Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஓம்…

ஒரு உத்தரவாதமும் தருகிறேன்.

2026 இல் தனித்து நின்று சீமான் 16% அல்லது கூட எடுப்பின், இன்றை உங்கள் கணிப்பு சரி என்பதை அப்போ ஏற்பேன்.

அது உங்கள் சூழ்ச்சிமம். 

எனக்கு 08 - 10 (விஜய் வராதிருந்தால் 08 - 12)

இதைத் தான் நீங்கள் பதிவில் வைக்கணும். 

ஒன்றும் அவசரமில்லை. இளம் தலைமுறை பிள்ளைகளுடன்  படிப்படியாக ஆனால் உறுதியாக தனித்து......

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • Replies 113
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

  • பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை.  இதன்படி பார்ததால்  பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று   அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின்

  • Sasi_varnam
    Sasi_varnam

    சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இவர்களைதான் @பகிடி முள்ளம்பண்டி தலையனுகள் என்றார்🤣. ஆனா எல்லாருக்கு மேல வெளிச்சிட்டு, தாடியில்தான் உரோமம் இருக்குது…..

முழுவதும் கஞ்சா கூட்டம்.

எத்தனை சிங்கள இனபடுகொலையாளிகள் தமிழர் வாழும் பிரதேசத்திலே வந்து நடந்து திரிகிறார்கள்.

இந்த பேடிகளில் ஒருவர் கூட அவர்களை ஒரு வார்த்தை கேட்பாரா?

யாரோ ஒரு பெண்ணுடனும், வயசான இருவரிடமும் வீரத்தை காட்டும் பேடிகள்.

இந்திய தமிழில் சொன்னால் -

பொ***ட பசங்க 🤣.

 

நானும் கவனித்தேன் இவர்கள் தான் சீமானின் வெளிநாட்டு ஈழ படையணி 😟
பையன் உறவு ஒருவரின் காணொளி இணைத்திருந்தார் அவரும் 50 வயது பிறந்த தினத்தை பிரமாண்டமா கொண்டாடிய இலங்கை தமிழர். சீமானின் நச்சு கருத்துக்கள் இவர்களிடம் நன்றாக வேலை செய்கின்றது.
மற்றய தமிழர்களை பொறுத்தவரை விஜய் ரஜனிகாந்தை தெரிந்த அளவுக்கு சீமானை தெரியவில்லை இது மகிழ்ச்சி. திரள் நிதிக்கு எதிர்காலம் இல்லை. அதனால் இப்போதே முடிந்தளவு சுருட்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

நவீன ஏ ஐ காலத்துக்குரிய அரசியல் செய்யாவிடில்.. சீமான் அல்ல.. எவருமே வளரும் சந்ததியிடம் செல்வாக்கு செய்ய முடியாது. 

நீங்கள் ஏ ஐ   என்று  Artificial Intelligence  தானே செல்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

😟
 அவரும் 50 வயது பிறந்த தினத்தை பிரமாண்டமா கொண்டாடிய இலங்கை தமிழர். 

இதன் அர்த்தம் என்ன விளங்காதவர்? 

வயது படிப்பு பணம் பற்றி எழுதாமல் கருத்து களத்தில் எழுத வராதது தான் உங்கள் விளங்காத்தன்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் ஏ ஐ   என்று  Artificial Intelligence  தானே செல்கின்றீர்கள்

ஓம், AI!

நெடுக்கர் சொல்வது என்னவென்றால், கடந்த இரு வாரங்களாக வெவ்வேறு திரிகளில் இணைக்கப் பட்ட புலிகள், பெரியார், பிரபாகரன் பற்றிய grainy VHS-grade காணொளிகளை தூக்கிக் கடாசி விட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப் பட்ட பொய்க் காணொளிகளையும் , படங்களையும் வைத்து வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார். இதைத் தான் சீமான் தம்பிகள் யாழுக்கு வெளியே செய்து கொண்டிருக்கிறார்கள் - யாழில் அவற்றை இணைக்கும் போது தூக்கி விடுகிறார்கள் அல்லது கருத்தாளர்களிடம் கல்லெறி கிடைப்பதால் அதைப் பற்றி முறைப்படுகிறார்கள்!

புரிகிறதா உங்களுக்கு😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

எனக்கு 08 - 10 (விஜய் வராதிருந்தால் 08 - 12)

இது என்ன அண்ணை ஒரு 24 மணி நேரத்தில் இப்படி புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்.

