Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

காரணம்? இலவச கல்வி, இலவச மருத்துவம், இத்யாதிகள்

இந்த பணம் எப்படி கிடைத்தது  ....சரி கடன.  என்றால்    யார் அதை  அடைப்பது   அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமைச்சர்கள்  பிரதமர் ஐனதிபதியா ??  இந்த கடனை அடைப்பதில். மக்களுக்கு தொடர்புகள் இல்லையா?? இலவசம் எனில. ஏன் வரி அறவிடவேண்டும். இலவசம் என்பதற்கும்  உதவி எனபதற்கும. வித்தியாசம் இல்லையா  ?? அதாவது சமூக நல உதவி  

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு  நல்ல சுகாதார வசதிகள் கொண்ட இருப்பிடமில்லை   

சம்பளம் மிக மிக குறைவு  அவரகளுக்கு ஏதாவது இலவசமாக கொடுக்கலாம்.  இல்லையா?? அல்லது நியாயமான சமபளம். வழங்கலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

இதை ஆங்கிலத்தில் free at the point of delivery என்பார்கள்.

அதாவது சேவை வழங்கும் தறுவாயில் இலவசம்.

ஜேர்மனியிலும், யூகேயிலும் அரச மருத்துவ சேவை இந்த அடிப்படையில்தான் நடக்கிறது. அதாவது தனிமனிதர்களி வரி அல்லது காப்புறுதிவாங்கி, அதை வைத்து தேவைப்படும் சகலருக்கும், சேவை வழங்கும் போது (at the point of delivery) இலவசமாக வழங்கப்படும்.

இலங்கையிலும் இப்படித்தான். வரிப்பணம்+கடன்+உதவிகள் கொண்டு, at the point of delivery கல்வியும், மருத்துவமும் இலவசமாக கொடுக்கப்படுகிறன.

இல்லை ஜேர்மனியில் வேலை செய்யும்  ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு   செலுத்த வேண்டும் இது வரி இல்லை   நான்  170.   ....180   யூரோ மாதம் கட்டினேன்   இப்போது பென்சன். எடுத்த பின்னும்  80 யூரோ மாதம் கட்டுகிறேன். 

ஒரு சுகதேகி  கட்டும் பணம்  அரசாங்கத்திற்கு 

ஒருவர் 67 வயதுக்கு உள் இறந்து போனால் அவர கட்டிய. லட்சக்கணக்கான பணம் அரசாங்கத்திற்கு   🙏

குறிப்பு,.....இதனை நினைக்க  ஏதாவது குடிக்க வேணும் போல இருக்கிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இந்த பணம் எப்படி கிடைத்தது  ....சரி கடன.  என்றால்    யார் அதை  அடைப்பது   அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமைச்சர்கள்  பிரதமர் ஐனதிபதியா ??  இந்த கடனை அடைப்பதில். மக்களுக்கு தொடர்புகள் இல்லையா?? 

கடனை நாடுதான் அடைக்க வேண்டும்.

ஆகவே மக்களுக்கு தொடர்பு உள்ளது.

கடன் இல்லாத நாடுதான் தன் மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும் என்றால் - ஜேர்மனி உட்பட உலகில் எந்த நாடும் நலதிட்டங்களை செயல்படுத்த முடியாது.

உங்களுக்கு வீட்டு, வாகன கடன் இருப்பதால் பிள்ளையளுக்கு நல்ல உடுப்பு வாங்கி கொடாமல் விடுவதில்லைத்தானே?

 

1 hour ago, Kandiah57 said:

இலவசம் எனில. ஏன் வரி அறவிடவேண்டும்

வரியிறுப்பாளருக்கும், வரிகட்டும் வசதி இல்லாதவருக்கும் இலவசம். இல்லாதவருக்கும் சேர்த்து இருப்பவர் வரியாக கட்டுவார்.

இதுதான் வரி வகுப்பின் அடிப்படையே.

1 hour ago, Kandiah57 said:

இலவசம் என்பதற்கும்  உதவி எனபதற்கும. வித்தியாசம் இல்லையா  ?? அதாவது சமூக நல உதவி  

மேலே சொன்னது போல் இது இலவசம் அல்ல, சேவை பெறும் தறுவாயில் இலவசம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு  நல்ல சுகாதார வசதிகள் கொண்ட இருப்பிடமில்லை   

சம்பளம் மிக மிக குறைவு  அவரகளுக்கு ஏதாவது இலவசமாக கொடுக்கலாம்.  இல்லையா?? அல்லது நியாயமான சமபளம். வழங்கலாம்  

ஏனைய இலங்கையர் போலவே அவர்களுக்கு கல்வி, மருத்துவம் வழங்கபடுகிறது.

