Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா

Published By: Digital Desk 3

28 Jan, 2025 | 01:26 PM
image

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டீப்சீக் (DeepSeek) தொழில்நுட்ப நிறுவனம் ஒரு விழிதெழுவதற்கான அழைப்பு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம் தெரிவித்துள்ளார்.

டீப்சீக் என்பது சீனாவின்  தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் செயற்கை தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்போட் ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானது. டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக மாறியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது திடீரென பிரபலம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றால் நியூயோர்க் பங்குச் சந்தையை கதிகலங்க வைத்துள்ளது.

செயற்கை தொழில் நுட்பத்தில் டீப்சீக் மிகவும் அற்புதமான மற்றும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களில்  ஒன்று என சிலிக்கான் வேலி துணிகர முதலீட்டாளர் மார்க் ஆண்ட்ரீசென் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் செயற்கை தொழில்நுட்பத்திற்கு முன்னணி மாதிரியாகவுள்ள அமெரிக்காவின் ChatGPT  க்கு இணையாக குறைந்த செலவில் டீப்சீக் செயற்கை தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீப்சீக் செயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்க 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்காவில் செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவழித்த பில்லியன்களை விட மிகக் குறைவு ஆகும்.

இது குறித்து என  ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகவியலாளரிடம் டொனால்ட்  ட்ரம் கருத்து  தெரிவிக்கையில், 

சீனாவின் செயற்கை தொழில்நுட்ப துறையின் அண்மைய முன்னேற்றங்கள் அமெரிக்காவிற்கு "சாதகமாக" இருக்கலாம்.

"நீங்கள் அதை மலிவாக செய்ய முடிந்தால், நீங்கள் அதை [குறைவாக] செய்தால் [மற்றும்] அதே பலனைப் பெற முடியும். அது எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்," 

இந்த முன்னேற்றம் குறித்து தனக்கு கவலை இல்லை, இந்த துறையில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்கும் என  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205118

  • கருத்துக்கள உறவுகள்

இதில் டிரம்ப் இந்த வெளித்தோற்றப்   போக்கு சரியானது 


நாம் (us) முன்னணினயில் இருப்போம் (அப்படி இருக்க முயல்வோம்)


டிரம்ப், சீனவை தடுக்த்து (அப்படி முயன்று) முன்னணினயில் இருப்போம், இருக்க முயல்வோம் என்று அர்த்தப்பட சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டீப்சீக்: செயற்கை நுண்ணறிவு உலகில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு 'செக்' வைத்த சீன செயலி

DeepSeek, அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ் & இம்ரான் ரஹ்மான் – ஜோன்ஸ்
  • பதவி, வணிகம் & தொழில்நுட்ப செய்தியாளர்கள்
  • 28 ஜனவரி 2025, 07:18 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச செயற்கை நுண்ணறிவு (AI) செயலியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

சீன செயலிக்கு அதிகரிக்கும் வரவேற்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை தூண்டியிருக்கிறது. இதனால் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்தன. இது ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை விஞ்ச முடியாது என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில், அறிமுகமான முதல் நாளில் இருந்தே இச்செயலி பிரபலமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் துறையில் செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீடுகளின் அளவு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மலிவு விலை ஏ.ஐ. சாத்தியமானது எப்படி?

இது ஓபன் சோர்ஸ் டீப்சீக்-வி3 மாடலால் செயல்படுகிறது. இதை உருவாக்க 6 மில்லியன் டாலர்களைவிட குறைவான தொகையே செலவானதாக அதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தொகை அதன் போட்டியாளர்கள் செலவிட்ட பல பில்லியன் டாலர்களைவிட கணிசமான அளவு குறைவு.

ஆனால் இந்த கூற்றை இத்துறையில் இருக்கும் மற்றவர்கள் மறுக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துவரும் சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

உயரிய தொழில்நுட்பத்துடனான இறக்குமதி செய்யப்பட்ட சிப்கள் சீராக கிடைக்காத நிலையில், சீன செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் தங்களது பணியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டதுடன், அந்த தொழில்நுட்பம் தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் முயற்சித்திருக்கின்றனர்.

