Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

வசிஷ்டர் வாயால் ராஜரிசி🤣

எனக்கு ஒரு பெரிய குழி எங்கையாவது கிண்டி வைச்சிருப்பியள் எண்டு தெரியும்.😂
ஆனால் நம்மள் போக்கு இது மாதிரித்தான்...😎

துடைச்சிட்டு திருப்பியும்....🤪

xlC5jX.gif

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் விடயத்திற்கு சரியாக சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் 👈👍 

முதலில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இன்றும் பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள்.

அவலங்கள் இப்படியிருக்க.....

அவர்களுக்கு வராத கனடா வசதி உங்கள் உறவினருக்கு எப்படி வந்தது? லஞ்சமா? ஊழலா? அல்லது.......அ...ர......சி....ய.....ல் செல்வாக்கா? 😎

 

அதாவது 1984 ல் எம்ஜியால் ஆட்சி வழங்கிய ஈழதமிழருக்கான கல்வி வசதியை   உங்களினதும் உங்கள் தலைவர் சீமானினதும்  தலைவி ஈழத்தாய் ஜெயலலிதா   பறித்தெடுத்ததைப்பற்றியோ   பின்னர் 1996 ல்  அவர் தோற்கடிக்கபட்டவுடன்  அவ்வசதி மீண்டும் ஈழத்தமிழருக்கு  வழங்கப்பட்டதை பற்றியோ உங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் எனது உறவினர் எப்படி படித்தார் எனபது மட்டும் உங்களுக்கு உறுத்துகிறதோ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, island said:

 

அதாவது 1984 ல் எம்ஜியால் ஆட்சி வழங்கிய ஈழதமிழருக்கான கல்வி வசதியை   உங்களினதும் உங்கள் தலைவர் சீமானினதும்  தலைவி ஈழத்தாய் ஜெயலலிதா   பறித்தெடுத்ததைப்பற்றியோ   பின்னர் 1996 ல்  அவர் தோற்கடிக்கபட்டவுடன்  அவ்வசதி மீண்டும் ஈழத்தமிழருக்கு  வழங்கப்பட்டதை பற்றியோ உங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் எனது உறவினர் எப்படி படித்தார் எனபது மட்டும் உங்களுக்கு உறுத்துகிறதோ? 

நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயத்தை பகிர்ந்தீர்கள். அதனால் அந்த கேள்வி வந்தது. 


மீண்டும் கேட்கின்றேன் அங்கே ஆயிரம் ஆயிரமாய் ஈழத்தமிழர்கள் அவதிப்படும் போது எப்படி உங்கள் உறவினருக்கு மட்டும் கனடா பறக்கும் அதிஷ்டம் வந்தது. ரகசியத்தை சொல்லித்தொலையுங்கள். கஷ்ரப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தேடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயத்தை பகிர்ந்தீர்கள். அதனால் அந்த கேள்வி வந்தது. 


மீண்டும் கேட்கின்றேன் அங்கே ஆயிரம் ஆயிரமாய் ஈழத்தமிழர்கள் அவதிப்படும் போது எப்படி உங்கள் உறவினருக்கு மட்டும் கனடா பறக்கும் அதிஷ்டம் வந்தது. ரகசியத்தை சொல்லித்தொலையுங்கள். கஷ்ரப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தேடட்டும்.

ஆயிரமாயிரம் மக்கள் ஈழத்தில் அவதிப்பட அவர்களை விட்டு விட்டு  உங்களுக்கு ஹெல்மட்  ஹோல்  அழைப்பிதழ் அனுப்பி ஜேர்மனிக்கு அழைத்தைப்போல  அன்று  Jean Chretien  அவர்களை அழைத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

யாக்கோபு சைமன் செபஸ்டியன் என்பவர் சீமான் ஆகலாம் என்றால், தெட்சணாமூர்த்தி என்பவர் கருணாநிதி ஆகலாம் என்றால் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவர் ரஜினிகாந்த் என்றாவது ஒன்றும் தப்பில்லையே!😂

 

ஹா ஹா ஹா 

சரியான பதில் 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2025 at 08:12, Justin said:

சீமானின் கட்சி, "புத்திசாலிகளால் முட்டாப் பீசுகளுக்காக நடத்தப்படும் அரசியல் கட்சி" என்ற விம்பம் வலுவாக உருவாகி வருகிறது.

