2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
By
தமிழ் சிறி
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
19
கிருபன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
தனக்கு தானே சூனியம் வைக்க அநுரா ஒன்றும் தமிழ் தேசிய தலைமைகள் அல்ல. முந்தய சிங்கள தலைமைகள் போல் இவ்வாறான விடயங்களில் மிகுந்த பொறுப்புணர்சியுடன் யோசித்து சாதுரியமாகவே செயற்படுவார். ஆகவே இவ்வாறான உசுப்பேற்றல்கள் தமிழ் தலைமைகளுக்கு பலித்ததை போல இங்கு பலிக்கப்போவதில்லை. இருப்பினும் பழக்க தோசத்தில் முயன்று பார்த்துள்ளீர்கள். 😂
-
By தமிழ் சிறி · Posted
இந்த விமான விபத்து நடந்த போது… வந்த செய்திகளை தொடர்ந்து பத்திரிகைகள் எழுதியதை, தேடி வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு. அப்போ… தொலைக்காட்சி இல்லை. வானொலியும், பத்திரிகையும் மட்டுமே. பத்திரிகையில் வரும் படங்கள் மட்டுமே… நிலைமையின் தீவிரத்தை கண் முன்னே கொண்டு வரும். -
By கிருபன் · பதியப்பட்டது
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள் Getty Images தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் "பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்." கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்படத்தில், சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான ஒரு நடிகர், பிறகு வில்லன், கதாநாயகன், 'சூப்பர் ஸ்டார்', என பரிணாமங்கள் எடுத்து, 2023இல் 'ஜெயிலர்' எனும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஒரு திரைப்படத்தைக் கொடுத்து, இன்றும் 'சோலோ ஹீரோவாக' (Solo hero) நிலைத்து நிற்பதை அவர் கூறியது போலவே 'அற்புதம்' என்றே விவரிக்கலாம். இன்று அவர் தன் 74வது பிறந்த நாளை (டிச. 12) கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவை நிச்சயமாக ரஜினிகாந்திற்கு முன்-பின் என பிரிக்கலாம். பல தமிழ் சினிமா நடிகர்களிடம் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பின் தாக்கம் இருப்பதை நம்மால் திரையில் பார்க்க முடிகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது, வடஇந்தியாவில் கூட நன்கு அறியப்பட்ட நடிகராகவே ரஜினிகாந்த் இருக்கிறார். திரையில் அறிமுகமாகி 49 ஆண்டுகளைக் கடந்தும் அவர் முன்னணி நடிகராக, 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்பது எப்படி? 'முத்து' படத்தில் செய்த வித்தியாசங்கள் நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பதும், தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்த அவரின் புரிதலும் தான் காரணம் என்று கூறுகிறார் நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா. 'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' போன்ற திரைப்படங்களில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள இவர், பல திரைப்படங்களின் கதை விவாதங்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். "ரஜினி, பெரும்பாலும் கதை விவாதங்களில் கலந்துகொள்வார். முன்னர் எல்லாம் பிறமொழி திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது, அதை அப்படியே எடுத்து வைப்பார்கள். ஆனால் ரஜினி, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்," என்கிறார் ரமேஷ் கண்ணா. கடந்த 1995ஆம் ஆண்டில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற 'முத்து' திரைப்படம், மோகன்லால் நடிப்பில் வெளியான 'தென்மாவின் கொம்பத்' (1994) எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல். இரு திரைப்படங்களின் திரைக்கதையிலும் அதிகளவு வித்தியாசங்களை நம்மால் காண முடியும். RameshKanna/Facebook நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பது முக்கிய காரணம் என்கிறார் ரமேஷ் கண்ணா "படையப்பா திரைப்படத்தின் கதை விவாதத்தின் போது, ஒரு காட்சி பிடிக்கவில்லை என சொன்னபோது, அதை அவர் ஏற்றுக்கொண்டார். அது சில 'பஞ்ச் டயலாக்குகள்' கொண்ட மாஸான ஒரு காட்சி. அதில் மாற்றம் சொன்னபோது, எந்த 'ஈகோவும்' இல்லாமல் ஒப்புக்கொண்டார்." என்கிறார் ரமேஷ் கண்ணா. கதை, திரைக்கதை