Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

படிச்சானோ என்னவோ தெரியல! ஆனால் வேலையில சீரியஸ் ஆனவன். அண்மையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அவன் வளர்க்கும் மாடு கட்டி நின்ற இடங்கள் எல்லாம் வெள்ளம். ஒரு மாடு வழுக்கி நிலத்தில் விழுந்து விட்டது. பெரியம்மா மகனுக்கு போனடிச்சா றிங் போகுது எடுக்கவில்லை. எனக்கு போனடிச்சா மாடு விழுந்து போச்சு என்று, உடன முதியோர் சங்கத்தில இருந்த அப்பாவையும் அழைத்து பக்கத்தில இருக்கும் இளைஞர்கள் நால்வரும் சென்று மாட்டை எழுப்பி பாதுகாப்பான இடத்தில் நிப்பாட்டி புகைபோட்டு வெப்பப்படுத்தி இளஞ்சூட்டுதண்ணீர் குடிக்கவைத்து பசுமாடு காப்பாற்றப்பட்டது. அந்த நேரம் தம்பி காரைநகரில் மழைவெள்ளம் தனது உதவியாளர்களுடன் வெட்டி விட்டுக்கொண்டிருந்திருக்கிறான்.

சிறப்பு

  • Replies 77
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற்   வீதியை" போட்ட...  எஞ்சினியரையும், ஓவசியரையும்  ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோ

  • குமாரசாமி
    குமாரசாமி

    காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது. குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Kapithan said:

குழைக்காட்டார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

குழைக்காட்டர் என்றால் படிக்காதவர்கள் என்ற அர்த்தமும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடபகுதியில் பெரும்பாலான மண் புழுதிமண். அங்கே உள்ள பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரணமாக மூன்றடுக்கில் விதம் விதமான கல் அடுக்கியே ஒரு வீதியை அமைப்பார்கள்.

பெரிய பாறாங்கல் பரப்பி அதன் மேல் அமைத்த வீதிகளே வெள்ளங்களுக்கு காணாமல் போய் விடுகின்றது.
இந்த நிலையில் அங்கிருக்கும் ரோட்டு ஓவசியர்களுக்கு  புலம்பெயர்ந்த தமிழர் பாடம் எடுக்க முடியாது.😂
 
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

பொலித்தீனுக்கும் காவோலைக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், உலகில் எங்கேயிருந்தும் ஆலோசனை கொடுக்கலாம். ஓவசியர் மார் எந்திரிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

Pavement design codes, bridge design codes, building codes................. இப்படியானவை பலதரப்பட்ட நிலைமைகளுக்கும், காலநிலைகளுக்கும், தரைத் தோற்றங்களுக்கும் சேர்த்தே வரையைப்பட்டவை. 

சிராபுஞ்சியில் வீதி போடுவது என்றாலும், ராஜஸ்தான் பாலைவனத்தில் வீதி போடுவது என்றாலும், இவற்றில் அதற்கான விதிமுறைகளும், அளவுகளும் இருக்கின்றன.

இந்த இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணமும், இலங்கையில் பெரும்பகுதியும் 'பச்சை தண்ணீர்' இடங்கள்......... சிக்கலற்ற இடங்கள்................

  • கருத்துக்கள உறவுகள்

சரி, றோட்டைத் திருத்த எந்திரி வரைந்த வரைபடத்தைப் பார்த்தால் எல்லா கேள்விக்களுக்கும் விடை கிடைக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

பொலித்தீனுக்கும் காவோலைக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், உலகில் எங்கேயிருந்தும் ஆலோசனை கொடுக்கலாம். ஓவசியர் மார் எந்திரிகள் அல்ல.

பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். 

நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். 
அரசியலில்  புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். 

நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். 
அரசியலில்  புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪

அரசியலும் எந்திரவியல் எனப்படும் விஞ்ஞானமும் ஒன்றல்ல. அரசியல் என்பது மக்கள் சக்தி/மக்கள் எண்ணம். விஞ்ஞானம்/பௌதீகவியல் ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும், இலங்கையிலும் ஒன்று தான்.

