Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

காணொளி

நேரடியாக காணொளியினை இணைக்காமல் அதன் முகவரியினை எவ்வாறு தொடரியில் இணைக்கிறீர்கள்? 

நன்றி, அதனை நானாகவே புரிந்து கொண்டுவிட்டேன்.

எனக்கும் சொல்லி தரமுடியுமா?

இப்படி இணைப்பது யாழின் சேவர் சுமையை குறைக்கும் என நினைக்கிறேன்.

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

புரிதல், பட்டறிவு இல்லாமல், செவ்வியன் கருத்து வைப்பதாக தோன்றுகிறது!

பங்களாதேச விடுதலைக்கு காரணம், அதே வங்க மொழி பேசிய இந்திய மேற்கு வங்க மாநில முதல்வர், சங்கரரே. மத்திய அரசின் மீது பெரும் அழுத்தம் கொடுத்தார்.

நான் முன்னரே வேறொரு திரியில் சொல்லியிருந்தேன், மேற்கு வங்கத்திற்கு இந்தியா உதவியது, பாகிஸ்தான் எதிரி நாடு என்பதால் தான். வெளியுறவு கொள்கைகளை பொறுத்த வரை மாநிலங்களின் அழுத்தங்கள் இந்திய அரசின் கொள்கைகளுக்கு ஒத்துப் போனால் மட்டுமே நடக்கும், இல்லையேல் அவை வெறும் அரசியல் கூக்குரலாக மட்டுமேயிருக்குமா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

திராவிடதேசம் மொழிவாரியாக பிரிந்து கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்று மாறியபோது தமிழ் பேசியவர்கள் மட்டும் எப்படி திராவிடர் ஆனார்கள். அங்கே தொடங்கியதுதான் தமிழ் தேசியத்திற்கான எதிர்ப்பு. திராவிட கழகம் என்று அதை தொடக்கிவைத்தது ஈவேரா. 

பிழை.

மொழி வழி மாநில பிரிப்புக்கு முன், அகண்ட மெட்ராஸ் பிரசிடென்சியில் 5 இனங்களும் இணைந்து இருந்த போது தென்னிந்தியர் எல்லாருக்கும் பொதுவாக உருவானதா “திராவிட நாடு” கோரிக்கை. “திராவிடர் கழகம்”, “திராவிட கொள்கை” எல்லாமுமே.

திக வின் முன்னோடி ஜஸ்டிஸ் பார்ட்டி.

மொழிவழி மாநில பிரிப்பின் பின், தமிழ் நாட்டிற்கு தமிழர்தான் ஆட்சி அதிகாரம் செய்ய வேண்டும் - இதை பெரியாரே வலியுறுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செவ்வியன் said:

தமிழ்நாட்டிலுள்ள ஈழமக்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் புரிகிறது, அம்மக்களுக்கான கோரிக்கை குறித்தான முன்னேடுப்புகளோ, போராட்டங்களோ இல்லை ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான விடயங்கள் நாம் தமிழர் சார்ப்பில் நடாத்தப்பட்டவை என்னென்ன?

நாம் தமிழர் ஆரம்பித்தது 2010/2011 களில் என்று நினைக்கிறன்.. அப்ப இருந்து நீங்கள் நாம் தமிழர் சம்பந்தமாக எதையுமே பார்க்கவில்லை கண்ணையும் காதையும் இறுக்கமூடிவைத்திருந்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

புரிதல், பட்டறிவு இல்லாமல், செவ்வியன் கருத்து வைப்பதாக தோன்றுகிறது!

பங்களாதேச விடுதலைக்கு காரணம், அதே வங்க மொழி பேசிய இந்திய மேற்கு வங்க மாநில முதல்வர், சங்கரரே. மத்திய அரசின் மீது பெரும் அழுத்தம் கொடுத்தார்.

இறுதிப் போரின் போது, சோனீயா குடும்பத்திடம் நல்ல பெயர் வாங்க, தமிழரை அழிய விட்டார், திராவிடர் கலைஞர்.

இந்த முடிவு தான் வரும் என்று தான், தமிழ் தேசியம் அங்கே வளர வேண்டும் என, தலைவர் விரும்பினார். தேடலில் ஒருவரை கண்டார்.

இன்று, அங்காங்கே இருக்கும்  போராளிகள் அந்த, தலைவரின் தெரிவுக்கு ஆதரவுக் கருத்து திருப்தியுடன் தரும் போது, இங்கே எதிர்பவர்கள் கருத்துகள், அவர்களது தனிப்பட்ட கருத்துகளாக எடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகிறது.