இதனால் முன்பைவிட குறைவான அளவே கணினி ஆற்றல் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பு நினைத்ததைவிட குறைவாகவே செலவாகும் என்பதால், இந்த துறை மேம்பட வாய்ப்புகள் உள்ளன.

முன்னதாக இம்மாதத்தில் டீப்சீக்-ஆர் 1 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கணிதம், கோடிங் மற்றும் மொழி பகுத்தறிதல் போன்றவற்றில் இதன் செயல்பாடு சாட்ஜிபிடி தயாரிப்பாளரான ஓபன்ஏஐ உருவாக்கிய மாடல்களுக்கு இணையாக இருப்பதாக அந்த நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்தது.

DeepSeek, அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, சீனாவுக்கு உயர் ரக சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள இந்த சூழலில் டீப்சீக் செயலி வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

முதலீடுகள் பாதிக்கப்படக் கூடும்

சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளரும், டொனால்ட் டிரம்பின் ஆலோசகருமான மார்க் ஆண்டர்சன், டீப்சீக்-ஆர்1 -சோவியத் யூனியன் 1957இல் செயற்கைக்கோள் ஏவியதை போன்றது என்று சுட்டிகாட்டும் வகையில் "ஏ.ஐ. துறையின் ஸ்புட்னிக் தருணம்" என விவரித்தார் .

அந்த காலகட்டத்தில், அமெரிக்கா எதிராளியின் தொழில்நுட்ப சாதனை குறித்து அறியாமல் இருந்ததாக கருதப்பட்டது.

டீப்சீக் செயலிக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பங்குச் சந்தைகளை திடுக்கிடச் செய்துள்ளது. சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை சேர்ந்த ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் பங்குகள் 10%-க்கு மேல் சரிவடைந்தன. ஏ.ஐ தொடர்பான பொருட்களை தயாரிக்கும் சீமென்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 21% குறைந்தது.

"ஒரு குறைந்தவிலை சீனத் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பு இல்லாததால், இது சந்தைகளை சற்றே ஆச்சரியமடைய வைத்துள்ளது," என்றார் சிட்டி இண்டெக்ஸில் மூத்த சந்தை ஆய்வாளரான ஃபியோனா சின்கோட்டா.

"திடீரென இந்த குறைந்த விலை ஏ.ஐ மாடல் கிடைத்ததால், விலை உயர்ந்த ஏ.ஐ கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ள அதன் போட்டி நிறுவனங்களின் லாபம் குறித்த கேள்விகளை எழுப்பப் போகிறது."

இது "ஏ.ஐ தொழில்நுட்ப விநியோக சங்கிலியில் செய்யப்படும் முதலீடுகளை தடம்புரள செய்யக்கூடும்" என சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப பங்குகள் ஆலோசகர் வே-செர்ன் லிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஓபன்ஏஐ போன்ற அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு டீப்சீக் சவாலாக இருந்தாலும், சீன நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் அவற்றின் வளர்ச்சியை தடுக்கக் கூடும் என பெருவங்கியான சிட்டி பேங்க் எச்சரித்துள்ளது.

"தவிர்க்க முடியாத கூடுதல் கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில், உயரிய தொழில்நுட்பம் கொண்ட சிப்கள் அதிக அளவில் கிடைப்பது அமெரிக்காவிற்கு ஒரு சாதகம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டெக்ஸாஸில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்காக 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஸ்டார்கேட் புராஜெக்ட் என்ற நிறுவனத்தை தொடங்குவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்ட கூட்டமைப்பு கடந்த வாரம் அறிவித்தது.

DeepSeek, அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இத்தனை மலிவான விலையில் ஏ.ஐ மாடல் கிடைத்ததால், ஏ.ஐ கட்டமைப்புகளுக்காக பல கோடி முதலீடு செய்யும் போட்டி நிறுவனங்களின் லாபம் கேள்விக்குறியாகிறது.

டீப்சீக்கை உருவாக்கியது யார்?

