Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரைச்சல் வேண்டும்

----------------------------------
கடவுளே
வருடம் வந்து விட்டதே என்று
காணி நிலம் கேட்பார்கள்
சொத்து சுகம் கேட்பார்கள்
நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை
 
ஆனால்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும்
 
ஒன்றுக்கு மேல் கொடுத்தால்
இன்னும் நல்லது
 
பெரிதாக தேவையில்லை
சிறியவையாகவே போதும்
 
பச்சை தண்ணீர் குடித்தால்
மூக்கு ஓடுவது போல
 
முருங்கைக்காய் சாப்பிட்டால்
தோலில் அரிப்பு வருவது போல
 
இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது
உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது
நடந்தால் பாதம் நோவது
இருந்தால் பிஷ்டம் நோவது
படுத்தால் கழுத்து சுளுக்கு
குனிந்தால் இடுப்பு பிடிப்பு
 
இப்படி சிலதை
அள்ளி அள்ளி கொடுக்கவும்
அளவில்லாத கருணையாளனே
 
இதில் எதுவும் ஒரு போதும் தீரவும் கூடாது
 
எந்தக் கரைச்சலும் இல்லாதவர்கள்
உள்நாட்டு பிரச்சனைகள்
உலக பிரச்சனைகள்
எல்லாப் பிரச்சனைகளையும்
தமதென்றாக்கி
அடிமுடி தேடி
பக்கத்தில் இருப்பவர்களை பாடாய் படுத்துகின்றார்கள்
கடவுளே.
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

கரைச்சல் வேண்டும்

என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?

🤣.............

அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்...........

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

🤣.............

அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்...........

2050 வாக்கில் கலிபோர்ணியா தனிநாடாக போகிறது என்கிறார்களே?

சிகப்பு கட்சியும் இது இருந்தும் நம்மளுக்கு பிரயோசனமில்லை என்று கைகழுவி விடுவார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2050 வாக்கில் கலிபோர்ணியா தனிநாடாக போகிறது என்கிறார்களே?

சிகப்பு கட்சியும் இது இருந்தும் நம்மளுக்கு பிரயோசனமில்லை என்று கைகழுவி விடுவார்களோ?

ம்ஹூம்.............. கலிஃபோர்னியாவை விட்டுவிட்டு, பாதாமிற்கும் பிஸ்தாவிற்கும் எங்கே போவார்கள் மற்ற 49 மாநிலக்காரர்களும்.................🤣.

இந்தியாவில் தமிழ்நாடு போல அமெரிக்காவில் கலிஃபோர்னியா.......... ஒன்றிய அரசு கொஞ்சம் குனிந்து தான் உள்ளே வரவேண்டும்.................😜

ஆனால், ஒருவரை ஒருவர் கைவிடவும் முடியாது.

ரானால்ட் ரேகன் போல ஒருவர் வந்தால் கலிஃபோர்னியாவும் சிவப்பாகலாம்..............

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

ரொஸ்லாகாரனைத் தொடர்ந்து பலரும் கலிபோர்ணியாவை விட்டு ஓடுகிறார்களாம்.

ஆனபடியால் கலிபோர்ணியா பழைய மாதிரி இருக்காதென்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ரொஸ்லாகாரனைத் தொடர்ந்து பலரும் கலிபோர்ணியாவை விட்டு ஓடுகிறார்களாம்.

ஆனபடியால் கலிபோர்ணியா பழைய மாதிரி இருக்காதென்கிறார்கள்.

வேல்ஸிலிருந்து அருள் என்பவர் சொல்லியிருக்கின்றார் இந்த வருடத்துடன் அமெரிக்காவின் கதையே முடிந்து விடும் என்று.....................🤣.

போன டெஸ்லா திரும்பி வரத்தான் வேண்டும், அண்ணா......... எச் 1 - பி விசாப் பிரச்சனை தான் எலானுக்கும், விவேக்கிற்கும், ஶ்ரீராமிற்கும் மேல் டெக்சாஸில் தொங்குகின்ற கத்தி போல............. அப்படியே வராவிட்டாலும் நஷ்டமில்லை............ இங்கு கலிஃபோர்னியாவில் போய்க் கொண்டிருக்கும் ஆயிரம் முயற்சிகளில் ஒன்றோ இரண்டோ புதிதாக வெற்றிக்கொடி ஏற்றும்............. 

1 hour ago, ரசோதரன் said:

🤣.............

அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்...........

இதெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம், டெஸ்லா காரரின் தொல்லைதான் பொறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்......

இணையவன் குறிப்பிட்டதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன்.

