Jump to content

நினைத்தாலும் மறக்க முடியாதவை - அஜீவன் (தடம் 7)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஜீவன் அண்ணா... என்ன, தடம் தடங்கிடுச்சு???

Posted

அஜீவன் அண்ணா... என்ன, தடம் தடங்கிடுச்சு???

டிராபிக் பிரச்சனை

வருகிறது சுபேஸ் :)

Posted

பயணத் தடம் 4

arrest.jpg

என்னை ஏற்றிக் கொண்டு வந்த போலீஸ் ஜீப்

போலீஸ் வளாகத்துக்குள் நுழைந்து நிற்கிறது

இறங்குமாறு சொல்லி

என்னை அழைத்துக் கொண்டு போகிறார் சீனிவாசன்.

இழுத்துக் கொண்டு போக வந்தவர்கள்

அழைத்துக் கொண்டு போவதால் மனசு சற்று ஆறுதல் அடைகிறது

இருந்தாலும்

உள்ளே போன பின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்று

மனம் பதற்றத்தோடே துடிக்கிறது

யாரையாவது பிடிக்கப் போகும் போது

இறங்கினதும் யாருக்காவது

எதையாவது சொல்லி சாத்தணும்

அப்பதான் சுத்தி நிக்கிறவன் பயப்படுவான்

இல்லேண்ணா

போலீசுண்ணு பார்க்காம

நம்மள நிக்கிறவன்கள் சாத்திடுவான்கள் என்று

போலீஸ் நண்பர் ஒருவர்

ஒரு முறை சொன்ன கதை நினைவுக்கு வருகிறது

உள்ள போனதும்

போலீஸ் பலத்தை காட்டுறதுக்கு

நிச்சயம் நாலு தட்டாவது தட்டுவாங்க

இல்ல

லாடம் கட்டினாலும் கட்டுவாங்க

நாயகனில் கமல் வாங்கும்

போலீஸ் உதை ஞாபத்துக்கு வந்த போது

இதெல்லாம் தேவையா என்றது மனசு

நான் பேசுறது வேற இவங்களுக்கு புரியாது.

நான் ஒண்ணு பேச

அவனுக்கு ஒண்ணு விளங்க

நம்மை வழங்காம பண்ண

இது போதும்

மொழி புரிஞ்சவனுகளே

நாம சொல்றதை புரிஞ்சும்

புரியாத மாதிரி

லூசுதனமா விதண்டாவாதம் பண்ணும்

சைகோ கேஸ்களை பார்த்து

பழக்கப்பட்ட எனக்கு

மொழி புரியாதவர்களை நினைக்க

உதறலாகவேதான் இருந்தது

என் மன நிலையை உடைத்தார் சீனிவாசன்.

"பயப்படாதே சார்

கதிர் சார் ரொம்ப மோசமானவர்தான்

இருந்தாலும் ரொம்ப நல்லவர்

உண்மையை மறைக்காம சொல்லிடு

அவர் உன்னை நம்பிட்டாருண்ணு வை

நீ தப்பிடுவே

இல்ல............"

என்று என் கையை பிடித்துக் கொண்டு

என்னை அழைத்துச் செல்லும் சீனிவாசன் சொன்ன போது

என் உணர்வுகள் சீனிவாசனுக்கு

என் கைகளினூடாக வந்த குளிராலும் நடுக்கத்தாலும்

புரிந்திருக்க வேண்டும் என்றே தோன்றியது

உள்ளே போனதுதான் தாமதம்

உட்கார்ந்திருந்த

போலீஸ் அதிகாரி கதிர்

ஏதோ கெட்ட வார்த்தையை பேசிக் கொண்டு எழுந்த போது

"அடிச்சிடாதீங்க சார்

இதை முதல்ல பாருங்க" என்று

என்னிடம் இருந்த போட்டோ அல்பத்தை எடுத்து

கதிர் சார் கையில் கொடுத்தார் சீனிவாசன்.

எழுந்த வேகத்தை அடக்கிக் கொண்டு

உட்கார்ந்தவர்

அல்பத்தை புரட்டிப் பார்ப்பதும்

என்னை முறைத்துப் பார்ப்பதுமாய்

சற்று நேரம் கோபமாக இருந்தார் கதிர்.

சற்று அமைதியாகி

"உட்கார்" என்றார்

உட்காரப் போனேன்

"இல்ல நில்லு"

இன்னும் அந்த கோபம் முற்றாக குறையவே இல்லை.

அது அவர் பேச்சில் தெரிந்தது.

போலீஸ் அதிகாரி கதிர்

கன்னடத்தில் எதையோ சீனிவாசனை நோக்கி சொல்ல

என்னை வெளியே அழைத்து வந்த சீனிவாசன்

வெளியே இருந்த ஒரு அமர்வில் இருக்க வைத்து விட்டு

"ஓட நினைக்காதே சார்

அப்புறம் அதுதான் இறுதியாக இருக்கும்

இனி பயப்படாதே

நான் இருக்கேன்.

குடிக்க ஏதாவது வேணுமா?" என்றார்.

நான் பதில் கொடுக்காமல் மெளனமாக இருந்தேன்.

ஒரு போலீஸ்காரரை அழைத்து

எனக்கு குடிக்க தண்ணி கொடுக்கும்படி சொல்லி விட்டு

என்னை பார்த்துக் கொள்ளும்படி வேறு

அந்த போலீஸ்காரரிடம் கண்ணைக் காட்டிவிட்டு

சீனிவாசன் போலீஸ் அதிகாரி கதிர் அறைக்குள் போனார்.

தண்ணியை தந்த போலீஸ்காரன்

"அந்தப் பொண்ணை ரொம்ப நாளா தெரியுமா?

சினிமா நடிகை மாதிரி இருக்கா...............

................................................................."

என்று கொச்சைத் தனமாக அவன் பேசிய வார்த்தைகள்

அவன் எப்படிப்பட்டவன் என்பதை காட்டியது

என்னுள் வந்த கோபத்தை காட்டிக் கொள்ளாமல்

தலையை தொங்கப் போட்டுக் கொண்டேன்.

"கிடைச்சா அனுபவிச்சுடனும்யா

காதல் கீதல்ண்ணு பின்னால திரியக் கூடாது

இப்ப பாரு

உன்னை லாடம் கட்டப் போறங்க" என்று

மீண்டும் கிலியை என் மனதுக்குள் கொண்டு வந்தான்.

அவன் என்னை வார்த்தைகளால்

வெறுப்பேத்திக் கொண்டிருக்கும் போது

சீனிவாசன் வந்து

மீண்டும் கதிர் சாரிடம் என்னை அழைத்துச் சென்றார்.

நான் உள்ளே போனதும்

போலீஸ் அதிகாரி கதிர்

"இந்த பொண்ணு யாரு?" என்றார்.

"அவ என் லவ்வர் சார்.

4 வருசமா பழக்கம்.

மெற்றாசுல பாரீஸ் கார்னர்ல வேலை செஞ்சா

அப்போதிலயிருந்து தெரியும்........"என்றேன்.

"அவங்க அம்மா என்னவோ

ஒருத்தன் அவ பின்னாலயே திரியிறான்

வேலைக்கு கூட போக விடுறான் இல்ல

ரோட்டில வேற அவளுக்கு அடிக்க போயிருக்கான்

அது வேற நீ விடுதலைப்புலி

உன் அறை முழுக்க வெடி குண்டு இருக்கு

அதை வச்சு மிரட்டுறே

அப்படின்ணூ புகார் செஞ்சிருக்காங்களே?"

"இல்ல சார்

அவங்க பொய் சொல்றாங்க

அவங்க குடும்பத்துல

எல்லாரையும் எனக்குத் தெரியும்.

