Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, goshan_che said:

காரணங்கள் பல

1. சுமந்திரனின் வாய்.

இனப்படுகொலை வரைவிலக்கணம் முதல், புலிகள் மீது அவர் பொதுவெளியில் முன் வைத்த பல விமர்சனங்கள். 

இதுதான் புலம்பெயர் தேசத்தில் பலர் சுமனை மூர்க்கமாக எதிர்க்க காரணம். 

இன்று வரை கோஷானை சிலருக்கு யாழ் களத்தில் கண்ணில் காட்ட ஏலாது.

காரணம் புலிகளை விமர்சிப்பது.

ஆனால் கோஷான் கருத்தாளர். சுமந்திரன் மக்கள் பிரதிநிதி.

கோஷானை போல் சுமந்திரன் வாயை விட முடியாது, கூடாது.

2. சுமனின் ஈகோ, நடக்கும் பாங்கு - நீங்களே எழுதியதுதான். கூடவே மாறி மாறி ஆட்களை கவிழ்ப்பது. கட்சிக்குளே சில்லறை பொலிடிக்ஸ் செய்வது.

3. சுமன் ரணில் உள்ளே அனுப்பிய ஐந்தாம் படை என்ற சந்தேகம்.  மேலே சொன்ன சில்லறை பொலிடிக்ஸ் மூலம், தமிழர் ஒற்றுமையை ரணிலின் ஏஜெண்ட்டாக இவர் குலைக்கிறார் என்ற சந்தேகம்.

4. மதம் - மிக சிலருக்கு இது ஒரு பிரச்சனை. கேட்டால் இல்லை என்பார்கள். ஆனால் இதே ஆட்கள் சாணாக்கியனையும் கட்டம் கட்டுவார்கள். சிலவேளை அவர்களே அறியா unconscious bias ஆக இருக்கலாம் 

5. எம்மை போல் அல்லாதவர் - கோட் சூட், நல்ல ஆங்கிலம், கொழும்பு வளர்ப்பு, மீசை இல்லை - இதை ஒரு typical முதல் தலைமுறை புலம்பெயர் தமிழ் மனிதனோடு ஒப்பிட்டால் - பலத்த வித்தியாசம் இருக்கும். இந்த வேற்றுமை சந்தேகத்தை கொடுக்கிறது.

6. ஶ்ரீயின் அடிப்பொடிகள் - அவர் மீதான அட்டென்சனை திசை திருப்ப சுமனை அடிப்பது.

7.மேலே சொன்ன பலதில் ஶ்ரீ அமசடக்கியாக இருப்பதால், சுமன் அளவு மோசமானவராக இருப்பினும் அவர் வாங்குல் அடி குறைவு.

ஆம். இவை தான் காரணங்கள்.

ஆனால், இந்தக் காரணங்களிலும் சிலவற்றுடன் ஒத்துவர முடியவில்லை. புலிகளை சுமந்திரன் விமர்சித்தார் என்பது சரியான தகவலா தெரியவில்லை. நீங்கள் "ஆயுதப் போராட்டத்தால் தீர்வு வராது" என்று நம்பிய, நம்பும் ஒருவர். இதை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வது போல சுமந்திரனும் வெளிப்படையாகச் சொன்னார். அப்படிச் சுமந்திரன் சொல்வது பிரச்சினை என்பதன் அர்த்தம், "வாக்கு வாங்குவதற்காக அக்ரிங் கொடுக்க வேண்டும்" என்று சொல்வது போல படுகிறது. ஏற்கனவே செவாலியர் விருது வாங்கும் அளவிற்கு "நடிகமணிகளாக" இருக்கும் நபர்களால் தமிழ் தேசிய அரசியலும் (யாழ் களமும்😎) நிரம்பியிருக்கிறது. இன்னொரு நடிகன் தேவையா எமக்கு?

ஒரு காரணம் தான் முக்கியமானது: ஏனைய "நடிகமணி" தமிழ் அரசியல்வாதிகள் போல பிரபாகரனையும், புலிகளையும் தூக்கித் தலையில் வைக்கவில்லை என்பதே அது. இதே  தான் சம்பந்தரை வெறுக்கவும் காரணம்.