உண்மை 

இந்த பெரியாரைப் பற்றிய திடீர் குற்றச்சாட்டை சீமான் சொன்னதற்குக் காரணம் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்க மத்திய ஆளும் வர்க்கத்தின் ஆசியை வேண்டி இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

உண்மை 

இந்த பெரியாரைப் பற்றிய திடீர் குற்றச்சாட்டை சீமான் சொன்னதற்குக் காரணம் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்க மத்திய ஆளும் வர்க்கத்தின் ஆசியை வேண்டி இருக்கலாம் 

மத்தியில் ஆளும்  பிஜேபி யை குளிர்விப்பதற்காக தன் வழிகாட்டியாக அறிவித்து கொண்டர் மீதே  திடீர் குற்றச்சாட்டு 🤣
உடனே  அவரது வெளிநாட்டு ஈழ தமிழ் விசுவாசிகளும் பெரியாரை பற்றி  கேள்விகள் கேட்கின்றார்கள்.
ஆனால் விவசாயி அல்லது  புலி சின்னம் கிடைத்தாலும் பயன் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, island said:

ஆயிரமாயிரம் மக்கள் ஈழத்தில் அவதிப்பட அவர்களை விட்டு விட்டு  உங்களுக்கு ஹெல்மட்  ஹோல்  அழைப்பிதழ் அனுப்பி ஜேர்மனிக்கு அழைத்தைப்போல  அன்று  Jean Chretien  அவர்களை அழைத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். 

நானும் அப்பிடியிருக்குமெண்டுதான் நினைக்கிறன்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நானும் அப்பிடியிருக்குமெண்டுதான் நினைக்கிறன்...:cool:

உங்களுக்கு ஹெல்மெட் கோல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட உடான்ஸ்சாமி  ஆசைப்படுகிறார். 

அனுமதி கிடைக்குமா🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கருத்தை சோ ராமசாமியும் சொன்னார்.. மன்னிப்பு கேட்க வைத்தது திக! பத்திரிகையாளர் மணி தகவல்

Yogeshwaran MoorthiUpdated: Wednesday, January 15, 2025, 12:53 [IST]
 

seeman periyar naam tamilar katchi

பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரிய இயக்கங்கள், அரசியல் கட்சியினர் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பெரியார் தொடர்பான விவாதத்திற்கு வரத் தயார் என்று தொடர்ந்து சர்ச்சையாக பேசி வருகிறார்.

Also Read

 

மனச் சிக்கலில் சீமான்.. டெல்லி ஸ்கிரிப்ட்.. விஜய் போபியோ.. வெளுத்த வேல்முருகன் கட்சி உதயகுமாரன்!

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், பெரியார் குறித்து ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. என்ன காரணம் இருந்தாலும், சீமான் பேசுவது தவறு. பேசுவதற்கான ஆதாரத்தை கேட்டால், நீங்கள் ஆதாரத்தை பூட்டி வைத்துள்ளீர்கள். நான் எப்படி கொடுப்பது என்று பதில் அளிப்பது ஏற்புடையதல்ல. இது தவறான, அராஜகமான பதில்.

Internet Blackout On January 16, 2025? The Simpsons 'Prediction' | Oneindia Tamil

52 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு தலைவரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள். அப்படி சொல்லும் போது, உங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்க வெண்டும். ஆதாரம் இல்லாததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஏற்புடையதல்ல. இது சட்டத்தின் பார்வையிலும் நிற்காது. சீமான் கூறிய கருத்தை மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியும் கூறி இருக்கிறார்.

உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் கூறியதாக சீமான் பேசி இருக்கிறார். பெரியார் அப்படி எங்கேயும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. இதற்கான ஆதாரம் சீமானிடம் இருக்க வேண்டும். இதே தவறை 1973ல் சோ ராமசாமியும் செய்தார்.

