Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.:

தியாகங்களின் பெறுமதி?

ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. 

ஆனால் தங்களுக்கான நீதியென்பது அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் என்னும் உறுதியுடன் தங்களை புதுப்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தை அஸ்திபாரமாகக் கொண்டு, தங்களையொரு அரசியல் ஸ்பானமாக கட்டியெழுப்பினர். இந்தக் காலத்தில் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய ஓரு தரப்பாக எவருமே கருதியதேயில்லை – ஆனால் அவர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் பயணித்தனர். அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான, ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டு உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பு அவர்களை கொழும்பின் அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது. 

எந்த அரச படைகள் அவர்களை நிர்மூலமாக்கியதோ, அந்தப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜே.வி.பியே இருக்கும் அரசியல் சூழல் உருவாகியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை நம்பிய போதிலும், தோல்வி தந்த படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொண்டனர் - ஆயுதங்களின் மூலம், தாங்கள் விரும்பும் அதிகாரத்தை, ஒரு பேதுமே கைப்பற்ற முடியாதென்பதை புரிந்து கொண்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிய அதே வேளை, தங்களின் அடிப்படையான கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு அதிகாரத் தரப்பாக எழுச்சியுற்றிருக்கின்றனர். மார்க்சியம் தொடர்பில் பேசிய போதும் கூட, தற்போது யதார்த்தவாதத்திற்கே முன்னுரிமையளிக்கும் ஒரு அரசியல் ஸ்பானமாக தங்களை மாற்றியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அவர்களது தியாகங்கள் வீண் போகவில்லை. ஜே.வி.பி அதன் இலக்கில் வெற்றிபெற்றுவிட்டது. 

நமது சூழலை உற்று நோக்கினால் என்ன தெரிகின்றது? ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றப் புறப்பட்டு, 1990களில் ஜனநாயக நீரோட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, டெலோ. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் (டி.பி.எல்.எப்) ஆகிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சி என்ன? வடக்கு கிழக்கில் இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்டமைப்பு என்ன? மக்கள் ஆதரவு என்ன? ஏதாவது இருக்கின்றதா? இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம், பெற்றுக்கொண்ட வெற்றியை, தனிக் கட்சியாக - ஆகக் குறைந்தது ஒரு கூட்டாகக் கூட தக்கவைக்க முடியாத கையறுநிலைக் கட்சிகளாகவே இருக்கின்றனர். 

மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்று, பதினைந்து வருடங்களாகின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் அந்த அமைப்பில் எஞ்சியவர்களால் புதிய சூழலுக்கான அரசியல் ஸ்பானமொன்றை கட்டியெழுப்ப முடிந்ததா? புலிகள் அமைப்பிலிருந்து, ஆகக் குறைந்தது, சில முனனேற்றகரமான சிந்தனையாளர்கள் கூட வெளித்தெரியவில்லையே – ஏன்? இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன? ஏன் முடியவில்லை. ஜனநாயக பேராளிகள் என்னும் பதாகைகளையெல்லாம், தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே, கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது. 

றோகண விஜயவீரவும் கொல்லப்பட்டார் - ஜயோ – தலைவர் போய்விட்டாரே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லையே அந்த அமைப்பு – அதே வேளை பழிவாங்கும் அரசியலையும் செய்ய முயற்சிக்கவில்லை – ஏனெனில் ஒரு அரச இயந்திரத்தை பழிவாங்க முடியாது – அதற்குப் பதிலாக அதனையே கைப்பற்றும் உக்திகள் பற்றியே ஜே.வி.பி சிந்தித்தது. சாதித்தது. எனவே தியாயங்களுக்கான பெறுமதி என்பது, வருடம் தோறும் விளக்கேற்றுவதுடனும், சில மரக் கண்றுகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோருக்கு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்வர்களது தியாயங்களுக்கான பெறுமதி என்பது, புதிய சூழ்நிலைகளுக்கான செயலிலேயே தங்கியிருக்கின்றது.

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்+

நல்ல கருத்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

1990களில் ஜனநாயக நீரோட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, டெலோ. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் (டி.பி.எல்.எப்) ஆகிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சி என்ன? வடக்கு கிழக்கில் இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்டமைப்பு என்ன? மக்கள் ஆதரவு என்ன? ஏதாவது இருக்கின்றதா?

இவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு திருமுழுக்கு எடுத்து பரிசுத்தவான்களாக இருப்பது ஒரு வளர்ச்சிதானே! குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தருமலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் மகான்களாகிவிட்டனர்!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி வைரவன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்று, பதினைந்து வருடங்களாகின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் அந்த அமைப்பில் எஞ்சியவர்களால் புதிய சூழலுக்கான அரசியல் ஸ்பானமொன்றை கட்டியெழுப்ப முடிந்ததா? புலிகள் அமைப்பிலிருந்து, ஆகக் குறைந்தது, சில முனனேற்றகரமான சிந்தனையாளர்கள் கூட வெளித்தெரியவில்லையே – ஏன்? இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன? ஏன் முடியவில்லை. ஜனநாயக பேராளிகள் என்னும் பதாகைகளையெல்லாம், தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே, கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது. 

றோகண விஜயவீரவும் கொல்லப்பட்டார் - ஜயோ – தலைவர் போய்விட்டாரே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லையே அந்த அமைப்பு – அதே வேளை பழிவாங்கும் அரசியலையும் செய்ய முயற்சிக்கவில்லை – ஏனெனில் ஒரு அரச இயந்திரத்தை பழிவாங்க முடியாது – அதற்குப் பதிலாக அதனையே கைப்பற்றும் உக்திகள் பற்றியே ஜே.வி.பி சிந்தித்தது. சாதித்தது. எனவே தியாயங்களுக்கான பெறுமதி என்பது, வருடம் தோறும் விளக்கேற்றுவதுடனும், சில மரக் கண்றுகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோருக்கு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்வர்களது தியாயங்களுக்கான பெறுமதி என்பது, புதிய சூழ்நிலைகளுக்கான செயலிலேயே தங்கியிருக்கின்றது

 தலைவரின் வீரமரணத்தை தெளிவாக அறிவித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்திருக்கவேண்டும். இருக்கிறார் வருவார் என்று பொய்சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிய கூட்டம் + புலம்பெயர் பட்டாசு ரெஜிமண்ட் (இவர்கள் தாயக அரசியலை சின்னாபின்னமாக்கியவர்கள்) தான் இதற்கு முக்கிய காரணிகள்.

இப்ப ஈழநாடும் மனந்திரும்பி திருமுழுக்கு எடுத்திருக்கு. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போரட்டத்திற்கு புறப்பட்ட இயக்கங்கள்  விடுதலையை வென்றெடுக்கக் கூடிய அரசியல் ஆளுமைகளை  வளர்தெடுக்கவில்லை. இயக்கத்துக்குள்  இருந்த அரசியல்துறை போராளிகளே மற்றயவர்களால் கையாலாகாத ஏளனமாக பார்க்கப்படும் நிலையே இருந்தது.

 ஒரு வேளை இயக்கத்தில் இருந்த அரசியல் அறிவு உடைய சில ஆளுமைகள் தப்பி வந்து அரசியல் போராட்டத்தை அறிவுபூர்வமாக முன்னெடுத்து செல்ல வந்திருந்தால், முதல் வேலையாக  அவர்களுக்கு  துரோகிப்பட்டம் கொடுத்து அவர்கள் மீது இட்டுக்கட்டிய பல அவதூறுகளை பொழிந்து  அவர்களை  அகற்றும் வேலையை புலம்பெயர்/ தாயக வரட்டு தமிழ் தேசியவாதிகள் முன்னெடுத்திருப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஒரு வேளை இயக்கத்தில் இருந்த அரசியல் அறிவு உடைய சில ஆளுமைகள் தப்பி வந்து அரசியல் போராட்டத்தை அறிவுபூர்வமாக முன்னெடுத்து செல்ல வந்திருந்தால்,

அப்படியானவர்களை தேடிப்பிடித்து களையெடுத்து விட்டார்கள்.

மிகுதியானவர்களையும் இலங்கை இந்திய பலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிலேயே இருந்தார்கள்.

இதனாலேயே சாதாரண மக்களும் போராளிகளை நெருங்க முடியவில்லை.

நெருங்கியவர்களும் மிரட்டப்பட்டார்கள் அல்லது கண்காணிக்கப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வைரவன் said:

இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.:

தியாகங்களின் பெறுமதி?

ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. 

ஆனால் தங்களுக்கான நீதியென்பது அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் என்னும் உறுதியுடன் தங்களை புதுப்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தை அஸ்திபாரமாகக் கொண்டு, தங்களையொரு அரசியல் ஸ்பானமாக கட்டியெழுப்பினர். இந்தக் காலத்தில் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய ஓரு தரப்பாக எவருமே கருதியதேயில்லை – ஆனால் அவர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் பயணித்தனர். அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான, ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டு உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பு அவர்களை கொழும்பின் அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது. 

