Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!

KaviDec 12, 2024 08:14AM
Sri Lankan Tamil protest at the Ramanathapuram Collectorate

இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பேசுப்பொருளாகி உள்ளது..

இலங்கை தமிழரான 37 வயது ஜாய், தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, நேற்று (டிசம்பர் 11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர்.

அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன்.

தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர். எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை.

பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன்.

இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் இளைஞர் ஜாயை அழைத்துச் சென்று அறிவுரைகள் கூறி, கியூ பிரிவு போலீஸாரை அணுகுமாறு அனுப்பி வைத்தனர்.

இலங்கை தமிழர் ஜாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/tamil-nadu/sri-lankan-tamil-kneel-and-cry-in-protest-at-the-ramanathapuram-collectorate/

  • கருத்துக்கள உறவுகள்

'எனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குங்கள் அல்லது இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்" - தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மன்றாட்டமாக வேண்டுகோள்

12 DEC, 2024 | 03:18 PM
image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு  இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்  முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது.

இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும்  மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது.

தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/201095

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் சம்பந்தப்பட்ட காணொளி பார்த்தேன். 
அவர் கேட்பதை நிறைவேற்ற வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல்

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்றைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். R
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்நாட்டில்-போராடும்-தமிழ்-இளைஞனுக்காக-குரல்-கொடுத்த-நாமல்/175-348681

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அவர் வேண்டுவது இந்திய குடியுரிமையினை, இலங்கைக்கு போவதனை அல்ல, ஒரு காலத்தில் இலங்கையர்கள் தனிமனித அடிப்படை சுகாதார கட்டுமானம் அற்ற இந்தியர்களை கிண்டலடித்த காலத்தில் இருந்து, தற்போது இந்திய குடியுரிமையினை கோரும் நிலைக்கு வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் உள்ள மலையக தமிழர்களை இன்றளவும் வேற்றுமை காட்டும் இலங்கை தமிழர்கள் இந்தியகுடியுரிமையினை கோரும் முரண்நகை, இதனைத்தான் கர்மா என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

அவர் வேண்டுவது இந்திய குடியுரிமையினை, இலங்கைக்கு போவதனை அல்ல

தவறு

அவர் அது இல்லாவிட்டால் இது என்று தான் கேட்கிறார். எனவே இரண்டுமே சமனாக. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார். 

தினமும் நாலு அறிக்கைகள் விடவேண்டும் என்ற நிலையில் நாமல் இப்பொழுது இருக்கின்றார். கீதநாத்தும் இதே போல ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார். 

இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர்.

ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌.

அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தவறு

அவர் அது இல்லாவிட்டால் இது என்று தான் கேட்கிறார். எனவே இரண்டுமே சமனாக. 

இந்தியாவில் உள்ள பலர் இலங்கைக்கு போக விரும்புவதில்லை, மாறாக இந்திய குடியுரிமை பெற விரும்புகிறார்கள், இந்திய குடியுரிமை இல்லாமல் அகதிகளாக இருப்பது சிரமம், அதனால் இந்தியாவில் அகதிகளாக இருப்பதனை விட இலங்கைக்கு போகலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் முதலாவது தெரிவாக உள்ளது.

2 hours ago, ரசோதரன் said:

இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர்.

ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌.

அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.

மிக நியாயமான  கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, vasee said:

இதனைத்தான் கர்மா என்பார்கள்.

இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃

ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன்.

ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, vasee said:

இந்தியாவில் உள்ள பலர் இலங்கைக்கு போக விரும்புவதில்லை, மாறாக இந்திய குடியுரிமை பெற விரும்புகிறார்கள், இந்திய குடியுரிமை இல்லாமல் அகதிகளாக இருப்பது சிரமம், அதனால் இந்தியாவில் அகதிகளாக இருப்பதனை விட இலங்கைக்கு போகலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் முதலாவது தெரிவாக உள்ளது

இது இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல.

இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன்.

