Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

putin-90.jpg?resize=517,343&ssl=1

பைடனை எச்சரிக்கும் புடின்!

ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு  அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.

அமெரிக்கா  இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது.

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன்  ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில்  ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவகணை பயன்பாட்டிற்கு  அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இந்த நடவடிக்கைக்கு  கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1408986

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார்.

உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு.

உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம்.

அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு பைடன் அனுமதி - போரின் போக்கு மாறுமா?

ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள்

பட மூலாதாரம்,WHITE SANDS MISSILE RANGE

படக்குறிப்பு, ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை செல்லக்கூடும்
  • எழுதியவர், பால் ஆடம்ஸ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
  • பதவி, பிபிசி நியூஸ்

ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேன் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.

ரஷ்யா - யுக்ரேன் போரில் அமெரிக்கா கடைபிடித்து வந்த கொள்கையின் முக்கிய மாற்றமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி முகமையிடம் உறுதி செய்துள்ளார்.

யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் யுக்ரேன், தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலும் அதனை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த செய்திகளுக்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, “ஏவுகணைகளின் மொழி என்பது வேறு. இது குறித்த விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை" என்று கூறினார்.

‘நேட்டோ கூட்டணியின் நேரடி பங்கேற்பு’

இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். கட்டுப்பாடுகளை நீக்குவது, யுக்ரேன் போரில் நேட்டோ ராணுவ கூட்டணியின் ‘நேரடி பங்கேற்பை’ பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் மற்ற மூத்த ரஷ்ய அரசியல்வாதிகள், இந்த அறிக்கைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன என்று விவரிக்கிறார்கள்.

ஏடிஏசிஎம்எஸ் தொடர்பான அமெரிக்காவின் முடிவு என்பது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் யுக்ரேனிய படைகளின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு கடந்த ஆகஸ்டில், யுக்ரேன் திடீரென தாக்குதலைத் தொடங்கியது.

அதாவது, இப்போது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரஷ்ய நிலப்பரப்பின் சிறு பகுதியை தக்க வைத்துக் கொள்ளும் யுக்ரேனின் முயற்சிகளுக்கு உதவுவோம் என பைடனின் நிர்வாகம் உறுதியளிக்கிறது. வருங்கால பேச்சுவார்த்தைகளில் இந்த நிலப்பரப்பை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தலாம் என யுக்ரேன் நினைக்கிறது.

போரின் போக்கை மாற்றுமா?

யுக்ரேன் தலைநகர் கீவை தளமாகக் கொண்ட யுக்ரேனிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தின் தலைவர் செர்ஹி குசான், ஜோ பைடனின் முடிவு தனது நாட்டிற்கு ‘மிகவும் முக்கியமானது’ என்று பிபிசியிடம் கூறினார்.

"இது போரின் போக்கை மாற்றும் ஒன்று அல்ல, ஆனால் அது எங்கள் படைகளை மேலும் வலிமை கொண்டதாக மாற்றும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தக் கூடியவை. பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசுகையில், ‘யுக்ரேன், ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வட கொரிய வீரர்களை யுக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது’ என்று கூறியுள்ளனர்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து யுக்ரேனியப் படைகளை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ரஷ்ய மற்றும் கொரிய துருப்புகளின் தாக்குதலுக்கு முன்னதாகவே, ஏடிஏசிஎம்எஸ் குறித்து முடிவு வந்துள்ளதாக குசான் கூறினார். ரஷ்ய-வடகொரிய வீரர்களின் கூட்டுத் தாக்குதல் சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குர்ஸ்க் பகுதியில் 11,000 வட கொரிய வீரர்கள் இருப்பதாக யுக்ரேன் முன்னதாக மதிப்பிட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் பைடனின் முடிவால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அனுமதி அளிக்கக்கூடும்.

பைடனின் முடிவுக்கு பிரிட்டன் அல்லது பிரான்ஸ் இதுவரை பதிலளிக்கவில்லை.

புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை

கடந்த மாதம், யுக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள ரஷ்ய துருப்புகளைத் தாக்குவதற்கு முதன்முறையாக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேன் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

யுக்ரேனிய படைகளுக்கான முக்கிய விநியோக மையமாக இருக்கும் போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி மெதுவாக முன்னேறி வரும் ரஷ்ய துருப்புகளை பின்னுக்குத் தள்ள, யுக்ரேன் பல மாதங்களாக போராடி வருகிறது.

