Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’

Screenshot-2024-12-17-190357.png

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார்.

“இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா நாட்டு மக்களைத் தவிர அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் வேறு பல வெளிநாட்டவரும் இருப்பார்கள்,” என்றார் முஸ்தஃபா.

முஸ்தஃபாவின் குற்றச்சாட்டுகளை ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

தமது ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக திரு அசாத் பேரளவில் சிவில் போர் தொடுத்து வந்ததில் 2011ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

மனித உரிமை மீறல்களைத் தமது அரசாங்கம் செய்யவில்லை என்று திரு அசாத் தொடர்ந்து மறுத்து வந்ததுடன் தமது எதிராளிகளைத் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டார்.

அசாத் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து முஸ்தஃபா சிரியாவைச் சென்றடைந்தார்.

சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்தோரின் உடல்கள் இராணுவ மருத்துவமனைகளிலிருந்து வெவ்வேறு உளவுத்துறை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மனிதக் குவியல் புதைகுழி ஒன்றுக்கு மாற்றப்படும் என்றும் இதற்கு சிரியா ஆகாயப் படையின் உளவுத்துறைப் பிரிவு பொறுப்பாக இருந்தது என்றும் முஸ்தஃபா பேட்டியின்போது கூறினார்.

பாதுகாப்பற்ற இந்தப் புதைகுழி இடங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று கவலை தெரிவித்த திரு முஸ்தஃபா, விசாரணைக்கு ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=303657

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’

ஒத்த கோடு வரைக

Posted

ஈரானை குறிவைத்து ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது

 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம் 

f521b575-eba5-4688-bbd8-6fec7d280e9a?ren
அமெரிக்க F-35B மின்னல் வேக ஸ்டெல்த் போர் விமானங்களுடன் விமானப்படையின் B1-B லான்சர் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடல் மீது பறக்கின்றன.

ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கில் ஒரு வார அல்லது மாதக்கணக்கான தாக்குதல் என்று அதிகாரிகள் கூறிய ஒன்றை அமெரிக்கா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களிலுள்ள 85 இலக்குகள் மீது 125 க்கும் அதிகமான குண்டுவீச்சுக்களை நடத்த டெக்சாஸிலுள்ள டைஸ் விமானப்படை தளத்தில் இருந்து அணுஆயுதமேந்தும் திறன் கொண்ட B-1B குண்டுவீச்சு விமானங்களை அனுப்பினார். “ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), கட்ஸ் படை (Quds Force) மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்கள்” பயன்படுத்திய இராணுவ தளங்களை இலக்கில் வைத்ததாக அமெரிக்கா கூறியது.

இத்தாக்குதல்கள் சட்டவிரோதமானவையாகும், சிரியா மற்றும் ஈராக் அரசாங்கங்களை மீறி நடத்தப்பட்டன, காங்கிரசின் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டன அல்லது அமெரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கான எந்த முயற்சியும் இல்லாமல் நடத்தப்பட்டதாகும்.

ஒரு ஈராக்கிய அதிகாரி ஈராக்கில் நடந்த தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் “ஈராக்கிய இறையாண்மையை மீறுவது” ஆகவும்  கண்டித்தார், மேலும் அமெரிக்காவானது “ஈராக்கையும் அப்பிராந்தியத்தையும் எதிர்பாராத விளைவுகளுக்கு இழுக்கும் ஒரு அச்சுறுத்தல்” என்றும் சேர்த்துக் கொண்டார். சிரிய அரசு ஊடக நிறுவனங்களானது “அமெரிக்க ஆக்கிரமிப்பு” செயலைக் கண்டித்தன.

62 மைல்களுக்கும் அதிகமான நீளமுள்ள நாட்டின் பரந்த பகுதியான, கிழக்கு சிரியாவில் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஏகாதிபத்திய-சார்பு சிரிய கண்காணிப்பகம் AFP க்கு அறிவித்தது.

