Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொய் கூறும் டக்ளஸ்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.  உண்மையில்  பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம். அதற்காக மக்கள் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை : அநுர தரப்பு உறுதி | Sri Lanka General Election 2024

இந்த  நாட்களில், பலர் பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். டக்ளஸ் தேவானந்தா  பொய் கூறுகின்றார். அவர் ஜனாதிபதியை வந்து சந்தித்தார்.  ஜனாதிபதி  அமைச்சு பதவி தருவதாக தற்போது கூறிக்கொண்டு திரிகின்றார்.

எமக்கொன்றும் பைத்தியமில்லை. தேசிய மக்கள் சக்தியின் சார்பிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு  இட்டுச் சென்ற ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கங்களில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் எம்மை தோற்கடிக்க செயற்பட்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழங்க எமக்கு எவ்வித தேவையும் இல்லை.  

நாம் யாருடனும் அரசியலில் ஈடுபடுவோம்.  நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல.  எனினும், இந்த நாட்டினை அழிப்பதற்கு  பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உதவி செய்தவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பதவிகள் ஏதும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sri-lanka-general-election-2024-1731150122#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எனினும், இந்த நாட்டினை அழிப்பதற்கு  பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உதவி செய்தவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பதவிகள் ஏதும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

இவரின் கூற்றுப்படி டக்கிளஸ் ,சுமத்திரன் எல்லாம் நாட்டை அழிவு பாதைக்கு இட்டு சென்றவர்கள்...

அனே புத்த தெய்யோ இன்னவா

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்ட பிழைப்பு.

5 hours ago, ஏராளன் said:

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தேசிய மக்கள் சக்தியின் சார்பிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு  இட்டுச் சென்ற ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கங்களில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் எம்மை தோற்கடிக்க செயற்பட்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழங்க எமக்கு எவ்வித தேவையும் இல்லை.  

இதைவிட...ஓட்டைசிரட்டையில் தண்ணிவிட்டு ...அதற்குள் விழுந்து சாவலாம் கண்டியளோ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இந்த நாட்டினை அழிப்பதற்கு  பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உதவி செய்தவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பதவிகள் ஏதும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

ஐயோ! பிரதம மந்திரிகனவு என்னாச்தம்மை பற்றிசு? நெஞ்சுக்குள்ள பாலை வார்த்தீர்கள். மீண்டும் மீண்டும் நயவஞ்சகர்கள் பதவி பெற்று தமிழரை அடிமையாக சீட்டு எழுதி கொடுத்துவிடுவார்களோ என்று பயந்துவிட்டேன். நீங்கள் கொஞ்சம் மாற்றி சிந்திக்கிறீர்கள், வெற்றியோ தோல்வியோ அது உங்களை மட்டுமே சாரும், மக்களின் பணம் மிச்சம் ஆகும் இந்தப் பெருச்சாளிகளை ஒதுக்கினால். அதனாற் தான் மக்கள் நிராகரித்தால் தான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் கனவான். இவர்கள் வென்றாலும் இல்லையென்றாலும் பாராளுமன்றம் போன காலம் மாற்றி, வென்றாலும் இல்லையென்றாலும் பதவிகள் இல்லை. பிறகு  இவர்களுக்கு அங்கு  என்ன வேலை? ஆசனம் கிடைக்காததால் கட்சியை விட்டு வெளியேறினார்கள், பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று விமர்சித்தவர்கள், இப்போ தலையை தொங்கபோடத் தொடங்கிவிட்டார்கள். மக்களை ஏமாற்றி பாராளுமன்றம் போனவர்களுக்கு சரியான செக் பகிரங்கமாக வைத்திருக்கிறீர்கள் வரவேற்கத்தக்கது! ஆனால் ஒன்று, உங்கள் கட்சியில் பல வழக்குகளை தான்தான் கையாளுகிறேன், தனக்கு பிரதம மந்திரி பதவியை வழங்க அழைப்பு விடுப்பார் ஜனாதிபதி என்று காத்திருக்கிறார். நீங்களோ எந்தபதவியும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்கிறீர்கள் நல்லது. ஒருவர் கொண்டு வரும் திட்டத்தை மற்றவர் எதிர்ப்பதும், பின்னர் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டி தப்பிப்பதுவும் இனிமேல் நடக்காது. உங்கள் வாக்குறுதிக்கு நீங்களே பொறுப்பு, வாக்கு பத்திரம். அரசியலில் இருந்து விலகுகிறோம் என்பதும் பின்னர் வேறொரு காரணத்தை சொல்லி அரசியல் மோசடி செய்வதும் இனிமேல் ஆகாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாம் மக்கள் நலன் சார்ந்து செய்த பணிகள், செய்யப்போகும் பணிகள் பற்றி பிரச்சாரம் செய்யாமல், மற்ற கட்சிகளை விமர்சிப்பவர்களும் தேர்தலில் நிற்பது தடுக்கப்படவேண்டும். மக்களுக்கு  சேவை செய்யாமல் பதவி வகிப்போரும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். பெறும் ஊதியத்திற்கு சரிவர சேவை செய்து உடுத்திப்படுத்தப்பட வேண்டும். மெல்ல மெல்ல மாற்றத்தை நோக்கி நகர்ந்து, நல்லதே நடக்க, துன்பியல்  வரலாற்றை மாற்ற முயற்சிக்க வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, alvayan said:

