Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி !

29 Dec, 2024
image
 

தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர். 

 

குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது.

 

தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலி ஒன்றுடன் வேகமாக மோதி விபத்திற்குள்ளானதில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி விமானப்பயணம் செய்பவன்.. இப்பெல்லாம் விமானம் ஏறேக்கையும் இறங்கேக்கையும் கால்கை உடம்பு எல்லாம் கூசுது வாற செய்திகளை பாத்து..

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 85 பேர் உயிரிழப்பு

தென்கொரியா: 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

பட மூலாதாரம்,REUTERS

29 டிசம்பர் 2024, 01:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

தென்கொரியா: 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

பட மூலாதாரம்,REUTERS

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

தென் கொரியா: விமான விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம்,REUTERS

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்தது என யோன்ஹாப் கூறுகிறது.

இறந்த 85 பேரில் 46 பெண்கள் பேர் பெண்கள் என்றும், 39 பேர் ஆண்கள் என்றும் அந்நாட்டின் தேசிய தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.

ஒரு விமானப் பணியாளர் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாகக் கூறும் தீயணைப்புத்துறை, 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தென் கொரியா

பட மூலாதாரம்,REUTERS

முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.

ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

10  விமானங்கள் இரத்து

181 பேருடன் சென்ற தாய்லாந்து விமானம் விபத்து!

181 பேருடன் சென்ற விமானம் தென் கொரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய சுவரில் மோதியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

விபத்தின் போது, பயணிகள் விமானத்தில் 175 பயணிகளும், 6 விமான பணிப்பெண்களும் இருந்துள்ளனர்.

தாய்லாந்தின்  இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இதேவேளை மீட்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக கொரிய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், உயிரிழப்பு  எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1414412

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 124 பேர் உயிரிழப்பு

29 டிசம்பர் 2024, 01:50 GMT
தென்கொரியா: 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

Reuters

புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 124 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென்கொரியா: 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

Reuters

இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

தென் கொரியா: விமான விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

Reuters

ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது

இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

"விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார். 

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.

80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தென் கொரியா

Reuters

தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.

"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார். 

உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தென் கொரியா

EPA/Yonhap

சோய் சாங்-மோக்

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 

செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார். 

மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது. 

தென் கொரியா

EPA/Yonhap

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விபத்து நடந்ததற்காக மணிப்பு கேட்டனர்

முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.

ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c20e26w86g7o?at_campaign=ws_whatsapp

  • கருத்துக்கள உறவுகள்

விமானிகளின் தவறு போலத் தெரிகிறதே?

தற்போதிருக்கும் தகவல்களின் படி, இறங்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். "பறவைகள் கூட்டமாகப் பறக்கின்றன, கொஞ்சம் தாமதியுங்கள்" என்று சொல்லியிருக்கிறது கட்டுப் பாட்டறை. 2 நிமிடங்கள் கழித்து "பறவை இயந்திரத்தை மோதி விட்டது" என்று விமானிகள் சொல்ல இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் உடனே இறங்கியிருக்கிறார்கள், ஆனால் சக்கரத்தை (landing gear) இறக்கவில்லை. படபடப்பில் படிமுறைகளை மறந்து விட்டு சக்கரமில்லாமலே இறங்கியிருக்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

Rettungskräfte vor den Trümmern der Jeju Maschine am Flughafen in Muan

தாய்லாந்தில் இருந்து வந்த விமானம் தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 181 பேரில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். விபத்திற்கு சற்று முன், பறவை தாக்கும் விமானிகளுக்கு கோபுரம் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

தென்கொரியாவின் முவான் நகரில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். அதிகாரப்பூர்வ Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தபடி, தீயணைப்புத் துறை இதை உறுதிப்படுத்தியது. 181 பேரில்  இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். பல வருடங்களில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்று.

யோன்ஹாப்பின் கூற்றுப்படி, விமானத்தில் மொத்தம் 173 தென் கொரிய மற்றும் இரண்டு தாய்லாந்து பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். இதுவரை, 65 பேர் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்பு ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. விமானம் சுவரில் மோதியதையடுத்து, பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இரண்டு குழு உறுப்பினர்கள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த தென் கொரிய மலிவு விலை விமான நிறுவனமான Jeju Air இன் Boeing 737-8AS, காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓடுபாதையை நெருங்கி, ஓடுபாதையின் பின்னால் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியது.