இந்த நிறுவனம் தென்கிழக்கு சீனாவின் ஹேங்ஜூ நகரில் லியாங் வென்ஃபெங் என்பவரால் 2023-ல் தொடங்கப்பட்டது.

40 வயதான இவர், தகவல் மற்றும் மின்னணு பொறியியல் பட்டதாரி என்பதுடன் டீப்சீக்கை ஆதரித்த 'ஹெட்ஜ்' நிதியை உருவாக்கியவரும் இவர்தான்.

இவர் தற்போது சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது தடை விதிக்கப்பட்டுள்ள என்விடா ஏ100 சிப்களை வாங்கிச் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இது சுமார் 50,000 சிப்கள் என கணிக்கப்படுகிறது. இந்த சேகரிக்கப்பட்ட சிப்புகளை, மலிவு விலையில் இறக்குமதி செய்யக்கூடிய சிப்புகளுடன் இணைத்து , டீப்சீக்கை இவர் உருவாக்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அண்மையில் தொழில்துறை நிபுணர்களுடன் சீன பிரதமர் நடத்திய சந்திப்பில் லியாங்கும் காணப்பட்டார்.

2024, ஜூலையில் சீன அகாடமிக்கு அளித்த பேட்டியில் தனது முந்தைய ஏஐ மாடலுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியமடைந்ததாக கூறினார்.

"கட்டணம் இவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை," என அவர் தெரிவித்தார்.

"நாங்கள் எங்களுடைய வேகத்தில் செயல்பட்டு, செலவுகளை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்தோம்." என்றார் அவர்.

கூடுதல் தகவல்கள் - ஜோவா டா சில்வா மற்றும் டியர்பெய்ல் ஜோர்டன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரண்டு நாட்களுக்கு முன் ட்றம்ப் அறிவித்த 500 பில்லியன் பாரிய நுண்ணறிவுத் திட்டம் மூலம் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு  அடிமைப்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. 

டீப்சீக் இத் திட்டத்திற்கு சமனாக அமையாவிட்டாலும் சில மில்லியன் செலவில் உருவான சிறிய நிறுவனம் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிறுவிக் காட்டியது.

நேற்றைய அமெரிக்க பங்குச் சந்தையை அதிர வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

இதில் டிரம்ப் இந்த வெளித்தோற்றப்   போக்கு சரியானது 


நாம் (us) முன்னணினயில் இருப்போம் (அப்படி இருக்க முயல்வோம்)


டிரம்ப், சீனவை தடுக்த்து (அப்படி முயன்று) முன்னணினயில் இருப்போம், இருக்க முயல்வோம் என்று அர்த்தப்பட சொல்லவில்லை.

ரம் தற்போது இப்படிச் சொன்னாலும் நாளடைவில் சிப்புக்கு தடை செய்தது போல ஏதாவது ஒரு வழியில் முடக்க இப்பவே ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பார்.

இதை வெளியே சொல்ல முடியாது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை DeepSeek இன் ஆர்-1 மாடல் இந்த துறையில் ஒரு சாதனை போன்றே தெரிகின்றது. இதைப் பற்றிய கட்டுமான விபரங்களும் வெளியே வந்துள்ளன.  Open Source ஆக எம்ஐடி லைசென்ஸ் ஊடாக எவரும் தரைவிறக்கி, அவர்களின் தேவைகளுக்கேற்ப செம்மையாக்கிக் கொள்ளலாம் என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.............................❤️.

அவர்களின் முன்னைய மாடலின் வழமையான 671 பில்லியன் inputs களிலிருந்து, மிகக் குறைவான, ஆனால் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய ஒரு பகுதியையே பயன்படுத்துகின்றார்கள் என்று சில விபரங்களில் இருக்கின்றது. இதைப் போலவே தகவல்களை எங்கே, எப்படி ஒரு சுருக்கிய வடிவில் சேமித்து, பின்னர் விரைவாகக் கொண்டு வருவது என்பதிலும் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

NVIDIA இன்  H800 GPUs ஐயே இவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இந்த துறையில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இதைவிட மிகவும் திறன் வாய்ந்தவற்றை, மிக அதிக எண்ணிக்கையில் உபயோகித்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் பிரதி செய்யும் சைனாவால் இவைகளை பிரதி செய்ய முடியாமல் இருப்பதும், இதற்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

இதை தரைவிறக்கம் செய்து இது என்னதான் என்று பார்க்க ஆரம்பித்தால், யாழ்களப் பக்கம் வரமுடியாது. யாழ்களம் இதைவிட எனக்கு முக்கியம்......................😜. வேறு யாராவது பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.........

