Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

வீரகேசரி இணையம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாக பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது:

தமிழீழத்தை விரைவில் பிரகடணப்படுத்த வேண்டிய தேவையில் புலிகள் இருக்கின்றனர். இதனடிப்படையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி, தமீழழம் பிரகடனம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கை அரசாங்கம் இதை ஒருபோதும் அனுமதிக்காது.

அத்தோடு, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான தி.மு.ஜயரட்ணவுக்கே பிரதமர் பதவி வழங்க அப்போது தீர்மானிக்கப்பட்டது. எனினும் மங்கள சமரவீரவின் ஆலோசணையின் காரணமாகவே, ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது என அவர் கூறினார்

அப்படித் தமிழீழம் பிரகடனப்படுத்தப்பட்டாலும் அது 26ம் திகதி பிரகடனப்படுத்தப்படாது என்றே நினைக்கிறேன். :blink:அத்தோடு தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான சூழல் இப்போது இல்லை. :lol:

எனினும் இலங்கை அரசாங்கம் இதை ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வளவு நாளும் இவர்கள் அனுமதித்துத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தப்போகும் தமிழீழம்

tamileelam-1.gif

யுடிஐ (Unilateral Declaration of Independence ) எனப்படும் புலிகள் பிரகடனப்படுத்தப்போகும் தமிழீழம் இதுதான்

புலிகள் யுடிஐ (Unilateral Declaration of Independence ) எனப்படும் தனியரசுப் பிரகடனத்தை ஜனவரி-2008 ல் பிரகடனப்படுத்தப்போவதாக தற்போது இலங்கை அரசின் அமைச்சர்களே பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்னரும் புலிகளின் தனியரசு பிரகடனம் பற்றி இலங்கை உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அப்போதைய அரசு அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை. இதனைப்பற்றி விரிவாக 2005 டிசம்பரில் மலேசியாவில் வெளியாகும் செம்பருத்தி இதழ் அப்போது வெளியிட்ட கட்டுரையைத் தழுவி இலங்கையில் வெளியாகும் நவமணி வார இதழில் நவநீதமணி என்பவரால் பின்வரும் செய்திக் கட்டுரை எழுதப்பட்டது. இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்கள் யுடிஐ (UDI) என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்குகிறது. ஆனால் முன்னர் புலிகள் பலமாக இருந்தபோது பிரகடனப்படுத்தாத தனியரசுப்பிரகடனத்தை தற்போது பலவீனமாக இருக்கும் நிலையில் பிரகடனப்படுத்துவார்களா என்பது சந்தேகமே-) - ஜெஸ்மின்

இரண்டு வருடத்திற்கு முன் வெளியாகிய கட்டுரையின் விபரம் வருமாறு:இலங்கை புலனாய்வுத்துறை அண்மைக் காலத்தில் அரசுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறப்பட்ட ஓர் அறிக்கைதான் முதலில் புயலைக் கிளப்பியது. இலங்கை அரசின் புலனாய்வு அறிக்கைகளில் பொதுவாகப் பெரும் பகுதியைப் பிடித்திருப்பவை விடுதலைப்புலிகளைப் பற்றிய செய்திகள்தாம். புயலைக் கிளப்பிய அறிக்கையில் உள்நாட்டில் கிடைக்கும் செய்திகளை மாத்திரம் அடிப் படையாகக் கொண்டு இருக்காமல், இலங்கை உளவுத்துறையின் சில வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் கிடைக்கப் பெற்ற விபரங்களையும் சேர்த்தே தயாரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப் படுகிறது. சரி, புயலைக் கிளப்பும் விதத்தில் அந்த அறிக்கையில் என்னதான் இருந்தது?

தமிழீழ விடுதலைப் புலிகள் விரைவில் யுடிஐ (UDI) ஒன்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களது அண்மைக்கால நடவடிக்கைகள் அனைத்துமே யுடிஐ (UDI) யை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகள் என்றது உளவு அறிக்கை. மேலே தொடர்வதற்கு முன்னர் இவர்களால் கூறப்படும் (UDI) என்பது என்ன வென்று கூறி விடலாம். Unilateral Declaration of Independence என்பதன் சுருக்கந்தான் யுடிஐ (UDI) .இதன் அர்த்தம் என்னவென்றால் ஒருதலைப்பட்சமான சுதந்திர பிரகடனம். இன்னும் பச்சையாகச் சொன்னால் ..''இதோ தமிழீழம்"" இதை இப்படி எழுதும்போது கட்டுரையைப் படித்துக்கொண்டிருப்பவர்களி

யாரும் இங்க காமடி கீமடி ஒன்ணும் பண்ணலை தானே?

நன்றி: தேனீ என்று வேற போட்டிருக்கு!

கள ஆய்வாளர்கள் யாரும் இதை விளக்கினா பெரிய உதவியா இருக்கும்!