முடிவாகி, படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே கேட்டு நடிப்பதும், அதை இன்றுவரை பின்பற்றுவதும் தான் அவரது வெற்றிக்குக் காரணம் என தான் நினைப்பதாக கூறுகிறார் ரமேஷ் கண்ணா. ரஜினிகாந்தின் திரை பிம்பம் Getty Images 'கபாலி' படத்திற்கு பிறகு ரஜினியின் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்கிறார் எழுத்தாளர் தீபா நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என இரண்டாக பிரித்துப் பார்த்தால், அவரது வெற்றிக்கான பாதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என புரியும் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். "அண்ணாமலை திரைப்படத்தில், ஒரு சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அப்பாவி மனிதன், பணக்காரர்களால் ஏமாற்றப்படுகிறான். பிறகு அந்த அப்பாவி, யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேறி, வெற்றி அடைகிறான்." "அண்ணாமலை திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற பிறகு, ரஜினி தேர்ந்தெடுத்த கதைகள் பெரும்பாலும் 'ஒரு வெகுளியான அல்லது நல்ல மனம் கொண்ட ஒருவன், வாழ்க்கையில் துரோகத்தைச் சந்தித்த பிறகும் கூட, எப்படி பல சாதனைகளைச் செய்கிறான் அல்லது அதிலிருந்து மீண்டு வருகிறான்' என்பதை அடிப்படையாகக் கொண்டவையே" என்கிறார் ஜா.தீபா. ஜா.தீபா குறிப்பிடுவது போன்ற கதாபாத்திர வடிவமைப்புகள் அல்லது கதைகளை, அண்ணாமலைக்கு பிறகு வந்த உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி, கோச்சடையான், லிங்கா போன்ற திரைப்படங்களில் நம்மால் காண முடியும். அதேபோல, 'தென்மாவின் கொம்பத்' திரைப்படத்தில், 'முத்து' படத்தில் வருவது போன்ற 'ஜமீன்தார்' (ரஜினிகாந்த்) கதாபாத்திரமோ, அவர் தனது உறவினரால் (ரகுவரன் ஏற்று நடித்திருந்த 'ராஜசேகர்' எனும் கதாபாத்திரம்) ஏமாற்றப்படுவது போன்றோ காட்சிகள் இருக்காது. Deepa/Instagram நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என பிரிக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா "மற்ற கதாநாயகர்களை விட இதுபோன்ற கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தது ரஜினி தான். ஒரு சாமானியன் நினைத்தால் எந்த எல்லைக்கும் செல்ல முடியும், இது மக்களுக்குப் பிடித்த 'ஒன்லைன்'. அதையே தனது பாணியில் திரையில் காட்டியது, ரஜினியின் புத்திசாலித்தனம் தான்" என்கிறார் தீபா. நடிகர் ரஜினி, 'அண்ணாமலைக்கு' பிறகு, தனது திரைப்படங்களின் கதை குறித்து மிகவும் கவனமாக இருந்தார் என்று கூறும் தீபா, "அவர் தீர்மானித்த கதைகளில் சறுக்கியது என்று பார்த்தால் 'பாபா' மட்டும் தான். இயக்குநர்களும் அவருக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதினர். 'கபாலி' படத்திற்கு பிறகு தான் இந்தப் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது" என்கிறார். ரஜினி படங்களில் பெண் கதாபாத்திரங்கள் Getty Images ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம், தனக்கு கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி எழுத்தாளரும், பெண்ணிய ஆய்வாளருமான பா. ஜீவ சுந்தரி, "அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ரஜினி தான் வெளிப்படுவார். அதை வெறும் ஸ்டைல் என்று கூறி விட முடியாது. அவர் ஒரு நல்ல நடிகர். எனவே, ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம்" என்கிறார். பா. ஜீவ சுந்தரி தமிழ் சினிமா குறித்து 'ரசிகை பார்வை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை உதாரணமாகக் கூறும் பா. ஜீவ சுந்தரி, "அந்தப் படம் ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. நாவலை படித்தால், நிச்சயம் 'காளி' கதாபாத்திரத்தை வெறுப்பீர்கள். அவன் பெண்களை மதிக்க மாட்டான், எல்லோரிடமும் கோபப்படுவான், எப்போதும் 'குடி' என்று இருப்பான். ஆனால், அதே 'காளியை' திரையில் ரஜினி நடிப்பில் பார்த்தால், வெறுக்க முடியாது. அதுதான் அவரது பலம்" என்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் தனக்குக் கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி. Jeeva Sundari / Facebook ரஜினியின் ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம் என்கிறார், பா.