வீதி அமைப்பில், பொலித்தீன் செய்யும் அதே தொழிலை காவோலை செய்யுமா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. இதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதை விடுத்து "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடுகிறேன்" என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். # ரைம் பாஸ்/நேர சங்ஹாரம்😂!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Justin said:

வீதி அமைப்பில், பொலித்தீன் செய்யும் அதே தொழிலை காவோலை செய்யுமா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. இதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதை விடுத்து "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடுகிறேன்" என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். # ரைம் பாஸ்/நேர சங்ஹாரம்😂!

உங்களை நான் ஏதாவது கேட்டேனா?

நான் உங்களை யாழ்கள கருத்தாளர் என்பதால் நன்கு மதிக்கின்றேன். மரியாதையும் இருக்கின்றது.
கீரைக்கடை விடயங்கள் எல்லா திரிகளுக்கும் ஒவ்வாது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

யாழ்களத்தில் நான் உங்களுடன் அதிகம் விவாதித்தால் என்னை தடை செய்துவிடுவார்களோ என்றொரு அச்சமும் எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகின்றது.எனவே நான் எழுதுவது பிழையென்றால் பெட்டீசம் போடுங்கள். என் கருத்திற்கு பதில் எழுதாதீர்கள். அல்லது ஒரு சிவப்பு புள்ளியிடுங்கள்.உங்களுக்கும் ஆத்ம திருப்தியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இந்த திரியில் என்ன எழுதினீர்கள் என்பதையே உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டியிருக்கிறதா😂?

இது நீங்கள் எழுதியது:

19 hours ago, குமாரசாமி said:

வடபகுதியில் பெரும்பாலான மண் புழுதிமண். அங்கே உள்ள பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரணமாக மூன்றடுக்கில் விதம் விதமான கல் அடுக்கியே ஒரு வீதியை அமைப்பார்கள்.

பெரிய பாறாங்கல் பரப்பி அதன் மேல் அமைத்த வீதிகளே வெள்ளங்களுக்கு காணாமல் போய் விடுகின்றது.
இந்த நிலையில் அங்கிருக்கும் ரோட்டு ஓவசியர்களுக்கு  புலம்பெயர்ந்த தமிழர் பாடம் எடுக்க முடியாது.😂
 
ஆலோசனை நானும் கொடுத்திருப்பதால் நானும் பதில் தரக் கடமை இருக்கிறது.

பதிலுக்கு -அடிப்படை விடயத்தில் ஒரு கருத்தும் இல்லாமல்- நீங்கள் எழுதிய பதில் இது:

1 hour ago, குமாரசாமி said:

பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். 

நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். 
அரசியலில்  புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪

இதையெல்லாம் எழுதும் போது "பதில் தராதீர்கள்" என்ற fine print போட்டு எழுதினீர்களா?

26 minutes ago, குமாரசாமி said:

உங்களை நான் ஏதாவது கேட்டேனா?

நான் உங்களை யாழ்கள கருத்தாளர் என்பதால் நன்கு மதிக்கின்றேன். மரியாதையும் இருக்கின்றது.
கீரைக்கடை விடயங்கள் எல்லா திரிகளுக்கும் ஒவ்வாது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

யாழ்களத்தில் நான் உங்களுடன் அதிகம் விவாதித்தால் என்னை தடை செய்துவிடுவார்களோ என்றொரு அச்சமும் எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகின்றது.எனவே நான் எழுதுவது பிழையென்றால் பெட்டீசம் போடுங்கள். என் கருத்திற்கு பதில் எழுதாதீர்கள். அல்லது ஒரு சிவப்பு புள்ளியிடுங்கள்.உங்களுக்கும் ஆத்ம திருப்தியாகும்.