தரையிறங்கும் கருவிகள் மடிக்கப்படவில்லை - பறவை தாக்கியதா?
தென் கொரிய தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒரு வீடியோ, தரையிறங்கும் கியர் இல்லாமல் ஓடுபாதையில் சறுக்கிச் செல்வதைக் காட்டியது, பாதையின் முடிவில் விபத்துக்குள்ளானது மற்றும் தீப்பிடித்தது. யோன்ஹாப்பின் கூற்றுப்படி, தரையில் இருந்த பல நேரில் கண்ட சாட்சிகள் விசையாழிகளில் ஒன்றில் நெருப்பைக் கண்டதாகவும் பல இடி சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.

Trümmer der brennenden Maschine liegen auf dem Rollfeld.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை, போயிங் 737-800 விமானத்தில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் விபத்துக்குப் பிறகு ஜெஜு ஏர் நிறுவனத்தைத் தொடர்புகொண்டது.

அதிகாரிகளை மேற்கோள் காட்டி Yonhap அறிக்கை, ஒரு பறவை தாக்கியது, அதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பறவைகளுடன் மோதியதால், தரையிறங்கும் கருவி பழுதடைந்திருக்கலாம். அதன்படி, விமானிகள் தரையிறங்குவதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டனர், ஆனால் அதைக் கலைத்துவிட்டு பின்னர் கிராஷ் லேண்டிங்கிற்கு முயன்றனர். இருப்பினும், ஓடுபாதையின் முடிவை அடையும் முன், விமானத்தின் வேகத்தை அவர்களால் போதுமான அளவு குறைக்க முடியவில்லை.

தென் கொரிய போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விமானத்தின் விமானிகளை பறவை தாக்கும் என்று கோபுரம் எச்சரித்தது. "ஒரு நிமிடம் கழித்து விமானி அவசர அழைப்பு விடுத்தார், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விமானம் விபத்துக்குள்ளானது," என்று கொரியா டைம்ஸ் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியது.

இரண்டு பணியாளர்கள் உயிர் தப்பினர்
தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், விபத்து நடந்த இடத்தில் பெரிய, இருண்ட புகை மூட்டங்களைக் காட்டியது. பின்னர் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அழிக்கப்பட்ட விமானத்திலிருந்து எரியும் சிதைவுகள் மற்றும் எரிந்த குப்பைகள் மற்றும் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு இயந்திரங்களைக் காட்டியது. விபத்து நடந்த இடத்தில் டஜன் கணக்கான மீட்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர், தீயை அணைத்து, உயிர் பிழைத்த பயணிகளை மீட்டனர். அதே நேரத்தில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியது.

https://www.faz.net/aktuell/gesellschaft/ungluecke/suedkorea-fast-180-tote-bei-flugzeugabsturz-in-muan-110200177.html

  • கருத்துக்கள உறவுகள்

'நான் எனது இறுதி செய்தியை தெரிவிக்க வேண்டுமா? விபத்துக்குள்ளான தென்கொரிய விமானத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி

Published By: RAJEEBAN   29 DEC, 2024 | 06:11 PM

image
 

ஞாயிற்றுக்கிழமை காலை 181 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில்  179 பேராவது பலியாகியுள்ளதால் சோகம் கலந்த ஒரு அமைதியான சூழல் தென்கொரியாவில் பரவியது.

பயணிகளின் கலக்கமடைந்த உறவினர்கள் நண்பர்கள் முவான் சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக கூடி தங்கள் அன்புக்குரியவர்களை தேடினர்.

Gf91mkxaMAAzn7s.jpg

விபத்திற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் விமானத்திலிருந்த  தங்கள் குடும்பத்தை சேர்ந்த  ஒருவர் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியில் பறவையொன்று சிக்குண்டுள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார் என விமானநிலையத்தில் காணப்பட்ட குடும்பமொன்றை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

நான் எனது இறுதி வார்த்தைகளை தெரிவிக்க வேண்டுமா என்ற செய்தியும் அந்த பயணியிடமிருந்து வந்துள்ளது.

விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிளம்பை கண்டதாகவும் வெடிப்புசத்தங்களை கேட்டதாகவும்  உள்ளுர் மக்கள் தெரிவித்தனர் என தென்கொரியாவின் யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Gf9vV2CW8AEqYkP.jpg

விமானம் தரையிறங்குவதை நான் பார்த்தேன் அது தரையிறங்கும் என நினைத்தேன் ஒளிபோன்றை ஒன்றை கண்டேன்,அதன் பின்னர் பாரிய சத்தமொன்று கேட்டது பின்னர் வானில் புகைமண்டலம் தோன்றியது அதன் பின்னர் தொடர்ச்சியான வெடிப்புச்சத்தங்களை கேட்டேன் என விமானநிலையத்திலிருந்து 4.5 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/202493

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விமானிகளின் தவறு போலத் தெரிகிறதே?

தற்போதிருக்கும் தகவல்களின் படி, இறங்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். "பறவைகள் கூட்டமாகப் பறக்கின்றன, கொஞ்சம் தாமதியுங்கள்" என்று சொல்லியிருக்கிறது கட்டுப் பாட்டறை. 2 நிமிடங்கள் கழித்து "பறவை இயந்திரத்தை மோதி விட்டது" என்று விமானிகள் சொல்ல இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் உடனே இறங்கியிருக்கிறார்கள், ஆனால் சக்கரத்தை (landing gear) இறக்கவில்லை. படபடப்பில் படிமுறைகளை மறந்து விட்டு சக்கரமில்லாமலே இறங்கியிருக்கிறார்களா? 

பொறுப்பு கூற வேண்டியவர்கள் விபத்துக்கான காரணத்தை அறிய மூன்று வருடங்கள் வரை பிடிக்கலாம் என்று கூறியுள்ளதாக செய்தி பார்த்தேன்.

இருவர் மடடும் உயிர் தப்பியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இவர்கள் விமானிகளா தெரியவில்லை.

விமானங்கள் Final Leg இற்கு ஓடுபாதையை நோக்கி திரும்பியவுடனேயே சில்லுகளை இறக்கிவிடுவார்கள். பைனல் லெக் ஓடுவதற்கு சில நிமிடங்கள் எடுக்கும். இறக்குவதா இல்லையா என இந்த தருணத்தில் முடிவு எடுப்பார்கள். விமானம் சரியாக நேர்த்தியாக நிலை எடுக்காவிட்டால் திரும்ப மேலெழுந்து பறப்பார்கள், இறக்குவதற்கு முயற்சி செய்யமாட்டார்கள். 

உறவினர்கள், வேண்டியோர் எக்கத்துடன் விமானநிலையத்தில் காத்து நிற்கும் படம் கவலையை தருகின்றது. நாம் இப்படியான ஒரு சூழலில் மாட்டினால் எவ்வளவு கொடுமையானது என உணர்வோம். துயரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விமானிகளின் தவறு போலத் தெரிகிறதே?

தற்போதிருக்கும் தகவல்களின் படி, இறங்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். "பறவைகள் கூட்டமாகப் பறக்கின்றன, கொஞ்சம் தாமதியுங்கள்" என்று சொல்லியிருக்கிறது கட்டுப் பாட்டறை. 2 நிமிடங்கள் கழித்து "பறவை இயந்திரத்தை மோதி விட்டது" என்று விமானிகள் சொல்ல இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் உடனே இறங்கியிருக்கிறார்கள், ஆனால் சக்கரத்தை (landing gear) இறக்கவில்லை. படபடப்பில் படிமுறைகளை மறந்து விட்டு சக்கரமில்லாமலே இறங்கியிருக்கிறார்களா? 

லான்டிங்கியர் வேலையாமலேயே பல விமானங்கள் பயணிகளுக்கு பாதகமில்லாமல் தரையிறங்கியுள்ளன.

அதற்காகவே எரிபொருள் முடியுமட்டும் சுற்றுவார்கள்.

11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் அடிக்கடி விமானப்பயணம் செய்பவன்.. இப்பெல்லாம் விமானம் ஏறேக்கையும் இறங்கேக்கையும் கால்கை உடம்பு எல்லாம் கூசுது வாற செய்திகளை பாத்து..

நானும் தான் ஓணாண்டி .கடந்த 2-3 வருடமாக வருடம் குறைந்தது 10 ஒருவழி பயணமாவது மேற்கொள்கிறேன்.

இருவழி என்றால் 20.