வங்கத்தில் இந்தியா தலையிட ஒரே காரணம் - அது பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் தனது ஒரு எல்லையில் இருந்து பாகிஸ்தானை கிளப்பலாம் என்பதாலேயே.

இலங்கை பாகிஸ்தான் இல்லை. ஆகவே யார் எப்படி தமிழ் நாட்டில் முக்கினாலும் இந்திய நலன் கருதியே முடிவு எடுக்கப்படும்.

1987 இல் எம் ஜி ஆர், கருணாநிதி இருவரும் எதிர்த்த போதும் இலங்கைக்கு படைகளை அனுப்பினார் ரஜீவ்.

தான்னால் முடியவில்லை என புலிகளிடம் கைவிரித்தார் எம்ஜிஆர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 19:34, ரசோதரன் said:

முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன்.

மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன.

சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன்.

ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள்.

நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். 

சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. 

இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே.

தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு.  அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே.

பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். 

நீங்கள் சற்று ஆழமாக தமிழக சாதீய அமைப்புக்குள் சென்று ஆய்ந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

நான், அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் அவ்வளவு ஆழமாக செல்ல வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

உதாணமாக, தமிழக பத்திரிகையாளர்கள், எமக்கு ஆதரவாக பேசும் அரசியல் வாதிகளுக்கு கூட எமது வரலாறு முழுவதுமாக தெரியாது என்பது எனது பார்வை. தம்மைப் போலவே நாம் பிரிட்டிஸ் காலனித்துவத்துக்கு உள்ளானவர்கள் என்று கருதுபவர்கள் பலர். அவர்களுக்கு பிரிட்டிஸ் காலனித்துவத்துக்கு முன் 300 வருட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலனித்துவமோ, அல்லது இலங்கைத் தமிழர் பகுதி, 1833 ல் இனைக்கப்படும் வரை தனியாக ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட விபரமும் தெரியாது.

மூத்த பத்திரிகையாளர் மணி கூட, 1924 ல் பிரிட்டிஸ்காரர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையை பிரித்தார்கள் என்று உளறினார்.

எம்மில் பலருக்கு, இலங்கைக்கும் East India Company க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும், இலங்கை ஆரம்பத்தில் இருந்தே நேரடியாக, British Crown Colony என்பதும், India 1858 ல் தான் Crown Colony ஆகியதும் தெரியாது.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில், அவரவர் தேசியம் உயர்வாக உள்ளது. கன்னட தேசியம், மலையாள தேசியம், தெலுங்கு தேசியம் அசைக்க முடியாத வீச்சில் உள்ளது. ஒரு மொழியானாலும் பெரும்பான்மையான ஒரு சாதியினர் தமது வாய்ப்புக்களை பறிப்பதாக போராடியதால், ஆந்திர மாநிலம் உடைந்தது.

இப்படி இருக்கும் நிலையில், தமிழகத்தில், ஆட்சி கருணாநிதி குடுப்பத்திடம் சிக்காமல், ஒரு நேர்மையாளர் கையில் சென்றிருந்தால், திராவிட எதிர்ப்பு வந்திருக்காது. மேலும் அவர் மேற்கு வங்க முதல்வர் போல முழு ஆதரவை எமக்கு வழங்கியிருந்தால், சீமானின் தமிழ் தேசிய அரசியலுக்கு தேவையே இல்லையே.

எனது பார்வையில் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பப் புள்ளியே  சீமான். அவரை ஊக்குவித்தவர் பிரபாகரன். சீமான் தொடர்வாரோ இல்லையோ, தமிழ் தேசியம் தொடர்வதை தடுக்க முடியாது.

சிங்களம் மட்டும் சட்டம் எப்படி, சிங்களதேசியத்தை தொடக்கி வைத்ததோ அது போலவே தான்.

ஆனால், புதிய பட்டறிவு, சிங்கள தேசியத்தைப் போன்ற பேரழிவுக்கு, தமிழக தமிழ் தேசியத்தை கொண்டு போகாது என்பது எனது பார்வை.

இந்திய கூட்டமைப்பு என்ற வட்டத்துக்குள் அது சாத்தியம் இல்லை என்று நிணைக்கிறேன்.