அவங்க தங்கச்சியை கூட

என் தூரத்து உறவு பையன் ஒருத்தனுக்குத்தான்

கல்யாணம் பண்ணிக் கொடுக்க உதவி செஞ்சேன்.

அப்போ எடுத்த படங்கள்தான்

உங்க கையில இருக்கிறது

அதில அவங்க குடும்பத்தோட நான் இருக்கேன்"

என்றவாறு

அல்பத்தில் குடும்பத்தோடு நான் இருந்த படத்தை காட்டினேன்.

"அப்போ விடுதலைப் புலி என்கிறது?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது சார்."

"இதெல்லாம் என்ன?"

அவர் மேசை டிராயருக்குள் வைத்திருந்து

என் பெயரில் இருந்த 3 கடவுச் சீட்டுகளையும்

இலங்கை அடையாள அட்டையையும் மேசையில் வைக்கிறார்.

ஒன்று எனக்குரியது

அடுத்த இரண்டும் இருந்த நாட்டினுடையது

பார்த்ததும்

இதயம் ஒரு கணம் நின்று துடிக்கிறது.

பாதுகாப்புக்காக ரேகாவிடம் நான் கொடுத்து வைத்திருந்தவை அவை .

அனைத்தும்

இப்போது அவர் கையில் இருப்பதை கண்டதும் அதிர்கிறேன்.

தலைக்குள் மின்னலாக ஏதோ அடித்து செல்கிறது.

மாட்டியாச்சு

அடுத்து என்ன செய்வதென யோசித்துக் கொண்டே

அலட்டிக் கொள்ளாமல்

"பார்க்கலாமா சார்?" என்கிறேன்.

ஒன்று எனக்குரிய கடவுச் சீட்டு.

அடுத்த இரண்டு வேறு வேறு பெயர்களில் .

இருந்த நாட்டு கடவுச் சீட்டுகள்.

என் உண்மையான கடவுச் சீட்டு காலாவதியாகி பல காலம் ஆகியிருந்து.

அதற்குப் பின்

நான் பாவித்தது

நான் இருந்த நாட்டு கடவுச் சீட்டைத்தான்.

இன்னோன்று ரேகாவால் எடுக்கப்பட்டது.

"பழையது காலாவதியாகிடுச்சு சார்

அடுத்ததுதான் நான் பாவிக்கிற கடவுச் சீட்டு"

"இது?"

மேலதிகமாக பாவிக்காமல் இருந்த கடவுச் சீட்டை காட்டுகிறார்.

" எனக்குத் தெரியாது சார்"

"அதில இருக்கது உன் போட்டோதானே?"

"ஆமா"

"அப்போ.........

இது உனக்கு தெரியாம

திடீருண்ணு முளைச்சுதா?"

"இல்ல சார்................

சிங்கப்பூர் போறதுக்கு எப்பவும் டிக்கட் மெற்றாஸ்லதான் வாங்குவேன்.

ரேகாதான்

டிராவல்ல மனேஜரா இருந்தா............

ஒருமுறை டிக்கட் எடுக்கிறதுக்கு ரேகாவுக்கு

என் பாஸ்போட்டை கொடுத்து

டிராவல்ல தொலைஞ்சுட்டுதுண்ணு சொன்னாங்க.

அது இல்லெண்ணா என்ன

வேற ஒண்ணு எடுத்துத் தாரோமுண்ணு

கையெழுத்தும் போட்டோவும் வாங்கினாங்க

அது இதுவா இருக்கலாம் சார்....................

அப்புறமா

என் ஒரிஜினல் பாஸ்போட் கிடைச்சுது

அதனால இது பத்தி அவ பின்னாடி சொல்லவே இல்ல

இப்போதான் இதை முதல் முறையா பார்க்கிறேன் .

அதுக்காக

அப்போ குடுத்த போட்டோதான் இது."

எதோ நினைவுக்கு வந்து சொல்வது போல்

சொல்லி விட்டு அவரைப் பார்க்கிறேன்.

அவர் என் முகத்தை பார்க்கிறார்.

நான் ஒன்றுமறியா அப்பாவி போல

புழுகி விட்டு மெளனமாக நிற்கிறேன்.

"அவங்க அம்மா உன்னை யாரோ என்கிறாங்க

ஆனா

உன் பாஸ்போட் எல்லாம் அவங்க வீட்டில இருந்து

கொண்டு வந்து தாராங்க.

அதனாலதான்

இது எப்படிண்ணு யோசிச்சேன்." என்கிறார் கதிர்.

என் கையில் இப்போ ஒரு துரும்பு.

இது போதும் இனி ஆட என மனதுக்குள் நினைக்கிறேன்.

அவர்கள் செய்த ஒரே ஒரு முட்டாள்தனத்தால்

கடவுச் சீட்டு குறித்து

நான் சொன்ன பொய்யை அவர் நம்பினார்.

இனி யாரையும் நம்பி

நல்லவங்க என்ற

எண்ணத்தில நடக்கக் கூடாது

இனி கவனமா நகரணும்.

அடுத்த அடியை பலமாக எட்டி வைக்கிறேன்.

"என் பொருட்கள் கூட

அவங்க வீட்டிலதான் சார் இருக்கு"

"அப்போ கிறீன்லாண்ட்டில்?"

"மாத வாடகைக்கு

கிறீன்லாண்ட்டிலதான் தொடந்து தங்கியிருக்கேன்.

அது கூட ரேகா எடுத்து தந்ததுதான்

அதுக்கும் ரேகாதான் காசு கட்டுறா?

வேணுமிண்ணா கேட்டு பாருங்க."

"ஏன்

உன் கிட்ட பணமில்லையா?

அவவ மிரட்டடித்தான் பணம் பறிப்பியோ?"

"இல்ல சார்

நான் வச்சுக்கிறதில்ல.

அவதான் என் செலவுகளை பார்ப்பா...........

எனக்கு வீட்டில இருந்து பணம் வரும்.

அதை அவளுக்குத்தான் கொடுப்பேன்.

என் பாங்க் டிரான்ஸ்பரை கூட பார்க்கலாம் சார்."

"எந்த பாங்குக்கு பணம் வரும்?"

"கனரா பாங்க்."

"அதை கையில எடுத்துக் கொடுப்பியா?"

"இல்ல. செக் மூலம்......................"

"அதை பார்க்கலாமா?

ரெக்கார்ட் இருக்கா"

"இருக்கு ......... நிச்சயம்

ஆனா செக் புக் கிறீன்லாண்டில இருக்கு..............."

எனக்கு வரும் பணத்தை டிராப் பண்ணாமல்

செக் மூலம் ரேகாவுக்கு கொடுத்து வந்தது

எனக்கு அப்போது கை கொடுக்கிறது.

வங்கியில் போய் நின்று பணம் எடுக்கும்

சோம்பேறித் தனத்தில் செய்த செயல் கூட

ஏதொ ஒரு வகையில் எனக்கு பலமாகிறது.

கதிர் குனிந்து தலையை சொறிகிறார்.

"அவங்க ரொம்ப பிராடு சார்

இவர் காசையெல்லாம் சாப்பிட்டிருங்க போல தெரியுது"

என்று சீனிவாசன் எனக்காக கதிரிடம் பேசி விட்டு

தொடர்கிறார்

"இவர் அறையில யோகா படங்கள்தான் இருந்துச்சு.

அதுக்கப்புறம் அந்த தே........... படம் .

இவர் கூடஅவவும் சேர்ந்து எடுத்தது.

மாட்டி வச்சிருக்கார்."

என்று கேலியாக புன்னகைக்கிறார்.