ரொம்பவும் வெறுப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னர் பறவை மோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது – தென்கொரிய அதிகாரி

30 DEC, 2024 | 10:32 AM
image
 

தென்கொரிய விமானம் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக  தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முயான் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து ஜெசுஎயர் 7சி 2216 விமானத்திற்கு பறவை தாக்கலாம் என்ற எச்சரிக்கை அனுப்பப்பட்டது சற்று நிமிடத்தில் விமானி ஆபத்திலிருப்பதற்கான சமிக்ஞையை அனுப்பினார் என தென்கொரியாவின் நிலம்  உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் விமானப்போக்குவரத்து கொள்கை இயக்குநர் ஜீ – ஜாங்- வான் தெரிவித்துள்ளார்.

காலை 9.30 மணியளவில் விமானி தரையிறங்குவதற்கான கியரை பயன்படுத்தாமல் தரையிறங்க முயன்றார் இதனால் ஓடுபாதையை தாண்டிச்சென்று சுற்றுமதிலில் மோதியது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தரையிறங்க முயற்சித்தவேளை பறவை தாக்குதல் குறித்த  எச்சரிக்கை அனுப்பபட்டது,அதன் பின்னர் அவர் மேடே சமிக்ஞையை வெளியிட்டார்,இதனை தொடர்ந்து முதலில் இறங்க தீர்மானித்திருந்த இடத்திற்கு எதிரே உள்ள பகுதியில் தரையிறங்குவது உறுதி செய்யப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானியும் துணைவிமானியும் வர்த்தக விமானங்களை 9000 மணித்தியாலங்களிற்கு மேல் செலுத்திய அனுபவம் உள்ளவர்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானவிபத்திற்கான உறுதியான காரணம் குறித்து எதனையும் சுட்டிக்காட்ட விரும்பாத அதிகாரிகள் விசாரணைகள் இடம்பெறுகின்றன விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப்பிடித்ததாலேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/202515

  • மோகன் changed the title to தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
  • கருத்துக்கள உறவுகள்

வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் - நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம்

புதிய இணைப்பு

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரை கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதலாம் இணைப்பு

தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து தென்கொரியா நோக்கி 181 பேருடன் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் - நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம் | 179 Dead South Koreas Worst Plane Crash In Decades

இந்த கோர விபத்து சம்பவம் மட்டுமின்றி தென்கொரியாவை முழு உலகையும் உலுக்கி சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மீதம் உள்ளவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பறவை மட்டுமின்றி மோசமான வானிலையும் இந்த கோர விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வழக்கத்திற்கு மாறான லேண்டிங்

இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் விமானிகள் உள்ளிட்ட பலரும் விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் - நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம் | 179 Dead South Koreas Worst Plane Crash In Decades

அந்நாட்டின் ஊடக அறிக்கைகளின்படி, "விமானத்தின் சக்கரங்கள் உள்ளிட்ட லேண்டிங் கியர் தரையிறங்கும் போது செயல்படவில்லை.

எனவேதான் வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சக்கரங்களில் பறவை சிக்கியிருந்தால் கூட இதுபோல் அவை செயல்படாமல் போக வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்படுகிறது. 

தீயணைப்பு வீரர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை

எனினும் 3 கி.மீ., நீளமுள்ள விமான ஓடுபாதையில் அந்த விமானம் ஏன் இவ்வளவு வேகமாக வந்தது என்பது தான்.

வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் - நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம் | 179 Dead South Koreas Worst Plane Crash In Decades

மேலும், இந்த விமானம் முன்னரே திட்டமிடப்பட்டு வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்யப்பட்டது என்றால் ஏன் தீயணைப்பு வீரர்கள் யாரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. 

இதுபோல் லேண்டிங் கியர் பழுதானால் அந்த விமானம் நீண்ட நேரத்திற்கு வானில் வட்டமிட வேண்டும்.

அதாவது, பழுதுக்கான தீர்வை கண்டுபிடிக்கும் வரையோ அல்லது தீப்பிடிப்பதை தடுக்க எரிபொருள் முழுவதுமாக காலியாகும் வரையோ வட்டமிட வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது.