இறுதியாக, அநுர நமக்கு எதுவே தரப் போவதில்லை. அவர்களது சீன ஆதரவு நிலை, இந்தியாவை வேறு முடிவுகள் எடுக்க தூண்டும். அதற்கு, தமிழகத்தில் அழுத்தம் தரக்கூடிய தமிழ் தேசிய அரசொன்று அமையவேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில், அவரவர் தேசியம் உயர்வாக உள்ளது. கன்னட தேசியம், மலையாள தேசியம், தெலுங்கு தேசியம் அசைக்க முடியாத வீச்சில் உள்ளது.

ஆனால் இவையும் மட்டுப்பட்ட நிலையில்தான் உள்ளது…எப்படி தமிழ் நாட்டில் வட மாநிலத்தவர்  வரவு ஒரு பிரச்சனையோ அப்படித்தான் அங்கும்.

ஆனால் இந்த தேசியங்கள் “பிரிந்து போக கூடியன” என டெல்லி நம்பவில்லை, ஆகவே இவற்றை tolerate பண்ணுகிறது, கூட்டு அரசியலும் செய்கிறது.

ஆனால் தமிழ் தேசியம் அப்படி அல்ல - ஈழத்துக்கு முதல் தனி நாட்டு கோரிக்கை எழுந்தது தமிழ்நாட்டில்தான்.

அதன் பின் முழுவீச்சாக ஈழப்போர்கள்.

ஆகவே தமிழ் தேசியத்தை பாக்குநீரிணியின் இரு மருங்கிலும் - இந்தியாவின் எதிரி என பார்க்கிறது டெல்லி.

இந்த நிலையில் உண்மையான தமிழ்தேசியதை ஒரு போதும் டெல்லி அனுமதிக்காது.

11 minutes ago, Nathamuni said:

இப்படி இருக்கும் நிலையில், தமிழகத்தில், ஆட்சி கருணாநிதி குடுப்பத்திடம் சிக்காமல், ஒரு நேர்மையாளர் கையில் சென்றிருந்தால், திராவிட எதிர்ப்பு வந்திருக்காது.

இது ஏற்றுகொள்ள கூடியதே.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, செவ்வியன் said:

நான் முன்னரே வேறொரு திரியில் சொல்லியிருந்தேன், மேற்கு வங்கத்திற்கு இந்தியா உதவியது, பாகிஸ்தான் எதிரி நாடு என்பதால் தான். வெளியுறவு கொள்கைகளை பொறுத்த வரை மாநிலங்களின் அழுத்தங்கள் இந்திய அரசின் கொள்கைகளுக்கு ஒத்துப் போனால் மட்டுமே நடக்கும், இல்லையேல் அவை வெறும் அரசியல் கூக்குரலாக மட்டுமேயிருக்குமா

அது ராணுவ கேந்திர நிலைப்பாடு.

மேற்கு வங்கத்தினுள் அகதியாக வந்தவர்களினால் தான் முதல்வர் அழுத்தம் கொடுத்தார்.

அழுத்தம் பல ஒன்று சேரும் போதே, செயல் பிறக்கும்.

எனது பார்வையில் என்றாவது ஒரு நாள் வந்து குவியும் ரோகிங்கியா இஸ்லாமியருக்கா, பர்மாவை, இஸ்லாமிய நாடான பங்களாதேஸ் தாக்கக்கூடும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

எனக்கும் சொல்லி தரமுடியுமா?

இப்படி இணைப்பது யாழின் சேவர் சுமையை குறைக்கும் என நினைக்கிறேன்.

link.jpg

link1.jpg

கறுப்பு குறியிடப்பட்ட பகுதியை அழுத்துங்கள், பின்பு வருவது உங்களுக்கு நன்றாக புரியும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

எனது பார்வையில் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பப் புள்ளியே  சீமான். அவரை ஊக்குவித்தவர் பிரபாகரன். சீமான் தொடர்வாரோ இல்லையோ, தமிழ் தேசியம் தொடர்வதை தடுக்க முடியாது.

சிங்களம் மட்டும் சட்டம் எப்படி, சிங்களதேசியத்தை தொடக்கி வைத்ததோ அது போலவே தான்.

ஆனால், புதிய பட்டறிவு, சிங்கள தேசியத்தைப் போன்ற பேரழிவுக்கு, தமிழக தமிழ் தேசியத்தை கொண்டு போகாது என்பது எனது பார்வை.

இங்கேதான் முத்துகுமார் பிரதானமாகிறார்…

சீமானை போல அன்றி பல.ம் வருடங்கள் வன்னியில் இருந்தவர் முத்துகுமார்.