ஜீவ சுந்தரி "ஆண்களின் பார்வையில் இருந்து தான் தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ரஜினியின் பல திரைப்படங்களில், படித்த அல்லது பணக்கார பெண்கள் திமிரானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். அவர் அந்தப் பெண்களை திருத்துவது போல காட்சிகள் இருக்கும்." என்று ஜீவ சுந்தரி கூறுகிறார். இதை எழுத்தாளர் ஜா.தீபாவும் சுட்டிக்காட்டுகிறார். "அது 90களுக்கு முன்புவரை படித்த பெண்கள் குறித்து சமூகத்தில் இருந்த பிம்பம், அதைத்தான் அவரது திரைப்படங்கள் பிரதிபலித்தன. அப்போது பிற நடிகர்களின் படங்களிலும் இது இருந்தது." "ஆனால், இப்போது அதே ரஜினியின் 'கபாலி', 'காலா' திரைப்படங்களில் வந்த பெண் கதாபாத்திரங்களை பார்த்தால், அவர் காலத்திற்கு ஏற்றாற்போல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது புரிகிறது. அதுவும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் தீபா. மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுவது எங்கே? Madankarky/Instagram ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ளார் மதன் கார்க்கி பிபிசி தமிழிடம் பேசிய பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி, "நடிகர் ரஜினிகாந்திற்கு இருப்பது போல பலதரப்பட்ட ரசிகர்களை வேறு நடிகருக்கு பார்ப்பது சிரமம் தான். 'தலைமுறை இடைவெளி' என்று சொல்வோம், ஒரு தலைமுறைக்கு பிடித்தது மற்றொரு தலைமுறைக்கு பிடிக்காது. ஆனால், ரஜினி விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது" என்கிறார். இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். குறிப்பாக 80கள் மற்றும் 90களில், பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாது முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது 'ஹம்' (Hum) எனும் திரைப்படம். 1991இல் வெளியான இத்திரைப்படத்தில் கதாநாயகன் அமிதாப் பச்சன். அவரது சகோதரராக 'குமார் மல்ஹோத்ரா' எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவ்வாறு பிறமொழி திரைப்படங்களில் நடித்ததும், எந்த மாதிரியான திரைப்படங்களை, கதாபாத்திரங்களை மக்கள் விரும்புவார்கள் என்பதை புரிந்துகொள்ள அவருக்கு உதவியது என்கிறார் மதன் கார்க்கி. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ள மதன் கார்க்கி, 2.0 திரைப்படத்தில் எழுதிய ஒரு வசனம், 'I'm the only one, Super One. No Comparison'. அதை நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தைக் குறிக்கவே எழுதியதாக மதன் கார்க்கி கூறுகிறார். "தனது ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறனை மட்டும் நம்பாமல், தனது பலதரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த நல்ல கதை மற்றும் திரைக்கதை அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்த இடத்தில் தான் மற்ற 'மாஸ் ஹீரோக்களிடம்' இருந்து ரஜினிகாந்த் வேறுபடுகிறார். அதனால் தான் நிலைத்தும் நிற்கிறார்" என்கிறார் மதன் கார்க்கி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg52d94mg4go?at_campaign=ws_whatsapp -
By தமிழ் சிறி · Posted
இந்தச் சிறுமி, உயிர் பிழைத்தது பெரும் அதிசயம். இங்கு இப்போ குளிர் ஆரம்பித்து விட்டது. இரவில் -5 பாகைக்கு மேல் கூட காலநிலை செல்லும். அதிலும்…. தண்ணீரில், பெரும் அலைகளுக்கு மத்தியில் மூன்று நாட்களுக்கு மேல் தத்தளித்து உயிருடன் தப்பியமை அவருக்கு கிடைத்த இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ❤️ 👍🏽 -
By ஏராளன் · பதியப்பட்டது
