Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வீசிவரும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகின்றது. குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ, புளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு மாநிலங்களில் 1,20, 000க்கும் மேற்பட்டோருக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான பனிப்பொழிவால் வீதி  மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1417841

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா ஒரு விசித்திர நாடு.ஒரே நேரத்தில் ஒரு பக்கம் புயல் அழிவு. இன்னொரு பக்கம் காட்டுத்தீ அழிவு. அடுத்த பக்கம் பனிப்புயல் அழிவு.

விசித்திர நாடல்ல.அதிசய நாடு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 00:29, குமாரசாமி said:

அமெரிக்கா ஒரு விசித்திர நாடு.ஒரே நேரத்தில் ஒரு பக்கம் புயல் அழிவு. இன்னொரு பக்கம் காட்டுத்தீ அழிவு. அடுத்த பக்கம் பனிப்புயல் அழிவு.

விசித்திர நாடல்ல.அதிசய நாடு. 😂

மேலும் பல செயலதிசயங்களும் வரவிருப்பதாக புதிய அரசினது விசிறிகள் காத்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nochchi said:

மேலும் பல செயலதிசயங்களும் வரவிருப்பதாக புதிய அரசினது விசிறிகள் காத்திருக்கிறார்கள். 

யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது போல் உக்ரேன் யுத்தம் நிறுத்தப்படணும். மத்திய கிழக்கில் அமைதி நிலவணும். அதுதான் உலக பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது போல் உக்ரேன் யுத்தம் நிறுத்தப்படணும். மத்திய கிழக்கில் அமைதி நிலவணும். அதுதான் உலக பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கும் 🙏

யுத்தங்கள் தொடர்வதை மாந்தநேயர்கள் விரும்பவதில்லை. யாழில்கூட ரஸ்ய-உக்ரேன் போர் நடந்ததை அனைவரும் அறிவர்.புதிய றம்பும் பொருண்மியத்தடை குறித்தே பேசியுள்ளார். நேரடியாகத் தனது தரப்பிலிருந்து ஒரு சமாதானத்தூதுவரை அனுப்புவதாகக் கூறவில்லை. உலக ஆயுத விற்பனையில் 41.7 வீதத்தைக் (2019 - 2023 கணிப்பின்படி) கொண்டுள்ள அமெரிக்கா உலகில் யுத்தத்தை ஏதாவதொரு பிராந்தியத்தில் மாறிமாறித் தோற்றுவித்தே வருகிறது. வல்லரசுகளுக்கிடையேயான யுத்தத்தை வல்லரசுகள் நேரடியாகச் செய்யாது தத்தமது நாடுகளைப் பாதுகாத்தவாறு ஏதாவதொரு பிராந்தியத்தில் தொடர்கின்றன. உலக வல்லரசுகள் முதலில் இனங்களின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் மதித்து சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கடைப்பிடிக்கும் உலகொன்றை கட்டியமைத்தால் யுத்தங்கள் நிகழா. ஆனால், அவர்கள் அதனைச் செய்ய முன்வரார். உலகு அமைதியானால்  பாதுகாப்பு உறுதியானால் தமது ஆயுத விற்பனையைத் தொடரத்தான் முடியுமா? ரஸ்ய-உக்ரேனியப் போரின் சுமையை உலகில் பணக்காரர்களைப் பாதித்ததா? இல்லையே. சாதாரண மக்களை அவர்களது சேமிப்புகளில் கைவைக்குமளவுக்குக் கூட, சிலர் வீட்டுக்கடனைக் கட்டமுடியாது விற்கும் நிலைவரை என்று... நிறைய எழுதலாம். ஆனால் நீங்கள் சுட்டியிருப்பது நிலைபெற்றால் மிக்க மகிழ்ச்சியே.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2025 at 00:30, தமிழ் சிறி said:

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகின்றது. குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மாநிலங்களில் இப்போது சிறிது காலமாக குளிர் பனி என்று கஸடப்படுகிறார்கள்.

இங்குள்ள பல பழைய வீடுகள் குளிருக்கு ஏற்ற மாதிரியாக கட்டப்படவில்லை.பல வீடுகளில் வீட்டை வெப்பமேற்றவே முடியாது என்கிறார்கள்.

