Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!

Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST]
 

periyar seeman vck

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார்.

இமானுவேல் சேகரன் படுகொலை- முத்துராமலிங்க தேவர்- பெரியார்

இதனால் நம்முடைய அய்யா முத்துராமலிங்க தேவரை கேள்வி கேட்டுவிட்டார்களே என்ற கோபத்தில் இமானுவேல் சேகரனை பக்கத்தில் இருந்த இளைஞர்கள் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர். முத்துராமலிங்க தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது தெரியாமல் நடந்துவிடுகிறது. ஆனால் பெரியார்தான் திரும்ப திரும்ப சொல்லி காமராஜரை வலியுறுத்தி முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வைத்தார். இவ்வாறு சீமான் பேசினார்.

1957-ல் முதுகுளத்தூரில் நடந்தது என்ன? சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்

சீமான் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:

கடந்த 1957 ல் முதுகுளத்தூரில் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.இரண்டாவது பொதுத்தேர்தலை ஒட்டி எழுந்த பதற்றம் அது. முகவை தலித்மக்கள் அப்போது காங்கிரசை ஆதரித்தனர். திரு.உ.முத்துராமலிங்கம் அவர்கள் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) பார்வர்ட் பிளாக் சார்பாக தேர்தலில் நின்றார்.
தேர்தலில் பள்ளர்கள் ( தேவேந்திர குல வேளாளர்கள்) உ.முத்துராமலிங்கத்திற்கு வாக்களிக்காததால் அவர்களது உடமைகளை தேவர் சாதியினர் சூறையாடினர்.
உச்ச பட்சமாக கடம்பாங்குளத்தில் 9 பள்ளர்களை தேவர்சாதியினர் தூக்கி பத்ரகாளிக்கு பலியிடப்போவதாக அறிவித்தனர்; சட்டசபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு தமிழகம் முழுவதும் பதற்றமானது.

முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்-தேவர் உரசல் மோதல் வெடித்தது.இதனை தடுக்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் சி.வி.ஆர் பணிக்கர் சமாதனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 1957 செப்டம்பர் 10 ம் தேதி முதுகுளத்தூரில் சமாதானக்கூட்டம் கூட்டப்பட்டது. ( இந்தக்கூட்டத்தை தான் பஞ்சாயத்து என சொல்கிறார் சீமான்)

இக்கூட்டத்தில் திரு.பெருமாள் பீட்டர், திரு.இம்மானுவேல் சேகரன் திரு.உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) சமாதானக்கூட்டத்திற்கு காலதாமதத்துடன் வந்தார்.
பெருமாள் பீட்டரும்,இம்மானுவேலும் உ.முத்துராமலிங்கம் வந்தபோது எழுந்து வணக்கமிடமில்லை.மற்றவர்கள் எழுந்து வணக்கமிட்டனர்.

உ.முத்துராமலிங்கம் பள்ளர் சாதி பிரதிநிதியாக இம்மானுவேலை ஏற்க மறுத்தார்.பரமக்குடி தொகுதியின் பார்வர்ட் பிளாக் எம் எல் ஏ வான பெருமாள் குடும்பனை பள்ளர் பிரதிநிதியாக ஏற்பதாக சொன்னார். இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.கலெக்டர் தலையீட்டினால் தனித்தனி சமாதானத் தாள்களில் இருவரும் கையொப்பமிட்டனர்

சமாதானக்கூட்டம் முடிந்து கோபத்தோடு வெளியேறிய உ.முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களைப்பார்த்து " ஒரு பள்ளப்பயலை எனக்கு சமமா வளர்த்துவிட்டீங்களே" என் கோபத்துடன் பேசினார்.இதன் விளைவாக அடுத்தநாள் செப்டர்பர் 11 ம் தேதியே இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உ. முத்துராமலிங்கமும் கைது செய்யப்பட்டார். உண்மை இப்படி இருக்க, ஏதோ பஞ்சாயத்துக்கு அழைத்து,
தெரியாமல் கொலை நடந்ததாக திசை திருப்புகிறார் சாதி வெறியர் சீமான்.
முழுக்க முழுக்க சாதி வெறியால் திட்டமிட்டு நடைப்பெற்ற படுகொலை என அன்றைக்கே ஊடகவியலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
சாதி வெறியர்களை விட ஆபத்தான பேர்வழி தான் சீமான் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seemans-new-controversy-on-immanuel-sekaran-murder-muthuramalinga-thevar-arrested-and-periyar-675441.html?ref_medium=Mobile&ref_source=OI-EN&ref_campaign=Topic-Article