வடக்கு கிழக்கில் ஆமி ஊருக்குள் வரமுதலே, "என்னை ஆமி தேடுது" என்று வெளியேறி வந்து வெளிநாட்டில் தஞ்சம் பெற்ற ஆட்கள்  ஊரில் தங்கி விட்ட அரசியல் வாதிகளை  கரிச்சுக் கொட்டும் போது பெரும் கொமெடி பார்ப்பது போலத் தான் இருக்கும்😂.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Justin said:

புலிகளை சுமந்திரன் விமர்சித்தார் என்பது சரியான தகவலா தெரியவில்லை.

இது விமர்சனம்தானே அண்ணா?

https://www.mothersofmissingtamils.com/?p=1183

கட்டுரையில் சொன்னதை சொல்லவில்லை. அதில் உள்ள செய்திதாள்களில் உள்ளதை சொல்கிறேன்.

16 minutes ago, Justin said:

ஆயுதப் போராட்டத்தால் தீர்வு வராது" என்று நம்பிய, நம்பும் ஒருவர். இதை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வது போல சுமந்திரனும் வெளிப்படையாகச் சொன்னார். அப்படிச் சுமந்திரன் சொல்வது பிரச்சினை என்பதன் அர்த்தம், "வாக்கு வாங்குவதற்காக அக்ரிங் கொடுக்க வேண்டும்" என்று சொல்வது போல படுகிறது. ஏற்கனவே செவாலியர் விருது வாங்கும் அளவிற்கு "நடிகமணிகளாக" இருக்கும் நபர்களால் தமிழ் தேசிய அரசியலும் (யாழ் களமும்😎) நிரம்பியிருக்கிறது. இன்னொரு நடிகன் தேவையா எமக்கு?

இப்படி சொல்வதால் அநேகர் சுமந்திரனை வெறுத்தார்கள் என நான் நினைக்கவில்லை.

தவிரவும் ஆயுதபோராட்டம் பிழை என அவர் சொல்லவில்லை என நினைக்கிறேன். அப்போதைய சூழலில் ஆயுதம் எடுத்ததை இப்போ நாம் விமர்சிக்க முடியாது. ஆனால் ஆயுத போராட்ட கால அணுகுமுறை இப்போ சரிவராது என்பதே அவர் கூறியது என நினைக்கிறேன். 

19 minutes ago, Justin said:

ஒரு காரணம் தான் முக்கியமானது: ஏனைய "நடிகமணி" தமிழ் அரசியல்வாதிகள் போல பிரபாகரனையும், புலிகளையும் தூக்கித் தலையில் வைக்கவில்லை என்பதே அது. இதே  தான் சம்பந்தரை வெறுக்கவும் காரணம்.

ஓம்…நான் சொன்னதுடன் இதையும் சேர்க்க வேண்டும்.

இப்படி செய்யாமல் விடுவது அவரின் உரிமை - ஆனால் அவர் ரணில் ஆள் என்ற சந்தேகம் வலுக்க இதுவும் காரணமாகியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, satan said:

அந்த தீவிரமான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று வெளியில் எடுத்து வையுங்கள், சான்றுகள் இல்லையா இருக்கா என்று பார்க்கலாம்!  

தீவிரமான குற்றச்சாட்டுகள் என்று அவர் மேல் சுமத்தப்படுவது அவர் இலங்கை அரசின் முகவர் என்பதும் மற்றும் அதனுடன் இணைந்து வரும் செயல்களும்.

உதாரணமாக, அவர் ரணிலின் கையாள் எனச் சொல்லப்படுவது. மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் கூட, அது எவர் எவருக்கு ரணிலால் கொடுக்கப்பட்டது என்ற தகவல் இவருக்கு முன்னரே தெரிந்த ஒரு விவகாரம் என்று சொல்லப்படுவது.

எந்தப் புள்ளியிலும் எங்களின் ஒற்றுமை குலைவிற்கு அவரையே காரணமாக சுட்டுவதும் இதில் அடங்கும்.