இதைவிட...ஓட்டைசிரட்டையில் தண்ணிவிட்டு ...அதற்குள் விழுந்து சாவலாம் கண்டியளோ...

அவர்களுக்கு இது  பழக்கப்பட்ட விடயம்  மானம் ரோசம்.  என்பது அறவே இல்லை    

அனுர. கட்சியில்  வடக்கு கிழக்கு தவிர்த்து மற்றைய இடங்களிலும் தமிழர்கள் போட்டி இடுகிறார்கள்.   

குறைந்தது பத்து  தமிழர்கள் அவர் கட்சியில் பாராளுமன்றம் போகலாம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொய் கூறும் டக்ளஸ்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.  உண்மையில்  பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம். அதற்காக மக்கள் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை : அநுர தரப்பு உறுதி | Sri Lanka General Election 2024

இந்த  நாட்களில், பலர் பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். டக்ளஸ் தேவானந்தா  பொய் கூறுகின்றார். அவர் ஜனாதிபதியை வந்து சந்தித்தார்.  ஜனாதிபதி  அமைச்சு பதவி தருவதாக தற்போது கூறிக்கொண்டு திரிகின்றார்.

எமக்கொன்றும் பைத்தியமில்லை. தேசிய மக்கள் சக்தியின் சார்பிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு  இட்டுச் சென்ற ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கங்களில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை : அநுர தரப்பு உறுதி | Sri Lanka General Election 2024

சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் எம்மை தோற்கடிக்க செயற்பட்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழங்க எமக்கு எவ்வித தேவையும் இல்லை.  

நாம் யாருடனும் அரசியலில் ஈடுபடுவோம்.  நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல.  எனினும், இந்த நாட்டினை அழிப்பதற்கு  பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உதவி செய்தவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பதவிகள் ஏதும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sri-lanka-general-election-2024-1731150122#google_vignette

தேர்தல் முடிந்த பின்னர் பார்க்கலாம். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, satan said:

