Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF++-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். 

அத்துடன் இந்த விடயம் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். 

இதேவேளை, அவரை தொடர்ந்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது...

 

https://www.hirunews.lk/tamil/389760/தாக்கப்பட்டாரா-அர்ச்சுனா-எம்-பி-நாடாளுமன்றத்தில்-களேபரம்-காணொளி-இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பம்,..😁

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்; அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நளின் பண்டார 

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (3) பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பேசுகையிலேயே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார். 

அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்; அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நளின் பண்டார  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣

  • Haha 2
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣

Ethu?

பொழுது போக வேண்டாமா 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣

"சாவகச்சேரீஸ்"என சொல்ல வேண்டும் ...😅
யாழ்ப்பாணீஸ் டிசன்ட மக்கள் சக்திக்கு எல்லோ வாக்கு போட்டவையள்..எதற்கு எடுத்தாலும் யாழ்ப்பாணிஸ் யை குற்றம் சொல்லப்படாது.(அவையள் வைச்ச ஆப்பு பெரிசு அது வேற கதை)😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களிடம் தோற்றுப்போனவர்கள் மக்களின் தெரிவை கேளிக்கை செய்கின்றார்கள். 

மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா முடங்கவேண்டும் என்பதே பலரின் ஆவல், எதிர்பார்ப்பாக உள்ளது போலும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

Ethu?

பொழுது போக வேண்டாமா 

வெள்ளத்திற்குள் நின்று ஒரு வீடியோ வரப் போகுதோ என்று நினைத்துக் கொண்டிருக்க, 'டீச்சர், இவன் நுள்ளிட்டான்..................' என்று ஒன்று வந்திருக்கின்றது...............🫣.

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெள்ளநிவாரண போட்டோ வீடியோ எல்லாம் வந்து காணாமல் போட்டுது (கெத்து காணாது போல). 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இவர் ஒரு முட்டாள் என்று அநேகமானவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுயேட்சை உறுப்பினர் ஒருவர் காபந்து அரசில் பிரதமராக பதவி வகித்த வரலாறு இலங்கையில் உள்ளது. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.