இந்த விபரங்கள் என்னுடையதும், என் போன்றவர்களதும் தெளிவிற்காகவே அன்றி, ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரித்து இன்னொருவரை மூர்க்கமாக எதிர்ப்பதற்காக அல்ல. உங்களின் நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி, சாத்தான்.

** களத்தில் நடந்த தேர்தல்  போட்டியில், சிறிதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் வெல்வார்கள் என்றே தெரிவு செய்திருந்தேன். அப்படித்தான் விரும்பி இருந்தேன். நாட்டில் தேசிய மக்கள் சக்தியும், தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக்கட்சியுமே எனபதும் இன்னொரு தெரிவு..............

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

இது விமர்சனம்தானே அண்ணா?

https://www.mothersofmissingtamils.com/?p=1183

கட்டுரையில் சொன்னதை சொல்லவில்லை. அதில் உள்ள செய்திதாள்களில் உள்ளதை சொல்கிறேன்.

இப்படி சொல்வதால் அநேகர் சுமந்திரனை வெறுத்தார்கள் என நான் நினைக்கவில்லை.

தவிரவும் ஆயுதபோராட்டம் பிழை என அவர் சொல்லவில்லை என நினைக்கிறேன். அப்போதைய சூழலில் ஆயுதம் எடுத்ததை இப்போ நாம் விமர்சிக்க முடியாது. ஆனால் ஆயுத போராட்ட கால அணுகுமுறை இப்போ சரிவராது என்பதே அவர் கூறியது என நினைக்கிறேன். 

ஓம்…நான் சொன்னதுடன் இதையும் சேர்க்க வேண்டும்.

இப்படி செய்யாமல் விடுவது அவரின் உரிமை - ஆனால் அவர் ரணில் ஆள் என்ற சந்தேகம் வலுக்க இதுவும் காரணமாகியது.

இதை ஒவ்வொரு முஸ்லிம் வெளியேற்ற நினைவுநாட்களின் போதும் செய்தாரென நினைக்கிறேன். இதை நினைத்தாலும் சொல்லாமல் மௌனமாக இருந்திருக்க வேண்டுமா? நடந்த சம்பவத்தை  பிழை என்று சொல்லியிருக்கிறார். நியாயமான நிலைப்பாடாகத் தான் நான் பார்க்கிறேன். முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி என்னுடைய கருத்தும் இது தான்.

சுமந்திரன் லவ்வர்சின் இன்னொரு குற்றச் சாட்டு இவர் "இனப்படுகொலை இடம்பெறவில்லை" என்று சாதித்தார் என்பது. "இனப்படுகொலை நடந்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதை நிரூபிப்பதில் பாரிய சவால் இருக்கிறது - bar is high, செய்ய முடியாது" என்பதே சுமந்திரன் சொன்னது. இது எனக்குப் புரிகிறது.

"அப்படியெல்லாம் எப்படிச் சொல்ல முடியும்?, நிரூபிக்கலாம்!" என்று கூறியவர்களுள் சிலர் - முன்னாள் நீதியரசர் விக்கி ஐயா, அமெரிக்காவில் வசிக்கும் (மேரிலாந்துப் பல்கலை?) கீதபொன்கலன், (வவுனியாவில் காணி உறுதியெழுதும்😎)பதில் நீதவான் பெண்மணி- இவர்களையெல்லாம் யாராவது சங்கிலியால் கட்டி வைத்து இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்காமல் தடுத்தார்களாமா😂?