நீங்கள் சொன்னீர்கள் ஈரோடு தேர்தல் சீமான் வாக்கு வங்கி வளர்ந்திருப்பதை காட்டுவதாக.

போன சட்ட சபை தேர்தலிலேயே சீமான் 8.5% அல்லவா?

2026 இலயும் அதிலதான் நிண்டு முக்க்கப்போறார் எண்டால் - வளர்ச்சி இல்லை என்பதுதானே அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இது என்ன அண்ணை ஒரு 24 மணி நேரத்தில் இப்படி புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்.

நீங்கள் சொன்னீர்கள் ஈரோடு தேர்தல் சீமான் வாக்கு வங்கி வளர்ந்திருப்பதை காட்டுவதாக.

போன சட்ட சபை தேர்தலிலேயே சீமான் 8.5% அல்லவா?

2026 இலயும் அதிலதான் நிண்டு முக்க்கப்போறார் எண்டால் - வளர்ச்சி இல்லை என்பதுதானே அர்த்தம்.

நான் தெளிவாக இருக்கிறேன் சகோ 

ஈரோட்டில் நாம் தமிழர் வளரவில்லை என்றீர்கள் ஓகே 2026இல் பார்க்கலாம் என்றேன். 2026 இல் புறக்காரணிகளை (விஜய் மற்றும் கூட்டுக்கள்)  வைத்தே என்னால் எழுதமுடியும். இதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர் இல்லை. 

ஆனால் நீங்கள் உங்கள் வியூகத்திற்குள் என்னை கொண்டு வரப் பார்க்கிறீர்கள்? அப்புறம் புறமுதுகு ஜன்னலால் தாவியது என்று நானும் அனுபவப்படவா?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

நான் தெளிவாக இருக்கிறேன் சகோ 

ஈரோட்டில் நாம் தமிழர் வளரவில்லை என்றீர்கள் ஓகே 2026இல் பார்க்கலாம் என்றேன். 2026 இல் புறக்காரணிகளை (விஜய் மற்றும் கூட்டுக்கள்)  வைத்தே என்னால் எழுதமுடியும். இதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர் இல்லை. 

ஆனால் நீங்கள் உங்கள் வியூகத்திற்குள் என்னை கொண்டு வரப் பார்க்கிறீர்கள்? அப்புறம் புறமுதுகு ஜன்னலால் தாவியது என்று நானும் அனுபவப்படவா?😂

அண்ணன் எண்டால் தம்பியை இப்படி புரிந்து வைத்திருக்கோணும்🤣.

——

விஜை இப்போதே ஒரு காரணிதான்.

அப்போ அவருக்கு இன்று ஈரோடு கிழக்கில் வாக்கு போட முடியாதவர்கள்தான் சீமானுக்கு தம் வாக்கை கடன் கொடுத்துள்ளார் என்கிறீர்களா?

இது வளர்ச்சி இல்லையே அண்ணை?

——-

8.5% போன முறை எடுத்தவர் 2026 இல் 8-10 (விஜை எப்படியும் வருவார்) எடுப்பது வளர்ச்சி இல்லை அண்ணை தேக்கம்.

சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்….

விஜை வந்தாலும், வராவிட்டாலும் சீமான் 2026இல் தனியே நிண்டு, 13% தாண்டமாட்டார் என்கிறேன்.

ஒட்டா?

 

பிகு

கவனிக்கவும் - இதுவரை நின்றது போல் சீமான் தனியே அத்தனை தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே மேலே சொன்ன பந்தயம்.

சீமான் அதிமுக கூட்டணி, அல்லது பாஜகவோடு மோதல் தவிர்ப்பு செய்ய கூடும். அப்படி நடந்தால் பந்தயம் கான்சல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணன் எண்டால் தம்பியை இப்படி புரிந்து வைத்திருக்கோணும்🤣.

——

விஜை இப்போதே ஒரு காரணிதான்.

அப்போ அவருக்கு இன்று ஈரோடு கிழக்கில் வாக்கு போட முடியாதவர்கள்தான் சீமானுக்கு தம் வாக்கை கடன் கொடுத்துள்ளார் என்கிறீர்களா?

இது வளர்ச்சி இல்லையே அண்ணை?

——-

8.5% போன முறை எடுத்தவர் 2026 இல் 8-10 (விஜை எப்படியும் வருவார்) எடுப்பது வளர்ச்சி இல்லை அண்ணை தேக்கம்.

சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்….

விஜை வந்தாலும், வராவிட்டாலும் சீமான் 2026இல் தனியே நிண்டு, 13% தாண்டமாட்டார் என்கிறேன்.

