Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல

Sri Lanka.4 hours ago

Oruvan

 

தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல.

“இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும்.

ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பௌத்த சமய முன்னுரிமையும் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியாக - பிரதமராக பதவி வகிக்க முடியாத பின்னணிகளும் இனவாத நோக்கம் கொண்டவை என்று பொருள் கொள்ள முடியும் அல்லவா?

1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், 'சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (Equal Rights and Self-Determination of Peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிய சட்டவிளக்கம் உண்டு.

இலங்கைத்தீவில் 'சோசலிச சமத்துவம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு ஜேவிபி இரண்டு முறை அயுதப் போராட்டம் நடத்தித் தோல்வி கண்ட நிலையில், 1994ஆம் ஆண்டு முதல் முதல் ஜனநாயக வழியில் அரசியலுக்குள் நுழைந்தது. ஆனால் ஆரம்பகாலம் முதல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்க மறுத்திருந்தது.

இப் பின்னணியில் 2024ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்துடனும் ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி எனப்படும் மக்கள் சக்தி தற்போது 'தேசம்' 'சுயநிர்ணய உரிமை' என்ற ஒரு இனத்தின் சுயமரியாதைக்குரிய கோட்பாடுகளை இனவாதமாகச் சித்தரிக்க முனைவது அரசியல் வேடிக்கை.

வெளிச் சக்திகளின் வற்புறுத்தல்கள் இன்றி, ஒரு இனக் குழுமம் தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்ளும் தத்துவமே சுயநிர்ண உரிமை என்பதன் மற்றுமொரு விளக்கம்.

தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்.

நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.

சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக ”மொழி” என்பதை மையமாக் கொண்டு சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வகுக்கப்படுகிறது.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை எடுத்துரைத்த திம்புக் கோட்பாட்டின் முதலாவது பகுதியானது 'இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்' என்று சட்ட வியாக்கியாணம் செய்கிறது.

தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் காம்யூனிஸ போராளியான ஜோசப் ஸ்டாலின், 'வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்' என்று வரையறுக்கிறார்.

குறிப்பாக பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும்.

ஒரு தேசத்தின் இருப்பு என்பது, 'நித்திய பொதுவாக்கெடுப்பு' என்று ஏனஸ்ட் றெனன் என்ற அறிஞன் வரையறுக்கிறார்.

இதனை மையமாக் கொண்டே வடக்குக் கிழக்கு இணைந்த தயாகம் என்பதற்கும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை அங்கீகரிக்கவும் பொதுவாக்கெடுப்பு ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் கோரி வருகின்றன.

'சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது” என்று கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பான வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பொருள் கோடல் செய்துள்ளது.

ஆகவே இச் சர்வதேச சட்ட விளக்கங்களை எவருமே மறுக்க முடியாது. 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கப்பிளவும் 1921 இல் உருவான தமிழர் மகா சபையுயும் சிங்கள - தமிழ் இன முரண்பாட்டின் ஆரம்பம்.

அன்றில் இருந்து இன்றுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்புக்களிலும் ஈழத்த் தமிழர்களின் சுயநிரிணய உரிமை மறுதலிக்கப்பட்டு வந்த பின்னணியில் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களும் உருவெடுத்திருந்தன.

2009 மே மாதத்திற்குப் பின்னரான 15 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மறுதலிப்புகளே விஞ்சிக் காணப்பட்டன. இன நல்லிணக்கத்தை ஏற்கும் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்கிறது என ஜெனீவா மனித உாிமைச் சபையும் குற்றம் சுமத்தியிருந்தது.

இப் பின்னணியில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் போது தமிழர்களின் ”தேசம்” ”சுயநிர்ணய உரிமை” மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமாகவே கருதும் என்றால், பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது.

1948இல் இருந்து அரசியல் - பொருளாதார பொறிமுறைகள் வகுக்கப்பட்ட போது தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டவில்லை. இதனால் எழுந்த 30 வருட போர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்கிறார் அசோக லியனகே என்ற பொருளியல் ஆய்வாளர்.

இன்று வெளியான 'ஒருவன்' நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்

https://oruvan.com/sri-lanka/2024/11/18/nation-right-to-self-determination

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, nochchi said:

னால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல.

இல்லை இது இனவாதம் தான் என வகுப்பு எடுக்க போயினம் 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல்லாக் காசாக் கிடந்த ரில்வின் எல்லாம் இப்ப தமிழருக்கு வகுப்பெடுக்க... அவருக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தமிழர்கள். ஏன் இதெல்லாம் ரில்வினுக்கு தெரியாதோ..?! தெரியும் அவரிடம் உறைந்துள்ள பேரினவாதச் சிந்தனை எல்லாத்தையும் இனவாதமாகப் பார்க்கத் தூண்டுகிறது அவ்வளவும் தான். சிங்களவர்களைப் பொறுத்தவரை சொறீலங்கா தங்கள் நாடு. தமிழர்கள்.. வந்தேறிகள். இந்த அடிப்படை சிந்தனையில் மாற்றம் வராமல்.. தமிழர்களுக்கு சிங்களவர்களால்... உரிமை வழங்கப்படப் போவதில்லை.  அந்த வகையில் தான் தமிழர்கள் உரிமையை போராடிப் பெற முனைந்தார்கள். அதனை பயங்கரவாதமாக்கிய மேற்குலகும்.. கிந்தியாவும் தான் எனி இதற்குப் பதில் சொல்லனும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, putthan said:

இல்லை இது இனவாதம் தான் என வகுப்பு எடுக்க போயினம் 😅


செப்ரெம்பர் 21 வரை தேசம் சுயநிர்ணயம் என்று சொல்லி பேய்காட்டி கொண்டிருந்தவர்கள் இப்போது வந்து ஜேவிபி வகுப்பு எடுப்பார்கள் கொடுமை😭



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 23ஆம் திகதியிலிருந்து 2025 ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மீண்டும் 2025ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 2024 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. இந்த விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. 2025 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை  ஜனவரி 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/199099
    • மாவைக்கு இன்னும் பதவி ஆசை போகவில்லையோ அல்லது மகனுக்காக உழைக்கிறாரோ..?! சுமந்திரனுக்கு தன் திறமையில் நம்பிக்கை இல்லை  அதனால் தான் தமிழ் தேசியக் கட்சிகளை சார்ந்து கிடக்கிறார். இல்லை எனில் சுயாட்சையாக நிற்கலாமே மதிப்பில்லாத இடத்தில் எதுக்கு டாரா போட்டுக்கிட்டிருக்கனும், அதே தான் மாவைக்கும்.
    • நீங்கள் பகிடி விடக்கூடாதண்ணை! இது வரிக்குதிரை தனது உயிரைக் காப்பாற்றும் இறுதி முயற்சி.
    • தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர். என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல்    பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது. தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது.   அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு.   ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும். இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள். நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை. பெரும்பான்மை    அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா?   இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான். என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான். இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது.   அதேசமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால்,கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார். அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்வி போல. எனினும், தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசியப் பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது.   வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. மேலும், தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி. என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது. ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத் தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு. அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு, தேசத் திரட்சிக்கு எதிரானது.   https://tamilwin.com/article/parliament-election-2024-political-essay-1731876493
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.