சுமந்திரன் களத்திற்கு வந்த இந்த 14 ஆண்டுகளில்குறைந்தது இந்த 3 பேரும், ஏனைய புலம் வாழ் சட்ட மேதைகளும் எத்தனை முயற்சிகள் ஹேக் நோக்கி முன்னெடுத்திருக்கிறார்களாம்? எங்களுக்குப் பின்னர் ஆரம்பித்த றோகிங்கியா மக்களே ICJ இல் ஒரு விண்ணப்பம் முன்னகர்த்தி விட்டார்கள். எங்கே இந்த சுமந்திரன் எதிர்ப்பு வெத்து வேட்டுகள் இப்போது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர் யார்? நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மாஸ்டரா அல்லது சட்டவாளரா? இல்லை சைக்கிள் கப்பிலே கொமிஸ்னரா???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Justin said:

இதை ஒவ்வொரு முஸ்லிம் வெளியேற்ற நினைவுநாட்களின் போதும் செய்தாரென நினைக்கிறேன். இதை நினைத்தாலும் சொல்லாமல் மௌனமாக இருந்திருக்க வேண்டுமா? நடந்த சம்பவத்தை  பிழை என்று சொல்லியிருக்கிறார். நியாயமான நிலைப்பாடாகத் தான் நான் பார்க்கிறேன். முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி என்னுடைய கருத்தும் இது தான்.

எனது நிலைப்பாடும் இதுதான்.

யாழில் சாவச்சேரியில் ஆயுதம் பதுக்கினர், மண்டைதீவில் வோக்கியில் கதைத்தனர் என நியாயம் சொல்லும் ஆட்களுடன் வலுவாக முரண்பட்டும் உள்ளேன்.

ஆனால் ஜஸ்டினுக்கும், கோசானுக்கும் இல்லாத பொறுப்பு சுமந்திரனுக்கு உள்ளது. 

அது தன் இனத்தின் பிரதிநியாக செயல்படுவது.

சில வேளை ஹக்கீமும், அதாவுல்லாவும் முஸ்லிம்களால் கிழக்குமாகாண தமிழருக்கு 1990 இல் பாரிய அநீதி இழைக்கப்பட்தை தம்மளவில் ஏற்றுகொண்டாலும் கூட அதை முஸ்லிம்களின் பிரதிநிதியாக பொதுவில் ஏற்க மாட்டார்கள்.

இப்படி மறுபகுதி தன் தவறை ஒத்துகொள்ளாமல் சுமந்திரன் ஒருதலைபட்சமாக சொன்னதால்

1. தமிழர் தரப்பு மட்டுமே அநியாயமாக நடந்தது என்ற கதையாடல் வலுப்பெற்றது

2. தமிழர் தரப்பிடையே ஒற்றுமை குன்றியது. 

3. தமிழர் தரப்பை பலவீனமாக்கவே இவர் செயல்படுகிறார் என்ற சந்தேகம் வலுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, Justin said:

சுமந்திரன் லவ்வர்சின் இன்னொரு குற்றச் சாட்டு இவர் "இனப்படுகொலை இடம்பெறவில்லை" என்று சாதித்தார் என்பது. "இனப்படுகொலை நடந்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதை நிரூபிப்பதில் பாரிய சவால் இருக்கிறது - bar is high, செய்ய முடியாது" என்பதே சுமந்திரன் சொன்னது. இது எனக்குப் புரிகிறது

எனக்கும் புரிகிறது.

இதில் சுமந்திரனின் இன்னொரு வழுவான “தொனி” பிரதானப்படுகிறது.

இதை நிறுவ நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆதாரங்கள் சேர்க்க வேண்டும். என கூறி ஒரு ஆதார சேர்ப்பு பொறிமுறை நோக்கி நகர்ந்திருக்கலாம்.

நீங்கள் சொன்னது போல் இனப்படுகொலை நடந்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதை நிரூபிப்பதில் பாரிய சவால் இருக்கிறது என்று கூட சுமந்திரன் சொல்லவில்லை.

அதெல்லாம் ஒண்டும் நிறுவ முடியாது என்பதே அவர் தொனியாக இருந்தது.

அது மட்டும் அல்ல, தமிழ் மக்களின் உணர்சிகள் பற்றி சுமந்திரன் நீங்கள் அடிக்கடி பாவிக்கும் tone deaf ஆக இருந்த தருணம் இது.

இதுவும் இவர் உண்மையிலேயே நம்ம ஆள்தானா என்ற சந்தேகத்தை உருவாக்கியது.

