Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!

sritharn.jpg

“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், அவர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அடைகின்ற வகையிலும், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மையமாக வைத்தும் ஒரு நீண்டகால வரலாற்றைக் கொண்ட தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு தேசியத் தலைவர் பிரபாகரனால் வழிகாட்டப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு எங்கள் மக்களுக்கான பயணத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

எமது மக்களுக்கான இந்தப் பயணத்திலே தேர்தல்கள் ஒரு பெரிய முக்கிய புள்ளிகளாக மாறுகின்றன. அந்த முக்கியமான புள்ளிகளாக இருக்கின்ற தேர்தல் காலங்களில் மக்களுடைய ஆணை திரும்பத் திரும்ப வழங்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்பது தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் வாழ்வை, தங்களுக்கான அரசியல் உரிமையை, தங்களுக்கான அரசியல் இருப்பைத் தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு தேர்தல் களமாக – அதற்காக தாங்கள் தெரிவு செய்கின்ற ஆணை வழங்குகின்ற ஒரு தேர்தலாக அமைகின்றது.

அந்தவகையில்தான் தமிழ் மக்கள் கூருணர்வோடும் தெளிவான பார்வையோடும் இந்த அரசியல் பெருவெளியில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், நாங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யார் யாரைத் தெரிவு செய்ய வேண்டும், யார் யார் நாடாளுமன்றம் சென்றால் எங்களுக்காக பேசுவார்கள், எங்களினுடைய மக்களின் உரிமைகளை கொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையில் உங்களுடைய தெரிவுகள் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேர்தலுக்கான நீதிபதிகளாக தமிழர்களே அமைவதால் அவர்களுடைய வாக்குகள் சிதறிப் போகாமல் அது தமிழ்த் தேசியத்துக்கான தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றவர்களுக்கான வாக்காக மாற வேண்டும்.

இப்போது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 44 தரப்புகளாக 396 பேர் 6 ஆசனங்களுக்காக களத்திலே இருக்கின்றார்கள். ஆகவே, தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. எங்கள் மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. மக்களுடைய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் கேட்பது வடக்கு, கிழக்கில், மலையகத்தில், கொழும்பில் வாழுகின்ற தமிழர்கள் தமிழ்த் தேசியத்துக்காகத் தமிழர்களுடைய உரிமைக்காக யார் யார் உரத்துக் குரல் கொடுக்கின்றார்களோ, யார் யார் தேவையென்று கருதுகின்றீர்களோ, அந்தவகையில் தமிழ்த் தேசியத்துக்காக உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய வேண்டுகோளாகும்.

நான் மதுபானசாலைக்குப் சிபாரிசு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து எனக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது கூட்டுச் சதியாகும். எங்களது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும், கிழக்கிலே இருக்கின்ற ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து எனக்கு எதிராகத் திட்டமிட்ட கூட்டுச்சதியாகவே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

இந்தக் கூட்டுச் சதி மக்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். மக்கள் அதைப் புரிந்துகொள்கின்றார்கள். யாராவது கூடுதலாக விருப்பு வாக்குகளை எடுத்து விடுவார்கள் அல்லது கட்சியை மீண்டும் கட்டியமைப்பதற்கு அவருக்கு ஓர் ஆணையை மக்கள் வழங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் கட்சிக்குள் இருக்கின்ற சில அநாமதேயமான சந்தேகப் பிறவிகளுடைய அல்லது தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

எங்கள் மீது மதுபானசாலை இருப்பதாகக் குறிப்பிடும் இவர்கள் தங்களுடைய படத்துடன் என்னுடைய படத்தை இணைத்து கிளிநொச்சிக்குத் தபாலில் அனுப்புகின்றார்கள். நீங்கள் அவருக்கும் (எனக்கும்) போடுங்கோ, எங்கள் இருவருக்கும் போடுங்கோ என்று. இது ஒரு கேவலமான செயல் இல்லையா? மதுபானசாலை இருக்கு என்று கூறிக்கொண்டு எங்கள் படத்தைப் போட்டு வாக்கு கேட்கும் போக்கிலித்தனத்துக்கு ஏன் போகின்றீர்கள்? என்னுடைய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடு கீழ்த்தரமான செயற்பாடாகும். வரலாறும் காலமும் இதற்குச் சரியான பதிலை வழங்கும்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் போட்டு தடுக்காது இருந்திருந்தால் எமது கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் 4 – 5 ஆசனங்களை அலுங்கல் – குலுங்கல் இல்லாமல் நாங்கள் எடுத்திருக்க முடியும்.