எந்த அரச படைகள் அவர்களை நிர்மூலமாக்கியதோ, அந்தப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜே.வி.பியே இருக்கும் அரசியல் சூழல் உருவாகியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை நம்பிய போதிலும், தோல்வி தந்த படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொண்டனர் - ஆயுதங்களின் மூலம், தாங்கள் விரும்பும் அதிகாரத்தை, ஒரு பேதுமே கைப்பற்ற முடியாதென்பதை புரிந்து கொண்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிய அதே வேளை, தங்களின் அடிப்படையான கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு அதிகாரத் தரப்பாக எழுச்சியுற்றிருக்கின்றனர். மார்க்சியம் தொடர்பில் பேசிய போதும் கூட, தற்போது யதார்த்தவாதத்திற்கே முன்னுரிமையளிக்கும் ஒரு அரசியல் ஸ்பானமாக தங்களை மாற்றியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அவர்களது தியாகங்கள் வீண் போகவில்லை. ஜே.வி.பி அதன் இலக்கில் வெற்றிபெற்றுவிட்டது. 

நமது சூழலை உற்று நோக்கினால் என்ன தெரிகின்றது? ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றப் புறப்பட்டு, 1990களில் ஜனநாயக நீரோட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, டெலோ. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் (டி.பி.எல்.எப்) ஆகிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சி என்ன? வடக்கு கிழக்கில் இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்டமைப்பு என்ன? மக்கள் ஆதரவு என்ன? ஏதாவது இருக்கின்றதா? இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம், பெற்றுக்கொண்ட வெற்றியை, தனிக் கட்சியாக - ஆகக் குறைந்தது ஒரு கூட்டாகக் கூட தக்கவைக்க முடியாத கையறுநிலைக் கட்சிகளாகவே இருக்கின்றனர். 

மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்று, பதினைந்து வருடங்களாகின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் அந்த அமைப்பில் எஞ்சியவர்களால் புதிய சூழலுக்கான அரசியல் ஸ்பானமொன்றை கட்டியெழுப்ப முடிந்ததா? புலிகள் அமைப்பிலிருந்து, ஆகக் குறைந்தது, சில முனனேற்றகரமான சிந்தனையாளர்கள் கூட வெளித்தெரியவில்லையே – ஏன்? இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன? ஏன் முடியவில்லை. ஜனநாயக பேராளிகள் என்னும் பதாகைகளையெல்லாம், தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே, கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது. 

றோகண விஜயவீரவும் கொல்லப்பட்டார் - ஜயோ – தலைவர் போய்விட்டாரே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லையே அந்த அமைப்பு – அதே வேளை பழிவாங்கும் அரசியலையும் செய்ய முயற்சிக்கவில்லை – ஏனெனில் ஒரு அரச இயந்திரத்தை பழிவாங்க முடியாது – அதற்குப் பதிலாக அதனையே கைப்பற்றும் உக்திகள் பற்றியே ஜே.வி.பி சிந்தித்தது. சாதித்தது. எனவே தியாயங்களுக்கான பெறுமதி என்பது, வருடம் தோறும் விளக்கேற்றுவதுடனும், சில மரக் கண்றுகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோருக்கு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்வர்களது தியாயங்களுக்கான பெறுமதி என்பது, புதிய சூழ்நிலைகளுக்கான செயலிலேயே தங்கியிருக்கின்றது.

நாங்கள் தமிழர்கள்   சிறுபான்மையினர்  ஆட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது     அனைத்து தமிழரும் ஒற்றுமையாக ஒரே தலைமையில் ஒரு தலைவரின் கீழ் பயணித்தாலும்  ஆகக்கூடியது   30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைப்பார்கள்  ஆனால் 

ஜேவிபி க்கு.  159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது  ஏனெனில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள். அவர்கள் போராடியது ஆட்சியை பிடிக்க தான்  அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்  வாழ்த்துக்கள் 

நாங்கள் போராடியது ஆட்சியை பிடிக்கவில்லை  

ஆட்சியை   பிரிப்பதற்க்கு   தீவை இலங்கை தீவை பிரித்து ஆட்சி செய்வதற்கு    இந்த ஆசிரியர் தலையங்கம்   இரண்டையும் எப்படி ஒரே நிலையில் வைத்து ஒப்பிட்டது  ?????? 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பைரவன் . .........!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

கட்டுரையின் நோக்கம்

வரிக்கு வரி ஜேவிபி யை பின்பற்றச் சொல்வதல்ல.

தோற்ற பின்னரும், தலைமை அழிக்கப்பட்ட பின்னரும், 

வெறுமனே வெறுப்பை உமிழ்ந்து கொண்டு இருக்காமல் சரியான செயற்திட்டங்களுடன், 

சகிப்புத்தன்மையுடன்

பொறுமையாக,

சில பல விட்டுக் கொடுப்புகளுடன்,

நெகிழ்வுத் தன்மை யை காட்ட வேண்டிய இடங்களில் காட்டி,

மக்கள் மீது உண்மையான அக்கறையையும்,

நம்பிக்கையையும் வைத்து

இயங்கினால் காலம் ஒரு நாள் எமக்கு சாதகமாக மாறும்

என்பதையே.