ஐயோ...........அவ அப்படி கிடையாது

என்று சொல்ல துடித்த மனசு

சார்..........................என்று இழுக்கும் போதே

"உனக்கு வேற பொம்பளையே கிடைக்கல்லயா?

இப்படி பட்டவங்க பின்னாடி............" என சொல்லும் போதே

"அவ அப்படி இல்ல சார்.

வேற யாரோ...................." என சொல்ல முயன்ற என்னை

"உங்கள எல்லாம் செருப்பால அடிக்கணும்

வேற யாரோ இல்ல

அவங்க அம்மாதான் கம்பிளைன்ட் கொடுத்தது.

அவளும் வந்து இருந்தா

ஆனா அவ வெளிய இருந்தா..............."

என்று வாயை பொத்த வைக்கிறார்.

அதிலிருந்தே

நடந்ததை என்னால் சற்று ஊகிக்க முடிகிறது.

"உன் பாங்க் புக்கை பார்க்கணும்.

நாளைக்கு காலையிலயே

கிறீன்லாண்ட்டுக்கு சீனிவாசன் சாரோடு போய்

அதெல்லாம் எடுத்து வா"

"ஒண்ணு மட்டும் தெரியணும்

உனக்கு இங்க யாரையும் தெரியாது

உள்ள அடிச்சு கொன்னு போட்டாக் கூட

யாருக்கும் தெரியாது

உண்மை தெரியிற வரைக்கும்

சீனிவாசன் சொல்லுற அறையில இரு.

ஓட நினைச்சே...................

போ!"

நான் பேசாமல் சீனிவாசன் பின்னால் நடக்கிறேன்.

ஒரு கண்டம் தாண்டியாச்சு

என்று மனசு அமைதியடைகிறது.

அடுத்து?...........என நினைத்தவாறு நடந்த போது

"கதிர் சார் ரொம்ப மோசமானவர்

முதல் முறையா நான் பார்த்து

அவர் கை வைக்கல்லேண்ணா

அது உனக்குத்தான்

ஆனா கதிர் சாருக்கு மேல இருக்கவர்

குடகு நாட்டுக்காரர்.

அவர் அவங்க பக்கம் எடுத்தா கொஞ்சம் பிரச்சனை.

இல்லேண்ணா கதிர் சார் இழுக்க மாட்டார்.

என்ன செய்யிறது.

நாளைக்கு வரையும் இரு பார்க்கலாம்"

"சார்

அவ என் பணத்துக்கு ஆசைப்படுறவ இல்ல சார்."

"அவங்க உன்னை மாட்டி வைக்க பார்க்கிறாங்க.

நீ அவ நல்லவ என்கிறே?

நீ ஒரு புதுமையான ஜென்மமா இருக்கே?

அவவ விட்டுட்டு வேற ஏதாவது யோசி"

சீனிவாசன் என்னை அன்போடு கடிந்து கொள்கிறார்.

என்ன இருந்தாலும்

இல்லாததை சொல்லக் கூடாது.

இருந்தாலும்

அப்பிடி ஒரு கேஸ் போட்டு

உள்ளே வச்சு...............................

நினைத்த போது

என் உடல் நடுங்கியது

அது பயத்தால் அல்ல கோபத்தால்.

"உன்னை இவ்வளவு செஞ்சிட்டாங்க

இன்னுமும் முட்டாள் மாதிரி பரிதாபப்படுறியே

இங்க இரு யோசிக்காதே

குளிரும் இந்தா சார்........."

என்று ஒரு போர்வையை தந்து விட்டு

அறையை சாத்தினார் சீனிவாசன்.

கதவை சாத்தி விட்டு

வெளியே நின்ற போலீசாரிடம் என்னைப் பற்றி

ஏதோ சொல்லி விட்டுப் போக

அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்

பலமாக சிரித்தார்கள்

அவர்கள் பேசியவை ஒன்றுமே புரியவில்லை

ஆனால்

என் நிலை குறித்து அவர்களுக்குள் எழுந்த சிரிப்புதான் அது..............

Posted

அஜீவன் உங்களைப்போன்ற ஒரு திறமையான கலைஞனிடம் இவ்வளவு அற்புதமான எழுத்தாற்றல் புதைந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. தொடருங்கள். வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

:)

Posted

அஜீவன் அண்ணா,

உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து ஆவலுடன் வாசித்து வருகிறேன்.

தொடருங்கள்.

Posted

நன்றி

பொன்னியின் செல்வன்

இணையவன்

Posted

அடடா அஜீவன் சொந்தக்கதையா அடுத்தவன் கதையை கே;கிறதெண்டாலே ஒரு அலாதி பிரியம்தானே ரி வி சீரியல் மாதிரி அதிக இடைவெளி விடாமல் போடுங்கோ அடுத்த பாகத்திற்காய் காத்திருக்கும் சாத்து :unsure::blink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை கலையுணர்வுடன் தடம் பதிக்கிறதுஎல்லொர் நெஞ்சிலும்

Posted

சாத்திரிக்கும்

புத்தனுக்கும்

நன்றி

  • 3 weeks later...
Posted

பயணத்தின் தடம் .5

sleepy.jpg

கதவை சாத்தி விட்டு சீனிவாசன் போகும் போது

வெளியே நின்ற போலீஸ்காரர்களிடம் ஏதோ சொல்ல

அவர்கள் சிரித்த சிரிப்பு

எனக்குள் என்னென்னவோ செய்தது

அது சிறை அல்ல

ஆனால் அந்த அறைக்குள்ளிருந்து

வெளியே நடப்பவற்றை பார்க்க முடியாது

மூடிய ஜன்னல்களைத் திறந்தால் கூட

அடுத்து இருப்பது ஒரு சுவர் என்பதை

இடுக்குகள் வழி என்னால் பார்க்க முடிந்தது.

வெளியே

இடையிடையே போகும் வாகன சத்தங்கள்

அந்த அதிகாலை அமைதியை உணர்த்தியது

ஒரு சில போலீஸ் பூட்ஸ் சப்த்தங்கள்

தூரத்தேயிருந்து கேட்கத் தொடங்கும்

அது எவரோ என்னை நோக்கி வருகிறார்கள்

என்று மனதுக்குள் அச்சத்தைக் கொண்டு வரும்

நானிருக்கும் அறையை நெருங்கி

ஓசை வரும் போது

என்னை நோக்கி வருவதாகவே மனம் படபடக்கும்..........

அந்த பூட்ஸ் சத்தத்துக்குரிய நபர்

அறைக்கு வெளியே உள்ள ஒருவரோடு

பேசிவிட்டு நகரும் ஒலி தொடங்கும் போதுதான்

மனது ஆறுதலடையும்...........

மீண்டும் யாரோ வரும் ஓசை

அதே பதட்டம்.................

அதே நடுக்கம்.