———————

 

@ரசோதரன் நேற்று நான் சீமாம் சாதியத்தை விலகி நடப்பவர் அல்ல, அதை தூண்டி விட்டு குளிர்காயும் ஓநாய் என எழுதியதை 24 மணிக்குள் அண்ணன் நிரூபித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு இது தேவையில்லாத ஆணி. 

திரும்பத் திரும்ப பெரியார், சீமான், திமுக என்று யாழ் களம் திட்டமிட்டே அதகளப்படுத்தப்படுவதாக எண்ணத்  தோன்றுகிறது. 

தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடிபடுவார்கள். நாளை சேர்ந்து கொள்வார்கள். அவர்களது அரசியலில் இலங்கைத் தமிழர் கொஞ்சம் தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

 

@ரசோதரன் நேற்று நான் சீமாம் சாதியத்தை விலகி நடப்பவர் அல்ல, அதை தூண்டி விட்டு குளிர்காயும் ஓநாய் என எழுதியதை 24 மணிக்குள் அண்ணன் நிரூபித்துள்ளார்.

இதையே தான் சீமான் - சசிகலா - ஓபிஎஸ் என்று முடியுமானவரை சில அடையாளங்களை தவிர்த்து நேற்று  எழுதியிருந்தேன்.  இவற்றை பெயர் சொல்லி பொதுவெளியில் எழுதுவதே எங்களுக்கு பெரும் சங்கடமாக இருக்கின்றது, ஆனால் இதற்குள்ளேயே வாழ்கின்றனர் இவர்கள்..................😌.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

@ரசோதரன் நேற்று நான் சீமாம் சாதியத்தை விலகி நடப்பவர் அல்ல, அதை தூண்டி விட்டு குளிர்காயும் ஓநாய் என எழுதியதை 24 மணிக்குள் அண்ணன் நிரூபித்துள்ளார்.

சாதியத்தை முழு மூச்சாக வளர்த்து வருகிறார், சாதியம் வளர்ந்தால் என்னவாகும் எது தலைதூக்கும் என்பதற்கான சான்றுகள் வரலாறு முழுக்க இருக்கிறது. இது எப்படியோ தமிழ்நாட்டின் பாடு.

@Kapithan கருத்தில் முழுவதுமாய் உடன்படுகிறேன். யாழ் களத்தில் நுழைந்தால் இவைகளே முதன்மை செய்திகளாக வருகின்றன. எனக்கு தெரிந்து ஈழத்தில் ஒரு தெளிவான நிலையான அரசியல் தலைமை ஏற்படும் வரை இது தொடரும் என நினைக்கிறேன். அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இந்தியா கூட ஒருக்கால் காரணமாய் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக தமிழ்நாடு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, செவ்வியன் said:

 

@Kapithan கருத்தில் முழுவதுமாய் உடன்படுகிறேன். யாழ் களத்தில் நுழைந்தால் இவைகளே முதன்மை செய்திகளாக வருகின்றன. எனக்கு தெரிந்து ஈழத்தில் ஒரு தெளிவான நிலையான அரசியல் தலைமை ஏற்படும் வரை இது தொடரும் என நினைக்கிறேன். அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இந்தியா கூட ஒருக்கால் காரணமாய் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக தமிழ்நாடு இருக்காது.

தமிழ்நாட்டவர் என்கிற ரீதியில் அவர்களை நோக்கலாமே தவிர அவர்களைப் பிரித்து நோக்க முடியாது. 