இலங்கையில் குடியேற்ற திட்டங்கள், சேரி மாற்று திட்டங்கள் தவிர இலவச வாழிடம் அல்லது வாழிட கொடுப்பனவு எவருக்கும் இல்லை (housing benefit).

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் இருப்பதே தோட்டத்துக்கு சொந்தமான லயன் வீடுகளில்.

ஆகவே இது ஒருவகை இலவசம்தான்.

அவர்களுக்கு சம்பளம் போதாது, வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது மிக நியாயமான அடிப்படை கோரிக்கை என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது இலவசங்களை அதிகரிக்க வேண்டும் என்போர் சொல்ல வேண்டியது. நீங்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இல்லை ஜேர்மனியில் வேலை செய்யும்  ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு   செலுத்த வேண்டும் இது வரி இல்லை   நான்  170.   ....180   யூரோ மாதம் கட்டினேன்   இப்போது பென்சன். எடுத்த பின்னும்  80 யூரோ மாதம் கட்டுகிறேன்.

அண்ணை…நாங்களும் national insurance என்று கட்டுகிறோம்.

ஜேர்மனியில் பிறப்பில் இரெண்டு காலும், கையும் இல்லாத ஒருவரை நீ காப்புறுதி கட்டவில்லை எனவே தெருவில் நில் என்றா விடுவார்கள். இல்லை - உங்களை போன்றோர் கட்டும் காசை வைத்து அவருக்கும் உங்களுக்கும் சேவை வழங்குவார்கள்.

இங்கே பென்சனுக்கும் வரி அடிப்பார்கள். உழைக்கும் போது வருமான வரி + மேலே சொன்ன காப்புறுதி.

உங்கள் boomer generation கட்டியது குறைவு. எங்கள் தலைமுறை எடுக்கும் வருமானத்தில் 30-40 45 வீதம் வரை வரியாக கட்டுகிறோம்.

மாச கடைசியில் வயிறு ஏரிந்தாலும் ஒரு மேம்பட்ட சமூகத்தில் வாழ கொடுக்கும் விலை என சமாதானம் அடைவதை தவிர வேறு வழியில்லை.

பிகு

ஜேர்மனியிலும், யூகேயிலும் சோசல் காசில் உழைக்காமல், கொடுப்பனவு, இலவச வீட்டில் வாழ்ந்தவர்களை எனக்கு தெரியும் - ஆகவே இந்த நாடுகளில் இலவசம் இல்லை என்பது சரி அல்ல.

வரி கட்டும் எமக்கு இலவசம் இல்லை. நாம் பாவிப்பதை விட அதிகமாக கொடுக்கிறோம். ஆனால் வரி கட்டாதவர்கு இலவசம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, கிருபன் said:

டொக்டர் சத்தியமூர்த்தி விதிகளைப் படித்திருக்கமாட்டார் என்று தெரிந்து அருச்சுனா அவரை வெருட்ட முனைந்திருக்கின்றார். சேர் என்று  அழைக்கவேண்டும் எவரும் விதிகளைப் போடுவதில்லை. ஒரு பொறுப்பான பதவியில் உள்ளவரின் அலுவலகத்திற்கு அவரின் அனுமதி இல்லாமல் ஒரு பா.உ. போகமுடியாது. 

இந்தப் பைத்தியரின் நோக்கம் தான்  விலாசம் காட்டுவதை மற்றவர்கள் சமூக ஊடகங்களில் கதைக்கவேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்கின்றோம்!

 

 

சார் என்று கூப்பிட்டால் எனக்கு துண்டறப் பிடிக்காது நியாயம். அது ஒரு அடிமைப் புத்தி.

மேலும், நான் அருச்சுனாவின் விசிறி கிடையாது. அதனால் அவரின் கூத்துகளை ரசிக்க நேரம் இல்லை. 

