Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.

புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது.

ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா?

நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு.

சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம்

புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்! 

ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது.

சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே.

ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.

23 minutes ago, புலவர் said:

சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, goshan_che said:

ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.

இல்லை என்பதை எப்படி ஆணித்தரமாக கூறுகின்றீர்கள்?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது.
செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள்.
செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣

சீமான்  கருணாநிதியின் சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் மரணச்சடங்கிற்கு சென்றாலும் நான் கவலைப்பட மாட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிவசிதம்பரம் மட்டுமல்ல மாமனிதர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட ரவிராஜ் அவர்களும் அதேபோன்றவரே.  யாழ் மேயர் பொன் சிவபாலன் புலிகளால் குண்டுவைத்து  படுகொலை செய்யப்பட்ட போது  உதவி மேயராக இருந்தவர்.  கொல்லப்பட்ட சிவபாலனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.  அன்றைய குண்டு வெடிப்பு நாளன்று  வேறு வேலைகளால் அங்கு செல்லாததால் அதிஷர்வசமாக தப்பியவர். அன்று அந்த கூட்டதில் பங்கு பற்றியிருந்தால் அவர் துரோகி. பங்கு பற்றாததால் மாமனிதர்.   அதன் பின்னர் அடுத்த யாழ் மேயர் சறோஜனி யோகேஸ்வரன் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பூதவுடலை தூக்கி சென்றவரும் இதே  மாமனிதர் ரவிராஜ் தான்.  கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே அமைப்பினால்   அரசியல் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தமிழீழ விடுதலைப்போராட்டதில் தான் நடந்தது.  

இதை இங்கு கூறுவதற்கு காரணம் துரோகிகும் மாமனிதருக்கும் நூலிழை வேறுபாடுதான் உள்ளது என்ற செய்தியை கூறிய  ஒரு சிறு உதாரணம் தான் திரு ரவிராஜ் அவர்கள். இப்படி எத்தனை ரவிராஜ்கள் அதிர்ஷரமின்மையால் துரோகிகளாகி இவ்வுலகை விட்டு சென்றனர். 

இவை இத் திரியோடு சம்பந்தம் அற்ற பழைய விடயங்கள் என்றாலும் இன்றும் பொய் வரலாறுகளை இன்றும் எழுதி உண்மைகளை மறைப்பவர்களுக்ககவே  இந்த உண்மைகளை பதிவு செய்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்! 

ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது.

சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே.

ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.

புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இல்லை என்பதை எப்படி ஆணித்தரமாக கூறுகின்றீர்கள்?
 
இளங்கோவன் யார்?

காங்கிரஸ்காரர்.

புலிகளின் பரம எதிரி.

சோனியா பக்தர்.

தெலுங்கு வம்சாவழியினர்.

இவரும் சீமானும் எந்த இனத்தின் அல்லது எந்த கொள்கையின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட முடியும்? வேண்டு?

அதுவும் உயிரோடு இருக்கும் போது போய் சந்தித்தால் கூட பரவாயில்லை. செத்த பின் இளக்கோவன் பிணத்தோடு என்ன அரசியலை செய்யப்போகிறார் சீமான்?

3 hours ago, புலவர் said:

ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.

இப்படி எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா?

தமிழ் நாட்டில் இளங்கோவனை மிஞ்சிய ஒரு காந்தி-நேரு குடும்ப அடிமையை காட்ட முடியாது.

பாலச்சந்திரன் பற்றி இளங்கோவன் கூறிய மோசமான கருத்துக்கு காரணமே புலிகள் ரஜீவை கொண்டதுதான்.

அந்தளவு புலிகள் எதிர்பாளர் அவர்.

அவரின் செத்த வீட்டுக்கு போபவரைத்தான் நீங்கள் காங்கிரசை எதிர்க்கும் போர்வாள் என்கிறீர்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள்.

இதைதான் நானும் மேலே சொன்னேன் - நீங்கள் சரத்பொன்சேக்கா உதாரணம் காட்டிய போது.

ஆனால் அப்போது அப்படி செய்ய புலிகளுக்கு சில தந்திரோபாய தேவைகள் இருந்தன.

காங்கிரஸ்காரர் அதுவும் சீமானின் பிறப்பையே கேவலமாக பேசியவர், ஒரு குழந்தையின் கொலையை கொண்டாடியவர் - இவர் செத்த வீட்டுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தி அப்படி என்ன உலக மகா தந்திரோபாயத்தை சீமான் அடையப்போறார் என சொன்னால் நாமும் அறியலாம்.