எமக்கென்று தனித்துவம் மிக்க அரசியல் culture என்றை நாம் உருவாக்க வேண்டும். அது யாரையும் பிரதிபலிக்கக் கூடாது, யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது.

""நாம் இலங்கையர் ஆனால் தனித்துவமானவர்கள்"" என்பதாக அமைய வேண்டும். 

உ+ம்:  சிங்கப்பூர். 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இதையே தான் சீமான் - சசிகலா - ஓபிஎஸ் என்று முடியுமானவரை சில அடையாளங்களை தவிர்த்து நேற்று  எழுதியிருந்தேன்.  இவற்றை பெயர் சொல்லி பொதுவெளியில் எழுதுவதே எங்களுக்கு பெரும் சங்கடமாக இருக்கின்றது, ஆனால் இதற்குள்ளேயே வாழ்கின்றனர் இவர்கள்..................😌.   

அதே….

ஆனால் இதில் நாம் சங்கடபட எதுவும் இல்லை என்பது என் பார்வை.

கேவலமாக நடப்பவர்கள் சீமான் போன்றவர்கள், ஆனால் அந்த கேவலத்தை சுட்டி காட்டுபவர்கள் நாம். நாம் ஏன் சங்கடபட வேண்டும்.

இமானுவேல் சேகரன் தனக்கு சரி சமானமாக அமர்ந்து பேசி விட்டார் என்பதால்….

80 களின் சினிமா வில்லன் போல், தன் கூலிப்படையிடம்

ஒரு ப***** பயல் எனக்கு சமனாக இருக்கும் படி செஞ்சுட்டீங்களேடா”  என கொலைக்கு ஜாகை காட்டி விட்டு போனவர்தான் முத்துராமலிங்கம்.

இங்கே கொல்லபட்டவரும், கொலையை தூண்டியவரும் தமிழ் வம்சாவழி சாதியினர்.

நடவடிக்கை எடுத்தவர், தன் சாதி காரன் என்பதால் சீமான் தலையில் வைத்து ஆடும் காமராசர் (காமராசர் தமிழ் இந்து நாடார், சீமான் மலையாள கிறீஸ்தவ நாடார்) .

இன்றைக்கும் இதே முத்துராமலிங்கத்தைதான் தேவர் திருமகனார் என போற்றுகிறார் சீமான். 

இப்படி தவறு முழுக்க எங்கோ இருக்க, பெரியாரை கொண்டு வந்து இதில் முடிகிறார்.

இதுகூட, ஈரோடு கிழக்கை அதன் வாக்காளரின் சாதியை மனதில் வைத்தே.

தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளும் சாதியை பாவிப்பது உண்மை. ஆனால் இவ்வளவு அப்பட்டமாக, கேவலமாக, சாதி முறுகலை தூண்டும் வகையில் பாவிப்பவர் சீமான் ஒருவரே. இராமதாஸ் கூட எவ்வளவோ மாறி விட்டார்.

———-/

இப்படி பட்ட ஜந்துவுக்கு எந்த சாதியினரின் பெரும்பான்மை வாக்கும் கிடைக்காது. ஆனால் இவரை நம்பி மிகுதி எல்லோரிடமும் பகையை வளர்கிறோம் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் போன்ற தமிழ் தேசியத்தை வளர்க்கும் நோக்குடன் இருக்கும் களத்தில் எதைப் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்?