உங்கள் அச்சத்தை நீங்கள் நிர்வாகத்திடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எழுதுவதற்கு கருத்து எதுவுமில்லாதவர்கள் சிவப்புப் புள்ளியைப் போட்டு சுயமாக இன்பங் (ஆத்ம திருப்தி😎) காண்பர். இது வரை நான் பயன் படுத்தியதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Justin said:

இந்த திரியில் என்ன எழுதினீர்கள் என்பதையே உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டியிருக்கிறதா😂?

இது நீங்கள் எழுதியது:

ஆலோசனை நானும் கொடுத்திருப்பதால் நானும் பதில் தரக் கடமை இருக்கிறது.

பதிலுக்கு -அடிப்படை விடயத்தில் ஒரு கருத்தும் இல்லாமல்- நீங்கள் எழுதிய பதில் இது:

இதையெல்லாம் எழுதும் போது "பதில் தராதீர்கள்" என்ற fine print போட்டு எழுதினீர்களா?

உங்கள் அச்சத்தை நீங்கள் நிர்வாகத்திடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எழுதுவதற்கு கருத்து எதுவுமில்லாதவர்கள் சிவப்புப் புள்ளியைப் போட்டு சுயமாக இன்பங் (ஆத்ம திருப்தி😎) காண்பர். இது வரை நான் பயன் படுத்தியதில்லை!

எழுதுங்கள் உங்களுக்கு பொழுது போகவேணும் எல்லோ.
அதுக்காக நேரம் பொன்னானது மண்ணானது எண்ட பில்டப் இனியும் வேணாம்.

நேரம் பொன்னானது என்பவர்கள் ஏன் அரட்டை கருத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்?
விலகி போக வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எழுதுங்கள் உங்களுக்கு பொழுது போகவேணும் எல்லோ.
அதுக்காக நேரம் பொன்னானது மண்ணானது எண்ட பில்டப் இனியும் வேணாம்.

நேரம் பொன்னானது என்பவர்கள் ஏன் அரட்டை கருத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்?
விலகி போக வேண்டியது தானே?

அரட்டைக் கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் போது சரியான தகவல்கள் வாசகர்களுக்கு கிடைக்க உதவுமானால் எழுத வேண்டும். இது அப்படியான ஒரு சந்தர்ப்பம். பொலித்தீன் காவோலை வேறு பாடு பற்றி யோசிக்காமல் @வாதவூரான் இதை தன் வேலைத் தளத்திலும் அறிமுகம் செய்ய முயன்றார் அல்லவா? அவர் வேலைக்கு ஆப்பு வராமல் நீங்களும் நானும் உதவியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்😂.

பி.கு: விஞ்ஞானம் பற்றிய குறைவான புரிதல் அல்லது விஞ்ஞான எதிர்ப்பு இருக்கும் எல்லா "அரட்டை" திரிகளிலும் நான் பதில் வைப்பேன், எனவே மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள்😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Justin said:

உங்களைப்போன்ற ஜேசுநாதர்களின் கருத்துக்களை படித்து யாழ்களம் நுழைந்தவன் அல்ல நான்.
அன்றைய கூட்டமும் சிநேகிதம்களும் புரிந்துணர்வுகளும் கருத்து பரிமாற்றங்களும் வேறு. அது ஒரு இனிய காலம்.

அன்றையவர்கள் வக்கிரத்துடன் யாழ்களம் வருவதுமில்லை.வக்கிரமாக பழகியதும் இல்லை.
ஆனால் யாழ்களத்தில் வக்கிரத்தின் முன்னோடியானவர் தாங்கள், இது எனது கண்ணோட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஒத்துக் கொள்கிறேன்! போலி மருத்துவம், போலி விஞ்ஞானம், போலிச் செய்திகளை  மறுத்து எழுதுவது மிகவும் வக்கிரமான செயல்! அதே நேரம் சக உறவின் குடும்பத்தினுள் நிகழ்ந்த சொந்த சோக சம்பவங்களை பொது வெளியில் இழுத்து மனமுடைந்து விலக வைப்பது "உயர்ந்த மனிதர்களுக்கே உரிய பண்பு" இந்த "உயரத்தை" நான் தொட இயலாமல் தவிக்கிறேன் ஐயா😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Justin said:

போலி மருத்துவம், போலி விஞ்ஞானம், போலிச் செய்திகளை  மறுத்து எழுதுவது மிகவும் வக்கிரமான செயல்!