இந்த மாநிலங்களில் ஒரு அங்குலத்துக்கு குறைவான பனி விழுந்தாலே State of Emergency எல்லாமே மூடிவிடுவார்கள்.

பனி கொட்டினால் அதை துப்பரவாக்கும் இயந்திரங்களோ உப்போ அங்கு கடையாது.

இதை  என்கிறார்கள்.எமது தலைவர் ரம் இல்லை என்கிறார்.

On 23/1/2025 at 15:29, குமாரசாமி said:

அமெரிக்கா ஒரு விசித்திர நாடு.ஒரே நேரத்தில் ஒரு பக்கம் புயல் அழிவு. இன்னொரு பக்கம் காட்டுத்தீ அழிவு. அடுத்த பக்கம் பனிப்புயல் அழிவு.

விசித்திர நாடல்ல.அதிசய நாடு. 😂

The 2024 Atlantic hurricane season was a very active and extremely destructive Atlantic hurricane season, producing 18 named storms, 11 hurricanes, and 5 major hurricanes; it was also the first since 2019 to feature multiple Category 5 hurricanes.

புளோரிடா,அலபாமா ,ரெக்சாஸ் ஊடாக வரும் புயல் மத்தியிலுள்ள மாநிலங்களை வருடாவருடம் தாக்குகிறது.பல கோடி சொத்துக்கள் அழிகின்றன.மக்களும் இறக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பை பெரு நெருப்பு விளக்கேற்றி வரவேற்றது. பெரும்பனி பூத்தூவி அலங்காரம் செய்கிறது. பலகோடி செவ்விந்தியரின் ஆவிகள் சூழ்ந்துநிற்க அங்கு திருவிழா நடைபெறுகிறது, பலிபீடம் ஆடு, கோழிகளுக்குப் பதில் மனிதர்களைப் பலியெடுக்கிறது, அடுத்து என்னென்ன விழாக்கள் நடக்குமோ.?

ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட இடங்கள் எல்லாமே உலகில் அல்லோலப்படுகிறது.!😳

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nochchi said:

யுத்தங்கள் தொடர்வதை மாந்தநேயர்கள் விரும்பவதில்லை. யாழில்கூட ரஸ்ய-உக்ரேன் போர் நடந்ததை அனைவரும் அறிவர்.புதிய றம்பும் பொருண்மியத்தடை குறித்தே பேசியுள்ளார். நேரடியாகத் தனது தரப்பிலிருந்து ஒரு சமாதானத்தூதுவரை அனுப்புவதாகக் கூறவில்லை. உலக ஆயுத விற்பனையில் 41.7 வீதத்தைக் (2019 - 2023 கணிப்பின்படி) கொண்டுள்ள அமெரிக்கா உலகில் யுத்தத்தை ஏதாவதொரு பிராந்தியத்தில் மாறிமாறித் தோற்றுவித்தே வருகிறது. வல்லரசுகளுக்கிடையேயான யுத்தத்தை வல்லரசுகள் நேரடியாகச் செய்யாது தத்தமது நாடுகளைப் பாதுகாத்தவாறு ஏதாவதொரு பிராந்தியத்தில் தொடர்கின்றன. உலக வல்லரசுகள் முதலில் இனங்களின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் மதித்து சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கடைப்பிடிக்கும் உலகொன்றை கட்டியமைத்தால் யுத்தங்கள் நிகழா. ஆனால், அவர்கள் அதனைச் செய்ய முன்வரார். உலகு அமைதியானால்  பாதுகாப்பு உறுதியானால் தமது ஆயுத விற்பனையைத் தொடரத்தான் முடியுமா? ரஸ்ய-உக்ரேனியப் போரின் சுமையை உலகில் பணக்காரர்களைப் பாதித்ததா? இல்லையே. சாதாரண மக்களை அவர்களது சேமிப்புகளில் கைவைக்குமளவுக்குக் கூட, சிலர் வீட்டுக்கடனைக் கட்டமுடியாது விற்கும் நிலைவரை என்று... நிறைய எழுதலாம். ஆனால் நீங்கள் சுட்டியிருப்பது நிலைபெற்றால் மிக்க மகிழ்ச்சியே.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

யுத்தங்களுடனும் பிரச்சனைகளுடனும் தான் இந்த பூமி உருவாகி நிற்கின்றது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 
ஆனால் யுத்தம் எந்த இடங்களில் நடைபெறுகின்றது என வைத்துத்தான் உலகம் தன் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றது. உதாரணத்திற்கு இலங்கையில் யுத்தம் நடந்தால் உலகிற்கு பாதிப்பில்லை. அதே போல் காஷ்மீரிலும் சண்டைகள் நடந்தால் எந்த நாடுகளுக்கும் பாதிக்காது. ஆபிரிக்காவில் போர் நடந்தாலும் இதே நிலமைதான்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் யுத்தமும் பொருளாதார தடைகளும் நடைபெறுவது ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளில்..... அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளே எஞ்சியிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன என நினைக்கின்றேன்.