அவரது படங்களை பார்தாலே தெரியும் அவர் எப்படி பட்ட பயிற்சிகளால் வெளிவந்துள்ளார் என.

ராஜ்குமார் கடத்தல், பொலிஸ் மீது தாக்குதல் என பலதை செய்த நிஜப்போராளி.

நாம்தமிழரை உண்மையான தமிழ் தேசிய அமைப்பாக கட்டி அமைக்க, கொள்கை தவறாது இருக்க, சீமான் மீது ஒரு கட்டுப்பாட்டை வைக்க - நியமிக்கப்பட்டவர் தான் முத்துகுமார்.

முத்துகுமார் யார் என்பதை தெரிந்து கொண்டு - அவர் மூலம் பெரும் ஆபத்து வரும் என்பதை கண்டு கொண்டு, றோ அவரை போட்டுத்தள்ளியது.

எஞ்சிய சீமான் வெறும் வாய்வீரர் - தலைவரை 87 இல் மிரட்டியதை போல் மிரட்ட, சரண்டர் ஆகி விட்டார்.

முத்துகுமார் சாவின் பின் சீமானும், அவர் வழி நாம் தமிழரும் முழுக்க முழுக்க றோவின் வழிகாட்டலியேயே நடக்கிறன.

றோவின் தலைமை அமித்ஷா. ஆகவே இப்போ அவர் சொல்படி.

21 minutes ago, Nathamuni said:

தமிழ் தேசியம் தொடர்வதை தடுக்க முடியாது.

ஆனால் சீமான் தொடர்வது தமிழ் தேசியமே அல்ல.

அது வெறும் போலி தமிழ் தேசிய கூச்சல். இது பிஜேபிக்கு வழி சமைத்து கொடுக்கும் வரை இதை ரோ அனுமதிக்கும்.

என்றைக்கு இதில் இருந்து உண்மையான ஒரு தமிழ் தேசிய தலைவர் வந்தாலும் - ஒன்றில் சீமானை போல் அவரையும் வாங்க பார்க்கும், இல்லை எண்டால் முத்துகுமார் போல போட்டுத்தள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் ஆரம்பித்தது 2010/2011 களில் என்று நினைக்கிறன்.. அப்ப இருந்து நீங்கள் நாம் தமிழர் சம்பந்தமாக எதையுமே பார்க்கவில்லை கண்ணையும் காதையும் இறுக்கமூடிவைத்திருந்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன்..

நாம் தமிழர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் கேட்கிறேன், 2011க்கு பின்னர் ஈழ மக்களுக்கு பிரச்சனை ஏதுமில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இந்திய கூட்டமைப்பு என்ற வட்டத்துக்குள் அது சாத்தியம் இல்லை என்று நிணைக்கிறேன்.

இறுதியாக, அநுர நமக்கு எதுவே தரப் போவதில்லை. அவர்களது சீன ஆதரவு நிலை, இந்தியாவை வேறு முடிவுகள் எடுக்க தூண்டும். அதற்கு, தமிழகத்தில் அழுத்தம் தரக்கூடிய தமிழ் தேசிய அரசொன்று அமையவேண்டும்.

இந்திய ஒருமைபாட்டுக்கு கட்டுபட்டு, இந்திய கொடியை ஏந்தி, இந்திய தேர்தல்களில் பங்கு பற்றிய கட்சி ஒன்றின் தலைவராக தலைவர் பிரபாகரன் இருந்தாலும் ஒரு ஹைகோர்ட்டையும் பிடுங்க முடியாது.

மேலே நானும், ரசோ அண்ணாவும் சொன்னது போல் - இந்தியன், சாதி இந்த இரு உணர்வுகளும் தமிழ் நாட்டில் மிக ஆழமானவை.

இதை மீறி எந்த தலைவரும், அவர்களே விரும்பினாலும் மக்களை தமிழ் தேசியத்துக்கு, அதுவும் ஈழத்தில் நடக்கும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக திரட்ட முடியாது.

அன்றும், இன்றும், என்றும் இதுதான் தமிழக களயதார்தம்.

10 minutes ago, ஏராளன் said:

link.jpg

link1.jpg

கறுப்பு குறியிடப்பட்ட பகுதியை அழுத்துங்கள், பின்பு வருவது உங்களுக்கு நன்றாக புரியும் அண்ணை.