1 hour ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி பைரவன் . .........!  

நான் வைரவன்.

என் பெயரை தவறாக எழுதியமைக்கு

பிராயச்சித்தமாக

வடை மாலை சாத்த வேண்டும் எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

அவர்களின் கடின உழைப்பு அவர்களை கொழும்பின் அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது. 

சிங்கள மக்களின் சோற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு,பூலோக அரசியல் நலன்,மற்றது வலதுசாரி அரசியல்வாதிகளினதும் அரச ஊழியர்களின் ஊழல்  போன்றவையும் முக்கிய காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வைரவன் said:

கட்டுரையின் நோக்கம்

வரிக்கு வரி ஜேவிபி யை பின்பற்றச் சொல்வதல்ல.

தோற்ற பின்னரும், தலைமை அழிக்கப்பட்ட பின்னரும், 

வெறுமனே வெறுப்பை உமிழ்ந்து கொண்டு இருக்காமல் சரியான செயற்திட்டங்களுடன், 

சகிப்புத்தன்மையுடன்

பொறுமையாக,

சில பல விட்டுக் கொடுப்புகளுடன்,

நெகிழ்வுத் தன்மை யை காட்ட வேண்டிய இடங்களில் காட்டி,

மக்கள் மீது உண்மையான அக்கறையையும்,

நம்பிக்கையையும் வைத்து

இயங்கினால் காலம் ஒரு நாள் எமக்கு சாதகமாக மாறும்

முடியாது ..காரணம்  இலங்கை அரசாங்கம்  நன்கு திட்டமிடப்பட்ட வகையில்  இனிமேல் மீள முடியாத    ஒரு அமைப்பாக பலம் பெற இயலாத வகையில்   அழித்தொழித்து விட்டது   யாரவது இயங்க முற்பட்டால். அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை    எனக்கு நம்பிக்கை இல்லை  நீங்கள் நம்புங்கள்   அது உங்கள் சுதந்திரம்    

மேலும்  புலிகள் போராட்டம் தான்  இலங்கையை  கடன்காரன். ஆக்கியது  இதன் தொடர்ச்சி தான் இடதுசாரி ஆட்சி   விடுதலை புலிகளின் வலிமையான போராட்டம் நடைபெறாமால். இருந்தால்   ஜேவிபி ஒருபோதும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நாங்கள் போராடியது ஆட்சியை பிடிக்கவில்லை  

ஆட்சியை   பிரிப்பதற்க்கு   தீவை இலங்கை தீவை பிரித்து ஆட்சி செய்வதற்கு    இந்த ஆசிரியர் தலையங்கம்   இரண்டையும் எப்படி ஒரே நிலையில் வைத்து ஒப்பிட்டது  ?????? 

நீஙக கூறுவது போல எமது போராட்டத்தை ஜெ,வி,பி யினரின் வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாது ..
21 கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் அதுவும் 72 வருட காத்திருப்பின் பின்பு ...நிலைத்து நிற்க வேண்டும் ஆட்சி துணை புரிய வேண்டும் எல்லாம் வல்ல இயற்கை...
இடதுசாரி தலைவராகிய அனுரா வலதுசாரி நாடுகளின் உலக் வங்கியிடம் கை ஏந்தும் நிலையில் உள்ளார் ..பணத்தை கொடுத்தவர்கள் தங்கள் நலன் சார்ந்து தான் செயல்படுவார்கள் ...இந்தியாவி அதானியே அமெரிக்காவிடம் சரண்டர் இதில் அனுரா எம்மாத்திரம்....
மேற்குலகு,அமெரிக்கா போன்ற நாடுகளின் தியட்டர் ஒவ் ஒப்பரேசானாக் சிறிலங்கா மாறாமல் இருக்க வேணும் ...

15 minutes ago, Kandiah57 said:

முடியாது ..காரணம்  இலங்கை அரசாங்கம்  நன்கு திட்டமிடப்பட்ட வகையில்  இனிமேல் மீள முடியாத    ஒரு அமைப்பாக பலம் பெற இயலாத வகையில்   அழித்தொழித்து விட்டது   யாரவது இயங்க முற்பட்டால். அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை    எனக்கு நம்பிக்கை இல்லை  நீங்கள் நம்புங்கள்   அது உங்கள் சுதந்திரம்    

மேலும்  புலிகள் போராட்டம் தான்  இலங்கையை  கடன்காரன். ஆக்கியது  இதன் தொடர்ச்சி தான் இடதுசாரி ஆட்சி   விடுதலை புலிகளின் வலிமையான போராட்டம் நடைபெறாமால். இருந்தால்   ஜேவிபி ஒருபோதும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது   

அது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.