இங்கு பங்குச் சந்தைக்கு விழுந்த அடி, புட்டுச் சாப்பிட்டு விட்டு வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்த சிவபெருமானுக்கு முதுகில் விழுந்த அடி போல. இங்கு எங்கள் எல்லோருக்கும் அந்த அடி விழுந்திருக்கின்றது. இப்படி இடைக்கிடை இங்கு நிகழும்.


'எதைக் கொண்டு வந்தாய் அதைக் கொண்டு போக..................'...................🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

இங்கு பங்குச் சந்தைக்கு விழுந்த அடி, புட்டுச் சாப்பிட்டு விட்டு வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்த சிவபெருமானுக்கு முதுகில் விழுந்த அடி போல. இங்கு எங்கள் எல்லோருக்கும் அந்த அடி விழுந்திருக்கின்றது. இப்படி இடைக்கிடை இங்கு நிகழும்.

401 K ஐ நினைத்து சொல்றீங்க போல.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

401 K ஐ நினைத்து சொல்றீங்க போல.

அதுவே தான், அண்ணா. இங்கு பலரினதும் பிற்காலக் கனவு வாழ்க்கைகளினதும் அடிப்படையே ஆடிப்போய் விடுகின்றது.......................

இதைவிடவும், இங்கு இன்றைய நிலையில் பலரினதும் தனி முதலீடுகளும், சிறுதோ அல்லது பெரிதோ, இந்த துறையையே நோக்கியே இருக்கின்றன. இது கடந்த சில வருடங்களாக நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. இந்த வாரம் இழப்பு வாரம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்...........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அதுவே தான், அண்ணா. இங்கு பலரினதும் பிற்காலக் கனவு வாழ்க்கைகளினதும் அடிப்படையே ஆடிப்போய் விடுகின்றது.......................

இதைவிடவும், இங்கு இன்றைய நிலையில் பலரினதும் தனி முதலீடுகளும், சிறுதோ அல்லது பெரிதோ, இந்த துறையையே நோக்கியே இருக்கின்றன. இது கடந்த சில வருடங்களாக நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. இந்த வாரம் இழப்பு வாரம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்...........

கோவிட்டோடு பலரும் பங்குச்சந்தையில் முதலிடப் பழகிக் கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Downlod பண்ணி பார்த்தேன், இது உண்மையிலேயே சிறப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது, இனி அமெரிக்க கம்பனிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது,  செலவைகுறைத்து, இன்னும் சிறப்பான ஒன்றை தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சீனர்கள் தடை வரமுன்னரே நிறைய ஹார்ட்வேர்களை வாங்கி வைத்துள்ளார்கள், அவர்களுடைய ஆராய்ச்சிக்கு ஒருவித தேக்கமும் வரப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

Downlod பண்ணி பார்த்தேன், இது உண்மையிலேயே சிறப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது, இனி அமெரிக்க கம்பனிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது,  செலவைகுறைத்து, இன்னும் சிறப்பான ஒன்றை தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சீனர்கள் தடை வரமுன்னரே நிறைய ஹார்ட்வேர்களை வாங்கி வைத்துள்ளார்கள், அவர்களுடைய ஆராய்ச்சிக்கு ஒருவித தேக்கமும் வரப்போவதில்லை

நம்பி டவுன் லோடு பண்ணலாமா?

சீன தயாரிப்பு…

பொறகு கோஷான் குளியல் வீடியோ வந்தால்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நம்பி டவுன் லோடு பண்ணலாமா?