தமிழ் தேசியத்தை, இனத்தூய்மை வாதம், அதற்குள் உருமறைத்த சாதிவாதம் என நச்சாக மாற்றும் ஒரு அரசியல் கட்சியின் உண்மை நிலையைச் சுட்டிக் காட்டும் செய்திகள், உண்மை வரலாறு என்பன பகிரப் பட வேண்டும். இதைச் செய்யா விட்டால் ஒரு தமிழக அரசியல் கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் பொய்யான தகவல்கள் ஈழ மக்களிடையே பரப்பப் படும். இத்தகைய பொய்ச் செய்திகளை நம்பி ஈழத் தமிழர்கள் பின் தொடர்ந்தால் எமக்கு நஷ்டம் இருக்கிறது என்பது தெரியாமல் சிலர் "போக்குவரத்துப் பொலிஸ்" வேலை செய்யப் பார்க்கிறார்களா? அல்லது யாழ் களமும் முகநூல் போல "ஹாய், ஹலோ" என்று முகமன் காட்டி விட்டுப் போகும் இடமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் செந்தமிழன் அரிச்சந்திரனுக்கு பெரிய, அதிலும் ஊடக நாடார் லாபி இருக்கிறது.  சத்தியம் டீவி மோகன் லாசரஸ், பயில்வான் ரங்கநாதன், கஸ்தூரி, ஹரிநாடார் போன்றவர்கள் தம் இனத்தான் என்பதற்காகவே அரிச்சந்திரன் அண்ணா எதைச் சொன்னாலும் அதை ஆதரிப்பார்கள். குறிப்பாக அரிச்சந்திரன் அண்ணாவை விமர்சனம் செய்தற்காகவே சத்தியம் டீவியில் இருந்து முக்தார் வெளியேற்றப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடல்கள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். எம்மை பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது. 

உண்மையை அறிய வேண்டும் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் யார் கூறுவது உண்மை  யார் கூறுவது பொய் என்று அறிய முடியாத சூழலில் மெளனம் காப்பதே மேல். 

அது தவிர தமிழக  சாக்கடை அரசியலில் நாங்கள் முக்குளித்து எழுந்தவர்கள் போன்று சவடால் அடித்து நான்  சொல்வதெல்லாம் உண்மை என்கிற போக்கு ஈழத்  தமிழருக்கு  நன்மை பயக்காது. 

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத தமிழர் நாம்,  உண்மையைக் கூறி தமிழக அரசியலின் போக்கை மாற்றப்போவதாக கூறுவது இரசிக்கத் தக்கதாக இல்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூரையேறி கோழி பிடிக்க முடியாத வெளிநாட்டு  ஈழதமிழர்கள் தான் ஆனால் அவர்களிடம் இருந்து தான் திரள்நிதி சீமானின் பொய்களுக்கு குவிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

இதையே தான் சீமான் - சசிகலா - ஓபிஎஸ் என்று முடியுமானவரை சில அடையாளங்களை தவிர்த்து நேற்று  எழுதியிருந்தேன்.  இவற்றை பெயர் சொல்லி பொதுவெளியில் எழுதுவதே எங்களுக்கு பெரும் சங்கடமாக இருக்கின்றது, ஆனால் இதற்குள்ளேயே வாழ்கின்றனர் இவர்கள்..................😌.   

நேற்று உங்களுக்கு எழுதலாம் என்று இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. 

சாதி பற்றி பேசுவது தமிழகத்தில் சாதாரண விடயம். சீமான் இதை மறுத்தாலும் மறைத்தாலும் அதை எவராலும் முழுமையாக இப்போதைக்கு ஒழிக்க முடியாது. தாயக உறவுகளிடையேயே இது இருக்கும் போது அப்படி எதுவும் இல்லை என்பது போன்று நீங்களும் சீமான் மீதான உங்கள் கருத்தை மறைமுகமாக திணித்தது தெரிந்தது. (எனது பார்வையில் மட்டுமே)

உண்மையில் இத்தனை நாட்கள் இத்தனை நேரங்கள் மற்றும் மனித வளங்கள் இங்கே சீமானுக்கு எதிராக கொட்டப்படுவதை பார்க்கும்போது உண்மையில் சிரிப்பாக இருக்கிறது அத்துடன் எந்த பிரயோசனமும் அற்ற இந்த விதண்டாவாதங்களையும் எமக்குள் தொடர்ந்து நடக்கும் பிரிவுகளையும் பிளவுகளையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

இதெல்லாம் தமிழக அரசியல் வரலாற்றை முதன் முறையாக பார்க்கும் ஒரு வெளிப்பார்வையாளரின் பார்வையாகத்தான் இருக்கமுடியும்.