ஆனால், இந்த விமானம் வழக்கத்திற்கு மாறாக தரையிறங்குவதற்கு தாயாராகும் முன்னர் வானில் வட்டமிடவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. எனவே, இதற்கு என்ன காரணம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

https://ibctamil.com/article/179-dead-south-koreas-worst-plane-crash-in-decades-1735531506

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

தென் கொரிய விமான விபத்தின், காணொளி காட்சி.   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

179 பேர் பலி: தென் கொரிய விமான நிலையத்தில் ஓடுபாதை முடிவில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்?

தென் கொரிய விமான விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன. கட்டுரை தகவல்
  • எழுதியவர், டேவிட் மெர்சர்
  • பதவி, பிபிசி செய்தி

தென் கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் ஓடுபாதை முடிவில் "அசாதாரணமான" கான்கிரீட் சுவர் குறித்தும் அதன் பங்கு குறித்தும் விமான நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன.

தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள், ஓடுபாதையின் எல்லையில் இருந்து 250 மீ (820 அடி) தொலைவில் கான்கிரீட் சுவர் உள்ள இடத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

விமான பாதுகாப்பு நிபுணர் டேவிட் லியர்மவுண்ட், 'தடை' இல்லாதிருந்தால், விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் அதில் இருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் தப்பித்திருக்கலாம். ஒருவேளை அனைவரும் கூட உயிர் பிழைத்திருப்பார்கள் என்று கூறினார்.

 

விமானம் ஒரு பறவை மீது மோதியதாக விமானி அறிவித்தார். பின்னர் தரையிறக்க வேண்டிய இடத்தில் தரையிறக்காமல், எதிர் திசையில் இருந்து தரையிறங்க அனுமதி கோரினார்.

விமானம் 2,800 மீட்டர் ஓடுபாதையில் கீழிறங்கியது. தனது சக்கரங்கள் அல்லது லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கியது.

''லேண்டிங் கியர் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் விமானம் நன்றாக தரையிறங்கியது. இதற்கு காரணம் விமானத்தின் இறக்கைகள் சமமாக இருந்தன, விமானத்தின் வால் போன்ற பின் பகுதியில் ஏற்படும் சேதத்தைத் தவிர்ப்பதற்காக விமானத்தின் முன்பகுதி மிக உயரமாக உயர்த்தப்படவில்லை. மேலும் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு போனாலும், விமானத்திற்கு அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்கிறார் லியர்மவுண்ட்.

4 மீட்டர் உயர சுவர்

"இத்தனை பேர் இறந்ததற்குக் காரணம் தரையிறக்கம் அல்ல, ஆனால் ஓடுபாதையின் எல்லைக்கு அப்பால் இருந்த கடினமான தடை (சுவர்) ஒன்றில் விமானம் மோதியதுதான் " என்றும் அவர் கூறினார்.

லுஃப்தான்சா விமான நிறுவன விமானி கிறிஸ்டியன் பெக்கர்ட், அந்த கான்கிரீட் கட்டமைப்பை "அசாதாரணமான" கட்டமைப்பு என்று அழைத்தார்.

அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "பொதுவாக, விமான நிலைய ஓடுபாதையின் முடிவில் சுவர் இருக்காது"என்றும் தெரிவித்தார்.

இந்த கான்கிரீட் கட்டமைப்பானது விமானம் தரையிறங்குவதற்கு உதவும் லோக்கலைசர் அமைப்பைக் கொண்டுள்ளது என தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

மண்ணால் மூடப்பட்ட அந்த கான்கிரீட் அமைப்பு 4 மீட்டர் உயரம் கொண்டது. ஓடுபாதையின் அதே அளவில் லோக்கலைசரை வைத்திருக்க இது உயர்த்தப்பட்டது. வழிகாட்டும் அமைப்பு சரியாக வேலை செய்வதை உறுதிசெய்ய இப்படி அமைக்கப்பட்டுள்ளது என யோன்ஹாப் கூறுகிறது.

தென் கொரிய விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கியது

தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம், நாட்டின் பிற விமான நிலையங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் கான்கிரீட் கட்டமைப்புகளுடன் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

இருப்பினும், அவை எளிதில் உடைந்து விடும் அளவிலான எடை குறைவான பொருட்களால் செய்யப்பட்டிருக்குமா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தைப் போன்ற அதே வகையான விமானங்களை ஓட்டிய 48 வருட அனுபவமுள்ள விமானி கிறிஸ் கிங்ஸ்வுட், ''ஓடுபாதையின் ஒரு குறிப்பிட்ட எல்லை மற்றும் தூரத்தில் உள்ள தடைகள் உடையக்கூடியதாக இருக்க வேண்டும், அதாவது ஒரு விமானம் அதில் மோதினால் அந்த கான்கிரீட் தடை உடைய வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார்.

தென் கொரிய விமான விபத்து

"இந்த கடினமான கான்கிரீட் கட்டமைப்பு அசாதாரணமாகத் தெரிகிறது. நான் புரிந்துகொண்டபடி, விமானம் மிக வேகமாகப் பயணித்தது, ஓடுபாதையில் நீண்ட தூரம் தரையிறங்கியது, எனவே அது ஓடுபாதையின் முடிவைக் கடந்து வெகுதூரம் சென்றிருக்கும். அப்படியென்றால் தடைகள் எங்கு வைக்கப்பட வேண்டும்? அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விமானங்கள் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை திறமையாக பறக்க முடியும். விமானத்தின் நடுப்பகுதி அதிவேகமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. விமானத்தின் முக்கியப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் தாக்கினால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும்" என்றார்.

மேலும் "விமானத்தின் எரிபொருள், அதன் இறக்கைகளில் வைக்கப்படுகிறது, எனவே இறக்கை உடைந்தவுடன், தீ பற்றுவதற்கான சாத்தியமும் குறிப்பிடத்தக்கது. எனவே, சுவர் இல்லாதிருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்றும் பொருள் கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் "தொழில்துறையின் தரத்திற்கு ஏற்ப அனைத்து தேவைகளையும் விமானநிலையம் பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்தால் ஆச்சரியப்படுவேன்" என்கிறார் கிங்ஸ்வுட்.

தென் கொரிய விமான விபத்து

"பல சர்வதேச விமான நிலையங்களில் உள்ள விமானத் தளங்களை ஆராயும்போது, ஆபத்துகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்படும் பல தடைகளை நம்மால் கண்டுபிடிக்க இயலும் என்று நான் சந்தேகிக்கிறேன்," என்று கிங்ஸ்வுட் மேலும் கூறினார்.

விமானப் பகுப்பாய்வாளர் சாலி கெதின், விமானம் வழக்கமான தரையிறங்கும் திசையில் இருந்து எதிர் திசையில் தரையிறங்கியதை கருத்தில் கொண்டு, தடை இருப்பது விமானிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.

"இறுதியில் இந்த கடினமான தடை இருப்பதை விமானிகள் அறிந்திருந்தார்களா?'' என்கிறார் அவர்

"வழக்கமாக தரையிறங்கும் திசையில் அல்லாமல் மறு திசையில் தரையிறங்க கட்டுப்பாட்டு அமைப்புகளால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால், அது கருப்பு பெட்டிகளின் விசாரணையில் வெளிவர வேண்டும்" என்றார்.

மேலும் "பல கேள்விகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்"என்று சாலி கெதின் பிபிசியிடம் தெரிவித்தார்.

தென் கொரிய விமான விபத்து

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

தென்கொரிய விமான விபத்து; கறுப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் பிரித்தெடுப்பு!

தென்கொரிய விமான விபத்து; கறுப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் பிரித்தெடுப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பிரித்தெடுப்பதை புலனாய்வாளர்கள் முடித்துவிட்டதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காக்பிட் குரல் பதிவில் (cockpit voice recorder) இருந்து தரவு இப்போது ஆடியோ கோப்பாக மாற்றப்படும், அதே நேரத்தில் இரண்டாவது கருப்பு பெட்டி – ஒரு விமான தரவு பகுப்பாய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

(காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆனது விமானிகளின் உரை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையுடனான உரை, விமானத்தின் சுவிட்ச் மற்றும் விமான இஞ்சின் ஒலியென அனைத்தையும் பதிவு செய்கிறது.)

இந்த தரவுகள் விமான விபத்துக்கு வழிவகுத்த முக்கியமான தருணங்களைப் பற்றிய மேம்பட்ட தகவல்களை வழங்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்கு 181 பயணிகளை சுமந்து வந்த ஜெஜு ஏரின் 7C2216 விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது.

இதனால் விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் மொத்தமாக 179 பேர் உயிரிழந்திருந்தனர்.

இது தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும்.

https://athavannews.com/2025/1414797

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.