எலோன் மஸ்க்குக்கும் ஏதாவது கரைச்சல் தர  வேண்டும்.

யேர்மனியில் பயங்கரவாதம் நடந்தால், கன்ஸிலரை முட்டாள் என்கிறார். யேர்மனிய ஜனாதிபதியைக் கேவலப் படுத்துகிறார். அவரது தயாரிப்பான டெஸ்லா காரிலே குண்டு கொண்டு வந்து  வெடிக்க வைத்த பயங்கரவாத த்துக்கு யாரை நோவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இதெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம், டெஸ்லா காரரின் தொல்லைதான் பொறுக்க முடியாது.

28 minutes ago, Kavi arunasalam said:

எலோன் மஸ்க்குக்கும் ஏதாவது கரைச்சல் தர  வேண்டும்.

உண்மை தான்.............. கடவுள் இந்த ஆளை சும்மா விட்டாலும், போகிற போக்கில் இவரது குடியரசுக்கட்சி ஆட்களே கரைச்சல்கள் கொடுத்து தான் ஆளை கட்சியிலிருந்து அனுப்புவார்கள் போல..........

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெஃப் பேசோஸ், இப்படி எத்தனை பேர் அமைதியாக உலகப் பணக்காரராக வந்து, அமைதியாகப் போயும் விட்டார்கள்........... இந்தப் புதுப் பணக்காரரின் தலைவலி பெரிய தலைவலியாக இருக்குது எல்லாருக்கும்........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

🤣.............

அதிலிருந்து தப்பத்தான் இந்த வேண்டுதல், அண்ணா.......... ட்ரம்பிற்கு கழுத்து சுளுக்கவும், புடினிற்கு இடுப்பு பிடிக்கவும், மோடி தடக்கி விழவும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றேன்...........

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். "

3 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?

அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்?

ரசோதரன், இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனை.  தன் சபாநாயகர்  பதவியை ராஜினாமா செய்து விட்டார் ரன்வெல. ஆனா இன்னும் அதை பிடிச்சு தொங்கிக்கொண்டு, மக்களின் பிரச்சனை, தங்களின் ஊழல் பிரச்சனையை மறைத்து, வளங்களையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு பாராளுமன்றத்தை அவமதிக்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் சொல்லும் இந்த கரைச்சல் சரிவராது, வேறேதும் வேண்டும். நல்லா யோசிச்சு சொல்லுங்கோ! அதோட, நம்ம சுமந்து இந்த வருடத்துக்குள் வீட்டை இடித்து தரை மட்டமாக்குவது என்று அடம் பிடிக்கிறார், அவருக்கும் ஏதாவது .....? இருந்தா சொல்லுங்கோ.      

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:
4 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?

அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்?

அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி தொடங்குது.

மற்றைய நாடுகள் போல அல்லாமல் தேர்தல் கார்த்திகை முதல் செவ்வாய்

வென்றவர் உடனே பதவி ஏற்க முடியாது.

தைமாதம் 20ம் திகதி தான் பதிவி ஏற்று அவரின் அட்டகாசங்களைத் தொடங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எலோன் மஸ்க் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் ( அழிக்க முயற்சிக்கிறார்) அதற்கெதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று  கருத்து நிலவுகின்றதாம். எலோன் மஸ்க் ஆதரிக்கின்ற இனவெறி கட்சியான AFD யின் தலைவி தனது ஒரு  இன பாட்னரை இலங்கையராக வைத்திருப்பதால் அவர்கள் நல்லவர்கள் என்று எலோன் மஸ்க் பிரசாரம் செய்கின்றாராம் செய்தியில் சொன்னார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, satan said:

இவர்களுக்கு நீங்கள் சொல்லும் இந்த கரைச்சல் சரிவராது, வேறேதும் வேண்டும். நல்லா யோசிச்சு சொல்லுங்கோ! அதோட, நம்ம சுமந்து இந்த வருடத்துக்குள் வீட்டை இடித்து தரை மட்டமாக்குவது என்று அடம் பிடிக்கிறார், அவருக்கும் ஏதாவது .....? இருந்தா சொல்லுங்கோ.      

ஒரு மனிதனுக்கு ஆகப்பெரிய கரைச்சல் அந்த மனிதனின் மனைவியாலேயே கொடுக்கப்பட முடியும் என்பது தசரத சக்கரவர்த்தி காலத்தில் இருந்து நாங்கள் கண்ட உண்மை............... தசரத சக்கரவர்த்தி கொஞ்சம் அளவுக்கதிகமாக வைத்திருந்ததும் ஒரு பிழை தான்..............😜.