ஐயோ! பிரதம மந்திரிகனவு என்னாச்தம்மை பற்றிசு? நெஞ்சுக்குள்ள பாலை வார்த்தீர்கள். மீண்டும் மீண்டும் நயவஞ்சகர்கள் பதவி பெற்று தமிழரை அடிமையாக சீட்டு எழுதி கொடுத்துவிடுவார்களோ என்று பயந்துவிட்டேன். நீங்கள் கொஞ்சம் மாற்றி சிந்திக்கிறீர்கள், வெற்றியோ தோல்வியோ அது உங்களை மட்டுமே சாரும், மக்களின் பணம் மிச்சம் ஆகும் இந்தப் பெருச்சாளிகளை ஒதுக்கினால். அதனாற் தான் மக்கள் நிராகரித்தால் தான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் கனவான். இவர்கள் வென்றாலும் இல்லையென்றாலும் பாராளுமன்றம் போன காலம் மாற்றி, வென்றாலும் இல்லையென்றாலும் பதவிகள் இல்லை. பிறகு  இவர்களுக்கு அங்கு  என்ன வேலை? ஆசனம் கிடைக்காததால் கட்சியை விட்டு வெளியேறினார்கள், பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று விமர்சித்தவர்கள், இப்போ தலையை தொங்கபோடத் தொடங்கிவிட்டார்கள். மக்களை ஏமாற்றி பாராளுமன்றம் போனவர்களுக்கு சரியான செக் பகிரங்கமாக வைத்திருக்கிறீர்கள் வரவேற்கத்தக்கது! ஆனால் ஒன்று, உங்கள் கட்சியில் பல வழக்குகளை தான்தான் கையாளுகிறேன், தனக்கு பிரதம மந்திரி பதவியை வழங்க அழைப்பு விடுப்பார் ஜனாதிபதி என்று காத்திருக்கிறார். நீங்களோ எந்தபதவியும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்கிறீர்கள் நல்லது. ஒருவர் கொண்டு வரும் திட்டத்தை மற்றவர் எதிர்ப்பதும், பின்னர் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டி தப்பிப்பதுவும் இனிமேல் நடக்காது. உங்கள் வாக்குறுதிக்கு நீங்களே பொறுப்பு, வாக்கு பத்திரம். அரசியலில் இருந்து விலகுகிறோம் என்பதும் பின்னர் வேறொரு காரணத்தை சொல்லி அரசியல் மோசடி செய்வதும் இனிமேல் ஆகாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாம் மக்கள் நலன் சார்ந்து செய்த பணிகள், செய்யப்போகும் பணிகள் பற்றி பிரச்சாரம் செய்யாமல், மற்ற கட்சிகளை விமர்சிப்பவர்களும் தேர்தலில் நிற்பது தடுக்கப்படவேண்டும். மக்களுக்கு  சேவை செய்யாமல் பதவி வகிப்போரும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். பெறும் ஊதியத்திற்கு சரிவர சேவை செய்து உடுத்திப்படுத்தப்பட வேண்டும். மெல்ல மெல்ல மாற்றத்தை நோக்கி நகர்ந்து, நல்லதே நடக்க, துன்பியல்  வரலாற்றை மாற்ற முயற்சிக்க வாழ்த்துக்கள். 

போற.  போக்கை பார்த்தால்  நீங்கள் அனுர கட்சியில் இணைந்து விடுவீர்கள்.   போல இருக்கிறது 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கந்தையர்! ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கம், எல்லோரும் மக்களை ஏமாளிகளாக பயன்படுத்துகிறார்கள் என்கிற வருத்தம், அதிலும் பலமிழந்த மக்களை ஏமாற்றும் சொந்த மனிதர்கள் மேல் உள்ள கோபம், இதுவரை ஆட்சி செய்யாத கட்சி, நம்மைப்போல் வருத்தங்களையும், தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்த கட்சி. எனது தாயார் சொல்வார், இவர்கள் அனுபவித்த வேதனைகள் பற்றி, அங்கங்கு சடலங்கள் மிதந்ததும், வீட்டுக்கு அனுப்பி வைத்ததும். ஆகவே அவர்களுக்கு எங்கள் தாகம் வருத்தம் புரியும். உண்மையாகவே விடுதலைக்காக போராடியவர்களென்றால் எங்கள் உணர்வுகளை மதிப்பர், பாதிக்கப்பட்ட எங்களுக்கு தனது கரத்தை நீட்டுவார். இல்லை சர்வாதிகாரத்துக்கு போராடியவர்களென்றால் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் அநுர மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கவும் விட மாட்டார்கள், பொறுத்திருந்து பாப்போம்! எல்லோராலும் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள், இனியும் ஏமார இடமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அவர்களுக்கு இது  பழக்கப்பட்ட விடயம்  மானம் ரோசம்.  என்பது அறவே இல்லை    

அனுர. கட்சியில்  வடக்கு கிழக்கு தவிர்த்து மற்றைய இடங்களிலும் தமிழர்கள் போட்டி இடுகிறார்கள்.   