3 hours ago, குமாரசாமி said:

சீமான்  கருணாநிதியின் சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் மரணச்சடங்கிற்கு சென்றாலும் நான் கவலைப்பட மாட்டேன். 😂

உங்களில் பலரது நிலமை இவ்வளவு கவலைகிடம் என்பது தெரிந்ததுதான்.

நாளைக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் சீமான் இணைந்தாலும் கவலைபட மாட்டேன் என்பீர்கள்.

தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

நாளைக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் சீமான் இணைந்தாலும் கவலைபட மாட்டேன் என்பீர்கள்.

சீமான் ஒரு சில தினங்களுக்கு முன் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என ஆணித்தரமாக கூறியிருந்தார். அது எமது பிரச்சனை அல்ல. அது அவரது இந்திய அரசியல் சம்பந்தப்பட்டது.👈

இருப்பினும் ஈழத்தமிழினம் இனியும் ஒரு குறுகிய வட்டத்துக்குளேயே சுழன்று கொண்டிருந்தால் இன்றைய பலஸ்தீன இனத்தின் நிலையே எம்மினத்திற்கும் வரும்.

ஏனெனில் நாம் இன்னும் சர்வதேச அரசியலில் நிகாரிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோம்.நல்லதோ கெட்டதோ கண்ணை மூடிக்கொண்டு அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை தயார் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இதை யூட் அண்ணா @கற்பகதரு பத்து வருடத்துக்கு முன் எழுதிவிட்டார்.

அப்போ அவரோடு முரண்டு பிடித்த நீங்கள் இப்போ அதே வழிக்கு வந்துள்ளீர்கள்.

காலம் தாழ்தியாவது சரியான பஸ்சில் ஏறியுள்ளீர்கள்.

உங்கள் நிலைப்பாடு சரியானதுதான்.

ஆனால் வழித்தால் மொட்டை வைத்தாம் குடுமி என்பது போல் கண்ணை மூடி கொண்டு கயவர்களை நம்பினால் (சீமான், அனுர) மேலும் தீமையே விளையும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, goshan_che said:

ஆனால் வழித்தால் மொட்டை வைத்தாம் குடுமி என்பது போல் கண்ணை மூடி கொண்டு கயவர்களை நம்பினால் (சீமான், அனுர) மேலும் தீமையே விளையும். 

சீமானை நம்புகிறேனா!!!!!! எந்த விசயத்திலையாம் 😂

vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீமானை நம்புகிறேனா!!!!!! எந்த விசயத்திலையாம் 😂

vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

@goshan_che… இண்டைக்கு “ஓவர் ரைம்” வேலை செய்ய வேண்டி வரப் போகுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che… இண்டைக்கு “ஓவர் ரைம்” வேலை செய்ய வேண்டி வரப் போகுது. 😂

“சில நேரம் தொழில் செய்யும் இடத்தில்   கூட்டமாக வந்து நிண்டு, யோவ் வாய்யா வெளியே எண்டு சவுண்டு விடுவார்கள், அப்படியான சந்தர்பங்களில் எதுவும் செய்யாது மிக்சர் சாப்பிட வேண்டும்”

-கோஷானின் நேற்று வெளியிடப்பட்ட தொழில் ரகசிய குறிப்பில் இருந்து -

🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

“சில நேரம் தொழில் செய்யும் இடத்தில்   கூட்டமாக வந்து நிண்டு, யோவ் வாய்யா வெளியே எண்டு சவுண்டு விடுவார்கள், அப்படியான சந்தர்பங்களில் எதுவும் செய்யாது மிக்சர் சாப்பிட வேண்டும்”

-கோஷானின் நேற்று வெளியிடப்பட்ட தொழில் ரகசிய குறிப்பில் இருந்து -

🤣

இப்படியான நேரங்களில்…  ஒரு தொழில் ரகசிய கையேடு, பக்கத்தில்  வைத்திருப்பதால்…. தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க சிறந்த அருமருந்து. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை யூட் அண்ணா @கற்பகதரு பத்து வருடத்துக்கு முன் எழுதிவிட்டார்.

நான் இங்கே வந்த போதும் அந்த அண்ணா சிந்திக்கதக்க கருத்துக்களை எழுதி கொண்டிருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.