நன்றி தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அது ராணுவ கேந்திர நிலைப்பாடு.

மேற்கு வங்கத்தினுள் அகதியாக வந்தவர்களினால் தான் முதல்வர் அழுத்தம் கொடுத்தார்.

அழுத்தம் பல ஒன்று சேரும் போதே, செயல் பிறக்கும்.

எனது பார்வையில் என்றாவது ஒரு நாள் வந்து குவியும் ரோகிங்கியா இஸ்லாமியருக்கா, பர்மாவை, இஸ்லாமிய நாடான பங்களாதேஸ் தாக்கக்கூடும்.

ஏற்கனவே குவிந்திருக்கும் ரோகாங்கியா இஸ்லாமியருக்காக பங்களாதேசம் மியான்மருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? மாறாக ரொஹிக்கியாவிற்கு எதிரான நடவடிக்கை தான் எல்லையை மூடியதன் மூலம் எடுத்துள்ளது.

https://www.aa.com.tr/en/asia-pacific/bangladesh-will-no-longer-allow-rohingya-to-enter-its-territory-official/3432214

எல்லா நாடுகளும் தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில், அவரவர் தேசியம் உயர்வாக உள்ளது. கன்னட தேசியம், மலையாள தேசியம், தெலுங்கு தேசியம் அசைக்க முடியாத வீச்சில் உள்ளது. ஒரு மொழியானாலும் பெரும்பான்மையான ஒரு சாதியினர் தமது வாய்ப்புக்களை பறிப்பதாக போராடியதால், ஆந்திர மாநிலம் உடைந்தது.

இதில் மாறுபட்ட கருத்துண்டு. நீங்கள் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் இன்றுவரை இந்திய தேசியக்கட்சிகள் பலமாக உள்ளது. எனக்கு தெரிந்தவரை மொழிவழி தேசியம் பேசும் கட்சிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதோடு தெலுங்கு மொழியை அடிப்படையாக எழுந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஓரினத்தவரான எங்களை ஒன்றாக்க வேண்டும் என போராட்டம் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆனால் சீமான் தொடர்வது தமிழ் தேசியமே அல்ல.

அது வெறும் போலி தமிழ் தேசிய கூச்சல். இது பிஜேபிக்கு வழி சமைத்து கொடுக்கும் வரை இதை 

அவர் பேசுவது தேசியமே அல்ல, குறைந்தபட்சம் அவரது கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவரும், முதல்வரும் தமிழராக இருக்க வேண்டுமென கட்சியின் Bylawல் இருக்கிறதா? அப்படி வைக்கவேண்டுமானால் தமிழர் யார் ஏன்று வரையறுக்க வேண்டும் பின்னர் தான் எப்படி தமிழன் என்று நிருபிக்க வேண்டும்.

தமிழ் தேசியத்தின் முக்கிய கூறு சாதிகளை கடந்த தமிழர் ஒற்றுமை. இதை ஈழத்தில் இயக்கம் செய்தது, ஆனால் இன்று தமிழ்நாட்டில் நடக்கும் சாதீய பிரச்சனைகளுக்கு எதிராக நாதக செய்தவை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிழை.

மொழி வழி மாநில பிரிப்புக்கு முன், அகண்ட மெட்ராஸ் பிரசிடென்சியில் 5 இனங்களும் இணைந்து இருந்த போது தென்னிந்தியர் எல்லாருக்கும் பொதுவாக உருவானதா “திராவிட நாடு” கோரிக்கை. “திராவிடர் கழகம்”, “திராவிட கொள்கை” எல்லாமுமே.

திக வின் முன்னோடி ஜஸ்டிஸ் பார்ட்டி.

மொழிவழி மாநில பிரிப்பின் பின், தமிழ் நாட்டிற்கு தமிழர்தான் ஆட்சி அதிகாரம் செய்ய வேண்டும் - இதை பெரியாரே வலியுறுத்தியுள்ளார்.

@goshan_che எனக்கு இது தொடர்பான ஒரு கேள்வி, நான் படித்து அறிந்தவரை திராவிடம் என்பது தமிழின் வெளிப் பெயர்(exonym), இதே போல் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இனங்களுக்கு இவ்வாறான பெயர்கள் இருக்கின்றன.

