Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். 

 

 

 

நம்பிக்கையில்லா தீர்மானம் 

அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,  அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன்,  பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர் | Speaker Ashoka Ranvala Resigns

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினரான தலதா அத்துக்கோரள உள்ளிட்டோர்  ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். 

இந்தநிலையில், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர் | Speaker Ashoka Ranvala Resigns

இதேவேளை, எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இன்றையதினம் தெரிவித்திருந்தார்.

மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில், சபாநாயகரின் தற்போதைய பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ரன்வல, தான் பொய்யான கூற்றுக்கள் எதனையும் முன்வைக்கவில்லையென்றாலும், சில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவேடுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

 

“நான் முனைவர் பட்டம் பெற்ற ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன்”  என்றும் அவர் கூறியுள்ளார்.   

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், தான் பதவி விலகுவதாக தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர் - தமிழ்வின்

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்!

பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்!

10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில்  ஏகமனதாக  தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412204

  • Like 1
Posted

நல்ல முன்னுதாரணமான முடிவு.
ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபாநாயகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கலாநிதிப் பட்டதை பயன்படுத்தியிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பிரதாய பூர்வ அமர்வில் இவர் சபாநாயருக்குரிய wவிக்கை தவறாக அணிந்தார் என தொடங்கிய இவர் மீதான தாக்குதல் இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.

இனவாதம் போன்றே வர்கவாதமும் சிங்களவர்களிடம் ஊறிப்போன ஒன்று.

எம்மிடையே சாதி போல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபாநாயகர் இராஜினாமா

13 DEC, 2024 | 07:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து சபாநாயகர் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இருப்பினும் கல்வி தகைமை தொடர்பில் தான் பொய்யான விடயங்களை குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் சுயமாக பதவி விலகியமை இதுவே முதல் தடவையாக கருதப்படுகிறது. அத்துடன் கல்வி தகைமை விவகாரத்தில் குறுகிய காலத்தில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகியமை இதுவே முதல் தடவையாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அசோக்க சபுமல் ரன்வலவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். இதனை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.

சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பிறிதொருவரின் பெயர் முன்மொழியப்படாத நிலையில் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக்க சபுமல் ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தன்று சபாநாயகர் உத்தியோகபூர்வ தலைகவசத்தை தவறான முறையில் அணிந்திருந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்ட அதே வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் ' சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்' என்று பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த பதிவு சமூக கட்டமைப்பில் பிரதான பேசுப்பொருளாக காணப்பட்ட நிலையில் பொது நிகழ்வில் கலந்துக் கொண்ட சபாநாயகர் அசோக்க ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது 'தன்னிடம் இரண்டு பட்டங்கள் இருப்பதாகவும், கலாந்தி பட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விக்கு தற்போது பதிலளிப்பது அவசியமற்றது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது கல்வி தகைமை குறித்து சபாநாயகர் பதிலளிப்பார் என்று குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடயம் குறித்து சபாநாயகர் சபைக்கு விசேட அறிவிப்பை விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் வஷிடோ பல்கலைக்கழகம் மாறுப்பட்ட கருத்தினை குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தின. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகர் கல்வி தகைமை விவகாரத்தில் மோசடி செய்வாராயின் எவ்வாறு பாராளுமன்றத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் அசோக்க ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது.

சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், தமது அரசாங்கத்தில் எவர் தவறு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்த நிலையில், சபாநாயகர் அசோக்க ரன்வல விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனது கல்வி தகைமை குறித்து சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கல்வி தகைமை குறித்து எவ்விதமான பொய்யான தகவல்களையும் நான் வழங்கவில்லை.

கல்வி தகைமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒருசில ஆவணங்கள் தற்சமயம் என்னிடம் இல்லை. அந்த ஆவணங்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.

எனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வஷிடா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஆராய்ச்சி நிறுவனம் கலாநிதி பட்டத்துக்குரிய ஆவணங்களை வெகுவிரைவில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன்.