கீத பொன்கலன் கொழும்பு யூனியில் இருந்தார் இப்போ மேரிலாண்ட் போயிருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

அவர் இலங்கை அரசின் முகவர் என்பதும் மற்றும் அதனுடன் இணைந்து வரும் செயல்களும்.

ஆண்டு சரியாக நினைவில்லை, தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெனிவா கூட்டத்திற்கு நமது பிரச்சனைப்பற்றி கதைப்பதற்காக த. தே. கூட்டமைப்பு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்தார். இந்த முடிவு எட்டியபின், சுரேஷ், அவருடன் சிலர் இந்தியா சென்றிருந்தனர். அந்த சமயம் சம்பந்தர், சுமந்திரன் கூடி ஜெனிவா போவதில்லை என முடிவெடுத்து வெளியிட்டனர். இது சுரேஷுக்கு தெரியாது. அவரை விமான நிலையத்தில் பேட்டி எடுத்த ஊடகவியலாளர், ஜெனிவா போவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாம் செல்வோம் என்று பதில் கூறினார். அதற்கு பத்திரிகையாளர் சம்பந்தர் சுமந்திரனின் முடிவை கூறினார். இது சரியா? ஒரு கட்சி எடுத்த முடிவை இருவர் தன்னிச்சையாக, கட்சியோடு ஆலோசிக்காமல், தெரிவிக்காமல், முடிவெடுப்பது சரியா? உங்கள் வீட்டில், நீங்களும் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து, (உங்களுக்கு அந்த பந்தம் ஏற்பட்டிருக்கோ தெரியவில்லை, உதாரணத்துக்கு சொல்கிறேன். கோவிக்க வேண்டாம்!)        எடுத்த முடிவை, உங்கள் மனைவி அதை உங்களுக்கு தெரியாமல் மாற்றி அதை இன்னொருவர் வந்து உங்களிடம் அறிவிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அதுவும் உங்கள் குடும்பத்துக்கு பாதகமான முடிவை எடுக்கும்போது? இருக்கட்டும், அதன்பின் ஊடகவியலாளர்கள் இவரை அணுகி ஜெனீவாவுக்கு போவதாக எடுக்கப்பட்ட முடிவை ஏன் மாற்றினீர்கள்? எனக்கேட்ட போது, அமெரிக்கா சொன்னது, நீங்கள் வரவேண்டாம் அது நாங்கள் பாத்துக்கொள்கிறோம் என பதிலளித்தார். சொல்லுங்கள்! பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பம், வழக்கு நடக்கிறது, பாதிக்கப்பட்டவர் சார்பில் யாரும் இல்லாமல் வேறு ஒருவர் நமது துயரங்களை இழப்புகளை வலிகளை எடுத்துச்சொல்ல முடியுமா? நாமே அக்கறையில்லாமல் இருந்தால், விசாரிப்பவர்களுக்கு என்ன கரிசனை வந்துவிடப்போகிறது? சரி, அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதியை தேட வேண்டுமோ இல்லையோ? புலம்பெயர்ந்தோர் தவறாமல் போய் போராடுகிறார்கள். அவர்களையும் புலம்பெயர்ந்தோர் விருப்பத்திற்கு இங்கு அரசியல் செய்ய முடியாது என்றார். ஆனால் புலம்பெயர்ந்தவரிடம் ஏன் போகிறார்? இன்னொருதடவை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இவர் அடிச்சு விழுந்து அமெரிக்காவுக்கு போய், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்கிறார். எதற்கு? பிரச்சனையை அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்றவர், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க ஏன் ஓடினார்? அதை அமெரிக்கா பாத்துக்கொள்ளாதா? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி, ஏன் அரசுக்காக ஓடுறார்? சும்மா வாயை வைச்சுக்கொண்டு இருக்க கூடாதா? முன்னாள் பிரித்தானிய பிரதமர் தமிழ் மக்களை, அவர்களின் பிரச்சனைகளை சந்திக்க, அரசாங்கத்தின் கெடுபிடிகளை, தடைகளையும் தாண்டி வருகிறார். மக்களின் பிரதிநிதிகள் அங்கில்லை. அப்போது, அவரது ஆங்கில புலமை, திறமை, சட்ட அறிவு, கோட்டு சூட்டு எங்கே போனது? அப்போ,  மக்கள் இவரது புலமை, அறிவு, திறமை, இல்லாமல் தங்கள் சாதாரண உடையுடன் தங்கள் துயரங்களை பகிரவில்லையா? அல்லது டேவிட் கமரோன் அவர்கள் துயரங்களை கேட்க மறுத்தாரா? அவர் அந்த மக்களின் குடிசைகளை, வெள்ளம் நிரம்பிய பாதைகளை கடந்து சென்று, அவர்களோடு பேசினார். இவர் ஒருநாளாவது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பாரா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் வருகிறதாம். அதற்கு நமக்கென்ன? அது தெரிந்துதானே அந்தக்கட்சியில் இணைந்தார், ஏன் இணைந்தார்? அதை இல்லாது செய்து சிங்களத்துக்கு மகழ்ச்சியை அளிக்கவா? அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்? தன் மக்களுக்கு நடந்த அனிஞாயங்களுக்கு தீர்வு இல்லை, ஆறுதல்  சொல்ல யாருமில்லை, முஸ்லீம் மேடையில் இருந்து முழங்குகிறார். இவர் யாரின் பிரதிநிதி, யாருக்காக பேச வேண்டும்? சிங்கள மக்களுடன் வாழுவது தனது அதிஸ்ட்டமாம். இருக்கட்டுமேன். யார் இவரை தட்டு வைத்து அழைத்தார்கள் தமிழரோடு வாழுங்கள் என்று? அங்கேயே வாக்கையும் சேகரிக்க வேண்டியதுதானே. இப்போ மக்கள் இவரை நிராகரித்து சிங்கள மக்களோடு வாழுங்கள் என்று அனுப்பிவிட்டனர். போகிறாரா மனிசன்? இன்னும் கூவிக்கொண்டு இங்கேதான் திரிகிறார். ஏனென்றால்; எம்மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், நேரம் செலவிட்டு அடிமேல் அடிஅடித்தால் நகருவார்கள் என அவர்களின் இயலாமையை பாவிக்க நினைக்கிறார். எம்மக்கள் இழப்பிலே துவளுகிறார்கள் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல். இவர் பொப்பி பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போகிறார்.   கேட்டால், இராணுவத்தினருக்கு மரியாதையாம். ஒன்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எங்களை விட்டு விலகி. 