இது தொடர்ந்து கொண்டேயிருந்தது

சில வேளைகளில் மட்டும்

அப்படிக் தொடர்ந்து கேட்கும் ஒலிகளுக்குள்

நடந்து போகும் யாருக்கோ

ஒருவர் எழுந்து மரியாதை செய்வதற்காக

சல்யூட் அடிக்கும் சத்தம் கேட்கும்

அந்த சல்யூட் சத்தம்

ஒரு அதிகாரி

நானிருக்கும்

அறையைக் கடந்து செல்கிறார் என்பதை

என்க்குள் உணர்த்தும்

அடுத்த பூட்ஸ் ஒலிகள் எல்லாம்

சாதாரண போலீஸ்காரர்கள் நடக்கும் சத்தமாக இருக்கலாம்

என் அறைக்கு வெளியே

என்னை கவனிக்க யாரோ ஒருவர் இருக்கிறார்

என்னால் உணர முடிந்தது அதை மட்டும்தான்

இடையே

ஒரு ஜீப் வந்து நிற்பதும்

யாரோ குரல் எழுப்புவதும் கேட்டது

அது எவரையோ அடிக்கும் வலி தாங்காமல்

கத்தும் ஒருவரது சத்தம்

லத்தி ஒன்றால்

அடித்து அடித்து ஒருவரை

இழுத்துக் கொண்டு வருகிறார்கள் போலும்

தூரத்தே கேட்ட சத்தம்

என் அறையைத் தாண்டி சென்ற போது

அந்த மனிதனின் முனங்கல்

அந்தக் குளிரிலும் என்னை வியர்க்க வைத்தது

நாலைந்து பேர்

அந்த மனிதனை தாக்குவது போல

கேட்டது

அவன் எதையோ சொல்ல

அவர்கள் அவனை அடிக்கிறார்கள்

அவன் அமைதியாகிறான்

மீண்டும் அடிக்கிறார்கள்

அவன் மீண்டும் எதையோ சொல்ல முயல்கிறான்

மீண்டும் அடிக்கிறார்கள்

மீண்டும் அமைதியாகிறான்

நடப்பது தெரியவில்லை

ஆனால்

அவனிடம் எதையோ கேட்கிறார்கள்

அவன் சொல்ல தொடங்க அடிக்கிறார்கள்

அவர்கள் எதையோ கேட்க

ஒன்று இல்லை என்று சொல்கிறான்

அல்லது வாதாடுகிறான்

மீண்டும் அடிவிழும் போது

வாய் மூடி முனங்குகிறான்

மொழி புரியாத போது

இதைத்தான் என்னால் ஊகிக்க முடிகிறது

நிமிடத்துக்கு நிமிடம்

நான் உணரும் சத்தங்கள்

அச்சத்தையும்

வெறுப்பையும்

கோபத்தையும்

எனக்குள் வளர்க்கிறது

முதல் முறையாக

இப்படி வதைபடும் போதுதான்

"பழி வாங்கு" என்று

என்னுள் தூங்கிக் கிடந்த மிருகம் கூட

விழித்துக் கொண்டு

என்னை எதற்கோ தயார் செய்கிறதாய் உணர முடிந்தது.

வாய் பேசாத

மிருகங்களே

தனது முடிவு எட்டுவதை உணரும் போது

எதிர்த்து நிற்குமானால்

நான் மட்டும் ஏன்

அமுங்கிப் போக வேண்டும்

அங்கே யாரோ ஒருவனுக்கு நடக்கும்

அதே சடங்கு

நாளை எனக்கும் நடக்கலாம்

நடப்பது நடக்கட்டும்

உள்ளே எத்தனை நாள் வைத்திருப்பார்கள்?

எப்படியும்

ஒருநாள் வெளியே வருவேன்

வந்ததும்

என்னை இப்படி ஆக்கியவர்களை

அழிக்காமல் இருக்க மாட்டேன்

அன்றைக்கு புரியும் நான் யாரென்று.............?

நான் அப்படி என்ன செய்தேன்?

அவர்கள் என்னோடு பேசியிருக்கலாம்

இல்லை

நீ என்னோடு பேசியிருக்கலாம்

சென்னையில் இருந்த என்னை

பெங்களூருக்கு அழைத்து வந்ததே நீதானே?

அங்கே எனக்கு மொழி தெரியும்

நண்பர்களைத் தெரியும்

என் பிரச்சனை தெரியும்

இங்கே உன்னைத் தவிர

யாரையும் எனக்கு சரியாகத் தெரியாது

இங்கே

தெரிந்தவர்கள் எவரும்

நெருக்கமாய் எனக்காக

எதையும் செய்யக் கூடியவர்கள் இல்லை

அத்தனையும் உனக்குத் தெரியும் ?

யாரோ

ஏதோ செய்கிறார்கள் என்றால்

நீயுமா?

பிரச்சனைகள் சூறாவளியாக

வந்த போதெல்லாம்

எனக்காக

என்னோடு இருந்தவள் நீ

எனக்கு

என் வாழ்வு நிச்சயமில்லை

எப்போதும் எதுவும் நடக்கும் என்ற போது

"இல்லை பிரசாத்

நான் எப்பவும் உங்களுக்காக இருப்பேன்

நான் யுத்த பகுதிகளில் வாழ்ந்தவள்.

இந்தியா பாகிஸ்தானோடு போர் புரிந்த போது

விழும் குண்டுகளுக்குள் அச்சமின்றி

ஓடி விளையாடிவள் நான்.

என்னை நம்புங்கள்

உங்களை நான் பார்ப்பேன்."

என்று தைரியம் கொடுத்தவள் நீ

இதெல்லாம் சரிப்படாது என்று

முரண்பட்ட அத்தனை சமயங்களிலும்

தேடித் தேடி வந்தவள் நீ

விரக்தியோடு

அதிரும் அத்தனை வேளைகளிலும்

என்னை

அழுத்தி அழுத்தி அரவணைத்தவள் நீ

சாப்பிட மறுத்து

நிற்கும் போது

சாப்பிடுங்க பிரசாத்

உடம்பில பெலம் இல்லேண்ணா

ஓடக் கூட முடியாது என்று

ஊட்டி விட்டவள் நீ

மரண பயம்

ஒவ்வொரு நிமிடமும்

என்னை குலுக்கி எடுத்த போது

அணைத்துக் கொண்டவள் நீ

செலவு செய்ய

ஒன்றுமே கையில் இல்லை என்று

எனக்குள் உடைந்து வீழ்ந்த போது

அதை சொல்லாமல் உணர்ந்து

நான் சொல்லாமலே

என் வாழ்கை செலவுகளை

எந்த எதிர்பார்ப்புமின்றி

கையிலெடுத்துக் கொண்டு செலவு செய்தவள் நீ

சென்னையில்

எப்பவும் விவரம் புரியாம நண்பர்களோடு திரியிறீங்க

எதாவது ஆகிட்டா என்னால தாங்க முடியாது பிரசாத்

என்னோட பெங்களூர் போயிடலாம்

என்று அழைத்து வந்தவள் நீ

இப்போ மட்டும்

ஏன்

இப்படி பண்ணினே?

நான் என் பெத்தவங்களை பார்த்ததில்லை

என் அம்மா உன்னை மாதிரிதான் இருப்பாளோ

என்று நினைக்க வைத்தது நீ

நினைத்த போது

என் இதயம் விம்மி வெடித்தது.

ஏன் இப்படி பண்ணினே?

செத்துப் போடா என்று சொல்லியிருந்தா

சத்தியமா செத்திருப்பேனேம்மா!

நீ

யார் சொல்லையும் கேட்கக் கூடிவள் இல்லை

நீ கொடுக்காம

என் பாஸ்போட் எல்லாம்

போலீஸ் கைக்கு வர சான்ஸே கிடையாது?

அடுத்து

என் கடந்த கால வாழ்வு பற்றி

உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது

அது எப்படி போலீஸுக்கு தெரிஞ்சது

இதில உனக்கும் பங்கு இருக்கும்?

வேதனையும்

விரக்தியும்

மாறி மாறி என்னை தாக்கத் தொடங்கியது

எப்படியாவது

முதலில நான் வெளிய வரணும்

வந்து

என்னை இப்படி ஆக்கினவங்களை

இல்லாமல் பண்ணனும்

ஒண்ணு

அத்தனை பேரோடயும் நான் சாகணும்

இல்ல

எல்லாத்தையும் முடிச்சுட்டு

நான் எங்காவது தப்பணும்

இறுகிய மனதோடு

அறையில் கிடந்த பென்ஜில்

தூங்கிய போது

இதயத்தில் உருவாகிய வலி கூட தெரியவில்லை

மனசு விறைக்கத் தொடங்கியது...............