ஆனால், ஆபிரகாம் லிங்கன் அந்தப் பெரிய வீட்டுக் கரைச்சலையும் தாண்டி, அவர் மனைவி இடைக்கிடையே தாண்டவம் ஆடுவாராம் என்று சொல்கின்றனர், அரசியலில் சாதித்தார்.

சில பேர்கள் கரைச்சலை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டு விடுவார்களோ................ சுமந்திரனுக்கும் லிங்கனுடன் பெயர் ஒத்துப் போகுது............🤣.

இவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பம்.............. ஆனால் தலை வரவர உண்டியல் மாதிரி உள்ளுக்குள் ஒன்றும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது............🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எலோன் மஸ்க் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் ( அழிக்க முயற்சிக்கிறார்) அதற்கெதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று  கருத்து நிலவுகின்றதாம். எலோன் மஸ்க் ஆதரிக்கின்ற இனவெறி கட்சியான AFD யின் தலைவி தனது ஒரு  இன பாட்னரை இலங்கையராக வைத்திருப்பதால் அவர்கள் நல்லவர்கள் என்று எலோன் மஸ்க் பிரசாரம் செய்கின்றாராம் செய்தியில் சொன்னார்கள்

அவர் இன வெறியர் அல்ல. நாட்டுக்குள் அகதிகளாக ஜேர்மனிக்குள் நுழைந்து வேலை வெட்டிகளுக்கு போகாமல் அரச செலவில் வாழ்ந்து கொண்டு கும்மாளாம் அடிப்பவர்களை எதிர்க்கின்றார்.வீதியோரங்களில் இந்த கெட்ட ஜென்மங்கள் செய்யும் அடாவடிதனங்களை எதிர்க்கின்றார்.மக்கள் கூடும் இடங்களில் ஜேர்மனியர்களை தேடி கத்தியால் குத்தும் அரபு அகதிகளை எதிர்க்கின்றார்.பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் அகதிகளை எதிர்க்கின்றார்.தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஜேர்மனியர்களை பன்றி என திட்டும் முஸ்லீம்களை எதிர்க்கின்றார். இது போல் பல நூறு விடயங்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து பாராளுமன்றத்தில் வாதாடுகின்றார்.

அவர் சொல்வதெல்லாம் பிழை என ஒருவர் வாதாடுபவரேயானால்.....அந்த நபரும் நான் மேலே சொன்ன செயல்களை ஆதரிக்கும் ஒரு ஜென்மாகவே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கரைச்சலோடு குடைச்சலும் வேண்டும்போல .............!  😁

  • கருத்துக்கள உறவுகள்

ரசோதரன், உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்வேன், வேறொருவருக்கும் சொல்லிபோடாதேங்கோ. முக்கியமாக கோசானுக்கு சொல்லிபோடாதேங்கோ. அனுரா மாத்தையாவுக்கு மட்டும் எந்த ஒரு கரைச்சலும் குடைச்சலும் வரக்கூடாது! 

பிரார்த்தனையும் செய்யிறேன். 

2 hours ago, ரசோதரன் said:

அவர் மனைவி இடைக்கிடையே தாண்டவம் ஆடுவாராம் என்று சொல்கின்றனர், அரசியலில் சாதித்தார்.

மனுஷன் ரொம்ப சாதுவாய், வாயில்லாப் பூச்சியாய் இருந்திருப்பார். அதனாலேயே சாதிக்க முடிந்திருக்கு. ஆனால் எங்கட சுமந்துக்கு வாய்தான் அதிகம். அதிலும் உளறுவாய், நாறல் வாய்.

  • கருத்துக்கள உறவுகள்

🤣

ஈழதமிழர் என்றால் AFD   இனவாத கட்சி ஆனபடியால்ஆதரிக்க மாட்டார்கள் என்று  சமீபத்திலும்  கோஷான் சே பாவம் நம்பியிருந்தார்  ஆனால்  ஈழதமிழர்களிலும் AFD,  புதின்,  கிம் யொங் ,  முல்லாக்கள் தலிபான்பான்களின் விசுவாசிகளும் உள்ளனர் 😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணி நேராக இருந்தால் சுத்தியலுக்கு பிடிக்காது.
மனிதன் நேர்மையாக இருந்தால் சுற்றிவர இருப்பவர்களுக்கு பிடிக்காது.

நேர்மையும் உண்மையும் நியாயமும் கசக்கும்.
பொய்யும் பிரட்டுகளும் இனிக்கும்.
இதுதான் கலிகாலம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.