7 hours ago, ரசோதரன் said:

அவர் ரணிலின் கையாள் எனச் சொல்லப்படுவது. மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் கூட, அது எவர் எவருக்கு ரணிலால் கொடுக்கப்பட்டது என்ற தகவல் இவருக்கு முன்னரே தெரிந்த ஒரு விவகாரம் என்று சொல்லப்படுவது.

 நல்லாட்சி கலைக்கப்பட்டபோது இவர் ரணிலுக்காக நீதிமன்றம் போய் எதை சாதித்தார்? இருந்த ஒரு, மக்கள் அளித்த எதிர்க்கட்சி கதிரையும் பறி போனது. சரி, எங்களுடைய அரசியல் கைதிகள் எங்களை மீட்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், இவர்களுக்காக இவர் என்ன செய்தார்? இரண்டொரு வருடத்திற்கு முன் தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடை அறிவித்தது. இதுபற்றி ஊடகவியலாளர் சுமந்திரனிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், போனதடவை ஆர்னோல்ட் என்னை கேட்ட படியால் நான் நீதிமன்றம் போய் அனுமதி பெற்றேன். இந்தமுறை அவர் என்னை கேட்கவில்லை, (அவர் ஏன் கேட்கவில்லை என்பது அவர்களிருவருக்குந்தான் தெரியும்).  நீதிபதி தடையுத்தரவு அளித்துவிட்டார், இது தாமதமாகிவிட்டது என்றார். சொல்லுங்கள்! அந்த மக்களின் பிரதிநிதி, அவர்களுக்காக தானாக ஒன்றும் செய்ய மாட்டார், யாராவது கேட்கவேண்டும், தட்ஷணை வைக்கவேண்டும். இலங்கைக்காக அமெரிக்கா ஓடுகிறார், ரணிலிக்காக நீதிமன்றம் செல்கிறார். இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று நக்குண்டார் நாவிடார், சுயநலம், அவரைப்பற்றி முழுமையாக தெரியாமை, அவரது குணாதிசயங்களோடு ஒத்தமை. அனுமதிப்பத்திரம் வழங்கிய செய்தி வந்தவுடன், அவர்கள் பெயர் அறிவிக்காமல், இவர் எப்படி பெயர் சுட்டி பிரச்சாரம் செய்தார்? ஏன் அனுமதி வழங்கிய ரணிலுக்கெதிராக ஏதும் கூவவில்லை? அதை தெரிந்தே மக்கள் குறிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள், அதோடு அந்தப்பிரச்சனையை கைவிட வேண்டியது அல்லது சமூகபொறுப்புணர்ச்சி இருந்தால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மக்களுக்கு. செய்ய வேண்டியதை செய்யாமல், தனக்கு வேண்டியதை மட்டும் செய்தால், அது அவர் வீட்டில் செய்ய வேண்டும். ஏன், தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னார்? நான் தனிப்பட்ட சந்திப்பை நடத்தி ரணில் எங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார். அடுத்தநாள், தான் யாருக்கும் எந்த உறுதியும் அளிக்கவில்லை எண்டு ரணில் பகிரங்கப்படுத்தியபின் வேறு கட்சிக்கு ஆதரவு என்றார். ஏன் இவ்வளவு அவசரம்,அபிமானம், பாசம் தனது மக்களை தவிர? இவரை இவ்வளவு காலமும் அரசியலில் இருக்க விட்டதே மக்களின் பெருந்தன்மை!

7 hours ago, ரசோதரன் said:

எந்தப் புள்ளியிலும் எங்களின் ஒற்றுமை குலைவிற்கு அவரையே காரணமாக சுட்டுவதும் இதில் அடங்கும்.

 இந்த வசனம் உங்களது அனுபவம் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது. ஆனாலும் என்னை சிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு அவரோடு எந்த தனி கொடுக்கல் வாங்கலுமில்லை, நடந்ததை சொல்லியிருக்கிறேன்.

முதல் முன்னாள் விக்கினேஸ்வரனுடன் சமராடினார். அவர் பதவி விலகவேண்டும் என்று போற வாற இடம், தெருக்கோடி எல்லாம் கூவினார், சவால் விட்டார், ஆட்களை கூட்டி விரட்டினார். பின்னர் வேறொரு கதை சொன்னார், அதை சொல்வதற்கு இவர் யார்? முடிந்தால் இந்தக்கட்சியை விட்டு வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் என்றார். அவர் செய்து காட்டினார். இன்னும் விடுகிறாரா அவரை? இவர் ஒரு தனி ரகம் சார்! தான் தான் எங்கும் எதிலும் முன்னுக்கு நிக்க வேணும் என்று அடம் பிடிப்பார். எதிர்ப்பவர் யாரும் இருந்தால், அவர்களை நாறடிச்சிடுவார். இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை தெரிந்தவர்கள் தொடர்வார்கள்.

நீங்கள் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை, ஆனாலும் கேட்டபடியால் சிலதை மட்டும் கூறியிருக்கிறேன். நேரில் சில சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடக்கின்றன சாட்சியாக. அவை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, அதை நீங்கள் நம்பமுடியாவிட்டால் நான் சொல்வதையும் விளங்கி தெளியும் என நான் நம்பவில்லை.  

8 hours ago, ரசோதரன் said:

ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரித்து இன்னொருவரை மூர்க்கமாக எதிர்ப்பதற்காக அல்ல.