வெளியே கேட்ட சத்தங்கள்

எனக்கு இப்போது கேட்கவில்லை

மனம் வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது

அந்த

அசதியோடு

அயர்ந்து போனேன்

  • 1 month later...
Posted

பயணத் தடம் 6

Image003-jail_door.jpg

கதவு திறக்கப்படும்

சத்தம் கேட்டதும்

எழுந்து கொண்டேன்.

காலை நேரம் அது என்பதை உணர்த்துவது போல

சூரிய வெளிச்சம் அறையின் இருளை போக்கி

என் கண்களை கூசச் செய்தது.

முழு இரவும் ,

இருள்

மனதை போட்டுத் தாக்கிய தாக்கம்

என் உடலின் தளர்ச்சியில் தெரிந்தது.

கதவைத் திறந்து கொண்டு

கையில் டீயோடு வந்தார் சீனிவாசன்.

உள்ளே வந்த வெளிச்சம் கண்களை உறுத்தியது.

தூங்க முடிஞ்சுதா?

உம்.......

"இரவு வீட்டுக்கு போக இருந்தப்போதான்

உங்களை பிடிக்கப் போக சொன்னாங்க.

சும்மா

வேலையில்லாத ஒண்ணுக்காக

பெரிய ரகளையே பண்ண வச்சுட்டா அந்த பொம்புளை.

இருந்தாலும்

நீங்க ரொம்ப அதிஸ்டசாலி"

என்று சொல்லிக் கொண்டே

கையிலிருந்த டீயை நீட்டினார் சீனிவாசன்.

"சாப்பிடுங்க"

பல் துலக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன்.

இருந்தாலும் தாங்ஸ் என்று வாங்கி

சற்று தெம்பு வரட்டுமே என்று

மெதுவாக உறிஞ்சினேன்.

"நான் மட்டும் வராம இருந்திருந்தா

இன்னைக்கு அரை உசிராத்தான் இருப்பீங்க.

இரவிரவா பந்தாடியிருப்பாங்க."

சீனிவாசன் அப்படி சொன்ன போது

இரவில் கேட்ட அந்த மனிதனின் அலறல்

என் எண்ணத்தில் அலையாக மோதிச் சென்றது.

அது அலறலல்ல.

பேய் அலறல்.

நான் பேசாமல் நிலத்தை பார்த்தவாறே டீயைக் குடித்தேன்.

"கதிர் சார் மட்டும்

இதில இன்வோல்வ்வா இருந்தா

நான் ஏதாவது சொல்ல முடியும்

அவருக்கு மேல இருக்கவர்கிட்ட விசயம் போயிடுச்சு

அதுதான் பிரச்சனை..................."

வார்த்தைகளை இழுத்தார் சீனிவாசன்.

மெதுவாக அவரை நோக்கினேன்.

"அவர் கொடகுகாரர்.

அந்த தே........க்களும் அவங்க ஊருதானாம்.

அவர் என்ன செய்வாருண்ணு தெரியாது.

கதிர் சார் சொன்னா கேப்பார்.

இருந்தாலும்......................"

என்று தலையை சொறிந்தவர்

எதுக்கும்

முகத்தை கழுவிக்கிட்டு வெளிய உட்காருங்க

என்ற படி வெளியேறினார் சீனிவாசன்.

சற்று நேரத்தில் வந்த

ஒரு போலீஸ்காரர்

என்னை வெளியே அழைத்துப் போய்

முகம் கழுவ ஒரு குழாயைக் காட்டினார்.

முகத்தைக் கழுவிக் கொண்டு

கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டே

அவர் பின்னால் நடந்தேன்

அவர் ஒரு இடத்தைக் காட்டி

இங்கே உட்காரு என்றார்.

நான் உட்கார்ந்தேன்.

இரு புறமும் போலீஸ்காரர்கள்.

நான் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்க்கும் பலர்

ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

எனக்கு எதுவுமே புரியவில்லை.

அதற்குள் என்னை நோக்கி வந்த சிலர்

என்னை புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்கள்.

நான் ஏன் என்று கேட்டதுதான் தாமதம்

"ஒரு டெரரிஸ்டடை பிடிக்கப் போக இருப்பதாக

நேற்று பேசிக் கொண்டார்கள்.

நீதானாமே அது

புலியைப் பாரு புலியை"

என்றவாறு கமராக்கள் கிளிக் பண்ணத் தொடங்கின.

நான் என்ன செய்வதென்று தெரியாமல்

ஆந்தை போல விழித்துக் கொண்டிருந்தேன்.

அந்நேரம் பார்த்து

அவ்விடத்துக்கு வந்த சீனிவாசனிடம்

என்னைப் பற்றியும்

என்னிடம் கைப்பற்றிய ஆயுதங்கள் குறித்தும்

கேள்விகள் கேட்க

கடுப்பாகிப் போன சீனிவாசன்

யோவ்

இந்த ஆளு சிங்கப்பூர்காரர்யா.

இந்த ஆளு கொண்டாந்த பணத்தை எல்லாம் கறந்துட்டு

ஒரு பொம்பளை

இப்படி கம்பிளைண்ட் கொடுத்து

நாடகமாடுதுய்யா

என்ற கத்தினார்.

அப்படியா

அவ யாரு சார்

அது பத்தி சொல்லு சார்

என்று மேலும் கடுப்பேத்தினார்கள்

அந்தப் பத்திரிகைக்காரர்கள்.

நான் மீண்டும் மெளனமானேன்.

சீனிவாசன்

வாங்க என்று

அவர்களை அழைத்துக் கொண்டு அகன்ற போது

என்னை அறியாமலே

ஒரு பெருமூச்சு வெளியானது

அதன்பின்

யாரையும் பார்க்க மனசில்லாமல்

உயிரற்ற ஜடம் போல

நிலத்தை பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்த போதுதான்

என் முன்னே யாரோ ஒருவர்

மறைத்துக் கொண்டு நிற்பதை போல் உணர்ந்து

தலையை தூக்கினேன்.

கிறீன்லண்ஸில் என் பக்கத்து அறையில் இருந்த மாகாலிங்கம்

என் முன்னே நின்று கொண்டிருந்தார்.

மாகாவை கண்டதும் எழுந்திருக்க முயன்றேன்.

இரு பிரசாத் என்று என் தோளில் அழுத்தி

இருக்க வைத்து விட்டு

என் பக்கத்தில் அவனும் உட்கார்ந்தான்.

என்ன ஆச்சு?

எனக்கு தெரியாது மாகா.

நேத்து ராத்திரி வந்த போலீஸ்

அறையில குண்டு வச்சிருக்கிறதா சொல்லி

இங்க கொண்டு வந்துட்டாங்க

அப்புறம்?

ரேகாவும்

அவங்க அம்மாவும்தான் இதுக்கு காரணமா தெரியுது?

ஆனா முழுசா என்ன ஏதுண்ணு ஒண்ணும் புரியல்ல.

"காலையில லாட்ஜ் பசங்க

சாரை ராத்திரி போலீஸ்

புடிச்சுட்டு போனாங்க என்றாங்க.

நான்

எந்த ஸ்டேசன்னு தெரியாம

எல்லா இடத்துக்கும்

போண் போட்டு தேடினேன்.

கடைசியா இங்க இருக்கேண்ணு தெரிஞ்சுது."

தாங்ஸ் மாகா............

அதற்கு மேல் பேச்சு வர மறுத்தது.

டேய் பயப்படாதேடா.

நல்ல காலம் இன்னைக்கு சனிக்கிழமையாச்சு

அதனால நான் வேலைக்கு போகல்ல.