ஒருவருக்கு மனநோய் இருக்குதோ ,இல்லையோ அவர்களை பார்த்து "பைத்தியம்" என்று சொல்பவர்களுக்கு தான் உண்மையான மனநோய்...அர்ஜுனாவிற்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் இருக்கலாம்...பப்பிளிசிட்டி விரும்புவராய் இருக்கலாம் ..அது அவரில் உள்ள குறை 
அர்ஜுனா,ச.மூ பார்க்க போனவுடனே என்னை சேர் என்று கூப்பிடு என்று என்று சொல்லி இருக்க மாட்டார்...நான் காணொளி முழுமையாய் பார்க்கவில்லை...அவர்களுக்குள் புடுங்குப்பாடு நடந்த பிறகு தான் அப்படி சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன் 
படிக்காத முன்னால் எம்பி அங்கயன் ,டக்கி போன்றோர் போகும் போது  விழுந்து ,விழுந்து கவனித்த ச..மூ க்கு அர்ஜுனாவை கண்டதும் உதறல் எடுக்குது.
லண்டனில் ஒரு   வைத்தியர் இருக்கார் ...அவர் ஒரு பப்பிளிசிட்டி பிரியர் ...எப்படியாவது அவர் அர்ஜுனா தேர்தலில் தோத்து விடுவார் என்று காத்து கிடந்தார்...அவர் தேர்தலில் வென்றதும் காணும் ...இவ்வளவு காலமும் யாழில் மருந்து தட்டுப்பாடு,எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தது ..ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை ....அர்ஜுனா ஏதாவது செய்து விடப் போகிறார் என்ற பயத்தில் மருந்துக்கள் வேண்டுனால் தன்னை தொடர்பு கொள்ளட்டாம்...இவ்வளவு காலமும் எங்கே இருந்தார்கள்.
செய்கிறார்களோ ,இல்லையோ பயப்படுகிறார்களே அது தான் அந்த மக்களுக்குத் தேவை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு யாழில் மட்டும் இல்லை. பொதுவாய் தமிழருக்கு பொறாமை,ஈகோ.சக தமிழனை முன்னேற விட மாட்டான் ...தானும் முன்னேற மாட்டான் ...ச.மூ ஒரு ஊழல்வாதி ஒழுங்காய் வைத்தியசாலையை நிர்வகிக்க தெரியாது ...தன்னுடன் பணி  புரியும் ஊழியர்களை எப்படி கையாளுவது என்று தெரியாது....இந்த ஊழியர்கள் விடயத்தில் அவரே ஆரம்பத்தில் கதைத்து சுமுகமான  முடிவு எடுத்துருந்தால் அவர்கள் ஏன் கொழுப்பிற்கு போய் முறையிடுகிறார்கள்.
அர்ஜுனா,தன்னை சேர் போட சொல்லி விட்டார் என்று பந்தை திருப்பி விட்டார் ...பத்தரைமாத்து தங்கமாயிட்டார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, goshan_che said:

1) உங்கள் boomer generation கட்டியது குறைவு. எங்கள் தலைமுறை எடுக்கும் வருமானத்தில் 30-40 45 வீதம் வரை வரியாக கட்டுகிறோம்.

2) மாச கடைசியில் வயிறு ஏரிந்தாலும் ஒரு மேம்பட்ட சமூகத்தில் வாழ கொடுக்கும் விலை என சமாதானம் அடைவதை தவிர வேறு வழியில்லை.

பிகு

3) ஜேர்மனியிலும், யூகேயிலும் சோசல் காசில் உழைக்காமல், கொடுப்பனவு, இலவச வீட்டில் வாழ்ந்தவர்களை எனக்கு தெரியும் - ஆகவே இந்த நாடுகளில் இலவசம் இல்லை என்பது சரி அல்ல.

வரி கட்டும் எமக்கு இலவசம் இல்லை. நாம் பாவிப்பதை விட அதிகமாக கொடுக்கிறோம். ஆனால் வரி கட்டாதவர்கு இலவசம்.

1, 2, 3

எனது கருத்தும் இது தான்.

அதனால் தான் எங்கள் மூதாதையர்களோ நாங்களோ கட்டிய பணமல்ல நாங்கள் வந்த போது அனுபவித்தது என்று எழுதினேன். 

எனது மக்கள் உங்களைப்போல உயர் வீத வரி  கட்டுபவர்கள் தான். ஆனால் பிரான்சில் தாம் பிறந்ததில் இருந்து  மருத்துவம் மற்றும் உயர் படிப்பு வரை கல்வி என்பன இலவசமாக கிடைத்தன அதை தமக்காக மூத்த தலைமுறையினர் கட்டினர் என்பதை மறக்காதிருக்கும்படி வளர்த்திருக்கிறேன்.  அதனால் அவர்கள் அதுபற்றி திருப்பி கொள்கிறார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆகவே இந்த நாடுகளில் இலவசம் இல்லை என்பது சரி அல்ல

எனக்கு தெரியும்,.......ஆனால் இலவசம் என்று சொல்வதில்லை   இலங்கையில் சொல்வது உண்டு    மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் 

நான் பாடசாலைகளை கட்டினேன்   றேட்டு போட்டேன்   .........வேலைவாய்ப்பு கொடுத்தேன்     இவையெல்லாம் பிழையான.  சொல்லாடல்.  என்பது எனது கருத்துகள்   இலவசங்களை. மக்களுக்கு கொடுத்தோம் என்பதும் பிழை   

வேண்டும் போது வரி   கொடுக்கும் போது இலவசமா.  ?? 