தங்களுடைய சுயநலத்துக்காகவே எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய பதவி மோகங்களுக்காகத் தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழ் மக்களை வேறு திசைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் செய்த கைங்கர்யம்தான் வழக்கு. அதன் காரணமாகத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இடைக்காலத் தடை எப்போது விலக்கப்படுகின்றதோ அப்போது நான் தலைவராகப் பொறுப்பெடுப்பேன்.

அன்புக்குரிய மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது இம்முறை எனக்கு ஒரு ஆணை தாருங்கள். சிறீதரன் ஆகிய நான் திரும்பவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்தி, புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களையும், நிலத்தில் இருக்கின்ற தமிழர்களையும் ஒருங்கிணைத்து வடக்கு – கிழக்கு, மலையகம், கொழும்பு என்று எங்கள் தமிழர்களை ஓரணியாக ஒன்றாக்கி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் எல்லாக் கட்சிகளையும் ஒரு பாதையில் கொண்டுவந்து, தேசிய விடுதலைக்கான இயக்கத்தை அமைப்பதற்கு என்னாலான முழு முயற்சிகளையும் மற்றவர்களையும் அரவணைத்து நான் செய்வதற்கு எனக்கொரு ஆணை தாருங்கள். மீண்டும் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதற்கான ஆணையாக அது இருக்கட்டும் என எனது மக்களிடம் வினவி நிற்கின்றேன்.

தேர்தல் முடிந்த பிற்பாடு நான் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுப்பேன். வழக்குகள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நினைக்கின்றேன். 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கின் தவணை. மேலும் தவணைகள் போகும் வாய்ப்பு உள்ளது. இப்போதும் வழக்கைப் போட்டவர்கள் கைவாங்க முடியும். அவ்வாறு செய்தால் கட்சி மீண்டும் நல்ல நிலைக்கு வரும். மக்களிடம் கட்சி மீது நம்பிக்கை வரும். கட்சிக்குள் இருப்பவர்களே கட்சிக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கும்போது தமிழ் மக்களுடைய விடங்களை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

தற்போது மக்கள் யாவற்றுக்கும் தீர்ப்பு எழுதுகின்ற காலம். யார், யார் என்னென்ன கேவலங்களைச் செய்கின்றார்களோ, யார் யார் மக்களுக்கு எதிரான விரோதமான நடவடிக்கைகளை ஆற்றுகின்றார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு அளித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குகின்ற காலம் மக்களிடம் வந்திருக்கின்றது. மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்ற காலம் போய் மக்கள் நீதிபதிகளாக மாறி இருக்கின்றார்கள். உங்களுடைய நீதிக்காக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி கடந்து 15 ஆம் திகதி வரக் காத்திருக்கின்றோம்.” – என்றார்.

 

 

https://akkinikkunchu.com/?p=298659

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை முதலில் சுமந்திரனிடம் வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, புலவர் said:

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.

கழுதை  தேய்ந்து.... கட்டெறும்பான கதை.
சுத்துமாத்து  சுமந்திரனை கட்சிக்குள் வைத்திருந்தால்.... இதுதான் நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2024 at 13:05, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்

large.IMG_7490.jpeg.b3fd01d244777f7df5cb

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.

ஏன்? வீட்டுக்கு வாக்களிக்க விரும்புவோர் சுமந்திரன் உட்பட தனக்கு விருப்பமான ஒருவருக்கு அளிக்கலாம் அல்லவா? இவ்வளவு நாளும் சிறிதரன் பா.உவாக இருந்து சம்பாதித்த பார் வருமானம் போதாதாமா😂?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Justin said:

ஏன்? வீட்டுக்கு வாக்களிக்க விரும்புவோர் சுமந்திரன் உட்பட தனக்கு விருப்பமான ஒருவருக்கு அளிக்கலாம் அல்லவா? இவ்வளவு நாளும் சிறிதரன் பா.உவாக இருந்து சம்பாதித்த பார் வருமானம் போதாதாமா😂?