எவ்வாறாயினும் தோற்றம் பெற்றுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கத்தையும், எம்மீது நம்பிக்கை கொண்ட மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்கிறேன்.

https://www.virakesari.lk/article/201201

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, RishiK said:

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், தான் பதவி விலகுவதாக தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

 

👍................

நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............

நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 6 people, dais and text

சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார். 

அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது. 

அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.  

51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள். 
BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது. 

அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.  
ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார். 

அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது. 

அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council.

அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.
    
பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது. 
Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC).

கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது.

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470191228_600213069345865_8602938599932203310_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=qruU1-Qt2eEQ7kNvgHKRNH_&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-2.xx&_nc_gid=A7CHOGTEi8eBgTBHB_MKMvY&oh=00_AYDgLFt-r6dHXXY-uY8kf6isw4qryRRiPQRZGFeXn2QHbw&oe=67622BCE May be an image of 1 person and beard

சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.
இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது.

ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து 
எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை. 
பதவி விலகவும் இல்லை.

அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் 
நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

தோழர் பாலன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது…..

ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

December 14, 2024  01:52 pm

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார்.

தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197284

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும்  என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும்.

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து ரன்வல விலகியது பாராட்டுக்குரியது என சமல் ராஜபக்ச கூறினார்.

இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/313726

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா?  மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2024 at 06:21, goshan_che said:

நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது…..

ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣

மூஞ்சூறு ஒன்று, வலியப்போய் பொறியில் தலையை கொடுத்திருக்கு. அதாவது நாமலின் கல்வித்தகமை குறித்து குற்றபுலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. 'வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.' இனி தங்கள் தங்கள் கல்வித்தகமையை நிரூபிக்க வேண்டிய நேரமிது. நிரூபிப்பார்களா? கள்ள சான்றிதழ் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம். அந்த நேரம் இதை தெரிவித்த மாணவன் பலதாக்குதல்களுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." நான் நினைக்கிறன் மஹிந்தவின் ஒரு மகன் யோசித்தவோ தெரியவில்லை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடற்படை கப்ரனாகவோ என்னவோ பெரிய பதவி வகித்தவர்.    



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூஞ்சூறு ஒன்று, வலியப்போய் பொறியில் தலையை கொடுத்திருக்கு. அதாவது நாமலின் கல்வித்தகமை குறித்து குற்றபுலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. 'வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.' இனி தங்கள் தங்கள் கல்வித்தகமையை நிரூபிக்க வேண்டிய நேரமிது. நிரூபிப்பார்களா? கள்ள சான்றிதழ் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம். அந்த நேரம் இதை தெரிவித்த மாணவன் பலதாக்குதல்களுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." நான் நினைக்கிறன் மஹிந்தவின் ஒரு மகன் யோசித்தவோ தெரியவில்லை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடற்படை கப்ரனாகவோ என்னவோ பெரிய பதவி வகித்தவர்.    
    • அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
    • அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா?  மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்! 
    • இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. adminDecember 15, 2024 இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை குபேரமஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சூரிய நிறுவகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார். அத்துடன் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஒலிவர் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிய பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டச் செயராக பணியாற்றிய காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர் கரு ஜயசூரிய. அவர் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிய ஒருவர் கரு ஜயசூரியவைப்போன்று  நினைவுகூரப்படும் மற்றொருவராக மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார் என்  யாழ். மாவட்டச் செயலராக பணியாற்றியபோது நிதி அமைச்சராக இருந்த அவர் பல்வேறு வகைகளிலும் உதவினார். இன ஐக்கியத்துக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும் அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் பாராட்டுக்கள். சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும். கூடுதலான மொழியறிவு எங்களை மேம்படுத்த உதவும். இதன் ஊடகாக ஆய்வுக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை வளர்க்க அது உதவும் என மேலும் தெரிவித்தார்.  இந்த நிகழ்வில் மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் சிங்கள மொழியிலும் நடத்தப்பட்டன.   https://globaltamilnews.net/2024/209309/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.