அது சரி

ரேகாவை பாத்தியா?

இல்லடா!

அப்போ

எப்படிடா அவ உன்னை மாட்டி விட்டாண்ணு சொல்றே?

என் பாஸ்போட்டெல்லாம் அவ கையிலதான் இருந்துச்சு.

அதெல்லாம் இப்போ போலீஸ் கையில இருக்கு என்று

நடந்த விபரங்களை சொன்னேன்.

டேய்

ரேகா வீட்டு அட்ரஸை குடு

நான் போய் எப்பிடியாவது பேசுறேன்

என்றான் மாகா.

இல்ல மாகா

நீ எதுவும் பேசாதே

நான் சாகாம மட்டும் தப்பினேன்னு வை

அவங்க எல்லாரையும் சாகடிக்காம விடமாட்டேன்.

டேய் பைத்தியகாரன் மாதிரி பேசாதடா.

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்

எப்படியும் உன்னை வெளிய எடுக்க பார்க்கிறண்டா

என்றான் மாகா.

அவன் வார்த்தைகள் எனக்குள் ஒரு வித பலத்தையும் நம்பிக்கையையும் தந்தது.

என் பிரெண்டு ஒருத்தன்

கிரிமினல் லாயர்.

அவனை சந்திச்சு பேசுறேன்.

இப்போ

ரேகா அட்ரஸை சொல்லுடா

என்ற மாகா அவள் முகவரியை வாங்கிக் கொண்டு

கையில் சிறிது பணமும் தந்து விட்டு ஸ்டேசனை விட்டு நடந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடிக்கொருக்கா

அமாவாசைக்கொருக்கா

வந்து அசத்திவிடறதாக முடிவோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அஜீவன்

அற்புதமாக இருக்கின்றது. படிப்போர் இதயங்களை உங்கள் அனுபவங்கள் நெகிழவைப்பவையாக இருந்தபோதிலும் இதயச் சுமைகளை எடுத்துச்சொல்லும் உங்கள் தமிழ்நடை அழகு. பாராட்டுக்கள்

Posted

ஆடிக்கொருக்கா

அமாவாசைக்கொருக்கா

வந்து அசத்திவிடறதாக முடிவோ

பணிகளில் இறுகும் போது

ஏற்படும் தொய்வு பிரியனே

அஜீவன்

அற்புதமாக இருக்கின்றது. படிப்போர் இதயங்களை உங்கள் அனுபவங்கள் நெகிழவைப்பவையாக இருந்தபோதிலும் இதயச் சுமைகளை எடுத்துச்சொல்லும் உங்கள் தமிழ்நடை அழகு. பாராட்டுக்கள்

நன்றி செல்வமுத்து

தமிழின் பாரட்டுக்கு.........

Posted

ஒரு முக்கிய குறிப்பு:

சில காரணங்களுக்காக

இக் கதையில்

இதுவரை ஜீவன் என்ற பெயரில் வந்த

கதாபாத்திரம் பிரசாத்

என மாற்றப்படுகிறது.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி!

Posted

வணக்கம் அஜீவன் அண்ணா,,

இண்டைக்குத்தான் உங்கள் கதையை முழுதும் வாசித்து பார்த்தேன். எங்கபாத்தாலும் எல்லாரிண்ட கதையும் சோகமா இருக்கிதே? அப்ப வாழ்க்கையில சந்தோசமா வாழ்ந்த ஒருவரும் இல்லையா? உங்கள் கதையை வாசிக்க கவலையாய் இருந்தது.

எல்லாருக்கும் எத்தனை பிரச்சனைகள். எங்கையோ முன்பு வாசித்து இருந்தன் ஒரு கவிதை. அதில கருவிலேயே தான் கலைஞ்சு போய் இருக்கலாம் எண்டு எழுதி இருந்திச்சிது. நானும் எனக்கு என்னால் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்கள் வரும்போது கருவிலேயே கலைஞ்சுபோய் இருக்கலாம் எண்டு யோசிப்பதுண்டு.

நடந்து வந்தபாதையை திரும்பிப் பார்ப்பது சிலவேளைகளில் சுகமான அனுபவமாக இருக்கக்கூடும் அல்லது பல படிப்பினைகளை தரக்கூடும். ஆனால், நடந்துபோகும் பாதையே கரடுமுரடானதாய் வேதனைகள் மிகுந்ததாய் இருந்தால் பழசயும் நினைத்து கிளறிப்பார்க்க மண்டை தாங்காது. பிறகு வாழ்க்கையே சூனியமாகத் தெரியும்.

நீங்கள் தற்போது நடந்துசெல்லும் பாதை மற்றும் உங்கள் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய கடவுளை பிரார்த்திக்கின்றேன்.

Posted

உங்கள் உணர்வுகளுக்கும் அன்புக்கும் நன்றி கலைஞன்.

இயற்கை அனர்த்தம் தந்த ஈரம்

அது கண்ணீராய்

ஈரமான இதயங்களின் அரவனைப்பாய்

இதோ காணொளியில் நினைவுகளாய்.................

Posted

பயணத்தடம்.7

29_38.jpg

நீ எதுவும் பேசாதே

நான் சாகாம மட்டும் தப்பினேன்னு வை

அவங்க எல்லாரையும் சாகடிக்காம விடமாட்டேன்.

டேய் பைத்தியகாரன் மாதிரி பேசாதடா.

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்

எப்படியும் உன்னை வெளிய எடுக்க பார்க்கிறண்டா

என்றான் மாகா.

அவன் வார்த்தைகள் எனக்குள் ஒரு வித பலத்தையும் நம்பிக்கையையும் தந்தது.

என் பிரெண்டு ஒருத்தன்

கிரிமினல் லாயர்.

அவனை சந்திச்சு பேசுறேன்.

இப்போ

ரேகா அட்ரஸை சொல்லுடா

என்ற மாகா அவள் முகவரியை வாங்கிக் கொண்டு

கையில் சிறிது பணமும் தந்து விட்டு ஸ்டேசனை விட்டு நடந்தான்.

மாகா போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போது

சற்று ஆறுதலாக இருந்தது எனக்குள்............

என்னைத் தெரிந்த ஒருவருக்காவது

நான் எங்கே இருக்கிறேன்

என்ற விபரம் தெரிந்திருக்கிறது என

நிம்மதிப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது...................

நான் கீறீன்லண்டுஸுக்கு வந்த போது

முதன் முதலில் மாகாலிங்கம்

பக்கத்து அறையில் இருப்பதை கண்டேன்.

ரேகா

என்னை கொண்டு வந்து

அறையில் விட்டு விட்டுப் போகும் போது

என் எதிரே வந்தவன் சிரித்துவிட்டு

என்னைப் பார்த்து தமிழுங்களா என்ற போது

ஆமா

என்று தலையாட்டி சிரித்ததால் உருவான சிநேகம்.

அவனது அறைக்கு பக்கத்தே

மற்றுமொரு அறையில்

கிருஸ்ணன் என்று ஒரு மலையாளி வேறு இருந்தான்.

அவன் கூட பெரும்பாலும்

மாலை நேரங்களில்

மாகாவோடுதான் இருப்பான்.

குட் மோனிங்

குட் ஈவினிங்.............

சில நாட்களில் உதிரும் புன்னகை

அதனால் ஏற்பட்ட நெருக்கம்

இவை நட்பாகியது.

நான் அறையில் தனியாக இருந்தால்

இருவரும் வந்து பேசுவார்கள்.

அவர்கள் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தால்

அவர்களிடம் பெங்களூர் குறித்த தகவல்களை கேட்பேன்.

இவை எம்மை இணைக்க உதவின.

