Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது

அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கயைில்,
சட்டவிரோதமாக குடியேறிய 538 குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்தது. இதில் ஒருவர் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர், ட்ரென் டி அரகுவா கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோதக் குற்றவாளிகள் ஆகியோரும் அடங்குவர்.

டிரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் எக்ஸ் தளத்திலும் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே இது என்று கூறி உள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிலரின் பெயர்களையும், அவர்கள் செய்த குற்றங்களையும் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1418082

  • கருத்துக்கள உறவுகள்

The Trump administration has deported fewer overall people than were deported under former President Obama despite the ongoing crackdown on immigrants without legal status, according to the Washington Post.

While the Obama administration deported 1.18 million people in his first three years, the number of deportations has been a little under 800,000 so far under Trump, according to the Post.

The Obama administration also deported 409,849 people in 2012 alone, while the Trump administration has yet to deport more than 260,000 people in a year, the Post reported. The Post noted it was unclear why there have been fewer deportations under Trump

8 hours ago, தமிழ் சிறி said:

முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஒபாமா சத்தமில்லாமல் லட்சக் கணக்கான குடியேறிகளை திருப்பி அனுப்பியள்ளார்.

ரம் கோழி மாதிரி ஒரு முட்டுவிட்டு கொக்கரித்து உலகத்துக்கே தெரியப்படுத்தும்.

https://docs.house.gov/meetings/GO/GO00/20200109/110349/HHRG-116-GO00-20200109-SD007.pdf

  • கருத்துக்கள உறவுகள்

குடியேற்றவாசிகளைத் திருப்பி வெனிசூலாவுக்கு அனுப்பிய விமானத்தை

வெனிசூலா தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் விமானங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படாததை அடுத்து ஜனாதிபதி ‘அவசரகால 25% கட்டணங்களை’ அறிவித்தார்.

ntவெனிசூலாவுக்கு ஆப்பு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

குடியேற்றவாசிகளைத் திருப்பி வெனிசூலாவுக்கு அனுப்பிய விமானத்தை

வெனிசூலா தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் விமானங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படாததை அடுத்து ஜனாதிபதி ‘அவசரகால 25% கட்டணங்களை’ அறிவித்தார்.

ntவெனிசூலாவுக்கு ஆப்பு இருக்கு.

சரியான போட்டி, பைடன் அமெரிக்காவினை இராணுவ ரீதியாக பலவீனமாக்கினார், தற்போது ட்ரம்ப் அமெரிக்காவினை பொருளாதார ரீதியாக பலவீனபடுத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

சரியான போட்டி, பைடன் அமெரிக்காவினை இராணுவ ரீதியாக பலவீனமாக்கினார், தற்போது ட்ரம்ப் அமெரிக்காவினை பொருளாதார ரீதியாக பலவீனபடுத்துகிறார்.

DUBAI, United Arab Emirates (AP) — Saudi Arabia’s crown prince said the kingdom wants to invest $600 billion in the United States over the next four years, comments that came after President Donald Trump put a price tag on returning to the kingdom as his first foreign trip.

https://apnews.com/article/saudi-arabia-us-investment-trump-6730a89f93b44ed8d705638f95700cbb

 

எப்படி?

ஐப்பான் வங்கி 100 பில்லியன்

சவுதியும் எத்தனையோ பில்லியன்

என்று சிகப்பு கட்சி ஒரே கொண்டாட்டமாக இருக்கிறார்களே.

Japanese tech conglomerate SoftBank plans to invest $100 billion in the U.S. and create 100,000 jobs in artificial intelligence and technology, President-elect Donald Trump announced Monday at Mar-a-Lago alongside SoftBank CEO Masayoshi Son

https://www.cbsnews.com/news/trump-says-japanese-softbank-to-invest-100-billion-in-us/

இத்தனைக்கும் யப்பான் படுமேசமாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா; அனுமதி மறுத்த மெக்சிகோ

mexico-1-300x169.jpg

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார். மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்க எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் விரைவில் இங்கு, தடுப்புச் சுவர் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 80 அகதிகள் அமெரிக்காவின் ராணுவ விமானம் மூலம் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அகதிகளை அழைத்து வந்த விமானம் தரையிறங்க மெக்சிகோ அரசு அனுமதி மறுத்தது. இதனால் அவர்கள் கவுதமாலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அகதிகள் விவகாரத்தில் மெக்சிகோ- அமெரிக்கா இடையே ஏற்கனவே மோதல் நிலவி வரும் சூழலில், இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/314898

