Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%21

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், மது வரி திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்ககளத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்படப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள வருமான இலக்கு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பெற்றுக் கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார். 

அதேநேரம், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோதமான மதுபானங்கள் தற்போது மதுபானசாலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. 

அவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற மதுபானங்களை கொள்வனவு செய்ய வேண்டாம். 

அவற்றில் நஞ்சு தன்மை காணப்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. 

இதனைக் கருத்திற் கொண்டு புதிய வகையான மதுபானம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/391200/சட்டவிரோத-மதுபானங்களுக்கு-அடிமையானவர்களுக்கு-புதிய-மதுபான-வகை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தரின் சிந்தனையில் குடிமக்களின் உயிர்கள் காப்பாற்றப்  படும். 

நானும் ஏதோ குடிகாரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் என்று நினைத்து வாசிக்கத் தொடங்கி விட்டேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் அதையே நினைத்தேன் .......இனியாவது குடிமகன்களுக்கு புனர்வாழ்வு கிடைக்கும் என்று . ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கிருபன் said:

2024 ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்ககளத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்படப்பட்டுள்ளது.

இப்ப தானே ரணில் எண்ணிக்கையை இல்லா மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளார்.

அடுத்த வருடம் வருமானம் (வரி) அமோகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் நாட்டு அரசு நடத்தும் “டாஸ்மாக்” மதுபானக் கடையில்…
குறைந்த விலையில் “வீரன்” என்ற மதுபானம் விற்பதாக வாசித்தேன்.
தமிழ் நாட்டு அரசின் 😎 புரட்சிகர திட்டங்களை,  சிங்கள அரசு…
“ஈயடிச்சான் கொப்பி” அடிக்குது போலுள்ளது. 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்மாள் சிபார்சு செய்த கிளிநொச்சி பார்களிலும் இந்த புதியவகை மதுபானம் விற்கப்படுமா?👀



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣................. பெருமையாக, மகிழ்வாக இருக்கின்றது நாங்களும் கொஞ்சம் பெரிய கை என்று இந்த உலகத்தில் யாரோ ஓரிருவராவது எங்களை நினைக்கின்றார்களே என்று...............😜.
    • 🤣............ திண்மம், திரவம், வாயு என்று மூன்று பொருட்களும் இந்த இரண்டு வரிகளுக்குள் அடங்கி இருக்கின்றது போல, வசீ............................😜. இந்தப் படத்தால் (இனிமேல் பெயரைச் சொல்லமாட்டேன்.............🤣) சூர்யா நடிப்பதாக இருந்த மிகப்பெரிய ஒரு பான் - இந்திய திரைப்படம் அப்படியே நின்றுவிட்டது. சூர்யா மும்பையில் குடியேறியதற்கு இந்த புதிய முயற்சியும் ஒரு காரணம்............... ஆனால் இப்பொது எல்லாம் வீணாகப் போய்விட்டது............... படம் வெளியாகி அடுத்த நாளே தியேட்டர்களில் சத்தத்தின் அளவை குறைக்கச் சொல்லும்படி தயாரிப்பாளார்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது........... ஆனாலும் நடந்த சேதம் சேதம் தான்......... 
    • 19 DEC, 2024 | 04:21 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி நிதியத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் பலர் இலட்சக்கணக்கான நிதியைப் பெற்றிருக்கின்றனர். அது தொடர்பான ஆவணங்களையும் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு  வியாழக்கிழமை (19) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 1978ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதிய சட்டத்தின் கீழ் 5 கட்டங்களின் கீழ் நிதியை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதில் இறுதித் தொகுதியில் சபையால் தீர்மானிக்கப்படுபவர்களுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் உண்மையான தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என நாம் நம்பவில்லை. நாட்டிலுள்ள சாதாரண மக்கள் ஏதேனும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டால் அதற்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு கூட பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோரப்படும் நிதி கிடைப்பதுமில்லை. ஆனால், என்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தைப் பார்க்கும்போது முற்றிலும் தலை கீழான நிலைமையே காணப்படுகிறது. 2005 - 2024 வரையான பட்டியலையே நான் முன்வைத்திருக்கிறேன். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் இவ்வாறு பலர் நிதியைப் பெற்றுள்ளனர். என்னால் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் தவிர, பிரதேச சபை உறுப்பினர்கள், தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியைப் பெற்றுள்ளனர். இது உண்மையில் ஒழுக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். ஒரு சிலருக்கு சுமார் 100 இலட்சம் ரூபா என்ற பாரிய தொகை கூட கட்டம் கட்டமாக அன்றி நேரடியாக முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செயற்பட்டிருக்கின்றனர். இது தொடர்பில் மேலும் பல ஆவணங்களை தேட வேண்டியுள்ளது. அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வெகு விரைவில் இதனை விட தெளிவாக மேலும் பல ஆவணங்களை வெளிப்படுத்துவோம் என்றார்.   https://www.virakesari.lk/article/201663
    • மிக்க நன்றி சாத்தான் உங்களின் நீண்ட பதிலுக்கு. உங்களைச் சிக்க வைப்பதற்காக எதையும் கேட்கவில்லை. இங்கு களத்தில் எவர் மேலும் அப்படியான ஒரு எண்ணமோ அல்லது திட்டமோ எனக்கு அறவேயில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் எந்த விதமான அரசியல்மயப்படுத்தலுக்கும் உட்படாமல் இருக்கும் பலரின் நானும் ஒருவன். இவை எல்லாமே முதலில் தகவல்கள் தான் என் போன்றவர்களுக்கு. இது வெறும் பொழுதுபோக்காகவே ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் இப்பொழுது நல்ல நட்பும், நேசமும் துளிர்க்கின்றது இங்கு வந்து போகும் எல்லார் மேலேயும், உங்கள் மீதும் தான்.................... உங்களின் அவதார் மற்றும் பெயரைப் பார்த்து 'ஆளவந்தான்' நந்தா போல இருக்கின்றதே என்று சிரித்துக் கொள்வேன்..............🤣. உங்களின் கருத்துகளும், அபிப்பிராயங்களும் சிந்திக்க வைக்கின்றன. நானும் இதையொட்டி தேடி இன்னமும் தெரிந்து கொள்கின்றேன்...............👍. எப்போதும் ஒற்றை வரியில் மட்டை அடி போல கருத்துகள் சொல்பவர்களுடன் உரையாடுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை மிக விரவிலேயே வந்துவிடும், அது என்ன துறையாக இருந்தாலும். அதே போலவே சொந்தக் கருத்துகள் இல்லாமல், எப்போதும் பிற ஊடகங்களை அப்படியே பிரதி செய்தாலும், அங்கேயும் உரையாடல் முடிந்துவிடுகின்றது. உங்களின் நீண்ட எழுத்து உரையாடலை வளர்க்கின்றது. இது சிலரால் மட்டுமே முடியும், அத்துடன் அழகிய தமிழும்............❤️. கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றோம் அல்லது மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றோம் என்று நான் சொன்னது இங்கு களத்திலிருக்கும் எந்த நட்பையும் தனியே சுட்டி அல்ல, நீங்கள் உட்பட........... ஒரு சமூகமாகவே இப்படிச் செய்கின்றோம் என்று சொன்னேன். தனிநபர் தாக்குதல் அறவே கிடையாது.  நீங்களாவது அநுரவை வெறுமனே புகழ்கிறீர்கள்............... நான் அநுரவிற்கே எனது வாக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்........................😜.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.