Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

கோசான் உங்களுக்கு நடந்த விடயங்கள் தெரியாமலேயே இப்படி எழுதி இருக்கிறீர்களே?

நான் என்ன கனகபுரத்தில் இருந்தா எழுதுகிறேன்?

முதலாவது செய்தி - 3மாவீரர்களின் தாயாரை மேற்கோள் காட்டி இருந்தது.

அந்த மாவீரரின் தாயாரிடம் இன்னும் சாராயக்கடை சிறி மன்னிப்பு கேட்டதாக தகவல் இல்லை.

அந்த அடிப்படையிலும், சாராய சிறி எப்படி பட்ட கோக்குமாக்கு அரசியல்வாதி, ஊழல் மன்னன், என நான் அறிந்து கொண்டதன் அடிப்படையிலும் என் முதலாவது கருத்து இருந்தது.

அதன் பின் நீங்கள் வந்து இதில் ஏற்பாட்டு குழு சிறியை தலையிடவே விடவில்லை என்றீர்கள்.

நீங்களும் கனகபுரத்தில் இருந்து எழுதவில்லை என தெரியும். ஆனாலும் சிறியின் அரசியலுக்கு நெருங்கியவர், அவர்க்ளின் உள்விடயங்கள் தெரிந்தவர் என்ற வகையில் நீங்கள் கூறியதை வைத்து அடுத்த கருத்தை எழுதினேன்.

நான் என்ன சிறியின் அடிப்பொடியா உள்வீட்டு விபரங்கள் தெரிய?

நீங்கள் சொல்வது உண்மையாகினும் சிறி இந்த தாயிடம் மன்னிப்பு கோராதது அவர் இவர்களை எப்படி மதிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒரு தமிழ் தாய்  ரணில் காலில் விழ சம்-சும் பார்த்துகொண்டிருந்ததை போன்ற செயல் இது.

#அண்டக்காக்கயா சொன்னா, சாதா காக்காய்கு கோவத்தை பாரேன்🤣

9 hours ago, MEERA said:

உங்களிடம் வந்து ஏன் சிறியர் வேலை செய்ய வேண்டும்?

ஓய்வு பெற்ற (ஆசிரியர்) அதிபர்

ம்ம்ம்ம்….

சாராய சிறி என்னிடம் வேலை கேட்டு வருகிறார் என்றா நான் எழுதினேன்? 

10 ம் ஆண்டு தமிழ் இலக்கணம் புத்தகத்தில் படித்திருப்பீர்கள்?

ஆல் விகுதி.

என்னிடம் ஒரு நிறுவனம் இருந்தால்

சாராய சிறி ஓய்வுபெற்ற அதிபர்தான்… இப்போ இலங்கையில் சில மாவட்ட அரச அதிபர்களே…ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாத ஆட்கள். செயல்திறன் கிலோ என்னவிலை என கேட்பவர்கள்.

சிறி பா உ ஆக இருந்து இந்த இனத்தின் மீட்சிக்கு உழைத்து கிழித்ததை, தமிழரசு கட்சி தலைவராக கிழித்ததை வைத்துத்தான் என் கருத்து இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

எனக்கு சிறியரையும் பழக்கமில்லை அவரின் உள்விடயங்களும் தெரியாது.

நீங்களும் என்னையும் சிறிதரனுடன் முடிச்சுப் போடவே முயல்கிறீர்கள்.

( பாட்டியோட வடையை திருடியது அண்டாங்காக்காவா சாதா காக்காவா?)

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நசுக்கிடாக்கள்ளனுக்கு உதாரணம் பார் சிறியன்.. தவறோ சரியோ சுமந்திரனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை இந்த பார் சிறியிடம் இல்லை.. எல்லா ஓட்டுமாட்டையும் பிளக்கில செய்திட்டு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள வார கள்ளன் பார் சிறி.. அதையே வெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்..

  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி

அதையேவெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்..

🤣🤣🤣🤣🤣  👍

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2024 at 16:14, goshan_che said:

அனுரவோடு சேர்ந்து அமுக்காவிட்டால்…வெகுவிரைவில் வெளியே வரும்.

தன்மேல் அவதூறு செய்ததாக யார் மீதோ  பாராளுமன்றத் தேர்தலின் போது சிறீதரன் பொலீஸில் முறைப்பாடு செய்தாரே அந்த விடயம் என்னாயிற்று?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

தன்மேல் அவதூறு செய்ததாக யார் மீதோ  பாராளுமன்றத் தேர்தலின் போது சிறீதரன் பொலீஸில் முறைப்பாடு செய்தாரே அந்த விடயம் என்னாயிற்று?