ஒட்டா?

 

பிகு

கவனிக்கவும் - இதுவரை நின்றது போல் சீமான் தனியே அத்தனை தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே மேலே சொன்ன பந்தயம்.

சீமான் அதிமுக கூட்டணி, அல்லது பாஜகவோடு மோதல் தவிர்ப்பு செய்ய கூடும். அப்படி நடந்தால் பந்தயம் கான்சல்.

இரண்டு பேரும் பந்தயத்திற்குரிய பணத்தை நடு நிலை trustee ஆக செயல்படக் கூடிய என்னிடம் தந்து வையுங்கள்! நான் பத்திரமாகப் பாதுகாத்து  முடிவிற்கேற்ப உரியவரிடம் பணத்தை ஒப்படைக்கிறேன்😎!

200 ₹  எனக்கும் கிடைக்குமா? 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, appan said:

200 ₹  எனக்கும் கிடைக்குமா? 

 

இஞ்சாற்றா….. எழுத்திண்ட சீத்துவத்துக்கு காசு வேற வேணுமாம்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

200 ₹  எனக்கும் கிடைக்குமா? 

 

அப்பன், இது பொன்சி முறை-Ponzi Scheme தெரியாதோ😎? ஆக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொடுத்துத் தான் பிரமிட்டின் உச்சிக்கு வரலாம், அப்ப இருநூறு ரூபாய் கிடைக்கலாம்! புது பல்போடு வந்தவுடன் ஒன்றும் கிடைக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் வேண்டும் என்றால் கட்சியிலிருந்து வெளியேறலாம் : சீமான் ஆவேசம்!

10 Feb 2025, 10:20 PM
seeman again angry on periyar

பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம் என சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களை சந்தித்தார். 

2026ல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!

அப்போது அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை.. அவ்வளவுதான். 

ஈரோடு கிழக்குத் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் அமைப்பை விரிவாக்கும் பணியாகத் தான் பார்க்கிறோம். 2026ல் நாங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

நான் வளர அதிமுக, பாஜக விரும்புமா?

தேர்தலில் 15 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெற்ற வாக்கு திமுக வாக்கு என்றும், நாம் தமிழர் வென்ற வாக்கு அதிமுக, பாஜகவுக்கு உடையது என்று கூறுவது கேவலமான சிந்தனை. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. திமுக தனித்து நின்று வாக்குகளை பெறவும் முடியாது; பணம் கொடுக்காமல் வாக்குகளைப் பெறவும் முடியாது. 

அதிமுக, பாஜக எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும்? அவர்கள் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்? நான் சண்டைக்கு போனால் தனியாக தான் போவேன். நான்கு பேருடன் போக நான் ஒன்றும் நரியல்ல. என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. என்னால் முடியவில்லை எனில் எனக்குப் பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள்.

உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன்!

நான் பெரியாருக்கு எதிராக இப்போது தான் பேச தொடங்கியிருக்கிறேன். நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்போது விழிப்புணர்வு, தெளிவு பெற்றதால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்கள் கொள்கைக்கானவர்கள் அல்ல; நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன்.. என் கேள்விக்குதான் பதில் சொல்ல வேண்டும். தாய்மொழியை இழித்து பேசியவரை எப்படி தலைவனாக ஏற்க முடியும்?

தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது. மத்திய அரசு வரி கொடுக்கவில்லை என்ற புலம்பவா 40 பேரை அனுப்பி வைத்தோம்? ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு.. அப்படி இருக்கும்போது, நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். தமிழ்நாடு என்று வேறு எந்த மாநில முதலமைச்சரும் இதுபோன்று புலம்பவில்லை.

பெரியாருக்கு வெறும் 222 ஓட்டு தான் கிடைத்தது. எங்கு இருந்தோ வந்த பெரியார் என்பது எங்களுக்கு தேவை இல்லை. பிரபாகரன் பெரியாரை பத்தி பேசவே இல்லை. பிரபாகரன் சாக வேண்டும் என்று நினைத்தது திராவிடம். உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள், பெரியார் வேண்டும் என்றால் என்னைவிட்டு வெளியேறிப் போய்விடலாம்” இவ்வாறு சீமான் பேசினார்.
 

https://minnambalam.com/political-news/seeman-again-angry-on-periyar/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://youtube.com/shorts/RroUBW-0BuU?si=1OR8KK5sDZvnw6OD

வெறும் 3 நிமிடம்தான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.