சீன தயாரிப்பு…

பொறகு கோஷான் குளியல் வீடியோ வந்தால்?🤣

இன்று நியூயோர்க்கில் உள்ள நண்பருடன் கதைத்த போது அவர் ஜிம்முக்கு போனால் மூலைக்கு மூலை நின்று எல்லோரும் டவுண்லோட் பண்ணி அதைப்பற்றியே கேள்விகள் கேட்டு கூடிக் கதைத்துக் கொண்டிருந்ததாக சொன்னார்.

அண்ணை நீங்க மட்டும் இதை டவுண்லேட் பண்ண வேண்டாம்.

ஏற்கனவே அக்கா நீங்க கணனியில் இருப்பதாக குறை.அதோடு கதைக்க தொடங்கினால் விட்டுட்டுப் போகமாட்டீர்கள்.

அதோடு இதில இருந்து என்னென்னத்தை உருவப் போறாங்களோ தெரியாது.

கவனம் அண்ணா என்றார்.

17 minutes ago, goshan_che said:

பொறகு கோஷான் குளியல் வீடியோ வந்தால்?🤣

ஆண்கள் குளிக்கிறதைப் போட்டால் ஒரு காக்கா குருவி கூட பார்க்காது.

மொதல்ல நீர்வேலியானின் குளியல் படம் வரட்டும்.

2 hours ago, நீர்வேலியான் said:

Downlod பண்ணி பார்த்தேன், இது உண்மையிலேயே சிறப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது, இனி அமெரிக்க கம்பனிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது,  செலவைகுறைத்து, இன்னும் சிறப்பான ஒன்றை தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சீனர்கள் தடை வரமுன்னரே நிறைய ஹார்ட்வேர்களை வாங்கி வைத்துள்ளார்கள், அவர்களுடைய ஆராய்ச்சிக்கு ஒருவித தேக்கமும் வரப்போவதில்லை

உங்கள் குளியல் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பர் பயம்தான் எனக்கும்.

நீர்வேலியான் வீடியோவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து விட்டு நான் முடிவு செய்யலாம் என உள்ளேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்கள் நண்பர் பயம்தான் எனக்கும்.

நீர்வேலியான் வீடியோவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து விட்டு நான் முடிவு செய்யலாம் என உள்ளேன்🤣.

Google இல் இருந்து எல்லோரும் நமது தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறார்கள், இதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. சரி சீனர்களும் சேகரித்துக்கொண்டு போகட்டும். எனது குளியல் வீடியோ வந்தால் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். இது இலவசமாக கொடுக்கிறார்கள், விளைவுகளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்த போட்டியில் மாறி மாறி ஒவ்வொருவரும் மெருக்கூட்டி சிறப்பான செயலிகளை விடப்போகிறார்கள். எனது வேலைக்குரிய சில தேவைகளுக்கு சும்மா பாவித்துப்பார்த்தேன், சில வேலைகளுக்கு இனி ஆட்கள் தேவைப்படாது என்று தெரிகிறது. வருங்காலத்தில் நிறைய பேருக்கு வேலை போகபோவது உறுதி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நீர்வேலியான் said:

இந்த போட்டியில் மாறி மாறி ஒவ்வொருவரும் மெருக்கூட்டி சிறப்பான செயலிகளை விடப்போகிறார்கள். 

இவர்கள் சொல்லுவது தான் உண்மையான செலவு என்றால், இங்கு ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்களே தங்களுக்கென்று தனிப்பட்ட ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவையான inputs மிகச் சொற்பமே. அதனால் மிகவும் திறன் கூடியதை அவரவர் தேவைக்கேற்ப உருவாக்குவது எளிதாகிவிடுகின்றது.

இவர்களின் source code கிடைக்கின்றது என்கின்றார்கள். அதை எடுத்து பார்க்க வேண்டும் என்றால், நேரமும் பொறுமையும் வேண்டும். நேரத்தை விட பொறுமை தான் வேண்டும் போல...................😜.