கைவிலங்கிடப்பட்டு போர்விமானங்களில் ஏற்றப்படும் குடியேற்றவாசிகள்

Published By: RAJEEBAN   27 JAN, 2025 | 10:26 AM

image
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நாடு கடத்தும் உத்தரவை தொடர்ந்து கைகளில் விலங்கிடப்பட்டவர்கள் அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் டெலிகிராவ்  தெரிவித்துள்ளதாவது

பெருமளவில் குடியேற்றவாசிகளை வெளியேற்றும் டிரம்பின் நடவடிக்கை முழுமூச்சில் இடம்பெறுகின்றது, குடியேற்றவாசிகள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட நிலையில் விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

migrants_7.jpg

நாடுகடத்தும் விமானங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளன என டிரம்பின் ஊடக அதிகாரி கரோலின் லியவிட் தெரிவித்துள்ளார். கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில் விலங்கிடப்பட்ட நபர்கள் விமானங்களை நோக்கி செல்வதை காண்பிக்கும் படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் இது என குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடத்தப்பட்டவர்களில் பயங்கரவாத சந்தேநபர்கள் என கருதப்படும் நால்வரும்,வெனிசுவேலாவை சேர்ந்த குற்றக்கும்பல் ஒன்றை சேர்ந்தவர்களும் சிறுவர்களிற்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பலரும் உள்ளதாக டிரம்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவின் டிரென் டி அராகுவா வன்முறைக்கும்பல் குறித்து அமெரி;க்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கடும் வாதபிரதிவாதங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கொலராடோவில் உள்ள நகரமொன்றை போர்க்களமாக மாற்றியுள்ளனர் என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

சுமார் 169 குடியேற்றவாசிகளுடன் இரண்டு அமெரிக்க விமானங்கள்புறப்பட்டுள்ளன,அமெரிக்க வரலாற்றில் சமீப காலத்தில் நாடு கடத்தப்படும் குடியேற்றவாசிகளுடன் அமெரிக்க விமானங்கள் புறப்பட்டமை இதுவே முதல்தடவை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/204992

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

கொலம்பியா மீது 25% வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்கள் மீதான கட்டணங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும், ஒரு வாரத்தில் 25% கட்டணங்கள் 50% ஆக உயர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

அது தவிர கொலம்பிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அமெரிக்கா பயணத் தடை மற்றும் “உடனடி விசா இரத்துகளை” விதிக்கும் என்று அவர் கூறினார்.

நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்கக் கூடாது என்று அந் நாட்டு ஜனாதிபதி தடை விதித்ததை அடுத்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதேவேளை, லத்தீன் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய அமெரிக்க வர்த்தக பங்காளியான கொலம்பியா, ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு விரைவாக பதிலளித்தது.

ட்ரம்பின் அறிவிப்பின் சில மணி நேரங்களுக்கு பின்னர் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 25% உயர்த்துமாறு வர்த்தக அமைச்சகத்திற்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.

“அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எங்கள் மனித உழைப்பின் பலன்களுக்கு நீங்கள் 50% வரி விதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, நானும் அதையே செய்கிறேன்” என்று பெட்ரோ ட்ரம்பை இலக்காகக் கொண்ட எக்ஸ் பதிவில் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னதாக நாட்டை நோக்கிச் செல்லும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களைத் தடுத்துள்ளதாக அறிவித்தார்.

மேலும் புலம்பெயர்ந்தோரை நடத்துவதில் சிறந்த நெறிமுறைகளை நிறுவுமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார்.

புலம்பெயர்ந்த நாடுகடத்தப்பட்டவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சான் டியாகோவிலிருந்து இரண்டு இராணுவ விமானங்கள் கொலம்பியாவில் தரையிறங்கவிருந்ததாகவும், ஆனால் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1418305

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

DUBAI, United Arab Emirates (AP) — Saudi Arabia’s crown prince said the kingdom wants to invest $600 billion in the United States over the next four years, comments that came after President Donald Trump put a price tag on returning to the kingdom as his first foreign trip.

https://apnews.com/article/saudi-arabia-us-investment-trump-6730a89f93b44ed8d705638f95700cbb

 

எப்படி?

