Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா

15 DEC, 2024 | 04:51 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது.

உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும்.

அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும்.

https://www.virakesari.lk/article/201358

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோ

ரசோதரன்

🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன்

ரசோதரன்

பையன் சார்,  அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 

இந்தியா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய துடுப்பாட்டக்காரர்களினால் Gabba போன்ற உயிர்ப்பான ஆடுகளங்களில் பெரிதாக சாதிக்கமுடியாது. மட்டையான ஆடுகளங்களில் வெளுத்து வாங்குவார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/12/2024 at 10:20, vasee said:

இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.

இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கடும் நெருக்கடியில் இந்தியா

16 DEC, 2024 | 02:28 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா குவித்த 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா, மழையினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1612__josh_hazlewood.png

முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க, இந்தியா 394 ஓட்டங்களால் பின்னிலையில் இருக்கிறது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (4), ஷுப்மான் கில் (1), விராத் கோஹ்லி (3), ரிஷாப் பான்ட் (9) ஆகிய நால்வரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் நடையைக் கட்டினர்.

போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

1612__mitchell_starc.png

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 405 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றது.

தனது துடுப்பாட்டத்தை 45 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

1612__alex_carey.png

ட்ரவிஸ் ஹெட் (156), ஸ்டீவன் ஸ்மித் (101) ஆகிய இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தில் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

43ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா இப் போட்டியில் தனது 12ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். 

https://www.virakesari.lk/article/201416

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிப் பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்தது.

pumra-kapildeve.jpg

இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித் 101 ஓட்டங்களும் எடுத்தனர். மேலும், அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களுடனும் ஸ்டார்க் 7 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 12வது முறையாகும். அதே சமயம் அவர் ஆசிய கண்டத்துக்கு வெளியே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்திய பவுலர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

https://thinakkural.lk/article/313804

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைநிலை ஆட்டக்காரர்களால் ஃபலோ ஒன்னைத் தவிர்த்தது இந்தியா

17 DEC, 2024 | 04:52 PM
image
 

 (நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை ஆட்டக்காரர்களின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்களால் ஃபலோ ஒன்னை (Follow on) இந்தியா தவிர்த்துக்கொண்டது.

பல தடவைகள் மழையினால் பாதிக்கப்பட்ட இப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களிலிருந்து  இந்தியா  தொடர்ந்தது.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கே.எல். ராகுல் 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தைரியத்தைக் கொடுத்தார்.

ராகுல் 84 ஓட்டங்களையும் ஜடேஜா 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 213 ஓட்டங்களாக இருந்தபோது ஜடேஜா 9ஆவதாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்தியா பலோன் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், கடைநிலை வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (10 ஆ.இ.), ஆகாஷ் தீப் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் பலோ ஒன்னைத் தவிர்த்தனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைக் குவித்தது.

ட்ரவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 101 ஒட்டங்களையும் அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியில் ஒரு நாள் மாத்திரம் மீதம் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1712_kl_rahul__ind_vs_aus_3rd_test.png

1712_akash_deep_and_jasprit_bumrah_save_

https://www.virakesari.lk/article/201530

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினம் கொண்ட சிங்கத்த சாய்த்து போட்டீர்களே...

mnb.jpg

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகுனி நிக்கிற இடத்தில சில உறுப்பினர் தலை காட்ட  விரும்புவதில்லை.
    • இங்குள்ள சைவ ஆலயங்களை இடித்து விகாரை கட்டுவது, இந்தியாவுக்கு போய் திருப்பதியில் விழுந்து கும்பிடுகிறதெல்லாம் காலை வாருகிற வேலை. மனிசன் இங்கு எதை செய்தாரோ அதை யாருக்காகவும் மாற்றவில்லை எங்கும். அனுரா சொன்னால் சொன்னதுதான்! ஞானசார தேரரையே மனமுருக வைத்துவிட்டார்.
    • அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்! christopherDec 18, 2024 12:45PM அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று (டிசம்பர் 18) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்கிடையே அவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பிக்களை நோக்கி, “’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடைபெற்று வரும் வேளையில், அமித் ஷாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியதும் ’அம்பேத்கரை அவமதித்து பேசியதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி, ‘அம்பேத்கர், ஜெய்பீம்’ என்றும், ’அம்பேத்கரை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ என கோஷம் எழுப்பினர்.  அப்போது அவையில் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “காங்கிரஸ் கட்சி எப்போதும் அம்பேத்கரை அவமதிப்பதாகவும், லோக்சபா தேர்தலில் அவரது தோல்வியை உறுதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.  இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அம்பேத்கரின் புகைப்படத்துடன் நடாளுமன்ற வளாகத்திற்கு வந்த திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.   https://minnambalam.com/political-news/amit-shahs-controversial-speech-on-ambedkar-parliament-paralyzed/
    • எங்கள் தரப்பில் அருச்சனவையும் சேர்த்திருந்தால் அனுராவையே கதறவிட்டிருப்பார். 
    • இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும் December 18, 2024 11:03 am இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”புதிய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது ஒரு புதிய அரசாங்கமாக சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும். இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான பாதிப்புகளை கடந்த காலத்தில் சந்தித்தது. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020-21 இல் கோவிட் தொற்றுநோய், மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை என்பனவே அந்தப் பிரச்சினைகள். எமது பொருளாதாரத்தை பலப்படுத்த இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்க உள்ளோம். இதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும். இதேவேளை, இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும். 1980களில் வன்முறையால் தப்பி ஓடிய அகதிகளில் பலர், இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியற்றவர்களாகவும் இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாகவும் உள்ளனர். அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தீவுக்குத் திரும்ப விரும்பவில்லை. தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.” என்றார்.   https://oruvan.com/free-visa-for-39-countries-including-india-gazette-to-be-released-soon/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.