ஏன் சுமோ வரவேண்டும்?சிறிஜதரன் தேவையில்லை என்றால் சுமோவும் தேவையில்லை. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமத்தினின் அல்லக்கைகள். அவர்களுக்கு வாக்குப் போடுபவர்களின் ஒருவாக்கு நிச்சயம் சுமத்திரனுக்கும் விழும்.அவர்கள் இந்தத்தேர்தலில் பலியாடுகள். ஆனால் அடுத்துவரும் மாகாணசபை ஊள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வர இடமுண்டு. இந்தத் தேர்தலில் பல தெரிந்த முகங்கள் இருந்தால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.அதனால் திட்டமிட்டே சுமத்திரன் வேட்பாளர் தெரிவில் தன் ஆதரவாளர்களை மட்டுமே தெரிவு வசய்துள்ளார். பலர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். சிறிதரன் தலைவர் பதவிக்காக ஒட்டிக் கொண்டு இருக்கிறார். சுமத்திரன் செய்வது அரசியல் ஊழல்.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்துக்கும் வாக்களிக்கும் போதும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுப்பது என்பது. வெளியில் சொல்ல முடியாத நிபந்தனைகளுக்காதத்தான் பெட்டிகள்கைமாறுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் சிறிதரனையும் எதிர்க்கிறேன். அதனைவிட சுமத்தரனின் கையில் தமிழசுக்கட்சி போவதை எதிர்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிதரன் தமிழ் மக்களுக்கு விசேட உரை!

என்னை மனைவி வீட்டுக்குள் எடுக்கிறா இல்லை. இந்த தேர்தலில் நான் மீண்டும் குடும்ப தலைவராக ஆணை தாருங்கள்🤣.

இவரெல்லாம் ஒரு தலைவர் - இவர் எமக்கு உரிமை வாங்கி தந்துடுவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புலவர் said:

ஏன் சுமோ வரவேண்டும்?சிறிஜதரன் தேவையில்லை என்றால் சுமோவும் தேவையில்லை. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமத்தினின் அல்லக்கைகள். அவர்களுக்கு வாக்குப் போடுபவர்களின் ஒருவாக்கு நிச்சயம் சுமத்திரனுக்கும் விழும்.அவர்கள் இந்தத்தேர்தலில் பலியாடுகள். ஆனால் அடுத்துவரும் மாகாணசபை ஊள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வர இடமுண்டு. இந்தத் தேர்தலில் பல தெரிந்த முகங்கள் இருந்தால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.அதனால் திட்டமிட்டே சுமத்திரன் வேட்பாளர் தெரிவில் தன் ஆதரவாளர்களை மட்டுமே தெரிவு வசய்துள்ளார். பலர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். சிறிதரன் தலைவர் பதவிக்காக ஒட்டிக் கொண்டு இருக்கிறார். சுமத்திரன் செய்வது அரசியல் ஊழல்.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்துக்கும் வாக்களிக்கும் போதும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுப்பது என்பது. வெளியில் சொல்ல முடியாத நிபந்தனைகளுக்காதத்தான் பெட்டிகள்கைமாறுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் சிறிதரனையும் எதிர்க்கிறேன். அதனைவிட சுமத்தரனின் கையில் தமிழசுக்கட்சி போவதை எதிர்க்கிறேன்.

சிறிதரனை விட சுமந்திரனை எதிர்ப்பீர்கள் என்று தெரியும், நீங்கள் மட்டுமல்ல, இங்கே இருக்கும் "சுமந்திரன் லவ்வர்ஸின்" நிலையும் அதுவே.