யுக்ரேன் மீதான ட்ரோன் தாக்குதல்களின் எண்ணிக்கையையும் ரஷ்யா சமீப நாட்களில் பெருமளவில் அதிகரித்துள்ளது. யுக்ரேன் அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபரில் 2,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் யுக்ரேன் மீது ஏவப்பட்டன. இந்தப் போரில் இதுவொரு புதிய உச்சமாகும்.

சனிக்கிழமை அன்று ஒரே இரவில், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதனால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். ஜெலென்ஸ்கியின் கூற்றுப்படி, சுமார் 120 ஏவுகணைகள் மற்றும் 90 ட்ரோன்கள் ரஷ்யாவால் ஏவப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை மாலையும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள யுக்ரேனின் சுமி பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏவுகணை தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்ய அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை இரவு யுக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறினர். ஆனால் தங்களது பாதுகாப்பு அமைப்பு யுக்ரேனின் 26 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறினர்.

‘நட்பு நாடுகள் போதுமான ஆதரவை வழங்கவில்லை’

யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார்

யுக்ரேன் பல மாதங்களாக அதன் நட்பு நாடுகள் தனக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்று வாதிட்டு வந்தது.

வரும் ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், யுக்ரேனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார்.

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், யுக்ரேனுக்கான ஆதரவை குறைப்பார் அல்லது நிறுத்துவார் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. பிற நாடுகளுக்கான ராணுவ உதவிகளால் அமெரிக்காவின் வளங்கள் வீணாகின்றன என்பது அவரது கருத்து. தன்னால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறிய அவர், அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்று கூறவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

ஜெர்மனியின் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான, ‘உலகப் பொருளாதாரத்திற்கான கீல் கழகத்தின்’ தகவலின் படி, போரின் தொடக்கத்திற்கும் ஜூன் 2024 இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், யுக்ரேனுக்கு 55.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவதற்கு அமெரிக்கா உறுதியளித்தது அல்லது வழங்கியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே இந்த ஆயுதம் உக்ரெனில் அமெரிக்கப் படைகளின் நேரடி தொழில்நுட்ப உதவியுடன் பாவிக்கப்பட்டே வருகிறது. ரஷ்சியாவுக்கு எதிராகவும் பாவிக்கப்பட்டு.. ரஷ்சியா சுட்டு வீழ்த்தியும் உள்ளது. இது பைடன் கிளம்பும் முன் கிளப்பி விடும் புதுப்புரளி மட்டுமன்றி.. வேறு தொலைதூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவதற்கான ரகசித்திட்டத்தினை இது கொண்டிருக்கலாம்.

அதனால் தான் ரஷ்சியா கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருவதோடு உக்ரைனிடம் இருந்த அமெரிக்க வான் காப்பு ஏவுகணைகளையும் பெருமளவு அழித்துள்ள்ளது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார்.

உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு.

உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம்.

அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.

பைடன் அரசு திட்டவட்டமாக  இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணியினை பயன்படுத்துவதற்கு அனுமதி வ்ழங்கவில்லை, ஆனால் அண்மையில் பைடன் ட்ரம்பினை சந்தித்த பின்னரே இந்த அறிக்கை வெளிவந்துள்ளமையால் ட்ரம்ப் பைடனிடம் கோரியிருக்கலாம் உக்கிரேனிற்கு நீண்ட தூர ஏவுகணையினை இரஸ்சியாவிற்குள் பயன்படுத்த அனும்திக்குமாறு அதன் மூலம் இரஸ்சியாவின் மேல் அழுத்தத்தினை ட்ரம்ப் அரசு பிரயோகிக்க விரும்பியிருக்கக்கூடும்.

ட்ரம்ப் பைடனை போல அல்ல அவரை கணிக்கமுடியாது, அண்மையில் செலன்ஸ்கிகூட கமலா காரிஸினை விட ட்ரம்ப் விரவாக சமாதானத்தினை கொண்டு வர கூடியவர் என தொனிபட கூறியிருந்ததாக கருதுகிறேன்.

1 hour ago, nedukkalapoovan said:

ஏலவே இந்த ஆயுதம் உக்ரெனில் அமெரிக்கப் படைகளின் நேரடி தொழில்நுட்ப உதவியுடன் பாவிக்கப்பட்டே வருகிறது. ரஷ்சியாவுக்கு எதிராகவும் பாவிக்கப்பட்டு.. ரஷ்சியா சுட்டு வீழ்த்தியும் உள்ளது. இது பைடன் கிளம்பும் முன் கிளப்பி விடும் புதுப்புரளி மட்டுமன்றி.. வேறு தொலைதூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவதற்கான ரகசித்திட்டத்தினை இது கொண்டிருக்கலாம்.