என்னுடைய கேள்வி ஈழம் குறித்தானது, திராவிடம் தமிழுக்கு எதிரி என்றிருந்தால் இங்குள்ள தமிழ் கட்சிகள் சில தங்கள் பெயரை சிங்களத்தில் திராவிடம் என வைத்துக் கொண்டதேன்? 1890களிலேயே ஈழத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முன்னோடிகளில் ஒருவரான குமாரசாமியை திராவிடர் என பத்திரிக்கைகள் குறிப்பிட்டதேன்? இவ்வாறு இயக்க காலத்தில்  கூட பல குறிப்புகளை பார்த்தேன்.  இவர்களெல்லாம் அறியாமையில் செய்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, செவ்வியன் said:

இதில் மாறுபட்ட கருத்துண்டு. நீங்கள் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் இன்றுவரை இந்திய தேசியக்கட்சிகள் பலமாக உள்ளது. எனக்கு தெரிந்தவரை மொழிவழி தேசியம் பேசும் கட்சிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதோடு தெலுங்கு மொழியை அடிப்படையாக எழுந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஓரினத்தவரான எங்களை ஒன்றாக்க வேண்டும் என போராட்டம் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

விடயத்தை ஆழமாக உள்வாங்கி விவாதியுங்கள்.

தேசிய கட்சிகளின் தலைமை அந்தந்த மாநிலத்தவர்கள். அண்ணாமலை, கர்நாடகத்தில் பணியாற்றினார். கன்னடம் நன்கு பேசுவார். ஆனாலும் பாஜக வின் கர்நாடக தலைமைப்பதவி கிடைக்கவில்லையே. காரணம்??

45 minutes ago, செவ்வியன் said:

ஏற்கனவே குவிந்திருக்கும் ரோகாங்கியா இஸ்லாமியருக்காக பங்களாதேசம் மியான்மருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? மாறாக ரொஹிக்கியாவிற்கு எதிரான நடவடிக்கை தான் எல்லையை மூடியதன் மூலம் எடுத்துள்ளது.

https://www.aa.com.tr/en/asia-pacific/bangladesh-will-no-longer-allow-rohingya-to-enter-its-territory-official/3432214

எல்லா நாடுகளும் தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும்

அது இந்தியாவினுள் அகதிகளைதள்ளிவிடும் தந்திரம். ஆனாலும், இந்தியாவினுள் வந்து, பங்களாதேஸ் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

விடயத்தை ஆழமாக உள்வாங்கி விவாதியுங்கள்.

தேசிய கட்சிகளின் தலைமை அந்தந்த மாநிலத்தவர்கள். அண்ணாமலை, கர்நாடகத்தில் பணியாற்றினார். கன்னடம் நன்கு பேசுவார். ஆனாலும் பாஜக வின் கர்நாடக தலைமைப்பதவி கிடைக்கவில்லையே. காரணம்??

காரணம் கர்நாடாகவிற்கு தேவையான பலமான தலைமை அங்கிருந்தது. அங்கு பாஜக வலுவான கட்சி, தலைமை ஏற்க ஆட்களுக்கு பஞ்சமில்லை.

 உங்களின் கேள்வியின் நோக்கம் புரிகிறது, கர்நாடாகவை கன்னடர் அல்லாதோர் ஆள முடியுமா என்பதே. ஆம் ஆண்டிருக்கிறார்கள். ஓர் உதாரணத்தின் இணைப்பு கீழே.

https://en.m.wikipedia.org/wiki/Dharam_Singh

என்னை பொறுத்தவரை அவர் யாரென்பது முக்கியமில்லை, யாருக்கான ஆட்சியை அவர் முன்னெடுக்கிறார் என்பதே முக்கியம்.

கிழக்கின் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் தமிழர் தானே, அவர் யாருக்கான முதலமைச்சராக இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, செவ்வியன் said:

என்னுடைய கேள்வி ஈழம் குறித்தானது, திராவிடம் தமிழுக்கு எதிரி என்றிருந்தால் இங்குள்ள தமிழ் கட்சிகள் சில தங்கள் பெயரை சிங்களத்தில் திராவிடம் என வைத்துக் கொண்டதேன்? 1890களிலேயே ஈழத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முன்னோடிகளில் ஒருவரான குமாரசாமியை திராவிடர் என பத்திரிக்கைகள் குறிப்பிட்டதேன்? இவ்வாறு இயக்க காலத்தில்  கூட பல குறிப்புகளை பார்த்தேன்.  இவர்களெல்லாம் அறியாமையில் செய்தார்களா?

சிங்களவர் பார்வை

நான் அறிந்த வரையில் சிங்களத்தில்,

தமிழர் = திரவிட. 