Recommended For You

 

பெரியாரை இழிவு செய்த சீமான்..செம்ம குஷியில் வரிந்து கட்டி ஆதரவு தரும் பாஜக 'தலை'கள் பட்டாளம்!

அப்போது திராவிடர் கழகம் சோ ராமசாமி மீது வழக்கு போட்டது. அதன்பின் நீதிமன்றத்தில் சோ ராமசாமி மன்னிப்பு கேட்டார். இந்த மாதிரியான விஷயங்களை பேசும் போது ஆதாரம் இருக்க வேண்டும். பெரியாரின் அனைத்து எழுத்துகளையும் பொதுவெளியில் வைக்க மறுக்கிறார்கள் என்பது நியாயமான குற்றச்சாட்டு தான். ஆனால் சீமான் பேசுவது சட்டப்படியும் தவறு தான்.

சீமானுக்கு இது தெரியவில்லை. அவரின் கருத்துகள் தண்டனைக்குரிய குற்றம். இதனை ஏன் சீமான் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு அரசியல் தற்கொலை. பெரியாரை வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று பேசியவர் தான் சீமான். தற்போது பெரியார் சொல்லாத ஒன்றை சொல்லியதாக சீமான் பேசுவது தான் தவறு.

பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக அரசியலில் அவரை விமர்சித்து ஒரு வாக்கும் யாருக்கு கிடைக்காது. 8 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில், அதனை கெடுத்து தலையில் மண்ணை போட்டுக் கொள்ளும் பணியை தான் சீமான் செய்கிறார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்குள்ளும் அதிருப்தி இருப்பதாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/cho-ramasamy-said-sorry-in-the-court-for-the-comments-against-periyar-which-is-also-spoken-by-seema-671313.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

உண்மை 

இந்த பெரியாரைப் பற்றிய திடீர் குற்றச்சாட்டை சீமான் சொன்னதற்குக் காரணம் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்க மத்திய ஆளும் வர்க்கத்தின் ஆசியை வேண்டி இருக்கலாம் 

ஆள் ஆளுக்கு க‌ற்ப‌னையில் அடிச்சு விடுங்கோ........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

உங்களுக்கு ஹெல்மெட் கோல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட உடான்ஸ்சாமி  ஆசைப்படுகிறார். 

அனுமதி கிடைக்குமா🤣.

தாராளமாக.....😂
நாலு பேர் சிரிக்கணும் எண்டா அந்த பாவத்தையும் செய்து தொலையும்....😎

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வீரப் பையன்26 said:

ஓம் ஓம் சீமான் அப்ப‌ ப‌ய‌ந்த‌ கோழையா இருந்தார்

ஏதும் உங்க‌ளிட‌த்தில் ஆதார‌ம் இருக்கா👍................

நேற்று இதே இழையில் குமாரசாமி அவர்களின் கருத்துக்கு பதில் கூறும் போது, புலிகள் பலமாய் இருந்த  காலத்தில் வேறு பெயரில் எழுதினார்கள் என குறிப்பிட்டு இருந்தீர்கள், அதை வைத்து தான் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

உண்மை 

இந்த பெரியாரைப் பற்றிய திடீர் குற்றச்சாட்டை சீமான் சொன்னதற்குக் காரணம் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்க மத்திய ஆளும் வர்க்கத்தின் ஆசியை வேண்டி இருக்கலாம் 

இது திடீர் குற்றச்சாட்டு அல்ல திட்டமிட்ட குற்றசாட்டாகத்தான் பார்க்கிறேன். எஜமான் சொன்னால் பொட்டு அம்மானை கேவலமாக பேசியது போல் இயக்கத்தையும் பேசுவார்.  வாயை வாடகை விடுபவருக்கு அதிலிருந்து வரும் சொற்களுக்கு பொறுப்பில்லை, வாடகைக்கு எடுத்தவருக்கே பொறுப்பு.