இந்த வார்த்தை நன்கொடை.  அல்லது அன்பளிப்பு.   என்று மாற்றப்படவேண்டும். அல்லது உதவி 

எப்படி வரி அறவிட உரிமை இருக்கிறதே  அதோபோல்.  வருமானம் குறைந்தவர்களுக்கு   உதவி வழங்கப்படுகிறது  இது இலவசமா. ?? அதே நபர்   படித்து நல்ல உழைக்கும் போது  வரி என்று கட்டுகிறார்கள் அந்த வரி அரசாங்கம் பெறும் இலவசம் என்று சொல்லப்படுவதில்லை    🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியும்,.......ஆனால் இலவசம் என்று சொல்வதில்லை   இலங்கையில் சொல்வது உண்டு

அதான் சொன்னேனே free at the point of delivery ஐ சுருக்கி free என்கிறார்கள்.

 

3 minutes ago, Kandiah57 said:

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் 

நான் பாடசாலைகளை கட்டினேன்   றேட்டு போட்டேன்   .........வேலைவாய்ப்பு கொடுத்தேன்     இவையெல்லாம் பிழையான.  சொல்லாடல்.

நிச்சயமாக இது பிழை.

வேணும் என்றால் இன்னொரு பகுதிக்கு ரோடு போடாமல் என் அதிகாரத்தை பாவித்து அந்த பணத்தை உங்கள் பகுதிக்கு ரோட்டு போட பாவித்தேன் என சொல்லலாம்.

5 minutes ago, Kandiah57 said:

இந்த வார்த்தை நன்கொடை.  அல்லது அன்பளிப்பு.   என்று மாற்றப்படவேண்டும். அல்லது உதவி 

இவை எவையும் சரியான பதங்கள் அல்ல. ஆங்கிலத்தில் state-funded என்பார்கள்.

அரச-செலவில் கல்வி, அரச-செலவில் மருத்துவம் என்பது சரியாக இருக்கும்.

8 minutes ago, Kandiah57 said:

எப்படி வரி அறவிட உரிமை இருக்கிறதே  அதோபோல்.  வருமானம் குறைந்தவர்களுக்கு   உதவி வழங்கப்படுகிறது  இது இலவசமா. ?? அதே நபர்   படித்து நல்ல உழைக்கும் போது  வரி என்று கட்டுகிறார்கள் அந்த வரி அரசாங்கம் பெறும் இலவசம் என்று சொல்லப்படுவதில்லை

இப்ப உங்களுக்கு என்ன அண்ணை பிரச்சனை🤣?

ஆரம்பத்தில் இவ்வாறான பணம் அறவிடா திட்டங்களே கூடாது என்றீர்கள்.

இப்போ திட்டம் இருக்கலாம் அதை இலவசம் என்பதுதான் பிழை என்பது போல் எழுதுகிறீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

அர்ஜுனா,தன்னை சேர் போட சொல்லி விட்டார் என்று பந்தை திருப்பி விட்டார் ...பத்தரைமாத்து தங்கமாயிட்டார்.

அவர்  ...... சத்தியமூர்த்தி    ஐனதிபதியால். பதவி நீங்கப்பட்டதாக.  செய்திகள் சொல்கிறது,......உண்மையா ???

23 minutes ago, goshan_che said:

அதான் சொன்னேனே free at the point of delivery ஐ சுருக்கி free என்கிறார்கள்.

 

சரி விடுங்கள் பாஸ்   உங்களுக்கு தமிழ் தெரியாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, Kandiah57 said:

 

சரி விடுங்கள் பாஸ்   உங்களுக்கு தமிழ் தெரியாது 🤣

🤣 ஆனால் தமிழை முடிந்தளவு எழுத்து பிழை விடாமல் யாழில் தட்டச்சு செய்யத்தெரியும்🤣.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, goshan_che said:

ஆரம்பத்தில் இவ்வாறான பணம் அறவிடா திட்டங்களே கூடாது என்றீர்கள்.

இப்போ திட்டம் இருக்கலாம் அதை இலவசம் என்பதுதான் பிழை என்பது போல் எழுதுகிறீர்கள்.

 

அது தான் ஏற்கனவே சொல்லி விட்டேன் 

1 hour ago, goshan_che said:

அரச-செலவில் கல்வி, அரச-செலவில் மருத்துவம் என்பது சரியாக இருக்கும்.