ஆங்கிலத்தில் interchangeable என்பார்கள். தமிழில் ஒத்த சொல் எனலாம்.

இன்றும் அதேதான் நிலமை.

தெமள, தெமிலோ என்பன சற்றே மரியாதை குறைந்த விளிப்புக்களாயும், திரவிட என்பது அதே மக்களை மரியாதையா விழிப்பதாகவுமே அமைக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை - திரவிட சங்விதானய அல்லது திரவிட ஜாதிக சங்விதானய என்றே இன்றும் அழைப்பர்.

ஆனால் உண்மை இப்படி இல்லை என நாம் அறிவோம்.

தமிழகத்திலோ, ஈழத்திலோ நம்மை யாரும் நீங்கள் யார்? என கேட்டால் நாம் திராவிடர் என நாம் சொல்வதில்லை. தமிழர் என்றே சொல்வோம்.

முன்பும் கூட குமாரசாமியை சிங்களவர் திராவிட என அடையாளப்பசுத்தினாலும் நாம் தமிழர் என்றே அடையாளப்படுத்தி உள்ளோம். இதை குடிசன மதிப்பீடுகளில் காணலாம்.

இது வழமையானதே.

உதாரணமாக - ஆங்கிலேயர்கள் அநேகர் -  ஆங்கிலோ-சக்சன் (ஜேர்மன்) + நோர்மன் (பிரெஞ்) வழி வந்தவர்கள்.

ஆனால் அவர்கள் இனம் என்ன என கேட்டால் - ஆங்கிலேயர் என்பதே பதிலாக வரும்.

அதே போல ஐரிஷ், ஸ்கொட்டிஷ், வேல்ஸ் காரர் செல்டிக், அல்லது கெல்டிக்.

ஆனால் கேட்பின், மூன்று தனி இனப்பெயர்களான ஸ்கொடிஷ், ஐரிஷ், வெல்ஷ்.

இதே போல ஒரு பகுப்பே திராவிடம் என்பது.

ஒரே வித்தியாசம்.

கெல்டிக் அடையாளத்தை அவர்கள் ஏற்பது போல் அன்றி, நாம் திராவிடம் என்பதே தொல் தமிழ்தான் என்கிறோம்.

இது உண்மையும் கூட. துளு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் அனைத்துமே தமிழின் குழந்தைகள்தான்.

ஆகவே திராவிடம் என்பதன் பொருள் தொல்தமிழ் என்பதே என் நிலைப்பாடு.

—————

அரசியல்

மொழிவழி மாநில பிரிவுக்கு முன்னர் அகண்ட மெட்டிராஸ் பிரசெடென்சியில்  “தமிழ் தேசியத்தை” அரசியலாக முன்னெடுத்தால் அது மக்களின் 1/3 காண அரசியலாக சுருங்கி இருக்கும்.

எனவேதான் திராவிட அரசியல் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு திக ஒரு அரசியல்கட்சியும் அல்ல. பெரியார் வாக்கு அரசியல் செய்யவும் இல்லை.

ஆனால் அவர் முன்னெடுத்த கொள்கைகள் திராவிட கொள்கைகள் என ஆகிவிட்டன.

ஆகவே கட்சிகளில் இருக்கும் “திராவிடம்” கொள்கையை குறிப்பதே. கம்யூனிசம், சோசலிசம், ….இப்படி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த அடிப்படைத் தெளிவு விஜையிடம் உள்ளது.

ஆகவேதான் திராவிடம், தமிழ் தேசியம் இரெண்டையும் அவர் கொள்கைகளாக ஏற்கிறார்.

ரோ முத்துகுமாரை கொலை செய்து, சீமானை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வரை சீமானும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த முடிவு தான் வரும் என்று தான், தமிழ் தேசியம் அங்கே வளர வேண்டும் என, தலைவர் விரும்பினார். தேடலில் ஒருவரை கண்டார்.

இன்று, அங்காங்கே இருக்கும்  போராளிகள் அந்த, தலைவரின் தெரிவுக்கு ஆதரவுக் கருத்து திருப்தியுடன் தரும் போது

நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣

தமிழ் தேசியம் வளர சீமானை ஒன்றும் தலைவர் கண்டடையவில்லை. புலிகளின் ஆவணப்படத்தை இயக்கக்கூடத் தெரிவு செய்யப்படவில்லை என்பதுதான் வரலாறு!