ஐப்பான் வங்கி 100 பில்லியன்

சவுதியும் எத்தனையோ பில்லியன்

என்று சிகப்பு கட்சி ஒரே கொண்டாட்டமாக இருக்கிறார்களே.

Japanese tech conglomerate SoftBank plans to invest $100 billion in the U.S. and create 100,000 jobs in artificial intelligence and technology, President-elect Donald Trump announced Monday at Mar-a-Lago alongside SoftBank CEO Masayoshi Son

https://www.cbsnews.com/news/trump-says-japanese-softbank-to-invest-100-billion-in-us/

இத்தனைக்கும் யப்பான் படுமேசமாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

வரி விதிப்பு போரினால் ஏட்டிக்கு போட்டியாக வரி விதிக்கப்படின் அமெரிகாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தமக்கு தேவையான அதிக சனத்தொகை கொண்ட வரி பிரச்சினைகளற்ற நாடுகளினை நோக்கி தமது இடப்பெயர்வினை ஆரம்பித்தால் அதனால் ஏற்படும் ஆபத்தினை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

கிழக்காசிய நாடுகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்திற்கு அடிப்படை கட்டுமானம் இல்லாதிருக்கின்றநிலையில் கூட அங்கு குறைந்த உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள் தமது பார்வையினை திருப்பியுள்ளன.

இந்த நாடுகளில் சனத்தொகை நுகர்வோராக இல்லாத போதும் ஆசிய பிராந்தியத்திற்கும் ஏனைய பிராந்தியத்திற்குமிடையே எந்த வித அரசியல் பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கின்றமையால் ஆசியாவினை மையப்படுத்திய சந்தையினை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள் நகரக்கூடும்.

கந்து வட்டிக்காரன் உள்ளே வருகிறான் என்றால் அது நல்ல சகுனம் அல்ல.😁

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகள் இடையான நாடு கடத்தல், அந்த நாடுகளின் அனுமதி இல்லாவிடின் நடப்பது கஸ்டம்.

இல்லாவிட்டால் இந்தியன் என சொல்லி, பல பாகிஸ்தானிகளை இந்தியாவில் கொண்டு போய் இறக்கி விடலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்கள் மீதான கட்டணங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும், ஒரு வாரத்தில் 25% கட்டணங்கள் 50% ஆக உயர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்

இந்த வரிகளை உயர்த்தினால் இதைக் கட்டப் போவது மக்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த வரிகளை உயர்த்தினால் இதைக் கட்டப் போவது மக்கள் தானே?

ஆமாம் நிச்சியமாக,......நீங்களும் தான்    ஆனால் தேர்தலுக்கு.  முதல் யாழ் களத்தில் எழுதினார் உங்கள் நண்பர்    ட்ரம்பு   வந்தால்   வரி குறையும் என்று    ....ஆனால் பொருள்கள் விலை கூடப்போகுது     அந்த பொருள்களை வாங்குவோர். தான்  வரி காட்டுவார்கள்  .....வரி குறைப்பினால்.  வரும் வருமானம்    பொருள்கள் வாங்கும் பொழுது செலவு ஆகும்   

எனவே…,.வரி குறைப்பு = வரி விதிப்பு    🤣.     

உங்கள் பொக்கிஷங்கள்.     கூடப் போவதில்லை    

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் டொலருக்கு எதிராக எதுவும் வரக் கூடாது என்றபடி மறுபக்கம் வரிகளை நாடுகள் மீது சுமத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரப் போகிறது. ஆனால் இந்த பைத்தியம் இன்னும் என்ன எல்லாம் செய்யப்போகிதோ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஒரு புறம் டொலருக்கு எதிராக எதுவும் வரக் கூடாது என்றபடி மறுபக்கம் வரிகளை நாடுகள் மீது சுமத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரப் போகிறது. ஆனால் இந்த பைத்தியம் இன்னும் என்ன எல்லாம் செய்யப்போகிதோ? 

100% என்ற ஒரேஒரு அறிக்கையில் இந்தியா தடுமாறிவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.