அது சாராய சிறி நானும் ரவுடி தான் என்ற கோதாவின் அன்றைய உற்சாக பான உசாரில் பிலடப் கொடுத்தது. 

விடிந்தபின் அவரே அதை மறந்திருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவே தேவையில்லை, தமக்கென்று பிரத்தியேகமாக எதுவும் எதிர்பார்க்காமல் போராடி மறைந்தவர்கள் உங்கள் பிள்ளைகள்.

அவர்களின் தாயாக உங்களை விளக்கேற்றவிடவில்லை அவமானபடுத்திவிட்டார்கள் என்று எதிர்பார்ப்பது கூறுவது சரியல்ல, இறுதிநேர ஏற்பாட்டில் ஏதாவது குளறுபடிகள் நடந்திருக்கலாம். அந்த  விளக்கை உங்களை தவிர்த்து ஏற்றியவர் இன்னொரு மாவீரர் பெற்றோராகதான் இருந்திருக்கும் என நம்புகிறேன் .

மாவீரர்களானாலும் சரி மாவீரர் பெற்றோரானாலும் சரி அவர்களுக்கிடையில் ஏது வேறுபாடு? நமக்கு தேவை அந்த ஆத்மாக்களுக்கான நினைவஞ்சலி, நீங்களெல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதே இனத்துக்கும் இனத்துக்காக போராடியவர்களுக்கும் பெரிய கெளரவம்தானே , 

எதுக்கு இந்த விஷயங்களில் கோவம் கவலை எல்லாம்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

@goshan_che

எனக்கு சிறியரையும் பழக்கமில்லை அவரின் உள்விடயங்களும் தெரியாது.

நீங்களும் என்னையும் சிறிதரனுடன் முடிச்சுப் போடவே முயல்கிறீர்கள்.

( பாட்டியோட வடையை திருடியது அண்டாங்காக்காவா சாதா காக்காவா?)

நான் ஒரு தொப்பி கடை வைத்திருக்கிறேன். 

வாடிக்கையாளர் தொப்பியை அளவுபார்த்து, அதை சரியான தொப்பி என வாசகர் இனம் கண்டால் நான் பொறுப்பல்ல.

(வடையை சுட்ட காகம் உங்களை போல் அல்ல, அது சிரிப்புகுறிமட்டும் போட்டு விட்டு பறந்து விடும், மலை விழுங்கி காகம்).

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

தன்மேல் அவதூறு செய்ததாக யார் மீதோ  பாராளுமன்றத் தேர்தலின் போது சிறீதரன் பொலீஸில் முறைப்பாடு செய்தாரே அந்த விடயம் என்னாயிற்று?

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு…

ஊத்தி கொடுக்குறவன் பேச்சு இரவே போச்சு🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அம்மா இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவே தேவையில்லை, தமக்கென்று பிரத்தியேகமாக எதுவும் எதிர்பார்க்காமல் போராடி மறைந்தவர்கள் உங்கள் பிள்ளைகள்.

அவர்களின் தாயாக உங்களை விளக்கேற்றவிடவில்லை அவமானபடுத்திவிட்டார்கள் என்று எதிர்பார்ப்பது கூறுவது சரியல்ல, இறுதிநேர ஏற்பாட்டில் ஏதாவது குளறுபடிகள் நடந்திருக்கலாம். அந்த  விளக்கை உங்களை தவிர்த்து ஏற்றியவர் இன்னொரு மாவீரர் பெற்றோராகதான் இருந்திருக்கும் என நம்புகிறேன் .

மாவீரர்களானாலும் சரி மாவீரர் பெற்றோரானாலும் சரி அவர்களுக்கிடையில் ஏது வேறுபாடு? நமக்கு தேவை அந்த ஆத்மாக்களுக்கான நினைவஞ்சலி, நீங்களெல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதே இனத்துக்கும் இனத்துக்காக போராடியவர்களுக்கும் பெரிய கெளரவம்தானே , 

எதுக்கு இந்த விஷயங்களில் கோவம் கவலை எல்லாம்?

உங்களுக்கு எப்படியோ தெரியாது…

கூப்பிட்டு விட்டு முகத்திலடிப்பது போல் திருப்பி அனுப்பினால் அநேக தமிழர்கள் அதை ஒரு அவமானமாகவே கருதுவர்.