இவர்கள் இந்திய குடியுரிமை கோருவது…அங்கே செட்டில் ஆகி விட்டனர். பிள்ளைகள் பிறந்து அங்கே படிக்கிறனர். சுருக்கமாக இவர்கள் இந்தியர்களாக மாறி விட்டார்கள் என்பதால். பலருக்கு சட்டம் அனுமதிக்காக வீடுகளும் உண்டு (முகாமில் இருப்போருக்கு அல்ல).

இந்த கோரிக்கை மிக நியாயமானது.

ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல.

இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன்.

அது தான் உண்மையும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்தியா சென்ற குடும்பத்தின் வீடியோ பார்த்தேன். நாங்கள் சிலரது பேச்சை கேட்டு முட்டாள் தனமாக இந்தியா வந்துவிட்டோம் எங்களால் இங்கே வாழ முடியாது. போக போகிறேம் என்றாலும் இலங்கைக்கு அனுப்புகிறார்கள் இல்லை எங்களை இலங்கைக்கு கொண்டு போவதற்கு  நீங்கள்  முயற்சி  செய்யுங்கோ என்று கும்பிட்டு அழுதார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.

நீங்கள் சொல்வது மிக சரியானது.
 இந்தியாவை ஒப்பிடுகையில் இலங்கையின் வட கிழக்கு பகுதிகளில் பொருளாதார பிரச்சனைகள் மிக மிக குறைவு.இருப்பதை வைத்து சுகபோகமாக வாழக்கூடிய நிலம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2024 at 06:22, goshan_che said:

இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன்.

இந்தியாவில் சிறிது காலம் இருந்துள்ளேன், அங்கு இலங்கை போல பல நெருக்கடி உள்ளன, அங்குள்ள இந்தியர்கள் அகதிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை, வெளியில் இருப்பவர்களின் நிலை வேறு, ஒரு நாள் வேலை முடித்துவிட்டு கொஞ்சம் தாமதமாக இரவு 7 அல்லது 8 மணியளவில் முகாம் திரும்பியிருந்தேன், போகும் வழியில் ஒரு உணவகத்தில் உனவருந்த சென்ற போது அங்கு நின்ற ஒரு இந்திய தமிழர் அகதிக்கு இந்த நேரம் இங்கு என்ன வேலை என என்னை மறைமுகமாக வம்பிழுத்தார், அவர் குடித்திருந்தார்.

மறுவளமாக எனது உறவினர்கள் அங்கு செல்வ செழிப்புடன் வெளியில் வாழ்கிறார்கள், பல தொழில் நிறுவனங்கள், உணவங்கள் என வாழ்கிறார்கள், நான் சந்தித்த அந்த இரண்டு தரப்பு மக்களும் இந்திய குடியுரிமையினை விரும்புகின்றனர், ஆனால் நான் இந்திய குடியுரிமையினை வழங்கியிருந்தால் ஏற்றிருபேனோ தெரியவில்லை ஆனால் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்(முதலில் இலங்கையிலிருந்து வெளியேறுவதில்லை எனும் நிலைப்பாட்டில் இருந்திருந்தேன்) யோசித்தேன் எனது வாழ்க்கையில் பெரும்பகுதியினை இலங்கையில் வாழ்ந்து வீணாக்கி விட்டேன் என, தற்போது கூட அந்த  எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை, ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை, இலங்கையில் எனது வாழ்க்கை முறை எனக்கு பிடித்திருக்கவில்லை. 

இங்கு தி மு க இனை வெறுக்கும் நிலையில் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் இருக்கும் எமது மக்களுக்கு ம் ஜி ஆர் ஆட்சிக்கு பின்னர் பிடித்த தமிழ் நாட்டு கட்சி தி மு கவும்  முன்னால் முதல்வர் கருணாநிதியும் என்பதனை உங்களால் நம்ப முடியாமல் இருக்கும்.

இது தான் நடைமுறை இடைவெளி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன். 

ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி.

வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா.

இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது.

தனி மனித அபிலாசைகள் வேறுபடும்.

பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள்.

ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.