குறைந்தது பத்து  தமிழர்கள் அவர் கட்சியில் பாராளுமன்றம் போகலாம் 🙏

ஏமாற்றத்தின் வலி அப்படி! இந்த முடிவை ஏற்க மக்களை முன் தள்ளியிருக்கிறது. இருந்தும், சும்மா அதை சாதித்தோம், அதை சொன்னோம், மக்களுக்காக மக்களோடு இருக்கிறோம் என சவடால் விடுகிறார்கள். அப்படி அவர்கள் ஏதும் ஆற்றியிருந்திருந்தால்; எப்படி இவ்வளவு கட்சிகள் உருவாகின? அனுரபற்றி தெரியாமலேயே அவர்கள் பின்னால் போகிறார்களே? அதற்கு நம்ம ஏக பிரதிநிதிகள் ,பின்வாசல் பிரதிநிதிகள் பதில் சொல்லட்டுமேன்?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

இல்லை கந்தையர்! ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கம், எல்லோரும் மக்களை ஏமாளிகளாக பயன்படுத்துகிறார்கள் என்கிற வருத்தம், அதிலும் பலமிழந்த மக்களை ஏமாற்றும் சொந்த மனிதர்கள் மேல் உள்ள கோபம், இதுவரை ஆட்சி செய்யாத கட்சி, நம்மைப்போல் வருத்தங்களையும், தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்த கட்சி. எனது தாயார் சொல்வார், இவர்கள் அனுபவித்த வேதனைகள் பற்றி, அங்கங்கு சடலங்கள் மிதந்ததும், வீட்டுக்கு அனுப்பி வைத்ததும். ஆகவே அவர்களுக்கு எங்கள் தாகம் வருத்தம் புரியும். உண்மையாகவே விடுதலைக்காக போராடியவர்களென்றால் எங்கள் உணர்வுகளை மதிப்பர், பாதிக்கப்பட்ட எங்களுக்கு தனது கரத்தை நீட்டுவார். இல்லை சர்வாதிகாரத்துக்கு போராடியவர்களென்றால் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் அநுர மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கவும் விட மாட்டார்கள், பொறுத்திருந்து பாப்போம்! எல்லோராலும் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள், இனியும் ஏமார இடமில்லை. 

அருமையான உண்மையான கருத்துகள்  வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் எம்மை தோற்கடிக்க செயற்பட்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழங்க எமக்கு எவ்வித தேவையும் இல்லை.  

ம்ம்.... பொது வேட்பாளருக்கு வாக்களித்து எமது தீர்வை குழி தோண்டிப்புதைக்கிறார்கள் என்று சவால் விட்டார் சுமந்திரன்,  இன்று அவரின் நிலை என்ன? வெட்கமில்லாமல் ஏன் ஜனாதிபதியை தனியாக சந்திக்க சென்றார்? பழக்க தோசமாய் இருக்குமோ, தனியாக கதைத்து பதவிகளை எடுப்பது?  பாராளுமன்றத்தில் அடித்த கூத்துகளையெல்லாம் அமசடக்கமாய் பாத்துக்கொண்டிருந்து யாரை எங்கே வைப்பது என்று தீர்மானித்திருப்பார்கள் போலும். அவர்களோடு நின்று போட்டோ எடுத்து, வெளியிட்டால் மக்கள் ஏமாந்து அனுராவுடன் நட்பு கொண்டாடுகிறார்கள் என நினைத்து தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்கிற நப்பாசை, உங்களுக்கு நாங்கள் பணி செய்ய காத்திருக்கிறோம் எனும் செய்தியை சொல்லவும் போயிருப்பார்கள் போலும். எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. சுமந்திரன், டக்கிளசு எல்லா கட்சிகளையும் விமர்சித்தார்கள், இன்று இவர்கள் தென்பகுதியாலும் விமர்ச்சிக்கப்படுகிறார்கள். தன் சட்டியில் என்ன தீயுது என்று பார்க்காமல், மற்றவர் சட்டியில் என்ன அவியுது என்று பிரலாபித்ததன் பயன் உடனேயே கிடைத்து விட்டது. இனியாவது பொத்திக்கொண்டு இருப்பார்களா இவர்கள்?   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.