கடந்த வாரம் ஜோர்டானில் மூன்று அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. சிப்பாய்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதைக் காண பைடென் தனது சொந்த மாநிலமான டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு சுருக்கமான மூன்று பத்தி அறிக்கையை வழங்கியபோது, குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே தங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தன.

யதார்த்தத்தில், இந்த சிப்பாய்களின் மரணங்கள், பிராந்தியத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் கடந்த மூன்று மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட பிரமாண்டமான இராணுவ விரிவாக்கத்தின் விளைவேயாகும்.

காஸாவில் இனப்படுகொலைத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு நிதி, ஆயுதங்கள், விநியாக ஆதரவு மற்றும் அரசியல் மறைப்பை வழங்கியது போல், பரந்த மோதலைத் தூண்டும் வேண்டுமென்றே என்ற நோக்கத்துடன் அமெரிக்கா அப்பிராந்தியம் முழுவதும் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் படைகளைக் கொண்டு அப்பகுதியை நிரப்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை தாக்குதல்களை அறிவிக்கையில், பைடென் இவ்வாறு அறிவித்தார், “அமெரிக்காவானது மத்திய கிழக்கிலோ அல்லது உலகில் வேறெங்கிலும் மோதலை விரும்பவில்லை.”

இத்தகைய அறிக்கைகள், ஒவ்வொரு நாளும் வெறுப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப கூறப்பட்டாலும், அர்த்தமற்றவையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் முழுவீச்சிலான போரை “விரும்புகிறதோ” இல்லையோ, அது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்கு இட்டுச் சென்ற 2003 ஈராக் படையெடுப்பு உட்பட பல தசாப்தங்களாக அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள நாடுகளின் மீது தொடர்ந்து குண்டுவீசியும், பட்டினி போட்டும் வந்துடன் படையெடுத்தும் வருகிறது.

ரஷ்யா மற்றும் சீனாவை அடிபணிய வைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சியின் பாகமாக மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்கும் இந்த விரிவாக்கப் போரின் இலக்கை அமெரிக்கா “நாடுகிறது” என்பது தெளிவாகிறது.

இந்த இலக்கையொட்டி, பைடென் மத்திய கிழக்கில் புதிய இராணுவத் தாக்குதலானது ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். குண்டுத்தாக்குதல்கள், “நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரங்களிலும் இடங்களிலும் தொடரும்” என்று பைடென் கூறினார். பைடென் மேலும் ஓர் அச்சுறுத்தலையும் சேர்த்துக் கொண்டார், “எங்களுக்கு தீங்கு செய்ய முனையும் அனைவருக்கும் இது தெரியட்டும்: நீங்கள் ஒரு அமெரிக்கருக்கு தீங்கு விளைவித்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.”

“இது முதல் தொகுப்புப் பதில்கள்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார், அவர் “எதிர்காலத்தில் மேலும் பதில்கள் இருக்கும்” என்று கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “நிரந்தர போரின்” தொடர்ச்சியையும் விரிவாக்கத்தையும் குறிக்கின்றன.

தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் முற்றிலும் விமர்சனமின்றி இருந்தன, அவை “பதிலடி” மற்றும் “தற்காப்பு” என்ற போலியான நியாயப்படுத்தலை மீண்டும் கூறின. அரசியல் அமைப்பிற்குள் இருந்த விமர்சனம் பைடென் அதிகளவு நடவடிக்கைகள் எடுக்காததற்காக கண்டனம் செய்தது.

“பைடென் இறுதியாக ஈரானைத் தடுத்து நிறுத்துவாரா” என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைடென் அளவுக்கு அதிகமான “கட்டுப்பாட்டை” கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டியது, வெள்ளை மாளிகையானது “எதிரி இலக்கு நடைமுறைக்கு அமெரிக்க துருப்புகள் இனியும் தீனியாக இருக்காத வகையில் சரியான இலக்குகளுக்கு எதிராக போதுமான பலத்தைப் பயன்படுத்த” அழைப்பு விடுத்தது.

அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் முன்னணி உறுப்பினர்களும் உடனடியாக தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்தனர், செனட் ஆயுத சேவைகள் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் ஜாக் ரீட் பகிரங்கமாக அவற்றை ஆதரித்தார்.

இந்தப் பெரும், நீண்ட தூர குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா எத்தகைய தாக்குதல்களை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு தெளிவாக நிரூபணம் ஆகும். “அமெரிக்க குண்டுவீச்சு விமானத்தின் திறன் என்னவென்றால், நாங்கள் விரும்பும் நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் தாக்க முடியும்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் டக்ளஸ் ஏ. சிம்ஸ் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறினார். முக்கியமாக, இந்தக் குண்டுவீச்சு விமானங்கள் அணுகுண்டு தாங்கிகளாக இருக்கின்ற வேளையில், அதே வகையான தாக்குதல்களைச் செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. 

இத்தாக்குதல்கள் ஈரானின் பிரதான நிலப்பகுதியை நேரடியாக இலக்கு கொள்ளவில்லை என்றாலும், வெள்ளை மாளிகை அவற்றிற்கு முன்னதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு புதிய சுற்று பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

ஜோர்டானில் இருந்து வரும் விமானங்கள் வரவிருக்கும் தாக்குதல்களில் கூட்டுச்சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகை குறிப்புக் காட்டியுள்ளது. இது எந்த அளவிற்கு மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் பிராந்தியப் போரின் பெரும் சுழற்சிக்குள் இழுக்கப்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் சவூதி அரேபியா, எகிப்து, கட்டார், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அவரது சுற்றுப்பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் நிகழ்ந்துள்ளன.

“காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நிலையாகவும், அதிகரித்த முறையிலும் வழங்க அனுமதிக்கும் மனிதாபிமான போர் இடைநிறுத்தம்” குறித்த பேச்சுவார்த்தை தான் தனது நோக்கம் என்று பிளிங்கன் கூறினார்.

யதார்த்தத்தில், பிளிங்கனின் விஜயம், ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பிராந்திய போரை விரிவாக்குவதற்கு வசதி செய்து கொடுப்பதையும், அமெரிக்க ஆதரவுடன் காஸா மக்களுக்கு எதிராக நிர்மூலமாக்கும் போரை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவை முடுக்கி விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிப்ரவரி 1 அன்று, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “100,000 க்கும் அதிகமான காஸாவாசிகள் இறந்துவிட்டதாகவோ, காயமடைந்துள்ளதாகவோ அல்லது காணாமல் போயுள்ளதாகவோ மற்றும் இறந்துவிட்டதாகவோ கருதப்படுகிறது” என்று கூறினார்.

யூரோ-மெட் மானிட்டரின் ஜனவரி 13 அறிக்கையை டெட்ரோஸ் மேற்கோள் காட்டினார், அது கொல்லப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் என்று குறிப்பிட்டது. யூரோ-மெட் இன் புள்ளிவிபரங்களின்படி, 32,246 காஸாவாசிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. இவர்களில் பெண்கள் 6,860 பேரும் குழந்தைகள் 12,660 பேரும் உள்ளனர்.

காஸாவில் 190,000 வீடுகளை இஸ்ரேல் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்துள்ளது, இது மொத்த வீட்டுத் தொகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் ஆனது காஸாவில் கட்டிடங்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டதை அறிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டது, அதாவது “நவம்பர் முதல் குறைந்தபட்சம் 33 கவனமாக திட்டமிடப்பட்ட  அழிப்புகளாக மசூதிகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் ஒட்டுமொத்த பிரிவுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தகர்த்துள்ளனர்,” என்று குறிப்பிட்டது.