சரி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இவை எவையும் சரியான பதங்கள் அல்ல. ஆங்கிலத்தில் state-funded என்பார்கள்.

தமிழ் செம்மொழி 

தமிழ் உலகில் முதல் மொழி 

தமிழ்லிருந்து அனைத்து மொழிகளும் பிறந்தன. ....

..... ....... ..இப்படி சொல்லி கொண்டு   எந்த உதாரணத்திற்கும். ஏன் ஆங்கிலத்தில் ஆங்கிலத்தையே எடுத்து காட்டுதல் வேண்டும்??  அதுவும் என் போன்ற  ஆங்கில அடிப்படை அறிவு இல்லாதவர்களுக்கு 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

தமிழ் செம்மொழி 

தமிழ் உலகில் முதல் மொழி 

தமிழ்லிருந்து அனைத்து மொழிகளும் பிறந்தன. ....

..... ....... ..இப்படி சொல்லி கொண்டு   எந்த உதாரணத்திற்கும். ஏன் ஆங்கிலத்தில் ஆங்கிலத்தையே எடுத்து காட்டுதல் வேண்டும்??  அதுவும் என் போன்ற  ஆங்கில அடிப்படை அறிவு இல்லாதவர்களுக்கு 🤣🤣

உலக முதல் மொழியா என்று தெரியவில்லை…ஆனால் இன்று வாழும் மொழிகளில் பழமையானது என வாதாட கூடிய அளவுக்கு பழமையான மொழிதான்.

ஆனால் நாம் எந்த மொழியில் இருந்தும் எடுத்து அதை தமிழில் கையாள வேண்டும்.

இப்படி ஒரு விசாலமான அணுகுமுறை இருந்த படியால்தான் ஐரோப்பாவின் மேற்கு மூலையில் உள்ள ஒரு தீவில், 1/3 மக்களின் மொழியாக, காலத்தால் மிக பிந்திய மொழியாக இருந்தும் ஆங்கிலம் உலக பொது மொழியாகியது.

ஆங்கிலத்தில் மிக அதிகமான சொற்கள் பிரென்சு,ஜேர்மானிக், ஸ்கெண்டிநேவிய சொற்கள்தான்.

ஆகவே இலவசம் என்ற சொல் பொருத்தம் இல்லாத போது (இதுவே வடசொல் என நினைக்கிறேன்) ஆங்கிலத்தில் பாவிக்கும் முறையை தமிழ்படுத்துவதில் தவறில்லையே.

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை”

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“

சுப்ரமணிய பாரதியார் (இன்று அவர் பிறந்த நாள்).

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Kandiah57 அண்ணைக்கு நன்றி. உங்களுடன் கருத்து பரிமாறும் போது ஏற்பட்ட சந்தேகம் - இலவசம் என்பது வடமொழிதானாம். கோராவில் யாழில் எழுதும் பேராசிரியர்கள் உட்பட பலர் எழுதியுள்ளார்கள்.

https://ta.quora.com/இலவசம்-என்பதற்குத்#:~:text=இலவயம்%2Fஇலவசம் என்றால் பொருளற்ற%2C ஆதாரமற்ற%2C விலையற்ற என்று பொருள்.

 

 

ஆனால் அதே குவோராவில் அது தமிழ் சொல்லே என இன்னும் சிலர் சொல்லுவதும் லொஜிக்கலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, goshan_che said:

@Kandiah57 அண்ணைக்கு நன்றி. உங்களுடன் கருத்து பரிமாறும் போது ஏற்பட்ட சந்தேகம் - இலவசம் என்பது வடமொழிதானாம். கோராவில் யாழில் எழுதும் பேராசிரியர்கள் உட்பட பலர் எழுதியுள்ளார்கள்.

https://ta.quora.com/இலவசம்-என்பதற்குத்#:~:text=இலவயம்%2Fஇலவசம் என்றால் பொருளற்ற%2C ஆதாரமற்ற%2C விலையற்ற என்று பொருள்.

 

 

ஆனால் அதே குவோராவில் அது தமிழ் சொல்லே என இன்னும் சிலர் சொல்லுவதும் லொஜிக்கலாக உள்ளது.

பொருமையுடன். என்னுடன் கருத்துகள் பரிமாறியமைக்கு நன்றிகள் பல 🙏. மேலதிக விளக்கத்திற்கும் நன்றி 

Just now, Kandiah57 said:

பொருமையுடன். என்னுடன் கருத்துகள் பரிமாறியமைக்கு நன்றிகள் பல 🙏. மேலதிக விளக்கத்திற்கும் நன்றி 

பொறுமையுடன் 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.