10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில் மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில் பயணிகளின் உடல்களும் உடமைகளும் சிதறிக்கிடந்தன. கடல்மைலிற்கு 36000 மீற்றர் மேலே பறந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானி விமானத்தை கொழும்பு விமானநிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதியை கோரினார்.சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின்படி விமானி விமானத்தை 4000 மீற்றருக்கு கீழே கொண்டுவந்தார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. எனினும் பொகவந்தலாவ காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு மேலே பயணித்துக்கொண்டிருந்த விமானம் உயரத்தை குறைத்து பயணித்துக்கொண்டிந்தவேளை அதன் இறக்கைகளில் ஒன்று மலையுடன் உரசியது இதனால் வெடிப்புநிகழ்ந்தது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர். 'விமானப்பணிப்பெண்ணின் உடலை அவரின் காதலன் அடையாளம் காட்டினார் அவரது உடல் இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது "என அவர்கள் அன்றைய நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர் . இந்த கட்டுரையை எழுதியவர் அந்தபகுதி விமானவிபத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூருவதற்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை அங்கு சென்றார். நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையின் அடிவாரத்தில் உள்ள முல்கம தோட்டத்திலேயே நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த இருவரை பலத்த சிரமத்தின் மத்தியில் தொடர்புகொள்ள முடிந்தது.அவ்வேளை இளையவர்களாக காணப்பட்ட அவர்கள் தற்போது முதியவர்கள்எனினும் என்ன நடந்தது என்பது அவர்களின் நினைவுகளில் தெளிவாக பதிந்துள்ளது. அவர்களில் ஒருவர் நோர்வூட் கிளங்கன் தோட்டத்தை சேர்ந்த பிஎச் நிமால் டி சில்வா அவருக்கு அப்போது 19 வயதுஇதியத்தலாவ இராணுவமுகாமின் கெமுனுவோச் படைப்பிரிவின் வாகனச்சாரதியாக பணியாற்றிவந்தார். 'நான் அவ்வேளை 19 வயது இளைஞன்இகெமுனுவோட்ச் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகயிருந்தவர்லக்கி அல்கம அவர் 100 பேருடன் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்தார். கொத்தன்லேனவில் உள்ள சிங்கள மகாவித்தியாலத்தில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம்- உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதே எங்களிற்கு வழங்கப்பட்ட பணி - மலையின் உச்சியிலும் அடிவாரத்திலும் உடல்கள் சிதறிக்கிடந்தன.என தெரிவித்துள்ள நோர்வூட் கிளன்கனை சேர்ந்த பிஎச்நிமால் டி சில்வா நாங்கள் சிதறிக்கிடந்த உடல்களை மலைஅடிவாரத்தில் உள்ள பகுதியொன்றிற்கு கொண்டுவந்தோம்19 உடல்களை ஒரே புதைகுழியில் புதைத்தோம் எனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான அனுபவம் என அவர் தெரிவித்தார். அந்த துயரசம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு நபர் தன்னை திலக் என அறிமுகப்படுத்தினார்- 62வயது எனக்கு அவ்வேளை 12 வயது ஆனால் சம்பவம் நன்றாக நினைவில் உள்ளது என அவர் குறிப்பிட்டார். 'பெருமளவானவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குவிந்தார்கள் அவர்கள் விமானத்தின் சிதைவுகளை எடுத்துச்சென்றார்கள்இவிமானவிபத்து இடம்பெற்ற பகுதியை பார்ப்பதற்காக பலர் பலநாட்களாக வந்தார்கள்" என அவர் தெரிவித்தார். ஏழுகன்னி மலையின் முன்னால் உள்ள திபேர்ட்டன் தோட்டத்தை சேர்ந்த வீரன் ராஜிற்கும் ( 58) அந்த விபத்து குறித்த விடயங்;கள் நினைவில் உள்ளது.சம்பவம் இடம்பெற்றபோது தனக்கு 8 வயது என அவர் தெரிவித்தார். இரவு பத்துமணியளவில் தோட்டத்தின் தீ அபாய மணி ஒலித்ததும்நாங்கள் அந்த தொழிற்சாலையை நோக்கி ஒடினோம்அந்த தோட்டத்தின் உரிமையாளர் சொய்சா என்ற கனவான்அவர் விமானமொன்று மலையில்மோதி விழுந்துள்ளது என தெரிவித்தார்அந்த பகுதி முழுவதும் கடும் பனியில் சிக்குண்டிருந்ததால் எங்களால் அங்கு செல்லமுடியவில்லை சொய்சா நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு அறிவித்தார்அதன் பின்னர் இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு ஹெலிக்கொப்டர்களும் அவ்விடத்திற்கு வந்தன என அவர் தெரிவித்தார். அதன் பின்னரே விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளதையும் பலர் உயிரிழந்துள்ளதையும் நாங்கள் உணர்ந்தோம்இராணுவத்தினரும் பொலிஸாரும் உடல்களை மீட்டெடுத்தனர்." என அவர் தெரிவித்தார். ranjith rajapaksha தமிழில் -ரஜீவன் https://www.virakesari.lk/article/200883
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts