Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE

படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

"இது என்னுடைய கட்சி. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம். அது யாராக இருந்தாலும்..." - பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக சனி அன்று (டிசம்பர் 28) அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை.

கட்சியின் இளைஞரணி தலைவராக தனது மகள்வழிப் பேரனை முன்னிறுத்தியதற்கு எதிராக அன்புமணி கோபப்பட்டதால், ராமதாஸ் இவ்வாறு கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் என்ன நடந்தது? ராமதாஸ் உடன் அன்புமணி வார்த்தை மோதலில் ஈடுபட்டது ஏன்? இதுகுறித்து பா.ம.க நிர்வாகிகள் கூறுவது என்ன?

 

பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 28) நடைபெற்றது.

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ராமதாஸ் Vs அன்புமணி

பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE

பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பிறகு கட்சியின் வளர்ச்சி குறித்து ராமதாஸ் பேசினார்.

பிறகு, கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இன்று முதல் முகுந்தன் பரசுமரான் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். "மருத்துவர் அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் செயல்படுவார்" எனவும் ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்துப் பேசுவதற்காக கௌரவ தலைவர் கோ.க.மணி மைக்கை கையில் எடுத்தார்.

அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா... என்ன அனுபவம் இருக்கிறது, கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதவி கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

பாமக மீது குடும்பக் கட்சி என்ற விமர்சனம் இருப்பதாகவும் அன்புமணி கூறினார். இதனால் கோபம் அடைந்த மருத்துவர் ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் இந்தக் கட்சியில் யாரும் இருக்க முடியாது" எனப் பதில் கொடுத்தார்.

"இது நான் உருவாக்கிய கட்சி" என ராமதாஸ் கோபத்தை வெளிப்படுத்த, அதற்கு அன்புமணி, "சரி" என்று மட்டும் பதில் அளித்தார். இதனால் மேலும் கோபம் அடைந்த ராமதாஸ், "மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்" என்றார்.

வெளியேறிய அன்புமணி

ராமதாஸ் Vs அன்புமணி

பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE

அப்போது தன் கையில் இருந்த மைக்கை அன்புமணி கீழே வைத்தார். மீண்டும் அதை எடுத்துப் பேசிய அவர், "பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளேன். அங்கு என்னைத் தொண்டர்கள் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டு செல்போன் எண்ணைப் பகிர்ந்தார்.

அப்போதே, "முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் விருப்பம் இல்லையென்றால்" என ராமதாஸ் கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, "கட்சியை விட்டுப் போகலாம்" என நிர்வாகிகள் தரப்பில் ஒரு சாராரிடம் இருந்து பதில் வந்துள்ளது.

தொடர்ந்து, "நான் தொடங்கிய கட்சி இது. நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும். இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம்" என ராமதாஸ் கூறினார். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அன்புமணி வெளியேறினார்.

முகுந்தன் பரசுராமன் யார்?

பொதுக்குழுவில் கட்சியின் இளைஞரணித் தலைவரின் பெயரை ராமதாஸ் அறிவித்தபோது, மேடையே நோக்கி முகுந்தன் பரசுராமன் வரவில்லை.

"யார் இந்த முகுந்தன் பரசுராமன்?" என பா.ம.க நிர்வாகிகளிடம் கேட்ட போது, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் என்றும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவம் பாமக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன. கூட்டத்தில் அன்புமணி பேசும் போது ஒரு சாராரும் ராமதாஸ் பேசும் போது ஒரு சாராரும் கை தட்டி தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

கட்சியின் செல்வாக்கில் பாதிப்பு வருமா?

ராமதாஸ் Vs அன்புமணி

பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE

படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

"கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கும் போது, பல்வேறு விஷயங்களைப் பேசுவதற்கான தளம் கிடைக்கும். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாத கட்சியாக பா.ம.க இன்று மாறிவிட்டது" என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

பாமகவின் தொடக்க காலங்களில் தலித் எழில்மலை, பேராசிரியர் தீரன் போன்றோர் கட்சியை வளர்த்ததாக கூறிய சிகாமணி, "வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய ராமதாஸ், பிற்காலத்தில் தனது மகனை முன்வரிசைக்கு கொண்டு வந்தார்" என்கிறார்.

குடும்பத்துக்குள் பதவிகளைக் கொடுப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியதைக் குறிப்பிட்ட சிகாமணி, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியாவை போட்டியிட வைக்கும் போது இந்தக் கேள்விகளை அன்புமணி முன்வைத்திருக்க வேண்டும்?" என்றார்.

"அன்புமணியைத் தவிர ராமதாசுக்கு எதிராக வேறு யார் எதிர்த்துப் பேசியிருந்தாலும் இந்நேரம் கட்சியை விட்டு நீக்கியிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள், வடமாவட்டங்களில் அக்கட்சியை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்" என்று சிகாமணி கூறினார்.

பாமக நிர்வாகிகள் சொல்வது என்ன?

ராமதாஸ் Vs அன்புமணி

பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE

படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இதுகுறித்து, பாமக கௌரவ தலைவர் கோ.க.மணியிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை.

"தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்" என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய பாமகவின் மூத்த தலைவரும் மாநில நிர்வாகியுமான ஒருவர், "எல்லா கட்சிகளுக்குள்ளும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இது எங்கள் கட்சியின் பொதுக்குழு. அதில் தங்களின் கருத்தை சிலர் முன்வைத்துள்ளனர்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொதுக்குழுக்களில் தங்களின் எதிர்ப்பை நிர்வாகிகள் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. பாமக பொதுக்குழுவில் நடந்ததை ஆரோக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கட்சியின் சீனியர்களை மதிக்க வேண்டும் என அன்புமணி கூறுவதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறிய அவர், "கட்சிக்குள் நியமனம் தொடர்பாக நடந்த கலந்துரையாடல் இது. கட்சியும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்" எனக் கூறினார்.

முகுந்தன் பரசுராமனை நியமனம் செய்வதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது, "இதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை" எனக் கூறியதோடு மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு.. மகா நடிப்பு.. அப்பாவும் மகனும் பேசிவச்சு நடிப்பு.. இப்ப நடிகர் எல்லாம் அரசியலுக்கு வாறங்கள்.. அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நடிப்பு.. மகா நடிப்பு.. அப்பாவும் மகனும் பேசிவச்சு நடிப்பு.. இப்ப நடிகர் எல்லாம் அரசியலுக்கு வாறங்கள்.. அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்கள்..

🤣

எல்லா முயற்சியும்  தோல்வியில் முடிய  இப்போது படத் தாயாரிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நடிப்பு.. மகா நடிப்பு.. அப்பாவும் மகனும் பேசிவச்சு நடிப்பு.. இப்ப நடிகர் எல்லாம் அரசியலுக்கு வாறங்கள்.. அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்கள்..

சிவாஜிகணேசன் - பிரபு சேர்ந்து நடிச்ச மாதிரி இருந்தது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இராமதாஸ் ஐயா சரியான நேரத்தில் சரியான கூட்டணி அமைத்து வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தார்.இன்றும் அவர் கூட்ணிக்கு வந்தால் விசிகவை கழட்டிவிட திமுக தயங்காது. அதே போல் அதிமுகவும் பாமக கூட்டணியை  தவறவிட விரும்பாது. வடமாவட்டங்களில் தொடர்ச்சியான செல்வாக்கைத் தக்க வைத்திருக்கிறார்..ஆனால் அன்புமணி  பொறுப்புக்கு  வந்தததும் தனது பதவி ஒன்றை மட்டுமே அவர் நோக்கமாக கொண்டார். கடந்த தேர்தலில் ஒரு ராஜ்யசபா பதவிக்காக பாஜகவுடன் கூட்டணிவைத்தது அன்புமணிதான். இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி போகவே விரும்பினார். அதிமுகவுடன் பாஜக நுட்டணி வைத்திருந்தால் திமுக இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்காது.அப்படி இருந்தும் பாஜக குறிப்பிட்ட சத வுPத வாக்குகளைப் பெற்றதற்கு பாமகவே காரணம். பாமகவின் நிலைப்பாட்டைத்தீர்மானிக்கும் தலைவராக இராமதாஸ்  இருப்பதே கட்சிக்கு ம் அவர்சார்ந்த மக்களுக்கும் நல்லது.9ஆது ஒரு சாதிக்கட்சியாக இருந்தாலும் தமிழ்சாதிக்கட்சி).இராமதாஸ் திராவிடக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் வல்லமை உள்ளவர். திருமாவைப் போல் தன்பலம் அறியாது 2 சீற்றுக்கு காலை நக்கி வெற்றியை திமுகவும் காங்கிரஜ் கட்சிக்கும் வாரிக் கொடுப்பவரல்ல. தேர்காலத்தில் பேரம் பேவசும் வல்லமை வாய்ந்த அரசியல்தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

9ஆது ஒரு சாதிக்கட்சியாக இருந்தாலும் தமிழ்சாதிக்கட்சி

பாமக என்று ஒரு சாதி கட்சி தமிழர்களிடம் இருப்பது பெருமையா? அவமானம் தான்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

பாமக என்று ஒரு சாதி கட்சி தமிழர்களிடம் இருப்பது பெருமையா? அவமானம் தான்.

உண்மையில் இது அவமானம் தான். ஆனால், இவ்வாறான சில்லறைகளை   ஊக்குவிப்பதே விடுதலை போராட்டம் என்ற மாயை சில குறுகிய மனம் கொண்ட  புலம் பெயர் வரட்டு தேசியம் பேசும்  இனவாதிகளால் பரப்பப்படுகிறது. 

பாராளுமன்றத்தில் லூசுத்தனங்களை செய்துவிட்டு முகநூல் நேரலையில் “தமிழேன்டா” என்று கொலரை இழுத்து விடுகையில் அதற்கு விசிலடிக்கும் கூட்டம் அதே போல் ஒரு சிங்கள உறுப்பினர் பாராளுமன்றில் இதே போல “சிங்களவன்டா” என்று கொலரை இழுத்து விட்டிருந்தால் “ ஐயோ! ஐயோ!  இனவாதம் என்று மூக்கால் அழுதிருக்கும். 

இவ்வாறான பித்தலாட்ட அரசியலே  தமிழர் பிரச்சனை 75 வருடங்களாக இழுபடுவதற்குஉரிய காரணங்களில் முக்கியமானது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

பாமக என்று ஒரு சாதி கட்சி தமிழர்களிடம் இருப்பது பெருமையா? அவமானம் தான்.

சாதி ஒழிப்பு 

பெண்ணிய ஒடுக்குமுறை 

பிரதேச வாதம் 

ஊழல் லஞ்சம் 

சட்ட ஒழுங்கு 

என தமிழர்களுக்குள் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்த்து எதிர்கொண்ட ஒரு அமைப்பு ஒவ்வொரு ஒழிப்பின் போதும் எதிரிகளையும் துரோகிகளையும் உருவாக்கி அதனாலேயே எம் கண்முன்னே அழிந்து நாசமாகப் போனதை கண்ணால் கண்டவர் நாம். 

எனவே பட்டறிவின்பால் அவர்கள் சாதிக்கட்சியினர் இவர்கள் தலைமுறைக்கட்சியினர் என்று எவரையும் எதிரி துரோகியாக்காமல் அவர்களையும் நண்பர்களாக வைத்துக் கொண்டு எமக்கு அவர்களிடம் இருந்து எதை கறக்கலாம் என்று பார்ப்பதே வரலாறு தந்திருக்கும் பாடம்.

Edited by விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.