முன்னர் நடந்த ஒரு பகிடி:

ஒரு நிறுவனத்தில் மிகத் திறமையான ஒருவன் வேலை செய்தான். அந்த நேரத்தில் நானும் அங்கே இருந்தேன். நல்ல நண்பனும் ஆனான், ஆனால் வேலையில் ஒரே அணியில் இல்லை. ஒரு நாளும் நேரத்திற்கு வரவேமாட்டான். அவனால் அவனின் மேற்பார்வையாளருக்கு மாரடைப்பு வராதது ஒன்று தான் குறை. ஆனால் மிகக்கடினமான பிரச்சனைகளையும் மிக எளிதாக செய்து முடிப்பான்.

ஒரு வருட மதிப்பீட்டில் அவனுக்கு மிகக் குறைவான புள்ளிகளே போடப்பட்டது. அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ஆளே கிடையாது. அப்பொழுது ஐஃபோன் மிகப் பிரபலமாக இருந்த காலம்.

அவனின் மேற்பார்வையளர் அவனைக் கூப்பிட்டு, நீ நிறுவனத்திற்கு புதிதாக எதுவும் செய்வதே இல்லை, அதனால் தான் உனக்கு மிகக்குறைவான மதிப்பீடு போடப்பட்டிருக்கின்றது என்றார்.

'அப்ப நான் அடுத்த ஐஃபோனை ரிலீஸ் செய்யவா.................' என்று அவன் மேற்பார்வையாளரை பார்த்துக் கேட்டான்......................

இப்பொழுது வேறு ஒரு இடத்தில் வேலை செய்கின்றான். ஆனால் அவனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடம் அவனின் மேற்பார்வையாளரை கேட்க வேண்டி இருந்தால், இப்படித்தான் கேட்பான் என்று நினைக்கின்றேன்: 'அப்ப நான் அடுத்த ஏஐயை ரிலீஸ் செய்யவா....................'

ஆள் தமிழ் தான்............... சொந்த ஊர் தேனி மாவட்டம்................  

 

  • கருத்துக்கள உறவுகள்

AI உலகில் புதுமுகம் DeepSeek

DeepSeek (டீப்சீக்) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு [Artificial Intelligence (AI)] மாடல். இதை உருவாக்கியவர் Liang Wenfeng. இதன் புதிய பதிப்பு ஜனவரி 20 அன்று வெளியாகி AI தொழில்நுட்ப வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

OpenAI போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிக செலவில் advanced chips-ஐ பயன்படுத்தி AI மாடல்களை உருவாக்குகின்றன. ஆனால் DeepSeek குறைந்த computational resources-ஐ மட்டும் பயன்படுத்தி அதே அளவிற்கு திறமையான AI மாடலை உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம் மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. DeepSeek மொத்தம் $6 million செலவில் train செய்யப்பட்டது, அதே நேரத்தில் OpenAI-ன் GPT-4 போன்ற மாடல்கள் $100 million செலவாகின்றன. குறைவான memory footprint-ஐ கொண்டதால் இது computational efficiency-யை அதிகரிக்கிறது.

இதனால் Nvidia போன்ற chip-making நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஜனவரி 27 அன்று Nvidia-வின் பங்கு மதிப்பு $600 billion வரை சரிந்தது, இது அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு நாள் இழப்பு ஆகும்.

DeepSeek-ன் தொழில்நுட்ப அடிப்படை DeepSeek ஒரு Generative AI ஆகும், இது ChatGPT போன்ற chatbots போன்றே செயல்படும். இது Natural Language Processing (NLP) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களைப் போல பதிலளிக்க முடியும். DeepSeek Mixture-of-Experts (MoE) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது 671 billion parameters கொண்ட ஒரு மாடல் ஆக இருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட பணிக்காக மட்டும் 37 billion parameters-ஐ செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு:
ஒரு மொழிபெயர்ப்பு (Translation) செயலில் MoE System எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஆங்கிலத்தில் உள்ள “The weather is pleasant today” என்ற ஒரு வாக்கியத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு பொதுவான LLM மாடல் அனைத்துப் parameters-ஐ செயல்படுத்தும்.

ஆனால் MoE அமைப்பில்:

ஒரு set of parameters “Weather-related translations”-ஐ கவனிக்கும்.