டைம்ஸ் மேலும் குறிப்பிட்டது, “இத்தகைய தகர்ப்புகளை நடத்த, சிப்பாய்கள் கண்ணிவெடிகள் அல்லது பிற வெடிகுண்டுகளை வைத்து, இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் நுழைந்து, பின்னர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து வெடிக்க வைக்கும் விசையை இழுத்து வெளியேற வேண்டும்.”

கடந்த வாரம், சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலிய அரசாங்கம் இனப்படுகொலை நம்பத்தகுந்த வகையில் செய்திருக்க முடியும் என்று தீர்ப்பளித்ததுடன், மேலும் இனப்படுகொலை நடவடிக்கைகளையும் அறிக்கைகளையும் தடுக்க உத்தரவிட்டது. ஆனால் இது நடந்த ஒரு வாரத்தில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குறைந்தது 874 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது.

இதனுடன் பாரிய கூட்டு மரண தண்டனைகள் குறித்து மேலதிக சான்றுகளும் சேர்ந்துகொண்டுள்ளன. அதாவது இந்த வாரம் கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட 30 பேரின் பெரும் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது உட்பட, அவர்கள் உடனடியாக நியாயமான விசாரணையின்றி உடனடியாக கொல்லப்பட்டதாகத் தோன்றுகிறது.

ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கில் நடத்தப்பட்டு வரும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலாயக்கற்றவை என்பதையே காஸாவில் நடந்து வரும் மற்றும் அதிகரித்து வரும் இனப்படுகொலையும் மத்திய கிழக்கு முழுவதிலும் பாரிய புதிய அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையும் தெளிவுபடுத்துகின்றன.

ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் இந்த வெடிப்பை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது அவசியமாகும்.

 


https://www.wsws.org/ta/articles/2024/02/06/hixh-f06.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nunavilan said:

ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் இந்த வெடிப்பை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது அவசியமாகும்.

 

இதற்கு தலைவராக சிறிலங்கா ஜனாதிபதி தோழர் அணுராவை நியமிக்குமாறு ..தோழர் புத்தன் அறிவுரை வழ்ங்குகின்றார் ...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இப்படித்தான் ஈராக், லிபியா, போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

தற்போது ஈராக்கிலும், லிபியாவிலும் யேமனிலும் பாலும் தேனும் ஓடுகிறது.

ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்பான செய்திகளை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் காலம் மலையேறிவிட்டது. 

😏

 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கில் நடத்தப்பட்டு வரும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலாயக்கற்றவை என்பதையே காஸாவில் நடந்து வரும் மற்றும் அதிகரித்து வரும் இனப்படுகொலையும் மத்திய கிழக்கு முழுவதிலும் பாரிய புதிய அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையும் தெளிவுபடுத்துகின்றன.

அங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் இதுதான் நிலை. ஆனால் தன்னை பாதுகாக்க ஆயுதம் தூக்கினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையில வருவினம். இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும், வெகு விரைவில் நடக்கலாம் காலந்தாழ்த்தியும் நடைபெறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/12/2024 at 15:46, கிருபன் said:

இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா நாட்டு மக்களைத் தவிர அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் வேறு பல வெளிநாட்டவரும் இருப்பார்கள்,” என்றார் முஸ்தஃபா.

எனக்கென்னவோ முஸ்தபா அடுத்த WMD ஐ செட் பண்ணுவது போல் படுகிறது. 

On 18/12/2024 at 19:23, Kapithan said:

தற்போது ஈராக்கிலும், லிபியாவிலும் யேமனிலும் பாலும் தேனும் ஓடுகிறது.

இல்லையா பின்ன எவ்வளவு கஷ்ட்டப்பட்டு சனநாய்அகத்தை பாதுகாத்தவர்கள் மேற்கின் அவதார புருஷர்கள்.
பாதுகாத்த சனநாய் இப்போது கட்டவிழ்க்கப்பட்டு அம்பிட்டவர்களையெல்லாம் அந்தந்த நாட்டில் கடித்து குதறிக்கொண்டிருக்கிறது  
 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.