என்ன வேணாலும் பேசிக்கட்டும் ஆனா பேசிட்டு இயக்கத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வெட்கக்கேடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீழ்த்த முடியாத பெரியார்! வீழப் போகும் சீமான்!

ஓயாமல் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நாளும், பொழுதும் மக்கள் பிரச்சினைகளை ஊன்றி கவனித்தும், அரசின் சட்ட திட்டங்களை பொது நலன் சார்ந்து விமர்சித்தும் அறம் இணைய இதழில் எழுதி வருகின்ற நான் என் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக அரசியல் சூழலில் சில அதிரடி மாற்றங்களுக்கான காலம் கனிகிறது;

காரணம், எந்த பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு  ஆட்சி அதிகாரத்தை செய்து வந்தனரோ.., அந்த பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் பேசுவதை ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் திராவிட அரசியல் இயக்கங்கள் இருக்கும் யதார்த்தம் ஒரு அசாதாரண நிலையாகும்.

திராவிட இயக்க தொண்டர்களோ, மக்களோ இதற்கு மிகப் பெரிய வினையை ஆற்றாமல் இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனரே.. இதை எப்படி புரிந்து கொள்வது..?

ஒரு முகம் தெரியாத அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த அளவுக்கு கூட ஒரு சகாப்ததையே இங்கு நிகழ்த்திய பெரியாருக்கு ஆதரவாக ஒரு பேரலை எழவில்லையே…என்றால், அதற்கு காரணம், திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் தாங்கள் பேசிய கொள்கைக்கு முற்றிலும் எதிரானாவர்களாக – போலியானாவர்களாக – நடந்து கொண்டிருக்கும் அவலத்தை மக்கள் பார்த்து சலிப்பின் எல்லைக்கே சென்றுள்ள யதார்த்தம் தான்…!

பெரியார் அளவுக்கு பெண்ணுரிமையை பேசிய இன்னொருவர் இந்த மண்ணில் உண்டா? பெரியார் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை முழுமையாக – நிபந்தனைகள் இன்றி ஆதரித்தார் என்பது தான் 100 சதவிகித உண்மை!

1613637237_f27aa0c52de8f0bdcd03.jpg

”ஒரு பூனையிடம் இருந்து தனக்கு சுதந்திரம் கிடைக்குமென்று எலி எப்படி நம்ப முடியாதோ, அது போல ஆணிடமிருந்து தனக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று ஒரு பெண் நம்ப முடியாது. ஆகவே உன் சுதந்திரம் என்பது பிறரால் உனக்கு தரப்படுவது அன்று. அது உன்னால், நீயே எடுத்துக் கொள்ள வேண்டியதாகும்” என்ற பெரியார் எப்படி ‘உனக்கு இச்சை வேண்டும் என்றால், தாயையோ, சகோதரியையோ புணரலாம்” என்று ஒரு பெண்ணுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு ஆதரவாக பேசுவார்..?

நான் பெரியார் எழுதியவை அனைத்தையும் படித்தவன் அல்ல, என்றாலும், அவரை ஆழமாக உள் வாங்கி நெகிழ்ந்தவன் என்ற வகையில், அறுதியிட்டு நான் உறுதிபடக் கூற முடியும், பெரியார் இவ்விதம் பேசி இருக்க வாய்ப்பே இல்லை.

Periyar.jpeg

‘பெரியார் நடத்திய திராவிடர் கழக மாநாடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்’ என்ற வரலாறு தெரிந்தவர்கள் இந்த அவதூறை ஒரு போதும் நம்ப மாட்டார்கள்!

பெரியாருக்கு இருக்கும் மிகப் பெரிய சிறப்பு என்ன தெரியுமா…? ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்க்கத் தயங்கிய பார்ப்பனியத்தை துணிந்து எதிர்த்தது தான்! பெரியாரின் இந்த சிறப்புக்கு ஈடு இணை சொல்ல இந்தியாவில் வேறெவருமே இல்லை. இந்த விஷயத்தில் அம்பேத்கரைக் கூட பெரியாருக்கு இணை சொல்ல முடியாது. அதனால் தான் அம்பேத்கரைக் கூட உள்வாங்கி செரிக்க தயாரான பார்ப்பனியம், பெரியாரை விழுங்க முடியாமல் விபீஷணர்களை தூண்டி விடுகிறது. அவர் இமேஜை சிதைக்க பார்க்கிறது.