பின்னர்

நாங்கள் எங்கு போனாலும்

சேர்ந்தே வெளியே போவோம் - வருவோம் என்றாகி

மிக நெடு நாள் பழகியவர்கள் போல்

ஆக்கிவிட்டிருந்தது.

ரேகா

தினசரி மாலையில் என்னைத் தேடி வருவாள்.

அப்போது மட்டும்

அவளோடு பேசிக் கொண்டிருப்பேன்.

அல்லது

அவள் எங்காவது என்னை அழைத்துச் செல்வாள்.

முக்கியமாக

என்னை ஏதாவது ஒரு

நல்ல ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று

சாப்பாடு வாங்கித் தருவாள்.

மொழி தெரியாமல்

ஹொட்டல்களுக்குப் போய்

நான் ஒன்றை நினைத்து கேட்க

அவர்கள் எதையோ கொண்டு வந்து வைக்க

பல வேளைகளில் அரை பட்டினிதான்

கொண்டு வந்து வைத்ததை வேண்டாம் என்று

சொல்லக் கூட மொழி அறிவு இல்லாமல்

தனியே என்னை நானே திட்டித் தீர்த்துக் கொள்வேன்.

அவளோடு வெளியே போனால்தான்

ஒரு நேரமாவது மனசுக்கு பிடிச்ச மாதிரி

நல்ல சாப்பாடு சாப்பிடக் கிடைக்கும்.

அவள் சென்னையை விட்டு

பெங்களூருக்கு மாற்றலான பின்னர்

5-6 மணிக்குள் தன் வேலையை முடித்துக் கொண்டு

நேராக என்னிடம்தான் வருவாள்.

வந்தால்

இரவு 9-10 மணி வரை

என்னோடு இருப்பாள்.

சென்னையில் இருக்கும் போது

பெரும்பாலான நேரம்

மெரீனா கடற்கரை காற்று எம் மீது வீசும்.

பூக்கார சிறுமிகளது ஒரு முழம் பூ வாங்குக்கா

கடலை விற்கும் சிறுவர்களது இதை வித்தாதான்

வீட்டில அடுப்பெரியுமுக்கா

போன்ற தொல்லை

பெங்களூரில் இல்லைதான்

இருந்தாலும் எம் நேசத்தை வலுக்க வைப்பதற்கு

அவர்களது சேவை அளப்பரியது.

ஆயிரம் காதல் வார்த்தைகளை விட

ஒரு முழம் பூ கூந்தலின் வாசத்தை மட்டுமல்ல

மல்லிகை மணத்தை மணப்பதாய்

அவள் கூந்தலை மணக்கவும்

மல்லிகையை விட உன் கூந்தல் வாசம் என்று

மனதையும் வசப்படுத்தவும் கிடைக்கும்

சந்தர்ப்பம் அலாதியானது.

ஒரு கடலைச் சுருள்

நாங்கள் கடலை போடுவதை நிறுத்தி

எங்கள் வாய்களுக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கும்.

கடலோரம் வாங்கிய மெரீனா காற்றின்

அந்த கதகதப்பு பெங்களூரில் இல்லை.

vsoudha.jpg

இங்கு பெங்களூர் விதான சவுதாதான் (பாராளுமன்றம்)

மாலை முழுவதும் மனதை மயக்கும்.

அந்த மாலை நேரச் சூழலில்

விதான சவுதா அருகே உள்ள புல் தரையில் உட்கார்ந்து

அங்கு வண்டிகளில் விற்கும்

உப்பு மிளகாய் தூள் போட்ட அன்னாசித் துண்டுகளை கடித்துக் கொண்டு

ஒவ்வொருவர் உதடுகளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்

உதடுகள் சிவப்பது போலவே

இரவை பகலாக்கும் ஒளிக்கீற்று விதான சவுதாவில்

அத்தனை அறைகளையும் நிரப்பி ஒளி ஜாலம் காட்டி

வாவ் என வாய் பிளக்க வைக்கும்.

அந்த சில மணி துளிகள்தான்

நான் மகிழ்வாக கழிக்கும் நேரம்.........

மொழி புரியாத ஒரு இடத்தில்

நான் மாட்டிக் கொண்டது

இது இரண்டாவது முறை .

இருந்தாலும் இது தனிமையை

தனிமை என்றே உணர்த்தியது.

சில தனிமைகள் நாமாக தேடிச் செல்வவது.

சில தனிமைகள் நம்மை தனிக்க வைத்து வாட்டுவது.

இங்கே இரண்டாவது வகை

வாட்டும் தனிமையையே உணர்ந்தேன்.

இருந்தாலும் நான் தங்கி இருந்த

கிறீன்லான்டில் பணிபுரிபவர்கள்

தமிழ் பேசுவதால் ஓரளவு நிம்மதி கிடைத்தது.

அங்கு சாப்பாடு எல்லாம் ரொம்ப மடட்டம்.

அதனால் வெளியே எங்காவது சாப்பிட்டால்தான் உயிர் வரும்.

இல்லேண்ணா வயிறு மட்டும்தான் புடைக்கும்.

மன நிறைவே வராது.

கிறீன்லான்டில் சுமார் சாப்பாடு என்றால்

இட்லி : தோசை மட்டுமே.

அடுத்தது எல்லாமே

மகா மட்டமாக இருக்கும்

டீ கூட தண்ணி சூடா இருந்து

ஏதோ நிறமா தெரியும்

அதை டீ என்று நினைத்து குடித்தால்தான் உண்டு?

அந்த கொடுமைகளில் இருந்து மீள

ரேகா இல்லாத போது

இந்த நண்பர்கள் தயவுதான் எனக்கு துணையானது.

காலப் போக்கில்

ரேகாவும் இவர்களுக்கு அறிமுகமானாள்.

சில வேளைகளில்

அந்த சினேகம் இனியதாக இருக்கும்

பல வேளைகளில் அதுவே

பெரும் துயரமாக அமைந்துவிடும்.

ஏதாவது தனியா பேசணும்

என்று நினைத்துக் கொண்டிருந்தால்

அன்று இவர்களும் எங்களுடன் சேர்ந்து விடுவார்கள்.

அப்போ

எங்கள் பாடு ரொம்ப திண்டாட்டம்.

இருங்கண்ணு சொல்லவும் முடியாம

துரத்தவும் முடியாம நாங்க படும் பாடு இருக்கே?

அப்பப்பா?

இதனாலேயே

என்னை ரேகா

மகாத்மா காந்தி ரோட்டிலிருந்த

அவள் ஆபிஸுக்கே வந்துவிடச் சொல்லுவாள்.

நானும் மாலையானால்

அங்கே போயிடுவேன்.

அங்கிருந்து எங்காவது என்னை அழைச்சுப் போவாள்.

எங்க போனாலும் ஆட்டோதான்.

இது காதல் வாழ்வில் ஒரு பெரும் செலவுதான்.

இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒரு செலவு?

ஒரு இடத்தில இருக்கிறதை விட

நாங்க இருவரும்

ஆட்டோவுல பயணம் செய்யிற நேரம்தான் அதிகம்.

நான் கிறீன்லான்டில் இருந்து வெளியேறினா

சினிமா - பாக்கு - உணவகம் என்று சுற்றி

கடைசியா அவளை வீடு வரை கொண்டு சென்று விட்டு விட்டு

திரும்ப கிறீன்லான்டில் வந்து இறங்கும் வரை

ஆட்டோவே துணை.

கோகி பறபேக்கு ( போய் வரணும்) போன்ற

கன்னட வார்த்தைகள்தான்

ஆட்டோ காரர்களுடன் பேச நான் கற்றுக் கொண்டது.

சென்னை மாதிரி சென்னை சுத்தி காட்டாம

சொன்ன இடத்துக்கு கொண்டு போய் விடும்

ரொம்ப நேர்மையான ஆட்டோகாரர்கள் பெங்களூரில்.

