Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்

யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு  உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்காக பிரதேச செயலகத்தில் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் பொறுப்பில்  உதவிப் பொருட்கள் உரிய நபருக்கு உரிய நேரத்தில் வழக்கப்படடும் என்பதனை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்திலும் இதற்கான தனி அலகு உருவாக்கப்பட்டுள்ளது. உணவு அல்லது உணவு அல்லாத பொருட்களை வழங்க முடியும். அதனை, மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளர் பொறுப்பாகவிருந்து வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் உரிய உதவிப் பொருட்கள் பிரதேச செயலகங்களாலும், மாவட்டச் செயலகத்தாலும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர்,  பிரதம கணக்காளர்,    உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் 

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 634 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை காரணமாக மாவட்டத்தில் இன்றைய தினம் மதியம் வரையிலான கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 2ஆயிரத்து 855 குடும்பங்களை சேர்ந்த 09 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 46 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
 
நல்லூர் , சாவகச்சேரி , நெடுந்தீவு மற்றும் சங்கானை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 12 பாதுகாப்பு இடத்தங்கள் முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த முகாம்களில் 191 குடும்பங்களை சேர்ந்த 634 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு அப்பகுதி பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் பிரதேச செயலர்களுக்கு அறிவித்து அவரின் சிபாரிசில் உலர் உணவு பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
தேங்கி நிற்கும் வெள்ளங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் , யாழ் . மாநகர சபையும் , பிரதேச சபைகளும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
 
கடல் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் , நிலத்தில் இருந்து கடலை நோக்கி செல்லும் நீரின் வேகம் குறைவடைந்துள்ளது. கடல் மட்டம் குறையும் போதே நீர் வழித்தோடும் அது வரையில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்
 
இனிவரும் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது. அதனால் சுகாதாரம் சார்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன. அது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

1-1-1-800x533.jpg

https://globaltamilnews.net/2024/208742/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

NPP அரசு தந்தது என முத்திரை குத்தாட்டி சரி...

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை சொந்தப்பணத்தில்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, putthan said:
9 hours ago, ஏராளன் said:

மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

NPP அரசு தந்தது என முத்திரை குத்தாட்டி சரி...

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை சொந்தப்பணத்தில்...

சிலவேளைகளில் ஓரிடத்திலேயே அனைத்து உதவிகளும் குவிய வாய்ப்புள்ளது.

ஒரு இடத்திலிருந்து போனால் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, putthan said:

NPP அரசு தந்தது என முத்திரை குத்தாட்டி சரி...

 

அவை சொல்லுகினமோ இல்லையோ...நம்ம யூடியூப் குஞ்சுகள் கட்டாயம் சொல்லுவினம்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, alvayan said:

அவை சொல்லுகினமோ இல்லையோ...நம்ம யூடியூப் குஞ்சுகள் கட்டாயம் சொல்லுவினம்🤣

இன்று ஊடகங்கள் குடிசை கைத்தொழிலாக மாறிவிட்டதின் விளைவு ...
வெள்ளைகாரன் சுருட்டை (சிகரட்,சிகார்) உற்பத்தி செய்து பணம் சம்பாதிப்பதை பார்த்து எங்கன்ட சனம் பீடி,சுருட்டு போன்றவற்றை உற்பத்தி செய்ய தொடங்கிச்சினம்....அதுபோல இப்ப எலான் மஸ்க் மாதிரி வரலாம் என ஊடகத்தை கையில் எடுத்து வீட்டுக்கு வீடு யூ டியுப் சனலை தொடங்கி வைச்சிருக்கினம்....
வெள்ளம் வடிந்து ஓடாமல் நிற்பதன் காரணங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த யூ டியுப் குஞ்சுகளுகு  அப்படியான அதிரடி தகவல்கள் எதுவும் தெரியாது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, putthan said:

.
வெள்ளம் வடிந்து ஓடாமல் நிற்பதன் காரணங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த யூ டியுப் குஞ்சுகளுகு  அப்படியான அதிரடி தகவல்கள் எதுவும் தெரியாது

இவை வந்து என்.பி.பி ..எம்பிமாரையும்,அமைச்சரையும் அடிக்கடி பெயர் சொல்லி,அவையட முகத்தையும் காட்டினால்..ஊரிலை வெள்ளம் நிற்குதோ இல்லையோ...இவைவீட்டிலை  வெள்ளம் நிறைந்து ..வழியும் ..என்ன விசயம் கதைக்கிறன் என்றே விளங்காத  ஆட்களுக்கு...ஊடக வெளிச்சம்...தேவையா

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, alvayan said:

இவை வந்து என்.பி.பி ..எம்பிமாரையும்,அமைச்சரையும் அடிக்கடி பெயர் சொல்லி,அவையட முகத்தையும் காட்டினால்..ஊரிலை வெள்ளம் நிற்குதோ இல்லையோ...இவைவீட்டிலை  வெள்ளம் நிறைந்து ..வழியும் ..என்ன விசயம் கதைக்கிறன் என்றே விளங்காத  ஆட்களுக்கு...ஊடக வெளிச்சம்...தேவையா

வடமாகாண ஆளுனரின் கருத்து வரவேற்க்கப்பட்வேண்டியது.ஆனால் நடை முறையில் சாத்தியமில்லை ..இனிவரும் காலங்களில் கட்டிடங்கள் சட்ட திட்டங்களின் படி கட்டினால் சிறப்பாக இருக்கும்..



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.