ஆனால் சிறு பிராயத்தில் எம்ஜிஆர் பெண் கள்ளன் என்ற நாங்கள் பிதட்டிக்கொண்டிருக்க அங்கே வாட்டில் படுத்து கிடந்த படி அவர் முதலமைச்சர் ஆகியதும் கருணாநிதி பல மனைவிகள் மற்றும் ஊழலில் கொழுத்த குடும்ப அரசியல் என்று நாங்கள் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருக்க கருணாநிதி முதலமைச்சர் ஆகியதும் ஜெயலலிதா வைப்பாட்டி என்றபடி தீண்டத்தாக பெண் என நாங்கள் கிண்டல் அடித்து படுக்க அவர் பலமுறை முதலமைச்சர் ஆகியதும் தான் தமிழக வரலாறு. இதில் சாதிக்கட்சிகள் எதுவுமில்லை. அவர்கள் முதலமைச்சர் ஆகியதுமில்லை. ஆகப் போவதுமில்லை.

எனவே சீமானை நாம் என்ன தான் கழட்ட பூட்டி போட்டாலும் அது தமிழகத்தின் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. 

அவருடைய வருகையை அவரது அரசியலை தமிழக மக்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறையினர் வரவேற்பதாகக்தான் தரவுகளும் ஒவ்வொரு தேர்தல்களும் சாட்சி பகிர்ந்கின்றன. இல்லை என்றால் யாருமே அறியாத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட எந்த பின்புலமும் அற்ற ஒரு கட்சி இன்று இந்தளவுக்கு அதிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இன்று அங்கீகாரம் பெற்றிருப்பது நகைப்புக்கிடமானதன்று. 

எனவே ஈழத் தமிழர்கள் நாம் இவற்றில் அடிபட்டு பிரிந்து நின்று எம்மையும் பலவீனமாக்கி தமிழக தலைவர்கள் எவரையும் எதிரியாக்காமல் வருபவர்களை வாரி எடுத்து எதையாவது பெற முயல்வோம். இதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். நன்றி.  ( சீமான் பற்றி இனி எனது நேரத்தை செலவழிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அதே….

ஆனால் இதில் நாம் சங்கடபட எதுவும் இல்லை என்பது என் பார்வை.

 

என்னுடைய சங்கடம் எல்லாம் சாதிப் பெயர்களை சொல்வதிலும், அவற்றை எழுதுவதிலுமே, கோஷான். இந்தப் பிரிவுகள் எங்களையே அழிக்க வந்த கொடும் நோய்கள் மற்றும் அசிங்கங்கள் போல. இவர்களின் நடவடிக்கைகளை தொடராக வரிசைப்படுத்தி, இவர்கள் யார் என்ற உண்மையை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு சங்கடமே இல்லை. அதை நான் என் வழியில் செய்துகொண்டே இருக்கின்றேன்.   

4 hours ago, Justin said:

தமிழ் தேசியத்தை, இனத்தூய்மை வாதம், அதற்குள் உருமறைத்த சாதிவாதம் என நச்சாக மாற்றும் ஒரு அரசியல் கட்சியின் உண்மை நிலையைச் சுட்டிக் காட்டும் செய்திகள், உண்மை வரலாறு என்பன பகிரப் பட வேண்டும். 

இதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது, ஜஸ்டின். இப்படியான ஒரு களத்தில் இவை நிச்சயம் பகிரப்பட வேண்டியவையே. இவை தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்பட வேண்டியவையே. சைனாவின் டீப்சீக்கைவிட, அமெரிக்க - ரஷ்ய சார்பு வாதங்களை விட, இன்னும் பல இன்னோரன்ன உலக விடயங்களை விட இது மிகவும் கட்டாயமானது.  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

நேற்று உங்களுக்கு எழுதலாம் என்று இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. 