அதனால் தான் ரஷ்சியா கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருவதோடு உக்ரைனிடம் இருந்த அமெரிக்க வான் காப்பு ஏவுகணைகளையும் பெருமளவு அழித்துள்ள்ளது. 

செலன்ஸ்கி அமெரிக்காவிடம் டொமகவாக் ஏவுகணையினை கோரியுள்ளது இது 1500 கிலோ மீர்ரர் வரை செல்லலாம் என  கருதுகிறேன் (சரியாக நினைவில்லை).

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

பைடன் அரசு திட்டவட்டமாக  இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணியினை பயன்படுத்துவதற்கு அனுமதி வ்ழங்கவில்லை, ஆனால் அண்மையில் பைடன் ட்ரம்பினை சந்தித்த பின்னரே இந்த அறிக்கை வெளிவந்துள்ளமையால் ட்ரம்ப் பைடனிடம் கோரியிருக்கலாம் உக்கிரேனிற்கு நீண்ட தூர ஏவுகணையினை இரஸ்சியாவிற்குள் பயன்படுத்த அனும்திக்குமாறு அதன் மூலம் இரஸ்சியாவின் மேல் அழுத்தத்தினை ட்ரம்ப் அரசு பிரயோகிக்க விரும்பியிருக்கக்கூடும்.

ட்ரம்ப் பைடனை போல அல்ல அவரை கணிக்கமுடியாது, அண்மையில் செலன்ஸ்கிகூட கமலா காரிஸினை விட ட்ரம்ப் விரவாக சமாதானத்தினை கொண்டு வர கூடியவர் என தொனிபட கூறியிருந்ததாக கருதுகிறேன்.

செலன்ஸ்கி அமெரிக்காவிடம் டொமகவாக் ஏவுகணையினை கோரியுள்ளது இது 1500 கிலோ மீர்ரர் வரை செல்லலாம் என  கருதுகிறேன் (சரியாக நினைவில்லை).

ட்ர‌ம் உக்கிரேனுக்கு உத‌வா மாட்டார் என்ப‌து ப‌ல‌ருக்கு தெரியும்

அடுத்த‌ வ‌ருட‌ தொட‌க்க‌த்தில் ட்ர‌ம் என்ன‌ மாதிரி நிலைப் பாட்டை எடுப்பார் என்ப‌த‌ பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும்

ட்ர‌ம் புட்டின் கூட‌ மோத‌ விரும்ப‌ மாட்டார் இது அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாக‌ தெரியும்.........................................

  • கருத்துக்கள உறவுகள்

Biden ஐ Putin எச்சரிக்கை செய்ததாகவோ அல்லது கண்டனம் செய்ததாகவோ  உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் இதுவரை  வெளிவரவில்லை. 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

Biden ஐ Putin எச்சரிக்கை செய்ததாகவோ அல்லது கண்டனம் செய்ததாகவோ  உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் இதுவரை  வெளிவரவில்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

யாரையெல்லாம் உசாத்துணைக்கு அழைப்பது என்று ஒரு வரையறை இல்லையா? 

நீங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் செய்ய வேண்டியது உந்த குப்பை கூழங்களை தவிர்ப்பதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

ட்ர‌ம் உக்கிரேனுக்கு உத‌வா மாட்டார் என்ப‌து ப‌ல‌ருக்கு தெரியும்

அடுத்த‌ வ‌ருட‌ தொட‌க்க‌த்தில் ட்ர‌ம் என்ன‌ மாதிரி நிலைப் பாட்டை எடுப்பார் என்ப‌த‌ பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும்

ட்ர‌ம் புட்டின் கூட‌ மோத‌ விரும்ப‌ மாட்டார் இது அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாக‌ தெரியும்.........................................

அரசியலில் நிரந்தர எதிர்யும் இல்லை நிரந்தரநண்பனுமில்லை ஆனால் சார் நலன் மட்டுமே நிரந்தரமானது (இதுதான் அரசியல் பாலபாடம் என நினைக்கிறேன் எனக்கும் அரசியல் தெரியாதுதான்), அமெரிக்காவிற்கும் இரஸ்சியாவின் நலனும் எப்போதும் எதிரெதிரானவை.
 
தற்போதய தகவலின்படி புட்டின் அணு ஆயுத பயன்பாட்டிற்கான அனுமதியினை வழங்கிவிட்டதாகவும் (அணு ஆயுத பயன்பாடு தொடர்பான ஆவணத்திற்கமைய) அதனால் சந்தையி பெரிய அமளி துமளி நிலவுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.