தலைவர் தன் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்துதான் தனக்குப் பிறகு புலிகள் அமைப்பை மொத்தமாகவும், சில்லறையாகவும் பிரித்து எடுங்கள் என்று இறுதிக் கட்டங்களில் சொன்னார். அதை நேரில் கேட்ட யாழ் உறவையே புலிகளின் அமைப்பில் இல்லை என்று நிறுவும் போக்கும் இந்த யாழ் களத்தில் பார்ர்ததுதான்! 

இந்த ஆதரவு கொடுக்கும் போராளிகள் யார்? பையன், ஓணாண்டி, நாதம்ஸ்?😂🤣

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களான அனைத்துலகச் செயலகமும், தலைமைச் செயலகமும் கூட சீமானைப் புறக்கணித்துவிட்டார்கள் அல்லது கண்டுகொள்வதில்லை.

சேர்க்கை:

1993 இல் விடுதலைப் புலிகள் பத்திரிகை (புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை) வைகோவை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் என்று கூறியது.

ஆதாரம் இணைப்பில் உள்ளது:

https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த அடிப்படைத் தெளிவு விஜையிடம் உள்ளது.

ஆகவேதான் திராவிடம், தமிழ் தேசியம் இரெண்டையும் அவர் கொள்கைகளாக ஏற்கிறார்.

ரோ முத்துகுமாரை கொலை செய்து, சீமானை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வரை சீமானும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த முத்துக்குமாரின் வீரமரணத்திற்கு இது வரை நியாயம் கிடைக்கவில்லை. இதை அப்படியே அந்த கட்சியும் மறந்து(மறைத்து)விட்டது. கட்சியின் மூத்தவருக்கே இந்த நிலை என்றால் பிசிறுகளின் நிலை அதோகதி தான். 

இவர் இயக்கத்தில் நேரடியாக பலகாலம் ஈழத்திலிருந்து பணிபுரிந்திருக்கிறார் என கேள்விபட்டிருக்கிறேன். 

2 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣

இனி யார் வந்து உண்மையை சொல்லப் போகிறார்கள் என்ற நம்பிக்கைதான் 😃

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செவ்வியன் said:

இதில் கொடுமை என்னவென்றால் அந்த முத்துக்குமாரின் வீரமரணத்திற்கு இது வரை நியாயம் கிடைக்கவில்லை. இதை அப்படியே அந்த கட்சியும் மறந்து(மறைத்து)விட்டது. கட்சியின் மூத்தவருக்கே இந்த நிலை என்றால் பிசிறுகளின் நிலை அதோகதி தான். 

இவர் இயக்கத்தில் நேரடியாக பலகாலம் ஈழத்திலிருந்து பணிபுரிந்திருக்கிறார் என கேள்விபட்டிருக்கிறேன். 

றோ மிக கடுமையாக சீமானுக்கு இட்ட கட்டளை முத்துகுமாரும், அவர் முன்னெடுத்த தமிழ் தேசியமும் மறைக்கப்பட வேண்டும்.

இதை மீறினால் முத்துகுமாருக்கு நேர்ந்த நிலைதான் சீமானுக்கும்.

இதனால்தான் நா.த.க அலுவலகத்தில் முத்துகுமாருக்கு ஒரு படம் கூட இல்லை.

மேலே ஒரு வீடியோ இணைத்துள்ளேன் - முத்துகுமாரை பற்றி கேட்டால் அண்ணன் பதறியடித்து, அவர் “அறிமுகம் இல்லாதவர்” என்கிறார்🤣.

அறிமுகம் இல்லாதவரைத்தான் “முன்னிலை மாநில ஒருங்கிணைப்பாளர்” ஆக்கினாரா?

பிகு

முத்துகுமார் கொலை ரோவினால், திமுக அரசுக்கும், சீமானுக்கும் தெரிந்தே நிகழ்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣

தமிழ் தேசியம் வளர சீமானை ஒன்றும் தலைவர் கண்டடையவில்லை. புலிகளின் ஆவணப்படத்தை இயக்கக்கூடத் தெரிவு செய்யப்படவில்லை என்பதுதான் வரலாறு!

என்ன கிருபன், இப்போதுதான் நித்திரையால் எழும்பி வருகிறீர்களா? சந்தோஷின்  காணாளியை பார்க்கவில்லையா? சீமான் ஆவணப்படமெடுக்க வரவில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார்? அப்போ ஏன் சீமான் தலைவரை சந்திக்கப்போனார்? குசலம் விசாரிக்கவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.