சந்தேகமில்லாமல் சீமான் பாஜகவின் உருவாக்கம் என்பதற்கு அந்தக் கட்சியின் தலைவர்கள் பேசி இருப்பதே சாட்சியாகும்.

இதோ பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசுவதை கவனியுங்கள்; சீமான் எங்கள் வழியில் வந்திருக்கிறார். காரணம், நாங்கள் இத்தனை காலமாக எங்களின் கருத்தியலாக எதனைச் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதனையே சீமான் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எனவே, இதனை எங்கள் கருத்தியலுக்கான பலமாகவும், ஆதரவாகவும் பார்க்கிறேன். இது பாஜகவின் கருத்தியலுக்கான வெற்றியாக பார்க்கிறேன். உதாரணத்திற்கு, இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என அவ்வப்போது நான் கூட்டத்தில் சொல்வதுண்டு’’

maxresdefault-2.jpg

இதே போல அண்ணாமலை, “சீமான் சொல்வதைப் போன்று பெரியார் பேசவில்லை என்று சிலர் மறுக்கின்றனர். ஆனால், அவர் அப்படித்தான் பேசினார். அதற்கான ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை, எந்த புத்தகத்தில் கூறியுள்ளார். என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். என்கிறார்.

இன்று சீமானை ஆதரிக்கும் பார்ப்பனிய பாஜக தான், நாளை சீமானை அழிக்க இருக்கிறது…! நான் சொல்வது சத்திய வார்த்தை!

தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய் – அரணாய் – திகழ்ந்த பெரியாரை தகர்த்துவிட்ட பிறகு, தனக்கே இங்கு பாதுகாப்பில்லை என்பதை சீமான் உணருவதற்கு வெகுகாலம் ஆகாது.

நான் திராவிட  இயக்க ஆதரவாளன் அல்ல, அதே சமயம் திராவிட கருத்தியலில் உடன்பாடு உள்ளவன். அதே போல தமிழ் தேசியத்திலும் பெருமதிப்பு கொண்டவன்.

தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் போது, நாம்   நம்மை தமிழன் என்று தான் அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ அன்றி, திராவிடன் என்று சொல்வதில்லை. தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்போமே தவிர, திராவிட நாட்டில் இருந்து வருகிறோம் எனச் சொல்வதில்லை. தமிழ் மொழியும், தமிழ் மண்ணும், தமிழ் பண்பாடுமே நம் அடையாளமாகும்.

இந்தியாவில் பாஜகவின் எழுச்சிக்கு பிறகு பார்ப்பனியத்தின் எழுச்சி வீரியமாக இருக்கிறது.

கல்வியில் பார்ப்பனியச் சிந்தனைகளை வீரியமாக விதைத்து வருகிறார்கள். கார்பரேட்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை சிதைத்து, உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்த விழைகிறார்கள்! இயற்கை வளத்தை அழிக்கும் விவசாயக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். மதவாத பிற்போக்கு கருத்தியலுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்ட திமுக, தான் செய்து கொண்டிருக்கும் பகாசூர ஊழல்களில் தண்டிக்கப்படாமல் இருக்க பாஜகவிற்கு மறைமுக ஆதரவளித்து வருவதே யதார்த்தமாக உள்ளது.

ஆக, திராவிட கருத்தியலுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் திமுக மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. திமுகவின் வீழ்ச்சி பெரியாரின் வீழ்ச்சியாகிவிடாது. திமுக, அதிமுகவே இல்லை என்றாலும், பெரியார் நின்று நிலைப்பார்! ஏனென்றால், உண்மை எப்போதும் நின்று நிலைக்கும்.