இதையெல்லாம் தாயக மக்கள் பார்க்கவில்லை, கணக்கிலெடுப்பதில்லை. அங்கேயிருக்கும் மக்களுக்கு விளங்கிய படி, சிறிதரன் தமிழர்களிடையே மிகப் பெரிய ஊழல் அரசியல்வாதி. வெளிநாட்டு தமிழரின் உதவிகளில் மூக்கை நுழைத்து செல்வாக்கு செலுத்துவது முதல், அரச அதிகாரிகளின் நியமனத்தில் தனது செல்வாக்கினால் பதவி நீக்கங்கள், இடமாற்றங்கள் என உள்ளூரில் பிரபலமானவர் சிறிதரன். இப்போது ஜேவிபியின் சார்பில் தேர்தலில் நிற்கும் சில முன்னாள் அரச பணியாளர்கள் கூட சிறிதரனின் ஊழலால் பாதிக்கப் பட்டு, ஜேவிபியின் ஊழியர் சங்கத்தினால் காப்பாற்றப் பட்டோர் என்றால், சிறிதரனின் செயல்களால் நீங்கள் காக்க முனையும் so-called "தமிழ் தேசியம்" மீதான விளைவுகள் புரிய வேண்டும்.

இந்த "பெட்டி மாறியது, குட்டி மாறியது" என்பதெல்லாம் "சசிகலா வாக்குகளை சுமந்திரன் தூக்கி வென்றார்" என்பது போன்ற வட்சப் அலட்டல்கள். அலட்ட உதவும், ஆனால் தாயக அரசியலுக்கு இதனால் ஒரு விளைவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்ததச் சிறிதரன் கடந்த தேர்தலில் சுமத்தரனை ஆதரித்த போது  அவரை பாலா அண்ணைக்கு நிகரான விண்ணர் என்ற போது சிறிதரனையும் தூக்கிப்பிடித்த சுமத்திரனின் லவ்வர்ஜ்சுக்கு இப்ப சிறிதரன் என்றால் கசக்கிறது. என்னுடய விருப்பம் சும்த்திரன் சிறிதரன் 2 போருமே  தோற்க வேண்டும். சுமத்திரன்கட்டாயம் தோற்க வேண்டும். சுமத்திரன் தோற்க வேண்டுமென்றால் சிறிதரன் வெல்ல வேண்டும்.மாறாக சுமத்திரன் வென்றாலோ அல்'லது 2 பேரும் தோற்றாலோ தமிழரசுக்கட்சி சுமத்திரனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடும். பார் லைசென்ஸ விகாரம் தொடர்பாக உறுதியான தகவல்;கள் தகவல் அறியும் சட்டத்தின்படி பெறப்படும்வரை சிறிதரன் குற்றஞ் வசுமத்தப்பட்டவர்தான் சுமத்திரனின் அல்லக்கைள் போட்டோக் கொப்பி வெட்டி ஒட்டி மூக்குடைபட்ட கதையும் வட்சப் அலட்டல்களை விட கேவலமானவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Justin said:

இந்த "பெட்டி மாறியது, குட்டி மாறியது" என்பதெல்லாம் "சசிகலா வாக்குகளை சுமந்திரன் தூக்கி வென்றார்" என்பது