எனவே நாம் விரும்பியோ விரும்பாமலோ  மேற்குலகின் பொருளாதாரம்  சீராக இருந்தால்தான் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரமும் சீராக இருக்கும் என்ற கட்டாயத்தில்....😔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Paanch said:

ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட இடங்கள் எல்லாமே உலகில் அல்லோலப்படுகிறது.!😳

ஐரோப்பியர்கள் எமது நாடுகளை ஆண்டதினால் தான் நாம் எழுத படிக்க பழகிக்கொண்டோம் எனவும்.....நாம் இன்று நாகரீகமாக வாழ அவர்கள் தான் காரணம் எனவும் பல மேடைப்பேச்சுகள் சொல்கின்றனவே?

உண்மையும் அதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பியர்கள் எமது நாடுகளை ஆண்டதினால் தான் நாம் எழுத படிக்க பழகிக்கொண்டோம் எனவும்.....நாம் இன்று நாகரீகமாக வாழ அவர்கள் தான் காரணம் எனவும் பல மேடைப்பேச்சுகள் சொல்கின்றனவே?

உண்மையும் அதுதானே?

சாமியாரா இதைச் சொன்னார்? நம்பமுடியவில்லை!!

திருவள்ளுவர் கடைச்சங்க காலத்துப் புலவர். அவர் குறள் எழுதிய காலம் கி.மு 31 என வரலாறு தெரிவிக்கிறது. அவர் எந்த ஆங்கிலேயரிடம் எழுதப்படிக்க கற்றுக்கொண்டார்? திருக்குறள் தெரிவிக்காத நாகரீகத்தையா ஆங்கிலேயர் எமக்குக் கற்றுத்தந்தார்கள்??

ஆங்கிலேயர் எங்களை ஆண்ட காலத்தில் பட்டினத்தார் பிறந்திருந்தால்… பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் என்று பாடியிருக்கமாட்டார், வெறும் கண்களாலே அந்த இடத்தைப் பார்க்கும் நாகரீக நிலையைப் பெற்றிருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எனவே நாம் விரும்பியோ விரும்பாமலோ  மேற்குலகின் பொருளாதாரம்  சீராக இருந்தால்தான் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரமும் சீராக இருக்கும் என்ற கட்டாயத்தில்....😔

இந்தக் கட்டாயநிலைநோக்கித் தள்ளியது ஒன்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் அல்ல. உலகைச் சுரண்டிக்கொழுத்த மேற்குலகும் அவற்றின் பல்தேசியக்கூட்டுகளுமே என்பது எனது பார்வை. இதுவரை யுத்தங்களை அவர்கள் நடாத்தினார்கள். இன்று அவர்களது சந்திக்கு அருகாமையில் யுத்தம் வந்து நிற்கிறது. நாம் மேற்கில் இருப்பதால் அதன் நேரடித்தாக்கங்களை காண்கின்றோம். சுரண்டலாதிக்க சிந்தனை உள்ளவரை போர்களும் ஓயாது. போர்களைத் தடுக்கும் அல்லது தவிர்க்கும் நோக்குநிலை மங்கிவிட்டதன் அண்மைய எடுத்தகாட்டாக காஸாவும் உக்ரேனும் உள்ளன.   
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலால் 10 பேர் பலி: 2,100 விமானங்கள் ரத்து

america-2-300x200.jpg

அமெரிக்கா முழுவதும் அரிய வகை பனிப்புயல் வீசியதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ் லூசியானா, மிசிசிபி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது.

அந்நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா, மிசிசிபி மற்றும் மில்வாகீ பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் ஜார்ஜியா, மிசிசிபி மற்றும் புளோரிடா மாகாண ஆளுநர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/314830

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.