இன்னொரு set “Sentence structure”-ஐ பார்க்கும்.

மற்றொரு set “Context-based translation”-ஐ கவனிக்கும்.

இதனால் MoE முறை சரியான மொழிபெயர்ப்பை வழங்கும். இதுவே task-specific precision-ஐ மேம்படுத்துகிறது.

இதன் மூலம்:

கணிப்பொறி திறன் (Computational Efficiency) அதிகரிக்கிறது.

சிக்கனமான செயல் முறை (Cost-Effective Processing) உருவாக்கப்படுகிறது.

DeepSeek-ன் Multi-Head Latent Attention (MLA) திறமை, இது பல்வேறு தகவல்களை ஒரே நேரத்தில் ஆராய்ந்து நுண்ணிய தொடர்புகளை கண்டறிந்து, சிறப்பான முடிவுகளை வழங்க உதவுகிறது. DeepSeek அதிக நீளமான context-ஐ பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது 128K tokens வரை விவரங்களை புரிந்துகொள்ள முடியும்.

இது ஒரு Open-Source AI Model ஆகும், இது GPT-4 போன்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும். இது 95% குறைந்த செலவில் செயல்படுகிறது.

DeepSeek-ன் வளர்ச்சி அமெரிக்க நிதி சந்தையை அதிகமாக பாதித்துள்ளது. DeepSeek-ன் வெற்றியால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

Nasdaq Index 3% வீழ்ச்சியடைந்தது.

Nvidia-வின் Market Capitalization $3.5 trillion-ல் இருந்து $2.9 trillion-ஆக குறைந்தது.

Apple, Microsoft போன்ற நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பாதிக்கப்பட்டன.

DeepSeek இப்போது சீனாவின் AI Renaissance (மறுமலர்ச்சி) எனக் கருதப்படுகிறது. ஆனால் Western market-ல் இது regulatory scrutiny (ஒழுங்குமுறை சோதனை) மற்றும் security concerns-ஐ எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து, DeepSeek AI உலகளவில் முக்கியமான AI போட்டியாளராக வளருமா என்பது பார்க்க வேண்டிய விஷயம்.

முனைவர் ப. தமிழ் அரசன்

tamilarasanbakthavatchalam@gmail.com

https://kaniyam.com/deepseek/

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சியில் US; ஒரே நாளில் அலறவைத்த China APP-ன் பின்னணி என்ன? Deep Seek எப்படி செயல்படுகிறது?

Deep Seek App Explained: அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச செயற்கை நுண்ணறிவு (AI) செயலியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

சீன செயலிக்கு அதிகரிக்கும் வரவேற்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை தூண்டியிருக்கிறது. இதனால் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்தன. இது ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை விஞ்ச முடியாது என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில், அறிமுகமான முதல் நாளில் இருந்தே இச்செயலி பிரபலமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் துறையில் செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீடுகளின் அளவு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

A Chinese-made artificial intelligence (AI) model called DeepSeek has shot to the top of Apple Store's downloads, stunning investors and sinking some tech stocks.

Its latest version was released on 20 January, quickly impressing AI experts before it got the attention of the entire tech industry - and the world.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • கருத்துக்கள உறவுகள்

AI போரை தொடங்கியதா சீனா? 😱 China's DeepSeek சம்பவம் | Mr.GK

DeepSeek AI is at the forefront of artificial intelligence, developing state-of-the-art models that push the boundaries of what AI can achieve. From advanced natural language processing to AI-powered search and coding, DeepSeek is revolutionizing the way we interact with technology.

 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில், பொதுவாக, ஒரு குறிப்பிட்ட (பொதுவாக இனக்குழு) குழு (இங்கு சீனா) திறமை குறைந்தது, பரிகாசிக்கும் குழுவிலும்  (இங்கு அமெரிக்கா, மேட்ற்கு)   புதுமை சிந்தனை விருத்தி குறைந்தது ... என்று  பரிகசிக்கப்பட்ட குழு, பரிகாசித்த குழுவை விஞ்சியதே பொதுவான வழமை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.