தமிழ் யுரியுப்பர்களின் அலட்டல்களைவிட மோசமானது



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற ஒருவர் கைது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கற்பிட்டி அல்மனார் வாக்குச் சாவடிக்கு அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/311987
    • இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்கா - இந்திய அணியை காப்பாற்றிய திலக் வர்மா, அர்ஷ்தீப் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக திலக் வர்மாவின் அற்புதமான சதம், அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம், அர்ஷ்தீப் பந்துவீச்சு ஆகியவற்றால் செஞ்சுரியனில் நேற்று (நவ. 13) நடந்த 3வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிகபட்ச ஸ்கோர் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்களை இந்திய அணி சேர்த்திருந்தது. இதுதான் இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை இந்த ஆட்டத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி முறியடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தோல்வி தொடர்கிறது கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி சொந்த மண்ணில் எந்த டி20 தொடரையும் வென்றதில்லை என்ற நிலை இந்தத் தொடரிலும் தொடர்கிறது. கடைசி ஆட்டத்தில் ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி வென்றாலும், தொடர் சமநிலை ஆகுமே தவிர டி20 தொடரை வெல்ல முடியாது. 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி 5 டி20 தொடர்களை இழந்து, 2 தொடர்களை சமன் செய்துள்ளது. ஆனால், இதுவரை வெல்லவில்லை. ஆட்டநாயகன் திலக் செஞ்சுரிய மைதானத்தில், டி20 போட்டியில் சதம் அடித்த 12வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 32 பந்துகளில் அரைசதமும், 51 பந்துகளில் தனது முதல் சதம் அடித்து 107 ரன்களுடன் (7 சிக்ஸர், 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மில்லரின் விக்கெட்டை கொண்டாடும் இந்திய அணி இந்திய அணி இந்த காலண்டர் ஆண்டில் 8வது முறையாக டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதுவரை ஒரு காலண்டர் ஆண்டில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதுமட்டுமல்லால், ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணியில் 5 வீரர்கள் ரோஹித் சர்மா(121), அபிஷேக் சர்மா(100), சாம்ஸன்(111, 107), திலக் வர்மா(107) சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வாலுக்குப் பின் டி20 போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப், 5வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் சேர்ந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் சதத்தை அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா ஒன்பதாவது ஓவரில் 100 ரன்களை இந்திய அணி எட்டியதாலும், நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 15 ஓவர்களில் 85 ரன்களை குவித்ததால், ஸ்கோர் 240 ரன்களை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், 219 ரன்களுடன் சுருங்கியது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 65 ரன்கள் குவித்தாலும், யான்சென் வீசிய 20வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. திருப்புமுனை நாயகன் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால், இருவரின் விக்கெட் சரிந்த பின்புதான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தியும், நடுப்பகுதியில் கிளாசன், யான்சென் என இரு முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியும் திருப்புமுனை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் தவிர ரவி பிஸ்னோய், அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினர். ஆனால், கடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் பேட்டர்கள் அதிக ரன்களை குவித்துவிட்டனர். அதேபோல, ஹர்திக் பாண்டியா ஓவரும் வெளுக்கப்பட்டது.   ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிளாசனின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தில் அர்ஷ்தீப் சிங் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் நேற்று இந்திய அணி களமிறங்கியது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அர்ஷ்தீப் உறுதி செய்யும் விதத்தில் பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் பும்ரா, புவனேஷ்வர் குமார் எண்ணிக்கையைக் கடந்து 59 இன்னிங்ஸ்களில் 92 விக்கெட்டுகளுடன் அர்ஷ்தீப் 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சஹல் 96 விக்கெட்டுகளுடன் உள்ளார். பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளுடனும், புவனேஷ்வர் குமார் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளுடனும் உள்ளனர். அனுபவமின்மை டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில் தென் ஆப்ரிக்க அணி இன்னும் புதிய வீரர்களுடன் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. பேட்டிங்கில் எந்த வீரரைக் களமிறக்குவது, அதன் ஆழம், தீவிரத்தன்மை, திட்டங்கள் என எதுவும் தெளிவாக இல்லாமலே போட்டியில் விளையாடியது. அனுபவ பந்துவீச்சாளர்கள் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நார்ஜே இல்லாமல் தென் ஆப்ரிக்க அணி புதிய வீரர்களுடன் விளையாடியது. இதனால், நேற்று 10 வைடுகள், 3 நோ பால்களை வீசி அனுபவமின்மையை வெளிப்படுத்தினர். போராடிய தென் ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு ஓவருக்கு 12 ரன்ரேட் தேவைப்பட்டது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ரன்ரேட்டை தொட்டனர். ஆனால், கடைசி 5 ஓவர்களில் தேவைப்படும் ரன்ரேட் 17 ஆக உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால், கிளாசன், மில்லர் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 35 பந்துகளில் 58 ரன்களை சேர்த்தவுடன் ஆட்டம் சூடுபிடித்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது ஆனால், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமாரின் கேட்சை நினைவுபடுத்தியது போல மில்லருக்கு டீப் மிட்-விக்கெட்டில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் மில்லர்-கிளாசன் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது. மில்லர் 18 ரன்களில் ஏமாற்றத்துடன் சென்றார். அதேபோல, கிளாசன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வருண் சக்ரவர்த்தியின் 14வது ஓவரை வெளுத்த கிளாசன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 23 ரன்களை குவித்தார். 22 பந்துகளில் 41 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்த கிளாசனின் விக்கெட்டை ஆஃப்சைடு விலக்கி ஸ்லோபாலாக வீசியதன் மூலம் எடுத்தார் அர்ஷ்தீப் சிங். யான்சென் மிரட்டல் அரைசதம் கிளாசன் ஆட்டமிழந்தபின் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணுகையில் யான்செனின் ஆட்டம் சூடுபிடித்தது. ரவி பிஸ்னோய் வீசிய 17வது ஓவரில் இரு சிக்சர்களை யான்சென் பறக்கவிட்டார். கடைசி இரு ஓவர்களில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்கவிட்டு 26 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை கோட்ஸி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை சந்தித்த யான்சென் சிக்ஸர் விளாசி 16 பந்துகளில் முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால், 3வது பந்தில் கால்காப்பில் வாங்கி 54 ரன்களில் யான்சென் ஆட்டமிழந்தார். மூன்று பந்துளில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சிமிலேன் 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் சமிலேன் ஒரு ரன் எடுத்தவுடன் வெற்றி இந்தியாவின் பக்கம் சாய்ந்தது. தென் ஆப்ரிக்க அணியின் யான்சென், கிளாசன், மில்லர் ஆகியோர் கடைசி வரை போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.   சாம்சன் டக்-அவுட், அபிஷேக் அதிரடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்திலும் டக்-அவுட்டில் யான்சென் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 சதங்களை அடித்த சாம்சன், தொடர்ந்து 2 டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் தன்னை நிலைப்படுத்தியபின் அதிரடிக்கு மாறினார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா இருவரின் பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. கோட்ஸி, சிபாலா, சிமிலேன் ஓவர்களை இருவரும் வெளுத்தனர். ஐந்து சிக்சர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் பவர்ப்ளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. அபிஷேக்-திலக் கூட்டணி 107 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தது. அபிஷேக் 50 ரன்களில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் ஒரு ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 18 ரன்களில் மகராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ரிங்கு சிங்- திலக் வர்மா கூட்டணியில் திலக் வர்மா சேர்த்த ரன்கள்தான் அதிகம். இருவரும் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அதில் 45 ரன்களை திலக் வர்மாதான் சேர்த்தார். ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார். ராமன் தீப் சிங் 15 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.   ஆட்டத்தை நிறுத்திய ஈசல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் அதிரடிக்கு மாறினார் தென் ஆப்ரிக்க சேஸிங்கின் போது, மின் ஒளிக்கு ஏராளமான ஈசல்கள் மைதானத்தைச் சுற்றி வட்டமிட்டன. இதனால் இந்திய வீரர்களும் ஃபீல்டிங் செய்ய, பந்துவீசச் சிரமப்பட்டனர். தென் ஆப்ரிக்க பேட்டர்களின் கண்களில் ஈசல் பட்டதால் பேட் செய்ய முடியாமல் தவித்தனர். இதையடுத்து, ஈசல் பறப்பதை நிறுத்த மின்ஒளி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஈசலால் ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது இதுதான் முதல் முறை. அச்சமில்லாத இளம் வீரர்கள் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் கூட்டத்தில் என்ன ஆலோசித்தோமோ அதை ஆட்டத்தில் செய்துள்ளோம். இளம் வீரர்கள் அச்சமின்றி ஆடுகிறார்கள். வலைபயிற்சியில் ஆடும் ஆட்டத்தைப் போன்று, ஐபிஎல் தொடரில் அணிக்கு ஆடுவதைப் போன்று தங்கள் மாநிலத்துக்கு ஆடுவதைப் போன்று இங்கும் விளையாட வேண்டும் எனக் கூறினோம்" என்றார். சில போட்டிகளில் சிலர் வாய்ப்பைத் தவறவிட்டாலும், வீரர்கள் மீண்டும் தங்களை ஃபார்முக்கு கொண்டு வந்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், "3வது வீரராகக் களமிறங்கவா என என்னிடம் திலக் கேட்டார், இன்று உன்னுடைய நாள் அடித்து தூள் கிளப்பு என்று கூறினேன். திலக்கின் திறமை, பேட்டிங் குறித்து எனக்கு நன்கு தெரியும் என்பதால் நம்பிக்கையுடன் தெரிவித்தேன்,” எனத் தெரிவித்தார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gmp7jdvk4o
    • கொழும்பான்.  இலங்கையிலா     இல்லை வேறு நாட்டில்?? 
    • யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.