இதை நான் மனதளவில் குறிப்பிட்டு எழுதவில்லை. உங்கள் மருத்துவ குறிப்புகள் அவசியமானது. அதை தாங்கள் எழுதும் போது இன்னொருவரை தாக்கியே எழுதுகின்றீர்கள்.அந்த தாக்குதல் அவசியமில்லை என்கிறேன்.

5 minutes ago, Justin said:

 நேரம் சக உறவின் குடும்பத்தினுள் நிகழ்ந்த சொந்த சோக சம்பவங்களை பொது வெளியில் இழுத்து மனமுடைந்து விலக வைப்பது "உயர்ந்த மனிதர்களுக்கே உரிய பண்பு" இந்த "உயரத்தை" நான் தொட இயலாமல் தவிக்கிறேன் ஐயா😎!

இது எனக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இது எனக்கு விளங்கவில்லை.

ஓம், விளங்காது தான்! நம்புகிறேன்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Justin said:

ஓம், விளங்காது தான்! நம்புகிறேன்😂

சத்தியமாக எனக்கு புரியவில்லை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.நான் தெரிந்து தெரியாமலும் தவறு செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

சத்தியமாக எனக்கு புரியவில்லை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.நான் தெரிந்து தெரியாமலும் தவறு செய்திருக்கலாம்.

மீசாலை-அல்லாரை றோட்டைத் தாண்டி A9 இல்  நீங்கள் இருவரும் பயணிக்கப் பார்க்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, RishiK said:

மீசாலை-அல்லாரை றோட்டைத் தாண்டி A9 இல்  நீங்கள் இருவரும் பயணிக்கப் பார்க்கிறீர்கள். 

சரி, யூ ரர்ன் எடுத்து நான் அல்லாரைக்கே வருகிறேன்😂.

நீங்கள் அவதாரில் "பை" போட்டிருக்கிறீர்கள். எந்திரி அல்லது பௌதீகவியலாளர் என ஊகிக்கிறேன்? பொலித்தீனின் வேலையை கவோலை செய்யாது என்று நான் சொன்னது சரி தானே சேர்? இதில் "வக்கிரம்" எங்கே இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

சரி, யூ ரர்ன் எடுத்து நான் அல்லாரைக்கே வருகிறேன்😂.

நீங்கள் அவதாரில் "பை" போட்டிருக்கிறீர்கள். எந்திரி அல்லது பௌதீகவியலாளர் என ஊகிக்கிறேன்? பொலித்தீனின் வேலையை கவோலை செய்யாது என்று நான் சொன்னது சரி தானே சேர்? இதில் "வக்கிரம்" எங்கே இருக்கிறது?

நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் இல்லை ஆனால் அவர்களை உருவாக்குவதில் எனது சிறிய பங்கு உள்ளது.

அல்லாரை றோட்டைப் பற்றி எனது எந்திரி நண்பர்களுடன் பேசி வருகிறேன், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு தியரி வைத்திருக்கிறார்கள், எதுவும் திருப்தியாக இல்லை. இலங்கை வீதியமைப்பு திணைக்கள உயரதிகாரி ஒருவருக்கு மெயில் அனுப்பி விட்டு பதிலுக்காக்க் காத்திருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, RishiK said:

 இலங்கை வீதியமைப்பு திணைக்கள உயரதிகாரி ஒருவருக்கு மெயில் அனுப்பி விட்டு பதிலுக்காக்க் காத்திருக்கின்றேன். 

அவர் லஞ்ச் பிரேக்கால் வர மூன்று மாதம் ஆகுமே🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, RishiK said:

நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் இல்லை ஆனால் அவர்களை உருவாக்குவதில் எனது சிறிய பங்கு உள்ளது.

