, நான் தவறாக கூறிவிட்டேன்).

இந்தியணி அவுஸில் சிறபாக செயற்படும் என நம்புகிறேன் (விரும்புகிறேன்), முதல் 3 போட்டிகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற உள்ளது, அண்மையில் அவுஸ்ரேலியா ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள், அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கலை தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது, இது வரை காலமும் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வோனரின் ஓய்வினை நிரப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை. 

ஆனால் இந்தியணி தற்போது எந்த அணியினை பார்த்தாலும் கல்லைக்கண்ட நாய் மாதிரி பயப்படுகிறார்கள் (நியுசிலாந்தின் அடி அப்படி) இவர்கள் 4-1 என தோற்றுவிடுவார்களோ எனும் பயமாக இருக்கிறது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

ரி 20 போட்டிகள் உயிர் இல்லாத ஆடுகளங்களில் வைக்காதது யார் தவறு? பராசக்தி சிவாஜிகணேசன் பாணியில் வாசிக்கவும்😁.

தற்போது முந்தய ☝️ கருத்தினை வாசித்துப்பாருங்கள் புரியும் (நான் அந்த கருத்தில் கூட சிரிப்புக்குறி இட்டிருந்தேன் கவனிக்கவில்லையா?😁)

இந்திய அணி செத்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடுவார்கள் என்பதனைத்தான் கூறியிருந்தேன், ஆனால் அந்த ஆடுகளமும் கடினமான பந்து தரையில் பட்டு வேகம் குறைந்து வரும் (பசை போல் ஒட்டும்) ஆடுகளம் என இந்தியணி வீரர் அஸ்வின் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் (நான் அந்த போட்டியினை பார்க்கவில்லை, நான் தவறாக கூறிவிட்டேன்).

இந்தியணி அவுஸில் சிறபாக செயற்படும் என நம்புகிறேன் (விரும்புகிறேன்), முதல் 3 போட்டிகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற உள்ளது, அண்மையில் அவுஸ்ரேலியா ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள், அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கலை தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது, இது வரை காலமும் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வோனரின் ஓய்வினை நிரப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை. 

ஆனால் இந்தியணி தற்போது எந்த அணியினை பார்த்தாலும் கல்லைக்கண்ட நாய் மாதிரி பயப்படுகிறார்கள் (நியுசிலாந்தின் அடி அப்படி) இவர்கள் 4-1 என தோற்றுவிடுவார்களோ எனும் பயமாக இருக்கிறது. 

வ‌சி அண்ணா

நீங்க‌ள் இப்ப‌டி எழுத‌

என‌க்கு இந்த‌ பழ‌ மொழி தான் ஞாவ‌த்துக்கு வ‌ருது ஆட‌த்தெரியாத‌வ‌லுக்கு மேடடை ச‌ரி இல்லையாம்

பிச்சை குறை சொல்ல‌ முடியாது

எல்லா ப‌ந்துக்கும் அடிச்சு ஆட‌ முடியாது 

 

வார‌ எல்லா ப‌ந்துக்கும் ம‌ட்டைய‌ தூக்கினா சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய போவின‌ம்............................

 

முத‌ல் விளையாட்டில் ச‌ஞ்சு ச‌ம்சுன‌ அவுட் ஆக்கி இருந்தால் இந்தியாவால் பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடியால் போய் இருக்கும்

 

நேற்று தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆக‌ ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் விளையாடி குறைந்த‌ அள‌வு இஸ்கோர் அடித்து இருந்தாலும்

 

த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தியின் சுழ‌ல் ப‌ந்தில் தென் ஆபிரிக்கா முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் 20 ஓவ‌ர் விளையாட்டில் 5 விக்கேட் த‌னி ஒரு ப‌ந்து வீச்சாள‌ர் எடுப்ப‌து ஈசியான‌து கிடையாது

 

நேற்றையான் தோல்விக்கு இந்தியா வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்

இதே பும்ரா இந்திய‌ அணியில் தெரிவாகி இருந்தால் நேற்றையான் ம‌ச்சை சிம்பிலா வென்று கொடுத்து இருப்பார் இந்திய‌ அணிக்கு

 