மூன்று பிள்ளைகளை கொடுத்தவர் நாம் அட்வைஸ் எடுக்கும் அளவுக்கு இருக்கமாட்டார்தானே? 

ஆனால் என்ன செய்வது, பிள்ளைகளை போலவே கொஞ்சம் ரோசம் உள்ளவர் இந்த அம்மா என நினைக்கிறேன். 

ஏற்பாட்டில் பிழை என்பதல்ல தவறு….

அழைப்பை வழங்கியவர்தான்…தான் அந்த அழைப்புக்கு பொறுப்பு.

கூப்பிட முதல் சரிபார்த்திருக்க வேணும், அல்லது இந்த அம்மா வரும் போது சிறி வாசலில் நின்று வரவேற்று , நடந்ததை விளக்கி அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவருக்கு வேறு ஒரு கெளரவத்தை கொடுத்திருக்கலாம்.

எதையும் செய்யாமல் இவர் கூப்பிடுவாராம்…போனால் யாரோ திருப்பி அனுப்புவார்களாம்…இவர் எம் பி தோரணையில் அதை கண்டுகொள்ளாமல் ராஜபார்ட்டில் இருபாராம்….

இந்த டாம்பீகத்தையிம், சொறி சேட்டைகளையும் யாரும் வேலை தேடி வருவோர் பொறுத்து கொள்ளலாம்….

எல்லாரும் அப்படி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கூப்பிட்டு விட்டு முகத்திலடிப்பது போல் திருப்பி அனுப்பினால் அநேக தமிழர்கள் அதை ஒரு அவமானமாகவே கருதுவர்.

கூப்பிட்டது கல்யாணவீட்டுக்கல்ல கோசான் எம்மை முதன்மை படுத்தவில்லையென்று மனம் வருந்தவும் மன்னிப்பு கேட்கவும் அவமானமாக உணரவும்.

தன் உடல்தசையிலிருந்து பிரித்து எம்மை உருவாக்கிய தாய்க்கு தன் பிள்ளைகள் தன்கூட இல்லையே என்ற கவலைதான் முதலில் நிற்கும் முதல்மரியாதை தரவில்லையென்ற மனவேதனை முன்னணியில் நிற்காது.

இந்த தாயும் நிச்சயமாக எதையும் எதிர்பாரா தாயாகத்தான்  இருப்பா.

எனக்கு தற்கால எந்த தமிழ் அரசியல்வாதிகளையும் பிடிக்காது என்றாலும், இது சிறிதரனுக்கு எதிரான யாரோ அந்த தாயை தூண்டிவிட்டு பேச வைத்ததுபோலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, valavan said:

இல்லை இதை இப்படி பாருங்கள்:

1. இந்த தாயை ஏன் அழைத்தனர்? 3 மாவீரரின் தாய் என்பதால்

2. அப்போ கெளரவம் யாருக்கு? தாய்கா அல்லது அந்த 3 மாவீரருக்கா? 3 மாவீரருக்கானது, அவர்கள் சார்பில் அந்த கெளரவத்தை தாய் பெறுகிறார்.

3. அப்போ அவரை தக்க முறையில் விளக்கம் கொடுக்காமல் திருப்பி அனுப்பினால், இன்னும் மன்னிப்பு கேட்காமல் தெனாவெட்டாக இருந்தால் யாரின் தியாகம் உதாசீனப்படுத்த படுகிறது? அந்த 3 மாவீரரின் தியாகம்.

4. இது மாவீரர் தியாகத்தை எப்படி சுயநலமாக கிள்ளு கீரை போல் சிறி பாவிக்கிறார் என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்படவேண்டியது.

5. டி டே நினைவு நிகழ்வுகளில் பிரான்சில் இருந்து அரைநாளில் ரிசி சுனாக் திரும்பினார். ஒட்டு மொத்த நாடும் அவரை போட்டு தாக்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்டும், தேர்தலில் தோற்க இதுவும் ஒரு காரணம் ஆகியது.

தமக்காக அதி உட்ச தியாகத்தை செய்தோரை இப்படித்தான் ஒரு நாடு/இனம் நடத்த வேண்டும்.

இதில் மன்னிப்பே கேட்காமல் இருக்கும் சிறியின் தெனாவெட்டை வைத்து  - மாவீரர் தியாகத்தை இவர் எப்படி நோக்குகிறார் என்பது புரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.