விளங்குகிறது. நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, இன்னொருவரை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயற்படும் யாரையும் சாடுகிறேன், விமர்ச்சிக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறி விட்டீர்கள், அல்லது விரும்பவில்லை என நினைக்கிறன். சிலர் எனது கருத்தை மேலோட்டமாக வாசிப்பார்கள். காரணம் பந்தி. நான் எழுதும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும்போது பந்தியாகிறது, கொடுக்காவிட்டால் உங்களைப்போல், மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன் என்பார்கள். நான் அனுராவை புகழ்வது கோஸானை சீண்டுவதற்கே. எல்லாத்திரிகளிலும் நான் சொன்னதை இழுத்துக்கொண்டு ஓடி வருவார், அதை நான் ரசிப்பதுண்டு. முக்கியமாக "அனுரா தெய்யோ, கண்ணை குத்திப்போடுவார்." போராடி களைத்த, இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆதரிக்க யாருமில்லை என ஏங்கும் என் இனத்துக்கு, கடைசி நட்சேத்திரம் அனுரா ஏதும் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பாப்பும் ஏக்கமும்  பிரார்த்தனையும் இருக்கிறது.   

நன்றி வணக்கம்!    

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

யாராவது சுமந்திரனிடம் தொடர்பில் இருந்தால் சாத்ஸ்சின் இந்த பதிவை அவர் கண்ணில் காட்டி விடுங்கள்.

யாழில் பலர் சுமனை எதிர்க்க பல மறைமுக காரணங்கள் இருப்பது வெளிப்படை.

ஆனால் சாத்ஸ் மேலே எழுதி இருப்பது ஒரு சராசரி தமிழனின் மனக்குமுறல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

யாராவது சுமந்திரனிடம் தொடர்பில் இருந்தால் சாத்ஸ்சின் இந்த பதிவை அவர் கண்ணில் காட்டி விடுங்கள்.

கவலைப்படாதீர்கள் பாஸ்! சந்தேகம் தெளிந்திருந்தால் அவரே அனுப்பி வைப்பார். அது ஒன்றும் சாதாரண சந்தேகமில்லை,  சுமந்திரன் மேலுள்ள நம்பிக்கையினால், ஏற்றுக்கொள்ளாமையினால் உண்மையை கூறுபவர்கள் மேல் வந்த ஒரு வெறுப்பு போலுள்ளது. இல்லையென்றாலும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். நான் ஒன்றும் தவறாக, தனிபட்ட காழ்ப்புணர்சியினால் எழுதவில்லை. இன்னும் எத்தனையோ இருக்கு. உண்மையாகவே விளங்காதவராக இருந்தால்; இந்த விளக்கம் போதும். இல்லை சோதிக்கிறாரென்றால்; எந்த விளக்கம் கொடுத்தாலும் பிரயோசனமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, satan said:

கவலைப்படாதீர்கள் பாஸ்! சந்தேகம் தெளிந்திருந்தால் அவரே அனுப்பி வைப்பார். அது ஒன்றும் சாதாரண சந்தேகமில்லை,  சுமந்திரன் மேலுள்ள நம்பிக்கையினால், ஏற்றுக்கொள்ளாமையினால் உண்மையை கூறுபவர்கள் மேல் வந்த ஒரு வெறுப்பு போலுள்ளது. இல்லையென்றாலும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். நான் ஒன்றும் தவறாக, தனிபட்ட காழ்ப்புணர்சியினால் எழுதவில்லை. இன்னும் எத்தனையோ இருக்கு. உண்மையாகவே விளங்காதவராக இருந்தால்; இந்த விளக்கம் போதும். இல்லை சோதிக்கிறாரென்றால்; எந்த விளக்கம் கொடுத்தாலும் பிரயோசனமில்லை. 

நீங்கள் நினைப்பது போல் நானோ ரசோ அண்ணாவோ சும்முக்கு இதை அனுப்பி வைக்கும் அளவுக்கு அவரை தெரின்வர்கள் அல்ல🤣.

அதே போல் சுமந்திரன் மீதான அதிருப்தி ஏன் என்பது பற்றி @ரசோதரன் எழுப்பிய கேள்விகள் மிக நியமானது.

அதற்க்கான உங்கள் பதிலும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.