அல்லாரை றோட்டைப் பற்றி எனது எந்திரி நண்பர்களுடன் பேசி வருகிறேன், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு தியரி வைத்திருக்கிறார்கள், எதுவும் திருப்தியாக இல்லை. இலங்கை வீதியமைப்பு திணைக்கள உயரதிகாரி ஒருவருக்கு மெயில் அனுப்பி விட்டு பதிலுக்காக்க் காத்திருக்கின்றேன். 

கணக்கு வாத்தியார்👍.

சரி. ஆனால் குறிப்பிட்டது போல தண்ணீரைத் தடுக்கத் தான் பொலித்தீன் பாவனை என்றால் காவோலை பொலித்தீனுக்குக் கிட்டவும் வராது. இதை "innovation and sustainability" என்று விபரித்த வாதவூரானின் கருத்து ஆச்சரியம் தருகிறது. 4 பனையை வெட்டி காவோலை போட்டு வீதி போடுகிறார்கள் என வைப்போம். வீதி  1 வருடத்தில் மீள உடையும். திரும்பவும் 4 பனையை வெட்ட வேண்டி வருமே? இது antithesis of sustainability ஆக அல்லவா தெரிகிறது😂?

  • கருத்துக்கள உறவுகள்

நாலாவது வருடத்தில் நடந்த ஒரு விடயம். மூன்றாவது வருட பரீட்சைத் தாள்களை அந்த வாரம் தான் அந்தப் பேராசிரியர் திருத்திக் கொண்டிருந்தார் போல................... 'this is going from bad to worse..................' என்று ஆரம்பித்து மனிதன் அன்று முழு வகுப்பையுமே காறித் துப்பினார்............... பொதுவாக அவர் படிப்பிப்பது எதுவுமே எவருக்கும் விளங்காது, ஆனால் அன்றைய அவரின் பேச்சு நல்லாவே விளங்கியது............... 

அவருக்கு இப்ப ஒரு மெயிலைப் போட்டு, 'சார், கல்லுக்கு கீழ காவோலை போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..............' என்று ஒருக்கால் கேட்டால், மனிதன் இதயத்தை பிடித்துக் கொண்டு விழுகுதோ தெரியவில்லை...............

படிப்பில் இது அவரின் ஏரியா வேற.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

மீசாலை-அல்லாரை றோட்டைத் தாண்டி A9 இல்  நீங்கள் இருவரும் பயணிக்கப் பார்க்கிறீர்கள். 

எந்த பக்கம்  யாழ்ப்பாணம் அல்லது கண்டி பக்கமா  ??   அல்லது ஒருவர் யாழ்ப்பாணம் மற்றவர்.  கண்டி    🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நாலாவது வருடத்தில் நடந்த ஒரு விடயம். மூன்றாவது வருட பரீட்சைத் தாள்களை அந்த வாரம் தான் அந்தப் பேராசிரியர் திருத்திக் கொண்டிருந்தார் போல................... 'this is going from bad to worse..................' என்று ஆரம்பித்து மனிதன் அன்று முழு வகுப்பையுமே காறித் துப்பினார்............... பொதுவாக அவர் படிப்பிப்பது எதுவுமே எவருக்கும் விளங்காது, ஆனால் அன்றைய அவரின் பேச்சு நல்லாவே விளங்கியது............... 

அவருக்கு இப்ப ஒரு மெயிலைப் போட்டு, 'சார், கல்லுக்கு கீழ காவோலை போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..............' என்று ஒருக்கால் கேட்டால், மனிதன் இதயத்தை பிடித்துக் கொண்டு விழுகுதோ தெரியவில்லை...............

படிப்பில் இது அவரின் ஏரியா வேற.............🤣.

ஒரு போனை போட்டு…சார் நீங்க சும்மா தாஸா இல்ல லார்ட் லபக்கதாஸா எண்டு கேளுங்கோ🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.