ஜனவரி 14 இல் "தமிழீழப் பிரகடனம்": சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே

எதிர்வரும் தைப்பொங்கல் நாளில் தமிழீழப் பிரகடனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிடவுள்ளனர் என்று சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட தீர்மானித்திருக்கின்றனர். முதலில் ஜனவரி 18 ஆம் நாள் இந்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளது என்று கூறியிருந்தேன். ஆனால் எமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி ஜனவரி 14 ஆம் நாளான தைப்பொங்கல் நாளன்றே தமிழீழப் பிரகடனத்தை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை பிரபாகரன் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் தனது மாவீரர் நாள் உரையில் வெளியிடவுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இந்த திட்டம் குறித்து இந்தியாவும், அனைத்து நாடுகளும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் இந்த திட்டத்துக்கு அனைத்துலக நாடுகள் அனுமதிக்காது. அதற்கான உறுதிமொழிகளை அனைத்துலக நாடுகள் எமக்கு வழங்கியுள்ளன. சிறிலங்கா அரசும் இதனை அனுமதிக்கப் போவதில்லை.

அமெரிக்க அரச தலைவரிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரிடமும் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு மின்னஞ்சல்கள் மூலம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடவுள்ளனர். இத்தகைய மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்புமாறும் மக்களுக்கும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதற்கான முயற்சி ஒன்று ஏற்கனவே விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை. இப்போது மீண்டும் இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகளும், கருணாவும் ஜனநாயகத்தில் இணைந்து கொண்டால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டலாம். கிழக்கில் நடைபெறவுள்ள தேர்தல்களில் கருணாவும் போட்டியிடலாம். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் புதிய கட்சிகளும் பதிவு செய்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கிழக்கில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடலாம். இதன்மூலம் கருணாவும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நவம்பர் 17 ஆம் நாளுக்கு முன்னர் வெளியிட முடியுமா? அவர்களால் முடியாது.

விலை அதிகரிப்புக்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை ஏற்றுக்கொள்கிறோம். விலையேற்றத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியுள்ளது.

நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு வலியுறுத்துகின்றனர். யாருடைய தேவைக்காகவும் தேவையற்ற ஒரு தேர்தலை அரசு ஒருபோதும் நடத்தாது. பொருத்தமான கால கட்டத்திலேயே தேர்தல் நடக்கும்.

வடக்கில் உள்ள 33 உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும். அதற்கான வேட்பு மனுக்கள் விரைவில் கோரப்படும்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த அரசும் இப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள்தான் மோதலுக்கு வருகின்றனர் என்றார் அவர்.

நன்றி-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல் தினத்தன்றே தமிழீழத்தை விடுதலைப்புலிகள் பிரகடனப்படுத்துவர் முன்னைய தகவல் தவறானது என்கிறார் ஜெயராஜ்

வீரகேசரி நாளேடு

தமிழீழ விடுதலைப்புலிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்றே தனி தமிழீழ இராஜியத்தை பிரகடனப்படுத்தவுள்ளனர் இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் புலிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே தெரிவித்தார்.

தமிழீழ பிரகடனம் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே கிடைத்த தகவல்கள் தவறானது. தமிழீழத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைளில் சிலவற்றை ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே மேற்கொண்டு வருகின்றார் அவர் தற்பொழுது ஜெனிவாவில் இருக்கின்றார் என்றும் அவர் மேலும் கூறினார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ பிரகடனம் தொடர்பாக இந்தியாவும் சர்வதேசமூகமும் அவதானித்து கொண்டிருக்கின்றன. இந்த பிரகடனத்திற்கு சர்வதேச ஒருபோதும் அனுமதியளிக்காது என்பதுடன் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடவழங்காது.

தமிழீழத்தை பிரகடனப்படுத்துவதற்கான இதேமாதிரியான முயற்சி ஒன்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டபோதும் அது சாத்தியப்படவில்லை தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரையின் போது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த அறிவிப்பை பகிரங்கமாக விடுப்பார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தனி தமிழீழ இராஜியத்தை பிரகடனப்படுத்தவுள்ளனர் அதற்காக அமெரிக்க ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு கடிதங்களை எழுதுமாறும் மின்னஞ்சல்களை அனுப்புமாறும் விடுதலைப்புலிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல்களை கிடைத்துள்ளன என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் செப்டம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜெயராஜ் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் திருநாள் தைப் பொங்கல், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றவை.

நெருப்பில்லாமல் புகைக்காது

  • கருத்துக்கள உறவுகள்

ஐப்பசி வந்தாலே புதிய அறிவிப்புக்கள் வரும் என்ற எதிர்பார்ப்போடும் புத்துணர்ச்சியுடனும் எல்லோரும் புளுகத் தொடங்கிவிடுவினம். கார்த்திகையில் இது உச்சத்திற்குச் சென்று மார்கழியில் வியாக்கியானங்களில் கழிந்துவிடும்.. பிறகு பழையபடி தைப் பொங்கல், வருடப் பிறப்பு என்ற எல்லாரும் "பிராக்கு" பார்க்கப் போய்விடுவார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.