சாதி பற்றி பேசுவது தமிழகத்தில் சாதாரண விடயம். சீமான் இதை மறுத்தாலும் மறைத்தாலும் அதை எவராலும் முழுமையாக இப்போதைக்கு ஒழிக்க முடியாது. தாயக உறவுகளிடையேயே இது இருக்கும் போது அப்படி எதுவும் இல்லை என்பது போன்று நீங்களும் சீமான் மீதான உங்கள் கருத்தை மறைமுகமாக திணித்தது தெரிந்தது. (எனது பார்வையில் மட்டுமே)

 

சீமானும் மிகச் சாதரண ஒரு சாதிக்கட்சியை நடத்தும் தலைவர் என்று தான் எழுதியுள்ளேன், விசுகு ஐயா. அதற்கு தமிழ்த்தேசியம் என்னும் முலாம் பூசி உள்ளார் என்றும் ஆதாரத்துடன் எழுதியிருக்கின்றேன். வேங்கைவயல் சமீபத்திய ஒரு ஆதாரம். இதுவே தான் என் பக்கத்தின் அடிப்படையே. இதை நான் எழுதவில்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை, விசுகு ஐயா. தன்னலம் மட்டுமே அங்கிருக்கின்றது, தமிழ்த்தேசியம் என்று ஒன்று அவரிடம் அறவே கிடையாது என்றும் சொல்லியிருந்தேனே.

இவர் எம்மக்களை ஏமாற்றுகின்றார், எம்மவர்கள் இவரிடம் ஏமாறுகின்றார்கள் என்பதே என் நிலை. அதற்கு எதிரான ஒரு சாதாரண மனிதனின் குரலே என்னுடையது, ஐயா.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கருத்தாடல்கள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். எம்மை பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது. 

உண்மையை அறிய வேண்டும் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் யார் கூறுவது உண்மை  யார் கூறுவது பொய் என்று அறிய முடியாத சூழலில் மெளனம் காப்பதே மேல். 

அது தவிர தமிழக  சாக்கடை அரசியலில் நாங்கள் முக்குளித்து எழுந்தவர்கள் போன்று சவடால் அடித்து நான்  சொல்வதெல்லாம் உண்மை என்கிற போக்கு ஈழத்  தமிழருக்கு  நன்மை பயக்காது. 

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத தமிழர் நாம்,  உண்மையைக் கூறி தமிழக அரசியலின் போக்கை மாற்றப்போவதாக கூறுவது இரசிக்கத் தக்கதாக இல்லை. 

 

நீங்கள் கூறவருவது எனக்கு புரிகிறது, இதில் தலையிடாமல் இருப்பதே நல்லது எனும் மனநிலையில் நான் உள்ளேன் ஆனால் இங்கு நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறும் நிலை வராமல் இருக்க வேண்டும் என விரும்புகின்ற நிலையே எனது நிலையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

நீங்கள் கூறவருவது எனக்கு புரிகிறது, இதில் தலையிடாமல் இருப்பதே நல்லது எனும் மனநிலையில் நான் உள்ளேன் ஆனால் இங்கு நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறும் நிலை வராமல் இருக்க வேண்டும் என விரும்புகின்ற நிலையே எனது நிலையும்.

தலையிடாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது.

ஆனால் சீமான் வந்து…. தன் சுய நலனுக்காக எம்மை தலையிட வைத்து விட்டார்.

இனி தலையிடாமல் இருந்தால் … நாம் எல்லோரும் நா த க சார்பானவர்கள் என ஏனையோர் கருதுவர். இப்போதே கருதுகிறார்கள்.

தமிழ் நாட்டில் இப்போ தலைவரும், புலிகளும், ஈழத்தமிழரும் வெறுக்கப்படுவதுபோல், 2009 க்கு முன்  ஒருபோதும் இருந்ததில்லை, 91 இல் கூட.

ஆகவே இனி தலையிடாமை என்பது எமக்கு ஒரு தெரிவல்ல.

கறந்தபால் மடி ஏறாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.