அவுஸ்ரேலியா தொட‌ரில் விளையாட‌ இருப்ப‌தால் அவ‌ருக்கு இந்த‌ தொட‌ரில் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ ப‌ட‌ வில்லை...........................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்வது சரிதான்… ஆனால்…. யாழ் வாசகர் தமது அரசியல் நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்த்தே வாக்களிப்பரே தவிர, வெல்லும் அணிக்கு போடும், அல்லது தோற்க்கும் அணியை தூக்கி விடும் எண்ணத்தில் வாக்களிப்பர் என நான் நினைக்கவில்லை. மேலும் பலர் தாம் வாக்களித்ததை சொல்லும் போது…தனியே ஒரு கட்சி வாக்காளர் மட்டும் அதிகமாக இப்படி எழுதும் போது அந்த கட்சி பெரு வெற்றி பெறுவதான ஒரு தோற்றப்பாடும் எழும் (வாக்களிப்பின் ஆரம்பத்தில் சைக்கிளின் வாய்புகள் பற்றி இப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது). இடைக்கிடை நிலவரத்தை அப்டேட் பண்ணுவது இந்த எபெக்டை குறைக்கும் என எண்ணுகிறேன். அத்தோடு….இது முற்று முழுதான நிஜத்தேர்தலும் இல்லை, அதே நேரம் முடிவை ஊகிக்கும் போட்டியும் அல்ல. யாழ்கள உறவுகளின் தற்போதைய மனநிலையை படம் பிடிக்கும் முயற்சி மட்டுமே. அதில் நீங்கள் சொன்ன confirmation bias இருக்கும். ஆனால் அதையும் மனதில் நிறுத்தி, உறவுகள் தம் உண்மையான தெரிவுக்கு மட்டுமே வாக்கு போடுவார்கள் என நம்புவோம்.   ஏராளன் @ஏராளன் அச்சா பெடியன் அவரிட்டை கேட்டால் இப்படி சைவ மேட்டராத்தான் தருவார்🤣. அசைவர் @நிழலி வரட்டும் பொறுங்கோ😂. @தமிழ் சிறி. இப்போதைக்கு ஒரு க்ளூ… #பின்னாடி பத்திரம்🤣
    • மன்னிக்கவும், இந்த போட்டியில் நான் கலந்து கொள்ளமாட்டேன். நான் அங்கு வாழவில்லை.  அங்குள்ளவர்களின் பிரதிபலிப்பு (மக்களும், வேட்பாளர்களும்), உணர்வுகளை இங்கிருந்து கொண்டு எடை போடுவது கூடாது, முடியாது. கட்சி தேர்வில், தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே எனது  தெரிவு.  தமிழ் மக்களின் நலன்களில் நான் தெளிவாக இருக்கிறேன்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் தாத்தா.......................................
    • இது எல்லோருக்கும் பொதுவானது. இங்கு எந்த  கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவிப்பது, தெரிவில் செல்வாக்கு செலுத்தும்.  இங்கு அந்த செல்வாக்கு முக்கியமானது, தெரிவாளர்களின்  எண்ணிக்கை குறைவாக இருப்பதால்.
    • இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடம் சொந்த மண்ணில் விளையாடிய நான்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியீட்டிய இலங்கை, அந்த வெற்றி அலையைத் தொடரும் குறிக்கோளுடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்ளவுள்ளது. ஸிம்பாப்வே (2-0), ஆப்கானிஸ்தான் (3-0), இந்தியா (2-0), மேற்கிந்தியத் தீவுகள் (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இலங்கை வெற்றியிட்டியிருந்தது. எவ்வாறாயினும் அந்நிய மண்ணில் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என பெரிதும் நம்பப்படுகிறது. உபாதை காரணமாக பிரதான சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் துஷான் ஹேமன்த இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். எனினும் அவரை விட அனுபவசாலியும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் 2ஆவது போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியவருமான ஜெவ்றி வெண்டசேக்கு இறுதி அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார். அவருடன் மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர். ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் அவரது முன்னைய ஆற்றல்களைக் கவனத்தில்கொண்டு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும்  அசலன்க  குறிப்பிட்டார். அத்துடன் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இறுதி அணியில் இணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். இந்த 6 வீரர்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவர் (குசல் பெரேரா அல்லது சதீர சமரவிக்ரம) அணியில் சேர்க்கப்பட்டால் பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. நியூஸிலாந்து அணியில் புதிய வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவன் கொன்வே போன்ற பிரதான வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விடுகை பெற்றுள்ளனர். மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரை நியூஸிலாந்து எதிர்கொள்ளவுள்ளது. நியூஸிலாந்து குழாத்தில் டிம் ரொபின்சன், ஸக்கரி பௌல்க்ஸ், மிச்செல் ஹே, நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.  டீன் பொக்ஸ்க்ரொவ்ட், ஜொஷ் க்ளாக்சன், ஜேக்கப் டவி ஆகியோர் மிகக் குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிவர்களாவர். இந்த வருடம் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய வீரர்களின் ஆற்றல்கள் பரீட்சிக்கப்படவுள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரே நியூஸிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடராகும். இலங்கை அணியைப் போன்றே நியூஸிலாந்து அணியிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் தாராளமாக இடம்பெறுகின்றனர். அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், இஷ் சோதி ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர். துடுப்பாட்ட வீரர்களாக ஹென்றி நிக்கல்ஸ், டிம் ரொபின்சன், வில் யங், விக்கெட்காப்பாளர் மிச்செல் ஹே ஆகியோரும் சகலதுறை வீரர்களாக ஜொஷ் க்ளார்க்சன், ஸக்கரி பௌல்க்ஸ், டீன் பொக்ஸ்க்ரொவ்ட் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டவி, அடம் மில்னே (உபாதைக்குள்ளான லொக்கி பெர்கஸனுக்கு பதில்), நேதன் ஸ்மித் ஆகியோரும் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூஸிலாந்து 5ஆம் இடத்திலும் இலங்கை 6ஆம் இடத்திலும் இருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 102 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவுகளின் பிரகாரம் நியூஸிலாந்து 52 - 41 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.  https://www.virakesari.lk/article/198579
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.