சீமான் தமிழ் தேசிய கருத்தியலுக்கு எந்த அளவுக்கு வளம் சேர்த்தாரோ.., அதைவிட அதிகமாக தற்போது பார்ப்பன ஆதரவு நிலைபாடு எடுத்து தமிழ் தேசியத்தின் பேரழிவுக்கும் காரணமாகிறார் என்ற வருத்ததை நான் இங்கு நான் பதிவு செய்கிறேன்.

திராவிட இயக்க அரசியல்வாதிகளின் போலிதனங்களை, பொய்மைகளை, துரோகங்களை தட்டிக் கேட்டு அவர்களை நேர்வழிப்படுத்தும் ஆளுமைகளோ, அரசியல் தோழமைகளோ இல்லாத வெற்றிடத்தில், சீமான் சிலம்பம் சுற்றி பார்ப்பனியத்திற்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறார்.

சாவித்திரி கண்ணன்

 

 

https://aramonline.in/20443/periyar-seeman-anti-brahmin/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய் – அரணாய் – திகழ்ந்த பெரியாரை தகர்த்துவிட்ட பிறகு, தனக்கே இங்கு பாதுகாப்பில்லை என்பதை சீமான் உணருவதற்கு வெகுகாலம் ஆகாது.

 

செக்ஸ் சைக்கோ சீமான் நம்மை, கட்டுரையாளரை விட பெரியாரை பற்றி தெரிந்தவர்.

ஆனால் தனக்கு பேட்டா கிடைத்தால் தமிழ் சமூகத்துக்கு எந்த கெடுதலையும் செய்ய தயங்கமாட்டார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் குறித்து சர்ச்சை… சீமானுக்கு சிக்கல்!

BySelvam Jan 15, 2025
jKfWeukp-Seeman-4.jpg

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுக்கையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஜனவரி 22-ஆம் தேதி சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியாரை இழிவுபடுத்தி கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு ஆதாரம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் பதிவான போதும் ஆதாரம் கொடுக்காமல் தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

WhatsApp-Image-2025-01-09-at-11.14.01-AM

தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய பெரியாரை சீமான் இழிவுபடுத்துகிற செயல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி வருகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்த பின்னரும் பெரியார் பற்றி அவதூறு பரப்புவதை சீமான் நிறுத்திக் கொள்ளாத காரணத்தால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற ஜனவரி 22 புதன்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை நீலங்கரையில் உள்ள சீமானின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

எனவே பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களும், தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களும், தமிழின உணர்வாளர்களும் அவசர அழைப்பாக ஏற்றுக்கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
https://minnambalam.com/political-news/kovai-ramakrishnan-announces-protest-in-front-of-seeman-house/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பெரியார் அவதூறு: சீமானுக்கு சம்மன்!

Bychristopher Jan 18, 2025
WYvdyi7p-image-5.png

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை ஆலோசித்து வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பெரியார் பற்றி கூறிய பல்வேறு கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சை பாஜகவினர் வரவேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, அன்புமணி ராமதாஸ் என பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் காரையும் அடித்து உடைத்தனர்.

இதனையடுத்து சீமான் மீது சென்னை, கோவை, நெல்லை, தஞ்சாவூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் வழக்கறிஞர் அணியினரே பல மாவட்டங்களில் சீமான் மீது புகார் கொடுத்துள்ளனர்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ”எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடும் நிலையில்… சீமானை கைது செய்தால், இடைத் தேர்தலில் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்கச் செய்யுமோ என்ற ஆலோசனையும் அரசியல் ரீதியாக ஆட்சி மேலிடத்தில் நடந்தது.

அதேநேரம் சீமானை கைது செய்யக் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் “தற்போது உயர் நீதிமன்றம் பொங்கல் விடுமுறை. விடுமுறை கால நீதிபதியாக திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் இருக்கிறார். இவர் ஏற்கனவே மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் வழக்கில் அரசுத் தரப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர். அதனால் பொங்கல் விடுமுறை முடிந்து சீமானை கைது செய்யலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டது” என்கிறார்கள் திமுகவின் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.