நான்

அறையில பெரும்பாலும் நாங்க இருக்க விரும்பாததற்கு

நண்பர்கள் மட்டுமல்ல காரணம்.

அறையின் உள்ளே இருப்போர் செய்யும் சிலுமிசங்களை பார்க்க என்றே

பூதக் கண்ணாடி ஓட்டைகள் ஏராளம்.

கிறீன்லான்டின் உரிமையாளருக்கு

இது ஒரு நோயாக இருப்பதாகவே உணர்ந்தேன்.

அவர் சில அறைகளுக்கு வெளியே நின்று

பார்க்கும் அசிங்கத்தை

பார்த்தால்

வெண்ணிற ஆடை முர்த்திதான்

என் நினைவுக்கு வரும்.

இதை ஒரு நாள் ரேகாவிடம் நான் சொல்லப் போனதால்

அவள் அதன் பின்னர்

அங்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்தாள்.

இதனாலயே

நான் அவளை சந்திக்க பெரும்பாலும் வெளியே போனேன்.

மாகா மற்றும் கிருஸ்ணனுடன் ஏற்பட்ட சிநேகம்

ரொம்ப நெருக்கமான நட்பாக இல்லாது போனாலும்

மாகாவும் கிருஸ்னணும் நல்ல நண்பர்களாகவே எங்களோடு பழகினார்கள்.

என்னை கைது செய்வதற்கு

நாலு நாளைக்கு முன்னதான்

கிருஸ்ணன் கேரளா போனான்.

அவன் இவனை விட ரொம்ப விவரமானவன்.

அவன்

பேசியே எதையும் சாதிக்கக் கூடியவன்.

அவனது நடை உடை பாவனை அனைத்தும்

அனைவரையும் அசத்தும்.

அவனோடு பழகிய போதுதான்

மலையாளிகளின் திறன் தெரிந்தது.

எதுவுமே

தெரியாது அல்லது முடியாது என்ற வார்த்தையை

அவன் வாயிலிருந்து வரவே வராது.

ரொம்ப பொஸடிவ்வாவே இருப்பான்.

அவன் இல்லாமல் போனது என் துர் அதிஸ்டம்தான்.

மாகா அப்படியில்லை.

தன் காதலி பிரச்சனையை கூட தீர்க்க முடியாம

ரேகாகிட்டேயும் என்கிட்டேயும்

சொல்லி நொந்து கொண்டேயிருப்பான்.

இருந்தாலும் யாருக்கும் கெடுதல் நினைக்காத மனசு மாகாவுடையது.

கிருஸ்ணன் கொமன்சென்சோடுபழகுவான்

மகா அப்படியல்ல.

மாகா

நேரம் காலம் தெரியாம

எங்க அறைக்கு வந்துடுவான்.

ஒண்ணு

ரேகா வர்றதுக்கு சற்று முன்னால வருவான்

இல்ல ரேகா வந்த சில நிமிடத்திலேயே

ஓ.........சாரி என்றவாறு வந்து

போகாம நின்று கிட்டே சாணம் மிதிக்கிற டைப்.

இருண்ணும் சொல்ல முடியாது

போண்ணும் சொல்ல முடியாது

நான் அவஸ்தைபடுவேன்.

ரேகாதான்

பரவாயில்ல வாங்க உட்காருங்க என்பாள்.

அந்த ஒரு வார்த்தை போதும் அவனுக்கு.........

டீ காப்பி

ஏதாவது ஆடர் பண்ணட்டுமா என்று கேட்டு

அவனே ஓடரும் பண்ணி பணமும் கொடுத்திடுவான்.

அதன் பின்னர்

தன் காதலியோட உள்ள பிரச்சனைகளை கொட்ட

ஆரம்பிச்சா ..............

ஒரே புராணம்தான்

என் தலை சுத்தும்.

செய்ய வழி கிடையாது?

உம்......உம்...........

உம் கொட்டித்தான் ஆகணும்

இவனை அறையில தவிர்க்கவே முடியாது.

ரேகா என் கிட்ட வர்ற

அதே நேரந்தான் இவனும்

அவன் ஆபீஸ் விட்டு வருவான்.

பேசிக்கிட்டே இருந்து

கதை தொடர்கதையானால்.........

ரேகா

கடிகாரத்தையும் என்னையும் பார்ப்பா.

அது கூட புரியாம

லேட்டாகுதாண்ணு கேட்டுட்டு கூட

அவன் தெதாடர்ந்து பேசிக் கொண்டே இருப்பான்.

ஒண்ணும் சொல்ல முடியாம நான் அவளை மெதுவா பார்ப்பேன்.

தினமும் நடக்கிற கூத்து இது.

வீட்டுக்கு போகப் போகும்

அவளை விட்டுட்டு வர்றதா கீழ

இறங்கி வரும் போது

" மத்தவங்களைப் பத்தி கொஞ்சம் கூட

யோசிக்காத இவர் கூட எந்த பொண்ணு

பிரச்சனை இல்லாம இருப்பா"

என்ற வார்த்தைகள் ரேகாவிடமிருந்து

மென்மையாக வந்தாலும்

அதில் கோபம் இருக்கும்.

ரேகா கடுமையாக பேச மாட்டாள்.

அமைதியாக இருப்பாள்.

அதுதான் ரொம்ப கடுப்பா இருக்கிறதின் அறிகுறி.

அவளை ஆறுதல்படுத்த நான் சொல்வது

"நாளைக்கு உன் ஆபீஸ் கிட்ட வந்திடுறேன்" என்பதுதான்.

இப்படிப்பட்ட ஒரு சினேகம் மாகா!

இப்போ

போலீஸ் ஸ்டேசனில் இருந்து

ரேகாவை பார்த்து வர்றதா

என்னிடம் ஏதோ சொல்லிட்டுப் போறவன்

இப்ப போய்

என்ன சொதப்ப போறனோ என்று வேறு

மனது படக் படக் என்றது!

என்ன இருந்தாலும்

என்னை தேடி இருக்கானே?

அது ஒரு பெரிய விசயம்.

அது உண்மையில் ஆறுதலாக இருந்தது.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே

என்னை நோக்கி வந்த சீனிவாசன்

"என்ன செஞ்சீங்க.........." என்றார் சற்று கோபமாக

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

உங்களை பார்க்க வந்த ஆள்

ஒரு கிரிமினல் வக்கீலை பார்த்திருக்கார்.

அவர் போண் பண்ணி

காரணமே இல்லாம உங்களை புடிச்சு வச்சிருக்கதா

கதிர் சாரை கத்தியிருக்கார்.

கதிர் சார் இப்போ செம கடுப்புல இருக்கார்

ஏன்?

உங்களை கேஸ் ஏதும் போடாம வெளியில விடுறதுக்கு

நினைச்சிக்கிட்டு இருந்தார்.

இப்ப பாருங்க.............

நீங்க செஞ்ச வேலையை............

அந்த வக்கீல் ரொம்ப மோசமான வக்கீல்.

போலீசுக்கு எதிரா வாதாடுற அந்த வக்கீல்

கதிர் சாருக்கு பிடிக்காத வக்கீல் தெரியுமா?

என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?

யார் அந்த ஆளு?

அந்த ஆளு வந்தா

அவனையும் சேர்த்து உள்ள போடணுமுண்ணு கோபத்தில இருக்கார்

என்றார் சீனிவாசன்.

என்னிடம் உருவான நம்பிக்கையும் இல்லாமல் போச்சு இப்போ..........

நான் நினைச்சேன்

மாகா சொதப்பிட்டான்?

happy_new_year_md_clr.gif

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.