Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு

19 Jan, 2025 | 11:50 AM

image

ஹமாஸ் அமைப்பு  தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார்.

காசாவில் இன்று காலை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரவிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸ் தன்னிடமுள்ள சில பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இந்த நிலையிலேயே ஹமாஸ் அமைப்பு  தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார்.

இது குறித்து பெஞ்சமின் நெட்டன்யாகு  இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/204217

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் பணயக் கைதிகள் எவரும் உயிருடன் இல்லை.  பயங்கரவாதத்துக்குரிய மருந்து இஸ்ரேலிடம் தாராளமாக உண்டு. இந்த வருத்தத்துக்கான மருந்து தொடர்ச்சியாகத் தரப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

 

690249252.jpg

 
போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு!
 

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

“காலை 8:30 மணி முதல் நடைமுறைக்கு வரவிருக்கு போர்நிறுத்தம், ஹமாஸ் வழங்குவதாக உறுதியளித்த விடுவிக்கப்பட்ட கடத்தப்பட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் பெறும் வரை தொடங்காது என்று பிரதமர் பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தியதாக,” என்று அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 

எவ்வாறாயினும், சிறிது நேரத்திற்குப் பின்னர், பெயர்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு “தொழில்நுட்பக் களக் காரணங்கள்” காரணம் என்று ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, “இந்தப் பெயர்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றால், கத்தார் ஹமாஸ் மீது நம்பமுடியாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

“எவ்வாறாயினும், ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், மிக விரைவில் இந்தப் பெயர்களை ஒப்படைப்பார்கள்.” என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

https://newuthayan.com/article/போர்_நிறுத்தத்தை_தொடங்க_வேண்டாம்_–_இஸ்ரேஸ்_பிரதமர்_படையினருக்கு_அவசர_உத்தரவு!

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர்நிறுத்தம் ஆரம்பம் - பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல்

காஸா போர்நிறுத்தம் ஆரம்பம் - பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட காஸா போர்நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு தொடங்கியுள்ளது.

காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அப்படியென்றால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்படும். மேலும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.

இன்றி உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணயக்கைதிகளில் பெயர் பட்டியலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஹமாஸ் வழங்காததால், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது.

இந்தநிலையில், முதலில் விடுவிக்கப்பட உள்ள மூன்று பணயக்கைதிகளில் பெயரை ஹமாஸ் வெளியிட்டது.

இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 33 பணயக்கைதிகள் விடுதலை பெற உள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் வெளியிட்ட பட்டியலில், ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸால் பிடிக்கப்பட்ட மிக இளைய மற்றும் மூத்த பணயக்கைதிகள் இடம்பெற்றுள்ளனர். கஃபிர் பிபாஸ் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டபோது ஒன்பது மாதக் குழந்தை. தனது இரண்டு பிறந்தநாளை பணயக்கைதியாக அந்த குழந்தை கழித்தது. 86 வயதான ஷ்லோமோ மன்ட்சூர், கடத்தப்பட்ட மிக வயதான பணயக்கைதி ஆவார்.

போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் சில மணிநேரத்திற்கு முன்புவரை கூட, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் இன்று காலை முதல் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது

இன்று காலை ஏற்பட்ட தாமதம் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளின் முதல் கட்ட பரிமாற்றத்திற்கான நேரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்கு முதல்கட்ட பரிமாற்றம் நடைபெறவிருந்தது.

போர்நிறுத்தம் இன்று அமுலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில், தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த போர்நிறுத்தம் "பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் நோக்கில், ஹமாஸை அழிக்க உறுதிபூண்டது இஸ்ரேல். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்துள்ளன.

காஸாவில் இதுவரை 46,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காஸாவில் இருந்து அநேக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் பல இடங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணயக் கைதிகளில் ஏற்கனவே 94 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198983

  • கருத்துக்கள உறவுகள்

Israel-Hamas ceasefire in Gaza takes effect

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர்நிறுத்தம் தொடங்கியது - 33 பணயக்கைதிகளை விடுவிக்க உள்ள ஹமாஸ்; பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல்

காஸா போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது

பட மூலாதாரம்,REUTERS

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட காஸா போர்நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று தொடங்கியுள்ளது.

காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அப்படியென்றால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்படும். மேலும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கே போர்நிறுத்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணயக்கைதிகளில் பெயர் பட்டியலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஹமாஸ் வழங்காததால், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது.

இந்தநிலையில், முதலில் விடுவிக்கப்பட உள்ள மூன்று பணயக்கைதிகளில் பெயரை ஹமாஸ் வெளியிட்டது.

 

இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் வெளியிட்ட பட்டியலில், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸால் பிடிக்கப்பட்ட மிக இளைய மற்றும் மூத்த பணயக்கைதிகள் இடம்பெற்றுள்ளனர். கஃபிர் பிபாஸ் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டபோது ஒன்பது மாதக் குழந்தை. தனது இரண்டு பிறந்தநாளை பணயக்கைதியாக அந்த குழந்தை கழித்தது. 86 வயதான ஷ்லோமோ மன்ட்சூர், கடத்தப்பட்ட மிக வயதான பணயக்கைதி ஆவார்.

போர் நிறுத்தம் அமலுக்கு வரும் சில மணிநேரத்திற்கு முன்புவரை கூட, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் இன்று காலை முதல் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது

இன்று காலை ஏற்பட்ட தாமதம் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலத்தீன கைதிகளின் முதல் கட்ட பரிமாற்றத்திற்கான நேரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்கு முதல்கட்ட பரிமாற்றம் நடைபெறவிருந்தது.

போர்நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில், தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த போர்நிறுத்தம் "பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் நோக்கில், ஹமாஸை அழிக்க உறுதிபூண்டது இஸ்ரேல். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்துள்ளன.

காஸாவில் இதுவரை 46,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காஸாவில் இருந்து அநேக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் பல இடங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணயக் கைதிகளில் ஏற்கனவே 94 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Gaza போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி? BBC-க்கு கிடைத்த முக்கிய தகவல்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு

நெத்தன்யாகு அவமானத்தின் உச்சிக்கே போய்விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

3 இஸ்ரேலிய பெண்கள் கமாசால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நெத்தன்யாகு அவமானத்தின் உச்சிக்கே போய்விட்டார்.

Zeitplan: Gaza-vereinbarung – Infografik

இது ஜேர்மன் மொழியில் இருக்கின்றது.
இதன் திட்டவரைவுகளின் படி ஒரு கிழமையில் நிவாரண உதவிகள் தொடக்கம் அதில் இருந்து கைதிகள் தொடராக  விடுவிப்பும் இஸ்ரேலிய இராணுவத்தின் காஸா நிலப்பரப்பிலிருந்து விலகல்களும் 5 வருட திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு - காரணம் என்ன?

இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

31 நிமிடங்களுக்கு முன்னர்

'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது.

"கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது.

வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது

ஆனால் ''ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது", என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பதில்

"இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாகும். காஸாவில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதற்காக அதிக எச்சரிக்கையுடன் தயாராக இருக்கவும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலை போல மீண்டும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்", என்று இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

பட மூலாதாரம்,REUTERS

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும்.

விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர். அந்த 17 பேர் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது.

இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்.அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது.

இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.