திங்கள் கிழமை பொங்கல் விடுமுறை முடிந்து வழமையான நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்குகின்றன. இந்த சூழலில் சீமான் மீது தமிழகம் முழுதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக அவரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்துவதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீமானுக்கு சம்மன் அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரத்திலும் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். அவரும் விசாரணைக்கு தனது வழக்கறிஞர் மனைவி கயல்விழியோடு ஆஜரானார். 

அதேபோல பெரியார் விவகாரத்திலும் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது செய்யலாம் என்பதே போலீசாரின் இப்போதைய திட்டம் என்கிறார்கள் காவல் வட்டாரங்களில்!



https://minnambalam.com/political-news/பெரியார்-அவதூறு-சீமானுக/

 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2025 at 22:05, கிருபன் said:

ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரத்திலும் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். அவரும் விசாரணைக்கு தனது வழக்கறிஞர் மனைவி கயல்விழியோடு ஆஜரானார். 

வைப்பு தொடர்ந்த வழக்கில் இருந்து தப்புவதற்க்காக வைவ்வை (wife) பொலிஸ் நிலைய படி ஏற வைத்த மானஸ்தந்தான் செக்ஸ் சைக்கோ சீமான்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வீடு முற்றுகை… பெரியாரிஸ்டுகள் கைது!

Jan 22, 2025
WhatsApp-Image-2025-01-22-at-10.05.25-AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் இன்று (ஜனவரி 22) தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது.

பெரியார் குறித்த தனது பேச்சுக்கு சீமான் ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதுகுறித்து பேசிய சீமான், “பெரியார் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குங்கள். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை காட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

WhatsApp-Image-2025-01-22-at-10.05.24-AM

இந்தநிலையில், சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிடப் போவதாக கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்காக, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சீமானுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

WhatsApp-Image-2025-01-22-at-10.05.24-AM

அதேவேளையில், சீமான் வீட்டின் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். அவர்கள் வீட்டின் முன்பாக நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர். மேலும், அங்கு வந்திருந்த நிர்வாகிகளுக்காக சீமான் வீட்டில் சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. 

இந்தநிலையில், சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

https://minnambalam.com/political-news/police-arrest-those-who-are-all-protest-infront-of-seeman-house/

  • கருத்துக்கள உறவுகள்

Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள்; ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" - சீமான் பதில்

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சால் சீமானின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பெரியாரிய ஆதரவாளர்கள் போராட்டம் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார் சீமான்.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீமானும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்துதான் மே 17 இயக்கம் சார்பில் பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீடு இன்று (ஜன22) முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

சீமான்

இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டும் என காட்டமாகப் பேசி வருகின்றனர் பெரியாரிய ஆதரவாளர்கள்.

இந்த முற்றுகைப் போராட்டம் குறித்துப் பேசியிருக்கும் சீமான், "ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன். பெரியார் மீது நான் வைத்த விமர்சனத்தை இதற்கு முன்பு பலர் வைத்திருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் வழக்கு போடவில்லை. என் மீது மட்டும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன். நீதிமன்றத்தில் உரிய ஆதாரத்தைக் காட்டுவேன்.

சீமான்

பெரியாரை என்னைவிடவும் அதிகமாக விமர்சித்தது 'தி.மு.க'வினர்தான். 'இந்தி பள்ளிக்கூடத்தைத் திறந்தது இந்தப் பெரியார்தான். அந்த விழாவிற்கு நானும் போனேன் கருமம்" என்கிறார் திருவிக. இப்படி பலர் பெரியாரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். நாங்கள் எதையும் ஆதரமில்லாமல் பேசவில்லை.

நான் பேசும் எல்லாவற்றிருக்கும் ஆதராம் கேட்பவர்கள், நான் பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெட்டி ஒட்டியதாகச் சொல்கிறார்கள். அந்தப் புகைப்படம் போலியானது என்று நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?" என்று பேசியிருக்கிறார்.

Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள். ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" -சீமான் பதில்| NTK seeman gives press meet about thanthai periyar issue - Vikatan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.